Saturday, June 25, 2011

இயற்கையுடன் இணைந்து வாழ்வோம் - சொல்கிறார் வள்ளலார்

உனக்காக மட்டுமின்றி, உன்னைச் சுற்றி உள்ளோருக்காகவும் உலகம் முழுவதற்காகவும் பிரார்த்தனை செய்.
* உலகம் முழுவதும் பரவி நிற்கிறது உயிர். உலகம் முழுவதும் நிறைந்திருக்கிறான் இறைவன்.
* இயற்கையோடு இணைந்து வாழுங்கள். தண்ணீரில் நுளைந்தாடுங்கள். மலர்களின் மணத்தை நுகருங்கள். காற்றிடை கைவீசுங்கள். நிழலிலமர்ந்து இளைப்பாறுங்கள். அனைத்திலும் மகிழ்ச்சியுண்டு. அந்த மகிழ்ச்சியே உங்கள் உட லையும் உயிரையும் காப்பாற்றும் அமுதமாகும்.
* தேகம் அழியும்போது தேகத்தினுள் இருக்கின்ற ஆன்ம விளக்கமும் கடவுள் விளக்கமும் அழியாது. இதை உங்களுக்குள் ஒளிந்திருக்கும் சக்தியால் அறிய வேண்டும்.
* சிவத்தின் திருவருளைப் பெற, நாம் பல பிறவிகளையும் தப்பி மேலான இந்த மனிதப் பிறவி எடுத்துள்ளோம். அனைத்து முயற்சியினாலும் அந்த அருளை அடைய வேண்டும்.
* இன்றைய உலகம் புலன் இன்பம் ஒன்றிலேயே அதிக நாட்டம் உள்ளதாக இருக்கிறது. இதனால் தான் மக்களிடம் துன்பமும், துயரமும், அழிவும் பெருகி வருகின்றன. இந்த வாழ்க்கை முறை மிகத் தவறானதாகும். இதை முதலில் அடியோடு மாற்றியாக வேண்டும்.
* பிறருடைய பசியை அகற்றுவதோடு மட்டும் ஒருவனுடைய ஒழுக்கமும், கடமையும்
முடிவடையாது. பிறருக்கு ஏற்படும் ஏனைய துன்பங்களைக் களையவும் ஒவ்வொரு வரும் உவந்து முன்வரவேண்டும்.
* கற்பனைகள் அனைத்தையும் கடந்தவன் இறைவன். அத்தகைய ஒருவனைக் கற்பனைக்குள் கொண்டு வரஇயலாது
* உங்கள் அறிவுக் கண்களைத் திறவுங்கள். வேதாகம மக்களின் உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள். எந்தக் காரணத்திற்காக இவை எழுதப்பட்டதோ அந்தக் காரணத்தை அறிந்து கொள்ளுங்கள்.
* நீங்கள் எதைச்செய்தாலும், அது அடுத்தவருக்கு எந்தக் காலத்திலும் இடையூறு செய்வதாய் இருக்கக் கூடாது. அதுவே பொது நோக்கு. உங்கள் எண்ணமும் செயலும்நல்லதாய்இருக்கவேண்டும்.
* இந்த உலகிலேயே மிகவும் கொடுமையானது பசி. பசிப்பிணி உடனடியாகக் காப்பாற்றப்பட வேண்டும். இந்த பசித்தீயை அணைப்பதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள் ..

No comments:

Post a Comment