Sunday, June 26, 2011

நல்ல பிள்ளைகள் பிறக்கட்டும் - ஆசிர்வதிக்கிறார் காஞ்சிப்பெரியவர்

தன் பிள்ளையான நரகாசுரனைப் பெற்றவளான பூமாதேவியே கொன்றாள். பிள்ளை இறந்ததால் அவளுக்கு வருத்தம் என்றாலும், ஊரார் மகிழ்ந்தனர். அப்போதும் அவள் உள்ளத்தில் நல்ல எண்ணம் ஒன்று உதயமானது. "இந்தப் பிள்ளையைப் போல் உலகத்தார் யாருக்கும் பிள்ளை பிறக்கக்கூடாது' என்ற எண்ணத்துடன்,. அவனது நினைவு நாளை பண்டிகையாகக் கொண்டாட வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அந்நாளில் மங்கல ஸ்நானம், புத்தாடை அணிதல், இனிப்பு பதார்த்தங்கள் சாப்பிடுதல் என்ற பண்டிகைக்குரிய எல்லாக் கொண்டாட்டங்களையும் ஏற்படுத்தி மக்களை கொண்டாடச் செய்தாள். எண்ணெய் ஸ்நானம் செய்தால் அதை மக்கள் அபசகுனமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக தேய்க்கின்ற தைலத்தில் லட்சுமிதேவியையும், குளிக்கின்ற நீரில் கங்காதேவியையும் வசிக்கும்படி செய்யும் வரத்தை பகவானிடம் பெற்றாள். இதனால் எல்லாரும் புண்ணியம் கருதி விருப்பத்தோடு இந்நாளில் ஸ்நானம் செய்வார்கள் என்று ஏற்படுத்தினாள். கங்கையே நம் வீட்டு நீரில் இருப்பதால் தீபாவளி செய்யும் நீராடலுக்கு "கங்கா ஸ்நானம்' என்ற பெயர் உண்டானது.
ஏன் பூமாதேவிக்கு நம் மீது இவ்வளவு அன்பு ஏன் என்று கூட நமக்குத் தோன்றும். பெற்ற தாயைப் போல, இவ்வுலக உயிர்களுக்கெல்லாம் தாயாக பூமாதேவியே விளங்குகிறாள். அதனாலேயே தாயுள்ளத்தோடு பூமாதேவி செய்த இந்த விழாவின் சிறப்பினை உணர்ந்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி மகிழ்வோம்.

No comments:

Post a Comment