Monday, October 1, 2012
கடவுளின் அருளை பெற பலி தேவை இல்லை கனிகள் போதும்
ஒரு உண்மையான ஆன்மிகவாதி , யாருக்கும் தீங்கு செய்ய நினைக்க மாட்டார், மேலும் பிற உயிர்களை தன் உயிர் போல் மதிப்பார் .
உலகில் முக்கிய மதங்கள் அனைத்தும உயிர் கொலையை கண்டிக்கின்றன மாமிசம் உண்பவர்கள், தங்கள உயிரை போன்று மற்ற உயிர்களையும் மதிக்க வேண்டும்.
அசைவம் உண்பவர்கள் தங்களை "சைவர்கள்' என்று அழைத்துக் கொள்வதே ஒரு வகையில் அபத்தம்தான்!
கடவுளின் அருளை பெற விரும்புகிறவர்கள் மாமிசத்தைப் புறக்கணிக்க வேண்டியது அவசியம். இதே கருத்தைதான் திருவள்ளுவரும், ""பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை; அருளாட்சி ஆங்கில்லை ஊன் தின்பவர்க்கு'' என்று அடித்துச் சொல்கிறார்.
அதாவது, "எப்படி செல்வத்தைப் பாதுகாக்காதவனுக்கு அதனால் வரும் நன்மைகள் கிடைக்காதோ அதுபோல் மாமிசம் உண்பவர்களுக்கும் இறையருள் கிடைக்காது' என்பது அவருடைய கருத்து.
ஜோதிப்பூர் நகரத்தில "லாடு பாவா' என்ற ஆன்மிகவாதி இருந்தார். இரவும், பகலும் இறைவன் பெயரை ஓதுவதையே தவமாகச் செய்து கொண்டிருந்தார் ,
"கடவுளுக்கு காணிக்கை' என்ற போர்வையில் மிருக வதை செய்பவர்களைக் கண்டால் "லாடு பாவா'வின் உள்ளம் பதறும். அப்படிப்பட்டவர்களிடம் ஓடோடிச் சென்று அன்பாகப் பேசுவார். "உயிர்க் கொலை பெரும் பாவம்' என்று உபதேசிப்பார்.
மேலும் நாட்டின் பல் பகுதிகளுக்கும் சென்று மிருகவதைக்கு எதிரான கருத்துகளை பரப்பினார் ஒரு முறை கோவூர் என்ற கிராமத்துக்கு "பாவா' சென்றார் அங்கே ஒரு காளி கோயிலில் தினமும் ஏராளமான மிருகங்களை பலி கொடுத்து அவற்றை பிரஷாதமாக சமைத்து தின்றுத் தீர்த்தார்கள்.
பாவாவுக்கு இது பெரும் கவலையை ஏற்ப்படுத்தியது . தெரு தெருவாக சென்று மிருக பலிக்கு எதிராக கடுமையாகப் பிரசாரம் செய்தார்.அவரது சாஸ்திர அறிவும் கனிவான அணுகு முறையும் கிராம மக்களை வெகுவாகக் ஈர்த்தது . அவர்களில் பலர் கோயிலில் பலியிடுவதற்காக மிருகங்களையும், பறவைகளையும் நேர்ந்து விடுவதை உடனடியாக நிறுத்திக் கொண்டனர்.
இதனால் கோயிலின் பெயரால் வயிறு வளர்த்துக் கொண்டிருந்த ரத்த வெறி பிடித்த பக்த கோடிகளுக்கு பித்து பிடித்த மாதிரி ஆயிற்று! தங்கள் பிழைப்பைக் கெடுத்த "லாடு பாவா'வைக் கொன்றுவிட வேண்டுமென்று தீர்மானித்தார்கள்.
தங்கள் திட்டப்படி "லாடு பாபா'வை கடத்தி கொண்டு வந்தார்கள். காளி கோயிலுக்கு அவரை இழுத்து வந்து கம்பத்தில் அவரை கட்டினார்கள். அவர்கள் கோபத்தோடு, எங்கள் பிழைப்பை கெடுப்பதில் உனக்கு என்னடா அத்தனை ஆசை? எத்தனையோ வருஷங்களாக நாங்கள் காளிக்கு பலிகொடுத்துக் கொண்டிருக்கிறோம். அன்னைக்கு அது பிடிக்காதென்றால் அவளே வந்து அதைத் தடுத்திருப்பாளே?'' என்று சீறினான்.
அந்த வெறி பிடித்த கும்பலுக்கும் நெறிமுறைகளைப் போதிக்க பாவா தயங்கவில்லை.
மனிதர்களாகிய நமக்கு ஆறு அறிவு உண்டு. நாம் செய்கிற நன்மை, தீமைகளுக்கு உடனடியாக இறைவனிடமிருந்து பாராட்டோ, தண்டனையோ கிடைப்பதில்லை. ஆனால் இறைவன் நாம் செய்யும் அனைத்தையும் ஒன்றுவிடாமல் கண்காணித்து கொண்டிருக்கிறான். தாங்க முடியாத வியாதிகளால் தினந்தோறும் செத்துப் பிழைக்கிறவர்கள் அனைவருமே முற்பிறவிகளில் மாமிசம் தின்றவர்களும், உயிர்க் கொலை செய்தவர்களும்தான். எனவே மிருக வதை செய்வதை உடனடியாக நிறுத்துங்கள்.
அன்போடு கொடுக்கின்ற கனிகள், இலைகள், தண்ணீர் இவற்றாலேயே இறைவன் திருப்தி அடைந்துவிடுவான். இரக்கமின்றி மாமிசம் தின்பவர்கள் மீது அவனுக்கு மட்டும் எப்படி இரக்கம் வரும்?'' என்றார் பாவா.
ஆனால் கருவாடுகளின் நடுவே அவருடைய உபதேசப் பூக்களின் நறுமணம் எடுபடவில்லை. "பாவா'வின் பேச்சால் வெகுண்ட அந்தக் காளிதாஸர்கள், ""உன்னை உயிரோடு விட்டால்தானே மிருக வதைக்கு எதிராகப் பிரசாரம் செய்து எங்கள் வயிற்றில் கறிக்குப் பதிலாக காய்களைப் போடுவாய்? உன்னையே இப்போது பலி கொடுத்துவிடுகிறோம். "மிருக பலியைக் கேலி செய்ததால் காளியே உன்னைக் கொன்றுவிட்டதாக' ஊரில் வதந்தியைப் பரப்பிவிடுகிறோம். ஒரே வெட்டில் கிடாயும், குறும்பாடும் கிடைத்த மாதிரி ஆகிவிடும். ஜனங்களும் வெட்டிச் சிதைக்கப்பட்ட உன் உடலைப் பார்த்துப் பயந்து கோழிகள், ஆடு, மாடுகளைக் கொண்டுவந்து கட்டுவார்கள். நாங்கள் வழக்கம் போலவே "கோழீஸ்வரர்'களாக வாழ்வோம்'' என்று உறுமினார்கள்; பாவா'வைக் கொல்லப் பட்டயங்களைத் தீட்ட ஆரம்பித்தார்கள்.
அவரோ உயிருக்கு அஞ்சவில்லை. காளியைப் பார்த்து பேச ஆரம்பித்துவிட்டார். அம்மா தாயே ! இவர்களும் உன் பிள்ளைகள்தானே? ஏன் நீ இவர்களை திருத்த கூடாதா? சாகப்போவதை பற்றி எனக்கு கவலை இல்லை . ஆனால் இவர்கள் பரப்பும் பொய்கதையை ஊர் மக்களும் நம்பி விட்டால் மிருக பலிக்கு நானும் ஒரு காரணமாக ஆகிவிடுவேனே! இங்கே பலியாகும் மிருகங்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துவிடுமே? அது உனக்கு சம்மதமா?'' என உளமுருகிக் கேட்டார்.
மனம் இறங்கிய காளியின் சிலையிலிருந்து ஒரு மிகப்பெரும் பேரொளி கிளம்பியது. அதன் அதீத உஷ்ணம் பாவாவை தவிர அனைவரையும் பொசுங்கி, கருகி, கட்டைகளாகக் கீழே சாய்ந்தது.
அவருக்கு முன்னே பிரபஞ்ச நாயகியான காளி காட்சியளித்தாள்; கனிவோடு பேசினாள். குழந்தாய்! நான் தூய்மையான பக்திக்கும், அஹிம்ûஸக்கும் மட்டுமே வசமாவேன். என் முன் பலியிடுகிறவர்களும், மாமிசம் உண்பவர்களும் பற்பல பிறவிகளில் வறுமை, தீரா நோய், எதிரிகளால் பயம் போன்ற துன்பங்களால் அல்லல்பட்டு தங்கள் பாவத்துக்குரிய தண்டனையைக் கட்டாயம் அனுபவிப்பார்கள். நீ புகழோடு வாழ்வாய். உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்'' என்று பராசக்தி உரைத்தாள்.
ஆனால் லாடு பாவாவோ அம்மா! தேவர்களுக்கும் அரிதான உன் திருவுருவ காட்சி என் கண்களின் முன்னர் தோன்றியதே! இதை விட வேறு உயர்ந்த வரம் வேறு என்ன இருக்கப் போகிறது? அதையும் மீறி எனக்கு ஏதாவது நீ தர விரும்பினால், இதோ உன் வெம்மை தாங்காமல் கருகிச் செத்த என் சாக்த சகோதரர்களுக்கு மறுபடியும் உயிர்ப் பிச்சை கொடு' என்று சொல்லி, அம்பிகையின் மலரடியில் விழுந்தார்.
தன்னைக் கொல்ல நினைத்தவர்களும் வாழ வேண்டுமென்ற குணத்தை எண்ணி அந்த தெய்வத் தாய் மனம் குளிர்ந்தாள்; மாண்டவர்களை எழுப்பினாள்; மறைந்தாள்.
அந்த நிமிடம் முதல், காளியின் பெயரால் கத்தி ஏந்திய அவர்கள் மனம் திருந்தினார்கள். வெற்றிலை, பாக்கு, பழம் முதலிய "சாத்வீக' நிவேதனங்களைப் படைத்து உண்மையான சாக்தர்களாக ஆனார்கள். தங்களுக்கு நல்வழி காட்டிய "லாடு பாவா'வைக் குருவாக ஏற்று பிறவிப் பயனைப் பெற்றார்கள்
அகந்தை ,ஆத்திரம் , கர்வத்தை வென்றவனே சிறந்தவன்
முன்னொரு காலத்தில் அஷ்தகா என்றொரு முனிவர் இருந்தார். அவர் விஸ்வாமித்திர முனிவரின் புதல்வர். மெத்த ஞானம் பெற்றவர், ஆனால் கர்வம் கொண்டவர். அவருக்கு உடன் பிறந்தோர் மூவர் உண்டு. அவர்களில் ஒருவர் சிபி சக்ரவர்த்தியாவர்.
ஒரு முறை அஷ்தகா ஒரு பெரிய யாகம் செய்தார். பலரையும் அதற்கு அழைத்து இருந்தார். அதில் நாரத முனிவரும் வந்து
கலந்து கொண்டு இருந்தார். யாகம் முடிந்தது. தன்னுடைய செல்வாக்கு எந்த அளவு பரந்து விரிந்து உள்ளது என்பதை நாரத முனிவருக்கும் தமது மற்ற சகோதரர்களுக்கும் காட்ட வேண்டும் என எண்ணிய அஷ்தகா இந்திரனிடம் தாம் தம் நாட்டை சுற்றி வர புஷ்பக விமானத்தை அனுப்புமாறு கேட்டுப் பெற்று அதில் நாரதரையும் தமது மற்ற சகோதரர்களையும் ஏற்றிக் கொண்டு வானில் பறந்தார்.
வழியில் அஷ்தகா நாரதரிடம் புஷ்பக விமானத்தில் ஏறிக் கொண்டு வந்துள்ள நான்கு சகோதரர்களில் சிறந்தவர் யார் என்பதை வரிசை கிரமமாகக் கூறுமாறு கேட்டுக் கொண்டார். நாரதர் கூறினார் " நிறைய தான தருமங்கள் செய்து வந்தாலும் வரிசையில் நான்காவதாக சிறந்தவர் அஷ்தகா என்கின்ற நீதான். காரணம் ஒரு முறை நான் உனது ஆசிரமத்திற்கு வந்தபோது பல விதமான பசுக்கள் அங்கு இருந்தன. அவை அனைத்தும் எப்படி பலரிடம் உள்ளது எனக் கேட்டேன். அவற்றை நான்தான் தானமாகக் கொடுத்தேன் என்றாய். அப்போது உன் அகந்தையே உன்னை மிஞ்சி நின்றது. ஆகவே மனதில் உன்னை அறியாமலேயே அகந்தை பெற்றுள்ள உனக்கு முதல் இடம் அல்ல.
அடுத்து உனக்கு முன்னால் மூன்றாம் இடத்தில் உள்ளவர் உன் பெரிய சகோதரர். அவர் ஒரு முறை என்னை தேரில் ஏற்றிக் கொண்டு சென்றார். அப்போது வழியில் அவரைக் கண்ட பிராமணர்கள் அவரிடம் யாசகம் கேட்டு தேரை ஓட்டிச் சென்ற நான்கு குதிரைகளில் மூன்றை தானமாகப் பெற்றுச் சென்று விட்டனர். ஆனால் நான்காம் முறையாக இன்னொரு பிராமணர் வந்து நான்காவது குதிரையை யாசகம் கேட்டு பெற்றுச் சென்றதும் அந்த தேரை அவரே இழுத்துக் கொண்டு சென்றாலும் வழி முழுவதும் அந்த பிராமணரை மனதில் திட்டிக் கொண்டே சென்றார். ஆகவே அவரும் நிறைய தான தருமங்கள் செய்து வந்தாலும் மனதில் ஆத்திரத்தை வளர்த்துக் கொண்ட அவர் உங்களுக்குள் மூன்றாம் இடத்தில் இருக்கிறார்.
அடுத்து உன்னுடைய இளைய சகோதரர் பலரை தன்னுடைய அரண்மணைக்கு வரவழைத்து தாம் பயன்படுத்தும் அற்புதமான தமது தேரைக் காட்ட அனைவரும் அதை வெகுவாகப் புகழத் துவங்க அவர் மனதில் கர்வம் அடைந்தார்.அதை எதிர் பார்த்து நின்றது போலவே இருந்தது அவர் செய்கை . அதனால்தான் அவரும் நிறைய தான தருமங்கள் செய்து வந்தாலும் அவருக்கு முதல் இடம் இல்லை.
உன்னுடைய கடைசி தம்பியான சிபியோ மாய உருவை எடுத்து வந்த பிரும்மன் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் அவர் கேட்ட அனைத்தையுமே, தன்னுடைய மகனின்; உடலைக் கூட தயங்காமல் வெட்டித் தந்தும் அதையே அவர் அவனை உண்ணச் சொன்னபோது தயங்காமல் அவருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற அதையும் செய்யத் துணிந்தவனை பிரும்மா தோன்றி பாராட்டி விட்டுச் சென்றாரே அவனே தன்னலமற்றவன், போற்றுதலுக்கு உரியவன், உங்கள் அனைவரையும் விடச் சிறந்தவன் என்றார். அஷ்தகாவும் மற்ற சகோதரர்களும் அவமானத்தினால் தலை குனிந்து கொண்டனர்
நாய் தண்டனை வழங்கியதா? வரத்தை வழங்கியதா?
ஸ்ரீ இராமர் தன்னுடைய நியாய சபையில் மகரிஷிகளுடனும், அமைச்சர்களுடனும் ஆலோசனை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது நாய் ஒன்று அரண்மனை வாயிலில் மண்டையில் அடிபட்டு ரத்தக் காயத்துடன் "ஸ்ரீராமரின் " கருணைக்காகக் காத்திருப்பதை அறிந்து அதனை அழைத்து விசாரித்தார்.
உடனே நாய், தர்மத்திலும், குணத்திலும் சிறந்து விளங்கியும், ஆட்சியில் சிறு குறையும் ஏற்படாமல் மிகவும் நன்றாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால் சுவாமி, நான் எந்தத் தவறும் செய்யாத பொழுது சர்வார்த்த சித்தன் என்ற அந்தணர் என்னை மண்டையில் தடியால் அடித்துப் பிளந்து விட்டான் என்று கூறியது.
உடனே ஸ்ரீ ராமர் சர்வார்த்த சித்தனைப் பிடித்து வரச் செய்து விசாரித்தார். உடனே சர்வார்த்த சித்தனும், சுவாமியே நான் மிகுந்த பசியுடன் சென்று பிச்சை கேட்டுக் கொண்டிருந்தேன். பல இடங்களிலும் எனக்குப் பிச்சை கிடைக்கவில்லை. அச்சமயம் இந்த நாய் என் பாதையை மறித்து நின்றது. நான் விலகிப் போ என்று கூறியும் கேட்காமல் என்னைச் சுற்றிச் சுற்றி வந்தது. அதனால் கோபமடைந்து அந்த நாயைத் தடியால் அடித்து விட்டேன். ஆதலால் எனக்கு உரிய தண்டனை வழங்குங்கள் என்று கூறினான்.
ஸ்ரீராமர் சற்று யோசித்து அவையோரை நோக்கி என்ன தண்டனை வழங்கலாம்? என்று கேட்டார். அப்பொழுது அவையில் சிலர், அந்தணர்களைத் தண்டிக்கவும், கொல்லவும் கூடாது என்று தர்ம நூல்கள் கூறுகின்றன என்றனர். அப்பொழுது மகரிஷிகள், "ஸ்ரீ ராமா, எல்லோரையும் தண்டிப்பதற்கு மன்னருக்கு உரிமை உள்ளது' என்று கூறினர்.
