மங்கையின் “அடி’ தொழுதவன்!
------------------------------------------------
ஆடவரைப் பெண்டிர் வணங்குதல் என்பது இன்று
வரை தொடர்ந்து நிகழ்ந்து வரும் பெருவழக்காகும்....
இதற்கு மறுதலையாகப் பெண்டிரை ஆடவர்
வணங்குதல் என்பது இயல்பிறந்த நடத்தையாகவே
அவ்வக்காலச் சமூகத்தினரால் நோக்கப்படுகிறது.
சங்க இலக்கியங்களில், குறிப்பாக – கலித்தொகையில்
தலைவன், தலைவி மற்றும் தோழியை வணங்குவதாகச்
சில பதிவுகள் உள்ளன. ஓர் ஆடவன் பெண்டிரை
(தலைவி, தோழி) வணங்கியதாக நான்கு பதிவுகள்
கலித்தொகையில் காணப்படுகின்றன. அவை வருமாறு:
-
“”புலையர்போலப் புன்கண் நோக்கித்
தொழிலும் தொழுதான் தொடலும் தொட்டான்
காழ்வரை நில்லாக் கடுங்களிறு அன்னோன்”
(தலைவியை) (கலி.55: 19.21)
-
“”உள்நின்ற நோய்மிக உயிர்எஞ்சு துயர்செய்தல்
பெண்ணன்று புனையிழாய் எனக்கூறித் தொழுஉம் தொழுதே
கண்ணும் நீராக நடுங்கினன்”
(தோழியை) (கலி 60:6-8)
-
“”நோக்குங்கால் நோக்கித் தொழூஉம்
அவன்நின் திருந்தடி மேல்வீழ்ந்து இரக்கும் நோய் தீர்க்கும்
மருந்து நீ ஆகுத லான்”
(தலைவியை) (கலி 63:1-11)
-
“”தலையுற முன்அடிப் பணிவான் போலவும்
கோதை கோலா இறைஞ்சி நின்ற
ஊதையம் சேர்ப்பனை அலைப்பேன் போலவும்
கனவினால் கண்டேன் தோழி”
(தலைவியை) (கலி 128:17-23)
-
மேற்குறித்த பாடல்களில் முதல் மூன்று பாடல்கள்
ஆடவன் பெண்ணைக் கையால் தொழுவதையும்,
இறுதிப்பாடல் ஆடவன் பெண்ணின் காலில் வீழ்ந்து
தொழுவதையும் முன்னிறுத்துகின்றன.
-
பெண்ணை வணங்கும் ஆடவனின் வலிமையும்
“”கடுங்களிறு அன்னோன்” (55:21) எனக் குறிக்கப்
பட்டிருத்தல் கவனிக்கத்தக்கது. மேற்சுட்டிய
பதிவுகளைக் கொண்டு ஆடவன் பெண்ணுக்கு
உயர்மதிப்பளித்துள்ளான் எனக் கருத இயலவில்லை.
-
காரணம், மேற்சுட்டிய பதிவுகள் இடம் பெறும்
சூழல்கள், 1. களவு நிகழ்ச்சி (வெளிப்படையன்று);
2. கனவு நிகழ்ச்சி (ஆழ்மன வெளிப்பாடு) என
அமைவதே! முதலாவதாக, களவுக் காலத்தில்
தலைவன், தலைவியை வணங்குதல் நிகழ்வானது
வெளிப்படையாக நிகழ்வதன்று. மேலும், ஆடவன்
தன் விருப்பத்திற்குரியாளின் அன்பை இரந்தேனும்
பெறுவதற்குப் பயன்படுத்தப்படும் கடைசி
ஆயுதமும் அதுவே!
-
இரண்டாவதாக, கனவில் நிகழும் செயலை ஆழ்மன
வெளிப்பாடாகக் (நனவில் உள்ள வெளிப்பாடாக)
கருத வேண்டுமேயொழிய, சமூகத்தில் நிகழும் புற
நிகழ்வாகக் கருத இயலாது.
-
தலைவன், தலைவியை (அ) தோழியை வணங்குதல்
எனும் நிகழ்வினைப் பாடலில் ஆண் கூற்றாக
அமைக்காது பெண் கூற்றாக அமைத்துள்ளமைக்குப்
பெண்ணின் ஆழ்மனக் குமுறலைப் பெண்ணே
வெளிப்படுத்துதல் எனும் தன்மையை மட்டுமே
காரணமாகச் சொல்ல முடியுமா?
எனும் வினா எழவே செய்கிறது.
-
எனவே, சங்ககால ஆணாதிக்கச் சமூகக்
கட்டமைப்புக்குச் சிதைவு ஏற்படுத்தாவண்ணம்
சமகாலப் புலவர்களின் படைப்புநெறி அமைந்துள்ளது
என்பதையே மேற்சுட்டிய “தலைவன், தலைவியை
வணங்குதல்’ குறித்த ஆழ்மன வெளிப்பாட்டுப்
பதிவுகள் மறைமுகமாய்ச் சுட்டி நிற்கின்றன எனும்
முடிவுக்கு வரலாம்

No comments:
Post a Comment