Thursday, December 5, 2013

ருத்ராட்சம் அணிவதன் பலன்கள்!

ருத்ராட்சம் அணிவதன் பலன்கள்!

சைவர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை..

1. சிவ நாமத்தினையும், பஞ்சாட்சரத்தையும் ஜபித்தல்.
2. மேனியில் திருநீறை தரித்தல்
3. சிவாம்சமாக உள்ள ருத்ராட்சம் அணிதல்.

இவற்றில் ருத்ராட்சம் மிக விசேஷமானது. இதை சைவர்கள் மட்டுமல்லாமல் வைணவர்களும் மற்றவர்களும் கூட இதன் நன்மைகள் கருதி அணிந்து கொள்கிறார்கள். சீக்கியர்கள், புத்த மதத்தினர்கள் கூட ருத்ராட்ச ஜபமாலைகளைத் தங்கள் வழிபாட்டுக்கு பயன்படுத்துகின்றனர்.

ருத்ரன்+ அட்சம் என்பதே ருத்ராட்சம். சிவனின் கண், அல்லது சிவனின் கண்ணில் இருந்து வந்தது என்று பொருள் கூறுகிறார்கள்.

ருத்ராட்சம் உருவான விதம் குறித்து மூன்று விதமான கதைகள் சொல்லப்படுகின்றன. தேவர்களை வருத்திக்கொண்டிருந்த திரிபுராசுரன் என்ற அசுரனை சிவபெருமான் ஸம்ஹாரம் செய்த போது, சிவனின் (ருத்ரன்) கண்(அக்ஷம்)களிலிருந்து புறப்பட்ட நீர்த்திவலைகள் பூமியில் விழ அதிலிருந்து ருத்ராட்சம் தோன்றியது என்று ஒரு கதை சொல்கிறது.

ஒரு சமயம், உலகம் உய்ய பல்லாயிரம் ஆண்டுகள் கடும் தவம் செய்த சிவபெருமான் தவம் முடிந்து கண் விழித்த சமயம், கண்களிலிருந்து வழிந்த நீரிலிருந்து தோன்றியது ருத்ராட்சம் எனவும் சொல்கிறார்கள்.
நெற்றிக்கண்ணின் மணியிலிருந்து சிவபெருமானால் தனது அம்சமாக தோற்றுவிக்கப்பட்டது ருத்ராட்சம் எனவும் சொல்கிறார்கள்.

ருத்ராட்சத்தைப் பற்றிய குறிப்புகள் சிவபுராணம், தேவிபாகவதம், லிங்கபுராணம் போன்ற நூல்களில் காணப்படுகின்றன.

ருத்ராட்சத்தின் வேதியியல் பெயர் எலெயோகார்பஸ் கேனிட்ரஸ் ராக்ஸ்ப் (Elaeocarpus ganitrus Roxb). நேபாளத்தில் ருத்ராட்ச மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் ருத்ராட்ச மரங்கள் காணப்படுகின்றன. தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் இந்த மரங்கள் விளைகின்றன. இந்த வகை மரங்களில் சுமார் 36 உட்பிரிவுகள் இருந்தாலும் அவற்றில் மூன்று பிரிவுகள் மட்டுமே ருத்ராட்சமாகப் பயன்படுத்தப் படுகின்றன.

செம்மை நிறம், கறுப்பு நிறம், வெளிர் மஞ்சள் நிறம்(பொன் நிறம்) ஆகிய நிறங்களில் ருத்ராட்ச மணிகள் கிடைக்கின்றன. ருத்ராட்ச மணிகளுக்கு ஆழ்ந்த கோடுகள் உண்டு. அவற்றை முகங்கள் என்று சொல்கிறார்கள். ஒரு கோடு இருந்தால் ஒரு முகம் என்றும், ஐந்து கோடுகள் இருந்தால் ஐந்து முகம் என்றும் கூறுகிறார்கள். அதிகபட்ச முகங்கள் குறித்து பல கருத்துக்கள் உள்ளன. பெரும்பாலானோர் 21 முகங்கள் வரை ருத்ராட்சத்தில் உண்டு என்கிறார்கள். ஒவ்வொரு முக ருத்ராட்சத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன்களைச் சொன்னாலும் பக்தியுடன் அணிந்தால் எத்தனை முகம் உள்ள ருத்ராட்சமே ஆனாலும் நல்ல பலனையே கொடுக்கும்.