இதையெல்லாம் கவனித்த நாய், 'சுவாமி, நான் விரும்பும் வரம் ஒன்று; இந்த அந்தணனை ஒரு நாட்டின் மன்னனாக்குங்கள்' என்றது. ஸ்ரீ ராமரும் நாயின் வேண்டுகோளை ஏற்று சர்வார்த்த சித்தனை ஒரு சிறு நாட்டின் மன்னனாக்கி தக்க உபசாரங்களோடு அனுப்பி வைத்தான்.
இதனால் சபையில் இருந்தோர் நாய் அந்தணனுக்குத் தண்டனை வழங்கியதா? அல்லது வரத்தை அளித்ததா? என்று சிந்தித்தனர். இதனைக் கண்ட ஸ்ரீராமர் அவையோரிடம் அனைவரும் நீதியின் இரகசியம் புரியாமல் உள்ளீர்கள்.
நாயே அதன் காரணத்தைக் கூறும் என்றார். நாயும் சபையோரைப் பார்த்து, நான் அந்தணனுக்கு நன்மை செய்துள்ளதாக எண்ணுகிறீர்கள்; என் கதையைக் கேட்டால் தான் அதன் தன்மை புரியும் என்று கூறத் தொடங்கியது. சென்ற பிறவியில் நானும் ஒரு மன்னனாக இருந்து தேவர்கள், அந்தணர்கள், பெரியோர்கள், பெண்கள், பணியாளர்கள் அனைவரையும் மிகுந்த பணிவுடனும், வணக்கத்துடனும் வழி நடத்தினேன். நானும், ஒழுக்கத்துடனும், தர்ம சிந்தனையுடனும் ஆட்சி செய்து மக்களை நல்வழிப்படுத்தினேன்.
அப்படிச் செய்தும் நான் இப்பிறவியில் நாயாகப் பிறந்துள்ளேன். ஏனென்றால், மக்கள் செய்யும் பாவம் மன்னனையே சாரும். ஆதலால் எனக்கு இப்பிறவி. அந்த அந்தணனோ
மிகுந்த முன்கோபி, ஞானம் இல்லாதவன், குரூர சிந்தனை உடையவன். ஆதலால் அவன் பல பாவங்களைச் செய்வான். அடுத்த பிறவியில் மட்டுமல்லாமல் இன்னும் ஏழேழு பிறவியிலும் அவன் நரகத்தில் வீழ்ந்து துன்பப்படுவான்.
அதனால் தான் நான் அந்தணனுக்கு இத் தண்டனை அளித்தேன் என்று கூறிச் சென்றது.
இதனைக் கேட்ட சபையோர் நீதியின் தன்மை புரிந்து மிகவும் வியப்படைந்தனர்
அரசன் அன்று கொள்வான், தெய்வம் நின்று கொள்ளும்
இராமாயண யுத்தம் முடிந்து ராமபிரான் ஆட்சி பொறுப்பை ஏற்று இருந்த காலம் அது. அயோத்தியாவை ஆண்டு வந்த அவர் மாதம் ஒரு முறையாவது தமது மந்திரி சபையைக் கூட்டி நாட்டில் யாருக்கேனும் குறை இருந்தால் அவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு தேவையான நீதியை வழங்க வேண்டும் என்பார். அப்படி இருக்கையில் ஒரு முறை அவர் சபையில் இந்திரன், சந்திரன், யமன், அக்னி என அனைவரும் வீற்று இருந்தார்கள்.
ராமபிரான் தனது சகோதரன் லஷ்மணரை அழைத்துக் கூறினார் 'லக்ஷ்மணா, உடனே கிளம்பிச் சென்று நாடு முழுவதும் சுற்றி யாருக்கேனும் குறை இருந்தால் அவர்களை இங்கே அழைத்து வா'. சகோதரர் இட்ட பணியை செய்வதில் லஷ்மணருக்கு யாருமே இணையாக இருக்க முடியாது.
உடனேயே கிளம்பிச் சென்ற தம்பி லஷ்மனன்ர் நாடு முழுவதும் சுற்றி விட்டு அரண்மனைக்குத் திரும்பி கூறினார் '' அண்ணா, இந்த நாட்டில் யாருமே குறையுடன் இருப்பதாகத் தெரியவில்லையே''. ராமர் கூறினார் '' இருக்காது தம்பி, மீண்டும் ஒரு முறை சென்று பார். என் உள் மனதில் இந்த நாட்டில் யாருக்கோ குறை உள்ளதாக ஒரு பிரமை இருந்து கொண்டே உள்ளது. ஆகவே சரியாகச் சென்றுப் பார் ''. லஷ்மணர் மீண்டும் கிளம்பிச் சென்றார். அவரால் குறையுடன் உள்ள யாரையுமே பார்க்க முடியவில்லை.
மனம் குழப்பத்தில் ஆழ்ந்தபடி இருக்க அரண்மனை வாயிலுக்கு வந்தபோது அங்கு ஒரு நாய் எழுந்திருக்க முடியாமல் அழுதபடி படுத்துக் கிடப்பதைப் பார்த்தார். அதன் தலையில் ஒரு ரத்தக் காயம் இருந்தது. லஷ்மணரைப் பார்த்த அந்த நாய் அவரை தன அருகில் வருமாறு அழைத்தது. அவருக்கு மிருக பாஷைகள் தெரியும் என்பதினால் ஒரு வேளை அதற்கு ஏதும் குறை இருக்குமோ என்று எண்ணி கொண்டு அதனிடம் சென்று ''நீ ஏன் அழுது கொண்டு இருக்கின்றாய்? எதற்காக என்னை அழைத்தாய் '' எனக் கேட்டார்.
அதற்கு அந்த நாய் பதில் கூறியது ''ஐயா....ராம ராஜ்யத்தில் எனக்கு ஒரு பெரிய குறை ஒன்று உள்ளது. ஆனால் அதை மன்னர் ராமபிரானிடம் மட்டுமே நேரில் கூற இயலும். என்னை அவரிடம் அழைத்துச் செல்ல முடியுமா '' என்று கேட்டது.இது என்னடா குழப்பமாக உள்ளது என்று எண்ணிக் கொண்டு ''சரி நான் அண்ணாவிடம் கேட்டு விட்டு வருகிறேன் '' என்று உள்ளே சென்று ராமனிடம் அந்த நாயின் குறையைக் கூற ராமரும் சற்றும் தயங்காமல் உடனே அந்த நாயை அழைத்து வருமாறு கூறினார்.
நாயும் சபைக்கு வந்ததும் ராமர் அதன் குறை என்ன என்று கேட்க அது கூறியது '' மன்னா...நான் எந்த தவறுமே செய்யவில்லை. ஆனாலும் என்னை ஒரு பிராமணன் தலையில் தனது கட்டையால் அடித்து காயப்படுத்தி விட்டார். அவருக்கு தக்க தண்டனை தர வேண்டும்''. சபையில் இருந்த அனைவரும் நாயின் குறையைக் கேட்டு அதிர்ந்தார்கள்.
ராமபிரான் சற்றும் தயங்கவில்லை. உடனே அந்த நாய் குறிப்பிட்ட பிராமணரை அழைத்து வரச் சொல்லி நாய் கூறிய புகாரைக் குறித்துக் கேட்டார். அந்த பிராமணரோ தயங்கவே இல்லை. சற்றும் தயங்காமல் இறுமாப்புடன் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டார். அவர் கூறினார் '' மன்னா....நான் என்ன செய்வது...ஒரு நாள் எனக்கு பசி எடுத்தது. விரைவாகச் சென்று பிட்ஷை வாங்கி வரலாம் எனக் கிளம்பினால் இந்த நாய் நான் செல்லும் வழியை மறைத்தவாறு நடு வழியில் படுத்து இருந்தது. (கிராமத்தின் சாலைகள் குறுகலாக ஒற்றை அடிப்பாதையாக இருந்த காலம் அது). ஆகவே அதை எழுப்ப பூமியைத் தட்டினேன் . ஆனால் அது எழுந்து கொள்ளாமல் தூங்கிக் கொண்டே இருந்தது. நாயை தாண்டிச் செல்வது சாஸ்திரப்படி பாவம் என்பதினால் என்ன செய்யலாம் என யோசித்தேன். எனக்கோ பசி வயிற்றைக் குடைந்தது. ஆகவே நொடிப் பொழுதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் அதன் தலை மீது என் தடியால் ஓங்கி ஒரு அடி கொடுக்க அதன் தலையில் ரத்தக் காயத்தை அது ஏற்படுத்தி விட்டது . வேறு என்ன செய்ய முடியும் ? நான் செய்தது தவறு என நீங்கள் நினைத்தால் அதற்கு ஏற்ப எனக்கு தண்டனைக் கொடுங்கள்'' என அகந்தையுடன் கூறினார் .
சபையில் சலசலப்பு ஏற்பட்டது. ஒரு நாயை சமாதானப்படுத்த பிராமணருக்கு தண்டனை தருவதா? கூடாது.....கூடாது என்ற குரலே இருந்தது. ஒரு பிராமணருக்கு தண்டனை தர சாஸ்திரத்தில் இடம் இல்லை. ஆகவே ஒரு நாயின் புகாருக்காக அந்த பிராமணருக்கு தண்டனை தரக் கூடாது என்றார்கள். ஆனால் நியாயமே பெரிது என எண்ணிய ராமர் அதற்கெல்லாம் கவலைப்படாமல் தயக்கம் இன்றி கூறினார் ''சபையினரே....அனைவரும் கவனத்துடன் கேளுங்கள்...என்னுடைய ராஜ்யத்தில் யாருக்கு குறை இருந்தாலும், அவற்றுக்கு காரணமானவரை தண்டித்து குறையை அதை நிவர்த்தி செய்ய வேண்டியது என் கடமை. அதுவே ராஜ்ய பரிபாலனத்தின் லட்சியமும் கூட. இங்கே இந்த பிராமணரும் தான் செய்த தவறை ஒப்புக் கொண்டு தன் செய்கைக்கு வருந்தி விட்டார் என்றாலும், ஒருவர் செய்த குற்றத்திற்கு தண்டனை தராமல் இருக்க முடியாது. ஆகவே அவருக்கு....'' என ராமர் தண்டனையைக் கூற துவங்கும் முன் அந்த நாய் ராமரிடம் ''மன்னா..ஒரே ஒரு நிமிடம்.
அந்த பிராமணருக்கு தக்க தண்டனை தர வேண்டும் என்றால் பக்கத்து நாட்டின் மன்னனாக அவருக்கு முடி சூட்ட வேண்டும்'' என்றது. அனைவரும் பிரமித்து நின்றார்கள். கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று கூறாமல் குற்றம் செய்தவருக்கு அரச மகுடமா? ஆச்சர்யப்பட்டுப் போன ராமபிரான் அந்த நாயிடம் கேட்டார் '' உன் கோரிக்கை விசித்திரமாக உள்ளதே. உன்னை அடித்து ரத்தக் காயத்தை ஏற்படுத்தியவருக்கு கடுமையான தண்டனைக் கொடு எனக் கேட்காமல் அதற்குப் பதில் அவருக்கு அரச பட்டதை சூட்டுமாறு ஏன் கேட்கின்றாய்?''. அந்த நாய் கூறியது
''மன்னா நானும் பூர்வ ஜென்மத்தில் அந்த நாட்டின் மன்னனாகவே இருந்தேன். நான் செய்யாத நன்மைகள் கிடையாது. அனைவருக்கும் ஆதரவாக இருந்து, நியாயமான ஆட்சி புரிந்தேன். கோபம் என்பதே அறியாமல் இருந்த நான் ஒரே ஒருமுறை என்னை மீறி வந்த என் கோபத்தினால் ஒருவரை அவமானப்படுத்தும் விதத்தில் அவரை சபையை விட்டு வெளியேறு என்று கூறி விட்டேன். நான் செய்த அந்த செயலுக்கு அவர் நான் நாயாகப் பிறக்க வேண்டும் என சாபமிட்டு விட்டார். நான் செய்த சாதாரண குற்றத்திற்கு இந்த ஜென்மத்தில் நாயாகப் பிறப்பு எடுக்க வேண்டி இருந்தது. ஆகவே முன் கோபமும், அகந்தையும் உள்ள இந்த பிராமணர் அரசனாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவர் தனது முன் கோபத்தினாலும், அகந்தையினாலும் மீண்டும் மீண்டும் பல தவறுகளை இழைத்து அடுத்த ஏழேழு ஜென்மத்திலும் கேவலமான பிராணிகளாகப் பிறந்து அவதிப்படுவார் . நான் பார்க்க விரும்புவது அவருக்கு இந்த ஜென்மத்தில் கொடுக்கப்படும் தண்டனை அல்ல. அடுத்தடுத்த ஏழு பிறவிகளிலும் அவர் கடுமையான தண்டனை பெறுவதையே விரும்புகிறேன்''.
அதைக் கேட்ட அனைவரும் பேச்சு மூச்சு இல்லாமல் அமர்ந்து இருந்தார்கள். அதைக் கூறியப் பின் அந்த நாய் அங்கிருந்து விரைவாக வெளியேறிச் சென்று விட்டது. தானே வலிய உண்ணாவிரதம் இருந்து சில நாட்களில் மரணம் அடைந்து விட்டது என்றாலும், அது சொர்கத்தை அடைந்தது. அந்த நாய் கேட்டுக் கொண்டது போலவே அந்த பிராமணரை ராமபிரான் பக்கத்து நாட்டு மன்னனாக முடி சூட்டினார் . நாய் நம் குறையைக் எடுத்துக் கூறி உள்ளதினால் கோபதாபம் இல்லாமல் மிகவும் ஜாக்கிரதையாக ஆட்சி புரிய வேண்டும் என நினைத்த பிராமணர் தன்னை மறந்து பல முறைகள் ஆத்திரத்தில் அடுத்தடுத்து பல தீய செயல்களை செய்ய அல்பாயுசில் மரணம் அடைந்து அடுத்தடுத்து ஏழு ஜென்மங்கள் கேவலமான பிராணிகளாகப் பிறந்து அவதிப்பட்டார்.
நீதி
ஒருவர் செய்த குற்றத்திற்கு உடனடியாக தண்டனை தருவது ஆட்சியாளர்களின் வழக்கம். ஆனால் தெய்வ தண்டனை என்பது ஏழேழு காலத்துக்கும் தொடரக் கூடியது. அது நாம் சந்ததியினரையும் பாதிக்கும் என்பதினால் தெய்வ தண்டனையே வலிமையான தண்டனை. இதைதான் அரசன் அன்று கொள்வான், தெய்வம் நின்று கொள்ளும் என்பார்கள்
அரசன் அன்று கொள்வான், தெய்வம் நின்று கொள்ளும்
இராமாயண யுத்தம் முடிந்து ராமபிரான் ஆட்சி பொறுப்பை ஏற்று இருந்த காலம் அது. அயோத்தியாவை ஆண்டு வந்த அவர் மாதம் ஒரு முறையாவது தமது மந்திரி சபையைக் கூட்டி நாட்டில் யாருக்கேனும் குறை இருந்தால் அவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு தேவையான நீதியை வழங்க வேண்டும் என்பார். அப்படி இருக்கையில் ஒரு முறை அவர் சபையில் இந்திரன், சந்திரன், யமன், அக்னி என அனைவரும் வீற்று இருந்தார்கள்.
ராமபிரான் தனது சகோதரன் லஷ்மணரை அழைத்துக் கூறினார் 'லக்ஷ்மணா, உடனே கிளம்பிச் சென்று நாடு முழுவதும் சுற்றி யாருக்கேனும் குறை இருந்தால் அவர்களை இங்கே அழைத்து வா'. சகோதரர் இட்ட பணியை செய்வதில் லஷ்மணருக்கு யாருமே இணையாக இருக்க முடியாது.
உடனேயே கிளம்பிச் சென்ற தம்பி லஷ்மனன்ர் நாடு முழுவதும் சுற்றி விட்டு அரண்மனைக்குத் திரும்பி கூறினார் '' அண்ணா, இந்த நாட்டில் யாருமே குறையுடன் இருப்பதாகத் தெரியவில்லையே''. ராமர் கூறினார் '' இருக்காது தம்பி, மீண்டும் ஒரு முறை சென்று பார். என் உள் மனதில் இந்த நாட்டில் யாருக்கோ குறை உள்ளதாக ஒரு பிரமை இருந்து கொண்டே உள்ளது. ஆகவே சரியாகச் சென்றுப் பார் ''. லஷ்மணர் மீண்டும் கிளம்பிச் சென்றார். அவரால் குறையுடன் உள்ள யாரையுமே பார்க்க முடியவில்லை.
மனம் குழப்பத்தில் ஆழ்ந்தபடி இருக்க அரண்மனை வாயிலுக்கு வந்தபோது அங்கு ஒரு நாய் எழுந்திருக்க முடியாமல் அழுதபடி படுத்துக் கிடப்பதைப் பார்த்தார். அதன் தலையில் ஒரு ரத்தக் காயம் இருந்தது. லஷ்மணரைப் பார்த்த அந்த நாய் அவரை தன அருகில் வருமாறு அழைத்தது. அவருக்கு மிருக பாஷைகள் தெரியும் என்பதினால் ஒரு வேளை அதற்கு ஏதும் குறை இருக்குமோ என்று எண்ணி கொண்டு அதனிடம் சென்று ''நீ ஏன் அழுது கொண்டு இருக்கின்றாய்? எதற்காக என்னை அழைத்தாய் '' எனக் கேட்டார்.
