Monday, June 20, 2011

கற்ப மூலிகை வேப்பிலை

பேய் ஓட்டும் இடங்கள் பலவற்றிக்கு நாம் சென்று இருக்கிறோம் அங்கே பேய்களை ஓட்ட மந்திரவாதிகள் வேப்பிலையை பயன்படுத்துவார்கள் ஏன் வேப்பிலையே பயன்படுத்துகிறார்கள் வேறு எதாவது இலைகளை பயன்படுத்தலாமே என்று நமக்கு தோன்றும்

வேப்பிலையை பயன்படுத்தி பேய்களை ஓட்டும் பழக்கம் நம் நாட்டில் மட்டும் அல்ல சில ஆப்பிரிக்கா நாடுகளிலும் இருக்கிறது.

ஆனால் பெருவாரியான ஆப்பிரிக்க நாடுகளில் வேப்பிலைக்கு பதிலாக வேறு சில இலைகளையும் உபயோக படுத்துகிறார்கள்.
நமது யோக சாஸ்திரங்கள் ஒரு மனிதனின் உடலில் அமானுஸ்ய சக்தி புகுந்தால் அது பத்து முதல் பதினைந்து நிமிடம் வரையே உடலுக்குள் தங்க முடியுமென சொல்கிறது.

மணிகணக்கில் பேய் ஆடுவதும், சாமியாடுவதும் நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயமாகும்.

இவைகளை ஒருவித மனநோய் என்றே சொல்லலாம்.

பேய் பிடித்திருப்பதாக சொல்லப்படும் நபர்களில் ஆயிரத்தில் ஒருவருக்கே உண்மையான பேய் பிடிக்க வாய்ப்புள்ளது.

காரணம் மனித உடம்பில் இருக்கும் எஸ்டோபிளாசம் என்ற ரசாயணம் அதிகமாக இருந்தால் தெய்வீக சக்திகளும், குறைவாகயிருந்தால் தீய சக்திகளும் அண்டும். சமமாக இருந்தால் எந்த சக்தியும் அண்டாது.

பலருக்கு சமமாகவேயிருக்கும். மனைவியின் மேல் உள்ள கோபம், மாமியார் மற்றும் கணவன் மேல் உள்ள அதிருப்தி, பெற்றோர்களிடத்திலுள்ள பயம், படிப்பு மற்றும் வேலையின் மீதுள்ள வெறுப்பு போன்றவைகளே பலரை பேய்பிடித்தல் என்ற மன வியாதியில் தள்ளுகிறது.

இந்த மன வியாதிக்கு மெல்லிய மின்சார அதிர்வு கொடுத்தால் தற்காலிக நிவாரணம் பெறலாம்.

வேப்பிலை ஒரே சீராக மீண்டும் மீண்டும் நோயாளிகளின் தலையில் அடிக்கும் போது மிதமான மின் அதிர்வு ஏற்பட்டு மனதுக்கு இதம் அளிக்கிறது

. இந்த மின்சார ரகசியம் பூசாரிக்கும் தெரியாது, நோயாளிக்கும் தெரியாது.

இப்படி தெரியாமலேயே பல நூறு வருடங்களாக பேய் ஓட்டுவதற்கு வேப்பிலை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆரோக்கியம் தரும் விஷயம் இது என்பதனால் பாராட்டினால் தவறில்லை
 
 
கற்ப மூலிகை வேப்பிலை

டலை என்றும் இளமையுடன் இருக்கச் செய்யும் அற்புத சக்தி படைத்தவை தான் கற்ப மூலிகைகள்.

நரை, திரை, மூப்பு என்ற மூன்றையும் அணுகவிடாமல் தடுக்கும் குணம் கற்ப மூலிகைகளுக்கு உண்டு.



இந்திய திருநாட்டின் பாரம்பரிய மரங்களில் ஒன்று தான் வேம்பு. இதனை சக்தி என்றே அழைக்கின்றனர். சமய வழிபாட்டில் வேம்பு ஒரு பெண் தெய்வமாகவே போற்றி வணங்கப் படுகிறது. மருத்துவக் குணங்கள் கொண்ட வேம்பின் இலைகள் பற்றி நீண்ட ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

வேப்பிலையை சர்வரோக நிவாரணி என்று சமஸ்கிருதத்தில் அழைக்கப்படுகிறது.

ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பிருந்தே நம் மூதாதையர்கள் வேப்பிலையை உட்கொள்ளும் பொருளாக உபயோகப்படுத்தி வந்துள்ளனர். அப்படி உபயோகிப்பதில் எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லை என்பதையும் கண்டறிந்துள்ளனர்.

ஆனால் கருத்தரித்த தாய்மார்களும் கருத்தரிப்புக்காக காத்திருப் போரும் இதை உட்கொள்ளக் கூடாது என்றும் கூறியுள்ளனர். 
 
வேப்பிலையின் தொழிற்சாலை உபயோகங்கள்

விவசாயத் துறையில் பூச்சிக் கொல்லியாகவும், கிருமி நாசினியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள முக்கிய வேதிப் பொருள் தற்போது நாம் உபயோகிக்கும உரங்களில் சேர்க்கப்படுகிறது.
அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அழகுக்காக உபயோகப்படுத்தும் கிரீம்கள், லோஷன்கள், சோப்பு மற்றும் கூந்தல் எண்ணெய்களில் வேப்பிலை பயன்படுத்தப்படுகிறது.

இந்திய மருத்துவத்தில் வேப்பிலை முக்கிய பொருளாக பயன்படுகிறது.

வேப்பிலையின் மருத்துவக் குணங்கள்

சூழ்நிலைக்கேற்ப உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் வராமல் தடுக்கிறது.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் தன்மை வேப்பிலைச்சாறுக்கு உண்டு.

வயிற்றுப்புண்களை ஆற்றும் தன்மை மற்றும் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை மட்டுப்படுத்தும் தன்மை வேப்பிலைக்கு உண்டு.

மலேரியக் காய்ச்சலுக்கு குளோரோக்குவின் என்ற மருந்து கொடுக்கப்படும். இந்த மருந்துக்கு கட்டுப்படாமல் இருக்கும் காய்ச்சலை வேப்பிலை கொடுத்து கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர முடியும். காளான் நோய்களான டிரைக்கோபைட்டா மற்றும் பிற காளான் நோய்களையும் வேப்பிலையைக் கொண்டு தீர்க்க முடியும்.

பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் பண்பு வேப்பிலைக்கு உண்டு. கிராம் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை வேப்பிலைக்கு உண்டு.

வைரஸ் நோய்களை எதிர்க்கும் சக்தி வேப்பிலைக்கு உண்டு. இதனை அம்மை நோய்களுக்கு உபயோகிக்கும் மருந்தாக நம் முன்னோர் காலத்திலிருந்து பின்பற்றப் படுகிறது.

புற்றுநோய் எதிர்ப்பு தன்மை வேப்பிலைக்கு உண்டு. இதனால் புற்றுநோய் வளர்ச்சியைத் தடைப்படுத்தக்கூடிய மருந்துகளில் வேப்பிலையைப் பயன் படுத்துகின்றனர்.

No comments:

Post a Comment