Sunday, September 14, 2014

பாரத தேசத்தை புண்ணிய பூமி என்று சொல்வதன் பொருள் என்ன?

பாரத தேசத்தை புண்ணிய பூமி என்று சொல்வதன் பொருள் என்ன?
ஆன்மிகத்தின் மூலம் மக்களை நெறிப்படுத்தும் வழியை முதலில் கூறியது வேதங்கள் தான். மதம் உருவாவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே "சனாதன தர்மம்' என்ற பெயரில், வேதத்தை அடிப்படையாகக் கொண்டு, ஆன்மிகம் உலக மக்களிடையே பரவியிருந்தது. தேவர்களின் நிலைப்பாடுகளையும், யாகங்களின் மூலம் அவர்களை திருப்தி செய்து மழை, பயிர்வளம், மகிழ்ச்சியான வாழ்க்கை போன்றவற்றைப் பெறலாம் என்று வேதங்கள் கூறுகின்றன. தெய்வ வழிபாட்டுக்குரிய விஷயங்களாக அதில் சில கூறப்பட்டுள்ளன. குறிப்பாக, ராமேஸ்வரத்திற்கும், இமயமலைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தை புண்ணிய காரியங்களைச் செய்ய ஏற்ற இடமாகக் கூறுகிறது. வேதத்தில் குறிப்பிடப்படும் புண்ணிய நதிகளான கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி போன்ற நதிகள் பாரதத்தில் தான் உள்ளன. சிவன், விஷ்ணு, பார்வதி, விநாயகர், முருகன் போன்ற தெய்வங்களின் திருவருட்செயல்கள் இங்கு
தான் நிகழ்ந்தன. யாராலும் தோற்றுவிக்கப்படாத சிறப்புடைய சனாதன தர்மம் பல அருளாளர்களால் போற்றிப் பாதுகாக்கப்பட்டு, இந்து மதமாக தழைத்து விளங்குவதோடு பிறரையும் அரவணைத்துக் கொண்டும் நிற்கிறது. உலகளவில் ஆன்மிகம் என்பது ஆலமரம் என்றால் அதன் ஆணி வேராகத் திகழ்வது நம் புண்ணிய பாரத தேசம் தான்.

No comments:

Post a Comment