அதற்கு அந்த நாய் பதில் கூறியது ''ஐயா....ராம ராஜ்யத்தில் எனக்கு ஒரு பெரிய குறை ஒன்று உள்ளது. ஆனால் அதை மன்னர் ராமபிரானிடம் மட்டுமே நேரில் கூற இயலும். என்னை அவரிடம் அழைத்துச் செல்ல முடியுமா '' என்று கேட்டது.இது என்னடா குழப்பமாக உள்ளது என்று எண்ணிக் கொண்டு ''சரி நான் அண்ணாவிடம் கேட்டு விட்டு வருகிறேன் '' என்று உள்ளே சென்று ராமனிடம் அந்த நாயின் குறையைக் கூற ராமரும் சற்றும் தயங்காமல் உடனே அந்த நாயை அழைத்து வருமாறு கூறினார்.
நாயும் சபைக்கு வந்ததும் ராமர் அதன் குறை என்ன என்று கேட்க அது கூறியது '' மன்னா...நான் எந்த தவறுமே செய்யவில்லை. ஆனாலும் என்னை ஒரு பிராமணன் தலையில் தனது கட்டையால் அடித்து காயப்படுத்தி விட்டார். அவருக்கு தக்க தண்டனை தர வேண்டும்''. சபையில் இருந்த அனைவரும் நாயின் குறையைக் கேட்டு அதிர்ந்தார்கள்.
ராமபிரான் சற்றும் தயங்கவில்லை. உடனே அந்த நாய் குறிப்பிட்ட பிராமணரை அழைத்து வரச் சொல்லி நாய் கூறிய புகாரைக் குறித்துக் கேட்டார். அந்த பிராமணரோ தயங்கவே இல்லை. சற்றும் தயங்காமல் இறுமாப்புடன் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டார். அவர் கூறினார் '' மன்னா....நான் என்ன செய்வது...ஒரு நாள் எனக்கு பசி எடுத்தது. விரைவாகச் சென்று பிட்ஷை வாங்கி வரலாம் எனக் கிளம்பினால் இந்த நாய் நான் செல்லும் வழியை மறைத்தவாறு நடு வழியில் படுத்து இருந்தது. (கிராமத்தின் சாலைகள் குறுகலாக ஒற்றை அடிப்பாதையாக இருந்த காலம் அது). ஆகவே அதை எழுப்ப பூமியைத் தட்டினேன் . ஆனால் அது எழுந்து கொள்ளாமல் தூங்கிக் கொண்டே இருந்தது. நாயை தாண்டிச் செல்வது சாஸ்திரப்படி பாவம் என்பதினால் என்ன செய்யலாம் என யோசித்தேன். எனக்கோ பசி வயிற்றைக் குடைந்தது. ஆகவே நொடிப் பொழுதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் அதன் தலை மீது என் தடியால் ஓங்கி ஒரு அடி கொடுக்க அதன் தலையில் ரத்தக் காயத்தை அது ஏற்படுத்தி விட்டது . வேறு என்ன செய்ய முடியும் ? நான் செய்தது தவறு என நீங்கள் நினைத்தால் அதற்கு ஏற்ப எனக்கு தண்டனைக் கொடுங்கள்'' என அகந்தையுடன் கூறினார் .
சபையில் சலசலப்பு ஏற்பட்டது. ஒரு நாயை சமாதானப்படுத்த பிராமணருக்கு தண்டனை தருவதா? கூடாது.....கூடாது என்ற குரலே இருந்தது. ஒரு பிராமணருக்கு தண்டனை தர சாஸ்திரத்தில் இடம் இல்லை. ஆகவே ஒரு நாயின் புகாருக்காக அந்த பிராமணருக்கு தண்டனை தரக் கூடாது என்றார்கள். ஆனால் நியாயமே பெரிது என எண்ணிய ராமர் அதற்கெல்லாம் கவலைப்படாமல் தயக்கம் இன்றி கூறினார் ''சபையினரே....அனைவரும் கவனத்துடன் கேளுங்கள்...என்னுடைய ராஜ்யத்தில் யாருக்கு குறை இருந்தாலும், அவற்றுக்கு காரணமானவரை தண்டித்து குறையை அதை நிவர்த்தி செய்ய வேண்டியது என் கடமை. அதுவே ராஜ்ய பரிபாலனத்தின் லட்சியமும் கூட. இங்கே இந்த பிராமணரும் தான் செய்த தவறை ஒப்புக் கொண்டு தன் செய்கைக்கு வருந்தி விட்டார் என்றாலும், ஒருவர் செய்த குற்றத்திற்கு தண்டனை தராமல் இருக்க முடியாது. ஆகவே அவருக்கு....'' என ராமர் தண்டனையைக் கூற துவங்கும் முன் அந்த நாய் ராமரிடம் ''மன்னா..ஒரே ஒரு நிமிடம்.
அந்த பிராமணருக்கு தக்க தண்டனை தர வேண்டும் என்றால் பக்கத்து நாட்டின் மன்னனாக அவருக்கு முடி சூட்ட வேண்டும்'' என்றது. அனைவரும் பிரமித்து நின்றார்கள். கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று கூறாமல் குற்றம் செய்தவருக்கு அரச மகுடமா? ஆச்சர்யப்பட்டுப் போன ராமபிரான் அந்த நாயிடம் கேட்டார் '' உன் கோரிக்கை விசித்திரமாக உள்ளதே. உன்னை அடித்து ரத்தக் காயத்தை ஏற்படுத்தியவருக்கு கடுமையான தண்டனைக் கொடு எனக் கேட்காமல் அதற்குப் பதில் அவருக்கு அரச பட்டதை சூட்டுமாறு ஏன் கேட்கின்றாய்?''. அந்த நாய் கூறியது
''மன்னா நானும் பூர்வ ஜென்மத்தில் அந்த நாட்டின் மன்னனாகவே இருந்தேன். நான் செய்யாத நன்மைகள் கிடையாது. அனைவருக்கும் ஆதரவாக இருந்து, நியாயமான ஆட்சி புரிந்தேன். கோபம் என்பதே அறியாமல் இருந்த நான் ஒரே ஒருமுறை என்னை மீறி வந்த என் கோபத்தினால் ஒருவரை அவமானப்படுத்தும் விதத்தில் அவரை சபையை விட்டு வெளியேறு என்று கூறி விட்டேன். நான் செய்த அந்த செயலுக்கு அவர் நான் நாயாகப் பிறக்க வேண்டும் என சாபமிட்டு விட்டார். நான் செய்த சாதாரண குற்றத்திற்கு இந்த ஜென்மத்தில் நாயாகப் பிறப்பு எடுக்க வேண்டி இருந்தது. ஆகவே முன் கோபமும், அகந்தையும் உள்ள இந்த பிராமணர் அரசனாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவர் தனது முன் கோபத்தினாலும், அகந்தையினாலும் மீண்டும் மீண்டும் பல தவறுகளை இழைத்து அடுத்த ஏழேழு ஜென்மத்திலும் கேவலமான பிராணிகளாகப் பிறந்து அவதிப்படுவார் . நான் பார்க்க விரும்புவது அவருக்கு இந்த ஜென்மத்தில் கொடுக்கப்படும் தண்டனை அல்ல. அடுத்தடுத்த ஏழு பிறவிகளிலும் அவர் கடுமையான தண்டனை பெறுவதையே விரும்புகிறேன்''.
அதைக் கேட்ட அனைவரும் பேச்சு மூச்சு இல்லாமல் அமர்ந்து இருந்தார்கள். அதைக் கூறியப் பின் அந்த நாய் அங்கிருந்து விரைவாக வெளியேறிச் சென்று விட்டது. தானே வலிய உண்ணாவிரதம் இருந்து சில நாட்களில் மரணம் அடைந்து விட்டது என்றாலும், அது சொர்கத்தை அடைந்தது. அந்த நாய் கேட்டுக் கொண்டது போலவே அந்த பிராமணரை ராமபிரான் பக்கத்து நாட்டு மன்னனாக முடி சூட்டினார் . நாய் நம் குறையைக் எடுத்துக் கூறி உள்ளதினால் கோபதாபம் இல்லாமல் மிகவும் ஜாக்கிரதையாக ஆட்சி புரிய வேண்டும் என நினைத்த பிராமணர் தன்னை மறந்து பல முறைகள் ஆத்திரத்தில் அடுத்தடுத்து பல தீய செயல்களை செய்ய அல்பாயுசில் மரணம் அடைந்து அடுத்தடுத்து ஏழு ஜென்மங்கள் கேவலமான பிராணிகளாகப் பிறந்து அவதிப்பட்டார்.
நீதி
ஒருவர் செய்த குற்றத்திற்கு உடனடியாக தண்டனை தருவது ஆட்சியாளர்களின் வழக்கம். ஆனால் தெய்வ தண்டனை என்பது ஏழேழு காலத்துக்கும் தொடரக் கூடியது. அது நாம் சந்ததியினரையும் பாதிக்கும் என்பதினால் தெய்வ தண்டனையே வலிமையான தண்டனை. இதைதான் அரசன் அன்று கொள்வான், தெய்வம் நின்று கொள்ளும் என்பார்கள்
நம்பிக்கையே வாழ்க்கை
சிவபெருமானும் பார்வதியும் ஒருநாள் வானவீதியில் பட்டின பிரவேகம் செய்து கொண்டிருக்கையில் ஒரு இடத்தில் மட்டும் மிகவும் அதிகமான மக்கள் குழுமி குளிப்பதைப் பார்த்த பார்வதி நாம் எவ்வளவோ இடத்தை சுற்றிப்பார்த்து வந்து கொண்டிருக்கிறோம்.ஆனால் இந்த இடத்தில் மட்டும் மக்கள் அதிகமாக குளிப்பதற்கு என்ன காரணம் எனக் கேட்க அதற்கு சிவபெருமான் கூறுகிறார்.இது மிகவும் புனிதமான ஸ்தலமாகும் இந்த இடத்திற்கு பெயர் காசி.
இங்கு ஓடும் நதியில் குளிப்பவர் பாவம் நீங்கி புனியம் பெற்று சொர்க்கலோகம் செல்லலாம் என நினைத்து குளிக்கிறார்கள் என கூற உடனே பார்வதி அப்படி என்றால் இந்த புனிய நதியில் குளிப்பவர் எல்லோரும் சொர்க்கலோகம் செல்வார்களா எனக் கேட்க அதற்கு சிவபெருமான் எல்லோரும் செல்ல மாட்டார்கள் ஒரு சிலர் மட்டும் தான் செல்வார்கள் என கூற மற்றவர்கள் ஏன் போகமாட்டார்கள் ,என பார்வதி கேட்க நான் சொன்னால் புரியாது.
நாமே ஒரு நாடகம் ஆடுவோம் அதன் முடிவில் நீயே தெரிந்து கொள்வாய் எனக்கூறி சிவபெருமான் ஒரு நோயாளிபோல் நதிக்கரையில் உருமாரி உயிர் போய் பிணமாக படுத்து உள்ளார்.பார்வதியும் உருமாரி தலை விரிகோலமாக அழுது புலம்புகிறார்.நேரம் செல்ல செல்ல கூட்டம் கூடி விட்டது யாரோ யாத்திரை வந்த இடத்தில் இந்த பெண்ணின் கணவன் இறந்து விட்டான். ஒருவன் அந்த பெண்ணிடம் வந்து உன் கணவன் உடலை தகனம் செய்ய நாங்கள் உதவி செய்கிறோம்.எனக் கூற அதற்கு அந்தப் பெண் அய்யா ,என் கணவன் இறக்கும் போது ஒன்று கூறினார்.
அது என்னவென்றால் என் உடலை தகனம் செய்பவர் பிறந்ததிலிருந்து இன்று முதல் யாருக்கும் சிருபாவமேனும் செய்யாதவர் தான் என் உடலை அடக்கம் செய்ய வேண்டும்.அப்படி செய்த பாவத்தை மறைத்து அடக்கம் செய்தால்.அவர்கள் தலை சுக்குநூறாய் உடைந்து போய்விடும் மேலும் ஏழு பிறப்பிலும் கழுதையாக பிறப்பார்கள் என்று கூறியவுடன் அருகில் நின்றவர்கள் பயந்து போய் விட்டார்கள் நேரம் போய் கொண்டிருந்தது.சூரியனும் மறைய தொடங்கி விட்டது.
அப்போது வாட்டசாட்டமாக வாலிபன் வந்து நான் உன் கணவன் உடலை அடக்கம் செய்கிறேன் எனக் கூற என் கணவன் கூறியது உனக்கு தெரியுமா? என கேட்க அதற்கு எல்லாம் எனக்கு தெரியும். நான் இந்த நதியில் குளித்தவுடன் நான் செய்த பாவம் நீங்கிவிடும்.பின் உன் கணவன் உடலை தகனம் செய்ய தகுதிடையவன் ஆவேன்.என கூறி நதியில் குளித்துவிட்டு வந்து பார்த்தல் அவர்களை காணவில்லை.
அப்போது சிவபெருமான் பார்வதியிடம் இவன் தான் சொர்கலோகம் செல்வான். ஏனென்றால் இவன் தான் இந்த நதியை நம்பினான்.மற்றவர்கள் எல்லாம் நதிக்கரையில் தான் நின்றார்கள் ஏன் இந்த எண்ணம் வரவில்லை அவர்களுக்கு இந்த நதி மீது நம்பிக்கை இல்லை எனக்கூறினர்.ஆகவே நம்பிக்கையே வாழ்க்கை.
பாவங்கள் செய்தவர்கள் எல்லோரும் கங்கையில் குளித்ததினால் அவர்களின் பாவங்கள் எல்லாம் கங்கையில் நிரம்பி இருந்தது.ஸ்ரீ ராமர் வந்து கங்கையில் குளித்தவுடன் அதில் உள்ள பாவங்கள் எல்லாம் மறைந்து விட்டன.
வாழ்க்கைக்கு இன்றியமையாத நெறிகள் ;ஸ்ரீ ராமானுஜர்
. உன் கடமைகளை இறைவனுக்குச் செய்யும் தொண்டாக நினைத்துச் செய்.
2. சடகோபனும் மற்ற ஆழ்வார் அடியார்களும் இயற்றிய புனிதமான நூல்களைப் படி. அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களை, தகுந்த சீடர்களைத் தேடிப் பிடித்து அவர்களுக்குக் கற்றுக் கொடு.
3. உனது நேரத்தை இறைவனுக்குத் தொண்டு செய்வதில் செலவிடு. (ஏழைகளுக்கு உணவளித்தல், இறைவன் வழிபாட்டிற்குத் தேவையான பொருள்களை அளித்தல், கோயிலில் விளக்கேற்றுதல், இறைவனுக்கு அழகிய மாலைகளைத் தொடுத்தல், கோயிலைச் சுத்தம் செய்தல், அழகாகக் கோலமிட்டு அலங்கரித்தல் போன்றவை.)
4. அறிவும் பக்தியும் நடுநிலைப் பண்பும் உள்ள ஒரு வைணவனைக் கண்டுபிடி. அவன் உன்னை மதித்துத் தனக்குச் சொந்தமானவன் என்று நினைக்கக் கூடியவனாகவும் இருக்க வேண்டும். உன் ஆணவம், செருக்கு அனைத்தையும் தூர எறிந்துவிடு. அவன் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நட. இதுதான் நான் உனக்குச் சொல்லும் கடைசி வழி. இதைத் தவிர உன் நன்மைக்கு உரிய வேறு வழி ஒன்றும் எனக்குத் தெரியவில்லை
கோவில்களில்செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை
புராதன சின்னங்களான கோவில்களில்செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை :
பண்டைய காலத்து முறையை மதியுங்கள் அக்காலத்து கலைஞர்கள், சிற்பிகள் மிகுந்த பக்தியுடனும், கலை நுணுக்கத்துடனும் கோவில்கள் எழுப்பியுள்ளனர்.
நம்மைவிட குறைந்த பொருளுதவியும், வசதிகளும், தொழில்நுட்பமே இருந்தாலும், நம்மைவிட அதிக கவனம் செலுத்தி அவற்றை எழுப்பியுள்ளனர் அவர்களது உழைப்பை நாம் உதாசீனப்படுத்தக்கூடாது.
எனவே முன்னர் காலத்து சின்னங்களை சீர்செய்ய பிரிக்குமுன், அவர்களதுகஷ்டங்களை உணருங்கள். பண்டை காலத்தில் என்ன பொருட்கள் உபயோகித்தனரோ, அவற்றையேஉபயோகியுங்கள். (வெல்லம், கடுக்காய், வச்சிரம், மூலிகைகள் கலவைகள்கொண்டு கட்டப்படும் கோவில்கள், சுமார் 1000 ஆண்டுகள் நிலைத்துள்ளன.ஆனால், சிமெண்ட் கட்டிடங்கள் அதிகபட்சமாக 100-200 ஆண்டுகளேதாக்குப் பிடிக்கும்.
சுவற்றில், மதில்களில், கோபுரங்களில், எந்த கட்டுமானங்கள் மீதும், சிறிய செடிகள், மரங்கள் கொடிகளை வளரவிடாதீர்கள்.
இவை கோவில்களை ஆட்டம் காண வைக்கும் கொடிய வில்லன்கள்!
மாதம் ஒருமுறை களைகளை கண்டறிந்து, களையுங்கள்!
