Wednesday, May 4, 2011

அக்னி நட்சத்திரம் பிறந்த கதை

அக்னி நட்சத்திரம் பிறந்த கதைஅக்னி நட்சத்திரம் 21 நாட்கள் வரை காணப்படும் என்பதால் அந்த நாட்களில் வெப்பத்தினால் ஏற்படும் நோய் தாக்காத வகையில் குளிர்ச்சியான பொருட்களை உண்ணவேண்டும். இதில் முதல் 7 நாட்கள் வெப்பத்தின் அளவு மிதமாகவும் பின் 7 நாட்கள் கடுமையாகவும், கடைசி 7 நாட்கள் உஷ்ணம் தணிந்தும் காணப்படும்.இது தோஷகாலமாக கருதப்படுவதால் ஏராளமானோர் ஆலயங்களுக்கு சென்று இறைவனை வழிபடுகின்றனர்.

சூரிய பகவான்

சித்திரை மாதம் முதல் மேஷராசியில் சூரியன் சஞ்சரிக்கிறார். எனவே மேஷ ராசியில் உள்ள அசுவினி, பரணி, கார்த்திகை போன்ற நட்சத்திரங்கள் அதற்குண்டான பலனை அனுபவிக்க வேண்டும் என்பது விதிக்கப்பட்டது. சித்திரை முதல்நாளில் அசுவினியில் நுழையும் சூரியன் பரணி நட்சத்திரத்தில் சஞ்சார காலம் முடிந்து கார்த்திகையில் தொடங்கும் காலமே அக்னி நட்சத்திரம் எனப்படுகிறது.

சந்திரனும், பூமியும் சூரியனுக்கு அருகில் இருப்பதனால் அக்னி நட்சத்திரத்தில்
வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காரணம் என்கிறது விஞ்ஞானம். ஆனால் புராணத்தில் அதற்கு சுவையான கதை ஒன்று உண்டு.

அக்னி நட்சத்திரம் பிறந்த கதை

கார்த்திகை நட்சத்திரத்திற்குரியவர் அக்னிபகவான். இவர் நெருப்பு ரூபமாய்
காணப்படுவதால், இதனையே அக்னி நட்சத்திரம் என்கின்றனர். முன்னொரு காலத்தில் பன்னிரெண்டு ஆண்டுகள் இடைவிடாது நடைபெற்ற சுவேதகி யாகத்தில் ஊற்றிய நெய்யினை உண்ட அக்னி தேவனுக்கு உடல் நலிவு ஏற்பட்டது. அதற்கு மருந்தாக காண்டவ காட்டை அழித்து உண்பதற்கு அக்னி தேவன் புறப்பாட்டார்.இதனை அறிந்து காண்டவ காட்டில் வசித்து வந்த உயிரினங்களும், தாவரங்களும், தங்களை காக்க
வேண்டும் என்று வருணபகவானிடம் வேண்டிக் கொண்டனர். வருணபகவானும், விடாது மழை பொழியவே அக்னியால் காட்டை எரிக்க முடியாமல் போனது.காட்டை எரிக்க தனக்கு உதவுமாறு மகாவிஷ்ணுவிடம் அக்னிதேவன் முறையிட்டதால் அவர், அர்ஜுனனை துணைக்கு அனுப்பி வைத்தார். அர்ஜுனனும், தனது அம்புகளினால் காட்டை
சுற்றி அரண் எழுப்பி தீ அணையாமல் எரியுமாறு பார்த்துக்கொண்டார். அப்போது அக்னிதேவனுக்கு திருமால் ஒரு நிபந்தனை விதித்தார்.

21 நாட்கள் மட்டுமே காண்டவ காட்டை எரிக்க வேண்டும் என்பதே அது. இதனை ஏற்று அக்னி தேவனும் 21 நாட்கள் மட்டுமே காட்டை எரித்துவிட்டு கிளம்பினார். இந்த நாளே அக்னி நட்சத்திர காலமாக கருதப்படுகிறது என்கின்றன புராணங்கள்..

அக்னி ரூபானை வழிபடுவோம்

அக்னி நட்சத்திரத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க அக்னி ரூபாமாய் இருக்கும்
சிவபெருமானையும், தீப்பொறியில் உதித்த முருகனையும், மீனாட்சி அம்மனையும் வழிபட வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

கார்த்திகை நட்சத்திரத்திற்கு உரிய அக்னி தேவனுக்கும் அபிஷேகம் செய்து குளிர்விக்க வேண்டும் என்கின்றன புராணங்கள்.

Monday, May 2, 2011

பாவங்களை கரைக்கும் - உன்னதமான சில புண்ணிய காரியங்கள்

பாவங்களை கரைக்கும் - உன்னதமான சில புண்ணிய காரியங்கள்


 பாவங்கள் செய்யத மனிதர்களே இல்லை. சந்தர்ப்பம், சூழ்நிலை அப்படி அமைந்துவிடுவது உண்டு. சற்று , சுமாரான நிலையை வாழ்வில் எய்தியவுடன், செய்த தவறுக்கு பரிகாரம் செய்ய  உள்மனசு துடிக்கும்.
சம்பந்தப்பட்டவர்களுக்கு நேரடியாக பரிகாரம் செய்ய முடியாத சூழ்நிலை இருந்தால், அவர்கள் கீழ்க்காணும் ஏதாவது ஒரு தானம் செய்து, மனம் திருந்தி வாழ்வது நல்லது . 

எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பிறருக்கு உணவளிப்பது (அன்னதானம்) புண்ணியங்களில் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

இருப்பவர்களுக்கு அன்னதானம் வழங்குவதை விட இல்லாதவர்களுக்கு/மனவளம் குன்றியவர்களைத் தேடிக் கண்டுபிடித்து வயிறு நிறைய உணவு அளித்தால் அனைத்து வகைப் புண்ணியமும் கிடைக்கும். சில தோஷங்களையும் நீக்கும்.

அன்னதானத்திற்கு அடுத்தபடியாக வஸ்திர தானம் (ஆடையை தானமாக வழங்குதல்), மாங்கல்ய தானம் (ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி செய்வது முன்னின்று செய்வது) சிறந்தவையாக கருதப்படுகிறது.
இவைகளை விட சிறந்த புண்ணியம் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் அனாதைப் பிணங்களை அடக்கம் செய்ய உதவலாம். இதனை செய்வதால் பிரம்மஹத்தி தோஷம் கூட விலகும் என சில ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது.

பசுவிற்கு பழங்கள் , அகத்திக்கீரை அளிப்பதும் - ஒரு சிறந்த புண்ணிய காரியம் ஆகும்.  பிராமண சமூகத்தில் - இன்னொரு மிகச்சிறந்த விஷயம் நடைமுறையில் இருக்கிறது. கோ தானம் என்று பெயர். ஆச்சார , அனுஷ்டானங்களில் ஈடுபாடுள்ள , சற்று வசதியுள்ள குடும்பத்தில் இது நடைமுறையில் உள்ளது.  அவர்கள் குடும்பத்தில் - தாயோ, தந்தையோ  இறந்து விட்டால்  அவர்கள் ஞாபகார்த்தமாக - ஆரோக்கியமான பசு ஒன்றை வாங்கி - ஒரு கோசாலைக்கு தானம் அளிக்கிறார்கள்.
இறந்துபோன அவர்கள் ஆத்மா சாந்தி அடைய , அந்த பசு கறக்கும் பாலில் - அதிகாலையில் - அந்த கோசாலை அருகில் இருக்கும் - சிவன் ஆலயத்திற்கோ , பெருமாள் ஆலயத்திற்க்கோ - அந்த பாலில் இருந்து அபிசேகம் செய்கிறார்கள். அந்த பசுவினை நல்ல முறையில் பராமரித்து , போஷிப்பது - அந்த கோசாலை உரிமையாளரின் கடமை ஆகும். அந்த பசுவினால் வரும் இதர வருமானம் முழுவதும் அவருக்கே.
சுமார் ஒரு வருடம், அவர்கள் முதல் திதி கொடுக்கும் வரை - நாள் தவறாது - இறைவனுக்கு பாலபிசேகம் செய்யும் வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. 
இதனால், இறந்து போனவரின் ஆத்மா சாந்தி அடைந்து - அந்த குடும்பத்திற்கு சகல ஐஸ்வர்யங்களும் தங்கு தடையின்றி கிடைக்க வலி ஏற்படுகிறது..
நீங்களும் இதைக் கடைபிடிக்க நினைத்தால் , வசதி வாய்ப்பு இருந்தால் - நீங்களும் செய்யலாமே ..!!கோசாலைக்கு கொடுக்க முடியவில்லையானாலும், தாமே பசுவை வளர்த்து , யார் மூலமாவது பாலபிசேகம் செய்யலாம். இல்லை இந்த கடமையை நிறைவேற்றக்கூடிய ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அளிக்கலாம்.

மந்திரங்கள் உச்சரிப்பதின் மகத்தான பலன்கள் :

மந்திரங்கள் உச்சரிப்பதின் மகத்தான பலன்கள் :  

மனிதனுக்கு உள்ள ஆறாம் அறிவைக் கொண்டு - அடுத்த நிலையை அறிய உணர்வதில் - ஒரு சீரான சப்த அதிர்வுகளுக்கு பெரும் பங்கு உண்டு. இதைப் போன்ற தேவதை வசிய சக்தியை உடையவை - மந்திரங்கள் என்று அழைக்கப் படுகின்றன. 

வேதத்தில் மந்திர சாஸ்திரம் முக்கிய பங்கு வகிக்கிறது. நடைமுறையில் மந்திரசாஸ்திரம் என்றால் தீய விளைவுகளுக்கு பயன்படும் விஷயமாக எண்ணுகிறார்கள். மந்திர சாஸ்திரத்தை சரியான முறையில் பயன்படுத்தினால் சிறந்த நிலையை அடையலாம். யோக சாஸ்திரம் பரமாத்மாவை அடையும் பல வழிகளை கூறுகிறது.

ஹத, ஞான, கர்ம , பக்தி மற்றும் மந்திர யோகம் எனும் ஐந்து பாதைகளைக் கொண்டு ஆன்ம தரிசனம் அடைய முடியும் என யோக சாஸ்திரம் கூறுகிறது. யோக சாஸ்திரத்தில் மந்திர யோகம் ஓர் அங்கம் என்பதின் மூலம் மந்திர சாஸ்திரத்தின் உயர்வை உணரலாம்.
அறியாமை கொண்ட மனதுடன் ஆராய்ந்தால் ஓர் எளிய வார்த்தைக்கு என்ன சக்தி இருக்க முடியும் என எண்ணத் தோன்றும். உண்மையில் மந்திரத்தின் வார்த்தையைக் காட்டிலும் அதை பயன்படுத்தும் விதம் [ப்ரயோகம்] மற்றும் பயிற்சியே [சாதனா] முக்கியம்.

மந்திர உச்சாடனம் செய்யும் பொழுது நமது உடலில் உள்ள 72,000 நாடிகளில் சலனம் ஏற்படுகிறது. பிரபஞ்ச ஆற்றலில் சில விளைவுகளை ஏற்படுத்தும் இந்த சலனம் முடிவில் நாம் அடையவேண்டிய இலக்கை அடைகிறது.
மந்திர ஜெபம் மனதை ஒருமுகப்படுத்துகிறது. மனதில் ஏற்படும் சலனத்தை தெளிவாக்குகிறது.
கலங்கலான நீர் இருக்கும் பாத்திரத்தில் ஒரு நாணயத்தை இடும்பொழுது அனைத்து தூசும் அந்த நாணயம் இருக்கும் இடத்தை அடையும். நீர் தெளிவடையும். எப்பொழுதும் சலனம் கொண்ட நீர் போன்ற மனதில் மந்திர ஜெபம் செய்யும் பொழுது எண்ண அலைகள் மந்திரத்துடன் அடங்கி மனம் தெளிவடையும்.

ஞான யோகிகள் மந்திர ஜெபத்தை ஆதரிப்பதில்லை. ஆத்ம விசாரம் செய்வதை விட்டு மந்திர ஜெபம் செய்வதால் என்ன பலன்? என்பது அவர்களின் கருத்து. மனம் ஒடுங்கியதும், மனதின் மூலத்தைக் காண்பதே மந்திர ஜெபத்தின் நோக்கம். ஞான விசாரத்தின் நோக்கமும் இதுவே. அதனால் தான் யோக முறையில் ஜெபயோகம் முக்கியத்துவம் பெறுகிறது.

ஜெபம் என்றால் தொடர்ந்து உச்சரிப்பது என பொருள்படும். ஜெபம் மற்றும் அஜெபம் என இரு தன்மைகளை கொண்டது, மந்திரஜெபம். தூய்மையான மனதுடன் மந்திரத்தை உச்சரிப்பது மந்திர ஜெபம் எனப்படும். தொடர்ந்து மந்திர ஜெபம் செய்த பின்பு வேறு நடவடிக்கைகள் செய்யும் பொழுது நம்மை அறியாமல் மனம் ஜெபம் செய்து கொண்டிருக்கும். இது அஜெபம். அதாவது சமஸ்கிருத சொல்லான அஜெபம் ஜெபிக்காத ஜெபம் என மொழி பெயர்க்கலாம்.
உலகில் உள்ள அனைத்து மதத்திலும் மந்திர ஜெபம் உண்டு என்பது இதன் சிறப்பை பறைசாற்றும். எனவே மந்திர ஜெபம் சமயங்கள் கடந்த இறைநிலை காட்டும் கருவி எனலாம்.

என்ன மந்திரம் ஜெபிக்கலாம் ?

வேதத்தில் காணப்படும் அனைத்து வாசகங்களும் மந்திரம் என்றே அழைக்கப் படுகிறது. அதில் சக்தி வாய்ந்த சில வார்த்தைகள் இணைவு பெற்று காணப்படுவதால் வேதம் உயர்வான மந்திரம் என அழைக்கப்படுகிறது. இதை தவிர்த்து சில சமஸ்கிருத வாசகங்களுக்கு உள்ள சக்தியை கண்டறிந்த நமது முன்னோர்கள் அவற்றை மந்திரமாக உச்சாடனம் செய்து முக்தி அடைந்தார்கள். இது போன்ற சில வார்த்தைகளுக்கு அர்த்தம் கிடையாது. மந்திரத்திற்கு அர்த்தம் தேவையில்லை. மந்திரத்தின் சக்தியே முக்கியமானது. மந்திரம் பல வகையாக கையாளப்படுகிறது.
பீஜமந்திரம் , தேவதாமந்திரம் , பாராயணம் என இவற்றை எளிமையாக வகைபடுத்தலாம். பீஜமந்திரம் என்பது ஓர் வார்த்தை கொண்டது. முன்பு சொன்னது போல பீஜ மந்திரத்திற்கு அர்த்தம் தேவையில்லை. "பீஜ" என்றால் விதை எனப்படும். ஓர் சிறு வித்தாக ஒலிக்கும். பீஜ மந்திரம் ஒரு மிகப்பெரிய மரம் போன்று வளர்ந்து ஆன்மீக புரட்சியை ஏற்படுத்தும். "ரீம்" எனும் பீஜ மந்திரத்தை உச்சரித்த வண்ணம் பறந்து, தேன் சேகரிப்பதால்தான், தேனியின் எச்சில் கூட புனிதமாக கருதப்படுகிறது.
தேவதா மந்திரம் என்பது குறிப்பிட்ட கடவுளை உருவகப்படுத்தும் மந்திரம். இது சில வரி கொண்டதாக இருக்கும். காயத்ரி மந்திரம் மற்றும் மஹா மந்திரங்கள் இதில் அடங்கும்.
பாராயண மந்திரம் என்பது பல வரிகள் கொண்ட நீண்ட சொற்றொடர்கள் கொண்டது. விஷ்ணு சகஸ்ர நாமம், அஷ்டோ த்ர நாமாவளி, ருத்ரஜெபம் என இதற்கு உதாரணம் கூறலாம். மந்திரத்தை நாமே தேர்ந்தெடுத்து ஜெபம் செய்யலாம் என பலர் கூறுகிறார்கள். ஆனால் சிறந்த குருவின் மூலம் மந்திர தீட்சை பெற்று ஜெபம் செய்வதெ நன்று. இதற்கு பல காரணம் உண்டு.

மந்திரம் உச்சரிக்கும் முறை, அதை உச்சாடனம் செய்யுமிடம், உச்சாடனம் செய்பவரின் தன்மை அறிந்து குரு, தீட்சை அளிப்பதால் மந்திர தீட்சை குருவின் மூலம் பெறுவது சிறந்தது எனக் கூறலாம்.
மந்திரத்தை தவறாக உச்சரிக்க முடியுமா? என உங்களுக்கு சந்தேகம் வரலாம்.
இதற்கு கும்பகர்ணனின் கதையை உதாரணமாக கூறலாம். தனது தவ வலிமையால் பிரம்மனிடம் இறப்பற்ற நிலையை கேட்க கடுமையான தவம் இருந்தான், கும்பகர்ணன். இராவணனின் சகோதரன் இந்த வரத்தைப் பெற்றால் அனைத்து உலகத்திலும் துன்பத்தை விளைவிப்பான் என தேவர்கள் அச்சம் கொண்டனர்.

பிரம்மன் கும்பகர்ணன் முன் தோன்றி "உனக்கு என்ன வரம் வேண்டும் ?" என கேட்டவுடன் "நித்ய தேவத்துவம் " என்று கேட்பதற்கு பதிலாக "நித்ர தேவத்துவம்" என தவறுதலாக கூறினான். இது போன்று தவறுதலாக உச்சரித்ததால் இறவா வரம் பெறுவதற்கு பதிலாக தூங்கும் வரத்தைப் பெற்றான். சில சமஸ்கிருத மந்திரங்கள் சரியாக உச்சாடனம் செய்யவில்லை என்றால் பலன் அளிக்காது. குருதீட்சை அளிக்கும் பொழுது இதை சரியாகப் பயன்படுத்த துணைபுரிவார்.

மேலும் ஒருவரின் தன்மையைப் பொறுத்தும் மந்திரம் வேறுபடும். இதற்கு அதிகாரத்துவம் என்பார்கள். குரு ஒருவனுக்கு இந்த மந்திரம் முக்தி அளிக்குமா என பார்த்து, இதற்கு சரியான அதிகாரியா என பார்த்து தீட்சை அளிப்பார்.

கடன் கழுத்தை நெறிக்கிறதா? உங்களை தப்புவிக்க உதவும் ஸ்லோகம் ...



எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் , ஏழரை சனி நடந்து கொண்டு இருந்த போது , தனது முப்பது வருட சேமிப்பை - சுமார் 50 லட்சங்களை, தனி தொழில் தொடங்குகிறேன் என்று ஆரம்பித்து , அத்தனையும் தொலைத்தார்.. அவரது வாழ்க்கை சுமார் முப்பது வருடம் பின் தங்கி விட்டது.. அதற்கு முன்பு வரை , தெய்வ நம்பிக்கை அவருக்கு அதிகம் கிடையாது. அவரது ஜாதகத்தை நன்றாக ஆராய்ந்து , நாம் கூறிய பரிகாரங்களை முறைப்படி செய்து,  இந்த ஸ்லோகத்தை மனமுருக , 108 முறை தினமும் துதித்து , வேண்டி - இன்று அவரது ஒரு நிலத்தை விற்றதின் மூலம் , முழுவதுமாக மீண்டு விட்டார்.

இது முழுக்க, முழுக்க - உங்களை கடன் தொல்லைகளில் இருந்து தப்புவிக்க உதவும் ஸ்லோகம். கீழே " யூ ' டியூப் இணைப்பையும் கொடுத்துள்ளேன்..  உச்சரிப்பு தெளிவாக இருக்கிறதா என்று உங்களுக்கு சரி பார்க்க உதவும்

கடன் உங்களுக்கு வரவே வராமல் தடுக்க , புதன் கிழமைகளில் , புதன் ஹோரைகளில் ( காலை : ஆறு மணியில் இருந்து ஏழு மணி வரை ; இரவு எட்டு மணியில் இருந்து 9 மணி வரை ) இந்த ஸ்லோகத்தை கூறி வழிபாடு செய்து வரவும்..

ருண விமோசன - நரசிம்ஹா ஸ்தோத்திரம்..

தேவதாகார்ய ஸித்யர்த்தம் ஸ்பாஸ்தம்ப ஸமுத்பவம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே          1.

லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வரதாயகம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே          2.

ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ரப்ஜாயுத தாரிணம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே          3.

ஸ்மரணாத் ஸர்வ பாபக்நம் கத்ரூஜ விஷநாசநம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே          4.

ஸிம்ஹநாதேன மஹதா திக்தந்தி பயநாசநம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே          5.

ப்ரஹ்லாத வரதம் ஸ்ரீசம் தைத்யேச்வர விதாரிணம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே          6.

க்ரூரக்ரஹை: பீடிதாநாம் பக்தாநா மபயப்ரதம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே           7.

வேதவேதாந்த யஜ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதி வந்திதம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே           8.

ய இதம் படதே நித்யம் ருணவிமோசந ஸம்ஜ்ஞிதம்
அந்ருணீ ஜாயதே ஸ்த்யோ தநம் சீக்ரமவாப்நுயாத்            9.

குழந்தை வரம் பெற விரும்பும் தம்பதியினருக்கு

குழந்தை வரம் பெற விரும்பும் தம்பதியினருக்கு


ஒவ்வொரு தமிழ்மாதமும் அதிகபட்சமாக இரு முறை சுவாதி நட்சத்திரம் தலா ஒரு நாள் வரை நிற்கும்.அப்படி நிற்கும் நாளன்று,தம்பதிகள் தாம்பத்திய உறவில் ஈடுபட்டால்,நீண்டகாலமாக குழந்தைச்செல்வம் இல்லாதவர்களுக்கு கருத்தரிக்கும் வாய்ப்புகள் அதிகமாகும்.

இதே சுவாதி நட்சத்திரத்தன்று,திருவாலங்காட்டுக்குச் சென்று சிவபெருமானை வழிபட்டால்,களத்திரதோஷம்,புத்திர தோஷம் நீங்கும். மந்திரபாதிப்பு எனப்படும் அபிசாரப்பிரயோகம் நீங்கிவிடும்.

திருவாதிரை நட்சத்திரம் நிற்கும் நாட்களில்,சிவபெருமானை வணங்கி,மருத்துவ சிகிச்சையை துவக்கினால்,எந்த நோயாக இருந்தாலும் விரைவில் குணமாகும்.
இந்த நட்சத்திரம் நிற்கும் நாளில்,பாம்புக்கடி,விஷக்கடிக்குரிய மந்திரங்களை அதிகமான எண்ணிக்கையில் ஜபித்தால்,எளிதில் சித்தி பெறலாம்.
உங்களுக்கு அல்லது உங்கள் அன்புக்குரியவர்களுக்கு பேய் பிசாசு தொல்லைகள் இருக்குமானால்,நீங்கள் திருநாகேஸ்வரம் அல்லது சிதம்பரம் அல்லது திருவாலங்காடுக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச் சென்று அவர்களின் பெயரில் அர்ச்சனை செய்தால்,பேய் பிசாசுத்தொல்லைகள் நீங்கும்.
சதயம் நட்சத்திரம் நிற்கும் நாட்களில் சிவாலயங்களில் இருக்கும் காலபைரவருக்கு மண்விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி வழிபட, மூட்டுவலி,கைகால் வலிகள் நீங்கும்.மாந்திரீகப்பாதிப்பும் நீங்கும்.

"ஏழரை சனி" னா என்ன ? அதுக்கு என்ன செய்யனும்?

"ஏழரை சனி" னா என்ன ? அதுக்கு என்ன செய்யனும்?



ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவியில்
இல்லாதவன், புத்திசாலி, முட்டாள் என்ற வித்தியாசம் எதுவும் சனிக்குக் கிடையாது!
துவைக்க வேண்டிய ஆளைத் துவைத்து , முறுக்கிப் பிழிந்து,  காயப்போட்டு, அயர்ன் பண்ணி மடித்து அலமாரியில் வைத்து விட்டுப் போய்விடுவார் சனீஸ்வரன்.

பல காரியங்கள் கண் இமைக்கும் நேரத்தில் நடந்து விடும்.

இதற்கு உதாரணமாக பல விபத்துக்களைச் சொல்லலாம். எத்தனை விபத்துக்களில்
எத்தனை பேர் உருவம் தெரியாமல் போயிருக்கிறார்கள்?

அதே போல எவ்வளவு பெரிய ஆள் என்றாலும் அதற்குரிய நேரம்வந்து விட்டால் என்ன நடந்தது என்று நினைக்கு முன்பே எல்லாம் நடந்து
முடிந்திருக்கும்.


விபத்து என்றில்லை. வாழ்க்கையில் பலவித இன்பங்களையும், துன்பங்களையும்
நமது ஜாதகப்படி அளந்து கொடுத்துவிட்டுப்போகிறவர் அவர்தான்.

ஏழரைச் சனி என்றால் என்ன?

ஒருவரின் சந்திர ராசிக்கு, முன் ராசியிலும், சந்திர ராசியிலும், அதற்கு அடுத்த
ராசியிலும் சனீஸவரன் சஞ்சாரம் செய்யும் காலமே ஏழரைச் சனியாகும்!

அந்த மூன்று வீடுகளில் தலா இரண்டரை வருடங்கள் வீதம் மொத்தம் ஏழரை ஆண்டுகள் அவர் வந்து (அழைக்காத) விருந்தாளியாகத் தங்கிவிட்டுப் போகும் கால கட்டமே ஏழரைச்
சனியாகும்.

அதென்ன இரண்டரை வருடக் கணக்கு?

அவர் வானவெளியில் எல்லா ராசிகளிலும் ஒரு ரவுண்டு அடித்து சுற்றிவரும் மொத்த காலம் 30 ஆண்டுகள் ஆகும். அதை ராசிக் கணக்கிற்குக் கொண்டு வர 30 வருடங்கள் வகுத்தல் 12 ராசிகள் = இரண்டரை ஆண்டுகள்.


எத்தனை முறை அவர் வலம் வருவார்?

80 அல்லது 90 வயதுவரை ஒருவருக்கு ஆயுள் என்றால், மூன்று முறை அவர்
விருந்தினராகத் தங்கிவிட்டுப்போவார்.

தொல்லைகள் ஒரே மாதிரியாகவா இருக்கும்?

இல்லை! வேறுபடும்!
முதல் சுற்று: மங்கு சனி.மங்கு என்பதற்கு மங்கிப் போகுதல் என்று பொருள்
அடுத்த சுற்று: பொங்கு(ம்) சனி
மூன்றாவது சுற்று: அந்திம காலச் சனி!

இவற்றுள் முதல் சுற்றுதான் மிகவும் மோசமானது!

சிலர் பிறக்கும்போதே ஏழரைச் சனியுடன் பிறப்பார்கள்.

குழந்தைகளின் ஜாதகம் 12 வயதுவரை வேலை செய்யாது. அவர்களுக்கு
அவர்களுடைய பெற்றோர்களின் ஜாதகப்படிதான் பலன்கள்.

ஒரு குழந்தை அந்த வயதிற்குள் ஏழரைச் சனியின் பிடியில் அகப்பட்டால்,
அந்தக் குழந்தைக்கு எதுவும் தெரியாது. அதனுடைய அவதிகளைப் பெற்றோர்கள்
தான் அனுபவிக்க நேரிடும்.

அதற்கு அடிக்கடி உடல் நலம் குன்றி பெற்றோர்களை அவதிப்பட வைக்கும்.

பன்னிரெண்டு வயதிற்கு மேல் சனிப்பிடித்தால் குழந்தையின் கவனம் சிதறும்.
சரியான கவனத்தைப் படிப்பில் செலுத்தாது.பத்து, ப்ளஸ் டூ வகுப்பில் பெயிலாகும் குழந்தைகளில் பெரும்பாலோனருக்கு ஏழரைச் சனி நடந்து கொண்டிருக்கும்.

அதென்ன  பெரும்பாலோர்கள் என்று கேட்கதீர்கள். சிலருக்கு படிப்பு, மற்றும் வித்தைக்குரிய கிரகமான புதன் ஜாதகத்தில் பலவீனமாக இருந்து அதனால் அவர்கள் தோல்வியுற நேரலாம்.


ஏழரைச் சனியின் முதல் பகுதியை (முதல் இரண்டரை வருடங்களை) விரையச்
சனி என்பார்கள் கோச்சாரப்படி சந்திர ராசிக்கு அது 12ஆம் இடம். ஆகவே
அது விரையச் சனி காலம். பண நஷ்டம், காரிய நஷ்டம், உடல் உபாதைகளால்
நாள் கணக்குகள் நஷ்டம் என்று நஷ்டமாகவே அக்காலம் கழியும்.

அடுத்த பகுதியை (அடுத்த இரண்டரை வருடங்களை) ஜென்மச் சனி என்பார்கள்.
அதாவது ராசியைக் கடந்து செல்லும் காலம். அந்தக் கால கட்டங்களில் ஏகத்துக்கும்
மனப் போராட்டமாக இருக்கும். மன உளைச்சல்களாக இருக்கும்.

அடுத்த பகுதியை (அடுத்த இரண்டரை வருடங்களை) கழிவுச் சனி என்பார்கள்.
அந்தக் காலகட்டம், கடந்து போன ஐந்தாண்டுகளை விடச் சற்று தொல்லைகள்
குறைந்ததாக இருக்கும்.


அந்த முதல் பகுதியான விரையச் சனி நடக்கும் காலத்தில் நடக்கும் திருமணங்கள்
சோபிப்பதில்லை. தம்பதிகளுக்குள், பிரிவு, பிரச்சினை என்று போராட்டமாக
இருக்கும். விவரம் தெரிந்தவர்கள் தங்கள் குழந்தையின் திருமணத்தை விரையச்
சனியின் காலத்தில் நடத்தி வைக்க மாட்டார்கள்.

இரண்டாவது சுற்றில் (அதாவது பொங்கு சனியில்) ஜாதகனைச் சனீஷ்வரன்
கைதூக்கிவிடுவான்.  பல கஷ்டமான அனுபவங்களைக் கொடுத்த பிறகுதான் தூக்கி உட்காரவைப்பான்.

மூன்றாவது சுற்று அந்திம காலம். ஜாதகனின் ஆயுள் முடியும் நேரம் என்றால் சனி
மேலே அனுப்பி வைத்து விடுவார்.


அதனால் கடைசி சுற்றுச் சனி என்றால் எல்லோரும் பயம் கொள்வார்கள். ஆனால்
அது எல்லோருக்கும் பொதுவானதல்ல! ஒருவனின் ஆயுள் எப்போது முடியும்,
எந்த தசா புத்தியில் அது வரும் என்பது எட்டாம் பாவப் பாடத்தில் வரும்.
அப்போது அதைத் தெரிந்து கொள்ளுங்கள். அதன்படிதான் மூன்றாவது சுற்றில் வரும்
சனி அனுப்பிவைப்பார். இல்லையென்றால இல்லை! மூன்று சுற்றுக்களையும்
கடந்து வாழ்ந்தவர்கள், வாழ்கின்றவர்கள் நிறைய உண்டு!


அஷ்டமச் சனி என்பது , எவர் ஒருவர் ராசிக்கு எட்டாம் இடத்தில் சனி இருக்கிறாரோ , அதை வைத்துக் கூறுவது.  இப்போது கண்ணியில் சனி இருப்பதால் , கும்பத்திற்கு இப்போது அஷ்டமம் நடந்து கொண்டு இருக்கிறது.

பொதுவாக அஷ்டமம் என்பது , ஏழரை ஆண்டு அனுபவிக்கும் தொல்லைகளை அந்த இரண்டரை வருடத்திலே கொடுத்துவிடும்.

இதனால் சனி பகவானின் கொடுமையில் இருந்து நீங்கள் தப்பிக்க , முடிந்தவரை நீங்கள் செய்யும் தவறுகளை திருத்திக் கொண்டு , இறை வழிபாடு முறைப்படி செய்தலே. இல்லையென்றால் மிக சிரமமாகத்தான் உணர்வீர்கள்...

சக்தி பீடங்கள்

அண்ட சராசரங்களுக்கும் அதிபதியாய் திகழக் கூடியவன் சிவபெருமான். திருமாலும் பிரம்மனும் அடி முடி காண முயன்ற போது ஜோதி வடிவாய் நீண்டு வளர்ந்து அவர்களை பிரமிக்க செய்தவன். இவ்வாறு அகில லோகத்திற்கும் நாயகனாக விளங்கக் கூடிய சிவபெருமான் தனக்கு மருமகனாக வர வேண்டும் என்று  ஆசை கொண்டான் ஒரு மன்னன். அவன் பெயர் தட்சன்.
தன்னுடைய ஆசையை நிறைவேற்ற எண்ணம் கொண்ட தட்சன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தான். அவனுடைய தவத்திற்கு இரங்கி வந்த சிவபெருமான் வேண்டிய வரங்களை கேள் என்று அவனிடம் கூறினார். தாங்கள் எனக்கு மருமகனாக வேண்டும். இதுவே  நான் விரும்பும் வரம் என்று தட்சன் கூறினான். கேட்டதை கேட்டபடியே கொடுக்கக் கூடிய எம்பெருமானாகிய சிவபெருமான் அப்படியே ஆகட்டும் என்று கூறி மறைந்தார்.
அதன் காரணமாக தட்சனுக்கு தாட்சாயணி என்ற பெயரில் ஒரு மகள் தோன்றினாள். அவளை சீரும் சிறப்புமாக வளர்த்த தட்சன் உரிய பருவம் வந்ததும் சிவபெருமானுக்கு மணமுடித்தான். சிவபெருமான் தனக்கு மருமகனாக வரவேண்டும் என்று தட்சன் ஆசைப்பட்டது உண்மையான அன்பின் காரணமாகவா? அதுதான் இல்லை அகில லோகத்திற்கும் அதிபதியாக விளங்கக்கூடிய சிவபெருமான் தனக்கு மருமகனாகி விட்டால் எல்லோரும் தனக்கு அடங்கி நடக்கக்கூடியவர்களாக ஆகிவிடுவார்கள் என்று நினைத்துதான் அவன் அந்த வரத்தினைக் கேட்டான்.

அனைத்தும் அறிந்த சிவபெருமானுக்கு இது தெரியாமல் போகுமோ? அவனுடைய ஆணவப் போக்கை புரிந்து கொண்ட அவர் எவரிடமும் சொல்லாமல் தாட்சாயணியை அழைத்துக் கொண்டு கைலாயம் போய் விட்டார். மாமனார் என்ற மரியாதை வைக்காமல் அவர் தாட்சாயணியை அழைத்துக் கொண்டு போய்விட்டதாக நினைத்தான் அவன். அதன் காரணமாக எம்பெருமானாகிய சிவபெருமானையே எதிரியாக நினைத்தான். அதன் காரணமாக ஒரு பெரிய யாகத்தை அவன் தொடங்கினான். சகல தேவர்களுக்கும் அழைப்பு அனுப்பினான்.
தேவர்களுக்கெல்லாம் தேவனான மகாதேவனுக்கு மட்டும் அழைப்பு இல்லை. யாகம் தொடங்கும் நாளும் வந்தது. சகல தேவர்களும் அந்த கூட்டத்தில் குவியத் தொடங்கினர். தாட்சாயணி யாகத்துக்குச் சென்று வர சிவபெருமானிடம் அனுமதி கேட்டாள். மதியாதார் தலைவாசல் மிதியாதே என்றார் மகாதேவன். ஐயனே யாகத்திற்கு செல்ல எனக்கு விருப்பம் இல்லை. தட்சனின் தவறினை சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்த எனக்கு ஒரு சந்தர்ப்பத்தை தாங்கள் எனக்கு தர வேண்டும். சென்று வர அனுமதியளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள் தாட்சாயணி. பிறைசூடனாகிய எம்பெருமான் அதனை மறுத்து பேசுகிறார்: தாட்சாயணி சகல தேவர்களுக்கும் அழைப்பு அனுப்பியுள்ளான் அந்த தட்சன். வேண்டும் என்றே எனக்கு அழைப்பு அனுப்பவில்லை அவன் அழியும் காலம் நெருங்கிவிட்டது. அழிய போகிற ஒருவனை நல்வழிப்படுத்தப் போகிறேன் என்கிறாய். அது உன்னால் முடியாது. நீ போக வேண்டாம். போய் அவமானம் அடைய வேண்டாம் என்று கூறுகிறார்.
தாட்சாயணி விடவில்லை முயற்சி செய்து பார்க்க விரும்புகிறேன் தாங்கள் அதற்கு அனுமதி தந்தருள வேண்டும் என்று மீண்டும் கூறத் தொடங்கினாள். பிறந்த வீட்டார் அநியாயக்காரர்களாக இருந்தாலும் புகுந்த வீட்டில் அவர்களைப் பற்றி விட்டுக்கொடுக்காமல் பேசுவது பெண்களின் வழக்கம் அகிலாண்ட நாயகனின் துணைவியான தாட்சாயணியும் அதற்கு விதிவிலக்காக இருக்க முடியாதல்லவா?

