விவேகசிந்தாமணி நூலைத் தொகுத்தவர் யாரென்று தெரியவில்லை. ஆனால், அதிலுள்ள கருத்துக்கள் அருமையானவை.
* மாற்றானிடம் உள்ள செல்வம், பொருளாசை கொண்ட பெண்கள், அனுபவமில்லாத கல்வி, உடன்பிறவா சகோதரன் ஆகியவை ஒருவனுக்கு கை கொடுப்பதில்லை.
* சாந்தகுணம் கொண்ட நல்லவர்களால் உலகமக்கள் பயன் பெறுகிறார்கள். ஆனால், அப்படிப்பட்ட நல்லவர்களுக்கு துன்பம் இழைத்தவர்கள் மீளா நரக உலகில் வேதனை அடைவர்.
* ஆசிரியர் தந்த பாடம், செய்த தர்மம், குரு உபதேசித்த மந்திரம், மற்றவர்களின் கஷ்டம் இவைகளை வெளியில் சொல்லக்கூடாது.
* மக்கள் செய்த பாவம் நாட்டை ஆளும் மன்னனைச் சேரும். பிள்ளை செய்த பாவம் பெற்றோரைச் சேரும். மனைவி செய்த பாவம் கணவனைச் சேரும்.
* யாருக்கும் துன்பம் கொடுக்காமல், முடிந்தளவு பிறருக்கு உதவி செய்து வாழ்தல் இன்பம் தரும் வாழ்க்கையாகும். மனதில் எப்போதும் நல்ல எண்ணம் என்னும் தீபத்தை ஏற்றி ஒளியுடன் திகழுங்கள்.
* மழலை பேசும் குழந்தை வாய் தவறி நம்மைத் திட்டினாலும் இன்பம் உண்டாகும். ஏனெனில், அது கள்ளமற்ற வெள்ளை மொழி. தெய்வத்திற்குரிய மொழி. வேண்டாதவன் நல்ல வார்த்தைகளைப் பேசினாலும் துன்பமாகத் தோன்றும்.
* நிலத்தின் தன்மையால் நீருக்கும், பிறருக்கு அளிக்கும் கொடையால் நல்லோருக்கும், அருள் பார்வையினால் கண்களுக்கும், கற்புத்திறத்தால் பெண்களுக்கும் பெருமை உண்டாகும்.
* பெற்றெடுத்தவள் மட்டும் தாயல்ல. சகோதரனின் மனைவி, குருபத்தினி, வேலைக்கு ஊதியம் வழங்கும் முதலாளியின் மனைவி, பெண் கொடுத்த மாமியார் ஆகியோரும் தாய்க்கு சமமானவர்களே.
* பணமில்லாத வாழ்க்கை, குறிப்பறிதல் இல்லாத மனைவி, விருந்தாளி வராத வீடு, வளர்ச்சி இல்லாத வாணிபம் இவற்றால் பயன் விளைவதில்லை.
* கற்றுக் கொடுத்த ஆசிரியரை மாணவன் கல்வி கற்றதும் மறந்துவிடுகிறான். நோய்க்கு மருந்து தந்து வைத்தியம் செய்த மருத்துவரை குணமடைந்த நோயாளியும் மறந்து விடுகிறான்.
* பிள்ளையைப் பெற்று மகிழ்வதைக் காட்டிலும், அக்குழந்தையை ஒழுக்கமாக வளர்த்து கல்வி தந்து நல்லவனாக வளர்ப்பதில் தான் பெற்றோரின் வெற்றி அடங்கி இருக்கிறது.
* வறுமை என்னும் நோய் மனிதனை முயற்சி செய்ய விடாமல் முட்டுக்கட்டை போட்டுவிடும். அதனால், உலக இன்பங்களைப் பெற உதவும் செல்வத்தை உழைப்பால் தேட வேண்டும்.
* நல்லவர்களின் மனதைக் கெடுப்பது, பெற்றோரை வருத்துவது, ஒருவனின் கல்விவளர்ச்சியைத் தடுப்பது போன்றவை பெரும் பாவச் செயல்களாகும்.
* தீய வழியில் பொருள் சேர்த்தவன் மனசாட்சிக்கு மதிப்பளிக்க மாட்டான். யார் எது சொன்னாலும் பொருட்படுத்தாமல் அலட்சியம் செய்வான். தன் சுகமே பெரிதென சுயநலமாகத் திரிவான். தான் செய்த தீங்கு தனக்கே எமனாகும் என்பதை உணர மாட்டான்.
* நற்செயல்களுக்கு உதவாமல் கருமியாய் இருப்பவன் சேர்த்து வைத்த செல்வம் பயனற்ற வழிகளில் செலவாகும். தீயோர்களே அப்பொருளைச் சொந்தம் கொண்டாடுவர்.
* கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டும் என்று சோம்பித் திரிபவனிடம் செல்வம் ஒருநாளும் சேரப்போவதில்லை. விடாமுயற்சியோடு எவன் உழைக்க நினைக்கிறானோ அவனே செல்வச் செழிப்பில் திளைப்பான்.

No comments:
Post a Comment