Friday, March 2, 2012

இவரை நினைப்பவர்களுக்கு தாலிபாக்கியம் நீடித்திருக்கும்.


1621ல் நடந்த சம்பவம் இது. ராகவேந்திர சுவாமிகளின் நிஜப்பெயர் வேங்கடநாதன். இல்லறத்தில் நாட்டமில்லை.
கலைவாணியின் உத்தரவுப்படியும், தன் குருவின் விருப்பப்படியும் துறவு பூண முடிவெடுத்தார்.
அதே நேரம், மனைவி சரஸ்வதியும், மகனும் கஷ்டப்படக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். தன் சகோதரருடன் அவர்களை அனுப்பி வைத்தார். பின், குருநாதர் சுதீந்திரரைச் சந்தித்து துறவுக்கு சம்மதம் தெரிவித்தார். காவியுடை அணிந்தார்.
அவரது காதில் மந்திரம் ஓதி, தீர்த்தம் வழங்கப்பட்டது. சந்நியாசியானதும், "ராகவேந்திர தீர்த்தர்' என்று பெயர் சூட்டப்பட்டது.
கணவர் துறவியான தகவல், சரஸ்வதிக்கு தெரிய வரவே, அவர் அடைந்த வேதனைக்கு அளவில்லை. வாழ்வதில் பயனில்லை என நினைத்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். பேயுருவில் அலைந்தார்.
ஒருமுறை, ராகவேந்திரர் முன் அந்தப்பேய் வந்தது. தன் வாழ்க்கை தொலைந்து போனது பற்றி அழுதது. தற்கொலை செய்தவர்களின் ஆத்மா எளிதில் சாந்தியடைவதில்லை. ராகவேந்திரர் பரிதாபப்பட்டார்.
புனிதநீரை பேய் மேல் தெளித்தார். சரஸ்வதி ஆத்மசாந்தி அடைந்தாள். அப்போது, ""பெண்ணே! சுமங்கலி பூஜை செய்யும் போது நீ நினைவில் கொள்ளப்படுவாய்,'' என்று அருளினார். சரஸ்வதிக்கு முக்தியாகிய பிறவாநிலை கிடைத்தது.
வீடுகளில் சுமங்கலி பூஜை செய்யும் போது, ராகவேந்திரர் அருளியபடி சரஸ்வதி அம்மையாரை நினைவில் கொள்ளுங்கள். அவரை நினைப்பவர்களுக்கு தாலிபாக்கியம் நீடித்திருக்கும்.

No comments:

Post a Comment