ருத்ராட்சத்திற்கு ஆற்றல் உள்ளது என்று நம் முன்னோர்கள் அனுபவம் மூலமாகக் கூறி வந்தனர். அது இப்போது விஞ்ஞான ஆராய்ச்சிகளிலும் உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. அப்படிப்பட்ட இரண்டு முக்கிய ஆராய்ச்சி முடிவுகளைப் பார்ப்போம்.

வாரணாசியில் உள்ள தொழில் நுட்ப கல்லூரியில் டாக்டர் சுபாஷ் ராய் தலைமையில் உயிர் வேதியியல் துறை, மனநோய் மருத்துவத் துறை, பொது மருத்துவத் துறை, உளவியல் துறை ஆகிய நான்கு துறை மருத்துவ அறிஞர்களும் இணைந்து ருத்ராட்சம் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் அவர்கள் ருத்ராட்சத்திற்கு மூன்று சிறப்புத் தன்மைகள் உள்ளதாக கண்டறிந்தனர். அவை-

*சக்தி மிக்க மின்காந்தப் பண்புகள் (Electromagnetic)
*காந்த முனைகளால் ஈர்க்கப்படும் தன்மை (Paramagnetic)
*சக்திகளை கொண்டு சேர்க்கும் ஊடகத் தன்மை (Inductive)

இத்தன்மைகளின் மூலம் ஒரு குறிப்பிட்ட முகத்தையுடைய ருத்ராட்சத்தையோ அல்லது ஒரு தொகுதி முகங்கள் கொண்ட ருத்ராட்சர மணிகளையோ அணிவோருக்கு வாழ்க்கையை நோக்கும் தன்மை, தன் ஆர்வம், மனத்திட்பம் ஆகியவற்றில் முன்னேற்றம் கிடைக்கின்றது. மேலும் ருத்ராட்ச மணிகளை அணிவதால் இதயத்துடிப்புக் கட்டுப்படுத்தப்பட்டு, அதன் வழியாக மூளைக்குச் செல்லும் இரத்த அளவு சம சீராக்கப்படுகிறது என்பதையும் ஆய்வில் தெரிவித்தனர். மேலும் ருத்ராட்ச மணிகள் ஆக்கப்பூர்வமான அதிர்வலைகளை வெளிக் கொணர்ந்து ஒருவருக்கு உடலிலும் மனதிலுமுள்ள எதிர்மறை உணர்வுகளை வெளியேற்றுகின்றது என்றும் தெரிவித்தனர்.

அதே போல டாக்டர் ஜெயந்த குமார் சர்மா என்ற ஆராய்ச்சியாளர் தலைமையில் கல்கத்தா மற்றும் பெல்காமைச் சேர்ந்த ஐந்து ஆராய்ச்சியாளர்கள் ருத்ராட்சத்தினால் ஏற்படும் நல்ல விளைவுகளை ஆராய்ந்து பதிவு செய்திருக்கிறார்கள். ரத்த அழுத்தம் மட்டுப்படுத்தப்படுகிறது என்றும் மிதமிஞ்சிய மன உளைச்சல் குறைக்கப்படுகிறது என்றும் அவர்களின் ஆராய்ச்சியில் நிரூபணமாகி உள்ளது.
மேலும் ருத்ராட்ச மணிகளை கொண்டு சித்த மருந்துகளும் தயாரிக்க படுகின்றன.

ருத்ராட்சம் மிகுந்த பக்தியுடன் அணியப்படும் போது ஒருவருக்கு சாந்தத்தை அளிக்கிறது. அத்துடன் அது அணிபவர்களின் ஒட்டு மொத்த நலத்தையும் திறனையும் மேம்படுத்துகிறது. ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் இந்த நல்ல விளைவுகளை உணர்ந்திருந்த முன்னோர்கள் இம்மணிகள் தெய்வீகமானவை என்றும் இறைவனால் அனுப்பப்பட்டவை என்றும் கருதியதில் வியப்பில்லை.

