Sunday, March 30, 2014

யாராவது உன் தாயைப் பழித்தால் நீ என்ன செய்வாய்?'

யாராவது உன் தாயைப் பழித்தால் நீ என்ன செய்வாய்?'
சுவாமி விவேகானந்தர்..
சூயஸ் கால்வாய் வழியாக இந்தியா திரும்பிய சுவாமிஜி வந்த கப்பலில் இரண்டு பாதிரிகள் பயணம் செய்தனர். சுவாமிஜியுடன் வாதம் செய்து, கிறிஸ்தவ மதத்தின் மேன்மையை நிலைநாட்ட அவர்கள் விரும்பினர். ஆனால் சுவாமிஜியுடன் பேசிய போது நிலைமை விபரீதமாகியது. அவர்கள் தோற்கத் தொடங்கினர். அவருடன் பேசி வெற்றி காண முடியாது என்பதை அறிந்து கொண்ட அவர்கள் இந்து மதத்தைத் தாக்கிப் பேச ஆரம்பித்தனர். இழிவாகப் பேசினர். சுவாமிஜி பொறுமையாக அனைத்...தையும் கேட்டுக் கொண்டிருந்தார். அவர்களின் ஏச்சும் ஏளனமும் எல்லை மீறிய போது மெதுவாக எழுந்தார்.
நேராக ஒரு பாதிரியின் முன்னால் சென்றார். திடீரென்று அவரது சட்டையைப் பற்றிப் பிடித்து, வேடிக்கையாக ஆனால் அழுத்தமாக, 'இன்றும் ஏதாவது சொன்னால் அப்படியே தூக்கிக் கடலில் போட்டு விடுவேன்' என்றார். பாதிரிகள் நடுங்கிப் போய்விட்டனர். சுவாமிஜியின் பிடியில் சிக்கியவர் பயந்துபோய், 'விட்டுவிடுங்கள். இனி எதுவும் சொல்ல மாட்டேன்' என்று கூறினார். அந்தப் பாதிரி அதன்பிறகு சுவாமிஜியிடம் மிகுந்த மரியாதையுடன் நடந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியைப் பின்னாளில் பிரிய நாத் சிங்கரிடம் கூறிவிட்டு அவரிடம், 'மகனே, யாராவது உன் தாயைப் பழித்தால் நீ என்ன செய்வாய்?' என்று கேட்டார். அதற்குப் பிரியநாத், 'அவனைவிட மாட்டேன், அவனுக்கு பாடம் புகட்டுவேன்' என்றார்.
'சரியாகச் சொன்னாய். அதே உணர்வு நமது இந்தியத் திருநாட்டின் உண்மைத் தாயான உன் சொந்த மதத்திடமும் உனக்கு இருந்திருக்குமானால் ஓர் இந்து சகோதரன் கிறிஸ்தவனாக மதமாற்றம் செய்யப்படுவதை நீ ஒருபோதும் சகித்துக் கொண்டிருக்க மாட்டாய். ஆனால் உன் கண்முன்னே மதமாற்றம் தினமும் நடந்து கொண்டிருக்கிறது.நீஅதைப் பற்றி கவலைப்படாமல் இருக்கிறாய். எங்கே உன் நம்பிக்கை? எங்கே உன் தேச பக்தி?
உன் கண்முன்னாலேயே கிறிஸ்தவப் பாதிரிகள் இந்து மதத்தை இகழ்ந்து பேசுகின்றனர். மதமாற்றம் செய்கின்றனர். இதைத் தடுக்க தவறை எண்ணி எத்தனை பேரின் ரத்தம் கொதிக்கிறது?' என்று கேட்டார் சுவாமிஜி.

No comments:

Post a Comment