பழைய கற்களை அகற்றி செடிகளை நீக்குகையில், அதிக கவனம் தேவை.
மழைக்குப் பின் தான், களைகள் அதிகம் வளரும். மழை காலங்களில் பழையசுவர்கள், கோவில்களில் ஏறுகையில், கவனம் தேவை. கவனக் குறைவால்,அவை சரிந்து விடலாம்!
வேரோடு களைய முடியவில்லை என்றால், மரக்கொல்லிகளை உபயோகியுங்கள்.
இடுக்குகள், வேர் அறுத்த குழிகளை நல்ல சுண்ணாம்பு சுதை கரைசலினால் பூசி, மூடிவிடுங்கள்.
தொடர்ந்த பராமரிப்பே சிறந்த வழி!
பழங்கால கோவில்களுக்கு தொடர்பு பராமரிப்பு அவசியம்.
எந்த சிறிய கட்டிட பழுது வேலையானாலும் உடனே கவனித்து செப்பனிட வேண்டும்.
கோவிலை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருங்கள்.
தவறான பொருட்கள் உபயோகிக்காதீர்கள் :
கல்லால் ஆன கட்டுமானங்களுக்கு (கற்றளிகள்), சுண்ணாம்பு, பெயிண்ட்,எனாமல் உபயோகிக்கக் கூடாது.
சுண்ணாம்புப் பூச்சு நீக்குவது கடினம். தொடர்ந்து ரசாயனங்களால் துடைத்தால், கல்லின் தன்மை மட்டுப்படும்.
பெயிண்ட் நீக்குவது, இன்னும் கடினம் ; ரசாயன பெயிண்ட் அதிகம்கட்டிடத்தை பாதிக்கும்.
றுயவநசதநவ உடநயniபே
காவி நிறத்தை சுவர்களுக்கு உபயோகிக்காதீர்கள் ; அவை கரை படிந்துவிடும்.
சுவர்களில், தூண்களில் காணும் கல்வெட்டுக்களை மாற்றிக் கட்டியோ,மூலம் சுத்தம் செய்யலாம்.
அழித்தோ, உடைத்தோ விடாதீர்கள்! அவற்றில் நம் பண்டை சரித்திரத்தின் பலஅரிய செய்திகள்இருக்கலாம்! அந்த எழுத்துக்கள் எத்தகையவை ஆனாலும்,எத்தனை புராதனமானவையாக இருந்தாலும், படித்துக் காட்ட நம்மிடையேவல்லுநர்கள் உள்ளனர். சுவர்களில் உள்ள கல்வெட்டுக்களைபாதுகாத்திடுங்கள். சுத்தம் செய்கிறேன் பேர்வழி என்று கம்ப்ரெசர் மண்அடித்து எழுத்துக்களை அழித்துவிடாதீர்கள். அவை நம் பாட்டன்,முப்பாட்டனின், சாசனம்! மீண்டும் கிடைக்காது! அதேபோல் சுத்தம் செய்ய அமிலங்களையும் ப்ளீச்சிங் பவுடர் மற்றும் வீடு துடைக்க உபயோகிக்கும் சோப்புகளையும் உபயோகிக்காதீர்கள். அவை சரி செய்ய முடியாத,கண்ணுக்குத் தெரியாத விரிசல்களை ஏற்படுத்திவிடும்!
பழைய ஓவியங்கள் இருந்தால், அவற்றை சுரண்டி எடுத்து விடாதீர்கள்!பழஞ்சாறினாலும், இயற்கை மூலிகை நிறங்களாலும் வரையப்பட்டஅவ்வோவியங்கள், எத்தனை கோடி கொடுத்தாலும் நாம் மீண்டும் வரைய முடியாது.
சிதைந்த, தனித்துவிடப்பட்ட கோவில்களின் பாகங்களை எறிந்து விடாதீர்கள்;அவை முந்தைய அசல் கட்டிடத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம்; அவற்றைமீண்டும், பழைய இடத்திலேயே பொருத்தலாம். உபயோகிக்கலாம்.
பழைய செங்கல், செங்கல் துகள்கள், பழைய கோவில் சிதிலத்துகள்களைஎறிந்து விடாதீர்கள். அவற்றை முழுவதுமாக அப்படியே உபயோகிக்கலாம்! இன்றைய செங்கற்களைவிட அவற்றின் பலம், கெட்டித்தன்மை, 5 மடங்கு அதிகம்!
பழைய கோவில்களுக்குள் அசிங்கமாக, வயர்களையும், எலக்ட்ரிக் பட்டிகளையும்அடிக்காதீர்கள். கோவில்களில் அகல் விளக்குகளும் தீபங்களுமே அழகு.
க்ரானைட், டைல்களை கர்ப்பக்ருஹத்திற்குள் பதிக்காதீர்கள். பழையகோவில்களில், அளவீடுகள் முக்கியமானவை. கருவறையின் நீள, அகலமே,சிகரத்தின் உயரத்தை முடிவு செய்யும். இதில் சிறிய மாற்றம் ஏற்பட்டால்கூட,ஸ்தபதிகளும், வாஸ்து வல்லுநர்களும் கணக்கிட்ட சிகரம் வராது, கணிதம்தப்பும். புனிதமும் , பலமும் கெடும்.
கல் கோவில்களில் சிமெண்டால், புதிய பாகங்கள், படிகளை சேர்க்காதீர்கள்.பல இடங்களில், துர்க்கைக்கும், தட்சிணாமூர்த்திக்கும் பிரார்த்தனை செய்ய,தொட்டுக் கும்பிட என, பழங்கால சுவர், சுற்று பிரகாரத்துக்கும் இடையே, ஒருஒட்டுப்படி சிமெண்டால் கட்டி விடுகிறார்கள். அது கட்டிடத்தின் பலத்துக்குஎதிரானது. கட்டிட சாஸ்திரத்துக்கு எதிரானது. வருங்காலத்தில் கல் சுவர்அப்படியே நிற்க, இந்த சிமெண்ட் படி விழுந்துவிட்டால், நம் வருங்கால சந்ததியர் நம்மைப் பார்த்து சிரிப்பார்கள்!
சிமெண்டை தவிருங்கள். சுதையே நல்லது. சுண்ணாம்பு அதிகமாகவும்,தரமாகவும் மலிவாகவும் கிடைக்கும்.
சிலைகளில் எண்ணெய், வெண்ணெய் நீண்ட காலமாய் தடவுவதன் மூலம்,சிற்பங்களின் முனைகள் மழுங்கி, அழகு குறைந்துவிடும். இவற்றைத்தவிர்த்தால் நல்லது.
கற்பூரம், ஏற்றாதீர்கள். அதிலிருந்து வெளிப்படும் கரித்துகள்கள் கோவில்முழுதும் அடைந்து, மாசு படிந்துவிடும், காற்றிலும் கலக்கும் நல்ல ஓவியங்கள்போன்றவற்றை பாழ் செய்துவிடும். எண்ணெய் விளக்கு, நெய் தீபாராதனையே நல்லது, அழகு ; மாசு கட்டுப்பாடும் இருக்கும்
புராதான பழைய கோயில்களை பராமரிக்கும் முறை
புராதன சின்னங்களான கோவில்களில்செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை :
பண்டைய காலத்து முறையை மதியுங்கள் அக்காலத்து கலைஞர்கள், சிற்பிகள் மிகுந்த பக்தியுடனும், கலை நுணுக்கத்துடனும் கோவில்கள் எழுப்பியுள்ளனர்.
நம்மைவிட குறைந்த பொருளுதவியும், வசதிகளும், தொழில்நுட்பமே இருந்தாலும், நம்மைவிட அதிக கவனம் செலுத்தி அவற்றை எழுப்பியுள்ளனர் அவர்களது உழைப்பை நாம் உதாசீனப்படுத்தக்கூடாது.
எனவே முன்னர் காலத்து சின்னங்களை சீர்செய்ய பிரிக்குமுன், அவர்களதுகஷ்டங்களை உணருங்கள். பண்டை காலத்தில் என்ன பொருட்கள் உபயோகித்தனரோ, அவற்றையேஉபயோகியுங்கள். (வெல்லம், கடுக்காய், வச்சிரம், மூலிகைகள் கலவைகள்கொண்டு கட்டப்படும் கோவில்கள், சுமார் 1000 ஆண்டுகள் நிலைத்துள்ளன.ஆனால், சிமெண்ட் கட்டிடங்கள் அதிகபட்சமாக 100-200 ஆண்டுகளேதாக்குப் பிடிக்கும்.
சுவற்றில், மதில்களில், கோபுரங்களில், எந்த கட்டுமானங்கள் மீதும், சிறிய செடிகள், மரங்கள் கொடிகளை வளரவிடாதீர்கள்.
இவை கோவில்களை ஆட்டம் காண வைக்கும் கொடிய வில்லன்கள்!
மாதம் ஒருமுறை களைகளை கண்டறிந்து, களையுங்கள்!
பழைய கற்களை அகற்றி செடிகளை நீக்குகையில், அதிக கவனம் தேவை.
மழைக்குப் பின் தான், களைகள் அதிகம் வளரும். மழை காலங்களில் பழையசுவர்கள், கோவில்களில் ஏறுகையில், கவனம் தேவை. கவனக் குறைவால்,அவை சரிந்து விடலாம்!
வேரோடு களைய முடியவில்லை என்றால், மரக்கொல்லிகளை உபயோகியுங்கள்.
இடுக்குகள், வேர் அறுத்த குழிகளை நல்ல சுண்ணாம்பு சுதை கரைசலினால் பூசி, மூடிவிடுங்கள்.
வலது கை வழிபாட்டின் ரகசியம்
நம்மில் பலரும் ஆலயத்திற்கு செல்கின்றோம். பிரதர்ஷணம் செய்கின்றோம். ஆனால் எதற்காக வலதுபுறத்தில் இருந்து இடப்புறமாகச் செல்ல வேண்டும், சில ஆலயங்களில் சில கட்டுப்பாடுகள் அதற்கு ஏன் என்பது பற்றியோ அதன் மகத்துவம் என்ன என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. அவற்றை தெரிந்து கொண்டு வழிபடுவதின் மூலம் நம்பிக்கைகள் இன்னமும் ஆழமாகப் பதியும். அதன் விளைவாக எழுந்ததே இந்த சுருக்கமான கட்டுரை.
ஆலயத்தில் அல்லது எந்த பூஜைகளிலாவது வலதுபுறத்தில் இருந்து துவங்கி பிரதர்ஷணம் செய்யப்பட வேண்டும் என்பதின் காரணம் என்ன எனில், இறைவன் தன் வலக் கையைத் தூக்கியே நமக்கு ஆசிகள் தந்து அருள் புரிகின்றார். ஆகவே அவர் அருள் தரும் வலது புறத்தினை நோக்கியே எந்த நல்ல காரியத்தையும் செய்யத் துவங்க வேண்டும் என்பது ஒரு ஐதீகம். மேலும் எந்த ஒரு நல்ல செயலையுமே செய்வதற்கு -சாப்பிடுவது முதல் -மனிதர்கள் வலது கையையே பயன் படுத்துகின்றனர்.
இடது கை பழக்கம் உள்ளவர்கள் கூட இடது கையை வேறு செயலுக்கே பயன்படுத்துவார்கள். பூஜை செய்யும் போது பூக்களை வலது கையினால்தான் போடுவார்கள். உயிர் எழுத்துக்களைப் பாருங்கள், அவை அனைத்துமே வலது பக்கத்தை நோக்கியே செல்லும். இந்துக்கள் போட்டுக் கொள்ளும் பூணலின் மேல்புறம் வலப்புறத்தின் உச்சியிலேயே உள்ளது. இடதுபுறத்தில் உள்ள இதயம் நின்று விட்டால் மனிதன் இறந்து விடுவான். ஆகவே இடதுபுறம் துயரத்தைத் தரும் இடம் என்பதினால் ஆண்டவன் உள்ள இடம் வலப்புறமாக கருதப்பட்டது.
திருமணம் ஆனப் பெண்ணை வலது காலை வைத்து உள்ளே வா என புகுந்த வீட்டினர் அழைப்பார்கள். திருமணம் ஆனதும் பக்கத்துப் பக்கத்தில் நிற்கும் கணவன் மனைவியை வலது கைகளால் பிடித்துக் கொண்டு நின்றபடியே ஆசிகளைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறுவார்கள். மேலும் வினாயகருக்கும் முருகப் பெருமானுக்கும் ஏற்பட்ட சச்சரவில் இருவருமே வலப்புறத்தில் இருந்தே ஓடத் துவங்கினார்கள். வினாயகர் தமது பெற்றோர்களை வலப்புறமாகச் சென்று பிரதர்ஷணம் செய்து வெற்றிக் கனியை பெற்றதினால், வெற்றிக்கு வலப்புறம் என்ற நம்பிக்கை வந்தது.
இப்படி பல விதத்திலும் வலது பக்கமே முக்கியத்துவம் பெற்றவையாக அமைந்து இருந்துள்ளன. ஆகவே நல்ல காரியங்களை வலப்புறத்தில் இருந்தே துவக்க வேண்டும், வலப்புறத்தில் உள்ள ஆண்டவனை நம் வலக் கையினால் பிடித்துக் கொண்டே செல்ல வேண்டும் என்ற நம்பிக்கை அதனால்தான் பிரதர்ஷணத்திலும் உள்ளது.
ஆகவேதான் நாம் பிரதர்ஷணம் செய்யும்போது ஆண்டவனின் ஆசிகளைத் தரும் வலது கையை நோக்கிச் சென்று ஆசிகளைப் பெற்றுக் கொண்டு அதற்கு நன்றியாக அவர் சரீரம் முழுவதற்கும் நம்முடைய பணிவான வணக்கங்களைத் தெரிவிக்க அவரை சுற்றிவிட்டு அவர் முன் வந்து நின்று நன்றி கூறிவிட்டுத் திரும்புகின்றோம்.
ஆண்டவனுக்கே அன்னை யார் ?
<சிவன் ஆதியும் அந்தமும் இல்லாதவர்.அவர் ஒரு தாய்க்கும் தந்தைக்கும் பிறந்தவர் அல்லர்.அவருக்கு தாயாகிற பேறு
ஒரு பெண்மணிக்குக் கிடைத்தது. அவர்தான் காரைக்கால் அம்மையார்.
ஆண்டவனை வணங்கி வழிபாடு செய்ய ஆழகான பெண் வடிவம் இடையூறாக இருக்கும் என்று பேய் வடிவம் வேண்டிப் பெற்றவர்.அவர் எம்பெருமான் வீற்றிருக்கும் கைலாய மலையை அடைந்தபோது அதைக் காலால் மிதிக்க அஞ்சினார்.எனவே தலைகீழாக நீன்று எறத்
தொடங்கினார்.அப்போது உம்மையம்மை சிவபெருமானிடம் 'தலையால்
நடந்து வரும் இந்த எழும்பு உருவம் யார் 'என்று கேட்டார்.அம்மையாரின் தன்னலமற்ற அன்புப் பெருக்கிலே திளைத்த
பரமசிவம் 'வருபவள் நம்மைப் பேணும் அம்மை காண்'என்று மொழிந்து மகிழ்ந்தார்.ஆகவே காரைக்கால் அம்மை ஆண்டவனுக்கே அம்மையாக , அன்னையாக ஆனார்.
தாய் மகன் உறவு பலப்படும் கருட பஞ்சமி
காஷ்யப முனிவருக்கு இரண்டு மனைவிகள். மூத்தவளுக்கு பாம்புகளும், இளையவளுக்கு கருடனும் பிறந்;து இருந்தனர். ஒற்றுமையாக வாழ்ந்து வந்தவர்களில் ஒரு முறை வாக்குவாதம் ஏற்பட்டது. இந்திரனின் குதிரையின் வாலின் நிறம் என்ன என்பதே வாக்குவாதம். முடிவாக இருவரும் அந்தக் குதிரையை சென்று பார்ப்பது எனவும் யார் தோற்றாலும் ஜெயித்தவளுக்கு தோற்பவர் அடிமையாக இருக்க வேண்டும் என முடிவு செய்தனர்.
மூத்தவள் தனது கறுப்பு நிறப் பாம்புகளை அழைத்து இந்திரனின் குதிரையின் வாலில் சென்று வால்போல சுற்றிக் கொள்ளுமாறு கூறி விட்டாள். இளையவளுக்கு அது தெரியாது. குதிரையை சென்று தூரத்தில் இருந்தே பார்த்தனர். இளையவள் மூத்தவள் செய்த மோசடியினால் தோற்று மூத்தவளுக்கு அடிமை ஆனாள். மூத்தவள் அவளை கேவலமாக நடத்தி வந்தாள்.
காலம் சுழன்றது . கருடன் பெரியவர் ஆனதும் அவருக்கு தன் தாயார் அடிமையாகி கஷ்டப்பட்டபடி இருப்பதும் அதற்கான காரணமும் தெரிந்தது. ஆகவே அவர் பெரிய தாயிடம் சென்று தன் தாயாரை அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்க என்ன செய்ய வேண்டும் எனக் கேட்க அவளும் தேவலோகத்தில் இருந்து அமிர்தம் கொண்டு வந்தால் விடுவிப்பதாகக் கூறினாள்.