அதனை புரிந்து கொண்ட எம்பெருமான் போ என்று வெறுப்புடன் கூறினார். தாட்சாயணி யாக சாலைக்கு வந்தாள் தட்சனைப் பார்த்து அவள் பேசுகிறாள் தந்தையே.. மாமன் வீட்டில் விழா என்றால் முதல் அழைப்பு மருமகனுக்குத்தானே? சாதாரண குடிமகனுக்கு தெரிந்த இந்த நீதி உங்களுக்கு தெரியவில்லையா? என்றாள். அதைக் கேட்ட தட்சன் அடங்கா சினம் கொண்டான். என்னை மதிப்பவர்களை நான் மதிப்பேன். என்னை மதிக்காதவர்களை எதிர்க்க தயங்க மாட்டேன் என்று இருமாப்புடன் கூறினான் அவன்.
அதனைக் கேட்ட தாட்சாயணி கடுமையுடன் பேசுகிறாள். சிவபெருமான் உங்கள் மருமகன் என்று குறுகிய எண்ணத்தோடு நோக்க வேண்டாம். அகில லோகத்துக்கும் அதிபதி அவர். அவரை அவமதித்து அவனிலே வாழ முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள். அவிர்பாகம் அளித்து ஆணவத்தை விடுங்கள் என்றாள். தட்சனின் கோபம் தலைக்கேறியது. சுடுகாட்டில் சுற்றித் திரியும் பித்தன் எனக்கு மருமகனும் அல்ல நீ எனக்கு மகளும் அல்ல. அழையாத வீட்டுக்கு வந்த உன்னை யாரும் எதிர்கொண்டு அழைக்கவில்லை. போய்விடு என்று கூச்சலிட்டான் ஆத்திரம் அவனது அறிவை மறைத்தன. சுடுகாட்டில் சுற்றித்திரியும் பித்தன் பேயன் என்றெல்லாம் எம்பெருமானை சாடினான். தட்சனின் வார்த்தகளைக் கேட்ட தாட்சாயணி எரிமலையாகிறாள்.

அவளுடைய கடும் கோபத்திலிருந்து உருவமற்ற காளி உருவெடுததாள் அதேசமயம் சிவபெருமானின் கோபததிலிருந்து வீரபத்திரன் தோன்றினான். சிவபெருமான் வீரபத்திரனைப் பார்த்து கூறுகிறார் வீரபத்திரா தட்சன் நமக்கு அவிர்பாகம் கொடுக்க மறுத்தால் அவனையும் யாகத்தையும் அழித்து வருக என்றார். எம்பெருமானின் கட்டளையை ஏற்ற வீரபத்திரன் வேகமாக யாக சாலைக்கு வந்து , "ஏ தட்சனே அகிலாண்ட நாயகனான ஆதிசிவனுக்கு அவிர்பாகம் அளிக்காமல் நீ யாகத்தை நடத்த முடியாது. அறியாமை காரணமாக யாகத்தை தொடங்கியிருக்கிறாய். மன்னிப்பு கேட்டுக் கொண்டு ஆண்டவனை பணிந்தால் உனக்கு உயிர் பிச்சை கொடுக்கிறேன். இல்லையேல் உன்னையும் உன் யாகத்தையும் உருத்தெரியாமல் ஆக்கிட உத்தரவு பெற்று வந்திருக்கிறேன். உன் முடிவை நீயே முடிவு செய்துகொள்" என்றான்.
வீரபத்திரன் கூறியும் தட்சனுக்கு புத்தி வரவில்லை. ஆணவத்துடன் வார்த்தைகளை கூறினான். உடனே காளியாக தோன்றிய தாட்சாயணியும் வீரபத்திரனும் சேர்ந்து யாகத்தை நிர்மூலமாக்கினார்கள். யாகத்திற்கு வந்திருந்த தேவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். தட்சனின் தலை கீழே உருண்டது. சற்று நேரத்திற்கு முன்வரை ஆணவமாக பேசிய அவன் தலை கீழே உருண்டது.
தட்சனாகிய கொடியவன் வளர்த்த அந்த உடலை அவள் வெறுத்தாள். அகிலாண்ட நாயகனை அவமதித்தவனின் மகள் என்று உலகம் கூறுவதை அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதன் காரமணமாக தன் உடலை அவள் தீக்கிரையாக்கினாள். தீயிலே கருகிய அவள் உடலை கண்டு சிவபெருமான் துயரம் கொண்டு அவளின் உடலை தோளில் தாங்கி ருத்ர தாண்டவம் ஆடினார். அவருடை ஆட்டத்தில் அண்ட சராசரங்களும் ஆடின. அனைத்து உயிர்களும் என்ன நடக்குமோ என்று அதிர்ச்சி அடைந்தன.

அவருடைய ஆட்டத்தை நிறுத்த திருமால் தன்னுடைய சக்ராயுதத்தை ஏவினார். அந்த சக்கரம் தாட்சாயணியின் உடலினை சிதைத்து துண்டு துண்டுகளாக்கியது. சிதறிய அந்த துண்டுகள் பாரத தேசம் முழுவதும் விழுந்தன. அந்த துண்டுகள் விழுந்த இடங்களே சக்தி பீடங்களாகவும் அன்னையின் ஆலயங்களாகவும் இன்று திகழ்ந்து கொண்டிருக்கின்றன.
பிறகு, அந்த மகேசன் அன்னையை திரும்பவும் வரவழைத்தார்..
  அந்த 51 இடங்களிலிருந்து , அன்னை பராசக்தி யின் ஆத்ம சக்தி , பல்கிப்  பெருகி - இன்றும்  உலகை, நாடி வரும் பக்தர்களை  - காத்துக் கொண்டு இருக்கிறது.. !!
பக்தர்களின் துயர் துடைக்க , நமக்கு ஒரு வழியை ஏற்படுத்த - அன்னை நடத்திய ஒரு திருவிளையாடல் இது.. ..!!

சரபேசர் அவதார நோக்கம் என்ன? அவரை வணங்குவதால் என்ன பலன்கள்

சரபேசர் அவதார நோக்கம் என்ன? அவரை வணங்குவதால் என்ன பலன்கள் என்று காண்போம்..
ஹிரண்யனை வதம் செய்வதற்காக நரசிம்மர் அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு , வதம் முடிந்த பின்னரும் தன்னுடைய உக்கிரத்தை அடக்க முடியாமல், இருக்க அவன் மார்பில் வாசம் செய்யும் அந்த "ஸ்ரீ" கூட நரசிம்மரின் உக்கிரத்தைத் தாங்க முடியாமல் தவித்தாள். அண்ட சராசரங்களும் நடுங்கின அவரின் கோபத்தில். செய்வதறியாது திகைத்த தேவாதி தேவர்கள் சிவபெருமானைச் சரணடைய அவர் தான் ஒருத்தன் தான் இவரை அடக்கவல்லவன் என்று சொல்லி சரபரின் தோற்றத்தில் உருமாறியதாகக் காளிகா புராணம் சொல்லுகிறது.

இந்த சரபரின் தோற்றம் மிகவும் விசித்திரமானது. மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவை தான் சரபர். தங்க நிறப் பறவையின் உடலும், மேலே தூக்கிய 2 இறக்கைகளும், 4 கால்கள் மேலே தூக்கிய நிலையிலும், 4 கால்கள் கீழேயும், மேலே தூக்கிய ஒரு வாலும், தெய்வீகத் தன்மை கொண்ட மனிதத் தலையும், அதில் சிங்க முகமும் கொண்ட ஒரு விசித்திரப் பிறவியாக உருமாறினார். இந்த அபூர்வப் பிறவி தோன்றியதும் போட்ட சப்தத்தில் நரசிம்மர் அடங்கியதாய்ச் சொல்வார்கள்.
சந்திரன், சூரியன், அக்னி ஆகியவை மூன்று கண்களாகவும், கூர்மையான நகங்களோடும், நாலு புறமும் சுழலும் நாக்கோடும், காளி, துர்க்கா ஆகியோரைத் தன் இறக்கைகளாகவும் கொண்டு வேகமாய்ப் பறந்து, பகைவர்களை அழிக்கும் இந்த சரபேஸ்வரரைப் "பட்சிகளின் அரசன்" என்றும் "சாலுவேஸ்வரன்" என்ற திருநாமத்துடனும் குறிப்பிடுகின்றனர். இவரின் சக்திகளாய் விளங்குபவர்கள் ப்ரத்யங்கிரா, மற்றும் சூலினி. இதில் தேவி பிரத்யங்கிரா சரபரின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியதாகவும், இவள் உதவியுடன் தான் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கியதாகவும் சில குறிப்புக்கள் கூறுகின்றன. காஞ்சி புராணத்தில் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கப் பரமசிவன் வீரபத்திரரை அனுப்பியதாகவும், நரசிம்மம் ஆனது வீரபத்திரரைக் கட்டிப் போட்டுவிட்டு வேடிக்கை பார்த்ததாகவும், அந்தச் சமயம் சிவன் ஒரு ஜோதி ரூபமாக வீரபத்திரர் உடலில் புகுந்ததாகவும், உடனே சரபராக வீரபத்திரர் உருமாறி நரசிம்மத்தை அடக்கியதாகவும் கூறுகிறது. லிங்க புராணக் குறிப்புக்களும் இவ்விதமே குறிப்பிடுகிறது.
எப்படி இருந்தாலும் சரபேஸ்வரரின் சக்தி அளவிட முடியாதது. சத்ருக்களால் ஏற்படக் கூடிய பில்லி, சூன்யம், ஏவல் போன்றவற்றுக்கு மட்டுமில்லாமல் இவரைத் தரிசித்து முழு நம்பிக்கையுடன் பிரார்த்தித்து வந்தால் எல்லாவிதமான நோய்களையும் தீர்த்து வைப்பார் என்றும் கூறுகிறார்கள். 
இவரைக் "கலியுக வரதன்" என்றும் குறிப்பிடுகிறார்கள். "நரசிம்ம கர்வ பஞ்சக மூர்த்தி" என்றும் குறிப்பிடுகின்றனர். தற்சமயம் காணப்படும் சரபர் மூர்த்தங்கள் யாவும் பிற்காலச் சோழர் காலத்தில் வந்தவை எனவும் சொல்கின்றனர். பழைய தஞ்சை மாவட்டத்தில் இருந்த தாராசுரம், திருபுவனம் போன்ற ஊர்களில் உள்ள கோவில்களில் சரபரின் சிற்பங்கள் காணப் படுகிறது. இதில் திருபுவனம் கோவிலில் தனி சன்னதி இருக்கிறது.  சிதம்பரம் கோவிலில்  தனிச் சன்னதி உள்ளது.  

ஞாயிற்றுக் கிழமை , தின பிரதோஷ நேரம் வரும் ராகு கால வேளையில் - சரபேசர் வழிபாட்டில் , கலந்து கொள்ளுங்கள்...

ஞாயிற்று கிழமை - பிரதோஷம் வந்தால் , தவறாமல் பூஜையில் கலந்து கொள்ளுங்கள்..  அபரிமிதமான பலன்கள் ஏற்படும்..

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் , நவக்கிரக சந்நிதி அருகில் - சரபேசர் சிலை , தூணில் உள்ளது... மஞ்சள் அல்லது சந்தன காப்பு அணிந்து நீங்கள் வேண்டினால், கேட்டது கிடைக்கும்..
சரபேசரை வணங்கினால் வியாதிகள், மனக்கஷ்டங்கள், கோர்ட் விவகாரங்கள், பில்லி சூன்யங்கள், ஏவல், மறைமுக எதிரிகள் தொல்லை, திருஷ்டி தோசங்கள், சத்ரு தொல்லைகள், ஜாதக தோசங்கள், கிரக தோசங்கள் அனைத்தும் நீங்கும்.
கல்வி, ஆரோக்கியம், ஆயுள் விருத்தி , மனம் விரும்பும் படியான வாழ்க்கை, உத்தியோக உயர்வு போன்ற நினைத்த காரியங்கள் கைகூடும்.குழந்தை பேறு கிடைக்கும் கடன் தொல்லை நீங்கும்.

சில ஆன்மீக குறிப்புகள்:

சில ஆன்மீக குறிப்புகள்:

* தியானத்தின் போது மூளை அணுக்களின் பலம் கூடுகிறது. தினமும் பதினைந்து நிமிடங்களாவது தியானம் செய்ய வேண்டியது அவசியமாகும். காலையிலோ மாலையிலோ எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். தியானத்தின் போது அவசரம் இருக்கவே கூடாது. ஏதாவது ஒரு வேலையச் செய்ய மனதில் நினைத்துக் கொண்டு தியானம் செய்ய ஆரம்பிக்கக் கூடாது. உணவு உட்கொள்வதற்கு முன் செய்ய வேண்டும். உண்ட பின் மூன்று மணிநேர இடைவெளியின் பின் தியானம் செய்யலாம்.

* யார் வாழை இலையில் சாப்பிட்டு வருகிறார்களோ அவர்களுக்குத் தலைமுடி கறுப்பாகவே இருக்கும். சீக்கிரத்தில் நரைக்காது. வாழையிலையில் தனலஷ்மி வாசம் செய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. வறுமை, கஷ்டங்கள் நீங்க வேண்டுமானால் வாழை இலையிலேயே சாப்பிட வேண்டும். இப் பழக்கம் மேற்கொண்டவர்கள் லஷ்மி கடாட்சம் பெறுவார்கள் என்பது திண்ணம். அத்துடன் வாழை இலையில் சாப்பிடுவதால் முகம் பளபளப்பாகி அழகும் வசீகரமும் உண்டாகும். பித்த - சிலேட்டும வியாதிகள் தணியும். ( தற்போது வாழை இலை கிராம பகுதிகளில்தான் கிடைக்கின்றது, பண்டிகை நாட்களில் நகரத்தில் கிடைக்கின்றது. மேலைநாடுகளிலோ இலை கிடைப்பது இன்னமும் அரிது. ஆகையால் வாழை இலை கிடைக்கக் கூடியவர்கள் மட்டும் வாழை இலையில் உண்பது நன்று. இலை கிடைத்தும் உண்ணாது இருத்தல் போல் ஒரு அறிவற்ற செயல் வேறு எதுவும் இருக்கமுடியாது. இலை கிடைக்காதவர்கள் அவர்கள் முறைப்படியே உணவருந்தலாம். தவறில்லை.)

* சுமங்கலிப் பெண்கள் ஸ்நானம் செய்யும் போது வெறும் தலையில் குளிக்கக் கூடாது. சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில் பூசிக்கொண்டுதான் தலை முழுக வேண்டும்.

* துளசி மாடத்திலிருந்து பூஜைக்கு வேண்டிய துளசியை ஒடிக்கக்கூடாது. துளசி மாடம் பூஜைக்குரியது. பூஜைத் தேவைக்கு வேண்டிய துளசியை தனியாக வேறு துளசிச் செடிகளில் இருந்து பறிக்க வேண்டும்.

* சுபகருமங்களுக்கெல்லாம் முதல் தேவையான பொருள் மஞ்சள், மங்கல கருமங்களுக்கு சிட்டை எழுதும்போது முதலில் எழுதப்படுவது மஞ்சள்தான்.

* மஞ்சள் பூசிக்குளிப்பது சுமங்கலிகள் மரவு. மஞ்சள் பூசிக் குளித்துவர துர்நாற்றம், தூக்கமின்மை என்பன அற்றுப் போகும். முக வசீகரமுண்டாகும்.

* இல்லங்களில் காலை, மாலை மஞ்சள் நீர் தெளித்து வர லஷ்மி கடாட்சமுண்டாகும்.

* கணபதி, சூரியன், அம்பிகை, மஹாவிஷ்ணு, பரமசிவன் ஆகிய ஐந்து மூர்த்திகளையும் ஒரேயிடத்தில் வைத்துப் பூஜிப்பதே பஞ்சாயன பூஜையாகும்.

சூரியனால் உடலாரோக்கியம் பெற்று அம்பிகை ஆகிய தாயின் ஆசியால் கிடைக்கும் சிறந்த வாழ்வை அடைந்து விஷ்ணுவினால் இம்மையின்பம் பெற்று சிவபிரானால் காமக் குரோதாதி புறப்பகைகளை வென்று அஞ்ஞானம் நீக்கி மோஷத்தை அடைவதற்கு வாழ்வில் வரும் தடைகளை கணபதி அருளால் நீக்கி நற்கதி அடைவதே பஞ்சாயதன பூஜைச் சிறப்பாகும்.

* வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்வது நல்லதல்ல. இதனால் லஷ்மிதேவி சஞ்சலமான நிலையைப் பெற்று வீட்டிலுள்ளவர்களின் ஐஸ்வர்யங்களை ஏற்றத்தாழ்வுக்கு இடமாக்குவாள்.

* தீபத்தின் ஜூவாலை கிழக்குமுகமாக இருந்தால் சர்வபீஷ்டங்களும் ஐஸ்வரியமும் உண்டாகும். வடக்கு முகமாக எரிந்தால் நோய் நீங்கிச் சுகமுண்டாகும். வடகிழக்கு முகமானால் ஷேமலாபமுண்டாகும்.

* மேல் நோக்கி நெடிதாயெரியும் ஜூவாலை ஆரோக்கியத்திற்கும் சரீர சுக போகங்களுக்கும் அறிகுறியாகும்.

* சக்தி, திறமை, வீர்யம் இவற்றைச் சகல ஜீவராசிகளுக்கும் வழங்கி என்றும் மாறா இளமையுடன் திகழ்வது சூரியன். சூரிய வழிபாடு கர்மவினைகளையும், நாகதோஷம் முதலியவற்றையும் பிற சோதிடரீதியான தோஷங்களையும் நீக்கும்.

* சூரிய வழிபாடு கண்பார்வை விருத்திக்கும், இரத்த விருத்திக்கும் உகந்ததென விஞ்ஞானம் நிரூபிக்கின்றது. உடலில் சூரியஒளி படுவதால் இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு ஆயுள் கூடும். விற்றமின் டி சூரியனின் ஒளியில் உண்டு. இதனால்தான் மேலைநாட்டவர் சூரிய குளிப்பு செய்கின்றனர்.

