உன் பாதங்களைப் பற்றுகின்றேன் என் பாவங்களைப் போக்கிடுவாய் என் நாவில் உன் நாமம் தினந்தோறும் நான் துதிக்க எந்நாளும் எழுந்தருள்வாய் அகிலேழும் காத்திடுவாய் அகிலாண்டேஷ்வரித் தாயவளே.
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்று வள்ளுவர் சொல்கிறார். அப்படியானால் தெய்வத்தை விட மனித முயற்சி பெரியதா ? என்ற கேள்வி வருகிறது.
மனித முயற்சி என்பதே இறையாற்றலின் தெய்வ சக்தி நம் உடலில் இருந்தால்தான் நடக்கும். இறையாற்றல் நமக்கு எல்லாவற்றையும் வழங்கி இருக்கிறது. ஆனாலும், முயற்சியின் வலிமையைப் பொருத்தே பலன் அமைகிறது. சிந்திக்க மூளையும், உழைப்பதற்கு அவயங்களும் இறையாற்றல்தானே தந்தது ? எனவே, இவற்றைக் கொண்டு மனிதன்தான் முயற்சிக்க வேண்டும். அந்த முயற்சியின் இயக்க சக்தியாக இருப்பதுவும் இறையாற்றலே என்பதினால் எல்லாம் அவன் செயல் என்றார்களே அன்றி, முயற்சியின்றி இரு என்று சொல்லவில்லை.
அப்படி தெய்வத்தை விட மனித முயற்சி பெரிது என்று நினைத்திருந்தால் கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத்தையே முதல் அதிகாரமாக வள்ளுவப் பெருந்தகை எழுதியிருக்க மாட்டார் என்பதை உணர வேண்டும். எல்லாம் கடவுள் செயல் என்று உட்கார்ந்திருந்தால் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு போயச் சேரமுடியுமா ? எழுந்து நடக்க வேண்டும், அதற்காகவே கால்களைத் தந்திருக்கிறது. இது போலவே ஒவ்வொரு முயற்சியும். அப்படி நடக்கின்ற போது நடைபாதையில் உள்ள கற்களையும், முட்களையும் கவனித்துப் பார்த்து நடந்து செல்ல வேண்டும். அதற்காகவே கண்கள் தரப்பட்டுள்ளன. கவனிக்காமல் போய் இடித்து விட்டு கடவுளுக்குக் கண் இல்லை என்று சொல்வது அறியாமையே அன்றி வேறென்ன ?
குழந்தையாக இருந்து இன்றளவும் வளர்ந்துள்ள வரைக்கும் நாம் அடைந்துள்ள அறிவு அனைத்தும் ஐம்பூதங்களின் மூலமாகவே நமக்குக் கிடைத்தன. அறியப்படுவதை அறிவு என்கிறோம். ஆனால் இந்த அறிவை அறியவும், அறிந்ததை உணரவும், உணர்ந்ததை நுகரவும் வேறு ஏதோ ஒன்று நம் உள்ளில் இருந்து செயல்படுகிறது. அது என்ன ? அதுவே ஆழ்மனம். ஐப்பொறிகளையும் அடக்கி, மனதை ஒரு நிலைப்படுத்தினால் மட்டுமே அதை நாம் உணர முடியும். இந்த ஆழ்மனதின் மூலமாகத்தான் பிரபஞ்ச அறிவோடு நம்மை நாம் இணைத்துக் கொள்ள முடியும். அப்படி இணைத்துக் கொள்வதால் கிடைக்கின்ற வல்லமையான பேரறிவின் திறனையே ஆன்ம ஞானம் என்று சொல்கிறோம். எனவே, ஆன்ம ஞானம் பெற வேண்டுமானால், முதலில் ஆழ்மனமாக இருக்கிற ஆன்மாவை நாம் உணர வேண்டும். அறிவின் மூலம் நாம் ஆன்மிகத்தை, ஆன்மிக விஷயங்களை வேண்டுமானால் தெரிந்து கொள்ளலாமேயன்றி, ஆன்மிக அனுபவத்தைப் பெற முடியாது. புலன்களை வசப்படுத்தி, மனதை ஒரு நிலைப்படுத்தி முழு முயற்சியோடு தியானம் செய்து உள்முகமாக மனதைச் செலுத்தி ஆழ்மனமாக இயங்கும் ஆன்மாவை உணரும் போதுதான் அந்த அனுபவம் வாய்க்கும். ஆனாலும், அறிந்து கொண்டதைப் பற்றி அறிவினால் கேட்கப்படும் கேள்விகளே நமக்கு ஆன்மிகத் தேடலை உருவாக்கி முயற்சி செய்யத் தூண்டுகிறது என்பதையும் மறந்து விடக் கூடாது.
இப்படி மனதை ஒரு நிலைப்படுதும் போது அது பலவற்றைக் குறித்து சிந்தித்துக் கொண்டே இருக்கும். ஆனால், போகப் போக சிந்தனையின் எண்ணிக்கை ஒவ்வொன்றாகக் குறைந்து சூனியமடையும் பொழுது, பிரபஞ்ச சக்தியோடு மனம் ஐக்கியப்படும். இதையே பேரானந்தம் என்று சொல்லிக் கொள்கிறோம். பிரபஞ்ச அறிவோடு, பேரறிவோடு நம் சிற்றறிவை இணைத்து விட்ட படியினால் பிரபஞ்சம் வேறு நாம் வேறு என்ற நிலை மாறிவிடும். இந்த முழுப் பிரபஞ்ச உணர்வையே ஆத்ம தரிசனம் என்கிறோம். இதைப்பற்றி இந்த உணர்வைப் பற்றி நாலு வரிகளில் எளிமையாக விளக்குவது கடினமல்ல. அந்த அனுபவத்தை அந்த பேருணர்வை அடைய வேண்டும் என்கிற முனைப்பும், முயற்சியுமே கடினமானது. விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் உள்ளவர்களே மனதோடு போராட முடியும். அவ்வாறு இல்லாதவர்கள் உணர்வோடு போராடி உழன்று கொண்டிருக்க வேண்டியதுதான். இதில் இன்னொரு முக்கியமான அம்சம் என்னவென்றால் தறிகெட்டு அங்குமிங்கும் ஓடும் ஆடுகளை மிகவும் சிரம்ப்பட்டு பட்டியில் சேர்க்கும் மேய்ப்பனைப் போல மனதை ஒரு குறிப்பிட்ட நிலைக்குக் கொண்டு போய் அடைப்பது போல அதாவது மனதை அதன் பிறப்பிடத்திற்கு சிரமப்பட்டு உந்தித் தள்ளுவதல்ல தியானம். உள்ளில் இருந்து எதனாலோ ஈர்க்கப்பட்டு இயல்பாகவே மனம் உள்முகமாவதுதான் தியானம். இது நடைபெற வேண்டுமானால், அந்த ஆழ்மனமாகிய உயர் மனம்ததாவது நம் இதயத் தாமரை மலர்ந்திருக்க வேண்டும்

No comments:
Post a Comment