Saturday, June 11, 2011

அறுபதாவது வயதை முன்னிட்டு என்னென்ன தானங்கள் செய்தால் விசேஷம்?

உயர்ந்த பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளேன். எனது மகன், மகள் வெளிநாட்டில் வசிக்கின்றனர். தற்பொழுது 60 வயது பூர்த்தி அடைவதற்கு சாந்தி பூஜைகள் செய்ய எண்ணியுள்ளேன். அதை முன்னிட்டு தானங்கள் செய்ய எண்ணியுள் ளேன். என்னென்ன தானங்கள் செய்தால் விசேஷம்? மேலும் ஒரு திருக்கோவிலுக்கு விக்கிரகமும் செய்து கொடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன். தங்களது அபிப் பிராயத்தைக் கூறவும்.

-


அறுபதாவது வயதை முன்னிட்டு பதினோரு வில்வ மரக்கன்றுகள் நடுவது விசேஷமாகும். உங்களுக்கு வழக்கமாக ஹோமம் செய்து வைப்பவர் யாரோ, அவரைக் கொண்டு உங்கள் ஆகமம் சொல்லியபடி இந்த 60-ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடுங்கள்.

கோ தானம், ரிஷப தானம், பூதானம், ஆபக தானம், கிரக தானம், அன்ன தானம், பிரப தானம், வித்யா தானம் போன்றவை விசேஷமானதாகும். இதில் முன்னிலையில் நிற்பது வித்யா தானம் மற்றும் அன்ன தானம்.

கோ தானம் செய்வதால், அந்த பசுவின் ரோமத்தில் இருக்கும் எண்ணிக்கையின்படி,
அத்தனை ஆண்டு காலம் கிருஷ்ண பகவானது கோகுலத்தில் தானம் செய்தவர் வசிப்பதாகக் கூறுவார்கள். ரிஷப தானம் செய்தால் ஏழு பிறவிகளில் செய்த பாவங்கள் விலகும் என்பார்கள்.

ஆபக தானம் எனப்படும் 1000 பாத்திரங்களை ஏழைகளுக்குக் கொடுத்தால், நிலைத்த செல்வம் கிடைக்கும் என்பார்கள்; சந்ததி வளரும்.

கிரக தானம் என்பது வசதியற்றவருக்கு தங்க இடம் தானமாகக் கொடுப்பது. அல்லது ஏழைக் குழந்தைகள் படிக்க பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்கலாம். இதனால் தேவலோகம் கிட்டும் என்பார்கள்.

பூமி தானம் என்பது ஆலய அர்ச்சகருக்கு நிலத்தை தானமாகக் கொடுப்பது. பூதானம் கொடுத்தால் இந்திரனுக் குச் சமமாக சொர்க் கத்தில் வசிப்பார்கள் என்பர்.

அன்னதானம் என்பது பசித்த அனைவருக்கும் அன்னமிடுவது, அன்ன தானம் செய்வதால் மகா விஷ்ணுவின் அருள் கிடைக்கும்.

பிரப தானம் எனப்படும் தண்ணீர்ப் பந்தல் அமைத்தால், நமது ஏழு தலைமுறை முன்னோர்கள் தாகத்தில் தவித்தால் அவர்கள் தாகம் தீரும்; பின் வரப்போகும் சந்ததிகளுக்கு வியாதியே இராது.

வித்யா தானம் என்பது ஏழைக் குழந்தை களுக்கு கல்வி கொடுப்பது. இதனால் சாயுஜ்ய பதவி கிட்டும். வரும் தலைமுறையில் பிறக்கும் அத்தனை குழந்தைகளும் மகா புத்திசாலியாக விளங்குவார்கள்.

விக்கிரகம் என்பது அதற்குரிய லட்சணங் களின்படி அமைய வேண்டும். எந்த விக்கிரகம் தாங்கள் செய்யப் போகிறீர்கள் என்பதைப் பொறுத்து உள்ளது. சாதாரணமாக மரத்தால், கருங்கல்லால், பஞ்சலோகத்தால், செம்பால் விக்கிரகங்கள் செய்து கொடுக்கலாம்