* குழந்தைகள் பிறந்தபின் ஜாதகர்மம், நாமகரணம் என்பவற்றின் போது உபநிஷ்க்ரமணம் என்ற கிரியையில் குழந்தையை சூரிய வெளிச்சம் படும்படி முதன்முதல் வீட்குக்கு வெளியே கொண்டுவருதல் உண்டு. உடல்முழுதும் நல்லெண்ணய் பூசி வெற்றுடம்புடன் இளவெயிலில் கிடத்துதலும் குறிப்பிடத்தக்கது.

* இல்லங்களில் மாலைநேரத்தில் விளக்கேற்றும்போது பூஜையறை ஜன்னலை மூடிவிட வேண்டும். வீட்டின் முன்புற வாசலை திறந்திருத்தலும், பின்பக்க வாசலை பூட்டியிருத்தலும் வேண்டும்.

* வழிபாடு முடிந்த பின் விளக்குச் சுடர் மீது சில அட்சதை மணிகளைத்தூவி அல்லது மலரொன்றை வைத்து மெதுவாக அணைத்து விடலாம். வீசி அணைத்தலும் ஊடுபற்றி எரிய விடுதலும் ஆகாது.

* அரசமரம் வழிபாட்டுக்கு உகந்ததெனினும் சனிக்கிழமை காலை வேளையில் மட்டுமே அதைப் பிரதஷணம் செய்வதும் தொட்டு வணங்குவதும் செய்யலாம். அந்நாளில் மட்டுமே லஷ்மி நாராயணரின் பிரசன்னம் அங்கு இருக்கும். மற்ற நாட்களில் தொடக் கூடாது.

* சமுத்திர ஸ்நானம் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மட்டுமே செய்யலாம்.


பூசலார் நாயனாரின் கதை

பூசலார் நாயனாரின் கதைகோடி கோடியாய் கொட்டி அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டால்தான் இறைவனின் அருள் கிடைக்கும் என்பதில்லை. அனுதினமும் மனதளவில் இறைவனை தியானித்தாலே போதும் பக்தர்களின் மனக்கோவிலில் இறைவன் எழுந்தருளுவான். இதனை பூசலார் நாயனார் மெய்ப்பித்திருக்கிறார்.
சிவபெருமானின் அருளைப்பெற்ற 63 நாயன்மார்களில் ஒருவரான பூசலார் நாயனார் என்பவர் ஏழை சிவபக்தர்.திருநின்றவூரில் வசித்து வந்த அவர், சிவபெருமானுக்கு ஆலயம் எழுப்ப அயராது முயற்சி செய்தார். எனினும் எவரிடம் இருந்தும் பொருளுதவி கிடைக்கவில்லை.இதனால் துயரம் அடைந்த பூசலார் மனதிலேயே இறைவனுக்கு ஆலயம் கட்ட நினைத்து ஆகமவிதிப்படி அதற்காக பணிகளை மேற்கொண்டார். மானசீகமாக மனதில் கட்டிய கோவில் மளமளவென முடிந்தது. கோபுரம், விமானம், பலிபீடம், கொடிமரம் என பார்த்துப்பார்த்து மனதாலேயே கட்டிய ஆலயத்திற்கு குடமுழுக்கு செய்ய நாளும் குறித்தார் பூசலார் நாயனார்.

இதே நேரத்தில் காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ராஜசிம்ம பல்லவ மன்னன், சிவபெருமானுக்கு கருங்கல்லால் ஆன அழகிய ஆலயத்தை கட்டியிருந்தான். வேதியர்களின் ஆலோசனைப்படி குடமுழுக்கு செய்ய நாள் குறித்தான் மன்னன். பூசலார் குறித்த நாளும், மன்னன் குறித்த நாளும் ஒரே நாளாக அமைந்தது இறைவனின் திருவிளையாடல்.குடமுழுக்கு தினத்தின் முதல்நாளன்று மன்னனின் கனவில் தோன்றிய சிவபெருமான். குடமுழுக்கு நாளினை மாற்றுமாறு கேட்டுக்கொண்டார். திருநின்றவூரில் உள்ள பக்தர் ஒருவர் கட்டிய ஆலயத்தில் எழுந்தருள இருப்பதாகவும் மன்னனிடம் கூறினார் இறைவன்.

இதனால் ஆவல் கொண்ட மன்னன், தனது பரிவாரங்களுடன் திருநின்றவூர் சென்று, பூசலாரை வணங்கி நின்றார். மன்னனே தம்மை காண வந்த நோக்கம் அறிந்த பூசலார் மெய்சிலிர்த்தார். தமது உள்ளக்கோவிலில் எழுந்தருள வேண்டி மன்னனையே வேறு நாள் மாற்றச் சொன்ன இறைவனை நினைத்து உள்ளம் உருகினார் பூசலார்.பூசலாரின் இறைபக்தியை உணர்ந்த மன்னன் அவரது வேண்டுகோளின் படி மனதில் கட்டிய ஆலயம் போலவே திருநின்றவூரில் ஒரு ஆலயம் எழுப்பினார். ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அந்த ஆலயம் தான் இன்றைக்கும் திருநின்றவூரில் கம்பீரமாக உள்ள இருதயாலீசுவரர் ஆலயம்.இந்த ஆலயத்தின் கருவறையில் ஈசனின் லிங்கத்துடன் பூசலாரின் சிற்பமும் இணைந்துள்ளது சிறப்பம்சம். தினமும் மனதில் நினைத்து வழிபட்ட பூசலார் நாயன்மாரின் கதை இன்றைய தலை முறையினருக்கும் சிறந்த பாடமாக அமைந்துள்ளது.

தேங்காய் உடைப்பதின் தத்துவம்

தேங்காய் உடைப்பதின் தத்துவம்“புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு” என்பது திருமூலர் வாக்கு.புண்ணியம் என்பது இங்கே பூஜையை குறிக்கிறது. இறைவனை வழிபடப் பூவும், நீரும் போதும். ஆனால் இந்துசமயத்தில் பூஜையின் போது தேங்காய் இடம் பெற பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றை தெரிந்து கொள்வோம்.

சிவ அம்சம் நிறைந்த தேங்காய்

நம்முடைய வேண்டுதல் நிறைவேற கோவிலுக்கு சென்று தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்து இறைவனை வழிபடுகிறோம். விநாயகர் ஆலயத்தில் சூறைத்தேங்காய் உடைக்கிறோம். எதனால் இந்த வழிபாடு என்பதற்கான காரணம் வியப்பிற்குரியது. விநாயகர் ஒருமுறை தன் தந்தையிடம் உன் தலையை எனக்கு பலி கொடு என்று கேட்டாராம், இதன் காரணமாகவே தனது அம்சமாக மூன்று கண்களை கொண்ட தேங்காயை சிவன் படைத்தார்

என்கிறது புராணகதை. இதன் காரணமாகவே வேண்டுதல் விரைவில் நிறைவேற பக்தர்கள் விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைக்கின்றனர்.

முக்கண் சிறப்பு

விநாயகருக்கும், சிவனுக்கும் மூன்று கண்கள் இருப்பதைப் போலத் தேங்காய்க்கும் மூன்று கண்கள் இருப்பது, அதற்குரிய மிக முக்கியமான சிறப்பு. வழிபாட்டுக்குப் பயன்பட இது முக்கிய காரணம். வழிபாட்டில் தேங்காயைப் பயன்படுத்த எந்தவித வரம்புகளும் இல்லை. இதனை இந்து சமயத்தவர் அனைவரும் பயன்படுத்துகின்றனர்.

தேங்காயை உடைத்தல்

பூஜை நேரத்தில் இறைவனின் திருமுன் தேங்காயை “உடைத்தல்” என்பது பழங்காலம் முதல் இருந்துவரும் ஒரு வழிபாட்டு முறை. தேங்காயை வணங்கி, அதைத் தீபம் அல்லது தூபத்தில் காட்டி, உடைத்து, அதன் குடுமியைக் களைந்து, எந்தக் குற்றமும் அதில் இல்லாமையை உணர்ந்து, வெண்பருப்பு இறைவனைத் தரிசிக்குமாறு வைத்து, அர்ச்சனை செய்து, கற்பூர தீப ஆராதனை காட்டுவது முறை. தேங்காயை உடைக்காமல், வழிபாடு பூரணமாவதில்லை; முழு நிறைவு பெறுவதில்லை.

தேங்காய் இறைவனுக்குரிய அர்ச்சனைப் பொருள். அழுகல் முதலிய எந்தக் குறையுமற்ற, கச்சிதமாக உடையக் கூடிய நெற்றுத் தேங்காயே வழிபாட்டிற்கு உகந்தது.

தேங்காய் உடைப்பதின் தத்துவம்

மக்கள் இரு கண்களுடன், நன்கு பக்குவப்பட்ட பின்னர் அகக்கண் அல்லது ஞானக் கண்ணைப் பெறுகின்றனர். பக்குவமுடைய மனமே இறைவனை வழிபடத்தக்கது. பக்குவ நிலையறிதல், தேங்காய்க்கும், மனத்திற்கும் பொது. பக்குவம் குலைந்தால் தேங்காயும், மனமும் அழுகிவிடும்.

தேங்காய்-மும்மலம்; நீர்-உயிர். தேங்காயின் மட்டை, நார், ஓட்டுப்பகுதிகள் என்ற மூன்றும் மும்மலங்கள் ஆகும். இவை படிப்படியே களையப்பட்டவுடன், இறுதியில் அகங்கார ஓடும் நொறுங்க, உடனே வெண்மைத் தூய்மை பிரகாசிக்கிறது. தேங்காய்-இதயம்; மூன்றாம் கண்-ஞானக் கண்; வெண்மை-சத்துவகுணம். “சத்துவ குணத்துடன் சஞ்சலமில்லாமல், ஞானக்கண்ணால் இறைவனைத் தரிசிக்கும்போது, தோன்றும் பக்தி உணர்வுகளை இதயம் உணர்கிறது.” என்ற உட்பொருளைத் தேங்காய் உணர்த்துகிறது

எதிர்காலத்தை உணர்த்தும் தேங்காய்

பூஜையின் பயனையும், வாழ்வின் எதிர்கால நிகழ்வுகளையும் உடைந்த தேங்காயின் பகுதிகள் உணர்த்துகின்றன. அதனால்தான் வீட்டிலும், கோவிலிலும் தேங்காய் உடைக்கப்படும்போது, அது செம்மையாக உடைபட வேண்டும் என்று பக்தர்கள் ஆர்வத்துடனும், ஆசையுடனும், பக்தியுடனும் கவனிப்பார்கள்.

தேங்காய் ஒரே அடியில் இரு பகுதிகளாக உடைவது மிக நல்லது.உடைத்த தேங்காயில் பூ இருப்பதும், நூல் பிடித்தால் போல், சரிபாதியாக உடைவதும் மிகச்சிறப்பு. பகுதிகளில் ஏற்ற இறக்கம் இருப்பதால் தவறில்லை. தொட்டில் போல் உடைந்தால் மகப்பேறு கிடைக்கும். குடுமிப்பகுதி மற்ற பகுதியை விடச் சற்றுப் பெரிதாக உடைவது நல்லது. ஓடு சிதறி, முழுத் தேங்காய், கொப்பறையைப் போல விழுந்தால், அதைச் சரி பாதியாய்ப் பிளந்து படைக்கலாம். தேங்காய் நீரைப் பாத்திரத்தில் பிடித்து அதைத் தீர்த்தமாகப் பயன்படுத்தலாம். உடைந்த தேங்காய் மூடிகளை மீண்டும் இணைத்துப் பொருத்தக் கூடாது.

தவிர்க்க வேண்டியது

தேங்காய், ‘தேரை மோந்தும்’, அழுகியும் இருப்பது குற்றம். சிதறுகாய் போலத் தூள் தூளாக உடைவது குற்றம். குறுக்கில் உடையாமல் நெடுக்கில் உடைவது குற்றம். தேங்காய் நீர் நாறுவது குற்றம். தேங்காயை உடைக்கும்போது கை விட்டு நழுவி அப்பால் போய் விழுவது அபசகுனம்.

தேங்காய்ப் பிரசாதத்தை, உடைத்து அனைவருக்கும் தர வேண்டும். அல்லது சுத்தமான சைவ உணவு வகைகளைச் சமைக்கப் பயன்படுத்தலாம்.

சிதறு தேங்காய்:

தேங்காய் சிதறித் தூளாகும்படி தரையில் அடிப்பது “சிதறு தேங்காய்.” சிதறிய தேங்காய்ப் பகுதிகளை, பலர் எடுத்துக் கொள்ளும்படி ‘கொள்ளை’விடுவது சூறைத் தேங்காய். நான்கு திசைகளிலும் சிதறும்படி தேங்காயை அடிப்பது ‘சதுர்த்தேங்காய்.’

தேங்காயைச் சூறை விட்டு, அர்ச்சனை செய்து வழிபடும் வழிபாடு விநாயகருக்கு மட்டுமே உரியது. இந்த வழிபாட்டு முறை தமிழகத்தில் மட்டுமே காணப்படுகிறது. விநாயகரிடம் பிரார்த்தனை செய்துகொண்டு சிலர் 108 தேங்காய்களைச் சூறை விடுவதுண்டு.

சிதறிய தேங்காய்ச் சிதறல்களைத் தொகுத்து எடுக்கும் உரிமை சிறுவர்களுக்கே உரியது. உண்மைதான். குழந்தைப் பிள்ளையாரின் பிரசாதத்தில் பிள்ளைக் குழந்தைகளுக்கல்லவா உரிமை இருக்க வேண்டும்?

அர்ப்பணிப்பு உணர்வு

சிதறுகாய் போடுவதால் அகங்காரம் நீங்குவதோடு, தியாகமும் நிறைவேறுகிறது. உடைக்கும் சிதறுகாயை எத்தனையோ பேர் எடுத்துச்செல்கின்றனர். இது தர்மம் செய்த புண்ணியத்திற்கு சமமானது. எனவே, இறைவன் திருமுன் அகங்கார மண்டையோடு உடைய வேண்டும்; அமுதமயமான அறிவு நீரை அர்ப்பணிக்க வேண்டும் என்பன சிதறு தேங்காய் உடைப்பதன் தத்துவம்

இளநீர்

அரசு, ஆல், அத்தி, வில்வம், துளசி முதலியன தெய்வீக மூலிகைகள். இந்த வரிசையில் தென்னையும் சேரத்தக்கது. இளநீர் மருத்துவ குணமுடையது. சிறப்பாக மருந்து செய்ய ஓர் அடிப்படைப் பொருளாகத் செவ்விள நீர் திகழ்கிறது. இளநீர் உலகத்திலேயே மிகச் சுவையான, மிகத் தூய்மையான ஒரே நீர். இயற்கையின் வரப்பிரசாதம். இது அபிஷேகப் பொருள்களில் ஒன்று.

பற்றற்ற நிலை

அறவே நீரற்ற தேங்காய் கொப்பரையாகும். முற்றிய எல்லாத் தேங்காய்களும் கொப்பரையாவதில்லை. பல அழுகிவிடும். ஏதோ ஆயிரத்திலொன்று கொப்பரையாகலாம். நீர் வற்றி உள்ளேயே உலர்ந்த தேங்காய் கொப்பரையாகிறது.

தேங்காய்ப் பருப்பு, அகப்பற்றான நீரை அகற்றிவிட்டது; அந்த நீரின் சுவையையும், சக்தியையும் பறித்துக் கொண்டது. புறப்பற்றான ஓட்டை விலக்கிவிட்டது; அதனோடு கொண்ட பற்றுத் தொடர்பினை முறித்துக் கொண்டது. கொப்பரையும் அதன் ஓடும் பற்றற்று விளங்குகின்றன. இந்தக் கொப்பரைத் தேங்காயைப் “பூரண ஆகுதி”யாகப் பயன்படுத்துகின்றனர்.

வேள்வியாகத்தில் பழங்கள், தானியங்கள், உணவுப் பொருள்கள், ஆடைகள் முதலிய பல பொருள்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. முடிவாக-நிறைவாக-பூரணமாக ஒரு பட்டுத்துணியில் கொப்பரைத் தேங்காயைக் கட்டி அக்னியில் இடுகின்றனர். இளநீரை விட, தேங்காயை விட, கொப்பரைத் தேங்காயே அதன் பற்றற்ற நிலையின் காரணமாக “பூரண ஆகுதி” ஆகிற முழுத்தகுதியை பெறுகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த தேங்காய் இறைவடிவமாகவே கருதப்படுகிறது எனவேதான், வழிபாட்டில் தேங்காய்க்கு முதலிடமும், முக்கிய இடமும் அளிக்கப்படுகிறது.

Saturday, April 30, 2011

தாம்பூலம் தரித்தல்:

தாம்பூலம் தரித்தல்:

நமது உடலில் சுரக்கும் 20 விதமான “அமினோ அமிலங்கள்” வெற்றிலையில் உள்ளன. செரிமானத்துக்கும் பெரிதும் உறுதுணையாகும் இந்த “அமினோ அமிலங்களை” வெற்றிலை மூலம் நாம் அடையும்போது ஜீரணம் எளிதாகின்றது. அதனால்தான் நம்முன்னோர்கள் உணவுக்குப் பின் “தாம்பூலம்” தரிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.வெற்றிலைப் பாக்குடன் கூடிய¬ தாம்பூலம் “மங்கலப் பொருள்” என்பது பலர் அறிந்த
உண்மை. ஆனால் நம் முன்னோர் அதில் மருத்துவப் பயனையும் புகுத்தியுள்ளனர். மிகச் சிறந்த “நோய்த்தடுப்பு ஆற்றல்” தாம்பூலத்தில் உள்ளது.
வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு இணைந்த தாம்பூலம், மெல்லும் போது உமிழ்நீர் சுரப்பினை தூண்டுவதுடன் ஒரு வித உற்சாக உணர்வினை தருகிறது. பெரும்பாலான நாடுகளில் வெற்றிலைக்கு பால் உணர்வை மற்றும் நரம்பு வலுவேற்றும் சக்தி இருப்பதாக கருதப்படுகிறது. அதனால்தான் புதுமண தம்பதியர்களுக்கு தாம்பூலம் தரிப்பது என்பது ஒரு சடங்காக நடைபெறுகிறது.

