Friday, January 23, 2015

மூலஸ்தானத்தை கருவறை என்பது ஏன்?

மூலஸ்தானத்தை கருவறை என்பது ஏன்?
சுவாமி இருக்கும் மூலஸ்தானத்தை கருவறை என்கிறார்கள்.கரு என்ற சொல் குழந்தை உருவாவதை மட்டும் குறிப்பதில்லை.ஒரு கதைஎழுதுவதற்குக் கூட கரு வேண்டும்.பணம் வைக்கும் அறையைக்கருவூலம் என்கிறோம்.அதுபோல ஒரு கோயிலின் அடித்தளமாக பிரதிஷ்டை செய்யப்படும் பிரதான மூர்த்தியின் இருப்பிடத்தை கருவறை என்று குறிப்பிடுகின்றனர்.கருவில் இருக்கும் குழந்தையைப் பாதுகாத்தால் நன்றாகப் பிறந்து வளர்ந்து ஆளாகிறது.நல்ல கருவை அடித்தளமாகக் கொண்டு எழுதப்படும் கதை மக்களிடம் சென்று சேர்ந்தால் உலகம் திருந்துகிறது.கரு வூலத்தில் இருக்கும் பொக்கிஷம் மக்களுக்கு நன்மையளிக்கிறது. இதுபோல் கருவறையில் இருக்கும் மூலமூர்த்தியை வழிபட்டால் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை உண்டாகிறது.ஆன்மிக உணர்வால் உலகமேஅமைதியாக இருக்கிறது என்ற அடிப்படையில் மூலஸ்தானத்தைகருவறை என்று அழைத்தனர்

No comments:

Post a Comment