தீபாவளி திருநாள் கொண்டாடுவதற்கான பலவித புராணக் கதைகள் நம் நாட்டில் வழங்கப்படுகின்றன. பகவான் விஷ்ணுவுக்கும், லட்சுமிதேவிக்கும் உரிய திருமண நாளையே தீபாவளி நன்னாளாகக் கொண்டாடுகிறோம். இந்த நாளில் நரகாசுரனை, கிருஷ்ணன் வதம் செய்து தேவர்களைக் காத்தருளினார் என்பது பரவலான மக்களால் சொல்லப்படும் கதையாகும்.
தென்னிந்தியாவில் தீபாவளி நாளில் அதிகாலைப் பொழுதில் எண்ணெய் ஸ்நானம் செய்து புத்தாடை அணிவர். இனிப்பு வகைகளை சாப்பிட்டு மகிழ்வர். நரகாசுரனைக் கொன்ற மகிழ்ச்சியில் பட்டாசுகளைக் கொளுத்தி வெடிக்கின்றனர். கங்கையில்நீராடினால் நம் பாவங்கள் கரைவது போல, நம் பாவங்களை வீட்டிலேயே போக்கிக் கொள்ளும் விதமாக இந்த எண்ணெய் ஸ்நானத்தை செய்கின்றனர். மக்கள் மனதில் ஒற்றுமையுணர்வை உருவாக்கும் விதத்தில் அன்று ஒருவருக்கொருவர் தீபாவளி வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வதோடு பலகார பட்சணங்களை பரிமாறிக் கொள்கின்றனர். விரோத உணர்வுகள் மறைந்து நட்புறவுச்சிந்தனைகள் மக்கள் மனதில் எழுகின்றன. ஒற்றுமை உணர்வினை மேலோங்கச் செய்வதில் இந் நன்னாளுக்கு மிகப்பெரும் பங்குண்டு. சுபிட்சத்திற்கும், வளமான எதிர்காலத்திற்கும் தீபாவளியன்று அடித்தளமிடுவதாக எண்ணி லட்சுமிதேவியைப் பிரார்த்திக் கின்றனர். இரவில் வீடு முழுவதும் தீபங்களை ஏற்றி அலங்கரிக் கின்றனர்.
உலகில் உள்ள ஒளிகள் அனைத்தையும்விட, நம் உள்ளத்தில் ஒளிஏற்றுவதே உண்மையான தீபாவளியாகும். வாழ்வில் எத்தனையோ தீபாவளிகள் போய்விட்டாலும் நம் மனதில் இருளைப் போக்க முயற்சிக்காவிட்டால் புறத்தில் ஏற்றப்படும் விளக்குகளால் பயனில்லை. நம் இதயங்களில் இருக்கும் அறியாமை இருளை அகற்றி, அறிவாகிய ஒளிச்சுடரை ஏற்றி வைப்பதே பயனுடையதாகும். தீபாவளி நன்னாளில் நம் அறிவு கடவுள் அருளால் ஒளிமயமானதாகட்டும்! வாழ்வியலுக்குத் தேவையான பொருள் வளத் தையும், ஆன்மிகத்திற்கு தேவை யான அருள் செல்வத்தையும் இந்நாளில் பெற்று மகிழ்வோமாக.

No comments:
Post a Comment