கருடனும் வழியில் தன்னை எதிர்த்தவர்களை அழித்துக் கொண்டே தேவலோகம் சென்றார். இந்திரனிடம் சென்று நடந்ததைக் கூறி அவரிடம் இருந்து அமிருதம் பெற்று வந்து தமது பெரியம்மாவிடம் தந்துவிட்டு தாயை மீட்டார். மீட்டதும் தமது தாயாரை ஏமாற்றிய சகோதரர்களை துவம்சம் செய்யத் துவங்க காஷ்யப முனிவர் தலையிட்டு இருவருக்கும் சமாதானம் செய்தார். அங்கு வந்த இந்திரனும் அது முதல் கருடனுக்கு பாம்புகள் அடிமையாகட்டும்; என கருடனுக்கு அருள் புரிந்தார். பின்னர் கருடன் விஷ்ணுவிற்கு வாகனமாகினார்.
தமது தாயை அடிமைத்தனத்தில் இருந்து மீட்ட விஷ்ணுவின் வாகனமான கருடனை கொண்டாடும் விதத்திலேயே சக்தி வாய்ந்த மழலைச் செல்வமும், குடும்ப ஒற்றுமையும், முக்கியமாக தாயார் மகன் உறவு பலப்பட வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டு கருட பஞ்சமி கொண்டாடப் படுகின்றது. மேலும் கருடனுக்கு பாம்புகள் அடிமை ஆனதினால் நாக தோஷம் உள்ளவர்களும் கருட பஞ்சமியைக் கொண்டாடுகிறார்கள்.
அதே நாளில் சில இடங்களிலும் நாக பஞ்சமியையும் கொண்டாடுகிறார்கள். அன்றைக்கு ஒன்பது அனந்தா, வாசுகி, தட்ஷ்யா, குளிகா, ஷங்கபாலா ,மகா பத்மா, பத்மா, கேஷா மற்றும் கார்கோடன் போன்ற நாக தேவதைகளை வழிபட்டு நாக தேவதைகளின் அருளைப் பெற பிரார்த்தனை செய்கிறார்கள்.
திருவிளக்கு பூஜை, மாத பலன்கள்,
ஒவ்வொரு மாதத்திலும் திருவிளக்கு ஏற்றி அதில் லஷ்மிதேவியை உபாசித்து பூஜை செய்வதால் ஏற்படும் பலன்கள். அதிலும் பௌர்ணமி தோறும் கூட்டு வழிபாடு செய்திட பலன் அதிகம் கிட்டும்.
சித்திரை - தான்யம் பெருகும்
வைகாசி - தனம் உண்டாகும்
ஆனி - திருமணம் கைகூடும்
ஆடி - ஆயுள் உறுதிபடும்
ஆவணி - புத்திர பாக்கியம் உண்டாகும்
புரட்டாசி - பசுக்கள் பெருகி செல்வம் பெருகும்
ஐப்பசி - பசிப்பிணி நீங்கும்
கார்த்திகை - மோட்சம் கிடைக்கும்
மார்கழி - ஆரோக்கியம் உண்டாகும்
தை - வாழ்வில் வெற்றி உண்டாகும்
மாசி - பாவங்கள் விலகும்
பங்குனி - தர்மம் நிலைக்கும்..
அந்தந்த மாதப்பலனை பிரார்த்தித்து பூஜை செய்வோம்..
திருவிளக்கு பூஜை, மாத பலன்கள்
ஒவ்வொரு மாதத்திலும் திருவிளக்கு ஏற்றி அதில் லஷ்மிதேவியை உபாசித்து பூஜை செய்வதால் ஏற்படும் பலன்கள். அதிலும் பௌர்ணமி தோறும் கூட்டு வழிபாடு செய்திட பலன் அதிகம் கிட்டும்.
சித்திரை - தான்யம் பெருகும்
வைகாசி - தனம் உண்டாகும்
ஆனி - திருமணம் கைகூடும்
ஆடி - ஆயுள் உறுதிபடும்
ஆவணி - புத்திர பாக்கியம் உண்டாகும்
புரட்டாசி - பசுக்கள் பெருகி செல்வம் பெருகும்
ஐப்பசி - பசிப்பிணி நீங்கும்
கார்த்திகை - மோட்சம் கிடைக்கும்
மார்கழி - ஆரோக்கியம் உண்டாகும்
தை - வாழ்வில் வெற்றி உண்டாகும்
மாசி - பாவங்கள் விலகும்
பங்குனி - தர்மம் நிலைக்கும்..
அந்தந்த மாதப்பலனை பிரார்த்தித்து பூஜை செய்வோம்..
சித்தர்கள் யார்
சித்தர்கள் யார் என்ற கேள்விக்கு ஒரே வரியில் பதில் சொல்வதென்றால் சித்திகளை கைவரப் - பெற்றவர்களே சித்தர்கள். சித்தர்கள் யார் என்ற கேள்விக்கு - இறைவன் சிவபெருமானே பதில் கூறுகிறார் - தற்சமயம் வழக்கில் உள்ள உபநிடதங்கள் 108 ஆகும் இதில் 64வது உபநிடதம் யோக சிகா உபநிடதம் என்பதாகும.; இது சிவபெருமானால் பிரம்ம தேவருக்கு உபதேசித்ததாகும்.
உலகில் உள்ள எல்லா உயிர்களுமே இன்ப துன்பங்களுக்கு உட்பட்டு வாழ்கின்றன. இறைவா இந்த ஜீவர்கள் முக்தி பெருவது எப்படி என்று பிரம்ம தேவர் கேட்கிறார்.அதற்கு இறைவன் "இதற்கு உபயாம் யாதெனில் யோகமுடன் ஞானம்" என்றார்.
மேலும் ஜீவர்கள் அனைத்தும் மனத்தையுடையது. அந்த மனத்தை அடக்குவது பிராணனின் முலம் தான் வேறு வழியில்லை (இங்கு பிராணன் என்பது வேறு) இதற்கு வழி சித்தர்கள் போதித்தும் சாதித்தும் காட்டிய வழியன்றி வேறு இல்லை என்றார்.
எனவே " சித்தர்கள்" போதித்த வழி ஒன்றே இறைவனை சென்று அடையும் மார்கம் - என்பது தெளிவாகிறது. சித்தர்கள் போதித்த இந்த கலைக்கு சாகாக்கலை என்று பெயரிட்டார்கள் மேலும் தகுதி உள்ளவர்களுக்கு போதித்து அந்த கலையை தங்களது நூல்களில் இலைமறை காயாக கூறி சென்றிருக்கிறார்கள்.
சித்தர்கள் சாகாக்கலையை போதித்து விட்டு அவர்கள் இறந்து விட்டதாக உலகம் நினைத்துக் கொண்டிருக்கிறது. அப்படி இல்லவே இல்லை அவர்கள் தேகம் வெட்ட வெளியாகி கரைந்து நின்ற போதும் அவர்களது ஆன்மா ஜோதி சொரூபமாய் இன்றும் நிலைத்து நிற்கிறது.
அவர்கள் ஞானத்தை தேடுபவர்களுக்கு தக்க குருமார்களை காட்டிக் கொடுத்தும் சிலருக்கு தாமே குருவாகவும் வந்து அருள்பவர்கள். சித்தர்கள் கருனை கொண்டு மற்ற ஜீவர்கள் உலகில் இருந்து உய்வு பெறும் பொருட்டு தங்கள் பாடல்களில் பரிபாசையாக இந்த கலையை எழுதிவைத்து விட்டுச் சென்றார்கள்.
சித்தர்கள் இறைவனை கண்டவர்கள் மட்டுமல்ல இறைவனோடு கலந்து
நிறைந்தவர்கள். அவர்கள் சித்தி அடைந்த விதத்தை விஞ்ஞான பூர்வமாக மெய்ஞானிகள் பலர் விளக்கம் செய்தும் இருக்கிறார்கள். அவர்கள் ஒளிமய மாகும் முன்பு பிறர்க்கு தங்களை பரிட்சித்துக் காட்டி இருக்கிறார்கள். அவர்கள் நிழல் தரையில் விழுவதில்லை அவர்கள் உருவம் புகைப்படத்தில் பதிவதில்லை. அவர்கள் பாதங்கள் நிலத்தில் தொய்வதில்லை அவர்களது தேகத்தை சிதைக்க வாள் கொண்டு வீசினால் காற்றிலே வீசியது போல் இருக்கும் ஆனால் அவர்களை தாக்காது. அவர்கள் பிறர் கண்களுக்கு புலப்படுவதில்லை. அவர்கள் விரும்பினால் தன்னை புலப்படுத்திக் கொள்வார்கள் இது தான் சித்தியின் அடையாளங்கள் ஆகும்
நாம் இறைவன் திருவருள் பெற
நாம் இறைவன் திருவருள் பெற ஸ்ரீ காயத்ரி மந்திரத்தையோ அல்லது இஷ்ட தெய்வ மந்திரத்தையோ அனுதினமும் தியானிப்பது நலமளிக்கும்.
இம்மந்திரங்களை 27முறை தியானிப்பது சிறப்பைத்தரும்.நாம் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை போக்க முடிந்த மட்டும் இம்முறையில் தியானிப்பது ஒன்றுதான் சிறந்த வழியாகும்.
ஒவ்வொரு சூரிய ,சந்திர கிரகணத்தின் போதும் அம்மந்திரங்களை தியானித்தால் இறைவன் அருள் பரிபூரனமாக கிட்டும் ஸ்ரீ காயத்ரி மந்திரம் குரு உபதேசம் பெற்று பொருள் அறிந்துதான் தியானிக்க வேண்டும்.மனதிற்குள்ளும் யாகம் செய்யும் இடத்திலும் திருக் கோயில்களிலும் தியானிப்பது பன்மடங்கு பலன் தரும்
சிவலிங்கம் செய்யும் முறை
ஆயிரத்து ஒருமுறை வேதம் ஓதிய பின்புதான் ஒருமுறை உளியைத் தட்ட வேண்டும்.உளியைத் தட்டும் ஓசை வெளியில் கேட்காமல் வேதஓசை மிகுந்திருக்க வேண்டும்.
சிவலிங்கம் செய்து முடியும் வரை வேத ஓலி கேட்டு
கொண்டிருக்க வேண்டும் இடைவிடாமல் தொடர்ந்து அன்னதானம் நடைபெற வேண்டும் சிவலிங்கம் செய்த முடிந்ததும் வெண்மையான நெல்லை அன்னத்தால் மூடி மகேசுவர பூஜை செய்ய வேண்டும்.இவ்வாறு செய்யப்படும் சிவலிங்கத்துக்கே இறைவன் ஆவாஹனம் ஆவார்.
புலன்களை வென்றவர் "ஜிதேந்த்ரியர்
குரங்கு புத்தி" என்றே சொல்வது வழக்கம். எது ஒன்றிலும் நிலையாக ஒருநிமிடம் கூட நிற்காமல் சதா ஒன்று மாற்றியன்றாகப் பாய்ந்துகொண்டே இருப்பதற்குப் பேர் போனது குரங்கு. துளிக்கூட கட்டுப்பாடே இல்லாமலிருப்பதற்கு காரணம் அதுதான். இதனால்தான் மனிதர்களாகிய நம் எதிலும் கட்டுப்பட்டு நிற்காமல் சாஞ்சல்யமயமாக இருக்கிறபோது "குரங்கு புத்தி" என்கிறோம்.
ஹ்ருதய - கபிம் அத்யந்த சபலம்
என்று ஆசார்யாளே சொல்கிறார். "பரமேச்வரா!ரொம்ப ரொம்பச் சபலமான இந்த என்னுடைய மனக்குரங்கை பக்திக்கயிற்றாலே கட்டி உன் கையிலே பிடித்துக் கொண்டு குரங்காட்டி வித்தை பண்ணிப் பிழைத்துப் போ!வெறுமனே கபாலத்தை வைத்துக்கொண்டு பிச்சை கேட்பதைவிட இப்படி ஒரு வித்தை, கித்தை செய்து காட்டினாயானால், உனக்கும் நல்ல வரும்படி வருகிற பிழைப்புக் கிடைக்கும், நானும் பிழைத்துப்போவேன்" என்று பரமச்வரனிடம் அவர் வேடிக்கையாக ப்ரார்த்திக்கும்போது, "ஹ்ருதய கபி' அதாவது "மனக்குரங்கு", என்ற வார்த்தையை போட்டிருக்கிறார்.
வெள்ளைக்காரர்களும் "monkey mind" என்கிறார்கள். கட்டுப்பாடேயில்லாமல் ஸதா ஸர்வகாலமும் சரீரத்தாலோ, மனஸாலோ, அல்லது இரண்டினாலுமோ அலையாக அலைந்து கொண்டேயிருப்பதற்குக் குரங்குதான் ரூபகம்.
ஒரு பசு இருக்கிறது, யானை இருக்கிறது - இவை மாம்ஸம் சாப்பிடுவதேயில்லை, சாக உணவுதான் தின்கின்றன என்றால் அதிலே ஆசார்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. 'பசித்தாலும் புல் தின்னாது' என்கிற ஒரு புலி சாக பட்சிணியாக மாறினால் அதுதான் ஆச்சர்யம்!
ஆஞ்ஜநேய ஸ்வாமியின் ஆச்சயர்மான பெருமை இதில்தான் இருக்கிறது சாஞ்சல்யத்துக்கே (சஞ்சலத்தன்மைக்கே) பேர்போன கபியாக அவர் இருந்த போதிலும், அதோடு மஹா பலிஷ்டராக இருந்தபோதிலும், மனஸைக் கொஞ்சங் கூட சஞ்சம், சபலம் என்பதேயில்லாமல் அடக்கி, புலன்களையெல்லாம் அடக்கி, இந்த்ரிய நிக்ரஹம் பண்ணி, சரீரத்தையும் ராமசந்த்ரமூர்த்தியின் தொண்டுக்கே என்று அடக்கி அடிபணிந்து அவர் இருந்ததுதான் அவருடைய மஹிமை.
இதிலே இன்னொரு ஆச்சர்யம், அவர் மனதை அடக்கினார், பூர்ணமான இந்த்ரிய கட்டுப்பாட்டோடே இருந்தாரென்றால், எல்லாக் கார்யத்தையும் விட்டு விட்டு எங்கேயோ குகையிலே மூக்கை பிடித்துகொண்டு உட்கார்ந்து விடவில்லை. ஜன ஸமூஹ ஸம்பந்தமில்லாமல், கார்ய ப்ரபஞ்சத்தில் பட்டுக்கொள் -ளாமல் எங்கேயோ ஒதுங்கி மூக்கைப் பிடித்துக்கொண்டு உட்காருபவர்கள் இந்த்ரியம், சித்தம் ஆகியவற்றை ஒடாமல் அடக்கிப்போட்டு விடலாம். ஆஞ்ஜநேயர் அப்படி இல்லை. 'அஸாத்ய ஸாகதர்' என்கிற அளவுக்குக் கார்ய ப்ரபஞ்சத்திலே செய்திருக்கிறார். ஸமுத்ரத்தையே தாண்டுவது, ஒருமலையையே தூக்கிக்கொண்டுவருவது, ஒரு பெரிய வனத்தை அப்படியே நிர்மூலம் பண்ணுவது, ஒரு பெரிய பட்டணத்தையே தஹனம் பண்ணுவது - என்றிப்படிச் செய்தவர் அவர்.
மனதை கொஞ்சம் கூட சலிக்காதவர், ஸ்ரீ ராமனின் பாதாரவிந்தத்தை விட்டு இங்கும் அங்கும் துளிக்கூட ஆடாமல் ஓடாமல் மனதை நிறுத்தியிருந்தவர். ஆனால் உடம்பால் அவரைப்போல ஓடி ஆடித் தொண்டு செய்த இன்னொருத்தர் இல்லை. ராம த்யானத்திலே அசையாத மனதை ராம கார்யத்திலே 'இதைவிட வேகமில்லை' என்னும்படியாக ஓடியாடுகிற உடம்பு!
ரொம்ப வேகமாக ஓடுவது எது?
'வாயுவேகம், மனோவேகம்' என்பார்கள்.
"காற்று மாதிரி இந்த மனசு கிடந்து பறக்கிறதே! காற்றைப் பிடித்து வைத்து அடக்க முடியாத மாதிரியே அல்லவா இந்த மனதையும் கட்டுப்படுத்தி வைக்க முடியுவில்லை?" என்று அர்ஜுனன் முறையிடுகிறான்:
ஆஞ்ஜநேய ஸ்வாமி யார்?
சஞ்சலத்துக்கே பேர்போன கபி இனத்தில் பிறந்த அவர் ஸதாகாலமும் சஞ்சலித்துக்கொண்டேயிருக்கும் வாயுவுக்குப் புத்ரர்! வாயு குமாரர். 'வாதாத்மஜர்' என்றும் சொல்வார்கள். 'வாத' என்றாலும் வாயுதானே? 'ஆத்மஜன்' என்றால் புத்ரன். வாத - ஆத்மஜன் என்றால் வாயு புத்ரன்.
வாதாத்மஜம் வாநர - யூத - முக்யம்
ஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி
'யூதம்' என்றால் கூட்டம், ஸேனை. வானரப்படையில் முக்யஸ்தர் இவரே ஆனடிபயால் 'வாநர - யூத முக்யர்'
இது ச்லோகத்தின் பின் பாதி. முன் பாதி என்ன? அதிலே என்ன சொல்லியிருக்கிறது?
வாயுவேகம், மனோவேகம் என்று இரண்டு சொன்னேனே, அந்த இரண்டு வேகமும் படைத்தவர் இவர் என்று சொல்லியிருக்கிறது. ஆனால் மன்,
இந்த்ரியங்கள் ஆகியவற்றின் சலனத்தில் அல்ல. சரீரத்தாலே செய்கிற கார்யத்தில் தான் வாயுவேக, மனோவேகக்காரராக இருக்கறிவர்.
