Monday, June 13, 2011

அமா சோம வார விரதம்

திங்கட்கிழமையில் வரும் அமாவாசையை "அமா சோம வாரம்' என்று போற்றுவர். அன்றுவிரதம் கடைப் பிடித்து அரச மரத்தை வழிபட்டால் கிடைக்கும் பலன் கள் ஏராளம்என்று ஞானநூல்கள் சொல்கின்றன.

அரச மரம் இருக்கும் இடத்தில் மும்மூர்த்திகள் வாசம் செய்வதாகநம்பப்படுகிறது. மும்மூர்த்தி வடிவம் கொண்ட அரச மரத்தின் அடிப்பக்கம்பிரம்மா, நடுமரம் விஷ்ணு, கிளைகள் கொண்ட மேற்பாகம் சிவன் என்பர்.


இம்மரம் மகாவிஷ்ணுவின் வலது கண்ணிலிருந்து தோன்றியது. எனவே இந்த மரத்தைஎக்காரணத்தைக் கொண்டும் வெட்டுவதும், அதன்மேல் ஏறுவதும், கிளைகளை ஒடிப்பதும் தகாத செயல்கள் ஆகும். அப்படிச் செய்தால் எதிர்பாராத விபத்து, வறுமை,துன்பங்கள் ஏற்படும் என்பர்.

அரச மரத்திற்கு "அஸ்வத்தா' என்ற பெயரும் உண்டு. அஸ்வத்தா என்றால்,"வழிபடுபவர்களின் பாவத்தை மறு நாளே தீர்ப்பது' என்று பொருள்சொல்லப்படுகிறது.

இந்த அரச மரத்தை திங்கட் கிழமையில் வரும் அமாவாசையன்று விரதம் கடைப்பிடித்து வழிபட்டால் வாழ்வில் வசந்த ராகம் பாடும்; வளமான வாழ்வு கிட்டும்.காலை வேளையில் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் இருபத்தியொரு முறை வலம்வந்து வணங்கினால் குழந்தை பாக்கியம் கிட்டும். அரசமர நிழல் படுகின்ற நீர்நிலைகளில் வியாழக்கிழமை அன்றும் அமாவாசை அன்றும் நீராடுவது திரிவேணிசங்கமத்தில் நீராடுவதற்குச் சமம்.

"ஆயுர்விருத்தி பகவத் தஸ்யவர்த்தந தேஸர்வ ஸம்பத்' என்று பத்ம புராணம்சொல்கிறது. அரச மரத்தைப் பார்த்ததும் வணங்கியவருக்கு ஆயுள் வளரும்; செல்வவளம் பெருகும். கோவில்களில் உள்ள அரச மரத்திற்கு இன்னும் அதிகமான சக்திஉண்டு. இந்த அரச மரத்தடியில் விநாயகப் பெருமான் எழுந்தருளியிருப்பார்.அத்துடன் நாகர் சிலைகளும் அங்கு இருக்கும். இதனால் இது தோஷ நிவர்த்திமரமாகவும் கருதப்படுகிறது.

அரச மரத்தை காலை வேளையில் ஏழு மணிக்குமுன் வலம் வருவது சிறப்பிக்கப்படுகிறது. சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் மரத்தைத் தொடக்கூடாது.சனிக்கிழமையன்று அரச மரத்தடியில் ஸ்ரீலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம்.

அரச மரத்தைச் சுற்றும்போது கீழ்க்கண்ட சுலோகத்தைச் சொல்லிக்கொண்டே வலம் வந்தால் கூடுதல் பலன் கிட்டும்.

"மூலதோ ப்ரும்மரூபாய

மத்யதோ விஷ்ணு ரூபிணே

அக்ரத் சிவரூபாய

வ்ருக்ஷ ராஜாயதே நம!'

அரசமரம் மருத்துவக் குணம் கொண்டது. இதன் இலைகளை (பழுப்பு) நல்லெண்ணெயில்தடவி அனலில் வாட்டி, உடலில் ஏற்படும் வீக்கத்திற்கு ஒத்தடம் கொடுத்தால்நல்ல குணம் தெரியும். இதன் பழங்களை முறைப்படி லேகியம் செய்து சாப்பிட்டால்தாது விருத்தி யாகும்; சுக்கிலம் பெருகும். ஆயுர் வேதத்தில் இதுபெரும்பாலும் பயன்படுவதாகச் சொல்லப் படுகிறது.

ஒரு மரத்தை எடுத்துக் கொண்டால் அதன் வேர் ஒரு குணம், பட்டை ஒரு குணம்,கிளை, இலை, கொழுந்து ஒரு குணம் என்று மாறுபட் டிருக்கும். ஆனால், அரச மரம்மட்டும் வேர், பட்டை, பூ, பழம் உட்பட அனைத்தும் ஒரே குணம் கொண்டவை. இதில்பிராண வாயும் துவர்ப்புச் சத்தும் மிகுதியாக உள்ளது. இம் மரத்திலிருந்துமுப்பது மீட்டருக்குள் எந்த ஒரு கோவில் இருந்தாலும், அந்தக் கோவிலில்மனஅமைதி இருக்கும். மனஅமைதி கொடுப்ப திலும் ரத்த ஓட்டத்தைச்சீர்செய்வதிலும் அரசமரம் முதன்மையான இடத்தை வகிக்கிறது. புத்தருக்கு ஞானம்பிறந்தது அரசமரத்தடியில் என்று வரலாறு சொல்லும்.

விஞ்ஞான ஆய்வின்படி ஒரு அரசமரம் நாளொன்றுக்கு ஆயிரத்து எண்ணூறு கிலோகரியமில வாயுவை உட்கொண்டு, இரண்டா யிரத்து நானூறு கிலோ பிராண வாயுவைவெளியிடுகிறது. அரசமர சமித்துகளை மந்திரப் பூர்வமாக ஹோமத் தீயிலிட்டு,அந்த ஹோமப் புகை வீட்டில் பரவினால் கண்களுக்குத் தெரியாத பூச்சிகள்,கிருமிகள் அழிந்துவிடும்.

 விரதம் மேற்கொண்டு, அரசமரத்திற்கு சூரிய உதயத்திற்குமுன்பூஜை செய்து இருபத்தி யொரு முறை வலம் வந்தால், குழந்தைச் செல்வம் உள்ளிட்டபல பாக்கியங்களையும் பெற்று நீடுழி வாழ்வர்.

அமாசோம வாரம் போற்றப்படுவதுபோல, பௌர்ணமியும் போற்றப்படுகிறது. திங்கட்கிழமையில் வரும் பௌர்ணமி அன்று அரச மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகப்பெருமானை யும் நாக தேவதைகளையும் ஆயிரத்தோரு முறை சுற்றி வந்தால்ஆரோக்கியமான வாழ்வு கிட்டும். நூற்றியொரு முறை வலம் வந்தால்கன்னியர்களுக்குத் திருமணத்தடை நீங்கி விரைவில் நல்ல இடத்தில் திருமணம்நடை பெறும். சுமங்கலிகளுக்கு சுமங்கலி பாக்கியம் நீடித்து நிற்கும்.ஒன்பது முறை வலம் வந்தால் கல்வி ஞானத்தில் சிறந்து விளங்கலாம். 

எனவே, அமாசோம வாரத்திலும் சோம வாரப் பௌர்ணமியிலும் அரச மரத்தை வழி பட்டு பேறுகள் பல பெற்று வளமுடன் வாழ்வோம்.

No comments:

Post a Comment