Saturday, June 25, 2011

வீரபாகுவுக்கு என்ன பிடிக்கும்?



முருகப்பெருமானின் சேனைத் தலைவராக விளங்கியவர் வீரபாகு. "வெற்றிவேல் வீரவேல்' என முழக்கமிட்டு, முருகனின் படைகளைத் தட்டியெழுப்பியவர். இதைப் பாராட்டி, திருச்செந்தூரிலுள்ள தனது கர்ப்பக்கிரகத்திற்கு முன்புள்ள அர்த்த மண்டபத்தில் இவருக்கும், வீர மகேந்திரர் என்ற தளபதியையும் காவல் தெய்வங்களாக இருக்க அருள்புரிந்தார். அத்துடன், திருச்செந்தூருக்கு "வீரபாகு பட்டினம்' என்ற பெயரையும் சூட்டினார். மேலும், வீரபாகுவுக்குச் சிறப்பு செய்யும் வகையில் முதலில் வீரபாகுவுக்கு பூஜை நடந்த பின்னரே மூலவருக்கு பூஜை நடைபெறுவது இன்றும் வழக்கமாக இருக்கிறது. வீரபாகுவுக்கு மிகவும் பிடித்தமான உணவு பிட்டு. இவருக்கு பிட்டை நிவேதனமாகப் படைத்தால் நமது மனவிருப்பங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

No comments:

Post a Comment