நிலாவே வா !
மகாவிஷ்ணு சூரியவம்சத்தில் ராமனாக அவதாரம் செய்ததால் "ரவிகுல திலகன்' என்றுஅழைக்கப்பட்டார். இப்படி சூரியனுக்குப் பெருமை ஏற்பட்டதைப் போல தனக்கும் பெருமை வேண்டுமென சந்திரன் திருமாலிடம் வேண்டினான். பெருமாளும் மனமிரங்கி,""உன் பெயரை என் பெயரோடு சேர்த்துக் கொண்டு விடுகிறேன்,'' என்று சொல்லி "ராமச்சந்திரமூர்த்தி' என்று மாற்றிக் கொண்டார். அதோடு மட்டுமல்லாமல் சந்திரனுக்கு ஒரு வரமும் கொடுத்தார். அடுத்த அவதாரத்தில் சந்திரவம்சத்தில் அவதரிக்கப் போவதாக வாக்குகொடுத்தார். அதன்படி கிருஷ்ணராக அவதாரம்செய்தார். கிருஷ்ணஜெயந்தியன்று தன்னை வழிபாடு செய்வதோடு, சந்திரனையும் வழிபாடு செய்ய கட்டளையிட்டார். அதனால், கிருஷ்ணஜெயந்தியன்று,வானில் உலாவரும் நிலவையும் வழிபடுவது நன்மை தரும்.
பாவம் போக்கும் கோவிந்தா !
""பார்வதி பதியே'' என்று ஒருவர் சொன்னால், மற்றவர்கள் அவளது துணைவரான சிவபெருமானை "ஹர ஹர மகாதேவ' என்று சொல்வது வழக்கம். ஆனால், கோவிந்தநாமத்தைச் சொல்<லும்போது முதலில் சொல்பவர் "சர்வத்ர கோவிந்த நாம சங்கீர்த்தனம்' என்று கோவிந்தன் பெயரைச் சொன்னால் கேட்பவர்களும் ""கோவிந்தா கோவிந்தா'' என்று தான் சொல்வர். "சர்வத்ர' என்றால் "எல்லாக் காலத்திலும்', "எல்லா இடத்திலும்', "எங்கும்' என்பது பொருள். காணும் இடத்தில் எல்லாம் அந்த கோவிந்தனே இருக்கிறான். சர்வலோக சக்கரவர்த்தியாக இருக்கும் இறைவன், பரம எளியவனாக பசுக்கூட்டத்தோடு பால கிருஷ்ணனாக திரிந்த வேளையில் ஏற்பட்ட பெயர் "கோவிந்தன்' என்பதாகும்.
ஆலிலையில் மிதக்கும் கண்ணன்
மகாவிஷ்ணு, குழந்தை கிருஷ்ணனாக ஆலிலையின்மீது சயனம் கொண்டிருக்ரும் காட்சி பார்ப்பவரை ஈர்க்கக் கூடியதாகும். கிருஷ்ணன் கோகுலத்திலோ, மதுராவில் ஆட்சி செய்யும்போதோ ஆலிலையில் சயனம் கொள்ளவில்லை. மார்க்கண்டேய முனிவருக்கு, தன் மாயசக்தியைக் காட்டுவதற்காக பிரளயத்தை (உலகம் அழிவது போன்ற தோற்றம்) ஏற்படுத்தினார். அந்த பிரளய வெள்ளத்தில் மிதந்து வந்த ஆலிலையில் குழந்தையாக தன்னை மாற்றிக் கொண்டு படுத்துக் காட்சி தந்தார். அப்போது உலகசிருஷ்டி அனைத்தும் குழந்தை பாலகிருஷ்ணனுக்குள் ஒடுங்கிக் கிடந்தது. ஆலிலைக் கண்ணனை "முக்தி தருகின்றவன்' என்னும் பொருளில் "முகுந்தன்' என்பர். தாமரைப் பூப்போன்ற தன் கால் கட்டை விரலை தாமரைப் பூப்போன்ற தன் கையினால் பிடித்து இழுத்து, வாயிதழால் சுவைத்தபடி சயனித்திருக்கும் இக்கோலத்தை வழிபட்டால் பிறவித் துன்பம் நீங்குவதோடு வைகுண்டத்திலும் வாழும் பாக்கியம் உண்டாகும். ""சாப்பிடுவது பிரம்மம். சாப்பிடப்படுவது பிரம்மம். சாப்பாடு போடுவதும் பிரம்மம்,'' என்றொரு மந்திரம் உண்டு. அந்த மந்திரத்தை மெய்ப்பிக்கும் வகையில் கண்ணனே இந்த மாயாலீலையைச் செய்து மகிழ்ந்ததாகச் சொல்வர்.
