Sunday, June 26, 2011

"ஞானிக்கும் பக்தி அவசியம்'-ஆதிசங்கரர்

ஒருசமயம், ஆதிசங்கரர் ஆகாயமார்க்கமாக வானில் பறந்து சென்ற போது, திரிலோக சஞ்சாரியான நாரதர் எங்கோ வேகமாகச் செல்வதைப் பார்த்தார்.
""அவசரமாக எங்கோ சென்று கொண்டிருக்கிறீர்களே?'' என்று கேட்டார். ""இன்று ஏகாதசி. குருவாயூரப்பனை தரிசிக்கசெல்கிறேன். நீங்களும் வாருங்களேன்,'' என்று சங்கரரையும் அழைத்தார் நாரதர். ""விக்ரக ஆராதனை செய்வதும், நாமஜபமாக இறைவனின் பெயரை உச்சரிப்பதும் பாமரருக்குத் தான் தேவை. ஆத்மஞானம் பெற்றவர்களுக்கு தேவையல்ல,'' என்ற கருத்துடைய சங்கரர் அவருடன் செல்ல மறுத்துவிட்டு தன் ஆகாயப் பயணத்தைத் தொடர்ந்தார்.
குருவாயூர் கோயிலைக் கடந்து செல்லும்போது, வானில் இருந்து கோயிலின் வடக்குவாசலில் போய் விழுந்தார். குருவாயூரப்பனின் லீலையை எண்ணி வியந்து, தன்னுடைய கருத்து தவறானது என்பதை உணர்ந்து வருந்தினார். பெருமாளிடம் தன்னை மன்னிக்கும்படி மன்றாடினார். அவர் முன் தோன்றிய குருவாயூரப்பன், "ஞானிக்கும் பக்தி அவசியம்' என்று எடுத்துக்கூறினார். நீலமணிவண்ணனான கண்ணனின் பெருமைகளை எண்ணி ஆதிசங்கரர் அவ்விடத்தில் 41நாட்கள் வரை தியானத்தில் ஆழ்ந்து குருவாயூரப்பனை வழிபாடு செய்தார். இன்றும் குருவாயூரப்பன் வீதிவுலா வரும்போது ஆதிசங்கரர் வழிபட்ட இடத்தில் மேளதாளங்கள் இசைக்காமல் அமைதியாகக் கடந்து செல்வர்.அப்போது குருவாயூரப்பனிடம் ஆதிசங்கரர் மன்னிப்பு கேட்பதாக ஐதீகம்.

No comments:

Post a Comment