Thursday, June 16, 2011

பக்தி

 

மக்கு முதலில் பக்தி என்றால் என்ன என்று தெரிய வேண்டும். அடுத்தவர்கள் நம்மை பக்திமான்கள் என்று நினைப்பதற்காக- ஆடம்பரத்துக்காகச் செய்யும் வேண்டுதல்களோ இன்னபிற சடங்குகளோ முழுமையான பக்தி ஆகாது. நாம் மனம் நிறைய இறைவனிடம் பக்தி செலுத் தினாலே போதும். அவரை சரணடைந்தாலே போதும். அவராகவே எல்லாம் கொடுப்பார்.

தாயுமானவ சுவாமிகள், "எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறு ஒன்றும் அறியோம் பராபரமே' என்றார். இதில், எல்லாரும் என்று சொல்லும் போதே நாமும் சேர்ந்திருக்கிறோம் அல்லவா? அடுத்தவர் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினாலே, இறைவன் நமக்கு நல்லது செய்வான். அதேசமயம் இறைவனிடம் மட்டுமல்லாது வேறு சிலரிடமும் பக்தி யோடு இருக்க வேண்டும் என்கின்றன நமது வேதங்கள்.

மாத்ரு தேவோ பவ- அன்னையை தெய்வமாகக் கொள்.

பித்ரு தேவோ பவ- தந்தையை தெய்வமாகக் கொள்.

ஆச்சார்ய தேவோ பவ- குருவை தெய்வமாகக் கொள்.

அதிதி தேவோ பவ- விருந்தினரை தெய்வமாகக் கொள்.

ஆம்; "இந்த நான்கு பேரிடமும் பக்தி கொண்டாலே, என்னிடம் நீ பக்தி கொள்ள வேண்டாம்' என்கிறான் இறைவன்.

No comments:

Post a Comment