ஏகம் பரம்பொருள்' -அதாவது பரம்பொருள் என்பது ஒன்றேயாகும். ஒரு செல் உயிரிலிருந்து, கோடானுகோடி அணுக்களாலான மானுட ஜீவன் வரை ஆத்ம சொரூபனாய் வீற்றிருந்து அரசாள்பவன் அந்த சிவனேயன்றி வேறில்லை. "அவனின்றி அணுவும் அசையாது' என்பது எவ்வளவு அற்புதமான வரி!
அவனே மூல அணுவாய் வீற்றிருக்கிறான்; அவனே அணுவாகவும் ஆற்றலாகவும் வீற்றிருக் கிறான்; அவனே படைக்கிறான்; அவனே காத்த ருள்கிறான்; அவனே அழிக்கிறான். "நாம்' என்று சொல்லுவதற்கு ஒரு துளி "சுயம்'கூட நம்மிடம் இல்லை. நாம் முத்தொழில் வித்தகனாம் அந்த ஈசனால் ஆட்டுவிக்கப்படும் பொம்மைகள்; அவ்வளவுதான்.
இந்த அண்டமெல்லாம் அரசாளும் வல்லமை பெற்றவன் அவன் ஒருவன்தான். அவனுடைய அடி, முடி காண எவராலும் இயலாது. எல்லா உயிர்களிலும் தன்னுடைய ஈசத்துவத்தை ஆத்மாவாய் -அதாவது உயிராய் நிறைத்து இந்த உடம்பெனும் ரதத்தை ஓட்டிக் கொண்டிருப்பவன். நம்மை பல்வேறு பிறவிகளுக்கு உட்படுத்தி, பக்குவம் செய்து, கடைசியில் ஈசத்துவம் பெற்ற பொருளாக்கிப் பிரபஞ்சத்தில் கரைக்கும் எம் பிரான் சிவனைச் சரணடைந்து வணங்குவோம்.
சமயம் வளர்த்த பெரியார் ஞானசம்பந்தர், "நான்கு வேதங்களும் எல்லாவற்றிலும் உள்ளிருந்து இயக்கும் மெய்ப்பொருள் நீயே என்று கூறிப் புகழ்கிறது. வேதங்களின் முடிவே இப்படியா னால் எனக்கென்று ஒரு கருத்துமில்லை. உன்னில் மனம் உருகி, காதலாகி, கசிந்து, கண்ணீர் மல்கி, உன்னில் ஒன்றி, உறவாடி, உன்மேல் பித்தாகி, "நமசிவாய' என்னும் நாமத்தை உயிரில் பதிக்கிறேன். எல்லாம் வல்ல சிவனே! என்னை நன்னெறிப்படுத்துவாய்' என்று இறைஞ்சுகிறார்.
மாணிக்கவாசகரோ, "இந்த உலகம் தோன்றிய நாள் முதலாய் எத்தனை பிறவிகள் பிறந்தேன், எப்படி இருந்தேன் என்பதை நான் அறியேன். இப்பிறவியில் உன் திருவடியை இறுகப் பற்றி விட்டேன். இறைவா! இனி பிறவாமை மருந்தை எனக்குக் கொடுத்து விடு. நான் பிறந்து பிறந்து இளைத்து விட்டேன். செல்வனாய்ப் பிறந்து செழித்தும், ஏழையாய்ப் பிறந்து ஏங்கியும், காமுகனாய்ப் பிறந்து காமத்தீயில் உழன்றும், வஞ்சகனாய்ப் பிறந்து பிறரை வஞ்சித்துப் பிழைத்தும், பலருக்குத் தந்தையாய், பலருக்குப் பிள்ளையாய், ஆணாய், பெண்ணாய், அலியாய் பிறந்து அழுந்தி ஓய்ந்து விட்டேன்.
