Saturday, March 8, 2014

குரு பக்தி








குரு பக்தி
திருவண்ணாமலைத் திருத்தலத்தில் நமசிவாயர் என்றொரு சித்தர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு குகையில் வாழ்ந்ததால் அவருக்குக் 'குகை நமசிவாயர்' என்று அழைத்தனர். அவருக்கு ஒரு சீடர் இருந்தார். அவர் பெயரும் நமசிவாயரே! முகுந்த பக்தியுடன் குருவுக்குப் பணிவிடை செய்து வந்தார் சீடர்.
சீடரைச் சோதிக்கக் குரு விரும்பினார். உடனே வாந்தி எடுத்தார். அதனைப் ஒரு பாத்திரத்தில் பிடித்தார் சீடர்!
...
சற்று நிதானித்த குரு, பெருமூச்சுடன் "அம்மா, அப்பா" என அரற்றினார். பிறகு சீடனைப் பார்த்து, "இதை யாரும் காலால் மிதிக்காத இடத்தில் கொட்டிவிட்டு வா!" என்று சொன்னார்.
யாருமே மிதிக்காத இடமா! யோசித்தார் சீடர்.
மண் சட்டியில் வாந்தியை ஏந்திக் கொண்டு வெளியே சென்ற சீடர், சற்று நேரத்தில் பாத்திரத்தைக் கழுவி எடுத்து கொண்டு வந்து சேர்ந்தார்!
"என்ன செய்தாய்? " குரு வினாவினார்
"தாங்கள் கூறியபடி செய்தேன்!"
"எங்கு ஊற்றினாய்?"
"அடியேன் வயிற்றில்!"
ஆம், சீடன் அதனைக் குடித்து விட்டார்!
குகை நமசிவாயர், சீடனின் தலைமேல் கை வைத்து "அப்பா! இன்று முதல் நீயும் குருநமசிவாயர்" என்று அழைக்கப்படுவாய்! உனக்கு எல்லாம் வந்தது. புறப்படு! சைவ நெறியைத் தழைக்கச் செய்!" என ஆசிர்வதித்தார்.

No comments:

Post a Comment