Thursday, April 17, 2014

ஏழையின் சிரிப்பில் இறைவன்.....


ஏழையின் சிரிப்பில் இறைவன்.....
தாயுமானவர் முதலமைச்சராக இருந்தபோது மன்னர் அவரை மரியாதை செய்யும் பொருட்டு மிக விலையுயர்ந்த ரத்தினங்கள் பதித்த பொன்னாடையை அணிவித்தார்.
தாயுமானவரோ தெருவில் குளிரால் நடுங்கிக் கொண்டிருந்த ஒரு பிச்சைக்காரக் கிழவிக்கு அதனைக் கொடுத்துவிட்டார். இதனால் மன்னர் மனம் வேதனைப்பட்டது.
...
அன்று இரவு தாயுமானவரோடு மன்னர் திருவானைக்காவில் அருள்பாலிக்கும் அன்னை அகிலாண்டேஸ்வரியை தரிசிக்கச் சென்றார்
என்ன ஆச்சரியம் !
மன்னர் பரிசளித்த அந்த பொன்னாடை அம்பிகையின் திவ்ய ரூபத்தை அலங்கரித்துக் கொண்டிருந்தது. மன்னர் மனதில் இருந்த வருத்தம் நீங்கி ஏழைகளின் மகிழ்ச்சியில்தான் இறைவன் இருக்கிறான் என்பதை உணர்ந்தார்.
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அதாகும்
--திருமந்திரம் (1857)
தன்னையொத்த மனிதன் பசித்திருக்கையில் கடவுளுக்கு ஒரு பொருளைக் காணிக்கையாகக் கொடுத்தால் அது நடமாடும் கோயிலான மனிதனுக்குச் சென்று பயன்தராது. ஆனால் நடமாடும் கோயிலான பசித்த மனிதனுக்கு ஒன்று ஈந்தால் அது இறைவனுக்கு சென்று சேரும்....

No comments:

Post a Comment