கோகுலத்தின் மன்னன்
மழைக்கடவுளான இந்திரனுக்கு ஒருமுறை தன்னால் தான் ஆயர்களும், பசுக்கூட்டங்களும் சுகமாக வாழ்கிறார்கள் என்ற கர்வம் உண்டானது. அவனுக்கு பாடம் கற்பிக்க நினைத்த கிருஷ்ணர், தான் வசித்த ஆயர்பாடியில் இருந்த மக்களிடம் இந்திரனை வழிபடாமல், தங்களுக்கு பிழைப்பு தரும் கோவர்த்தனகிரியை (மலை) வழிபடும்படி கூறினார். கோபம் கொண்ட இந்திரன், ஆயர்பாடியில் கடுமையாக மழை பெய்வித்தான். கிருஷ்ணர், அந்த மலையைக் குடையாகப் பிடித்து ஆயர்களையும், பசுக்களையும் காப்பாற்றினார். மமதை அடங்கிய இந்திரன், கிருஷ்ணனுக்குப் பட்டாபிஷேகம் செய்து பிராயச் சித்தம் தேடினான். அன்றுமுதல் "கோகுலத்தின் மன்னன்' என்னும் பொருளில் கிருஷ்ணருக்கு "கோவிந்தராஜன்' என்ற பட்டம் உண்டானது. "கோவிந்தா' என உள்ளத்தூய்மையோடு, தினமும் மூன்றுமுறை சொன்னால் பாவங்கள் தொலையும் என்பர்.
பார்வை ஒன்றே போதும் !
கடவுளுக்கு உருவம் கிடையாது. உருவமின்றி ஒளிவடிவாக காட்சிதரும் அவனை நாமும் அந்நிலையில் வழிபாடு செய்வது மிக உயர்ந்த நிலையாகும். ஆனால், நம்மைப் போன்ற பாமரர்களால் இவ்வாறு இறைவனை வணங்க முடியாது. எனவே தான் பகவானே நம் மத்தியில் பாலகிருஷ்ணனாக அவதரித்தான். மதுசூதன சரஸ்வதி என்னும் அடியவர் குழந்தை கண்ணன் மீது ""ஆனந்த மந்தாகினி ஸ்தோத்திரம்'' என்னும் பெயரில் நூறு ஸ்லோகங்களைப் பாடியுள்ளார். அதில்,"" ஞானிகள் தம் மனதை அடக்கி தங்களுக்குள் இறைனை ஜோதிவடிவில் பார்த்துவிட்டுப் போகட்டும். நம்மால் அப்படி யோகம், தவம் எல்லாம் செய்ய முடியவில்லையே என்று யாரும் வருந்த வேண்டாம். அந்த ஜோதியே நீலஒளியாக, கார்மேகவண்ணனாக, யமுனாநதிக்கரையில் ஓடி விளையாடுகிறது. அந்த கண்ணனைப் பாருங்கள். அது, நம் கண்களுக்கு ஆனந்தத்தை தருவதோடு, முக்தியையும் தந்துவிடும்'' என்கிறார். அதனால், மகான்கள் கூட கண்ணனின் வடிவழகில் மயங்கி அவனைப் போற்றியிருக்கிறார்கள். தியானம், தவம் போன்ற உயர் பக்தியைக் காட்டிலும், கண்ணனைக் காண்பதே கூட நம்மைக் கரைசேர்க்கும் என்பது மகான்களின் முடிவு.