Monday, April 25, 2011

சில ஆன்மீக குறிப்புகள்:

ஹோமத்தில் சில்லரை நாணயங்களைப் போடுகிறார்களே. பணம் லட்சுமியின் அம்சமாயிற்றே. இது சரிதானா?
ஹோமத்தில் இருக்கும் அக்னியும் தெய்வாம்சம் தானே! மூலவர் பூஜையில் சுவர்ண புஷ்பம் என்று நாணயங்களைச் சமர்ப்பிக்கிறோம். அதுபோல, ஹோமத்தில் அக்னி வடிவில் இருக்கும் தெய்வத்திற்கும் சுவர்ண புஷ்பமாக நாணயங்களைப் போடுகிறோம்.
* நவரத்தின மோதிரம் அணி வதைப்பற்றி விளக்கம் அளியுங்கள்..
மோதிரத்திற்கு "அங்குலீயகம்' என்று பெயர். இதற்கு "விரலுக்கு அணிவிக்கப்படும் ஆபரணம்' என்று பொருள். எல்லா தெய்வங்களுக்கும் எல்லாக் கற்களும் உகந்தவை தான். சுவாமியை பிரதிஷ்டை செய்யும் முன் பீடத்தில் நவரத்தினங்கள் வைக்கப்படுகின்றன. கும்பாபிஷேக கலசம், திருவாபரணங்களிலும் இவற்றுக்கு முக்கியத்துவம் உண்டு. அவரவர் விரும்பும் கற்களில் விருப்பமான முறையில் மோதிரம் அணிந்து கொள்ளலாம். அவை தீங்கு ஏதும் விளைவிக்காது. சுவாமி முன்பு வைத்து வணங்கியபிறகு அணிந்து கொள்ளுங்கள்.
* பழைய கோயில்களை பாதுகாக்க முடியாமல் தவிக்கிறோம், இருந்தாலும் புதிய கோயில்களைக் கட்டுவது ஒரு வியாபார உத்திதானே?
எல்லோரையும் அப்படிச் சொல்லிவிட முடியாது. முன்பிருந்த மக்கள் தொகை, அவர்களின் வாழ்க்கை முறை என்பது வேறு. தற்போதுள்ள மக்கள் தொகை, அவர்களின் வாழ்க்கை முறை என்பது வேறு. முன்பு ஒரு கோயிலைச் சுற்றி ஓரு ஊர் அமைந்திருக்கும். இன்று மக்கள் தொகை பெருகி புதிது புதிதாக நகர்களும் ஊர்களும் பெருகிக் கொண்டே வருகின்றன. அவசரமான, பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் இருப்பவர்கள் தொலை தூரம் சென்று கோயிலை தரிசிக்க இயலாமல் போய் விடுகிறது. எனவே அப்பகுதியில் வாழும் மக்கள் தினமும் தரிசித்து வழிபட தங்கள் பகுதிக்கென்று ஒரு கோயிலை அமைத்துக் கொள்வது இன்றியமையாததாகிறது.
* கோயில்களில் உள்ளது போல் வீட்டிலும் விக்ரஹ பூஜை செய்யலாமா?
கோயில்களில் பூஜை செய்வது போல் வீட்டிலும் செய்ய முடியுமானால் விக்ரக பூஜை செய்யலாம். விக்ரகங்களின் உயரம் ஆறு அங்குலத்திற்கு அதிகமில்லாமல் இருக்க வேண்டும்.
** விழா நாட்களில் முதல்நாள் இரவே வாசல் தெளித்து கோலம் போட்டு விடுகிறார்களோ? இது சாஸ்திரப்படி சரிதானா?
சூரிய உதயத்திற்கு ஒன்றைமணி நேரம் முன்பு தான் வாசலைத் தூய்மை செய்து சாணம் தெளித்து கோலமிடவேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது. முதல்நாள் இரவே கோலமிட்டு விட்டு தூங்கிவிடுவது அவ்வளவு உசிதமானது அல்ல. அதிகாலையில் கோலம் இடும் வீட்டிலே திருமகள் நித்யவாசம் செய்வாள். இப்போது பிரம்மாண்டமான கோலங்களை எல்லாம் முதல்நாள் இரவே வாசலில் இட்டு அசத்துகிறார்கள். ஆனால், கூடியமட்டும் காலை நேரத்திலே வாசல் தெளித்து கோலமிடுங்கள்

மூன்று ஆசைகளை வெல்லுங்கள்

மூன்று ஆசைகளை வெல்லுங்கள்


- வினோபாஜியின் தத்துவம்
*தர்ம சாஸ்திரங்களில் மனிதமனங்களை புத்திரபாசமுள்ள மனது, பொருளால் பெருமைப்படும் மனது, புகழை விரும்பும் மனது என பிரித்துள்ளனர். இவற்றை வென்றவர்கள் மனதை வென்றவர்கள் ஆவார்கள்.
* புத்திரபாசத்திற்காகத்தான் திருமணம் செய்கிறோம். குழந்தைகளைப் பெறுகிறோம். சிற்றின்பத்திலேயே மூழ்கிவிடக் கூடாது.
* இரண்டாவது பொருளாசை. பொருள் இல்லாமல் உலகில் வாழ முடியாது. எனவே, பிறரைக் கெடுக்காமலும், யாரையும் வஞ்சிக்காமலும் நல்லவழியில் பொருள் தேட வேண்டும்.
* மூன்றாவதாக புகழ் வாசனை, புகழ் நாட்டம் மிதமாக இருந்தால் யாருக்கும் தீங்கில்லை. தன்னலம் கருதாமல் பிறருக்கு தொண்டு செய்வதால் உண்டாகும் புகழ் ஒருமனிதனுக்கு அவசியமானதே. பிறரைக் கெடுப்பதற்காக தன்னைத்தானே உயர்த்தி புகழ்ந்து கொள்ளுதல் கொடுமையானதாகும். இந்த மூன்றும் மனிதனின் செயல்பாடுகளுக்கு தூண்டு கோலாகவும், அவனை உயர்நிலைக்கு இட்டுச்செல்வதற்கும் மட்டுமே பயன்பட வேண்டும்.

காசிக்கு தம்பதியராகத்தான் போக வேண்டுமா?

காசிக்கு தம்பதியராகத்தான் போக வேண்டுமா?
தம்பதியராகப் போவது தான் விசேஷம். கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராட சில நியதிகள் உண்டு. ஒன்று மனைவி அல்லது மகனின் கையைப் பிடித்துக் கொண்டு நீராட வேண்டும். இருவரும் இல்லாத பட்சத்தில் பசுமாட்டின் வாலைப் பிடித்துக் கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும். இம்மூன்றிலும் தம்பதியராக நீராடுவதே உத்தமம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

பெயர், நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்தால் தான் நன்மை உண்டாகுமா?

பெயர், நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்தால் தான் நன்மை உண்டாகுமா?

பெயர் நட்சத்திரம் சொல்லி நமது வேண்டுகோள்களையெல்லாம் கேட்டால் தான் நன்மை உண்டாகும் என்றில்லை. ""வேண்டத்தக்கது அறிவோய் நீ, வேண்ட முழுதும் தருவோய் நீ'' என்கிறார் மாணிக்கவாசகர். நமக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பது இறைவனுக்கு தெரியும். நாம் கேட்க வேண்டிய அவசியமே இல்லை. இன்பமும் துன்பமும் இறையருளால் தான் நிகழ்கின்றன. பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்வதை நம்மை நாமே உற்சாகப்படுத்திக் கொள்ளும் விதத்தில் பெரியோர்கள் வகுத்துள்ளனர்.

உனது சிறந்த நண்பன் - அன்னை

  உனது சிறந்த நண்பன் - அன்னை
உன்னை மிகவும் தாழ்ந்த மட்டத்திற்கு வர ஊக்குவிக்கிறவன், அவனோடு சேர்ந்து முட்டாள்தனமான காரியங்களைச் செய்ய அல்லது தவறான வழிகளில் செல்ல ஊக்குவிக்கிறவன், நீ செய்கிற அசிங்கமான காரியங்களுக்காக உன்னைப் பாராட்டுகிறவன் உன்னுடைய நண்பன் என்பதில் சந்தேகமில்லை...

யாருக்காவது தொற்றுநோய் இருந்தால் நாம் அவனுடன் நெருங்கிப் பழகமாட்டோம், கவனமாக அவனிடமிருந்து விலகிவிடுவோம். பொதுவாக அவனிடமிருந்து அந்த நோய் பிறருக்கும் பரவிவிடாமலிக்க அவனை ஒரு தனி இடத்தில் ஒதுக்கி வைப்பார்கள். தீயொழுக்கம், தவறான நடத்தை, கயமை, பொய், கீழ்மை இவையெல்லாம் எந்தத் தொற்று நோயையும்விட மோசமான தொற்று நோய்களாகும், இவற்றை வெகு கவனமாகத் தவிர்க்க வேண்டும். எவன் உன்னுடைய தவறான அல்லது அசிங்கிமான செயல்களில் பங்கு கொள்ள மறுக்கிறானோ, தவறான செயல்களைச் செய்யத் தூண்டுதல் ஏற்படும்போது அதை எதிர்த்து நிற்க எவன் உன்னை ஊக்குவிக்கிறானோ அவனே உன் நண்பன். அவனையே உன்னுடைய சிறந்த நண்பனாக நீ கருதவேண்டும். அப்படிப்பட்டவனுடன்தான் நீ பழகவேண்டும், எவனுடன் வேடிக்கைகளில் ஈடுபடலாமோ, எவன் உன்னுடைய தீய குணங்களைப் பலப்படுத்துகின்றானே அவனுடன் அன்று. அவ்வளவுதான். இதை நான் திரும்பத் திரும்பச் சொல்ல விரும்பவில்லை. நான் யாரை மனத்தில் கொண்டு இதைச் சொல்கிறேனோ அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். உண்மையில், யார் உன்னைவிட அறிவுடையவர்களாக இருக்கிறார்களோ, யாருடைய கூட்டுறவு உன்னைச் சான்றோனாக்குகிறதோ, உன்னை நீ அடக்கி ஆளவும், முன்னேறவும், நன்றாகச் செயல்படவும், விஷயங்களை மேலும் தெளிவாகக் காணவும் உதவுகிறதோ அவர்களையே நீ நண்பர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். இறுதியாக, நீ பெறக்கூடிய மிகச் சிறந்த நண்பன், எல்லாவற்றையும் சொல்லக்கூடிய, உன்னை முற்றிலும் திறந்துகாட்டக்கூடிய நண்பன் இறைவனே அல்லவா? எல்லாக் கருணையின் ஊற்றும், திரும்பவும் செய்யாவிட்டால் நமது பிழைகளையெல்லாம் துடைத்துவிடக்கூடிய சக்தியின் ஊற்றும், உண்மையான சித்திக்கு வழியைத் திறப்பவனும் அவனே அல்லவா? எல்லாவற்றையும் புரிந்து கொள்ளக்கூடியவனும், பாதை‌யில் தவறாமல், தடுமாறாமல், வீழ்ந்துவிடாமல், இலட்சியத்தை நோக்கி நேரே நடந்துசெல்ல உதவுகிறவனும் அவனே. அவனே உண்மையான நண்பன், வாழ்விலும் தாழ்விலும் நீங்காத நண்பன், உன்னைப் புரிந்துகொள்ளக்கூடிய, குணமாக்கக்கூடிய நண்பன், வேண்டும்போது எப்பொழுதும் ஓடிவரும் நண்பன். நீ மனப்பூர்வமாக அழைத்தால் உனக்கு வழிகாட்டவும், உன்னைத் தாங்கவும் அவன் எப்பொழுதும் இருப்பான் - அதோடு உண்மையான முறையில் உன்னை நேசிப்பான்.

தேடி வரும் தெய்வம்

தேடி வரும் தெய்வம்

Post
பசுமாடு ஒன்றை கன்றுடன் விலைக்கு வாங்கிய ஒருவன், தன் ஊருக்கு அவற்றைஓட்டிச்சென்றான். பசுவின் பின்னால் கன்று வந்து கொண்டிருந்தது. திடீரென்றுபசு முரண்டு பிடித்து நின்று விட்டது. அவன் எவ்வளவோ முயற்சி செய்தும் நகரமறுத்தது. அங்கு வந்த பெரியவர் என்னவென்று விசாரிக்க அவனும் விவரத்தைசொன்னான். அதற்கு அவர், "கவலைப்படாதே, நீ கன்றை ஓட்டிக்கொண்டு முன்னால்செல், தாய்ப்பசு தானாகவே உன் பின்னால் வந்துவிடும்", என்றார். அவனும்அவ்வாறே செய்தான். உடனே தாய்ப்பசுவிரைவாக அவனைப் பின் தொடர்ந்து நடக்கஆரம்பித்தது. இறைவனும் அப்படித்தான். அவன் பிள்ளைகளே எல்லோரும் என்பதால்,பிறருக்கு நாம் உதவினால், நம்மைத் தேடி வந்து அவன் அருள்வான்.

ஏகலைவன்

குரு பக்தி

Post by Admin on Tue Feb 01, 2011 4:15 am
துரோணர் என்ற முனிவர் ஒருவர் இருந்தார். அவர் அரசகுமாரர்களான பஞ்ச
பாண்டவர்களுக்கும் கௌரவர்களான துரியோதனன் முதலான நூற்றுவருக்கும்
குருவாக இருந்தார். அவர்களுக்கு வில் வித்தை யை சிறப்பாகக்
கற்பித்து வந்தார். வில் வித்தையில் அர்ஜுனனை விடச் சிறந்தவர்
எவருமில்லை எனக்கூறும்படி செய்வதாகச் சபதம் செய்திருந்தார்.
இதனால் துரியோதனனுக்குக் கோபமும் பொறாமையும் அர்ஜுனன் மீது
ஏற்பட்டிருந்தது. இயல்பாகவே அர்ஜுனன் வில்லில் அம்பை ஏற்றி எய்வதில்
மிகவும் சிறந்தவன். அதனால் துரோணர் அர்ஜுனனிடம் தனி அன்பு
கொண்டிருந்தார்.

ஒரு நாள் துரோணர் தன் மாணவர்களுக்காகக் காத்திருந்தார். அப்போது ஓர் ஏழைச்சிறுவன் வந்து துரோணரைப் பணிந்து நின்றான்.
அவனை ஆசிர்வதித்தார் துரோணர்.
"யாரப்பா நீ? எங்கு வந்தாய்?"

"குருவே!, நான் தங்களிடம் வில் வித்தை பயிலவேண்டும் என
விரும்புகிறேன். பலநாட்களாகத் தங்களைத் தேடித் திரிந்தேன். இன்றுதான்
தங்களின் தரிசனம் கிடைத்தது. என்னைத் தங்கள் மாணாக்கனாக ஏற்றுக்
கொண்டு அருள் செய்ய வேண்டும்"

"என்ன கேட்டாய்? உன்னை மாணவனாக ஏற்றுக்கொள்ள வேண்டுமா? நான் அரச
குடும்பத்தாருக்கு மட்டுமே கற்பிப்பவன். உன்னைப் போன்ற ஏழைச்
சிறுவனுக்குக் கற்பிக்க மாட்டேன். அரசகுமாரர்கள் வரும் நேரம் நீ
போய் வா. உனக்கேற்ற ஆசானைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு வித்தையைக்
கற்றுக்கொள். என் பூரண ஆசி உனக்கு."
கைகளை உயர்த்தி ஆசி வழங்கிவிட்டு துரோணர் அங்கிருந்து சென்று
விட்டார். மண்டியிட்டு அமர்ந்திருந்த அந்த வேடுவச் சிறுவன் கண்களில்
நீர் பெருக நின்றான். அவனது பல நாள் ஆசை நிறைவேறாமல் போனது பற்றி
மிகவும் வருந்தினான். எங்கே துரோணர் பாதங்களை வைத்திருந்தாரோ அந்த
இடத்திலிருந்து மண்ணை அள்ளிக் கொண்டான். துரோணர் சென்ற திசை நோக்கி
வணங்கினான்.
விடுவிடுவெனத் தன் இருப்பிடம் நோக்கி நடந்தான்.

இல்லம் சேர்ந்த அச்சிறுவன் மண்ணைக் குழைத்து துரோணரைப் போன்ற ஒரு
சிலையைச் செய்து வைத்துக் கொண்டான். அந்தச் சிலையின் முன்னால் நின்று கொண்டு வணங்கினான். பின்னர் தனது பயிற்சியைத் தொடங்கினான். துரோனரையேதனது குருவாக மானசீகமாக வரித்துக் கொண்டான். விரைவிலேயே சிறந்த வில் வீரனாக ஆனான்.

நாட்கள் கடந்தன. ஒரு நாள் துரோணரும் அவரது மாணாக்கரான நூற்று
ஐய்வரும் காட்டுவழியே சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்தவழியில்
இரண்டு காட்டுப்பன்றிகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு சண்டையிட்டுக்
கொண்டு இருந்தன.அப்போது " அர்ஜுனா! இப்பன்றிகளைக் கொல்"
எனக்கட்டளையிட்டார் குரு.
அர்ஜுனன் திகைத்தான். " ஒரே பாணத்தினால் இரண்டு உயிர்களை ஒரே
சமயத்தில் கொல்ல முடியுமா? குருவே, அப்படிப்பட்ட கலையை நீங்கள்
இன்னும் எனக்குக் கற்பிக்கவில்லையே." இதற்குள் இரண்டு பன்றிகளும்
வெகு உக்கிரமாகப் போரிட்டுக் கொண்டு வழியை அடைத்துக் கொண்டு
இருந்தன. அப்போது எங்கிருந்தோ அம்புகள் வந்து ஒரே அடியில் இரண்டு
பன்றிகளையும் வீழ்த்தியது. பன்றிகள் இரண்டும் ஒரே சமயத்தில்
வீழ்ந்து இறந்தன. இதைப் பார்த்த அர்ஜுனன் திகைத்து நின்றான். தன்
குருவை சந்தேகத்தோடு பார்த்தான். "தன்னினும் சிறந்த வில்வீரன்
ஒருவன் உள்ளான். அவன் விட்ட பாணமே இதற்குச் சாட்சி. இந்தக்கலையை
அறிந்தவர் துரோணர் ஒருவரே. இன்று மற்றொருவர் உள்ளார் எனில் இதைக்
கற்பித்தவர் தனது குருவே. " இவ்வாறு அர்ஜுனன் எண்ணம் ஓடிற்று.

அப்போது வில்லும் கையுமாக அங்கு வந்தான் அன்று வந்த வேடுவச் சிறுவன். துரோணரைக் கண்டதும் மண்டியிட்டு வணங்கினான்.

"ஏ சிறுவனே! உனக்கு இக்கலையைக் கற்பித்தவர் யார்? உன் குரு யார்?" சற்றே கோபமாகக் கேட்டார் துரோணர்

"தாங்கள்தான் எனது குருநாதர். தினமும் நான் உங்கள் முன்னிலையில்தானே பயிற்சி மேற்கொள்கிறேன்."

