Saturday, September 5, 2015

இறைவன் படைப்பில் உடல் ஊனம் / மூளை வளர்ச்சி இல்லாமல் குழைந்தை பிறப்பது ஏன் ? கடந்த பிறவி இல் செய்த தவறுக்காக தற்போது தண்டிப்பது ஏன் ? கடவுள் மனிதனை படைத்தவர் என்றால் இறைவனால் மனிதனை தவறு செய்யாமல் கட்டு படுத்த முடியாத ?

இறைவன் படைப்பில் உடல் ஊனம் / மூளை வளர்ச்சி இல்லாமல் குழைந்தை பிறப்பது ஏன் ? கடந்த பிறவி இல் செய்த தவறுக்காக தற்போது தண்டிப்பது ஏன் ? கடவுள் மனிதனை படைத்தவர் என்றால் இறைவனால் மனிதனை தவறு செய்யாமல் கட்டு படுத்த முடியாத ?
இதற்கு பதில் சொல்லும் முன் ....
கடவுள் என்பவர் நீங்கள் படம்களில் பார்க்கும் நபர் அல்ல ,
நகை அலங்கார உடையோடு பார்ப்பது சினிமாவில் தான் .
நிஜத்தில் ஆகாயத்தில் வீடு கட்டி கொண்டு நம்மை போல் வாழும் நபரா அதுவும் இல்லை
நம்முடைய வழிபாட்டுக்கு மயங்கி வரம் தருபவரும் இல்லை .
அப்படி என்றால் கோவில் தெய்வம் ,திருநீறு ,கும்குமம் ,சாஸ்திரம் ,சாம்பரதாயம் எதிர்க்கு என்று கேள்வி வரும் .
நமக்கு மேல் ஒரு சக்தி உள்ளது நம்மை பம்பரமாக ஆட்டி வைக்கிறது
என்று ஆடி கொண்டு இருக்கும் பொழுது உணராதவர்கள் /பேசுபவர்கள்
முட்டாளாக இருக்க வேண்டும் அல்லது கர்வியாக இருக்க வேண்டும் .
இப்படி உள்ள சக்தியை மனிதன் வசபடுத்த அதற்கு ஒரு வடிவம் கொடுத்து
அதை பளபளபாக்கி வைத்தவர்களிடம் சிக்கி கொண்டார் என்று சொல்லலாம்.
மேலும்
உருவழிபாடு பற்றி நாம் என்னும் பொழுது இது நாம் முன்னோர்கள்
கண்ட ஆன்ம தரிசனத்தில் விளைந்தவை தான் இந்த விக்ரம்கள் என்று சொல்லலாம்.
கடவுள் மனித வடிவில் தான் இருக்க வேண்டுமா ?
மனிதனை விட மிஞ்சிய அழகிய உயரினம் இருக்கலாம் ,
அந்த வடிவில் கடவுள் இருக்கலாம் என்பது ஒரு வாதம் .
கடவுளை வசபடுத்த முடியாது அந்த திறன் இந்த உலகில் கிடையாது என்கிறது இஸ்லாம் அதனால் வடிவம் தரவில்லை .
கடவுள் என்பவர் "திருமுலர் சித்தர் சொன்னபடி தெள்ளத் தெளிதாருக்கு
சிவனே சிவலிங்கமாக நம்முள் இருக்கிறார் "
பொதுவில் கடவுள் நம்பிகை என்பது தனி மனித அனுபவம் .
ஒரு மனிதனுக்கும் விதம் விதமாக அது நடக்கிறது .
புரிந்து கொள்ளாமல் போவரிடம் அவர் இல்லாமல் போவது இல்லை .
மேலும் உண்மையில் இன்பம் என்றும் துன்பம் என்றும் இந்த உலகில் கிடையவே கிடையாது.
நமக்கு ஏற்படும் உணர்ச்சிக்கு அடையலாம் தான் நாம் அப்படி பெயர் வைத்து உள்ளோம் .
இந்த உணர்சிகளுக்கு கடவுள் பொறுப்பில்லை ,கடவுள் பற்றிய இந்த எண்ணம் நமக்குள் உள்ள இந்த இன்ப துன்பம்களில் ஒரு அடக்கத்தை தருகிறது என்று சொல்லலாம் .
மதம்கள் உண்டாக்கிய கடவுள் நம்பிக்கைகளை ஆய்வு பார்க்க வேண்டும் .
அப்படியே ஒத்து கொள்ள கூடாது .
ஒரு ஞானி சொன்ன ரகசியம் .
ஒரு நபர் அவரிடம் கேட்டார் நீங்கள் கடவுளை பார்த்தது உண்டா?
ஞானி அவரிடம் ஏன் கேட்கிறீர்கள் என்றார் .
அதற்கு அவர் நானும் பார்க்க தான் என்றார் .
ஞானி சொன்னார் " நான் ஒரு கண்ணாடியில் தான் அவரை பார்த்தேன் நீங்களும் போய் பாருங்கள்" என்றார் .
இப்பொழுது விடைகளுக்கு வருவோம் ...
ஆணும் பெண்ணும் சேர்ந்து பிறந்து பிறக்கும் நாம் இறைவனால்
கண்காணிக்க பட்டு பிறக்கிறோம் என்று அன்பர் கேள்வி சொல்கிறது ,
உண்மையில் நம்முடைய வினைய நம் ஆத்மாவில் சேர்த்து வைத்து அதன்படி தான் நாம் பிறக்கிறோம் .
மன நலம் பாதித்து,ஊனமாக ,குருடர்களாக பிறப்பதற்கு காரணம் இறைவன்
இல்லை
நாம் செய்தது(வினை ) நம் பிறப்பு .
வினை இருவகை படும் தெரிந்து செய்வது,அறியாமல் செய்வது .
இதை அறிந்து கொள்ள உதவுகிறது நம் மதத்தில் (ஹிந்து ) உள்ள சோதிட நூல்கள் .
இந்த அற்புத நூல்களை அந்த மஹாசிவசக்தியிடம் ஞானத்தால் சித்தர்கள்
பெற்று கர்ம வினைகளை காணவும் காரணம்
அறியவும் மனித குளத்தில் பிறந்த நமக்கு பூமியில் இருந்து விடுதலை பெற சொன்ன வழிகள் தான் சோதிடம் .
மேலும் சோதிடம் என்பது ஒரு guide என்று சொல்லலாம் .
உங்களுக்கு தேவையா வாங்கி கொள்ளுங்க அவசியம் இல்லையா வங்காதீர்கள்.
நம்முடைய பிறப்பு நம்முடைய வினைய பொருத்து மட்டுமே .
வினை முழுவதும் அழிந்து விட்டால் நமக்கு இங்கே ஏன் வேலை .
இறைவனை யார் சிந்திப்பர் ....
மனிதனின் வினையறுக்க தான் அனுமார் சாமீ ராமனிடம் முக்தி வேண்டாம்
ராம நாமத்தை சிந்தனை செய்து மக்களுக்கும் அதை சொல்லி தர பூமியில் வன சஞ்சீவியாக ,நித்ய சஞ்சீவியாக இருக்கிறார் என்று புரிந்து கொள்தல் வேண்டும் ...

No comments:

Post a Comment