உண்மையான ருத்ராட்சமணிகளை அணிந்த ஆயிரக்கணக்கான மக்கள், அவை தங்களுக்கு இரத்த அழுத்தம், மனச்சோர்வு, மற்றும் நரம்புக் கோளாறு உட்பட்ட மனத்துடன் தொடர்பான தொல்லைகள் ஆகியவற்றிலிருந்து குறிப்பிடத்தக்க நிவாரணம் கிடைத்ததாக நம்புகிறார்கள். அதை அணிவோருக்குத் தன்னம்பிக்கை, உள்ளார்ந்த பலம் (Inner Strength) இரண்டையும் குறிப்பிடத்தக்க அளவில் மேலோங்கச் செய்வதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ருத்ராட்சம் நமக்கு உடல் இலேசாக இருக்கும் உணர்வையும் சாந்தத்தையும் அளிக்கிறது. அத்துடன் அது நமது ஒட்டு மொத்த நலத்தையும் திறனையும் மேம்படுத்துகிறது. ருத்ராட்சத்தை அணிந்து உண்மையாக ஆன்மிக மார்க்கத்தில் ஈடுபடுபவர்கள் தியான காலத்தில் சீக்கிரமே ஆல்பா மன நிலைக்கு (Alpha state of mind) செல்ல முடியும் என்றும் கூறுகிறார்கள்.

ருத்ராட்சத்தை எப்படி வேண்டுமானாலும் அணியலாம். ஆனால் ருத்ராட்சத்தை தனியாக அணியாமல் ஏதாவது ஒரு உலோகத்துடன் சேர்த்து அணிந்தால் அது இல்லற வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நல்லது என்று சொல்கிறார்கள். அதனால் தான் ருத்ராட்சத்தின் இரு பக்கத்திலும் பூன் போன்று செய்து அதனை நூலில் கட்டித் தொங்க விடுகிறார்கள்.

பெண்கள் ருத்ராட்சம் அணிவது கூடாது என்று ஒரு கருத்து இருந்தாலும் அதற்கு சாஸ்திரங்களிலோ, ஆகமங்களிலோ ஆதாரம் இல்லை. தேவி அல்லது சக்திக்குரிய புராணங்களில், அம்பிகையானவள் ருத்ராட்ச மாலை அணிந்து கொண்டிருப்பதாக குறிப்பிடப்படுகின்றது. எனவே இறை சிந்தனைகளில் ஈடுபாடுள்ள யாவருமே அணியத் தகுந்தது ருத்ராட்சம் என்று சொல்லலாம்.

ருத்ராட்சம் அணிபவர் இறை சக்தியை தன்னிடம் வைத்துள்ளோம் என்ற பிரக்ஞையுடன் முறையான வாழ்வை நடத்தினால் அந்த இறை சக்தி அவர்களுக்கு ஆரோக்கியம், மன அமைதி அளிப்பதுடன் அவர்களை அனைத்து சூழல்களிலும் முன்னேற்றப் பாதையில் வழி நடத்திச் செல்லும் என்பது நிச்சயம்

வறுமையை நீக்கி செல்வ வளம் தரும் சித்தர் மந்திரம்

வறுமையை நீக்கி செல்வ வளம் தரும் சித்தர் மந்திரம்

உங்கள் பணக் கஷ்டம் தீர வேண்டுமா?
நீங்கள் நிம்மதியாக வாழவேண்டுமா?
...
கீழ் காணும் சித்தர் துதியினை தினமும் 9இன் மடங்குகள் வீதம் இருமுறை என குறைந்தது 1 வருடம் வரை உங்கள் வீட்டு பூஜாஅறையில் ஜபித்து வரவும்.
நிச்சயம் பலன் கிடைக்கும்.

ஓம் அகத்தீசாய நமக
ஓம் நந்தீசாய நமக
ஓம் திருமூல தேவாய நமக
ஓம் கருவூர் தேவாய நமக
ஓம் ராமலிங்க தேவாய நமக

