Saturday, June 18, 2011

பெண்ணை முழுமைப்படுத்தும்- பூப்பெய்தல்

பெண்களுக்கான உடல் ஆரோக்கியத்தில் கருப்பை வளர்ச்சியே முக்கியமானதாகும். பெண் முழுமையான பெண்ணாகப் பரிணமிப்பது பூப்பெய்தியபின்தான். அவ்வாறு பூப்பெய்தும் பெண் சகல நன்மைகளும் பெற பெண்ணின் ருதுகால குறிப்புகள் பெரிதும் உதவும். காலமுறை பாவ கணிதத்தில் (ஜோதிடவியல்) குறையுடன் பூப்பெய்தும் பெண் வாழ்வில் மிகவும் துன்பமடைவதை நாம் காண முடியும். இவ்வாறு குறையுடைய வகையில் மலர்ந்த பெண்கள் ஆண்டான் கோவில் அருள்மிகு சொர்ணாம்பிகை உடனுறை சொர்ணபுரீஸ்வரர் திருக்கோவிலுக்குச் சென்று, ஆலயத்தின் வடகிழக்குப் பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீசமன்விதா எனும் ஸ்ரீபூர்ணாம்பிகையைத் தரிசனம் செய்தல் வேண்டும். அவ்வாறு அவளைத் தூய உள்ளத்தோடு வழிபாடு செய்தால் மாதவிடாய்க் கால குறைபாடு, கருத்தரிக்க இயலாமை, கருப்பை வளர்ச்சியின்மை போன்ற குறைபாடுகள் நீங்கும்.

அம்பிகை கன்னியாகுமரியில் குமரிப் பெண்ணாகவும், மதுரையில் திருமணக்கோலத்திலும், ஆண்டான் கோவிலில் பூப்பெய்தியதாகவும் வழிபாடு செய்யப்படுகிறாள்.

பண்டைய மரபில் பெண் பூப்பெய்துவதை "சமைந்த' என்ற வழக்கு மொழியால் இயம்புவர். (வடமொழியில் பூர்ணமாக இருத்தல் எனலாம்.) இவ்வாறு சமநிலை அடையும் சக்தியை அளிப்பவள் என்ற பொருள் கொண்டே இத்தலத்தில் ஸ்ரீசமன்விதா என்ற நாமத்தால் தேவி அழைக்கப்படுகிறாள். ஸ்ரீசக்கரத்தில் அம்பாளினுடைய அங்கபீஜத்தில் "ஷம்' என்னும் மந்திரம் இவளுடைய மூலமந்திரமாகும்.

ஸ்ரீலலிதா சகஸ்ர நாமத்தில் இத்தலத்து அம்பிகை 7-ஆவது நாமாவில் "சதுர்பாகு ஸமன் விதாயை' என்றும்; 65-ஆவது நாமாவில் "சக்திஸேநா ஸமன் விதாயை' என்றும்; 479-ஆவது நாமாவில் "வதனை ஸமன் விதாயை' என்றும்; 511-ஆவது நாமாவில் "பந்தின்யாதி ஸமன் விதாயை' என்றும்; 525-ஆவது நாமாவில் "ஹம்ஸவதீ முக்யசக்தி ஸமன் விதாயை' என்றும்; 430-ஆவது நாமாவில் "நித்ய யௌவனாயை' என்றும் போற்றப்படுகிறாள்.

அபிராமி அந்தாதியில் 42-ஆவது பாடலில்,

"இடம் கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி இளகிமுத்து

வடம் கொண்ட கொங்கை மலைகொண்டு இறைவர் வலிய

நெஞ்சை

நடம் கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி நல்லரவின்

படம் கொண்ட அல்குல் பனிமொழி வேதப் பரிபுரையே'

என்று போற்றப்படுகிறாள்.

ஸ்ரீதுர்க்கா ஸ்தோத்திரத்தில்,

"பூவுறை ஜோதி பூரண ஜோதி

பூதநற் ஜோதி பூரணியே'

என்று போற்றப்படுகிறாள்.

ஸ்ரீதுர்க்கா ஸப்தஸ்லோகியில்,

"ஸர்வ ஸ்வரூபே ஸர்வவேஸே ஸர்வசக்தி ஸமன் விதே'

என்றும்;

அஷ்டலட்சுமி ஸ்தோத்திரத்தில் (சந்தானலட்சுமி),

"ஜடாமகுட ஸம்யுக்தாம் ஸ்த்திராஸன ஸமன்விதாம்'

என்றும்;

தனலட்சுமி ஸ்தோத்திரத்தில்,

"கிரீட மகுடோபேதாம் ஸ்வர்ண வர்ண ஸமன் விதாம்

ஸர்வாபரண ஸம்புக்தாம் ஸுகாஸன ஸமன் விதாம்'

என்றும்;

தான்யலட்சுமி ஸ்தோத்திரத்தில்,

"க்ருபா மூர்த்திம் ஜடாசூடாம் ஸுகாஸன ஸமன் விதாம்'

என்றும் போற்றப்படுகிறாள்.

