Saturday, February 4, 2012

இரவில் நிம்மதியாக உறங்க

சிலருக்கு இரவில் நிம்மதியாக <உறங்கவே முடிவதில்லை. ஏதோ சிந்தனை, எதிர்காலம் குறித்த பயம், குழந்தை இல்லையே என்ற கவலை, குழந்தைகளைப் பற்றிய கவலை...இøவெயல்லாம் நிம்மதியையும் தூக்கத்தையும் கெடுக்கும். இதனால் பயங்கரமான கனவுகள், அதைக்கண்டு அலறுவது போன்ற துன்பம் ஏற்படுகிறது. இவர்கள் ஒன்பது வெள்ளிக்கிழமை தொடர்ந்து காளியம்மன் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும். வாரம்தோறும் ஒரு
எலுமிச்சம்பழத்தைக் கொடுத்து அம்மனின் பாதத்தில் வைத்து வாங்கிக் கொள்ளுங்கள். அதை தலையணை அருகில் வைத்து தூங்குங்கள். எந்த பிரச்னையும் நேராமல், நிம்மதியாகத் தூங்க அம்பிகை துணையிருப்பாள். தினமும் காலையில் நீராடியதும், திருவிளக்கின் முன் அமர்ந்து "ஓம்காளி' என்னும் மந்திரத்தை 108 முறை ஜெபிப்பதும் சிறந்த பரிகாரம். வீட்டு வேலை நேரத்தில், இயன்ற பொழுதெல்லாம் இம்மந்திரத்தை ஜெபித்து வந்தால் காளியருள் அரண் போல பாதுகாப்பதை உணரலாம். 

No comments:

Post a Comment