Saturday, March 3, 2012

வியாபாரிகள் கடைவாசலில் மஞ்சள் நீர் தெளிப்பது சரிதானா?

 வியாபாரிகள் கடைவாசலில் மஞ்சள் நீர் தெளிப்பது சரிதானா?

மஞ்சள் மகாலட்சுமி போன்றது. காலில் படும்படியாக இதனைத் தெளிக்கலாமா? சாணம் மகாலட்சுமி கடாட்சத்தைப் பெற்றுத்தருவது. இதனால் இதனை தெளிக்கலாம்.

** ஒரு நல்லவன், கடவுள் நம்பிக்கையற்றவனாக இருந்தால் இறையருள் பெறுவானா?

நல்லவனாக வாழ்வதற்கே இறையருள் பெற்றிருக்க வேண்டுமே! கடவுள் நம்பிக்கை உள்ள எல்லாரும் நல்லவர்கள் என்றோ, நம்பிக்கை இல்லாதவர்களை கெட்டவர்கள் என்று சொல்வதற்கும் இல்லை. ""இவருக்குக் கடவுளைப் பிடிக்கவில்லை என்றாலும், கடவுளுக்கு இவரைப் பிடிக்கிறதே,'' என்று கூட சுவாரஸ்யமான பேச்சு எழுவதைக் கேட்டிருப்பீர்களே!

* வீட்டில் கிளிகளை வளர்க்க விரும்புகிறோம். சாஸ்திரம் இதனை ஏற்றுக் கொள்கிறதா?

"கூண்டுக்கிளி' என்ற சொல் உண்டு. சுதந்திரம் இழந்தவர்களுக்கு உதாரணமாக இதைச் சொல்வார்கள். சுதந்திரம் மனிதர்களுக்கு மட்டுமல்ல! பறவைகளுக்கும், பிற உயிரினங்களுக்கும் பொருந்தும். எனவே அவற்றின் சுதந்திரத்தில் தலையிடாத வகையில் வளர்க்கலாம்.

* கோயிலைப் போல, வீட்டு பூஜையறையிலும் சரவிளக்கு உபயோகிக்கலாமா?

வீட்டில் குத்துவிளக்கு, அகல் விளக்கையே உபயோகிக்க வேண்டும். காற்றில் ஆடக்கூடிய சரவிளக்கு, தூண்டா விளக்கு ஆகிய தொங்கும் விளக்குகளை உபயோகிக்கக் கூடாது. அதாவது, வீட்டில் எரியும் விளக்குகள் ஆடக்கூடாது.

* ராமானுஜர், காஞ்சிப் பெரியவர் சிலைகளை வீட்டில் வைத்து வழிபடுகிறேன். அவர்களுக்கு காவி வஸ்திரம் தான் அணிவிக்க வேண்டுமா? அல்லது வெள்ளை, மஞ்சள் துணிகளையும் அணிவிக்கலாமா?

ராமானுஜர், காஞ்சிப் பெரியவர் போன்றோர் தமக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல் உலக மக்களுக்காகத் தொண்டாற்றியவர்கள். இந்து சநாதன தர்மத்தின் அடிப்படையில் மக்களிடையில் ஆன்மிக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர்கள். மக்கள் நலனுக்காக உலக சுக போகங்களைத் தியாகம் செய்தவர்கள். எளிமையாக வாழ காவி அணிந்த மகான்கள். இவர்களின் சிலைகளுக்கு காவி வஸ்திரம் அணிவித்து வழிபடுவது மிகவும் சிறந்தது. இந்தச் சிலைகளைப் பார்க்கும் பொழுது, அவர்கள் செய்த தியாகத்தையும், தொண்டையும் நினைவில் கொண்டு நாமும் முடிந்ததைச் செய்யவும், காவி ஆடையைப் பார்த்து எளிமையாக வாழவும் பழகிக் கொண்டால் மனசாந்திக்கு குறைவிருக்காது. 

No comments:

Post a Comment