திருநீறு (விபூதி ) -----------------------

 
திருநீறு (விபூதி ) -
 
---------------------- எத்தகையினராக இருந்தாலும், மரணத்திற்குப் பின் இறுதியில் தீயில் வெந்து அனைவரும் பிடி சாம்பலாக ஆவர் என்னும் தத்துவத்தை... உணர்த்தி, நாமும் இதுபோல்தான்; ஆகையால் தூய்மையாக, அறநெறியில் இறைச்சிந்தனையோடு வாழவேண்டுமென உணர்த்துகிறது. சைவத்தின் முழுமுதற் கடவுளான சிவனை இது குறிப்பதாக சைவர்கள் நம்புகின்றனர். ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சுவது பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை விபூதி குறிக்கின்றது. திருநீர் அணிவதைப் பற்றிக்கூறும் போது சில நேரங்களில் ஈரமான விபூதி அணிய வேண்டுமென்றும் , சில நேரங்களில் ஈரமில்லா திருநீர் அணிய வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். இது முரண்பாடாக உள்ளதே என்ன்று கருதலாம். திருநீர் அணிந்தவர்களை கண்டால் மனதுக்குள்ளாவது இகழும் இக்காலத்தில் இந்த முரண்பாடுக்கு விளக்கம் கூறுவது , மிகவும் அவசியம். நம் முன்னோர்கள் இதற்கு பதில் சொல்லவில்லை என்றாலும் திருநீறின் மருத்துவ குணங்களை பற்றி அவர்கள் நன்கறிந்திருந்தனர். அதிகாலையில் எழுந்து கை, கால், முகம், கழுவி, திருநீர்ச்சட்டியிலிருந்து ஒரு பிடி எடுத்து நெற்றியிலும் , பின் மாறிடத்தும் .இரு புஜங்களிலும் சில வர்மஸ்தானங்களிலும் பாட்டனும் பாட்டியும் பூசிக்கொள்ளவதை சிலராவது பார்த்திருப்போம் . மாலைப் பொழுதிலும் இவ்வாறு கை,கால்,கழுவி வந்து நனைக்காமல் திருநீர் பூசுவதுண்டு, ஆனால் குளித்த ஓய்ந் திருநீர் எடுத்து நணித்து உடலில் பூசி வந்தனர் . இப்படி இரண்டு வகையான திருநீர் பூசும் முறை பார்க்கும் போது நாம் புரிந்து கொள்ள வேண்டியது நனைக்காத திருநீருக்கு அணுக்களை அழிக்கும் சக்த்தியும் நனைத்த திருநீருக்கு உடலில் மிகையாக உள்ள ஈரத்தை உறிஞ்சி அகற்றும் சக்தியும் உண்டென்பதாகும். இவ்வளவும் அறிந்த பின் ,நம் உடலில் காலையிலும் , மாலையிலும் மட்டும் ஏன் அணுக்களின் பாதிப்பு உண்டாகின்றது என்பதை கவனிப்போம் .இரவு ஒரு நேரம் ஒரு நபர் தூங்கும் போது அவர் படுக்கையில் லட்சக்கணக்கான அணுக்கள் பரவியிருக்கும் என்று விஞானம் கூறுகிறது.அதே போல் மாலை நேரத்தில் சுற்று சூழலில் எண்ணற்ற நோயனுக்கள் உலாவுகின்றன என்பது அறிவியலின் உறுதியான கண்டுபிடிப்பு . அதனால் காலையும் மாலையும் நோயனுக்களின் பாதிப்பு ஏற்படாமலிருக்க ஈரமில்லாத திருநீரை அணிந்து வருகின்றனர். குளிக்கும் நேரம் உடலின் மூட்டுகளில் ஈரம் காரணமாக நீர் கட்டு உருவாகவும் காலப் போக்கில் அது வாயிலாககொழுப்பு அதிகரிக்கவும் அது மூட்டு வாதமாக மாறவும் வாய்ப்புண்டு .இப்படி உருவாகும் நீர்க்கட்டி தவிர்ப்பதற்க்காகத்தான் குளித்த உடன் ஈரமான திருநீர் அணிவது. அணியும் காரணம் -- மற்றொரு விளக்கம் --------------------------------------------------------- மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும். இது ஒரு வர்ம ஸாதனம் கூட. சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதனால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள். மற்றவர்களின் பார்வையினால் வெளிப்படும் சக்திகளும் அவர்களுக்கு தெரியாமலேயே நெற்றி வழியாக அதிகம் கவரப்படும், அவர்களை தன்னிலை இழக்கச்செய்வதும் வசப்படுத்துவதும் இதன் மூலமாக எளிதாக செய்துவிடலாம். மனோ தத்துவம், ஹிப்னாட்டிஸம், மெஸ்மரிஸம் போன்றவற்றிலும் இங்கே