கிருஷ்ணரின் தந்திரம்
பாண்டவர்களின் சார்பாக கவுரவர்களிடம் தூது புறப்பட்டார் கிருஷ்ணர். கவுரவர்களின் அரண்மனைக்குச் செல்லாமல், அவர்களது சித்தப்பாவான விதுரரின் மாளிகைக்குச் சென்று விருந்துண்டார். முதலில் தங்களைத் தேடி வராத கிருஷ்ணரை அவமதிக்க முடிவெடுத்தான் துரியோதனன். அவையில் இருந்தவர்களிடம், ""யாரும் கிருஷ்ணர் வரும் போது எழுந்திருக்கக் கூடாது. அரை அவமதிக்க வேண்டும்,'' என்று கட்டளையிட்டான். ஆனால், கிருஷ்ணரைக் கண்டதும் அவருடைய தேஜஸில் மயங்கி அறியாமலேயே அனைவரும் இருக்கையில் இருந்து எழுந்துவிட்டனர். துரியோதனன் மட்டும் ஏளனத்துடன், ""கிருஷ்ணா! நீர் தூது வந்ததன் நோக்கம் என்ன?'' என்று கேட்டான். வனவாசம் முடிந்த பாண்டவர்களுக்கு பாதிநாட்டைக் கொடுக்கும்படி கேட்டார் கிருஷ்ணர். ஆனால், துரியோதனனோ ஒரு பிடி மண் கூட கிடையாது என்று மறுத்துவிட்டான். நல்லவரான விதுரர் மட்டும் துரியோதனனிடம் தர்மத்தை எடுத்துச் சொன்னார். ஆனால், விதுரரின் பிறப்பைப் பற்றி பேசி, துரியோதனன் அவமதித்தான். ""தர்மத்தின் பக்கம் தான் நிற்பேன்! என்னுடைய வில்லைக் கொண்டு அதர்மத்திற்கு உதவ எனக்கு மனமில்லை!'' என்று சொல்லி, அவர் தன் வில்லை முறித்து விட்டார். நல்லவரான விதுரர், செஞ்சோற்றுக்கடனுக்காக துரியோதனுக்கு உதவினால், பாண்டவர்களால் போரில் வெல்லமுடியாது என்பதால், துரியோதனனுக்கும், விதுரருக்கும் வாதத்தை உருவாக்கி, அவரது கையாலேயே முக்கியமான ஒரு வில்லையும் ஒடிக்கச் செய்து தந்திரம் செய்தார் கிருஷ்ணர்.
ஜெயந்தி சபதம்
நாம் புண்ணியம் செய்தாலும், பாவம் செய்தாலும் அதற்குரிய நற்பலனை அனுபவிக்க மீண்டும் பிறவி எடுக்கத்தான் வேண்டும். அதனால் தான், விவேகானந்தர் புண்ணியத்தை தங்கச்சங்கிலி என்றும், பாவத்தை இரும்புச்சங்கிலி என்றும் குறிப்பிடுவார். தங்கமோ, இரும்போ அந்தச் சங்கிலி கைக்கு இடும் விலங்கு. அது நம்முடைய சுதந்திரத்தைப் பறிக்கத் தான் செய்யும். அதிலிருந்து தப்பிக்கும் வழி ஒன்று உண்டு. அதுதான் "சகலம் கிருஷ்ணார்ப்பணம்' என்பதாகும். எந்தச் செயலைச் செய்தாலும் அதன் பலனை கிருஷ்ணருக்கே சமர்ப்பணம் செய்து விட வேண்டும். இதனால் பிறவித்துன்பத்தில் இருந்து விடுபடலாம். "போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே!' என்ற சபதத்தை கிருஷ்ணஜெயந்தி நாளில்எடுத்துக் கொள்வோம்

No comments:
Post a Comment