"பொய் சொல்லாதே! ராஜகுமாரர்களைத் தவிர நான் யாருக்கும் கற்பித்ததில்லை. உண்மையைச் சொல்."

"என்னுடன் வாருங்கள்." என்று அழைத்த சிறுவனுடன் அனைவரும் அவன்
இல்லம் சென்றனர். காட்டின் நடுவே ஒரு குடிசை. அதன் முன்னே ஒரு
திறந்த வெளியில் நாடு நாயகமாக துரோணரின் சிலை அமர்ந்த நிலையில்
அமைக்கப் பட்டிருந்தது. அச்சிலையை வணங்கிய சிறுவன் "இவர்தான் என்
குருநாதர். இவர் முன்னால்தான் நான் பயிற்சி செய்கிறேன்." என்றான்
பணிவோடு.

"இது எனது உருவம்போல் உள்ளதே"

"ஆம் குருதேவா. தங்களின் பாதம் பதித்த மண்ணைக் கொண்டுவந்து
அதைச்சேர்த்து ஒரு சிலை செய்து தாங்களே அமர்ந்து எனக்குப் பாடம்
சொல்வதாக நினைத்துக் கொண்டேன். தங்களை என் மனதில் குருவாக எண்ணிக்
கொண்டு தினமும் வணங்கி வருகிறேன்."

துரோணர் அச்சிறுவனின் குருபக்தியே அவனுக்கு இத்தனை திறமைகளும்
வளரக்காரணம் என்பதைத் தெரிந்து கொண்டார். ஆயினும் அர்ஜுனனுக்கு
வில்லுக்கு விஜயன் என்ற பெயரைப பெற்றுத் தருவதாக வாக்குக்
கொடுத்திருப்பதால் இந்தச் சிறுவன் இனியும் வில்லை தன் கையில்
எடுக்கக் கூடாது என முடிவு செய்தார். சிறுவனை அன்புடன் பார்த்தார்.

"சிறுவா!, உன் பெயர் என்ன?"

"என் பெயர் ஏகலைவன். இந்தக் காட்டில் வசிக்கும் வேடுவர் தலைவரின் மகன் நான்."

"உன் திறமையைக் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். குருதக்ஷிணை தரவேண்டாமா நீ?"

"குருவே! எதுவேண்டுமானாலும் கேளுங்கள். சிங்கம் புலி இவை வேண்டுமா?
மான்கள் வேண்டுமா? நொடியில் பிடித்துவருவேன் .உங்களுக்குக்
குருதக்ஷிணை யாகத் தருவேன்"

"அதெல்லாம் வேண்டாம். ஏகலைவா! நீயே சிறந்த மாணவன். என்பதை நான்
ஒப்புக்கொள்கிறேன். எனக்குக் குருதக்ஷிணையாக உன் வலதுகைக் கட்டை
விரலைத் தருவாயா?"

"தாங்கள் எனது குரு என ஒப்புக் கொண்டதே எனக்குப் போதும். தாங்கள்
குருதக்ஷிணை என என் உயிரையே கேட்டாலும் நான் தரத் தயாராக
உள்ளேன். பெற்றுக்கொள்ளுங்கள்."
மறுகணம் தனது இடது கை வாளால் வலதுகை கட்டை விரலை வெட்டி ஒரு
இலையில் வைத்து அவர் பாதத்தில் வைத்துப் பணிந்து நின்றான் ஏகலைவன்.
மனம் மகிழ்ந்த துரோணர் "ஏகலைவா! குருபக்தி என்ற சொல்லுக்கு நீயே
ஒரு உதாரணம். உலகம் உள்ளவரை உன் பெருமையை இவ்வுலகம் பேசும்." என்று ஆசிகூறி அங்கிருந்து சென்றார். அர்ஜுனனுக்குப் போட்டியாக ஒருவன்
வருவதைத் தடுத்து விட்ட நிம்மதி இருந்தாலும் ஒரு நல்ல வில்வீரனை
அவனது வீரத்தை திறமையை அழித்துவிட்டோமே என்ற வருத்தமும் துரோணருக்கு இருந்தது.

ஆனாலும் குருபக்தியில் சிறந்தவன் ஏகலைவன் என்ற புகழை அவனுக்குக்
கொடுத்து விட்டோம் என்ற பெருமை துரோணருக்கு நிம்மதியைக் கொடுத்தது.

நம்பியாண்டார் நம்பி









நம்பியாண்டார் நம்பி



களங்கமற்ற, முழுமையான இறை நம்பிக்கை, இறைவனை நம்மிடம் நேரில் கொண்டு வந்து காட்டும் என் பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் நம்பியாண்டார் நம்பி.இவர், சோழ நாட்டில் தில்லையம்பலமான சிதம்பரம் அருகிலுள்ள திருநாரையூரில் அவதரித்தார். இங்குள்ள பொள்ளாப்பிள்ளையார் கோவில்
மிகவும் பிரபலமானது. “பொள்ளா’ என்றால், உளியால் செதுக்கப்படாதது என்று பொருள்; அதாவது, தானாகவே தோன்றிய சுயம்பு விநாயகர் அவர்.
இந்த விநாயகருக்கு பூஜை செய்து வந்தார் நம்பியின் தந்தை; நம்பிக்கும் பூஜை
முறைகளைக் கற்றுக் கொடுத் தார். ஒருநாள், அவர் தன் மனைவியுடன் வெளியூர்
செல்ல இருந்ததால், மகனிடம், “இன்று, நீ போய் விநாயகருக்கு நைவேத்யம் செய்து
பூஜை செய்து வா…’ என்றார்.

மகிழ்ச்சியடைந்த சிறுவன் நைவேத்திய பொருட்களுடன் கோவிலுக்குச் சென்றான். விநாயகரை வணங்கி நைவேத்யத் தைப் படைத்தான்.
“அப்பனே, விநாயகா! நான் சின்னஞ்சிறுவன். அப்பா ஊருக் குப் போய் விட்டார்.
உனக்கு தேங்காய், பழம், பொங்கல் கொண்டு வந்திருக்கிறேன். ஒன்று விடாமல்
சாப்பிடு. குருகுலத்துக்கு கிளம்ப வேண்டும். தாமதமாகச் சென்றால், ஆசிரியர்
கோபிப்பார். விரைவில் சாப்பிடப்பா…’ என்றான்.
பிள்ளையார் என்றாவது சாப்பிட்டதுண்டா?

அவர் கல்லாக அப்படியே உட்கார்ந்திருந்தார். பையனுக்கு அழுகை வந்தது…
“இதோ பார்! நீ மட்டும் இப்போது சாப்பிடாவிட்டால் இந்தத் தூணில் முட்டி மோதி இறப்பேன்…’ என்று சொல்லியபடியே, தூணில் முட்டி அழுதான்.
அவனது களங்கமற்ற பக்தி விநாயகரை ஈர்த்தது. அவர் சன்னதியில் இருந்து எழுந்து
வந்து, அவனைத் தடுத்து நிறுத்தினார். தும்பிக்கையால் நெற்றியில் வழிந்த
ரத்தத்தைத் துடைக்க, காயம்பட்ட வடுவே மறைந்து விட்டது. நம்பியின்
விருப்பப்படியே அத்தனை பொருட்களையும் ஒன்று விடாமல் சாப்பிட்டார்.

அவரிடம், “விநாயகா! எப் படியோ இன்று குருகுலம் செல்ல நேரமாகி விட்டது. நான்
அங்கு சென்றிருந்தால் அவர் என்ன கற்றுக் கொடுத்திருப் பாரோ, அதை நீயே
சொல்லிக் கொடேன்…’ என்றார் நம்பி.
அவனுக்கு அனைத்து ஞானத் தையும் போதித்து, மறைந்து விட்டார் விநாயகர்.

மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்தான் நம்பி. பெற்றவர்கள் ஊர் திரும்பியதும்
நடந்ததையெல்லாம் சொன்னான். அவர் கள் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. இந்த
விஷயம் ராஜராஜசோழனுக்கு எட்டியது. அவன் நம்பியாண்டார் நம்பியின்
இல்லத்துக்கே வந்துவிட்டான். விநாயகருக்கு நைவேத்யம் செய்து அவர்
சாப்பிடுவதைக் கண்ணார கண்டு களிக்க வேண்டும் என்றான்.

அதன்படியே, கோவிலுக்குச் சென்று விநாயகரை சாப்பிட வைத்தார் நம்பி.
மன்னனும், மக்களும் ஆச்சரியப் பட்டனர். அவரது மகிமையை உணர்ந்த மன்னன்,
தில்லையம்பலத்தில் பூட்டிக் கிடக்கும் அறையில் மூவர் பாடிய தேவாரமும்,
தொகையடியார்கள் வரலாறும் இருப்பதைச் சொல்லி, அவற்றை வெளியே கொண்டு வர ஆவன
செய்யும்படி கேட்டுக் கொண்டான்.

அதன்படி, அவர்கள் அங்கு சென்று புற்று மண்டிக்கிடந்த அறையில் இருந்து
ஓலைச்சுவடிகளை எடுத்து வந்தனர். நம்பியாண்டர் நம்பி அவற்றை 11
திருமுறைகளாகப் பிரித்தார். அவை இன்றும் நமக்கு இசையின்பத்தை வழங்கிக்
கொண்டிருக்கின்றன.

குழந்தை போல களங்கமற்ற உள்ளங்களுக்கு கடவுள் தெரிவான் என்பதை நம்பியாண்டார் நம்பி வரலாறு உணர்த்துகிறது.

கல்கி அவதாரம்

கல்கி அவதாரம்

இதுதசாவதாரங்களில் 10-ஆவது அவதாரமாகும். அது எப்போது என தெரியாவிட்டாலும் நிச்சயம் நடக்கும் என புராணங்கள் சொல்கின்றன. அதில் "யாஸஸ்' எனும் பிராமணருக்கு மகனாக கல்கி பிறப்பார். இவர் சகல வல்லமையுடன் பட்டுப் பீதாம்பரம் அணிந்து, மார்பில் துளசி மாலை துலங்க, கையில் வாளும் கேடயமும் தரித்து வெண்புரவி மீதேறி புறப்பட்டு
வந்து, சிரஞ்சீவியான பரசுராமரிடம் சென்று பற்பல கலைகள் பயின்று உபதேசம் பெற்றபின், குதிரை மீதேறி வாயு வேகத்தில் மூன்று இரவுகள் உலகை வலம் வருவார்.அப்போது அக்கிரமச் செயல் புரிவோரை எதிர்த்து அழித்து, அதர்மவான்களையும் கொடிய வர்களையும் ஒழித்து பூமியைப் புனிதப்படுத்துவார். தர்மத்தை நிலைநாட்டுவார். மக்களை நல்வழிப் படுத்துவார். அமைதி, அன்பைப் போதிப்பார். அதன்பின்கல்கி அவதாரம் நிறைவடையும். கலியுகமும் முடிவடையும். பின் புதிய யுகமான
சத்ய யுகம் பிறக்கும். அதில் அமைதியும் அன்பும் மட்டுமே மலரும்.

கலியுகம் எப்படி இருக்கும்?




கலியுகம் எப்படி இருக்கும்?



























கலியுகத்தில் என்னென்ன நடக்கும், மக்கள் எப்படி இருப்பார்கள், நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை கண்ணன் கூறியுள்ளார்."மனிதர்கள்எல்லாவற்றையும்அடையவேண்டும் என வெறியுடன் இருப்பார்கள். பணத்தாசையுடன் அலைவர். துறவிகள்கூட பணத்திற்காகத் தவறுகள் செய்வார்கள். ஆண்கள் மனைவிக்கு மட்டும் கட்டுப்பட்டு பெற்றோரை உதாசீனம் செய்து தூஷிப்பார்கள். மனைவிவழி
உறவினர்களிடம் மட்டுமே உறவாடுவார்கள். திருமணத்தில் முறை இருக்காது. சிறிதளவு சொத்துக்குக்கூட உறவினர் களைக் கொல்லத் தயங்க மாட்டார்கள். ஒருவருக் கொருவர் கெடுதல் செய்து கொள்வார்கள்' என்று கூறியுள்ளார்.கலியுகத்தில்இப்படிச் செய்த பாவங்கள் விலக வேண்டுமானால், கிருத யுகத்தில் கடுமையான தியானத்தாலும் யோக நிஷ்டை யாலும் பெற்ற புண்ணியத்தை- திரேதா யுகத்தில் யாகங்கள் செய்வ தன் மூலம் கிடைத்த புண்ணி யத்தை- துவாபர யுகத்தில் அர்ச்சனாதிபூஜைகள் செய்ததன் மூலம் கிடைத்த புண்ணியத்தை கலியுகத்தில் ஹரி நாம சங்கீர்த்தனம் செய்தும், கண்ணன் திருநாமத்தை உச்சரித்த மாத்திரத்திலேயும் சிறிதளவு பிரயாசை யாலேயே அடைந்துவிடலாம்.ஆனால்,சிலரைத்தவிரபெரும்பாலோர்நன்னடத்தையில்லாமல், பொய், சூது, கொலை, கொள்ளை,வஞ்சனை, சோம்பல், தூக்கம், அளவற்ற சாப்பாடு, பணவெறி, மனைவி சொல் கேட்டல்,பெற்றோ ரைப் புறக்கணித்தல் போன்ற விபரீதங்கள் நிறைந்த வாழ்க்கையைத்தான் கலியுகத்தில் வாழ்கின்றனர்.இப்படி தர்மம், நீதி, நேர்மை நசிந்து அராஜகம் அதிகமாகும்போது நல்லவர்களைக் காக்கவும் தர்மத்தை நிலைநாட்டவும் பகவான் "கல்கி அவதாரம்' எடுப்பார்.

"பரித்ராயண சாதுனாம் வினாசாயச் துஷ்கிருதாம்
தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே, யுகே.'

எப்போதெல்லாம்உலகில் அதர் மம் அதிகமாகிறதோ அப்போதெல் லாம் அதனை அழித்து தர்மத்தையும் அமைதியையும் நிலைநாட்ட விஷ்ணு அவதாரம் எடுப்பார்.

கிருஷ்ணாவதாரம்-சரீர தியாகம்

கிருஷ்ணாவதாரம்-சரீர தியாகம்குருக்ஷேத்திரத்தில்அர்ச்சுனனுக்கு யாதவ குலத் தலைவனான கண்ணன் போர்க்களத்திலேயே கீதையைப் போதித்தார். பின் 18 நாட்கள் நடந்த பாரதப் போர் பாண்டவர்களின் வெற்றியுடன் முடிவடைந்தது. பின்னர், தருமருக் குப் பட்டாபிஷேகம் செய்துவிட்டு துவாரகை சென்ற கண்ணன் 36 ஆண்டுகள் அரசாண்டார்.

துவாரகையில் யாதவர்கள் வரம்பு கடந்த சுகபோகத்தில் ஈடுபட்டனர். ஒரு நாள் சாம்பன் என்பவனுக்கு கர்ப்பிணிப் பெண் வேடமிட்டு, அங்கு வந்த ரிஷியிடம், "என்ன குழந்தை பிறக் கும்?' எனக் கேட்டனர். உண்மையை உணர்ந்த ரிஷி கடுங்கோபத்துடன், "இரும்பு உலக்கைதான் பிறக்கும்; அதனால் உங்கள் குலமே அழியும்' என சாபமிட்டார். அதன்படியே பிரபாசபட்டினக் கடற்கரையில் யாதவர் குலம் அனைத்தும் அழிந்தே போனது.இது
கண்டு கவலையுற்ற பலராமர் யோகத்தில் அமர்ந்து உயிர் துறந்து பலராம
அவதாரத்தை முடித்துக் கொண்டார். நடந்த அனைத்தையும் பார்த்த கண்ணன், தன்னைத்தவிர யாவரும் அழிந்தனர்; தானும் தன் அவதாரத்தை முடிக்கும் காலம் வந்துவிட்டது என எண்ணி, குரா மரத்தடி யில் சரிந்து அமர்ந்தார்.அங்கு வந்த ஜரா எனும் வேடன் எய்த அம்புகுறி தவறி கண்ணனின் காலில் தைத்தது; கண்ணனின் உயிர் பிரிந்தது. அவர் சரீர தியாகம் செய்து கொண்ட இடம்தான் இப்போது தோரஹரசாகர் என அழைக்கப்படுகிறது.
இது ஹிரண்ய நதிக்கரையில் உள்ளது. இந்நதிக்கரையில் அர்ச்சுனன் கண்ணன் மகனின்உதவியுடன் சந்தனக் கட்டைகளை அடுக்கி, கண்ணனுக்கு ஈமக்கிரியைகளைச் செய்து முடித்தான். அப்போது கண்ணனின் தேகம் ஒரு மரக்கட்டையாகி நீரில் மிதந்து பூரி கடற்கரையருகில் ஒதுங்கியது. அதை எடுத்து ஒரு சிலை செய்து பூரி ஜகந்நாதர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்தனர்.ராமாவதாரத்தில் ராமனின் அம்பு பட்டு இறந்தவாலியே ஜரா என்ற வேடனாக கிருஷ்ணா வதாரத்தில் வந்து கண்ணன்மீது அம்பெய்து
கண்ணனைக் கொன்றான். "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்பது கடவுள் அவதாரத் துக்கும் பொருந்தும் என்பதை இதனால் நாம் அறிந்து கொள்ளலாம்.கிருஷ்ணாவதாரம் துவாபர யுக முடிவில் நிறைவுற்றது. அதன்பின் தோன்றிய யுகம்தான் நாம் வாழும் இந்த கலியுகம்.

பூர்த்தியான நாள்தான் துவாபர யுகத்தின் கடைசி நாள். அன்று பிற்பகல் 2.00
மணி, 27 நிமிடம், 30 வினாடிகளில் கண்ணன் சரீரத் தியாகம் செய்தார். அதுதான்
கி.மு. 3102-ஆம் ஆண்டு, பிப்ரவரி 18-ஆம் நாள் என்று குறிப்பிடுகிறார்கள். அதன்பின் கி.மு. 3102, பிப்ரவரி 20-ஆம் நாள் கலியுகம் பிறந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.சோம்நாத்அருகேயுள்ள பிரபாசபட்டினத்தில் 7-9-2004 அன்று நடந்த மாநாட்டில் ஞானானந்த சரஸ்வதி சுவாமிகள் தன் ஆராய்ச்சிக் கட்டுரையிலும் இதையே
குறிப்பிட்டுள்ளார். இவர் விஷ்ணு புராணம், மத்சய புராணம், மகாபாரதம், பாகவதபுராணம் ஆகியவற்றில் உள்ள குறிப்புகளின் அடிப்படையில் கணினி மூலம் கணித்துநிர்ணயம் செய்துதான் மேற்கண்ட விவரங்களைத் தெளிவுற விளக்கியுள்ளார். மேலும் கண்ணன் மறைந்த தினமான பிப்ரவரி 18-ஐக் கொண் டாட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். கண்ணன் 125 வருடம், 7 மாதம், 6 நாட்கள் பூவுலகில் வாழ்ந்துள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார். உலகம் தோன்றி 198 கோடியே, 67 லட்சத்து, 73 ஆயிரத்து, 109 ஆண்டுகள் ஆகின்றன.

