திருவிளக்கு வழிபாடு இன்று நேற்று தோன்றியதல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்மக்கள் இறைவனை ஜோதியாக வணங்கிப் போற்றியுள்ளனர். சங்ககால இலக்கியங்கள் இவ்வழிபாட்டை "கார்த்திகை விளக்கீடு' என்று குறிப்பிடுகின்றன. பெண்கள் விளக்கு வழிபாடு செய்த நிகழ்வு அகநானூறு, நற்றிணை போன்ற எட்டுத்தொகை நூல்களில் இடம்பெற்றுள்ளன. சங்க இலக்கிய ஆய்வாளர்கள் சிலர், கார்த்திகை மாதத்தையே முதல் மாதமாகக் கொண்டு தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட்டதாக கருதுகின்றனர். தீபஜோதி என்பது அக்னி தத்துவமாகும். அக்னியின் சொரூபமாக ஈசனின் நெற்றிக் கண் அமைந்துள்ளது. அதில் எழுந்த ஞானஜோதியால் காமனாகிய மன்மதனை எரித்தார். இந்த நன்னாளில் நாமும் நம் அறியாமையை அகற்றி ஞானதீபத்தை மனதில் ஏற்றி கொண்டாடி மகிழ்வோம்.
No comments:
Post a Comment