கோவில்களில் சுவாமி தரிசனம் செய்துவிட்டுத் திரும்பும்போது பிச்சைக் காரர்களுக்குப் பொருளுதவி செய்தால், நாம் கோவிலுக்குச் சென்ற புண்ணியம் அவர்களுக்குப் போய்விடும் என்கிறார் கள். இது உண்மையா?
நீங்கள் மகாபாரதத்தைப் படித்திருந்தால் இந்தக் கேள்விக்கே இடம் இல்லாமல் இருந் திருக்கும். கர்ணன், தன் வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் இருக்கும்போது தன் உயிர் பிரியப் போகிறது என்று தெரிந்தும், தான் அதுவரை செய்த அனைத்து தர்மங் களையும் புண்ணியங்களையும் தன் ரத்தத் தாலேயே தானமாகக் கொடுத்து விடுகிறான். இனி ஆயுள் இருந்தாலாவது புதிதாகப் புண்ணியம் தேட முடியும். ஆனால் தன் ஆயுளே முடியும் நேரத்தில்கூட தன் புண்ணியம் அனைத்தையும் தர்மமாகக் கொடுத்த கர்ணனின் செயலை நினைக்க வேண்டும்.
அதுபோல எம்பெருமானார் ராமானுஜர் தன் குருவின் வாக்கையும் மீறி, தான் நரகத் தில் வீழ்ந்தால்கூட பரவாயில்லை; எல்லா மனிதர்களும் எம்பெருமான் அருளைப் பெறட் டும் என்று தான் அதுவரை குருமுகமாக அறிந்த எம்பெருமான் திருவடி ரகசியத்தை கோபுரத்தின் மேல் ஏறி, எட்டு எழுத்தை எல்லாருக்கும் உபதேசித்தார்.
கர்ணன் தர்மம் செய்வதையே தன் குண மாகக் கொண்டு, புண்ணிய பலன் இல்லாமல் தான் நரகில் வீழ்ந்தாலும் பரவாயில்லை என்று தான் செய்த புண்ணியத்தையே தர்மமாகக் கொடுத்தான். எம்பெருமானார் ராமானுஜரோ, சகல ஜீவராசிகளுக்கும் எது சுகத்தைத் தருமோ- மனிதனாய்ப் பிறந்தவர் களுக்கு எது மோட்சத்தைத் தருமோ அந்த ரகசியத்தை சுயநலம் பாராமல் சத்திய வாக்கையும் மீறி உபதேசித்தார்.
இவற்றை எல்லாம் எண்ணிப் பார்த்தால் நீங்கள் கேட்ட கேள்விக்கு அதனுள்ளேயே பதில் இருக்கிறது. சாதாரணமாக கோவிலை வலம் வந்து சுவாமிக்கு ஒரு தேங்காயை உடைத்து- கொஞ்சம் பணம் இருந்தால் மற்றவர்களை இம்சித்து விசேஷ வழியாக உள்ளே சென்று சுவாமியைத் தரிசித்து பெரும் புண்ணியம் அடைந்ததாகப் பெருமை கொள்கிறோம். இதில் வறியவர்களுக்குப் பொருளுதவி செய்தால் புண்ணியம் போய்விடுமோ என்று அச்சப்படுகிறோம். நமது புண்ணிய பலத்தால் ஒரு ஜீவன் பிழைக்கும் என்றால் அந்தப் புண்ணியத்தை நாம் ஏன் தானம் தரக்கூடாது? பெரிய ராஜாக்கள் கட்டிய கோவிலில் அவர்களது பெயர் எங்கேயும் காணோம். ஆனால் கோவிலுக்குள் டியூப் லைட்டைப் பொருத்திவிட்டு, நமது பெயரை அதில் பெரிதாக எழுதுகிறோம். என்ன அறிவீனம்! புண்ணி யம் என்பதே நம்மைவிட வறியவர்களுக்கு உதவுவதுதான்.
கலியுகத்தில் நடமாடும் தெய்வமாகத் திகழ்பவர்கள் பகவானின் பக்தர்களே. அவன் கோவில் வாசலில் இருக்கும்- சதா அவன் நாமம் சொல்லும் ஏழை எளியவர்களே! முடிந் தால் சுவாமிக்கு தேங்காய் உடையுங்கள். அதை வாசலில் இருக்கும் வறியவர்களுக்குக் கொடுங் கள். அதுவே உண்மையான பூஜை. வாசலில் இருக்கும் வறியவர்களை பிச்சைக்காரர்கள் என்று எண்ணாதீர்கள். போன ஜென்மத்தில் பெரும் புண்ணியம் செய்தவர்களே தன் வாழ்நாள் முழுவதும் இறைவன் உறையும் ஆலயத்தின் முன்நின்று அவன் நாமத்தையே சதா சொல்லி யாசகர்களாக வாழ்கின்றனர். அதனால் அவர்களுக்குச் செய்யும் தர்மம் பகவானுக்கே செய்வதாக அமையும்- அவர்கள் அந்த உதவியைத் தவறாகப் பயன்படுத்தினாலும்!
