Saturday, June 25, 2011

நெய்த் தேங்காயே நமது மனம்

இருமுடிக்கட்டில் இருக்கும் பொருள்களில் நெய்த்தேங்காய் முக்கியமானது. இந்த தேங்காயும், பக்தனின் மனமும் ஒன்று என்பது தான் இதன் தத்துவம். தேங்காயின் ஒரு கண்ணில் துளையிட்டு உள்ளிருக்கும் நீரை வெளியேற்றுவர். உலக ஆசைகள் ஒருவனுக்குத் தேவையில்லை என்று எண்ணி புறக்கணிப்பதைக் குறிக்கும். அத்தேங்காயில் நெய்யை
ஊற்றுவது மனதில் தெய்வீக சிந்தனையை நிரப்ப வேண்டும் என்ற உண்மையைக் காட்டுகிறது. இந்த நெய்த்தேங்காயே சபரிமலை சந்நிதானத்தில் உடைக்கப்பட்டு சுவாமியின் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படும். இறையருளை நம்மோடு கொண்டு வருவதன் அடையாளமாக இதில் சிறிதளவு நெய்யை வீட்டிற்குக் கொண்டு வருவர். இதனை வெறும் சடங்காக மட்டும் செய்யாமல் உள்ளப்பூர்வமாகச் செய்தால் நெய்தேங்காயோடு நம் மனமும் ஐயப்பனுக்குரிய அருட்தேங்காயாக மாறிவிடும் என்பதில் ஐயமில்லை.

No comments:

Post a Comment