Tuesday, September 1, 2015

பெருமாள், கருடாழ்வார் மீதமர்ந்து வீதி உலா வருவதன் சூட்சுமம்

பெருமாள், கருடாழ்வார் மீதமர்ந்து வீதி உலா வருவதன் சூட்சுமம் <<
உலகில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் காக்கும் கடவுளாகிய மகாவிஷ்ணுவின் வாகனமாகவும், கொடியாகவும் இருக்கும் சிறப்பினை பெற்றவர் கருட பகவான். பெருமாள் கோவில்களில் இவர் ‘பெரிய திருவடி’ என்று அழைக்கப்படுகிறார்.
விஷ்ணு தலங்கள் அனைத்திலும் கருவறைக்கு எதிராக தனிச்சன்னிதியில் வீற்றிருப்பார். கோவில் மதில்களில் நான்கு புறத்திலும், இவர் சிறகினை விரித்து பறக்க தயார் நிலையில் இருப்பதை காணலாம். கருடனை தன் வாகனமாக பெருமாள் ஏற்றபோது, ‘வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் இருப்பாய்’ என்று வரமளித்தார். பெருமாள் கோவில் பிரமோற்சவத்தின் போதும், கருட சேவையின் போதும், பல்வேறு விழாக்களின் போதும் பெருமாள், கருடன் மீது அமர்ந்து வீதி உலா வந்து அருள்பாலிப்பார்.
பெருமாள், கருடாழ்வார் மீது அமர்ந்து வீதி உலா வருவதில் ஒரு சூட்சுமம் அடங்கியுள்ளது. ‘கோவிலுக்கு வர இயலாத பக்தர்களுக்கு, அவர்கள் இல்லம் நாடி அருள்புரிய இறைவன் வருகிறான்’ என்பது தான் அந்த சூட்சுமம். கருட தரிசனம் சுப தரிசனமாகும். கருடன் மங்கள வடிவானவன். வானத்தில் கருடன் வட்டமிடுவதும், கத்துவதும் நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது. கோவில்களில் கும்பாபிஷேகம், யாகம், சிறப்பு வழிபாடுகள் நடக்கும் போது கோவிலுக்கு நேர் மேலே கருடன் வட்டமிடுவதை இன்றும் காணலாம்.
ஸ்ரீகருடாழ்வார் ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமி சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தார். பெருமாள் கோவில்களில் மூலவருக்கு முன்பாக நேராக எழுந்தருளி இருக்கும் இவரையே பக்தர்கள் முதலில் வணங்க வேண்டும். பக்தர்களுக்கு சிறிய துன்பம் ஏற்பட்டாலும் துயர் துடைத்து இன்பம் அருளி உரிய நேரத்தில் காப்பவர் இவர். கருட தரிசனம் பகை பிணி போக்கும். நிறை செல்வத்தை நல்கும்.

No comments:

Post a Comment