Monday, June 13, 2011

திருமெய்யன்

                   காசிப முனிவருக்கு இரண்டு மனைவி கள். ஒருத்தி பெயர் கத்ரு; மற்றொருத்தி பெயர் வினதை.

வினதையின் மகன்தான், பிற்காலத்தில் பெரிய திருவடி என வழங்கப்படும் கருடாழ்வார். கத்ருவிற்கு ஒரு மகன் தக்ஷகன்.

இரண்டு மனைவிகள் என்றாலே சண்டையும் சச்சரவுகளும் இருக்குமல்லவா! இதற்குரிஷி பத்தினிகளும் விலக்கல்ல. இவர்களுக்குள் பொறாமையும் வெறுப்பும்அதிகரித்துக் கொண்டே போக, எப்படியாவது ஒருவரை ஒருவர் மிஞ்ச வேண்டும்; தானேஅதிகாரம் செலுத்தி மற்றவரை அடிமை கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நாளுக்குநாள் வளர்ந்து கொண்டே போனது.

வினதையை வீழ்த்தி தனக்கு அடிமையாக்க வேண்டும் என்று நினைத்த கத்ருவிற்கு ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது.

தேவேந்திரனின் வாகனமான ஐராவதம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது கத்ரு,""ஐராவதம் கருமை நிறமானது'' என்றாள். ஆனால் வினதை, ""அது வெண்மை''என்றாள். இதுவே தர்க்கமாகி, போட்டியாக மாறியது. ""ஐராவதம் கருமைதான் என்றுநிரூபித்தால், ஆயுட்காலம் வரை நீ எனக்கு அடிமையாகவே இருக்க வேண்டும்''என்று கத்ரு கூற, வினதை அதை ஏற்றுக் கொண்டாள். அப்போது இந்திரன் வானத்தில்ஐராவதத்தில் உலா வருவதை முதலில் கண்ட கத்ரு, அது வெண்மை யாக இருப்பதைக்கண்டு அதிர்ந்து போனாள். இதனை வினதை கண்டால் தாம் தோற்று, அவளுக்குஅடிமையாகி விடுவோமே என்று அஞ்சி, தனது மகன் தக்ஷகனைக் கூப்பிட்டு,""ஏதாவது மாயங்கள் செய்து வினதையின் கண்களுக்கு மட்டும் ஐராவதம்கருமையாகத் தெரியுமாறு செய்'' என்று கூறினாள். அவனும் தனது மந்திரசக்தியால் வினதையின் கண்களுக்கு ஐராவதம் கருமையாகத் தெரியும்படிசெய்துவிட்டான்.

சூழ்ச்சியால் தோல்வியடைந்த வினதை, அன்று முதல் கத்ருவிற்கு அடிமையாகப் பணிசெய்து பல இன்னல்களுக்கு ஆளாகி அவதியுற்றாள். காசிப முனிவரிடம் முறையிட்டு, இதற்கோர் பரிகாரம் கூறும்படிக் கேட்டாள். ""உனது மகன் கருடனால்மட்டுமே இதற்குப் பரிகாரம் காண முடியும்'' என்றார் அவர்.

ஆனால் கத்ருவோ, ""தேவலோகத்திலிருந்து அமிர்தம் கொண்டு வந்து கொடுத்தால்மட்டுமே உன் தாய்க்கு விடுதலை கிடைக் கும்'' என்று கூற, தனது தந்தையின்அறிவுரை யின் பேரில் கருடன் திருமெய்யம் என்னும் தலத்திற்கு வந்து, அங்குபரமபத நாதனாக சேவை சாதிக்கும் சத்தியகிரி நாதனை வழிபட்டு தவம் மேற்கொண்டு,தன் தாயின் துயர் தீர்க்க வேண்டினார். கருடனின் தாய்ப் பாசத்தையும்பக்தியையும் மெய்மை யையும் போற்றி, கருடனுக்கு வானுலகத் திற்குச் சென்றுஅமிர்தம் கொண்டு வர வழிகாட்டி அருளினார் பெருமாள். கருடனும் அமிர்தம்கொண்டு வந்து தாயின் துயரைப் போக்கினார்.

இப்படி, விரும்பித் தொழும் அன்பர் களுக்கெல்லாம் மெய்யனாக- கிடந்தகோலத்தில் பரமபத நாதனாகக் காட்சி தருபவர் திருமெய்யத்து சத்தியமூர்த்திபெருமாள்.

நூற்றியெட்டு வைணவ திவ்விய தேசங் களில் திருமங்கை ஆழ்வாரால் மங்களா சாசனம்செய்யப்பட்டுள்ள திருமெய்யம் என்ற இந்த திருப்பதி, வடமொழியில் சத்தியக்ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. பிரம்மாண்ட புராணத் தில் இதனைவிரிவாகவே காணலாம்.

சத்திய க்ஷேத்திரம் என்றால், உண்மையின் இருப்பிடம் என்பது பொருள். இங்கேபாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில், வைகுந்த நாதனாக பக்தர்களுக்குச் சேவைசாதிக்கும் இந்த எம்பெரு மான், திருமெய்யன் என்றே அழைக்கப்படுகிறார்

No comments:

Post a Comment