சபரிமலை யாத்திரை செல்லும் போது ஒவ்வொருவரும் பெறும் பக்திஅனுபவத்தைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. மாலையணிந்து விரதம் தொடங்கிய நாள் முதலே நீராடி காவியுடை உடுத்திக் கொண்டு ஐயப்பனின் மறுபிம்பமாகவே உணர வேண்டும். அதனால் தான் அவர்களை ஐயப்பமார், சுவாமிமார் என்று அழைக்கின்றனர். இந்த உண்மையை உணர்ந்து ஐயப்ப விரதம் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். இதனை மெய்பிக்கும் வகையில் 18படிகளின் மீதேறி நின்றவுடன் நம் கண்ணில் படும் வேதவாக்கியம் "தத்வமசி'' என்பதாகும். இதன் பொருள் ""நீயே அது''. மூலவராகக் காட்சிதரும் ஐயப்பனும், விரதம் இருந்து சபரிமலை செல்லும் பக்தனும் ஒன்றே என்பதையே இவ்வாக்கியம் காட்டுகிறது. கடவுளும் உயிர்களும் வேறு வேறு அல்ல என்பதை சபரிமலையில் ஐயப்பன் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறார். மனிதர்கள் எல்லோரும் மனத்தூய்மை பெற்று மேம்பட்ட வாழ்க்கை வாழ வேண்டும் என்ற குறிக்கோளோடு சபரிகிரிவாசன்கோயில் கொண்டிருக்கிறார்
No comments:
Post a Comment