இன்றைய காலத்தில் எல்லாமே கம்ப்யூட்டர் மயமாகிவிட்டதை தாங்கள் எப்படி புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. தகவல் தொடர்பு சாதனங்களுக்கு ஆதாரமாகத் திகழ்வன கோள்கள் தானே! இன்றைக்கு செயற்கைக் கோள்கள் விடுவதற்கு முன்னுதாரணமாக இருப்பவை, நவக்கிரகங்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. புதுமை என்பது பழமையிலிருந்து தோன்றுவது தான். எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாத காலத்தில் ஞானிகளின் தவத்தினால் கண்டறியப்பட்டவை கிரகங்கள். அவற்றின் பாதையையும் சுழற்சியையும் வைத்து உலகின் இயக்கமும், மனித வாழ்வியல் முறைகளும் நிகழ்கின்றன என்பதனைக் கண்டுபிடித்தது அன்றைய மெய்ஞானம். அதன் அடிப்படையில் பரிணாம வளர்ச்சியைப் பெற்றது இன்றைய விஞ்ஞானம். எனவே இன்றைய விஞ்ஞான உலகமாக இருந்தாலும் சரி, பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் சரி, மெய்ஞானம் கூறிய முறையே நிலைத்து நிற்கும் என்ற உண்மையைப் புரிந்து கொண்டு ஆன்மிகம், ஜோதிடம் உள்ளிட்ட விஷயங்களில் நம்பிக்கை வைப்பது எல்லாருக்கும் நல்லது.
No comments:
Post a Comment