ஸ்ரீசமன்விதா காயத்ரி

"ஓம் பூ பூர்ணாய வித்மஹே

மகா ப்ரபதான் விதாயை தீமஹி

தன்னோ சமன்விதா ப்ரஸோத யாத்.'

"மலர்ந்த மலர் போன்ற உடலமைப்பைக் கொண்டவளே! அனைத்து மூலங்களுக்கும் மூலமானவளே! உனது பூர்ண புஷ்ப நிலையைத் தியானிக்கிறேன்' என்பது இதன் பொருள்.

இத்தலத்து அம்பிகைக்கு விஷேசமான நாட்கள்

ஆடிப்பூரம்- அம்மன் பூப்பெய்திய நாள்.

ஆவணி மூலம்- மாமன் சீர் பெற்ற நாள்.

தைப்பூசம்- ஈசனைக் கண்ட நாள்.

பங்குனி உத்திரம்- ஈசனை மணந்த நாள்.

பெண்கள் பருவமெய்தும் காலத் தைப் பொறுத்து சில தோஷங்கள் உண்டாகின்றன. அவை எவை யென்றும்; அதற்கான பரிகாரத் தையும் இங்கு காணலாம்.

ருது நட்சத்திர தோஷம்

அஸ்தம், சித்திரை- வாழ்வில் திருப்தியின்மை.

சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம்- மாங்கல்ய தோஷம்.

பரிகாரம்

மேற்கண்ட நட்சத்திரங்களில் ருதுவானவர்கள் ஒன்பது செவ்வாய்க் கிழமைகளில், இத்தலத்தில் அருள் பாலிக்கும் அம்பிகைக்கு காலையில் பாலாபிஷேகம் செய்து, வெள்ளை மலர், வெள்ளைப் பட்டு சாற்றி, மருதோன்றி பூசி, வெள்ளை உளுந் துக் களி மற்றும் புட்டு செய்து நிவேதனம் செய்ய சுகப்பிரசவம் ஏற்படும். கணவனுக்குப் பூரண ஆயுளைக் கொடுக்கும்.

ருது கிழமை தோஷம்

ஞாயிறு- புத்திரர் குறைவு.

செவ்வாய்- வியாதி, மாங்கல்ய தோஷம்.

சனி- பெண் நெறி தவறுவாள்.

மேற்கண்ட கிழமைகளில் ருது வானவர்கள் ஞாயிறு அன்று இத் தலத்தில் உறையும் அம்பிகைக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, மஞ்சள், மருதோன்றி பூசி, புட்டு நிவேதனம் செய்யவும். ஒரு ஆண்டில் பதினோரு ஞாயிற்றுக் கிழமைகள் (வசதிப்படி) செய்தால் தோஷம் விலகும்.

ருது கிரக தோஷம்

ருதுவான லக்னத்திற்கு 7-ஆம் இடம் மற்றும் 8-ஆம் இடத்தில் சனி, ராகு- கேது, செவ்வாய் இருப் பின் உடல் பலவீனம், மாதவிடாய் தொந்தரவுகள், கர்ப்பப்பை நோய்கள் ஏற்படும்.

ருதுவான லக்னத் திற்கு 7 அல்லது 8-ல் சுக்கிரன் இருப்பின், பெண் குடும்பத்திற்கு ஒற்றுமையாக இருக்க மாட்டாள்.

பரிகாரம்

வெள்ளிக்கிழமை காலை மௌன உபவாசம் இருந்து, கிரகக் குறைபாடு அறிந்து அதற்கேற்ற (7, 8-ல் உள்ள கிரகங்களின்) தானியம், வஸ்திரம் வைத்து, இளநீர், தேன் அபிஷேகம் செய்து, வெண் பொங்கல், புளியோதரை, புட்டு, பிரண்டைத் துவையல் நிவேதனம் செய்து, மருதோன்றி பூசி வழிபாடு செய்ய வேண்டும்.

ருது சகுன தோஷம்

ருதுவான நேரத்தில் யானை, தேர், கோவில், தாயார், வயது முதிர்ந்தோர், அழுபவர், துக்கமானவர்களைப் பார்த்தால் கருப்பை பலவீனம், குழந்தைக்குச் சாபம் ஏற்படும்.

