Thursday, June 16, 2011

அனுமன் வாலை வழிபட்டால் நினைத்த காரியத்தில் பூரண வெற்றி கிடைக்கும்.

"அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி

அஞ்சிலே ஒன்றாறாக ஆரியர்க்காக ஏகி


அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கை கண்டு அயலாரூரில்

அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்'

என்பது அனுமனைப் போற்றும் புகழ் பெற்ற பாடல்.

அன்பு, அறம், அருள் ஆகியவற்றின் முழு வடிவமாகத் திகழும் ஸ்ரீஆஞ்சனேயர் வழிபாடு சர்வமங்களங்களையும் அளிக்கக்கூடியது. அனைத்து உயர்ந்த குணங்களுக்கும் உறைவிடமாகத் திகழும் ஸ்ரீஆஞ்சனேயரின் வலிமை முழுதும் அவரது வாலில் இருக்கிறது. அவரது வாலில் நவகிரகங்களும் ஐக்கியமாகி இருப்பதாக ஐதீகம். ஆஞ்ச னேயரின் வாலின் நுனியில் சந்தனம், குங்குமம் இட்டு 48 நாட்கள் பூஜித்து வந்தால் நவகிரகங்களை வழிபட் டதற்கு ஒப்பாகும். இந்தப் பூஜையானது நவகிரகப் பூஜைக்குச் சமமாகக் கருதப் படுகிறது.

முதன் முதலில் பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான பீமன் வால் வழிபாடு செய்ததாகக் கூறப்படுகிறது.

பீமன் பாரிஜாத மலரைத் தேடி காட்டில் சுற்றி அலைந்து கொண்டிருந்தான். களைப்படைந்த நிலையில் அவன் சென்று கொண்டி ருந்தபோது வழியின் குறுக்கே குரங்கின் வால் ஒன்று இடையூறாக இருந்தது. அது ஆஞ்சனேயரின் வால் என்பதை அறியாத பீமன், ""பாதையை விட்டு உன் வாலை நகர்த்து'' என்று கோபமாகக் கூறினான்.

அதற்கு ஆஞ்சனேயர், ""முதுமையின் காரண மாக என் வாலை நகர்த்த முடியாமல் படுத் திருக்கிறேன். நீயே வாலை ஓரமாக நகர்த்தி வைத்து விட்டுப் போ'' என்றார்.

பீமன் அலட்சியத்தோடு வாலை அகற்ற முயல, அது அசையவில்லை. பலமுறை கடுமை யாக முயற்சித்தும் வாலை நகர்த்த முடியவில்லை. பீமன் மலைத்து நிற்க, அனுமனே தன்னுடைய வாலை நகர்த்திக் கொண்டு, தான் வாயுபுத்திர னான அனுமன் என்று கூறி பீமனை ஆசீர்வதித்தார். தான் கோபப்பட்டதற்காக தன்னை மன்னிக்கும்படி வேண்டிய பீமன், அனு மனின் வலிமையை வியந்து பாராட்டி, அனுமனையும் அனுமனின் வாலையும் வணங்கினான்.

மேலும், ""எனக்கு சர்வ சக்திகளையும் மங்களங் களையும் அளித்து வாழ்த்தி யதுபோல், தங்கள் வாலைப் பூஜித்து வழிபடுபவர்களுக் கும் சகல சௌபாக்கியங் களையும் அருள வேண்டும்'' என வரம் வேண்டினான். அவ்வாறே அனுமனும் வரம் அருள, அனுமன் வாலை வழி படும் வழக்கம் ஏற்பட்டது.

ஸ்ரீராம காரியத்தில் பங்குகொள்ள சிவபெருமானே ஆஞ்சனேய வடிவம் எடுத்ததாகவும், சிவபெருமானைப் பிரிய விரும்பாத பார்வதி தேவி அனுமனின் வாலாக உருவெடுத்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. ஆகவே அனுமனை வணங்கு வது சிவபெருமானை வணங்குவதாகவும்; அனுமனது வாலை வணங்குவது பார்வதி தேவியை வணங்குவதாகவும் கருதப்படுகிறது.

அனுமனது வாலை வணங்குபவர்கள் தாங்கள் பூஜிக்கும் ஸ்ரீஅனுமன் படத்தில், உடலில் வால் ஆரம்பமாகும் பகுதியில் பொட்டு வைக்க வேண்டும். முதலில் சந்தனப் பொட்டு வைத்து அதன்மேல் குங்குமப் பொட்டு வைக்க வேண்டும். அடுத்த நாள் அதன் அருகே பொட்டு வைக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து வாலின் நுனி வரை பொட்டு வைக்க வேண்டும். இதற்கு சில நாட்கள் ஆகலாம். வால் நுனியில் பொட்டு வைத்து முடிக்கின்ற நாளில் ஆஞ்சனேயருக்கு வடை மாலை சாற்றி பூஜை செய்ய வேண்டும். அன்றைய தினம் ஆஞ்சனேயர் நாமத்தையும் ராம நாமத்தையும் ஜெபிக்க வேண்டும். இவ்வாறு அனுமன் வாலை வழிபட்டால் நினைத்த காரியத்தில் பூரண வெற்றி கிடைக்கும்.

திருமணமாகாத பெண்கள் ஆஞ்சனேயர் வால் வழிபாடு செய்வதன் மூலம் பார்வதி தேவியின் அருள் பெற்று விரைவில் திருமண பாக்கியம் பெறுவர்.

No comments:

Post a Comment