நான் சொந்தமாகத் தொழில் செய்து வருகிறேன். நல்ல முறையில் நடந்து வந்த
வியாபாரத்தில் கடந்த வருடத்திலிருந்து பல சோதனைகளைச் சந்திக்கிறேன். தொழில் போட்டி காரணமாக யாராவது மந்திரப் பிரயோகம் செய்துவிட்டார்களா என்ற சந்தேகம் உள்ளது. அல்லது திருஷ்டி தோஷமா? சிலர் கணபதி ஹோமம் செய்யச் சொன்னார்கள். அதுவும் செய்துவிட்டேன். நீங்கள் இதற்கு எளிய பரிகாரமாக ஏதாவது செய்ய வேண்டும். பிரத்தியங்கரா தேவி பூஜை செய்யச் சொல்கிறார்கள். பிரத்தியங் கரா தேவியைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. தங்களது அறிவுரையை எதிர் பார்க்கிறேன்.
பெருமாள் தூணிலும் துரும்பிலும் வியாபித்து நிற்பவர். இரணியனை அழிக்க நரசிம்மமூர்த்தியாக அவதாரம் செய்தார். தவப்பயனால் இரணியன் பெற்ற வரம் வித்தியாசமானது. மனிதராலோ, மிருகத்தாலோ, இரவிலோ, பகலிலோ, வீட்டிலோ, வெளியிலோ, ஆயுதங்களாலோ அல்லது வெறும் கைகளாலோ தனக்கு மரணம் நேரக்கூடாது என்று வரம் பெற்றான்.

சுவாமி மனிதனும் மிருகமும் அல்லாது சிங்க முகமும் மனித உடலும் கொண்ட நரசிம்மமாக அவதாரம் செய்தார். இரவும் பகலும் அல்லாத சந்தி வேளையில், வீட்டினுள் ளும் இல்லாமல் வெளியிலும் இல்லாமல் வாயிற்படியில், கைகளாலும் இல்லாமல் ஆயுதங்களாலும் இல்லாமல் தன் நகத்தினால், தரையிலும் இல்லாமல் ஆகாயத்திலும் இல்லாமல் மடியில் வைத்து அவனை அழித்தார்.


இது முடிந்தவுடன் சகல தேவர்களும் அவர் அருகே செல்ல அஞ்சினர். பிரகலாதன் பிரார்த்தனை செய்தபின் சாந்தமடைந்து லக்ஷ்மி நரசிம்மராகக் காட்சி கொடுத்தார். பிரகலாதனிடம், "நீ உன் தந்தையின் ஆசனத்தில் அமர்ந்து அரசாட்சி செய்து வா' என்றார்.

பிரகலாதன் அவரிடம், "அசுர குணத்துடன் மக்களை வதைத்த என் தந்தை அமர்ந்த இந்த ஆசனத்தில் அமர்ந்து நான் ஆட்சி செய்வதற்கு முன், நீங்கள் இதில் அமர்ந்து ஆசனத்தை தூய்மைப்படுத்தி எங்களைப் பெருமைப்படுத்த வேண்டும்' என்றார். அதன்படியே நரசிம்ம சுவாமி அமர்ந்தார். அன்று முதல் அரசர்கள் அமரும் ஆசனம் சிம்ம + ஆசனம் = சிம்மாசனம் எனப்பட்டது.

இவ்வித பெருமை கொண்ட நரசிம்ம சுவாமியின் உக்கிரம் தணியாததால், சிவபெருமானிடமிருந்து தோன்றிய சரப பட்சி நரசிம்ம சுவாமியை ஆலிங்கனம் செய்து சாந்தப்படுத்தியதாக ஐதீகம். இந்த சரப மூர்த்தி இறக்கையிலிருந்து பிரத்தியங்கரா தேவியும் சூலினி துர்க்கையும் தோன்றியதாகக் கூறுவார்கள்.

இந்த பிரத்தியங்கரா உக்ர வடிவானவள். "ஷம்' என்று ஆரம்பிக்கும் மகா மந்திரத்தை உடையவள். அதர்வண வேதத்தில் மந்திர காண்டத்தில் 32 ரிக்குகளும் பிப்லாத சாகையில் 42 ரிக்குகளும் இந்த தேவியைப் பற்றி சொல் கின்றன. இவளை அதர்வண காளி என்றும் கூறுவார்கள்.

பிரத்தியங்கரா தேவியைப் பற்றி ரிக் வேதத்திலும் சொல்லப்பட்டுள்ளது. இவளது மகாமந்திரம்:

"ஓம் க்ஷம் பக்ஷ ஜ்வாலா ஜிஹ்வே
கராளதம்ஷ்ட்ரே ப்ரத்யங்கரே
க்ஷம் ஹ்ரீம் ஹும் பட்'.

இதன் உச்சரிப்பை குருமுகமாக அறிய வேண்டும். இதற்கு அமாவாசை, பௌர்ணமி தினங்கள் விசேஷமானது. இரும்பு வாணலியில் மிளகாய் வைத்து செய்வினை அகல மாந்திரீகப் பிரயோகம் செய்வதும் உண்டு. இதை இராவணன் மகனாகிய இந்திரஜித் நிகும்பலை என்ற இடத்தில் செய்ததாகக் கூறுவார்கள்.