சாய்பாபாவின் சரித்திரம்

சாய்பாபாவின் சரித்திரம்பகவான் சத்ய சாய்பாபா, 1926ம் ஆண்டு நவ.23ம் தேதி ஆந்திராவின் புட்டபர்த்தியில் பிறந்தார். இவரது இயற்பெயர் சத்யநாராயண ராஜூ. இவரது பெற்றோர் ராஜூ ரத்னகரம், ஈஸ்வரம்மா ஆகியோர். ஒரு நாள் பாபாவின் தாயார் ஈஸ்வரம்மா கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருக்கும் போது, வானில் இருந்து வந்த சக்தி வாய்ந்த ஒளி அவரது வயிற்றில் புகுந்ததாகவும், அதன் பின் கருவுற்றதாகவும் கூறப்படுகிறது. இது ஒரு அதிசய நிகழ்வு என்று ஈஸ்வரம்மா தெரிவித்தார்.

குழந்தை பருவத்திலேயே நாடகம், இசை, நடனம், கதை எழுதுதல், பாடல் இசை அமைப்பு என பல துறைகளில் சாய்பாபா திறமையாக விளங்கினார். 1940 மார்ச் 8ம் தேதி தனது சகோதரருடன் இருக்கும் போது, தேள் ஒன்று சாய்பாபாவை கொட்டியது. இதையடுத்து சில மணி நேரங்கள் தன்நிலை மறந்தவராக இருந்தார். தொடர்ந்து சிரிப்பது, அழுவது, மவுனமாக இருப்பது போன்று இருந்தார். டாக்டர்கள் அவர் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் பட்டுள்ளார் என தெரிவித்தனர். மதகுருக்கள் உள்ளிட்டவர்கள் புட்டபர்த்தியில் இருந்த சாய்பா பாவின் உடலை பரிசோதித்தனர். 1940, மே 23ல் வீட்டில் இருந்த வர்களை அழைத்த சாய்பாபா, கைகளில் இருந்து கற்கண்டு வரவழைத்து காண்பித்தார். அவரது தந்தை, ""என்ன இது மாய மந்திரம்'' என கோபத்துடன் கேட்டார். அதற்கு சாய்பாபா, ""நான் யார் தெரியுமா? நான் தான் சாய்பாபா. ஷீரடி சாய்பாபாவின் மறுஜென்மம் நானே'' என்றும் கூறினார். (ஷீரடி சாய்பாபா 19வது நூற்றாண்டின் இறுதி முதல் 20ம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை மகாராஷ்டிராவில் வாழ்ந்தவர்.

இவர் சாய்பாபா பிறப்பதற்கு 8 ஆண்டுகளுக்கு முன் இறந்தார்). சாய்பாபாவை தேடி பக்தர்கள் வர ஆரம்பித்தனர். சாய்பாபாவும் சென்னை உள்ளிட்ட தென் இந்தி யாவின் பல்வேறு இடங்களுக்குச் சென்று பக்தர்களுக்கு அருள் வழங்கினார். 1944ல் பக்தர்கள் அவருக்கு கோவில் கட்டினர். இந்த இடம் 100 ஏக்கர் பரப் பளவில் அமைந்துள்ளது. தற்போது பிரசாந்தி நிலையமாக விளங்குகிறது. இந்த ஆசிரமம் 1948ல் கட்டப் பட்டு 1950ல் நிறை வடைந்தது. 1954ல் சாய்பாபா, அங்கு சிறு மருத்து வமனையை நிறுவி, அப்பகுதி மக்களுக்கு இலவச மருத்துவ வசதி அளித்தார். 1957ல் வட இந்தியாவின் பல பகுதிகளின் கோவில்களுக்கு சாய்பாபா பயணம் செய்து அருளாசி வழங்கினார். வெளிநாடுகளில் உள்ளவர்களும் இவரது சக்தியை நம்பி பக்தர் களாக தொடர்ந்தனர்.

சாய்பாபா அதிசயம்: பக்தர்களால் "அவதாரம், கடவுள்' என அழைக்கப்பட்டவர் சாய்பாபா. லிங்கம், விபூதி, மோதிரம், வாட்ச் போன்றவற்றை வரவழைத்து மக்களை ஆச்சர்ய படுத்தினார். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள் மூலம் சமூக தொண்டு செய்தார். இவரது கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு கல்வியையும், ஒழுக்கத்தையும் போதிக்கிறது. இந்தியாவில் ஜனாதிபதி, பிரதமர், முதல்வர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை, தனது அருளுரையால் ஈர்த்தார். 137 நாடுகளில் சாய்பாபாவுக்கு பக்தர்கள் உள்ளனர்.

சமூகத் தொண்டு:ஆந்திராவில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் நிலவிய கடுமையான குடிநீர் பஞ்சம், பாபாவின் ரூ.200 கோடி திட்டத்தால் முடிவுக்கு வந்தது. அம்மாவட்டத்திலுள்ள 50 லட்சம் மக்கள் இன்றும் பயனடை கின்றனர். இத்திட்டம் 9 மாதங்களில் முடிக்கப்பட்டது. 2 ஆயிரத்து 500 கி.மீ. தூர குழாய்கள், 268 தண்ணீர் தொட்டிகள், 124 நீர்த்தேக்கங்கள், 200 நீரேற்று நிலையங்கள் ஆகியன 700 கிராமங் களுக்கும் 11 நகரங்களுக்கும் பயனளிக்கின்றன. இத்திட்டத்துக்கு ரூ.30 கோடி நிதியளிக்க மத்திய அரசு முன்வந்தபோதும் பாபா மறுத்துவிட்டார். அவரது 70வது பிறந்த நாளில் இத்திட்டம் செயலுக்கு வந்தது. சத்ய சாய் அமைப்பு ஏராளமான இலவச கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங் களின் மூலம் சேவை செய்கிறது. உலகளவில் 114 நாடுகளில் 1,200 சத்ய சாய்பாபா மையங்கள் இயங்குகின்றன. தமிழகத்தின் தலைநகரான சென்னையின் குடிநீர் தாகத்தை போக்கும் வகையில் கிருஷ்ணா நதி நீரை தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் கொண்டுவர நிதியுதவி வழங்கினார்."அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய், எல்லோருக்கும் உதவு,எவரையும் வெறுக்காதே' இதுவே பகவான் சத்யபாபாவின் தாரக மந்திரம்.

சாய்பாபாவின் சேவைகள் : * சத்ய சாய் தனது பக்தர்களுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட சமூக சேவை நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள 136 நாடுகளில் இவை இயங்கி வருகின்றன.
* சமூகம், கல்வி, மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட பல துறைகளில் இவரது பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
* பெங்களூருவில் உள்ள பாபாவின் ஆசிரமத்திற்கு அருகில் 2 கிலோ மீட்டர் தொலைவில் முதியோருக்காக "விருத்தாஸ்ரமம்' என்ற ஒன்று கட்டப்பட்டுள்ளது. இங்கு முதியவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
* பாபா குறித்த நூல்கள், "சிடி'க்கள் என அனைத்தும் ஆஸ்ரம வளாகத்திலேயே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
* பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக சத்யசாய் கோகுல ஆசிரமத்தில் 240 அறைகள் உள்ளன. இங்கு கட்டணமாக நாள் ஒன்றுக்கு ரூபாய் 150 மட்டும் வசூலிக்கப்படுகிறது.
* ஆந்திராவில் உள்ள அனந்தபூர், வடக்கு கோதாவரி மற்றும் கிழக்கு கோதாவரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒரே ஆண்டில் அம்மாவட்டங்களில் உள்ள பகுதிகளுக்கு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்தார்.
* உலக அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி பாபா அவர்கள் புட்டபர்த்தி மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்தார்.
* ஒயிட்பீல்டு ஆசிரமம் அருகே சத்யசாய் மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு சிகிச்øகாக வரும் நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* இதே போன்று, சத்யசாய் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையின் உதவியுடன் இதயம் மற்றும் நரம்பு தொடர்பான கொடிய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மொத்தம் 52 ஏக்கரில் இம்மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 333 படுக்கைகள், 12 அறுவை சிகிச்சை கூடங்கள், ரத்தவங்கிகள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.
* சென்னை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த தெலுங்கு கங்கை திட்டத்தை சரி செய்து தீர்வு வழங்கியது சாய் பாபாவின் சாயி மத்திய அறக்கட்டளை.
* நாட்டில் இயற்கை பேரழிவு ஏற்படும் சமயங்களில் அப்பகுதியில் உள்ள சாயி அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் உதவிகள் செய்கின்றனர்.

""எனக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விடு'' : 1976ல் நடந்த நிகழ்ச்சி இது. சாய்பாபா பிருந்தாவனத்தில்(சாய்பாபாவின் இருப்பிடம்) இருந்தார். இன்ஜினியர்கள் சில கட்டடத் திட்டங்களை வைத்துக் கொண்டு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தனர். சாய்பாபா அங்கிருந்த மாணவர்களைப் பார்த்து, ""டியர் பா#ஸ், உங்களுக்காக ஒரு ஹாஸ்டலை கட்ட ஏற்பாடு செய்திருக்கிறேன். அது வசதியான அறைகள் கொண்டதாக இருக்கும்,'' என்றார்.

ஒரு மாணவர் பாபாவை நோக்கி, ""சுவாமி! நாங்கள் இங்கு சுகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம். புதிய ஹாஸ்டல் எங்களுக்குத் தேவையில்லை. இந்த பிருந்தாவனமே எங்களது இல்லம்'' என்றார். ""அன்புள்ள குழந்தைகளே! பிருந்தாவன் உங்களது என்று சொல்வது சரியே. அதே சமயத்தில் சிறுவர்களாகிய நீங்கள் இடம் போதாமல் முடங்கிக் கிடப்பதைப் பார்த்து என் மனம் பொறுக்கவில்லை. உங்களுக்கு வசதி செய்து தருவது தான் என் கடமை. வரும் வியாழன் அன்று புதிய ஹாஸ்டலுக்கான அடித்தளம் போடப்படும்'' என்று சொல்லிவிட்டு தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களுக்கு ஆசி அளிக்க கிளம்பினார்.
அடுத்த இரண்டுநாட்களுக்குள் அடித்தளமிடும் பூமிபூஜை நடக்க இருந்தது. இன்ஜினியர்கள் சுறுசுறுப்பாக வேலை செய்தார்கள். மாணவர்களுக்கு இச்செயல் பிடிக்கவில்லை. அடுத்தநாள் ஹாஸ்டலுக்கு பாபா வந்தபோது, வயதில் சிறிய மாணவன் ஒருவன், பாபாவின் கையில் ஒரு கடிதத்தைத் தந்தான். அவர் அதைப் படித்து விட்டு சிரித்து விட்டார். வார்டனை வரச் சொல்லி அதை உரக்கப் படிக்குமாறு கூறினார். அதில் கீழ்க்கண்டவாறு இருந்தது.

""அன்பு மிக்க சாயி அம்மா! தங்களின் மலர்ப்பாதங்களுக்கு எங்கள் பணிவான வணக்கம். தங்களுக்கு எங்களிடம் வருத்தமா? தங்களின் அமைதியை நாங்கள் கெடுக்கிறோமா? ஒழுக்கவிதிகளை மீறி கட்டுப்பாடின்றி நடக்கிறோமா? அவ்வாறு இல்லாவிட்டால் பிருந்தாவனத்தின் எல்லையை விட்டு எங்களை ஏன் அனுப்ப முயற்சி செய்ய வேண்டும்? மிகவும் ரம்மியமான இந்த பிருந்தாவனத்தில் தான் நாங்கள் இனிமையையும், அன்பையும், பாதுகாப்பையும் நெருக்கமாக நாங்கள் உணர்கிறோம். வானுலக தேவர்கள் கூட இந்த அன்பை, ஆனந்தத்தை அனுபவிக்க ஆசைப்படுவார்கள்.''
இதயம் நிறைந்த பாசத்துடன் தங்கள் குழந்தை

பின்குறிப்பு: பிருந்தாவனத்தில் இருந்து வெகு தூரத்தில் புதிய ஹாஸ்டல் கட்டவேண்டும் என்று தாங்கள் உறுதியாக இருந்தால், தயவு செய்து தங்களுக்கும் ஒரு புதிய இல்லம் அமைத்துக் கொண்டு எங்களுக்கு மிக அருகிலேயே இருக்க வேண்டுகிறோம். வார்டன் இக்கடிதத்தைப் படித்து முடித்ததும், கண்ணீர் விடாத மாணவர்கள் யாருமே இல்லை. ஒரே குரலில் அனைவரும், ""சுவாமி! தயவு செய்து எங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளுங்கள்'' என்று கெஞ்சினர். இதைக் கண்டு பாபாவின் உள்ளம் உருகியது. அவர் உடனே தலைமை இன்ஜினியரை அழைத்து, வரைபடங்களை வேறு மாதிரி வரையும்படி கேட்டுக் கொண்டார்.
பிருந்தாவன பகுதிக்குள்ளேயே புதிய ஹாஸ்டலைக் கட்டுவதற்கான வரைபடங்கள் தயாரிக்கப்பட்டன. இந்த பரபரப்பான செய்தியைக் கேட்டதும் மாணவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். பூமிபூஜை நாளன்று ஆரத்திக்கான விளக்கை ஏற்றும்போது மாணவன் ஒருவன், ""சுவாமி! நீங்கள் எங்களுக்காக எவ்வளவோ செய்கிறீர்கள். தங்களுக்குக் கொடுக்க எங்களிடம் ஒன்றும் இல்லையே!'' என்ற சொல்லி கண்ணீர் விட்டான். அதற்கு பாபா""ஆனந்தக் கண்ணீர், உன் மிருதுவான கன்னத்தில் வழிகிறதே! அது போதாதா? எனக்கு வேண்டியது அதுவே! எனக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்து! நான் மிகவும் விரும்புவது உன் மகிழ்ச்சி மட்டுமே!'' என்றார். பிருந்தாவன் அமைப்பில் உள்ள உயர்ந்த கட்டிடம் பாபா மாணவர்கள் மீது கொண்டுள்ள அளவற்ற அன்புக்கு ஒரு இனிய நினைவுச் சின்னம்.

பிறப்பும் இறப்பும் எனக்கில்லை : ஒருமுறை பிறந்த நாள் விழாவில் சத்யசாய்பாபா சார்பில் ஒரு செய்தியை சாய்பக்தர் ஒருவர் வாசித்தார். அதில், ""இந்த உடலுக்கு பிறப்போ இறப்போ கிடையாது. ஆனால், நீங்கள் எனக்கு அன்பின் காரணமாக விழா எடுக்கிறீர்கள். ஆம்...அன்பே உலகில் மிக உயர்ந்த சக்தி. இங்கே அனைவரும் ஒன்று கூடி சகோதர, சகோதரிகளாக அமர்ந்துள்ளீர்கள். உலகத்தில் சாந்தி ஏற்பட நாம் முயற்சிக்க வேண்டும். குறுகிய உணர்வைக் கொன்றுவிட்டு ஒற்றுமையையும், கூட்டுறவையும் வளரச் செய்தால் அதுவே உண்மையான மனிதத்தன்மையாகும்,'' என்று கூறப்பட்டிருந்தது.

""துயரத்தைத் தாங்கும் சக்தியைத் தருகிறேன்'' அன்றே சொன்னார் சத்யசாய்பாபா : ராமபிரானைப் பற்றி நூற்றுக்கணக்கான புத்தகங்கள் எழுதிய ராமசரண் என்ற பண்டிதர் பாபாவின் பக்தர். அவர் உடல் உபாதைகளால் அவதிப்பட்டார். ராமசரணின் நண்பர்கள் பாபாவிடம் சென்று நிவாரணம் பெற்றுவரும்படி வற்புறுத்தினார்கள். ஆனால், "வினைப்பயனை அனுபவித்துக் கழிப்பதே நல்லது' என்றார் ராமசரண். ராமசரண் படும் இந்த துன்பம் குறித்து பாபா ஒருமுறை குறிப்பிட்டார். ""கடவுள் எப்போதும் காப்பாற்ற மாட்டார் மற்றும் தண்டனையும் அளிக்கமாட்டார். நீங்கள் அனுபவிக்கும் அனுபவங்கள் ஒவ்வொன்றும் நான் உங்களுக்கு அளித்த பரிசுகள். அவைகள் என்னால் உண்டாக்கப்பட்டவையல்ல. அவைகளை உருவாக்குபவர்கள் நீங்களே,'' என்றார். ""அப்படியானால் துன்பங்களை நீக்க கடவுளின் பங்குதான் என்ன? என்றார் ஒரு பக்தர்.அதற்கு பதிலளித்த பாபா ""நான் உங்களுக்கு துயரத்தைத் தாங்கிக் கொள்ளும் வலிமை அளிக்கிறேன். தூக்கமுடியாமல் சில்லரைக் காசு மூடையைச் சுமந்து வருபவனிடம் ரூபாய் தாளாக மாற்றித் தந்தால் சுமை எப்படி குறையுமோ, அதுபோல துயரங்களைச் சுமந்து வருபவனின் சுமையை குறைத்து லேசாக்கிவிடுகிறேன். அப்போது துயரச்சுமை உன்னை அழுத்துவதில்லை'' என்றார்.