மநோ - ஜவம் மாருத - துல்ய - வேகம்
ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
"மநோ - ஜவம்' - மனஸைப் போன்ற வேகம் கொண்டவர். 'ஜவம்'என்றால் வேகம்.
"மாருத - துல்ய வேகம்" - காற்றுக்கு ஸமமான வேகமுடையவர். 'மாருதம்' என்றாலும் காற்றுதான். 'மந்த மாருதம்' என்கிறோமல்லவா? மாருதத்தின் புத்ரர் என்பதால்தான் அவருக்கு 'மாருதி' என்று பெயர். 'வீர மாருதி கம்பீர மாருதி' என்று (பஜனையில்) பாடுவார்கள்.
ஓயாமல் சலிக்கிற மனஸைப் போல 'மநோஜவர்':அப்படியே, ஓயாமல் சலித்துக்கொண்டிருக்கிற வாயுவைப் போல 'மாருத - துல்ய - வேகர்', அவரே வாயுவின் பிள்ளைதான் - 'வாதாத்மஜர்', சஞ்சல ஸ்வபாவத்துக்கே பேர் போன கபிகுல முக்யஸ்தராக இருப்பவர் வேறே - 'வாநர - யூத - முக்யர்!'
இப்படியெல்லாம் இருக்கிறவருடைய ஆச்சர்யமான மஹிமை என்ன என்றால், இவரையே ச்லோகம்,
ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
என்று ஸ்தோத்ரிக்கும்படியாகவும் இருக்கிறார்!
புலன்களை வென்றவர் இவர்:"ஜிதேந்த்ரியர்" - ஜித இந்த்ரியர் ஜயிக்கப்பட்ட இந்த்ரியத்தை உடையவர். மனஸ்தான் அத்தனை இந்த்ரிய கார்யத்துக்கும் மூலம். ஆகையால் அதை ஜயிப்பவர்தான் ஜிதேந்த்ரியர். மஹா சஞ்சலம் வாய்ந்த மனஸை ஜயித்த ஜிதேந்த்ரியர் இவர்.
அதனாலேதான் புத்திமான்களுக்கெல்லாம் உச்சியிலுள்ள 'புத்திமதாம் வரிஷ்ட'ராகி யிருக்கிறார். மனஸை நல்லதிலேயே 'ஸ்டெடி'யாக நிறுத்தி வைப்பதுதான் புத்தி. ஆகையினாலே ஜிதேந்த்ரியாக மனோ நிக்ரஹம் செய்துள்ள ஆஞ்ஜநேய ஸ்வாமி "புத்திமதாம் வரிஷ்ட" ராயிருக்கிறார்.
'புத்திமான்' என்று சொன்னாலே உசத்திதான். அதை விட உச்த்தி 'புத்திமதாம் வர' என்று சொல்லியிருந்தால். அப்படிச் சொல்லியிருந்தால் 'புத்திமான்களில் சிறந்தவர்' என்று அர்த்தம் கொடுக்கும். அதையும்விட உசத்தி, 'புத்தி மதாம் வரீய' என்று சொல்லியிருந்தால். சிறப்புப் பொருந்தியவர்களிலேயே ஒருத்தரை மற்றவேராடு ஒப்பிட்டு, 'கம்பேரடிவ்' - ஆக அவர் மற்றவரைவிட உயர்வு பொருந்தியவராக இருக்கும்போது 'வரீய' என்பார்கள். ஆனால், ஆஞ்ஜநேயரை இப்படிச் சொன்னால்கூடப் போதாது!இதையும் விட உசத்தியாக, "இதற்கு மேலே உசத்தியில்லை, இவரோடுகூட 'கம்பேரிஸ'னுக்கும் இடமில்லை, இவர்தான் புத்திக்கு 'ஸ¨பர்லேடிவ்', புத்திமான்கள் அத்தனை பேருக்கும் உச்சத்தில் இவரைத் தான்வைக்கணும்" என்றே (ச்லோகத்தில்) "புத்திமாதம் வரிஷ்ட" என்று சொல்லியிருக்கிறது. "வரிஷ்ட"தான் சிறப்பின் உச்சஸ்தானம். அதற்கு மேலேயும் இல்லை, ஸமதையும் இல்லை அதற்கு அடுத்தபடியாக 'கம்பேர்' பண்ணக்கூட இன்னொன்று இல்லை.
ஞானிகளில்கூட இப்படி ப்ரஹ்மவித், ப்ரஹ்மவித்வரன், ப்ரஹ்மவித்வரீயன், ப்ரஹ்மவித்வரிஷ்டன்' என்று உயர்த்திக் கொண்டே போவதுண்டு. மாருதி புத்திமதாம் வரிஷ்டர்.
ஆனால் இந்த இந்த்ரிய ஜயம், புத்திச் சிறப்பு எல்லாவற்றையும் விடப் பெரிய அவருடைய பெருமை என்னவென்றால் அவர் ராமதாஸனாக இருந்து, "பகவானுக்கு இவரைப் போலப் பணி புரிந்தவரில்லை" என்று அக்ர ஸ்தானம் (முதலிடம்) பெற்றிருக்கிறாரே, அதுதான். புத்திமான்களைப் போலவே பக்திமான்களுக்கு வரிஷ்டராயிருக்கிறாரே, அதுதான், தேஹ சக்தியோடு, புத்தி நுட்பத்தையும் ரொம்பவும் காட்டிச் செய்ய வேண்டிய பணி தூது போவது. அந்த தூதுப் பணியை ரொம்பவும் சிறப்பாகச் செய்த, ஸாட்சாத் ஸீதா - ராமர்களுக்கே துக்கத்தைப் போக்கிப் பெரிய நம்பிக்கையையும் உத்ஸாஹத்தையும் ஊட்டினாலே, அதற்காகத்தான் முக்யமாக அவரைத் தலை வணங்கிப் பணியவேண்டும் ."ஸ்ரீ ராமதூதம் சிரஸா நமாமி" என்று பாதத்தில் விழுந்து நமஸ்காரம் பண்ணவேண்டும்.
மநோஜவம் மாருத - துல்ய - வேகம்
ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் 1
வாதாத்மஜம் வாநர - யூத - முக்யம்
ஸ்ரீ ராமதூதம் சிரஸா நமாமி 11
காரைக்கால் அம்மையார்
மனித வாழ்க்கை குறைபாடு உடையது தான் முழுநிறைவான இறைவனை அடையவும் அருள்பெறவும் நம்மால் முடியுமா?முடியும் ,உள்ளம் உருகிக் கண்ணீர் மல்கி வணங்கி வழிபட்டால் இறைவன் நமக்கு எல்லாம் தருவான் ,
அவனை மறவாதிருந்தால் போதும்,நினைத்து நினைத்து நிறைந்து நிறைந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணிரதனால் உடம்பு நனைந்து நனைந்து போற்றி துதித்தல் போதும்.அதனால் தான் காரைக்கால் அம்மையார் சிவபெருமானைப் பார்த்து இறவாத இன்ப அன்பு வேண்டும்,பிரவாமை வேண்டும்,மீண்டும் பிறப்பு உண்டானால் உன்னை என்றும் எப்பொழுதும் மறவாமை வேண்டும்.மேலும் திருநடனம் புரியும் போது உன் அருகிலேயே நான் மகிழ்ந்து பாடிப் கொண்டு இருக்க வேண்டும் என்றார். ஆண்டவர் அப்படியே ஆகட்டும்
என்று அருள் புரிந்தார் .காரைக்கால் அம்மையார்க்கு இறைவன் அருகிலே இடம் கிடைத்தது.
கற்றது கைமண் அளவு
வேதம் மொத்தத்தையும் யாரும் கற்றுக்கொண்டு விட முடியாது. வேதங்கள் அனந்தம். பரத்வாஜ மஹரிஷி மிக இளமையிலேயே வேதம் கற்க ஆரம்பித்தார். 96 வயசு ஆகிவிட்டது. ஆனால் முழுக்க கற்றுக்கொண்டு முடிந்தபாடில்லை. எனவே இந்திரனை நோக்கித் தவமிருந்தார். அவன் அவர் முன் தோன்றி என்ன வேண்டும் என்று கேட்டான். இன்னும் நூறு வயது வரை வாழ ஆயுள் வேண்டும்
என்றார். இந்திரனும் வரமளித்துப் போனான். அந்த ஆயுளும் 96 ஆண்டுகள் முடிந்தது. ஆனாலும் வேதத்தை முழுதும் கற்க முடியவில்லை. பரத்வாஜரால் மறுபடியும் தபஸ் மறுபடியும் வரம் என்று மூன்று நூறு வருடங்கள் கடந்தன. நான்காவது முறை அவர் மீண்டும் வரம் கேட்டு விடுவாரே என்று அஞ்சி இந்திரன் அவர் தவத்தைத் தொடங்கும் முன்பே பிரத்யட்சமாகிவிட்டான்.
உமக்கு நான்காவது ஆயுளைக் கொடுத்தால் அதைக் கொண்டு என்ன செய்வதாக இருக்கிறீர்? என்று பரத்வாஜரைக் கேட்டான் இந்திரன். என்ன கேட்கிறாய் இந்திரா நீ பிரம்மச்சார்யம் அனுஷ்டித்து வேதம் பயில்வதைத் தவிர வேறு காரியம் எனக்கு இல்லை என்றார்.
உடனே இந்திரன் பூ புவ சுவ என்று மூன்று மலைகளான வேதங்களைக் கற்று விட்டதாக நினைத்து இந்திரா இது மொத்தமும் எனக்கு வந்துவிட்டதா என்றார். உமக்கு வந்ததைக் காட்டட்டுமா என்றான் இந்திரன். ஒவ்வொரு மலையிலிருந்தும் ஒரு பிடி மண்ணை எடுத்துப் போட்டு முந்நூறு வருஷ காலத்திலே அத்யயனம் பண்ணினது இந்த மூன்று கைப்பிடி. இன்னும் எத்தனை நூறு வயது எடுத்தால் இந்த மூன்று மலைகளையும் உம்மாலே கரைக்க முடியும்? என்றான். நடுங்கிப் போய்விட்டார் பரத்வாஜா
ஆண்டாள்---கோதை சூடிய மாலையே எனக்கு பிரியமானது
திருப்பாவை வைணவ ஆழ்வார்களில் ஒரு வரான ஆண்டாள் பாடிய நூல்.திருப்பாவை நாயகி ஆண்டாள் பற்றி ஒருஅறிமுகம். ஆடி மாதம் சுக்ல பக்ஷம் சதுர்த்தசியும் பூர நட்சத்திரமும் கூடிய நன்னாள். திரு விஷ்ணுசித்தர் என்ற ஒரு பக்தர் தினமும் கண்ணனுக்கு நந்தவனத்தில் மலர் பறித்து மாலையாய் தொடுத்துபெருமாளுக்கு சேவிப்பார்.
ஒரு நாள் நந்தவனத்தில் துளசி செடி அருகே ஓர் அழகியப் பெண் குழந்தையைக் கண்டார்.ஸ்ரீ வில்லிப்புத்தூர் வடபத்ரசாயி பெருமாள் அளித்த பாக்கியம் என்று நினைத்து அந்த பெண் குழந்தைக்கு கோதை என்று பெயரிட்டார். அந்த குழந்தைக்கு எல்லா கலைகளும்,தமிழ் வேதாந்தம்,நல்லொழுக்கம் என்று முறையாக வளர்த்துவந்தார்.
சிறு வயதிலிருந்து கண்ணனின் கதைகளையும்,அவன் யசோதை தாயிடம் கொண்ட அன்பும்,
கோபியர்களிடம் செய்த குருன்புதனம் இப்படி கண்ணை பற்றி கேட்கக் கேட்க அவரின் மீது அளவில்ல காதல் கொண்டு அவரையே மணக்க வேண்டும் என்று அவரின்பால் கொண்ட அன்பினால் அவரை நினைத்து நினைத்துஅவருடன் ஓடி விளையாண்டு பேசி மகிழ்ந்து கற்பனை உலகில் மிதந்தாள்.
இவ்வாறு , தினமும் கண்ணனுக்கு தொடுத்த மாலையை தானே அணிந்து கொண்டு அதை பார்த்து ரசித்த பின்கண்ணுக்கு அணிவிப்பால்.ஒரு நாள் கோதையின் அப்பா மாலையை கோவிலுக்கு எடுத்துப் போகும் போது அதில் கோதையின் நீள முடி இருந்ததைப் பார்த்துவிட அதனால் கோதையை கடிந்து கொண்டு வேறொரு மாலையை தொடுத்து அணிவித்தார்.
அந்த மாலையை ஏற்க மறுத்த பெருமாள்,அன்று இரவு பெரியாழ்வார் கனவில் வந்து "கோதை சூடிய மாலையே எனக்கு பிரியமானது "என்று கூறி மறைந்தார்.
கோதை கண்ணின் மீது கொண்ட காதலினால் அவரையே மணப்பதாக கூறினார். ஒரு நாள், பெரியாழ்வார் கனவில்வந்து ஆண்டாளை மனப்பதாகவும் ஸ்ரீ ரங்கத்துக்கு மணப்பெண்ணாக அழைத்து வரும்மாறு கூறினார். அங்கு கருவறைக்குள் ஆண்டாள் சென்றதும் மறைந்து இறைவனடி சேர்ந்துவிட்டார்.
கண்ணனை அடைய பாவை நோன்பு எனும் விரதத்தை மார்கழி மாதத்தில் மேற்கொண்டால் போது மென நாரதர் கோபியரிடம் கூறியதாக ஒரு ஐதீகம். இதானால் தான் திருப்பாவை தோன்றியது. திருப்பாவையில் ஆண்டாள்,ஸ்ரீ வில்லிப்புத்துரை ஆயர்பாடியாகவும்,தன் தோழியரை கோபியராகவும் உருவகித்து.பாவை நோன்பிருகாக கோபிகளை அழைத்து செல்வது போல எழுதயுள்ளர்.
சித்தர்களின் நெறி
சித்தன் அன்டத்தைப் பார்க்கிறான் எப்பொழுதும் போலவே இருக்கிறது. சூரியன், சந்திரன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் இருந்தது இப்பொழுதும் இருந்து கொண்டிருக்கிறது இனியும் இருக்கும். இந்த மண் இருந்தது மீண்டும் அப்படியே இருக்கும் ஆமாம் நீரும் தான் இருக்கிறது சமுத்திரங்களும் இருக்கிறது பிரளயத்தால்
இடத்தை மாற்றிக் கொண்ட போதும் இருக்கத்தான் செய்கிறது.
நம்மை தீண்டி கொண்டும் வெளியில் உலவிக் கொண்டும் காற்று கூட தன் வலிமையை இழக்காமல் இருக்கிறது. அது உலர்ந்து போவதில்லை ஒரே இடத்தில் அடைந்து கிடக்கவும் இல்லையே! உலகெலாம் பரவிக்கிடக்கிறதே! அது அடங்கிவிடவும் இல்லையே?
நெருப்பும் கூட ஒரே தன்மையாக அதன் வீரியத்தை இழக்காமல் இருக்கிறதே! அன்றும்
சுட்டது இன்றும் சுடுகின்றது பலவற்றை உலர்த்துகின்றது பக்குவப் படுத்துகின்றது
ஜொலிக்கின்றது. அதன் தன்மையை ஒருபோதும் இழந்து விட வில்லை. ஆகாயம் பரந்து விரிந்து தன் விசாலமான பரப்பினுள்ளே பேரண்டம் சிற்றண்டம் கோள்கள் இவற்றுகெல்லாம் இடம் கொடுத்து கொண்டிருக்கிறது. இப்படி பஞ்ச பூதங்கள் காலங்காலமாகக் தனது இயல்புகளை இழந்து விடாமல் நிலைத்து நின்று அழியாத நிலையில் யாரோ ஒருவரால் நியதிப்படுத்தப் பட்டிருக்கிறது என்பதையும். அவரே மெய்பொருளாகிய இறைவன் என்பதையும் அறிந்தார்கள்.
இந்த உடலிலும் பஞ்ச பூத கலப்பின் விகிதம் அறிந்தார்கள். பிறகு அந்த விகிதாச்சாரத்தை மாற்றியும் அமைத்து மரணத்தை வென்றார்கள் இந்த கலைக்கு சாகாக்கலை என்று பெயரிட்டார்கள் அல்லது தகரவித்தை என்றார்கள்.சாகும் தன்மை கொண்ட தூல உடம்பை சாக விடாது சோதி யெனும் அருளினாலேயே கரைய செய்து வேதியலாக் குவதே ஒளி உடம்பு பெருதல். இதுதான் சின்மயமாதல் ஆகும்.
சித்தர்களின் அறிவியலில் பஞ்சாட்சரம் இருவகைப்படும்
1. தூல பஞ்சாட்சரம்
2. சூக்கும பஞ்சாட்சரம்.
இதில் தூல பஞ்சாட்சரம் என்பது நமசிவய, சூக்கு பஞ்சாட்சரம் என்பது சிவயநம. திருமூலர் இதனை. எளியவாது செய்வாரெங்கள் ஈசனை ஒளியையுண்ணி யுருகு மனத்தாராய்த் தெளியவோதி சிவாய நம வென்னும் குளிகையிட்டுப் பொன்னாக்குவன் கூட்டையே. திருமந் - 2709.