இவளின் மற்றொரு மகாமந்திரம்:
"ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ப்ரத்யங்கரே
மாம் ரக்ஷரக்ஷ தேவி மம
சத்ரூன் பக்ஷ ஓம் ஸ்வாஹா'

என்பதாகும். கும்ப கோணம் அருகில் ஒப்பிலியப்பன் கோவிலிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஐயாவாடி என்ற இடத்தில் பிரத்தியங்கரா தேவி கோவில் உள்ளது. இங்கு சிம்ம முகத்துடன் 18 கரங்களுடன் பிரத்தியங்கரா காட்சி அளிக்கிறாள்.

நீங்கள் செய்வினைகள் அகல வைணவ பரமாக பரிகாரம் செய்வதாக இருந்தால், யோக நரசிம்ம சுவாமிக்குப் பரிகாரம் செய்யலாம். திருத்தணியிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சோளிங்கபுரத்தில் மலை மேல் யோக நரசிம்மர் காட்சி அளிக்கிறார்.

நான் ஓரிடத்தில் ஊழியராக வேலை செய்யும்பொழுது மிக வசதியாக இருந்தேன். என் உழைப்பைப் பார்த்து சிலர் கொடுத்த உற்சாகத்தால் சொந்தமாகத் தொழில் செய்ய ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் சிறிது லாபம் தெரிந்தது. போகப் போக நிலைமை மாறியது. தற்போது முதலீட்டைவிட கடன் அதிகமாக உள்ளது. மறுபடியும் ஊழியராகப் பணிபுரியவும் விருப்பமில்லை. சொந்தத் தொழிலை மற்றவர்கள் கையில் கொடுத்தால்கூட கடன் அடையாது. தனியாரிடமும் வங்கியிடமும் பெற்ற கடனுக்கு வட்டிதான் கட்டிக் கொண்டு வருகிறேன். கடன் தீர எந்தவிதமான பூஜை செய்யலாம்?



கடன் தொல்லை விலக மகாலட்சுமியைப் பூஜிக்கலாம்; குபேர பகவானைப் பூஜிக்கலாம். வெள்ளிக்கிழமை தோறும் பெருமாள் கோவிலுக்குச் சென்று அங்குள்ள தாயார் சந்நிதியில் குங்குமத்தில் அர்ச்சனை செய்து வாருங்கள். திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை களில் குத்துவிளக்கில் மகாலட்சுமியை ஆவாஹனம் செய்தும் பூஜிக்கலாம். வழக்கமாக ஏற்றும் விளக்கு அல்லா மல் மற்றொரு விளக்கு வாங்கி அதில் லட்சுமி யைப் பூஜித்து வரலாம். மகாலட்சுமியைப் பூஜிப்பதால் எம்பெரு மாள் நாராயணன் அருளும் சேர்ந்தே கிடைக்கும். இதனால் பொருளுடன் அருளும் பெறுவீர்கள்.

குபேரன் வடதிசைக்கு அதிபதி. இலங்கையில் சகோதரனாகிய இராவணனின் தொல்லையால் அழகாபுரி பட்டணத்தை நிர்மாணித்து அங்கு அவர் ஆட்சி செய்ததாகக் கூறுவார்கள். சங்கநிதி, பதுமநிதி உட்பட எட்டுவித நிதியைக் கொண்டவர் குபேரன். கடும் தவத்தினால் நீங்காத செல்வத்தைப் பெற்றதாகக் கூறுவார்கள். இவரைப் பூஜிப்பவருக்கு குபேர செல்வம் உண்டாகும். பௌர்ணமிதோறும் குபேர பகவானைப் பூஜிக்கலாம். இவருக்குள்ள நாமாவளி மற்றும் மூலமந்திரங்களைச் சொல்லி பூஜிப்பது விசேஷமாகும். பூச நட்சத்திரம் அன்றும் பூஜை செய்யலாம். இவர் திருப்பதி பெருமாளுக்கே கடன் கொடுத்தவர்.

முதலில் லட்சுமியைப் பூஜித்து அதன்பின் குபேரனைப் பூஜிக்கலாம். தொடர்ந்து லட்சுமி, குபேரனைப் பூஜித்து வாருங்கள். நீங்காத செல்வம் கட்டாயம் கிட்டும்; கடன் தொல்லைகள் கட்டாயம் விலகும்.

No comments:

Post a Comment