Saturday, June 18, 2011

சரஸ்வதிதேவி

 குறைந்த கல்வி கற்றவர்களில் சிலர் மேதையாக இருந்திருக்கின் றனர். பள்ளிக்கே செல்லாத சிலர் நாட்டைக்கூட ஆண்டிருக்கின்றனர். கையெழுத்துகூடப் போடத் தெரியாத சிலர் லட்சக்கணக்கான பணத்தை முதலீடு செய்து பெரும் வர்த்தக நிர்வாகியாக இருந்திருக் கின்றனர். இதற்கெல்லாம் கலை மகளின் கருணையே காரணம் எனலாம்.

"சரஸ்வதி நமஸ்துப்யம்


வரதே காமரூபணி

வித்யாரம்பம் கரிஷ்யாமி

ஸித்திர் பவது மேஸ்தா.'

"அன்னை சரஸ்வதியே! உன்னை வணங்குகிறேன். அருள்பாலிக்கும் நீ அழகியவளும்கூட. கல்வி கற்கத் தொடங்குகிறேன். அனைத்து கல்வியையும் எனக்குக் கிடைக்க அருள் செய்' என்பதே மேற்கண்ட சுலோகத்தின் பொருளாகும்.

கல்விக்கு அதிபதி சரஸ்வதி! எல்லா கலைகளுக்கும் தலைவி! "வித்யா' என்றாலே ஆத்மாவை மெய்ஞ்ஞானத்துக்கு இழுத்துச் செல்லும் வழி என்று பொருள். சரஸ்வதி என்ற சொல்லை ஸாரம்-ஸ்வ-இதி என்று பிரிக்க லாம். "ஸ்வ' என்பதற்கு "தான்' என்னும் சாரத்தைத் தருபவள் என்று பொருள். "தான்' என்ற அவள் முழு ஞானத்தைத் தருபவள். அவள் தருகின்ற ஞானம் பிரம்ம ஞானமாகும்.

சரஸ்வதியின் இரு கைகளிலும் வேதப் புத்தகமும் ஸ்படிக மணி மாலையும் இருக்கின்றன. கூடவே வீணையும் இருக்கிறது. வெள்ளைத் தாமரையில் அமர்ந்து வெண்ணிற உடையும் அணிந்துள்ளாள். கல்வி கற்பதற்குத் தூய்மையான மனம் வேண்டும் என்பதைத்தான் வெள்ளைத் தாமரையும் வெள்ளை உடையும் குறிக்கின்றன. சரஸ்வதி யின் நான்கு கைகளும் மனிதனு டைய மனம், புத்தி, சித்தம், அகங் காரம் ஆகியவற்றைக் குறிக்கிறது.

சரஸ்வதியைப் பூஜிக்கிற பக்தன் தேடுவது ஆத்ம ஞானம். தன்னடக்கம், ஆழ்ந்த கல்வி, சிந்திக்கும் ஆற்றல், தியானம் ஆகியவை இருந்தால் "தான்' என்ற அகங்காரம் அழிந்துவிடுகிறது. ஆத்ம ஞானம் பிறக்கிறது. அதுவே மோட்சம் என்று கூறப்படுகிறது.

அறிவுத் தெய்வமாகிய வாணி காளிதாசனுக்குக் காட்சி தந்ததால் "சாகுந்தலம்' என்ற காவியம் பிறந்தது. கலை மகளின் அருளால் கம்பன் இராமாயணம் எழுதினார். கலாதேவியின் அருளால் பேசவே முடியாத குமரகுருபரர் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பாடினார்.

எத்தகைய கல்வி நல்ல ஒழுக்கத்தை உருவாக்குமோ- மனவலிமையை வளர்க்கச் செய்யுமோ- விரிந்த அறிவைத் தருமோ- தன்னுடைய சுய வலிமையைக் கொண்டு நிற்கச் செய்யுமோ அத்தகைய கல்விதான் நமக்குத் தேவை.

இதை அடைய வேண்டுமென்றால் நவராத்திரியில் கடைசி மூன்று நாட்கள் கலைவாணியை மனமாரத் துதிக்க வேண்டும். சரஸ்வதியின் பிரசாதத்தைப் பெற வேண்டும்.

நவராத்திரியில் சரஸ்வதி தேவியும் மற்ற இரு தேவி களும் அவரவர் கணவன்மார்களைப் பூஜித்து முழு வலிமையையும் பெற்று அருள்பாலிக்கிறார்கள். அந்த வகையிலே சரஸ்வதிதேவி தன் கணவரான நான்முகனிடம் பூரண அருளை வேண்டிப் பிரார்த்திப்பதால் பிரம்மாவின் நாக்கில் சரஸ்வதி அமருகிறாள். ஆகவே சரஸ்வதி பூஜை செய்கிறவர்களுக்கு சரஸ்வதியின் அருட்கடாட்சம் குறைவின்றிக் கிடைக்கும்!

No comments:

Post a Comment