இந்த உலகத்து இன்ப மெல்லாம் நிலையில்லாதது என்பதை உணர்ந்து கொண்டேன். எனையாளும் சிவனே! பசி, தாகம், உறக்கம், நோய் நீக்கி என்னை சுத்த மாக்கு. நரை, திரை, பிணி, சாக்காடு நீக்கி, இந்த உடல் பிறவி என்னும் மாயவினையிலிருந்து என்னைக் காப்பாற்று. முழுமுதல் கடவுளே! உன்னால் ஆகாதது ஒன்றுமில்லை. எனக்குப் பிறவாமை அருளி உன்னில் அணைத் துக் கொள்' என்று இறைஞ்சுகிறார்.
நாம் பிறவாமை என்னும் நிலைக்குச் செல்ல பல்வேறு படிநிலைகளைக் கடக்க வேண்டியுள்ளது. அதனால்தான் நாம் வசிக்கும் இடத்தில் நரை, திரை, பிணி நீக்கும் நெல்லி மரங்களைப் படைத்து, நம்முள் நாதனாய்ப் பாய்ந்து நம்மைக் காத்தருள்கிறார் ஈசன். அத்தகைய நாதன் உறையும் பெருநெல்லியைச் சரணடைந்து வணங்கு வோம்.
புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லா விட்டால்கூட, அத்தலங்களில் உள்ள தல விருட்சங்களை வழிபட்டால் போதும்; அந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வந்த திருப்தி பெறுவோம்.
நாமும் அகப்பிணி போக்கும்- சதாசிவன் உறையும் நெல்லியைச் சரணடைந்து, அதை மருந்தாக்கி உடலோம்பல் செய்யும் முறையை அறிய முனைவோம்.
முக்குற்ற நோய்கள் விலக...
சில நோய்களுக்குக் காரண- காரியம் கண்டறிய இயலாமல் நவீன மருத்துவர்கள் திண்டாடுவதைக் காண்கிறோம். சித்தர்கள் வகைப்பாடு செய்துள்ள முக்குற்ற நோய்களின் பட்டியல் அவர்களிடம் இல்லாததுதான் அதற்குக் காரணம்.
நீங்கள் நெடுநாட்களாக ஏதேனும் நோயினால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? உங்களை யும் உங்கள் நோயையும் பார்த்து மருத்துவர்கள் குழம்பிக் கொண்டிருக்கிறார்களா? கவலையை விடுங்கள். உங்களுக்கு ஒரு எளிய மருத்துவம் சித்தர்களால் வழங்கப்பட்டுள்ளது.
நெல்லி மரத்தின் வேரை 20 கிராம் அளவில் எடுத்து, அத் துடன் 20 வால்மிளகு சேர்த்து விழுதாய் அரைத்து, ஒரு லிட்டர் தண்ணீரிலிட்டு பாதியாகச் சுண்டச் செய்து, காலை- மாலை இருவேளையும் உணவுக்கு முன்பாக மூன்று தினங்கள் சாப்பிட்டு வாருங்கள். லேசாய் பேதி காணும்; பயம் வேண்டாம். நெல்லி மரத்தின் வேர் உங்களை வசியப்படுத்திவிடும். உங்கள் நோய் எதுவாக இருந்தாலும் கட்டுக்குள் வருவதை நீங்களே உணர்வீர்கள்.
அறுபதிலும் இளமையைப் பெற...
ஆயுளை நீட்டிக்கும் அற்புதமான மூலிகை நெல்லியாகும். உடம்பில் உண்டாகும் வெட்டைச் சூட்டினால் கன்னம் குழி விழுந்து ஒட்டிப்போய், தேகம் வறண்டு, நடை தளர்ந்து நாணலாகிப் போன இளைஞர்கள் இன்று நிறைய பேர் இருக் கிறார்கள். இவர்கள் இருபது வயதில் அறுபதை எட்டியவர்கள். இவர்கள் மன்மத அழகுடன் வலம் வர நெல்லிக்கனியைச் சரணடைவதே மிகவும் நல்லது.
நெல்லிக்காயை அரைத்துத் தூள் செய்து வைத்துக் கொண்டு தினசரி சாப்பிட்டு வரவும். அல்லது நெல்லிக்காயைத் தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வரலாம். நெல்லிக்காயை துவையல், சட்னி, சூப் போன்ற ஏதேனும் ஒரு முறையில் தினசரி சாப்பிட்டு வரலாம்.