தமிழ் ஞான மூதாட்டியாகிய ஓளவையும் சிவயநம என்றிருப் போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை என்கிறார்.இறைவன் ஒளிமயமானவன் சோதிமய மானவன் என்பதை அறிந்து அதிலே தனது கரணங்களை ஒடுக்கி தூல விகிதத்தை சூக்கும விகிதமாக மாற்றி தூல உடம்பை ஒளி உடம்பாக மாற்றி இறைவனோடு இரண்டற கலப்பதேயாகும்.
சிவாக்கியார் சூக்கு பஞ்சாட்சர மகிமையை பின்வருமாரு கூறுகிறார்.
சிவயவசி என்னவும் செவிக்க இச்சகமெலாம்
சிவயவசி என்னவும் செவிக்க யாவும்
சித்தியாம் சிவயவசி என்னவும் செவிக்க வானமாளலாம்
சிவயவசி என்பதே இருதலை தீ ஆகுமே!
இதை தக்க குருமூலம் உபதேசக்கலையால் கடவுள் நிலையறிந்து அம்மய மாதலாகும். இது பிரம்ம ரகசியம் சிவரகசியம் என வேத ஆகமங்கள் கூறும் மெய் நெறியாகும். இது எந்நாட்டவரும் எம்மதத்தினரும் எச்சமயத்தவரும் உணர்ந்து சமரசம் பெறும் மெய்நெறியாகும். இதுவே சித்தர்களின் நெறியாகும.
ஆணவம் அறிவை அழிக்கும். அகம்பாவம் உன்னையே அழிக்கும்.
முன்னொரு காலத்தில் பல கலைகளயும் கற்றறிந்திருந்த முனிவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் மாரிச முனிவரின் மகன். எத்தனை அறிவாளியோ அத்தனை திமிர் பிடித்தவர், தலைகனம் மிக்கவர். அவர் இராஜ்யம் இராஜ்யமாகச் சென்று கொண்டு மன்னர்களை சந்தித்தவண்ணம் இருப்பார். அவருக்கு இராஜ மரியாதை கிடைக்கும்.
அவர் செல்லும் இராஜ்யங்களில் எல்லாம் மன்னர்களுடன் சொற்போர் நடக்கும். அவர் அந்த இராஜ்யத்து மன்னனிடம் நூறு கேள்விகள் கேட்பார். அவர்கள் அதில் குறைந்தது பாதியாவது சரியான பதில் தந்து விட்டால் அவர் அவர்களுக்கு ஆசி கூறிவிட்டுச் சென்று விடுவார். எவர் ஒருவர் பாதிக்கும் குறைவான பதிலைத் தருவார்கனோ அவர்கள் இராஜ சிம்மாசனத்தை விட்டு இறங்கி அமைச்சர்களுடன் சென்று அமர வேண்டும். அந்த முனிவர் அந்த ஊரில் இருக்கும்வரை அவருடைய கைத்தடியும், கமண்டலமும் அந்த சிம்மாசனத்தில் வைக்கப்பட்டு இருக்கும்.
அதே நேரத்தில் அந்த நாட்டு மன்னனுக்கும்; முனிவரிடம் தன்னை அவர்கள் மூன்று கேள்விகள் கேட்க அனுமதித்தார். அதற்கு அவர் சரியான பதிலைத் தராவிட்டால் மன்னன் மீண்டும் சிம்மாசனத்தில் அமர்ந்து கொள்ளலாம். அவர் சரியான பதில் தந்து விட்டால் அரசன் மொட்டை அடித்துக் கொண்டு வந்து அந்த ஊரில் முனிவர் உள்ளவரை ஆசனத்தில் தலைப்பாகை இல்லாமலேயே அமர வேண்டும். ஆனால் எவருக்கு முனிவரிடம் கேள்வி கேட்கும் அளவில் ஞானம் இருந்தது? ஆகவே அவர் பல மன்னர்களை இப்படியாகவே அவமானப்படுத்திக் கொண்டே இருந்தார் அந்த முனிவர்.
ஒரு முறை அவர் ஒரு இராஜ்யத்துக்குச் சென்றார். அந்த அரசன் மிக்க புத்திசாலி. நன்கு படித்தறிந்தவர். அவன் இராஜ்யத்துக்குச் சென்ற முனிவர் அரசனிடம் கேள்விகள் கேட்டார். அந்த அரசனோ விடைகள் நன்கு தெரிந்திருந்தும் வேண்டும் என்றே பாதிக்கும் குறைவானவற்றுக்கே சரியான பதில் தந்தார். ஆகவே அடுத்து மன்னன் கேள்விகள் கேட்க சந்தர்ப்பம் கிடைத்தது.
முனிவர் வெற்றிச் சிரிப்புடன் அமர்ந்து இருந்தார். இவன் என்னிடம் என்ன கேள்வி கேட்க முடியும், எனக்குத் இல்லாத ஞானமா இவனுக்கு என இறுமாப்புக் கொண்டு அமர்ந்திருந்தார்.
மன்னன் முனிவரிடம் கேட்டான் " மாபெரும் முனிவர் அவர்களே, பேரானந்த நிலை என்பது என்ன, அது எங்கு உள்ளது என்பதை எனக்குக் காட்ட முடியுமா? இரண்டாவது பேரானந்த நிலையை கண்களைத் திறந்து வைத்திருந்தபடிக் காண முடியுமா? முடியும் என்றால் அது எப்படி?"
முனிவர் பேரானந்த நிலைப் பற்றி எதையெதையோ கூறத் துவங்கினார். ஆனால் அவரால் அதைக் காட்ட முடியவில்லை. எவன் அதை அனுபவிக்கிறானோ அவன்தானே அதைக் கூற முடியும், ஆனால் அதை எப்படி வெளிக்காட்டுவது? அரச சபையில் சலசலப்பு ஏற்பட்டது.
அது முடியாது என நினைத்த மன்னனிடம் முனிவர் கூறினார், 'எங்கே அதை நீ காட்டு பார்க்கலாம். நான் உனக்கு தலை வணங்கி விட்டு உடனேயே கிளப்பி இந்த நாட்டை விட்டுப் போய் விடுகின்றேன்'. மிகவும் நிதானமாக மன்னன் அவரை அந்த அரண்மனையில் குறட்டை விட்டபடி தூங்கிக் கொண்டு இருந்த ஒருவனிடம் அழைத்துச் சென்றான். அவர்களுடன் அனைவரும் அதைப் பார்க்கச் சென்றனர். அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தவனை தட்டி எழுப்பினான் மன்னன். நீ தூக்கத்தில் என்ன பார்த்துக் கொண்டு இருந்தாய் எனக் கேட்டான். அவன் முழித்தான். 'தவறு ஐயா என்னை மறந்து நன்கு உறங்கி விட்டேன்'; என்றான். அரசன் முனிவரிடம் கூறினார் 'இதுவே பேரானந்த நிலை என்பது. தன்னையே மறந்து, தன் ஜீவனை மறந்து இந்த உலகில் நடப்பதையே தெரிந்து கொள்ளாமல் ஏகாந்த நிலையில் உறங்கியவாறு இருந்தானே அதுவே பேரானந்த நிலை என்பது.
கண்களை திறந்து வைத்துகக் கொண்டு இருந்தால் அதைக் காண முடியாது. காரணம் அனைத்தையும் பார்த்துக் கொண்டே இருக்கும் கண்கள் மனதை அதன் மீது செலுத்தும். தன்னை மறந்து இருக்க முடியாது'.
அதைக் கேட்ட முனிவர் வெட்கம் அடைந்தார். தமது வாழ்க்கையில் முதன் முறையாகத் தோற்று விட்டோமே என வருந்தினார். அனைவரின் முன்னாலும் மன்னனிடம் தலை குனிந்து மன்னிப்புக் கேட்டப் பின் அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டார். அதன் பின் அவர் காடுகளிலேயே தவம் இருக்கலானார். எந்த இராஜ்யங்களுக்கும்; செல்லவில்லை.
ஆணவம் அறிவை அழிக்கும். அகம்பாவம் உன்னையே அழிக்கும்.
ஓம்கார மந்திரத்தின் சிறப்பு
ஓம்காரம், இதுவே பல மந்திரங்களில் முதலில் இடம்பெறும் சொல். இந்த மந்திரத்திற்கு பல கோடி அர்த்தங்கள் உண்டு என்று புரானங்களில் சொல்வதுண்டு.
"ஓம்" சாந்தி சாந்தி என்றால் 'நிசப்தமான ஓசை' என்று பொருள்.
உபநிஷத்களில் ஓம்கார மந்திரமே முதன்மையான மந்திரம். இதுவே பிரம்மத்தை அடைய வழி.
பிரம்மம் என்றால் எல்லாம். இது தான் பிரம்மம் என்று வரையருக்க முடியாது. கணித்தில் infinity என்று ஒன்று உண்டு. அதாவது எல்லாவற்றிற்கும் மேலாக அல்லது அதுவே எல்லாம் என்று பொருள். பிரம்மமும் அப்படி தான்.
ஒம்கார மந்திரமே 'பிரணவ' மந்திரம். 'பிரணவம்' என்றால் சுவாசம் என்று பொருள். மனிதனுக்கு சுவாசம் எவ்வளவு முக்கியமோ அதே போல இந்த மந்திரமும் முக்கியம் என்பதை எடுத்துக் காட்டவே இந்தப் பெயர்.
பிரம்ம தேவன் உலகை படைப்பதற்கு முன் எழுந்த ஓசை தான் 'ஓம்'.
பிரம்மா மும்மூர்த்திகளில் முதலாமவர். இவருக்கு படைக்கும் கடவுள் என்ற பெயரும் உண்டு. இவரே ஞானம், அறிவு, பக்தி போன்ற கண்ணுக்கு தெரியாதவைகளை வழங்கும் கடவுள். அதனால் தான் இவருக்கு கோவில்களே கிடையாது என்று சொல்வதுண்டு.
மும்மூர்த்திகளில் இரண்டாமவர் விஷ்ணு. இவர் காக்கும் கடவுள். பூமியில் அதர்மம் தலை தூக்கும் போதெல்லாம் புதிய அவதாரம் எடுத்து தர்மத்தை காப்பவர். மூன்றாமவர் கைலாயத்தில் இருக்கும் சிவன். இவரே அழிக்கும் கடவுள்.
ஒரு முறை முருக கடவுள் பிரம்மாவிடம் ஓம்காரத்திற்கு விளக்கம் கேட்டார். பிரம்மாவும் பத்தாயிரம் விளக்கங்களை கூறினார். அதனால் திருப்தி அடையாத முருகப் பெருமான் அவரை சிறைபிடிக்கும் படி உத்தரவிட்டார். இதை கேட்டதும் சிவபெருமான் ஓம்கார மந்திரத்திற்கு பத்துலட்சம் விளக்கங்களை எடுத்து கூறி முருகனை சமாதான படுத்த முயன்றார். ஆனால் முருக பெருமானோ தந்தைக்கே பத்து கோடி விளக்கங்களை எடுத்துரைத்தார் என்று ஒரு புராண கதை உண்டு.
'அவும்' என்பதே ஓம்காரத்தின் சரியான உச்சரிப்பு.
"ஓம் கார மந்திரத்தில்" நான்கு நிலைகள் உள்ளன.
முதல் நிலை, விழிப்புடன் இருக்கும் நிலை (அ)
இரண்டாம் நிலை, கனவு நிலை (வு)
மூன்றாம் நிலை, உறங்கும் நிலை (ம்)
நான்காம் நிலை, அமைதி (துரிய நிலை)
சம்ஸ்கிருதத்தில் ஓம்
ஓம் என்ற சொல்லில் நான்கு நிலைகள் உள்ளது போல், அதன் வடிவிலும் நான்கு நிலைகள் உள்ளன.
கீழே உள்ள பெரிய வளைவு முதல் நிலையை குறிக்கிறது.
மேலே உள்ள சிறிய வளைவு மூன்றாம் நிலையை குறிக்கிறது.
நடுவே வளைந்து இருக்கும் வளைவு கனவு நிலையை குறிக்கிறது.
மேலே உள்ள புள்ளி, அதன் கீழே உள்ள சிறிய அரைவட்டம் பிரம்மத்தை குறிக்கிறது.
ஓம் உச்சரிப்பதால் ஏற்படும் நன்மை
1. ஓம் மந்திரத்தை உச்சரிப்பதால் உடல் புத்துணர்ச்சி பெறும்.
2. மனம் சஞ்சலப் படுகிறதா, ஓம்கார மந்திரத்தை 50 முறை ஜபியுங்கள்,
உங்கள் கவலை கரைந்து போகும்.
3. தினமும் ஓம்காரத்தை ஜபித்து தியானம் செய்பவர்கள் முகம் தேஜசுடன் இருக்கும்.
ஒம்காரத்தை தியானம் செய்வது எப்படி?
அமைதியான, தூய்மையான இடத்தை தேர்தெடுத்து வசதியாக அமருங்கள். உடல் தசைகளை தளர்த்தி அமைதியாக கண்களை மூடுங்கள். உங்கள் கவனத்தை இரு புருவங்களுக்குள் கொண்டு வாருங்கள். உங்கள் பிரச்சைனைகள், சந்தோஷங்கள் என்று எதை பற்றியும் யோசிக்காமல் மனதை ஒரு நிலை படுத்தி ஓம் என்று ஜபியுங்கள். வெறும் வாயினால் ஜபித்தால் மட்டும் போதாது. பிரம்மத்தின் பொருளை உணருங்கள். உங்கள் உடல் பொருள் அனைத்திலும் பிரம்மத்தை உணருங்கள்.
இவ்வாறு தினமும் மூன்று வேளைகள் செய்து வருவது மிகவும் நல்லது.
இந்த மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும் என்று சொல்வது வழக்கம். அது என்ன 108 கணக்கு ?
சூரியனுக்கும் சந்திரனுக்கு உள்ள இடைவெளி தோராயமாக அதனதன் உருவத்தினால் 108 மடங்கு உள்ளது. இதை குறிப்பதே 108 கணக்கு.
பாம்பாட்டி சித்தர்
பலவிதமான பாம்பை பிடிப்பது அவைகளின் விஷத்தை சேமித்து விற்ப்பது. இவைகளே ஆரம்பகாலத்தில் பாம்பாட்டி சித்தரின் தொழிலாகும் . இவர் விஷ முறிவு மூலிகைகளை பற்றி நன்கு தெரிந்திருந்ததால் அந்த ஊரில் பாம்பு கடிக்கு சிறந்த வைத்தியராகவும் திகழ்ந்தார்.
ஒரு நாள் சிலர், மருத மலை மீது பெரிய நவரத்தின பாம்பு இருப்பதாகவும், அதன் தலையினில் விலை உயர்ந்த மாணிக்கம் இருப்பதாகவும், அதை பிடிப்பவன் பெரிய பாக்கிய சாலி என்வும் பேசிசென்றனர். இதனை கேள்விப்பட்ட பாம்பாட்டி_சித்தர் அதனை பிடிக்கவிரும்பி காட்டிற்குள் சென்றார். தீவிரமாக பாம்பை தேடினார்.
அப்போது திடீர் என்று பலத்த சிரிப்பொலி கேட்டுதிரும்பினார். அங்கே மிகபிரகாசமான ஒளியுடன் சட்டை முனி சித்தர் தோன்றினர் . "இங்கு எதை தேடுகிராய்?" என வினவினார். அதற்க்கு பாம்பாட்டியார் "நான் நவரத்ன பாம்பை பிடிக்கவந்தேன், அதை காணவில்லை" என்று தெரிவித்தார் .
இதைகேட்ட சட்டை முனி சிரித்தார். "நவரத்தின பாம்பை உனக்குள் நீயே வைத்துகொண்டு வெளியே தேடுகின்றாயே! இது பயனற்றசெயல் அல்லவா! மிகுந்த உல்லாசத்தை தர கூடிய ஒரு பாம்பு அனைவர் உடலிலும் உண்டு, ஆனால் யாரும்_அதை அறிவதில்லை. எனவே வெளியே திரியும் இந்தபாம்பை தேடுவதை விட்டு விட்டு, இல்லாத பாம்பைதேடி ஓடாதே" என்று கூறினார் .இவை அனைத்தையும் கேட்டு உண்மையினை உணர்ந்த பாம்பாட்டியார் சித்தரின்_காலில் விழுந்து வணங்கினார்.
சட்டைமுனி சித்தர் கனிவோடு பாம்பாட்டியாரை பார்த்து விளக்கம் தர தொடங்கினர். "அற்புதம் வாய்ந்த இந்தமனித உடலினுள் ஆதியிலிருந்தே குண்டலினி' என்ற ஒருபாம்பு படுத்துகொண்டு இருக்கிறது. தூங்கி கொண்டு இருக்கும் அந்தபாம்பு அறிவை குறைக்கின்றது . இதன் நுட்பத்தை அறிந்துகொள்வது அரிது. மக்களின் துன்பத்துக்கு மூலாகாரணமே இந்த மூலாதார பாம்பின் உறக்கம்தான்.
இறைவனை உணர பாடு படுபவர்களுக்கு சுவாசம்_ஒடுங்கும். அப்பொழுது 'குண்டலினி' என்ற அந்தபாம்பு விழித்தேழும். எனவே தியானம் சித்திக்கும். இறைவன்_நம்முள் வீற்றிருப்பார். மனிதனுள் இறைவனை காணும் இரகசியம்_இதுவே" என சொல்லிமுடித்தார்.