கருடன், பாம்பு, குரங்கின் நிழல் உடலின் மேல் பட்டாலும் ஆடையில் பட்டாலும் சயன சுக தோஷம் ஏற்படும். (இது வீட்டிற்கு விலக்கான நாட்களுக்கும் பொருந்தும்.)

பரிகாரம்

இத்தலத்து தீர்த்தத்தில் நீராடி, அம்மனுக்கு இளநீர், பசு நெய், பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்து, மருதோன்றி பூசி, வெண்மையான ஆடை சாற்றி, நெய்யமுது நிவேதனம் செய்தால் தோஷம் விலகும்.

ருது தீண்டல் தோஷம்

பசுவைத் தீண்டுதல், பெரியோரைத் தீண்டுதல், கோவில் செல்லுதல், குளத்தில் நீராடுதல், பச்சை மரங்களைத் தீண்டுதல். (இவை வீட்டுக்கு விலக்கான காலத்திற்கும் பொருந்தும்.)

இதனால் கருப்பை பலவீனம், மாதவிடாய் காலத்தில் உதிரப் போக்கு அதிகரித்தல், ஒழுங்கற்ற மாதவிடாய், உரிய வழி கர்ப்பம் தரிக்காமை போன்ற தீய விளைவுகள் உண்டாகும்.

பரிகாரம்

ஏழு திங்கட்கிழமைகள் அம்பிகைக்கு சந்தனம், மஞ்சள் அபிஷேகம் செய்து, மருதோன்றி பூசி, மஞ்சளாடை சாற்றி, பாசிப் பருப்பு கலந்த இனிப்பு மற்றும் எள்ளுக் கொழுக்கட்டை நிவேதனம் செய்தால் தோஷம் விலகும்.

ருது வண்ண தோஷம்

ருதுவான வேளையில் கருப்பு ஆடை அணிந் திருத்தல், கரி- புகை மூட்டத்தில் இருத்தல்.

இத்தகைய பெண் கணவருக்குத் தீங்கு விளைவிப்பாள்; தரும நெறி தவறுவாள்; உரிய வழியில் பிள்ளைப்பேறு ஏற்படாது.

பரிகாரம்

இத்தலத்தில் மூன்று சனிக்கிழமைகள் இரவில் தங்கி, ஞாயிறு காலை இத்தலத்து தீர்த்தத்தில் தீர்த்தமாடி, புத்தாடை (கருப்பு- கருநீலம் கலக்காத ஆடை) அணிந்து, அம்பிகைக்கு பாலாபிஷேகமும் குங்கும அர்ச்சனையும் செய்து, வெண் பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும்.

ருது பூர்ண தோஷம்

பெண் உரிய காலம் கடந்தும் பூப்பெய்தாமையே பூர்ண தோஷம் எனப்படும். முற்பிறவியில் விலக்கான நாளில் போகம் செய்ததாலும், குடும்பத்தில் பிறர் அவ்வாறு (தாயார்- பாட்டி) செய்ததாலும், தந்தை, பாட்டனார் அவ்வாறு போகித்ததாலும் ஏற்பட்ட சாபம்.

முறை தவறிய போகம், அமாவாசை போன்ற முக்கிய நாட்களில் போகிப்பது, விரத நாட்களில் போகிப்பது போன்றவற்றால் சந்ததியினருக்கு ஏற்பட்ட சாபம்.

இதனால் பூப்பெய்தாமை, பக்குவமற்ற பூப்பெய்துதல், குழந்தைப் பருவத்தில் (12 வயதுக்குள்) பூப்பெய்துதல் போன்றவை நிகழும்.

பரிகாரம்

பூப்பெய்த இருக்கும் பெண் இத்தலத்தில் தங்கி ஞாயிறு காலை தீர்த்தமாடி அம்பிகையைத் தரிசனம் செய்ய வேண்டும். நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து உளுந்துக் களி நிவேதனம் செய்ய வேண்டும். அம்மனுக்கு கண்ணாடி வளையல், மஞ்சள், குங்குமம், பூ, பழம், வஸ்திரம், கண்ணாடி, சீப்பு முதலிய மங்களப் பொருட்களுடன் மஞ்சள், மருதோன்றி வைத்துப் பூஜை செய்து, இடித்த எள்ளுடன் கருப்பட்டி வைத்து நிவேதனம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் ஆறு வாரங்களில் பெண் சுபவேளையில் பூ

No comments:

Post a Comment