அசைவ "அமாவாசை '
வடலூரில், இறந்த பசுக்களை எடுத்து வந்து மாமிசம் சாப்பிடும் பழக்கம் கொண்ட அமாவாசை என்பவர் இருந்தார். பசு மாமிசத்தை உண்பது பாவம் என்று வள்ளலார் அவரிடம் அறிவுறுத்தினார்.
அமாவாசை சுவாமியிடம்,""எனக்கென்ன இதன் மீது ஒரு ஆசையா சுவாமி! அன்றாடம் குடும்பச் செலவுக்கு எட்டணா(50காசு) தேவை. அதற்கு நான் எங்கே போவேன்? இந்த மாமிசம் தான் எங்கள் குடும்பத்தின் வயிற்றைக் கழுவுகிறது,'' என்று வருந்தினார். அமாவாசையிடம் இயற்கையிலேயே காருண்ய சிந்தனை இருப்பது, வள்ளலாருக்கு தெரிய வந்தது. அவருக்கு உதவி செய்வது என்று முடிவெடுத்த வள்ளலார், ஒரு மஞ்சள் துணியில் அரைரூபாயை வைத்துக் கொடுத்தார். ""அமாவாசை! இந்தப் பணத்தை உன் வீட்டில் வை. அன்றாடம் குடும்பச் செலவுக்குத் தேவையான பணம் தர்மவழியில் உன்னை வந்தடையும்.'' என்று அருள் செய்தார். வள்ளலாரின் மீது அன்பு கொண்ட அமாவாசையும் பசுமாமிசம் உண்பதை கைவிட்டார்.
அசைவர் எல்லாம் கெட்டவரும் அல்ல. சைவர் எல்லாம் புடம் போட்ட தங்கமும் அல்ல என்பது வள்ளலாரின் எண்ணமாக இருந்தது.
பசி தீர்த்தாள் பராசக்தி
ஒருமுறை இரவு நேரத்தில் திருவொற்றியூர் வடிவுடைஅம்பிகையைத் தரிசனம் செய்யச் சென்றிருந்தார். வழிபாடு செய்துவிட்டு வர இரவு வெகுநேரம் ஆகிவிட்டது. வீட்டில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருப்பதை அறிந்த வள்ளலார் கதவைத் தட்ட மனமில்லாமல் திண்ணையிலேயே படுத்துக் கொண்டார். பசியும் களைப்பும் அதிகமாக இருந்ததால் உறக்கம் வரவில்லை. அப்போது அவரது அண்ணியின் வடிவில் வடிவுடைநாயகியே வந்து தாமரை இலையில் வெண்பொங்கல் கொடுத்துவிட்டு மறைந்தார். வள்ளலாருக்கு அமுதூட்டிய அம்பிகை தாயாக, சகோதரியாக வந்ததாகவும் சொல்வர். ""பசியைப் போக்கி அருள்புரிந்த அன்னையே'' என்று இந்நிகழ்ச்சி பற்றி
வள்ளலார் பாடியுள்ளார்.
திருடனுக்கும் அருள் செய்தவர்
ஒரு சமயம், வள்ளலார் ஒற்றியூர் சத்திரத்தில் உறங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் ஒரு திருடன் ஒசைபடாமல் பூனைபோல அவரருகே வந்து நின்றான். ராமலிங்கரின் காதில் கிடந்த கடுக்கன்
(தங்கத்தோடு) திருடனின் கண்ணை உறுத்தியது. கடுக்கனைக் கழற்ற முயற்சித்தான். தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டாலும், வள்ளலார் எழுந்திருக்காமல் இருந்தார். திருடன் வலது
காதில் கழற்றியதும் திரும்பிக் கொண்டு இடக்காதையும் காட்டினார். மகிழ்ச்சியோடு வேகமாக கழற்றிவிட்டு ஓட்டம் பிடித்தான். தன் வைராக்கியத்தை சோதிக்க வந்த குருவாக, அந்த திருடனை ஏற்றுக்கொண்டார். வாடிய பயிரைக் கண்ட
போதெல்லாம் வாடிய வள்ளலாரின் உள்ளம்
திருடனின் ஏழ்மையை எண்ணி வருந்தியது.
பொன்னே! மணியே! முத்தே!
இரிசப்ப செட்டியார் என்பவர் வள்ளலாரின் அன்பராக விளங்கினார். அவருடைய இல்லத்திற்கு வள்ளலார் வந்தபோது, நாதஸ்வர வித்வான்கள் மூவர் நாதஸ்வரம் வாசித்தனர். இசையை ரசித்துக் கேட்ட வள்ளலார் மிகவும் மகிழ்ந்தார். வித்வான்களுக்கு விபூதி வழங்கினார். முதலாமவரை, "நீ மணியே!'' என்றும், இரண்டாமவரை, ""நீ முத்தே'' என்றும், மூன்றாமவரை,""நீ பொன்னே!'' என்றும் வாழ்த்தினார். இதற்கு முன் வள்ளலாருக்கு நாதஸ்வர வித்வான்கள் அறிமுகம் கிடையாது. ஆனால், உண்மையிலேயே அவர்களின் பெயர்கள்
திருவழுந்தூர் சுப்பிரமணி, திருப்பாதிரிப்புலியூர் முத்துவீரன், திருவயிந்திபுரம் பொன்னன் என்பதே ஆகும். வள்ளலாரின் வாழ்த்து தங்கள் பெயருடன் பொருந்தி வந்ததை நினைத்து அவர்கள் ஆச்சரியப்பட்டனர்.