"குருதேவா! அரும் பெரும் இரகசி யத்தை உங்களால் இன்று தெரிந்துகொண்டேன் . மேலான இந்தவழியை விட்டு இனிநான் விலக மாட்டேன்!" என சொன்ன பாம்பாட்டியார், சித்தரை_வணங்கி எழுந்தார். சித்தர் அருள் புரிந்து விட்டு மறைந்தார்/.
பாம்பாட்டியாரின் தொடர்யோக சாதனையினால் குண்டலினி யோகம் கை கூடியது. எல்லா வகை சித்துக்களும்_சித்தியானது. மக்களின் நோய்களை மூலிகைகளால் குனபடுத்தினர் .
இவர் தவம்செய்த குகை மருத மலையில் உள்ளது . இவர் மருத மலையில் சித்தி அடைந்ததாக சிலரும், துவாரகையில் சித்தியடைந்ததாக_சிலரும், விருத்தாசலத்தில் சிலரும் கூறுகின்றனர். மூன்று இடங்களிலுமே இவரது_நினைவிடம் உள்ளது.
ஸ்வஸ்திக்" சின்னம்
மருத்துவர்கள் பயன்படுத்தகூடிய சின்னம் ஸ்வஸ்திக் பாரத நாட்டில் மிகப் புராதன காலத்தொட்டே, எல்லா சுய மற்றும் மங்கல காரியங்களில் , ஸ்வஸ்திக் சின்னத்தை பயன்படுதிள்ளோம்.
மருத்துவ உலகத்திற்கு இந்த வடிவம் முக்கியமான பொருளைத் தருகிறது. ஆர்வேதத்தில் நான்கு முக்கிய அம்சங்கள் விளக்கப் படுகின்றன.
1. மருத்துவர்
2. நோயாளி
3. மருந்து
4. உதவியாளர்
இந்த நான்கும் ஒருகிணைந்து மேன்மையோடு செயல் பட்டால் மருத்துவத்தின் வெற்றிக்கு உத்தரவாதம் கூறலாம் என்கிறது ஆயுர்வேதம் . ஆக ஸ்வஸ்திக் வடிவத்தில் உள்ள நான்கு கரங்களும் மேலே சொன்ன நான்கு அம்சங்களால் பிணைக்கப் பட்டுள்ளது
இந்த சக்கரம் வலது புறமாக சுழல வேண்டும். ஸ்வஸ்திக் என்றால் நன்மை.'க ' என்றால் விளைவிப்பது என்று பொருள்படும். நவீன மருத்துவ விஞ்ஞானியான டாக்டர் ஹாட்மன்ட் அனர்சட் அவர்கள் 'ஆவேயன்டினா'என்னும் மின் அணுக்கருவி கொண்டு 'ஸ்வஸ்திக் ' வடிவத்தை ஆராய்ந்தார். அதன்படி ஒரு லட்சம் போவிஸ் அலகுகள் கொண்ட மின் சக்தி இந்த சின்னத்திலிருந்து வெளிப்படுவதாக பதிவு செய்துள்ளார் .
அவர் செய்த ஆராய்ச்சில் மற்ற பல வடிவங்கள் அடங்கும் .அதன் விவரம் கீழே தரப்படுகிறது.
சிரிக்கும் புத்தர் - 500 போவிஸ் அலகுகள்
ரஷ்யாவின் சாவி - 1000 போவிஸ் அலகுகள்
சிலுவை - 10,000 போவிஸ் அலகுகள்
ஓம் - 70,000 போவிஸ் அலகுகள்
சர்ச் மற்றும் மசூதி வளாகங்கள் -11 ,000 போவிஸ் அலகுகள்
ஸ்வஸ்திக் (சிகப்பு பொட்டுகளுடன் பூஜை செய்யப்பட்டது )-1,00,000 போவிஸ் அலகுகள் .
மேற்படி மின் சக்தி, நேர் மின் சக்தி அதாவது நல்ல விளைவுகள் ஏற்படுத்த கூடியவை எனவே இதை நமது மக்கள் எல்லா சுப காரியங்கள் பயன்படுத்தி வந்துள்ளனர் . பாரத சமுதாயத்தில் வீட்டு வாசல்கள் பொன் பொருட்கள் வைகுமிடங்கள் , பணப்பெட்டி இரும்பு கல்லாப்பெட்டி கணக்கு மற்றும் குறிப்பேடுகள் வழிபாட்டிடங்கள் ஆகிய எல்லா இடங்களிலும் "ஸ்வஸ்திக்" சின்னத்தை பயன்படுத்தலாம்
அமைதிப்படுத்தும் தியானம்
ஆழ்ந்த தியானத்தில் மனமானது
ஒழுகும் எண்ணெயை போன்று
தொடர்ந்து ஒரு நிலையில் இருக்கும்.
-பதஞ்சலி முனிவர்
தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தியானம் செய்வதை பழக்கத்தில் கொண்டு வர வேண்டும், மேலும் தியான நேரத்தை ஒழுங்காக கடைபிடிக்கவும் வேண்டும். தியானம் நமது மனதை அமைதிப்படுத்தி சஞ்சலமற்ற தன்மையை உருவாக்குகிறது. ஒரு மணி நேரம் ஆழ்ந்து தியானித்தால், அந்த தியானத்தின் மூலம் மனதில் ஏற்படும் பதிவு மீதமுள்ள 23 மணி நேரமும் பயன் அளிக்கும்,
மனம் அமைதியாக ஒரே நிலையில் இருக்கும் . படிப்படியாக தியானத்தின்
அளவைக் கூட்ட வேண்டும் "தியானம்" நமக்குள் இருக்கும் பல்வேறு திறமைகளை அதிகரித்து குறைந்த நேரத்திலேயே நமது வேலைகளை செய்து முடிப்பதற்கான ஆற்றலை அளிக்கிறது.நிம்மதியும் மனஅமைதியும் உள்ளவர்கள்தான் ஊட்டச்சத்தான உணவை உண்டு உடல் நலம் பேண முடியும். நிம்மதி இழந்தவர்களின் முகத்தைப்பார்த்தாலே அவர்களது கவலைகள் கண்களில்தெரியும். முக தோற்றம் அவரது வயதை அதிகரித்து காட்டும். உற்சாகத்தை அவரிடம் பார்க்கமுடியாது.
எப்பொழுதும் ஏதாவதொரு பயனுள்ள, நன்மை பயக்கும் வேலைகளை செய்து கொண்டிருக்க வேண்டும். இதைச் செய்யலாமா, அதைச் செய்யலாமா என்று சஞ்சலத்துடன் அலைந்து நேரத்தை வீணாக்கக் கூடாது. இத்தகைய பயனற்ற மனப் போராட்டத்தால் நாட்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்களைக் கூட நாம் வீணாக்கி விட்டு கடைசியில் ஒன்றும் செய்யாமல் போய்விடுவோம்.
எப்பொழுதும் ஏதாவது நல்லதைச் செய்து கொண்டிருந்தால் போதுமானது. நம்முடைய காரியங்களில் இடைவெளி எதுவும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கவனக் குறைவான ஒரு சில மணிகள் கூட வாழ்வில் நம்மை கீழே தள்ளிவிடக் கூடும். காலமே வாழ்வு. எனவே, நேரத்தை பொன்போலப் பாதுகாத்து அதனை பயனுள்ள விதத்தில் செலவிடுதல் வேண்டும்
சித்தர்கள் என்பவர்கள்
சித்தர்கள் என்பவர்கள் மனம் புத்தி அகங்காரம் சித்தம் ஆகிய அந்தக் காரணங்கஈளை புறம்பே உலக வாஞ்சையில் டுபட ஒட்டாது தன்னுளே நிலை நிறுத்தி 96 தத்துவ விடயங்களை சுட்டு நீறாக்கி இவ்வுலகு உய்யும் வண்ணம் தன்னைப் பரம் பொருளோடு இரண்டறக் கலப்பித்து சாயுச்சிய பதவியை அடைந்து நிற்க தாமரை இலைத் தண்ணீர்
போலும், புளியம் பழமும் தோடும் போலவும் ஜீவ சமாதியை அடையப் பெற்றவர்களேயாவார்கள்.
இவர்களுக்கு கால வரைமுறை என்பது கிடையாது எப்போது வாழ்ந்தார்கள்,எவ்வளவு காலம் வாழ்ந்தார்கள் என்ற ஆராய்ச் சிக்கு நாம் உட்படுவோமேயானால் நிச்சயம் தோல்வியே கிட்டும்.
ஆனால் போகர்7000 லும், அகத்திய மகா முனிவர் 12000லும் ஒரு சில சித்தர்களுக்கு மட்டும் வயது வரம்பு,குலம்,மாதம் நட்சத்திரம் போன்ற விபரங்கள் காணக் கிடக்கின்றன.
இவர்கள் 48 சித்தர்கள் எனவும்,18சித்தர்கள் எனவும், 9 சித்தர்கள்(நவ) எனவும், சப்தரி~pகளாகிய 7 சித்தர்கள் என்றும் இன்னும் சில நூற்களில் நவகோடிச் சித்தர்கள் எனவும் பலவாறாகக் கூறப்படு கிறது.
இவர்களது நூலைப்பற்றி ஆராய்ச்சி செய்வோமே யானால் இறைவனால் உண்டு பண்ணப்பட்டுள்ள அண்டசம்--முட்டையில் தோன்றுவன,சுவேதசம்--வியர்வையில் தோன்றுவன,உற்பீசம்--விதை வித்துக்களில் தோன்றுவன,பையசம்--கருப்பையில் தோன்றுவனவாகிய நான்கு விதமான யோனிகளின் வழிச் சிரு~;டிக்கப்பட்டுள்ள 84நூறு ஆயிரம் கோடி ஜீவ பேதங்களும் இத்தகையன என்றும்,சப்த பிறப்புகளாகிய நீர் வாழ்வன, ஊர்வன, தவழ்வன பறப்பன நடப்பனவாகிய தேவர் முதல் புற்ப+ண்டு வரை ஒரறிவு முதல் 7வது அறிவு வரை சகல சரஅசர வஸ்து களையும் பிரித்து எடுத்து அதன் குணம் செயல் முதலிய யாவற்றையும் மனித வாழ்வுக்கு உபயோகப்படும் படிச் சொல்லி வைத்தருளி இருக் கின்றனர்.
அட்டாங்க யோக நெறிமுறைகளாகிய இயமம், நியமம், ஆசனம், பிறாணாயாமம், பிரத்யாகாரம், தாரனை, தியானம் சமாதி முதலியவற்றின் வழியே நடத்திச் சென்று வாத வைத்திய யோக ஞானங்களையும் இன்னும் சல்லியம், ஒட்டியம், தொட்டியம், தொட்டவுடன் நசிந்து போகும் சித்து நொடியான், ஒடியான், கிருகரணை, எட்டாரம், ல~ம் சித்து,கலக வித்தை, கக்கிசம், பஞ்சபட்சி,சீன வித்தை, வினோதா ரூடம்,துண்டு துண்டாக வெட்டும் ஜாலம், செப்பிடு வித்தை, பேதனம், எக்~ணி, தர்க்க சாஸ்திரம்,ப~;ணி, தக்~ணி,வாதம், ஜோதிடம், நாடி, காவியம், வைத்தியம்,இலக்கணம்,சூடாமணி, சித்தர் ஆருடம், கன்னம், சிமிழ் வித்தை, கம்பி சூஸ்திரம், சூனியம், திறவுகோல், நடுக்கு சல்லியம், மதன நூல், சிற்பம், போர்வித்தை, பெருநூல்சல்லியம், இருப்பு க்கடலை ,மலைநிகண்டு , சித்த சுத்தி, அஞ்சல்,மந்திரம், அஸ்திரப் பயிற்சி, கருக் கூட்டு, சலமாட்ட நிகண்டு,மலை வளம்,ப+ர்வகாண்டம்,கலைக்ஞானம்,ரேகை வித்தை, வர்மம்,ரசமணி,ஆகமங் கள்,விஸ்வாமித்ரம் மற்றும் பிற நூல்களும் நமக்காகச் சொல்லி உள்ள னர்.
அகங்காரத்தைச் செதுக்குவோம்
ராமானுஜர் என்ற மகான் உயர்ந்த அந்தணக் குலத்தில் பிறந்தவர். அவருக்கு அந்தணக் குலத்தில் பிறந்த சீடர்களும் உண்டு. தாழ்ந்த குலம் என்று உலகோர் சொல்லும் குலத்தல் பிறந்த சீடர்களும் உண்டு.
உறங்காவில்லி என்கிற சீடர் வேடுவர் குலத்தில் பிறந்தவர். ராமானுஜர் காவிலி ஆற்றில் குளிக்கப் போகிற போது நடக்க சிரமமாக இருந்தால் பிராமண சீடர்கள் தோளில் கை போட்டுக் கொண்டு நடப்பார். ஆனால் குளித்து விட்டு
கோயிலுக்குப் போகும் போது மறந்தும் அவர்கள் தோளில் கை போட்டு நடக்க மாட்டார்.
தாழ்ந்தப்பட்ட குலத்தைச் சார்நத் உறங்காவில்லி இருந்தால் அவர் தோளில் கை போட்டபடி மகிழ்ச்சியாக நடப்பார். இது அந்தணச் சீடர்களுக்குப் பிடிக்கவில்லை. உயர்ந்த ஜாதியான நம் தோளைக் குளிக்கும் முன் தொடுகிறார். குளித்து விட்டு வரும் சமயம் தாழ்த்தப்பட்டவர் தோளைத் தொடுகிறாரே என்று அவர்களுக்கு வருத்தம்.
ஒரு நாள் வேண்டும் என்றே ராமானுஜர் குளித்து விட்டு வரும் சமயம் உறங்காவில்லியை வரவிடாமல் அவர்கள் தடுத்து விட்டனர். பிராமண சீடர்கள் ஓடிப் போய் ராமானுஜருக்குத் தோள் கொடுத்தனர். ராமானுஜர் தம் மேல் துண்டைத் தண்ணீர் நனைத்து ஈராமாக்கி சீடர்கள் தோள் மேல் போட்டு விடு அதன் மீது கை வைத்து நடந்தார். "ஈரத்துணியை ஏன் எங்கள் மேல் போட்டீர்கள்?" என்று கேட்டதும், " உங்களைத் தொட்ட தீட்டு வராமல் இருக்கத்தான்" என்றார். "தாழ்த்தப்பட்ட வில்லியைத் தொட்டால் தீட்டு இல்லை. உயர்ந்த பிராமண ஜாதயில் பிறந்த எங்களைத் தொட்டால் தீட்டு வருமா?" என்று குமுறினார்கள்.
"உயர்ந்த ஜாதி என்கிற அகம்பாவம் உங்களுக்கு இருக்கிறது. உங்களைத் தொட்டால் அது எனக்கு வந்துவிடும். உறங்காவில்லிக்கு அந்த அகங்காரம் கிடையாது. அடக்கமும் பண்பும் அவனிடம் உள்ளது. அவனைத் தொட்டால் எனக்கு அந்த அடக்கம் வரும் அல்லவா? அதனால் தான் அவனைத் தொடும் போது ஈரத்துணியைத் தோளில் போடாது தொடுகிறேன்" என்றார் ராமானுஜர்.
பாறாங்கல்லில் சிற்பி வெட்டி எறிகிற முதல் துண்டு மாதிரி நாம் கடவுளாக, நம்மைச் செதுக்க நாம் வெட்ட வேண்டிய முதல் துண்டு ஜாதித்திமிர்... நான் இன்ன ஜாதி என்கிற அகங்காரத்தில் இருந்து விடுபடுவது நம்மைச் செதுக்கும் முதல் செதுக்கல் ...
குரு வாக்கு
மகான் ஒருவரை, "குருவே தங்களிடம் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டன! எனக்கு தீட்சை அளிக்க வேண்டும் ! " என்று தினமும் நச்சரித்துக் கொண்டிருந்தான் ஒரு சீடன்.
தொல்லை தாங்கமுடியாத குரு, அதிலிருந்து விடுபட நினைத்து, "ஆசிரமத்தின் வடக்கே நினைத்து, "ஆலமரத்தின் அடியில் கிடக்கும் பெரிய பாறாங்கல் அருகே சென்று தினமும் "கல்லே நகர்" என்று
சொல்லிக் கொண்டிரு! பாறங்கல் ஒரு நாள் நகர ஆரம்பிக்கும். கல்லானது நகர்ந்து ஆசிரமத்திற்கு அருகில் வரும் போது தீட்சை கொடுப்பேன்" என்று சொன்னார். சீடன் அவ்வாறே செய்து வந்தான். பல மாதங்களாயின.
ஒரு நாள் அவ்வழியே சென்ற வழிப்போக்கர்கள் சிலர் ஆசிரமத்திற்கு ஒடி வந்து, "சுவாமி நூறு பேர் சேர்ந்தாலும் அசைக்க முடியாது பாறாங்கல் நகர்ந்து வந்து கொண்டிருக்கு! எதிரே பார்ப்பவர் எல்லாம் பயந்து ஓடுகின்றனர்! உங்கள் சீடன் மந்திரம் உச்சரித்துக் கொண்டு தொடர்ந்து வர்றான்!" என்று மகானிடம் முறையிட்டனர்.
"என்ன .....? என்று வியப்புடன் நிமிர்ந்த மகானின் கண் முன்னே தொலைவில் நகர்ந்து வந்த பாறை ஆசிரமத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.
"சீடனே, உச்சரிப்பை நிறுத்து" என்று உரக்க ஒலி எழுப்பியவாறு மகானும் ஓடலானார்.
Subscribe to:
Posts (Atom)