நல்லவனுக்கு உதவி செய்யுங்க !
கம்பரை ஆதரித்த வள்ளல் சடையப்பர். இவர் தனக்கு பொருளுதவி செய்ததை கம்பர், ராமாயணத்தில் நன்றியோடு குறிப்பிடுகிறார். இலங்கையில் ராவணவதம் முடித்து மீண்டும் அயோத்தி திரும்பினார் ராமபிரான். பட்டாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. அப்போது, அனுமன் அரியணையைத் தாங்கினார். சகோதரர்கள் ஆளுக்கொருவர் வெண்சாமரம் வீசவும், குடை பிடிக்கவும், உடைவாள் ஏந்தவும் செய்தனர். கிரீடத்தை குலகுரு சூட்டுவது தான் மரபு. அதை குலகுருவான வசிஷ்டரே செய்தார். ஆனால், அந்த கிரீடத்தை எடுத்து கொடுத்த பெருமை சடையப்பரின் முன்னோர்களைச் சேரும் என்று கம்பர் குறிப்பிடுகிறார். ஒருவர் சேர்த்து வைத்த புண்ணியம் அவர்களது சந்ததியைக் காக்கும் என்பர். கம்பரைப் போன்ற நல்லவர்களுக்கு உதவி செய்ததால், அந்தப் புண்ணியம் பின் வரும் சந்ததிக்கு மட்டுமின்றி, முன்னோருக்கும் சென்றுசேரும் என்ற உண்மையை இந்நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது.
No comments:
Post a Comment