அட்சய திருதியை தினத்தில் லட்சுமியை வழிபடுவது
லட்சுமி என்றாலே செல்வம் என்று அர்த்தம். மகாவிஷ்ணு கூட லட்சுமியை துதிகளால் போற்றுவதாகச் சொல்கிறது தேவி பாகவதம். அட்சய திருதியை தினத்தில் லட்சுமியை வழிபடுவது மங்காத செல்வத்தையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் அதிகரிக்கச் செய்யும்.
தேவேந்திரன், குபேரன், எமன், மனு உத்தானபாதன், துருவன், தட்சன், காச்யபர், வசிஷ்டர், மகாபாலி, சூரியன், புதன், வள்ளி ஆகியோர் லட்சுமி பூஜை செய்து பலன் பெற்றவர்கள். லட்சுமிதேவி எளிமையான பூஜையாலேயே சந்தோஷம் அடைபவள்.
தூய மனத்துடன் சுத்தமான உடை அணிந்து, சுத்தமான இடத்தில் திருவிளக்கேற்றி மனதார வணங்கினால் போதும், லட்சுமியின் கரம் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டும் வீட்டினுள் லட்சுமிகரம் நிறையும்.
அட்சய திருதியை தினத்தில் மனம் முழுக்க அலைமகளை நினைத்து துதியைச் சொல்லி வழிபடுங்கள். பொன்மகள் அருளால் உங்கள் வாழ்வில் இன்று முதல் புத்துணர்ச்சியும் குதூகலமும் பிறக்கும்.
தானமும் பலன்களும்:
அட்சய திரிதியை அன்று ஏழைகளுக்கு ஆடை தானம், அன்னதானம் செய்யலாம். கோடை காலமாக இருப்பதால் நீர் மோர், பானகம் முதலியன கொடுக்கலாம். ஏழை, வசதியற்ற மாணவ-மாணவிகளுக்கு `கல்வி' உதவி செய்தால் நல்லது. இவ்வாறு செய்வதால், குடும்பத்தில் பிணி நீங்கி, உடல் ஆரோக்கியம் சிறக்கும். மனக் கஷ்டம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மேலும், குடும்பத்தில் திருமணம், குழந்தை பாக்கியம் உண்டாகும்.
அட்சய திருதியை தினத்தன்று 27 நட்சத்திரக்காரர்களும் செய்ய வேண்டிய தானம் விபரம் வருமாறு:-
1. அஸ்வினி- கதம்ப சாதம் தானம். ஏழை மாணவர்கள் படிக்க உதவலாம்.
2. பரணி- நெய்தானம் தானம். ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.
3. கிருத்திகை- சர்க்கரை பொங்கல் தானம். பார்வையற்ற ஏழைகளுக்கு உதவலாம்.
4. ரோகிணி- பால் அல்லது பால் பாயாசம் தானம். ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.
5. மிருக சீரிஷம்- சாம்பார் சாதம் தானம். உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவலாம்.
6. திருவாதிரை- தயிர் சாதம் தானம். ஏழை மாணவர்களின் உயர் கல்விக்கு உதவலாம்.
7. புனர்பூசம்- தயிர் சாதம் தானம். கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம்.
8. பூசம்- மிளகு கலந்த சாதம் தானம். கால்நடைகளுக்கு எள்ளு புண்ணாக்கு கொடுக்கலாம்.
9. ஆயில்யம்- வெண் பொங்கல் தானம். பச்சை பயிறு தானியத்தை பசுமாட்டுக்கு கொடுக்கலாம்.
10. மகம்- கதம்ப சாதம் தானம். கால்நடைகளுக்கு கொள்ளுத்தானியம் கொடுக்கலாம்.
11. பூரம்- நெய் சாதம் தானம். மனநோயாளிகளுக்கு உதவலாம்.
12. உத்திரம்- சர்க்கரை பொங்கல் தானம். கால்நடைகளுக்கு கோதுமை கொடுக்கலாம்.
13. அஸ்தம்- பால் பாயாசம் தானம். மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவலாம்.
14. சித்திரை- துவரம் பருப்பு கலந்த சாம்பார் சாதம் தானம். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம்.
15. சுவாதி- உளுந்து வடை தானம். வயதானவர்களுக்கு உணவு, உடை வாங்கிக்கொடுக்கலாம்.
16. விசாகம்- தயிர் சாதம் தானம். கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம்.
17. அனுசம்- மிளகு கலந்த சாதம் தானம். வாயில்லா ஜீவன்களுக்கு எள்ளு கொடுக்கலாம்.
18. கேட்டை- வெண் பொங்கல் தானம். பசு மாட்டுக்கு பச்சைப் பயிறு கொடுக்கலாம்.
19. மூலம்- கதம்ப சாதம் தானம். ஏழைகளுக்கு உதவலாம்.
20. பூராடம்- நெய் சாதம் தானம். ஏழைத் தம்பதிக்கு உதவலாம்.
21. உத்திராடம்- சர்க்கரை பொங்கல் தானம். ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.
22. திருவோணம்- சர்க்கரை கலந்த பால் தானம். வறுமையில் இருப்பவர்களுக்கு நெல் தானம் செய்யலாம்.
23. அவிட்டம்- சாம்பார் சாதம் தானம். கால்நடைகளுக்கு துவரை வாங்கி கொடுக்கலாம்.
24. சதயம்- உளுந்து பொடி சாதம் தானம். கால்நடைகளுக்கு உளுந்து தீவனம் கொடுக்கலாம்.
25. பூரட்டாதி- தயிர் சாதம் தானம்.
26. உத்திரட்டாதி- மிளகு சாதம் தானம், ஏழைகளுக்கு உணவு, உடை தானம் சிறந்தது.
27. ரேவதி- வெண் பொங்கல் பிரசாதம் தானம் நல்லது.
No comments:
Post a Comment