● நாம் மூதாதையருக்குத் தொடர்ந்து தர்ப்பணம் செய்து வருகிறோம். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவர்களின் ஆன்மா வேறு பிறவி எடுத்துவிடும் என்கின் றனர். அப்படி வேறு பிறவி எடுத்தபின் நாம் செய்யும் தர்ப்பணம் அவர்களுக்கு எப்படிச் சென்று சேரும்? அவர்கள் நமக்கு எவ்வாறு ஆசி வழங்க இயலும் என்பதை அருள் கூர்ந்து விளக்கவும். மேலும் தர்ப்பணம் சம்பந்தமாக அனைவருக்கும் பல சந்தேகங் கள் உள்ளதால், எளியவரும் புரிந்துகொண்டு தர்ப்பணம் செய்து தங்கள் முன்னோர் களின் ஆசி பெற உதவுமாறு பணிகிறேன்.
தர்ப்பணம் என்பது, நாம் நமது மூதாதையர்களை மறக்கக்கூடாது என்பதற் காகவும், நமது ஏழு தலை முறையையும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும் பெரியவர்களால் ஏற்படுத்தப் பட்ட ஒரு புனித வேள்வி யாகும். மேலும் நம் முன் னோர்கள் செய்த பலன்களுக்கு ஏற்ப சிலர் வைகுண்டவாசி யாகவும், சிலர் சிவலோக பதவி அடைந்தவர்களாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு ஜென்மா கிடையாது. அதனால் கால நிர்ணயம் என்பது பித்ரு உலகத்தில் இல்லை. நம் முன்னோர் கள் என்றால் தாத்தா, பாட்டி மட்டுமல்ல; இன்னும் பலர் உள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.
ஆகையால் வைகுண்டவாசியாகவோ சிவலோக பதவி அடைந்தவராகவோ இருக்கும் அவர்களுக்கு நமது ஒரு வருடம் என்பது ஒரு நாளாகும். அப்படிப் பார்க்கையில் அவர்கள் தினமும் பூலோகம் வந்து செல்வதாகக் கணக்கு. ஆதலால் அனைவரது ஆன்மாவும் வேறு பிறவி எடுத்திருக்கும் என்று நினைக்க வேண்டாம். சிலர் மனிதர்களாகப் பிறந்திருக்கலாம். சிலர் வேறு ஜீவராசிகளாகப் பிறந்திருக்கலாம். சிலர் தேவலோகத்தில் வசிக்கலாம். சிலர் பித்ரு லோகத் தில் வசிக்கலாம். பிறக்காமல் இருப்பவர்களுக் காகவே தர்ப்பணம் செய்யப்படுகிறது.
● நல்லவர்களுக்குச் சோதனையும், தீயவர்களுக்கு வெற்றியும் புராண காலந் தொட்டு அறியப்படும்போது, இது கலி முற்றல் என்று சமாதானம் கொள்வது தகுமா?
நீங்களே சொல்லி விட்டீர்கள் புராண காலம் தொட்டு என்று. கலி என்பது இப்போது ஆரம்பித்துள்ளது. கலியுகம் தொடங்கி தற்போது 5113 வருடம் ஆகிறது. நல்லவர்கள், கெட்டவர்கள் என்று நாம் எவ்வாறு பிரிக்கி றோம்? நமக்கு நன்மை செய்பவர்களை நல்லவர் களாகவும், நமக்குத் தீமை செய்பவர்களை தீயவர்களாகவும் எண்ணிக் கொண்டிருக்கி றோம். ஆனால் நாம் செய்த செயல் நல்லதா, கெட்டதா என்று யோசிப்பதில்லை.
ஒரு கதை... எங்கேயோ கேட்டதாக ஞாபகம். ஒரு செவிலியர்மீது குற்றச்சாட்டு ஒன்று வருகிறது. ஒரு நோயாளிக்கு இரவில் சரியான நேரத்தில் மருந்து கொடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு. நீதிபதி செவிலியரிடம் விசாரிக்கை யில், அவர் நீதிபதியிடம், "எனக்கு விளக்க அவகாசம் வேண்டும்' என்று கேட்கிறார். நீதிபதி அதை மறுத்து, "நீ மருந்து கொடுக்க வில்லை என்பதை மறுக்கிறாயா? அல்லது ஒப்புக்கொள்கிறாயா' என்று கேட்டார். அதற்கு செவிலியர், "நான் மருந்து கொடுக்கவில்லை' என்று ஒப்புக்கொள்கிறார். நீதிபதி தன் தீர்ப்பில், "செவிலியரை பணிநீக்கம் செய்யலாம்' என்கிறார்.
வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அந்த நீதிபதியும் செவிலியரும் சந்திக்கும்போது, அந்த செவிலியர் நீதிபதியிடம், "தாங்கள் அன்று விளக்கம் கேட்க மறுத்தீர்கள். இப்போது விளக்கம் கூறுகிறேன்; கேளுங்கள்' என்றார். நீதிபதியும், "சரி சொல்' என்றார். "நோயாளிக்கு தூக்க மாத்திரை கொடுக்க வேண்டும். நன்றாகத் தூங்கிக் கொண்டிருப்பவரை எழுப்பி எதற்கு தூக்க மாத்திரை கொடுக்க வேண்டும்? ஏனென்றால் தூக்க மாத்திரை கொடுக் காமலேயே அவர் அன்று நன்றாக உறங்கி னார்' என்று சொல்லி விட்டுச் சென்றுவிட்டார்.
இதுபோல எந்த செயல்களுக்கும் நல்லது, தீயது என்று நம்மை மட்டுமே அளவுகோலாக வைத்து எண்ணுகிறோம். மழை பெய்தால் குயவனுக்குக் கஷ்டம். உழவனுக்கு நன்மை. இயற்கையின் எந்தச் செயலும் ஒருவருக்கு நல்லதாகவும் மற்றவருக்குத் தீயதாகவும் தோன்றும் என்பது இயற்கை. ஆனால் சத்தியம் என்பது அரிச்சந்திரனுக்கு ஜெயித்ததுபோல், கட்டாயம் மயானத்திலாவது வெற்றி பெறும். அதில் சந்தேகமே வேண்டாம். தர்மங்கள் தன் தண்டனையை நம் கண்முன்னே கொடுக்க வேண்டும் என்று எண்ணுகிறோம். அப்படி அல்ல. காலமும் விதியும் நம்மைவிட வலிமை யானது. தர்மங்கள் தோற்பதில்லை. ஏழைகளின் குரலும் பாதிக்கப்பட்டவரின் குரலும் ஆண்ட வன் காதுகளுக்கு எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கும். ஆண்டவன் ஏழைகளுக்கு நெருக்கமானவன். பத்து அவதாரங்களைப் பார்க்கும்போது அதர்மம் அழிந்தது என்று நமக்குத் தெரியவில்லையா? இந்தியாவைச் சூழ்ந்த அதர்மம் காந்தியக் கொள்கைகளால் ஜெயிக்கப்பட்டு நாம் சுதந்திரத்தை அடைய வில்லையா? பாரதியாரின் கனவு அவர் காலத்துக்குப்பின் நனவாகவில்லையா? அதனால் தர்மத்தை சூது கவ்வினாலும் தர்மமே எப்போதும் வெல்லும்.
● ஆசாரக்குறைவு நாட்களில் பெண்கள் கந்தசஷ்டி கவசம், சுலோகங்களைச் சொல் லாமல் தவிர்ப்பது நல்லது என்கிறார்களே. அப்படி விதிகள் உள்ளனவா?
ஆசாரக்குறைவான நாட்களில் சில செயல் களைத் தள்ளி வைக்கச் சொன்னது உண்மை தான். தீட்டு நாட்களில் பெண்கள் பலவீனமாக உள்ளதும் ஒரு காரணம். ஆனால் ராம நாமம், கிருஷ்ண நாமத்தை எப்போது வேண்டுமா னாலும் சொல்லலாம். அசுத்த நாட்களாய் இருந்தாலும், சுத்த நாட்களாய் இருந்தாலும் தூங்கும்போது சொன்னாலும் தூங்கி எழுந்த பின் சொன்னாலும் ராம, கிருஷ்ண நாமங் களுக்குத் தோஷமில்லை. ஒருவர் மரணமடையும் நேரத்தில் ராம தாரக மந்திரம் சொல்வது உயர்ந்தது என்று சொல்வார்கள். ஆனால் மனிதனுக்கு மரணம் எப்போது வரும் என்று யார் சொல்வது? ஆகையால் ஆழ்வார் சொல்லிய படி அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் என்று ராம நாமத்தை இப்போதே சொல்லி வையுங்கள்.
● மரணத்தை முன்கூட்டியே மனிதன் உணர முடியுமா?
மரணத்தை மனிதன் முன்கூட்டியே உணர முடியும். அதற்கு யோகப் பயிற்சி என்பது அவசியமாகும். குண்டலினி யோகம் அறிந்த வருக்கும், சாயா புருஷ தரிசனம் செய்தவர் களுக்கும் இது ஒரு எளிய வழியாகும். மேலும் சந்திர, சூரிய கலை அறிந்து சரம் பார்ப்பவர் களுக்கும் சகுனம் அறிபவர்களுக்கும் மரணத் தைப் பற்றித் தெரிந்துகொள்ள இயலும். சாதாரண மனிதர்களுக்கு மரணத்தைப் பற்றி அறிவது கடினம். ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி, பாடகச்சேரி சுவாமிகள் போன்றவர்கள் தங்களது மரணத்தை முன்பே அறிந்தவர்கள்!

No comments:
Post a Comment