Monday, June 13, 2011

சிவன் சொத்து குலநாசம்

பார்வதி தேவியின் தவத்தின் பொருட்டும்; சங்கன், பதுமன் ஆகியநாகங்களுக்கும் மற்று முள்ள பலருக்கும் சிவன் வேறு, அரி வேறல்ல என்பதைஉணர்த்தும் பொருட்டும் சிவபெருமான் சங்கர நாராயணராகக் காட்சி தந்த தலம்சங்கரன் கோவில்!

இவ்வாறு சிவபெருமான் ஒரு பாதி சிவனாகவும் மறுபாதி நாராயண னாகவும் காட்சிதந்த அந்த அரிய நிகழ்ச்சி, ஆடி மாதத்தில் ஆடித்தபசு விழாவாக சங்கரன்கோவில் தலத்தில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவது நாமறிந்ததே.


அத்தகைய சிறப்பு வாய்ந்த சங்கரன் கோவில் தலத்தில் மேலும் ஒரு அற்புதத்தைநிகழ்த்தியிருக்கிறார் சிவபெருமான். இந்த நிகழ்வை உணர்வுப் பூர்வமாகவிவரித்தார் மணி பட்டர்.

""ஒருசமயம், சிவபூஜை செய்வதற்காக கோவிலுக்குள் நுழைந்த அர்ச்சகர்கள்,பூஜைக் குரிய பொருட்கள் அனைத்தும் களவு போயிருப்பதைக் கண்டுதிடுக்கிட்டனர். சிவனுக்கு எப்படி பூஜை செய்வது என்று தெரியாமல் ஈசனிடம்முறையிட்டுப் புலம்பி நின்றனர்.

"உன் கண்ணெதிரே உன்னுடைய பொருட்களே களவு போய்விட்டனவே! என்ன செய்யப் போகிறாய் நீ?' என்று அவர்கள் கலங்கி நிற்க, சிவபெருமான்சந்திரசேகரராய்- வேட்டைச் சாமியாய் வடிவெடுத்து கள்வர்களைப் பிடிக்ககுதிரையில் விரைந்து சென்றார். கள்வர்களைக் கண்டுபிடித்து, களவு போனபொருட்களுடன் அவர் களைக் கட்டியிழுத்துக் கொண்டு வேட்டை மடம் திரும்பினார்சிவபெருமான்.

அங்கு அவர்களிடம், "அடுத்தவர் பொருட்களைத் திருடுதல் பாவம். அதிலும் சிவன்சொத்தை அபகரித் தால் குலமே நாசமடையும்' என்று அவர்களுக்கு தர்ம நியாயங்களைஎடுத்துரைத்தார்.

அதைக் கேட்டு மனம் வருந்திய கள்வர்கள், "பாவத் தொழிலான திருட்டுத் தொழிலைஇனி ஒருபோதும் செய்ய மாட்டோம்' என்று மன்னிப்பு வேண்டி, தங்கள் முடியைக்காணிக்கையாகச் செலுத்தி மொட்டையடித் துக் கொண்டனர்.

திருடு போன தன்னுடைய பொருட்களைத் தானே கண்டுபிடித்து, சிவன் சொத்தைஅபகரித்தால் குலம் நாசமடையும் என்ற உண்மையையும் சிவபெருமான் உணர்த்தியஅந்த அரிய காட்சியைக் கண்டு உருகி நின்றனர் அர்ச்சகர்கள்.

மேற்கண்ட சம்பவத்தை "வேட்டை மடச் சாமி' என்னும் விழாவாக தை மாதம் இரண்டாம்நாள் (மாட்டுப் பொங்கலன்று) மாலை சங்கரன் கோவிலில் கொண்டாடி வருகிறார்கள்.

குதிரை வாகனத்தில் சந்திரசேகரராய் சிவபெருமான் எழுந்தருளி, கள்வர்களைப்பிடித்துக்கொண்டு திரும்பி வரும்போது, அவரைக் காண்பதற்காகப் பல்வேறுபகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் திரள்கின்றனர்.

"இழி செயலான திருட்டுத் தொழிலை யும், மனித குலத்திற்கெதிரான பாவச்செயல்களையும் இனி ஒருபோதும் செய்ய மாட்டேன். என்னை மன்னித் தருள வேண்டும்சிவபெருமானே!' என்று வேண்டிக் கொள்பவர்களுக்கு விமோசனமும்-

No comments:

Post a Comment