6(1) - அட நூறும் வேண்டாம் ! ஆயிரமும் வேண்டாம் ! அஞ்சு போதும் ஆண்டவனை வணங்க ! எளிய யோசனை சொல்கிறார் வள்ளலார்
* மனிதர்களிடையே ஏழை பணக்காரன் என்ற வர்க்க பேதம் கூடாது. பணம் படைத்தவர்கள் மகிழ்ச்சியில் திளைப்பதும், ஏழைகள் பட்டினியால் வாடுவதும் கொடுமை. சோற்றுக்கும், காமச் சேற்றுக்கும் ஆசைப்படும் மனிதர்களின் உயிரைக் கவர எமனுக்கு ஆசை. இந்நிலையில், பொருள் தேடும் எண்ணம் ஏன்? உங்களுக்கென பொருள் ஒன்று உண்டு, அதுவே பரம்பொருள் (இறைவன்). அதன் மேன்மையை எண்ணுங்கள், பேசுங்கள், மோட்சத்தைத் தேடிக்கொள்ளுங்கள்.
* செத்தாரைச் சுடுவதன் மூலம் உங்கள் புண்ணியத்தைக் கருங்கடலில் கரைத்துவிட்டீர்கள். புலைத்தொழில் புரிவதன் மூலம் பெரியவர்களின் உள்ளத்தைக் கலக்கமுறச் செய்தீர்கள். இது பரமன் அளித்த தேகம். இதனைச் சுடுவதற்கு எந்த உரிமையும் உங்களுக்கு இல்லை.
* ஆண்டவனின் புகழ்பாட அவனுடைய ஆயிரம் நாமங்களையும் நீங்கள் ஜெபிக்க வேண்டும் என்பதில்லை. நூறும் வேண்டாம். அட! பத்துக்கூட வேண்டாம். "நமசிவாய' என்னும் ஐந்து எழுத்துக்கள்தாம் அவனுடையது. இதைச் சொல்லக்கூட உங்களுக்கு மனம் வரவில்லையா?
* பயத்துடன் இருக்கக் கூடாது. அதற்காக, ஒரேயடியாக பயமற்றும் இருக்கக்கூடாது. மனதை எப்போதும் உற்சாகத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும். உரக்கப் பேசுதல், வேகமாக நடத்தல், ஓடி நடத்தல், வழக்கிடல், வாதம் புரிதல் கூடாது. எந்த வகையிலும் பிராணவாயு அதிகம் செலவாகாமல், நமது பழக்கவழக்கமும் செயல்முறையும் இருக்க வேண்டும்.
* அயலாரிடம் கை ஏந்தி நிற்காதீர்கள். உங்களிடம் உதவி கேட்டு வருவோர்க்கு இல்லை என்று சொல்லாதீர்கள். அடுத்தவர் சொத்தை அபகரிக்கும் மனம் வேண்டாம். துன்பத்தில் துவளாத திட சித்தராய் இருங் கள், "ச்சீ' என்றோ, பேய் என்றோ, நாய் என்றோ, வசையான வார்த்தைகளை யாரிடத்தும் பயன்படுத்தாதீர்கள். தெளிவோடு இருங்கள். திறமாய் இருங்கள். வாய்மையும், தூய்மையும் காத்திடுங்கள்.
* பசி என்ற நெருப்பானது ஏழைகள் தேகத்தினுள் பற்றி எரிகின்றபோது ஆகாரத்தால் அதை அணைப்பது தான் ஜீவகாருண்யம். பசி என்ற விஷக் காற்று, ஏழைகளின் அறிவாகிய விளக்கை அணைக்கின்ற தருணத்தில், ஆகாரம் கொடுத்து அணையாமல் ஏற்றுவதே ஜீவகாருண்யம். பசி என்ற புலியானது ஏழைகளின் உயிர் மீது பாய்ந்து கொல்லத் தொடங்கும் தருணத்தில், அப்புலியைக் கொன்று அவ்வுயிரை ரட்சிப்பதே ஜீவகாருண்யம்.
* பெரியவர்களிடம் பணிவுடன் உரையாடுங்கள். தவறு செய்துவிட்டால், நாம் தவறு செய்துவிட்டோம் என்பதை உணருங்கள். அவ்வாறில்லாமல் அறியாமையில் மயங்கி நிற்க நேர்ந்தால் அது குறித்து வெட்கப்படுங்கள். நற்குணங்கள் எதுவென அறிந்து கொள்ளுங்கள்.
* ஒரு பதார்த்தத்தை அனுபவித்தாலல்லது, அந்தப் பதார்த்தத்தின் ருசி தெரியாது. ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் ஆசை ஏற்படாது. அதுபோல் தெய்வத்தை உள்ளபடி அனுபவித்தால் அல்லாது, அதன் மேல் பிரியம் வராது. ஆதலால், தெய்வத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்கிற முக்கிய லட்சியத்தைக் கொண்டிருங்கள்.

No comments:
Post a Comment