சப்த கன்னியர்கள்

சப்த கன்னியர்கள்

சப்தமாதாக்கள் அல்லது சப்தகன்னியர் வழிபாடு என்பது அம்பிகை வழிபாட்டின் அங்கமாகக் காணப்படுகின்ற கிராமிய தெய்வ வழிபாடு ஆகும். சக்தி அம்சத்தில் சப்த மாதர்கள் வழிபாடு சிறப்பிடம் பெறுகிறது.
கி.பி 510 ஆம் ஆண்டில் சப்தகன்னியர்கள் வழிபாடு சிறப்புற்று இருந்ததாக கல்வெட்டுக்களிலும், இலக்கியங்களிலும் தெரிவிக்கப்பட்டுள்ளன. சப்தகன்னியர்கள் எழு தாய்மார்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர். 
சப்தகன்னியர்கள் பிறந்த கதை

அண்ட முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க வேண்டி மனித கர்ப்பத்தில் பிறக்காமலும், ஆண் பெண்  இணைவில் பிறக்காமலும், அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்திலிருந்து உருவானவர்களே இந்த சப்த கன்னிகைகள். அவர்கள் ப்ராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி முதலான ஏழு கன்னிகைகள் சப்த மாதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

நம் உடலோடு தொடர்பு கொண்டுள்ளவர்கள்

சப்தமாதர்களுக்கும் நம் உடலுக்கும் தொடர்பு உள்ளதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அவை : பிராம்மி தோலுக்கு தலைவி. மகேஸ்வரி நிணத்திற்கு தலைவி. கவுமாரி ரத்தத்திற்கு தலைவி. நாராயணி சீழிற்குத் தேவதை. வாராஹி எலும்பின் தெய்வம். இந்திராணி சதையின் தேவதை. சாமுண்டி நரம்பின் தலைவி.

ப்ராம்மி

அம்பிகையின் முகத்தில் இருந்து உருவானவள் பிராம்மி. மேற்கு திசையின் அதிபதி.கல்விக்கு அதிபதியான சரஸ்வதி என்ற கலைவாணியின் அம்சமாவாள். நான்முகனின் அம்சமாய்த் தோன்றியவள். நான்கு முகங்கள், நான்கு கரங்கள். மஞ்சள் வண்ணம் பிடித்த வண்ணம். கமண்டலம், அக்ஷமாலையைப் பின்னிரு கரங்களில் ஏந்தி முன்னிரு கைகளில் அபயவரதம் காட்டுவாள். ருத்திராக்ஷ மாலை தரித்து அன்னவாகனத்தில் அமர்ந்திருப்பவள்.

மான் தோல் அணிந்திருப்பவள்.ஞானம் தந்து அஞ்ஞானம் நீக்குபவள். இவளது காயத்ரி மந்திரத்தை படிக்கும் மாணவர்கள்  தினமும் ஜபித்து வந்தால்,ஞாபக மறதி நீங்கிவிடும். (அசைவம் தவிர்க்க வேண்டும். வீட்டிலும், வெளியிலும் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.) ஐ.ஏ.எஸ்., வங்கிப்பணி, அரசுப்பணி முதலானவற்றிற்கு தேர்வு எழுதுபவர்கள் தினமும் 108 முறை மேற்கு நோக்கி ஜபித்துவந்தால் வெற்றி  நிச்சயம்.

வாராஹி

அம்பிகையின் பிருஷ்டம் பகுதியிலிருந்து உருவானவள் வராஹி. நமது பிருஷ்டம் பகுதி கழிவுகளை வெளியேற்றுவதும்,உடம்பைத் தாங்குவதும்,ஓய்வு தருவதும் ஆகும். இதன் சக்தியாக பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள். வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும். இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு. இது சிவனின் அம்சமாகும்.

அம்பிகையின் அம்சமாக பிறந்ததால், இவள் சிவன்,ஹரி,சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள். எதையும் அடக்க வல்லவள். சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருகபலமும்,தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள். பிரளயத்தில் இருந்து உலகை மீட்டவளாகச் சொல்லப்படுகின்றாள். எருமையை வாகனமாக உடையவள்.

கலப்பை, உலக்கை ஆகியவற்றைப் பின்னிரு கரங்களில் தாங்கி அபயவரதம் காட்டுவாள். லலிதாம்பிகையின் படைத்தலைவி இவளே. தண்டினி என்ற பெயருடன் சிம்ஹ வாஹினியாய்க் காட்சி கொடுப்பாள். இவளை வணங்குவோர் வாழ்வில் சிக்கல்கள், தடைகள், தீராத பகைகள் தீரும்.

மகேஸ்வரி

அம்பிகையின் தோளில் இருந்து உருவானவள் மகேஸ்வரி. ஈஸ்வரன் இவளது சக்தியால்தான் சம்ஹாரமே செய்கிறார். மகேசனின் சக்தி இவள். முக்கண் படைத்தவள். ஜடா மகுடத்துடன் காட்சியளிப்பாள். மான், மழு ஏந்தி, அபயவரதம் காட்டி நான்கு கரங்களுடன் இருப்பாள். தூய வெண்ணிறமே பிடித்த வண்ணம். வடகிழக்கு என்னும் ஈசானியம் திசையை நிர்வகித்து வருபவள்.

இவளை வழிபட்டால்,நமது கோபத்தைப் போக்கி சாந்தத்தை அளிப்பாள்.இவளது வாகனம் ரிஷபம் ஆகும். அம்பிகையின் இன்னொரு அம்சமாக போற்றப்படுகிறாள்.

இந்திராணி:

அம்பிகையின் பிறப்புறுப்பிலிருந்து தோன்றியவள் இந்திராணி. இந்திரனின் அம்சம். கற்பகமலர்களை கூந்தலில் சூடியவள். யானை இவளது வாகனம். சொத்து சுகம் தருபவர். உலகத்தின் சகல உயிர்களும் தோன்ற பெண் பிறப்புறுப்புதான் காரணமாக இருக்கிறது.

தன்னை வழிபடுபவர்களின் உயிரைப் பேணுவதும், அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணையை அமைத்துத் தருவதிலும், மிகவும் தலைசிறந்த அதேசமயம் முறையான காமசுகத்தைத் தருவதும் இவளே!.

மணமாகாத ஆண்கள் இவளை வழிபட்டால், அவர்கள் மிகச்சிறந்த மனைவியையும், கன்னிப்பெண்கள் இவளை வழிபட்டால், மிகப்பொருத்தமான கணவனையும் அடைவார்கள்.

இந்திரனின் சக்தியான இவள் ரத்ன மகுடம் தரித்தவள். பொன்னிற மேனி உடையவள். நாற்கரத்தினள். சக்தி ஆயுதமும், வஜ்ராயுதமும் தாங்கி அபயகரம் காட்டுவாள். சத்ரு பயம் போக்குபவள். மாகேந்திரி என்ற பெயரையும் கொண்டவள்.

கௌமாரி

கவுமாரி. கவுமாரன் என்றால் குமரன். குமரன் என்றால் முருகக்கடவுள். ஈசனும், உமையாலும் அழிக்க இயலாதவர்களை அழித்தவர்தான் குமரக்கடவுள் எனப்படும் முருகக்கடவுள். முருகனின் அம்சமே கவுமாரி.

இவளுக்கு சஷ்டி, தேவசேனா என்ற வேறு பெயர்களும் உண்டு. மயில் வாகனத்தில் வருபவள். அஷ்ட திக்கிற்கும் அதிபதி இவளே. கடலின் வயிறு கிழியுமாறு வேற்படையைச் செலுத்திய சக்தி இவள். இவளை வழிபட்டால், குழந்தைச் செல்வம் உண்டாகும். இளமையைத் தருபவர்

வைஷ்ணவி

அம்பிகையின் கைகளில் இருந்து பிறந்தவள் வைஷ்ணவி. இவள் விஷ்ணுவின் அம்சம். கருடனை வாகனமாக கொண்டவள். வளமான வாழ்வு தருபவர். சகல சவுபாக்கியங்கள்,செல்வ வளம் அனைத்தையும் தருபவளே வைஷ்ணவி. குறிப்பாக தங்கம் அளவின்றி கிடைத்திட வைஷ்ணவி வழிபாடு மிக அவசியமாகும்.

சாமுண்டி

ஈஸ்வரனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய பத்திரகாளியானவள், தனது கோரமான முகத்தை மாற்றி சாமுண்டியாக ஆனவள். இவள் தனது ஆறு சகோதரிகளுடன் சேர்ந்து தாருகன் என்ற அரக்கனை அழித்தாள்.

பதினாறு கைகள், பதினாறு விதமான ஆயுதங்கள், மூன்று கண்கள், செந்நிறம், யானைத் தோலால் ஆன ஆடையை அணிந்திருப்பவள். சப்தகன்னிகைகளில் முதலில் தோன்றியவள் இவளே! சப்த கன்னிகைகளில் சர்வ சக்திகளையும் கொண்டிருப்பவள். மனிதர்களுக்கு மட்டுமல்ல; தேவர்களுக்கே வரங்களை அருளுபவள் இவளே!

இவளை வழிபட்டால்,எதிரிகளிடமிருந்து நம்மைக் காப்பதோடு,நமக்குத் தேவையான சகல பலங்கள்,சொத்துக்கள்,சுகங்களைத் தருவாள். இனி வேறுவழியில்லை என்ற சூழ்நிலை ஏற்படும்போது, இவளை அழைத்தால், புதுப்புது யுக்திகளைக் காட்டுவதோடு, முடியாததையும் முடித்துவைப்பாள்.

படைப்பு ரகசியம்

சப்த கன்னிகைகளின் சூட்சும படைப்பு ரகசியம் என்னவெனில்,பெண்ணின் சக்தியிலிருந்து பெண்மையாக உருவெடுத்தவர்கள். கன்னிகையாக இருப்பதற்குக் காரணம் மேலோட்டமாக மட்டுமே விளக்க முடியும். சப்த கன்னிகையின் ஸ்தானத்தை உணர விரும்புபவர்கள் தொடர்ச்சியாக ஐந்து வருடங்களுக்கு தினமும் இந்த சப்த கன்னிகைகளின் காயத்ரி மந்திரங்களில் ஏதாவது ஒன்றை ஜபித்துவந்தால் உணரலாம்.

மனதால் நினைத்தாலே அபயம் கிட்டும்

கன்னித்தன்மை (விர்ஜின்) என்பது உயிர்களை உருவாக்கி அளிக்கும் நிலைக்கு முந்தைய பவித்ரமான நிலை. கன்னித்தன்மை என்றால் மிகவும் தூய்மையான என்றும் ஒரு அர்த்தம் உண்டு.

கன்னித்தன்மையை தாய்மைக்கு இட்டுச்செல்லலாம். அதற்கு அனுமதி ஒவ்வொரு ஜீவனுக்கும் உண்டு. ஆனால்,கன்னித்தன்மையை களங்கப்படுத்தக் கூடாது. (அப்படி களங்கப்படுத்தினால் களங்கப்படுத்துபவனுக்கு மேற்கூறிய சப்தகன்னிகைகளின் வரங்களில் ஏதாவது ஒன்று மட்டுமாவதை இழந்தே ஆக வேண்டும் என்பது சாபம்) இவர்களின் அவதார நோக்கமும் தங்களுடைய முழுமையான சக்தியோடு விளங்கிடுதல் மற்றும் ஆண்மைசக்தி எனப்படும் சிவமூலத்தை துணையாகக் கொள்ளாததும் இவர்களின் சிறப்பாகும்.

சப்தகன்னியர்கள் பெண்களுக்கு மட்டுமல்ல;ஆண்களுக்கும் ஒரு பலமே!
சப்த கன்னியரை, அன்புடன் மனதால் நினைத்தாலே போதும். நம் அன்னையாக, உயிர் தரும் தோழியராக, அன்பும், அபயமும், அருளும் அற்புத தேவியர்.

நமது இந்துதர்மம் பற்றி அறிஞர்களின் கருத்துக்கள்

நமது இந்துதர்மம் பற்றி அறிஞர்களின் கருத்துக்கள்

வேதங்களின் ஏதாவது ஒரு பகுதியை நான் படிக்கும்போது,தெய்வீகமான, இதுவரை அறிந்திராத ஒளி என்னுள் வெளிச்சம் தருவதை உணர்கிறேன்.வேதங்களின் ஒப்பற்ற போதனையில் பேதம் இல்லை.அது அனைத்து வயதினருக்கும், பிரதேசத்தினருக்கும்,நாட்டினருக்கும்,ஜாதிக்கும் உரியது.

அது பேரறிவை அடைவதற்கான பெருவழி.அந்த வழியில் செல்லும்போது,கோடைகால இரவில் நட்சத்திரங்கள் ஒளிரும் வானவெளியின் கீழ் இருப்பதைப் போல் உணர்கிறேன்.


ஹென்றி டேவிட் தோரா(1817 டூ 1862)அமெரிக்காவின் புகழ்பெற்ற தத்துவ அறிஞர்,எழுத்தாளர்,சமூக விமர்சகர்.




இந்த உலகின் மிகப்பெரிய நம்பிக்கைகளுள்,பிரபஞ்சக் கோட்பாட்டோடு பொருந்தி வரக்கூடிய காலக்கணக்கைக் கொண்டிருக்கும் ஒரே மதமும் அதுவே(இந்து மதம்)

கார்ல் சகன் (1934 டூ 1996) புகழ்பெற்ற நவீன வானியற்பியலாளர்.

பண்டைய காலத்தில் வாழ்ந்த ரிஷிகள் மூலமாக இறைவன்,அனைத்து புனித நூல்களையும் இந்துக்களுக்கு அளித்துள்ளான்.

பிரம்மா அந்த ரிஷிகளில் முதன்மையானவர்.படிப்படியான ஆய்வுகளுக்குப்பின் நான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன்.


ரிக்,யஜீர்,சாமம்,அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களும்,பிரம்மாவின் மிகச்சிறந்த அறிவுநூல்களாகும்.


முகமது தாரா ஷீ கோ(1627 டூ 1658)

ஷாஜஹானின் மூத்த மகன்

பலகோடி மடங்கு நன்மை தரும் கிரகணகால மந்திர ஜபம்

பலகோடி மடங்கு நன்மை தரும் கிரகணகால மந்திர ஜபம்

புராதன இந்துபுராண நூல்கள் தெரிவிப்பது என்னவெனில்,கிரகணகாலத்தில் எந்த மந்திரத்தையும் ஒருமுறை ஜபித்தாலும்,அந்த மந்திரத்தின் சக்தி நூறுகோடி மடங்கு ஜபித்ததற்கான பலனைத் தரும்.

மகா விஷ்ணுவின் கல்கி அவதாரம்,குதிரையில் அமர்ந்து வருவது குறித்து புராணங்கள் கூறும் தாத்பரியம் என்ன?

மகா விஷ்ணுவின் கல்கி அவதாரம்,குதிரையில் அமர்ந்து வருவது குறித்து புராணங்கள் கூறும் தாத்பரியம் என்ன?
சமுதாயம் முற்றிலும் சீரழிந்து,இனி சீர்திருத்த இயலாது என்கிற சூழலில்,கல்கி அவதாரம் நிகழும்.உலக வெப்பம் படிப்படியாக உயர்ந்து,தாவரங்களைத் தோற்றுவிக்கும் தகுதியை பூமி இழந்துவிடும்.உணவின்றி விலங்குகளும் மடிந்துவிடும்.மனிதர்கள் சக மனிதரையே உணவாக்க முயற்சிப்பர்.அப்போது கல்கி அவதாரம் நிகழும்.

வேகமாக செயல்படும் வாகனம் குதிரை.தனியொருவராக போர் புரியக் கிளம்பும் கல்கிக்கு அந்தக்குதிரை உதவும்.எல்லாம் அற்றுப்போன அந்த வேளையில்,நமது பண்பாட்டில் ஊறிய ஒரு குடும்பத்தில்(திருநெல்வேலி மாவட்டம் என்று ஒரு கருத்து பேசப்படுகிறது)தோன்றுவார்.அந்தக்குடும்பத்தின் பராமரிப்பில் இருக்கும் குதிரை,அவருக்கு வாகனமாக செயல்படும்.
வெப்பம் அதிகமாக,அதிகமாக வாழ்க்கைக்குத் தேவையான நீர்வளம் குறையும்.உயிரினங்களில் வாழ்வு ஸ்தம்பிக்கும்.புதுப்படைப்புக்குத் தோதாக வெப்பத்தில் எல்லாமும் மூழ்கிவிடும்.இதையே பிரளயம் என்கின்றன புராணங்கள்.அதன் பிறகு படைப்பு தொடரும்.படைத்தல்,காத்தல்,அழித்தல் ஆகியன பரம்பொருளின் பொறுப்பில் இருப்பதால்,படைப்பதற்காக அழிக்க முற்படுகிறார் கல்கி என்பது புராணத்தகவல்.

பரிகாரக்கோயில்களுக்கான சுலப விளக்கம்

பரிகாரக்கோயில்களுக்கான சுலப விளக்கம்

பூமியில் எல்லா கனிம வளங்களும் இருப்பினும் எல்லாமும் எல்லா இடத்திலும் கிடைக்காது.எது எது எந்த இடத்தில் உள்ளது என தக்கவர்களைக்கொண்டு ஆராய்ந்து அவர்கள் சொல்லும் அந்தந்த இடங்களில்தான் அது அது கிடைக்கும்.
உதாரணமாக தங்கம் வேண்டுமானால் கோலாரிலும்,நிலக்கரி நெய்வேலியிலும்,பெட்ரோல் வேண்டுமானால் நரிமணத்திலும் தோண்ட வேண்டும்.
அதுபோல்,அவரவர் பிரச்னைகளுக்கு ஏற்ப திருவருள் விளங்கித் தோன்றும் திருக்கோயில்களைக் கண்டு நம் மெய்ஞானிகளாகிய நால்வர் பெருமக்கள் ஆய்வு செய்து அதற்குரிய தலங்களை தேர்வு செய்து பதிகங்கள் பாடி நமக்கு வழிகாட்டியுள்ளனர்.நமது ஆஸ்தான ஜோதிடர்களும் நமக்கு வழிகாட்டிவருகின்றனர்.

நன்மை செய்பவர்களாகவே இருங்கள்

நன்மை செய்பவர்களாகவே இருங்கள்

சொன்னவர்: திருமுருக கிருபானந்தவாரியார்
வயலில் தூவப்படும் சில விதைகளே,பல ஆயிரம் மடங்காக பயிர்களைத் திருப்பித்தரும்.அதைப் போலவே,ஒருவர் செய்யும் நன்மையும்,தீமையும் பல மடங்காகப் பெருகி அவரிடமே வந்து சேரும்.
ஆகவே,எப்போதும் பிறருக்கு நன்மை செய்பவர்களாகவே இருங்கள்.சந்தர்ப்ப சூழ்நிலைகள் சரியாக இல்லாவிட்டாலும் கூட,நன்மை செய்வதிலிருந்து விலகாதீர்கள்.இவ்வாறு செயல்படுபவர்களுக்கே விரைவில் இறைவன் அருள் கிடைக்கும்.