Saturday, June 11, 2011

அனுமத் ஜெயந்தி-

அனுமத் ஜெயந்தி-

"யத்ர யத்ர ரகுனாத கீர்த்தனம்
தத்ர தத்ர கிருத மாஸ்த காஞ்சலிம்
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்
மாருதிம் ராக்ஷஸாந்தகம்'
என்றபடி, எங்கெல்லாம் ராம நாமம் ஜெபிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் இருந்துகொண்டு ராம நாம சிரவணம் செய்பவரானவரும் அசாத்தியமான சாதனைகளைப் புரிந்தவருமான ஸ்ரீ ஆஞ்சனேயமூர்த்தியைப் பற்றி சற்று அறிவோம்.
இவர் கல்விமான். ஆயினும், அடக்கம் உள்ளிட்ட பண்புகள் நிரம்பப் பெற்றவர். வெற்றி பெறுபவர்களில் இவருக்கு ஒப்பானவர் யாருமில்லை. இவரின் அடக்க குணத்தை வெளிப்படுத்துவது போல் பல திருக்கோவில்களில் விநய பாவத் துடன் காட்சி தருவதைப் பார்க்கலாம். இணை யற்ற ராம பக்தரான இவர் பிரம்மச்சர்யத்தை முழுமையாகக் கடைப்பிடிக்கிற ஜிதேந்திரியன். ஆற்றல், அறிவு, சீலம், பக்தி, வெற்றி, வீரம், புலனடக்கம், விநயம் நிறைந்தவர். நாம் தினந் தோறும் கண்கூடாகக் காணும் சூரிய பகவானி டம் சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்தவர்.
அனுமனிடம் விஷ்ணுவின் குணநலன்களும் உண்டு; அதேசமயம் ருத்ராம்சமும் பொருந்தியவர். ராமன் எப்படி சிவபக்தராய் திகழ்ந்தாரோ, அதுபோல திருமாலுக்குத் தொண்டு செய்வதற்காகவே பரமேஸ்வரன் அனுமனாக வடிவெடுத்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.

அனுமன் சிரஞ்சீவியாய் இருந்துகொண்டு நமக்கெல்லாம் ராம நாமத்தின்மீது ருசியை உண்டாக்கி, தானும் மகிழ்ந்து நமக்கும்
அருள் புரிந்து வருகிறார்.

பாரதப் போரில் அர்ஜுனனின் தேர்க் கொடியில் இருந்து, கிருஷ்ண பகவான் பார்த்தனுக்கு உபதேசித்த பகவத் கீதையை நேரில் கேட்டவர் அனுமன். கீதைக்குத் தத்துவமயமான ஒரு விளக்கத்தை அனுமன் அருளியிருப்பதாகவும்; அதற்கு அனுமத் கீதை என்ற பெயருண்டு என்றும் ஆன்றோர்கள் கூறியுள்ளார்கள்.
அனுமனுக்கு "சுந்தரன்' என்று அவரின் அன்னை அஞ்சனாதேவி பெயரிட்டாள் என்பது அனுமனுக்கே தெரியாது என்ற நிலையில், சுந்தர காண்டதை இவரின் பெயராலேயே அமைத்துவிட்டார் வால்மீகி.

சுந்தர காண்ட பாராயணம் நமக்கு எல்லா நற்பலன்களையும் தரக்கூடியது. இதில் அனுமனின் பிரபாவம் மட்டு மின்றி, முழு ராமாயணமும் அடங்கி உள்ளது.

இவரை வணங்கிய மாத்திரத்தில் நமக்கு தைரியம், ஞானம் வளரும். புத்தி, பலம், புகழ், அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம் ஆகிய அனைத்தும் தரும் ஆஞ்சனேயரின் அடிபணிவோம்!

No comments:

Post a Comment