இதற்கெல்லாம் நேரமில்லாவிட்டால், நேரே ஆயுர்வேத மருந்து விற்பனைக் கூடத்திற்குச் சென்று, உலகப் பிரசித்தி பெற்ற "சயவனபிராச லேகியம்' அல்லது "நெல்லிக்காய் லேகியம்' எனக் கேட்டு வாங்குங்கள். இதனை தினசரி காலை- மாலை வருடக் கணக்கில் சாப்பிட்டு வாருங்கள். எண்ணற்ற பலன்களை இந்த ஒரே மருந்தினால் நீங்கள் பெறலாம்.
நெல்லிக்காயை பகல் வேளையில் அடிக்கடி உண்டு வந்தால், அது ஒரு தேவ மருந்தாகவே நம் உடம்பில் செயல்படும். நெல்லிக்காய் உண்பதால் குடி, புகை, போதையை மறக்கலாம். கபநோய், சைனஸ் போன்ற கோளாறுகளும் தீரும். வாந்தி, மயக்கம், தலைசுற்றல், மலச்சிக்கல், சர்க்கரை வியாதி போன்றவை நீங்க சித்தர்கள் அருளிய அமுதம் நெல்லிக்கனியே ஆகும்.
கருநெல்லி- காயகற்பம்
நூறாண்டு இளமையுடன் வாழ சித்தர்கள் அருளிய கருநெல்லியை சிவனின் அம்சமாகவே காணுங்கள். இன்று காண்பதற்குக்கூட கருநெல்லி கிடைக்காத நிலை!
கருநெல்லி- உடம்பை அழியா நிலைக்குக் கொண்டு செல்லும். உடம்பெல்லாம் ஒளி உண்டாகும். ஒருவித தேஜஸ், வசியம், பொருள் சேர்க்கை அனைத்தும் உண்டாகும். கண்டவ ரெல்லாம் விரும்பும் திகட்டாத திருமேனியைப் பெறலாம். அத்தகைய கருநெல்லி சோழ தேசத்தில் ஆதிக்கும் பகவானுக்கும் மகனாய்ப் பிறந்து அர சாண்ட அதியமானுக்கு தகடூர் மலைச்சாரலில் கிடைத்தது. கிடைத்தற்கரிய கருநெல்லியை தன் பொற்கரங்களால் ஏந்திய அதியமான், ஆத்திசூடி பாடி தமிழ் வளர்த்த ஔவையார் முன் நின்றான்.
""ஔவைப் பிராட்டியாரே... தாங்கள் இக்கருநெல்லிக் கனியுண்டு, உடல் நலம் பெற்று தமிழ் வளர்த்துச் செல்ல வேண்டும்'' என்றான்.
ஔவையாரோ, ""நீ சாப்பிட்டால் உன்னை அண்டிப் பிழைக்கும் கோடானு கோடி உயிர் களும் நிறைவுடன் வாழ இயலுமே!'' என்றார்.
""அப்பனுக்குப் பாடம் சொன்ன முருகனுக்கே பாடம் சொன்ன ஔவையே! ஆட்சி என்பது மாறிக் கொண்டே இருக்கும். ஆனால் உம் கரம் பட்டு வளர்த்த தமிழ் வானைமுட்டி வளர்ந் தோங்கும். கருநெல்லி தங்களுக்குரியதே. மறுக் காமல் உண்பீர்'' என மனமுவந்து தந்தான்.
ஔவையாரும் மகிழ்வுடன் கருநெல்லி உண்டு தமிழுக்குத் தலையாய சேவை செய்தார். அந்தக் கருநெல்லி கிடைக்காவிட்டாலும் இக்கலியுகத்தில் காணும் பெருநெல்லி உண்டு, பேரிளமை கொண்டு பெருவாழ்வு வாழ்வோம்

No comments:
Post a Comment