Wednesday, April 16, 2014

உபவாசத்தின்போது பலகாரங்கள் சாப்பிடலாமா:


உபவாசத்தின்போது பலகாரங்கள் சாப்பிடலாமா:
உபவாச காலத்தில், வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி உபவாசம் இருப்பதே உயர்வானது. அப்படி இருக்க இயலாதவர்கள் பாலும் பழமும் அருந...்தலாம்.
சமஸ்கிருதத்தில் "ஃபல்' என்றால் பழம் என்று பொருள்படும். "ஆஹார்' என்பது ஆகாரம் அல்லது உணவு என்பதாகும். "ஃபல் + ஆஹார்' = பலஹார் என்று ஆகிறது. பழத்தை உணவாகக் கொள்வதே பலகாரம் என்பதாயிற்று.
இதற்குப் பதிலாக சாதம் தவிர்த்த பலவித ஆகாரங்களைச் சாப்பிடுவது தான் "பலகாரம்' என்ற சொல்லின் பொருளாக இக்காலத்தில் கருதப்படுகிறது.
இது தவறு. இது உண்மையான உபவாசம் ஆகாது.
ஜீரண உறுப்பு களுக்கு ஓய்வு கொடுத்து, உடலைப் புதுப்பிப்பதே உபவாசத்தின் நோக்கமாகும். எனவே சிற்றுண்டிகளைச் சாப்பிட்டு உபவாசம் இருப்பதை விட, பழங்களையும் பாலையும் மட்டும் அருந்தி உபவாசம் இருப்பதே சிறந்ததாகும்.

No comments:

Post a Comment