பார்வையும் மன எண்ணங்களும் முக்கிய இடம் வகிக்கிறது. கண்ணேறு என்று சொல்லப்படும் தேவையில்லாத எண்ணங்கள் ஊடுறுவதை தடுக்கவும் திருநீறு இடப்படும். ஆக்ஞா தியானம் செய்பவர்களுக்கு உடல் மிக வெப்பம் அதிகரிக்கும். அந்நேரம் சூடு தணிய இங்கே சந்தனம் பூசுவார்கள். மருத்துவ ரீதியாக உடலுக்கு மிக முக்கியமான ஹார்மோன் சுரக்கும் பிட்யூட்டிரி சுரப்பியை தூண்டச்செய்யும் இடம் இந்த நெற்றி ஆகும், ஆக்ஞா தியானம் என்பதே இந்த சுரப்பியை தூண்டத்தான். இது தொடக்கம். நீறில்லா நெற்றி பாழ். என்பார்கள். எரிவது என்றால் தீயோடு எரிவது. தீ இல்லாமல் வெறும் கனலால் எரிவதை நீறுதல் என்பார்கள். சுண்ணாம்பு தயாரிக்க சிப்பி தோடையும் வெறும் நீரையும் சேர்க்கும் போது அது நீறத்துவங்கும் கொதிக்கும், நெருப்பு இல்லாமல் புகையும், அதில் நெருப்பு இல்லை. ஒரு வகை வேதி வினை. அதை நீற்றுதல் என்பார்கள். அதை போல நீற்றி எடுக்கப்பட்டது திருநீறு. [தொகு]ஆக்ஞா (நெற்றி) தியானம் மேலும் நெற்றி என்பதை இதே போல நீற்ற வேண்டும், நீறிக்கொண்டிருக்க வேண்டும், அதாவது சுண்டு விரலை நமது நெற்றிப்பொட்டில் தொட்டும் தொடாமலும் நேராக பிடித்தால் நெற்றியில் ஒருவித உணர்வு ஏற்படும். அந்த உணர்வை அப்படியே வைத்து தியானம் செய்யவது ஆக்ஞா (நெற்றி) தியானம், இது குண்டலினி யோகாவின் தொடக்கம், இதை வேதாத்ரி மகரிஷிஸ ஈஷா யோகோ போன்ற இடங்களில் சென்றால் சொல்லித்தருவார்கள். பண்டைய சித்தர்கள் சொல்லிச்சென்ற உயிர் வளர்ப்பு முறையின் தொடக்கம் இது. இதை முறையாக செய்தால் நம் சிந்தனைகள் சீர்படும், மற்றவரை விட அதிகமாக சிந்திக்கலாம். மனம் ஒருநிலைப்படும். எதையும் எளிதாக புரிந்து கொள்ள முடியும், காரிய சித்தி உருவாகும். இதை முறையாக செய்யவேண்டும், இந்த தியானம் செய்தால் கண்டிப்பாக சாந்தி தியானமும் செய்யவேண்டும், இல்லையென்றால் அது ஒற்றைத் தலைவேதனையில் கொண்டுவந்து விட்டுவிடும். இதை நம்மிலேயே வைத்துக்கொண்டு செய்யாமல் இருப்பது பாழ். அதுதான் நீறில்லா நெற்றி பாழ். கற்றது கையளவு கல்லாதது உலகளவு பலன்கள் திருநீறு அணிவதால் தடையற்ற இறைச் சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற செல்வம், நல்வாக்கு, நல்லோர் நட்பு, போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம். உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும். பாவங்கள் என வரையறுக்கப் பட்டவைகளை ஒதுக்கும் மனப் பாங்கும், தொல்லைகள் அனைத்தையும் அழித்தும் அனைத்துப் பேறுகளையும் அளித்துப் பிறவிப் பிணி அறுத்து மோக்கம்(மோட்சம்) செல்ல வழிகாட்டும். இதைத்தான் திருமூலர் பின்வரும் பாடலில் தெரிவிக்கிறார். கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில் தங்கா வினைகளும் சாரும் சிவகதி சிங்கார மான திருவடி சேர்வரே!

தர்மம் தலை காக்கும்''

தர்மம் தலை காக்கும்''
………………………………
தர்மத்தை ஒருவன் பின்பற்ற வேண்டுமானால் விருப்பு வெறுப்பற்ற மனநிலை வேண்டும். தர்மவாதிகளை உலகம் பரிகாசம் செய்தாலும், விடாமல் பின்பற்றும் தைரியம் வேண்டும். ராமபிரான் வாழ்வில் எத்தனையோ துன்பத்தைச் சந்தித்தாலும் தர்மத்தைக் கைவிடவில்லை.

எவன் ஒருவன் தர்மத்தைக் காக்கிறானோ அவனைத் தர்மம் காக்கும். ராமபிரானும், ராவணனும் தர்மத்தைப் பின்பற்றும் விஷயத்தில் எதிர் துருவங்கள்....

ராமனுக்கு ஒரு தலை. ராவணனுக்கு பத்துத்தலை. ஒருதலையிடம் பணிவும், தர்மமும் இருந்தது. பத்துதலையிடம் ஆணவமும், அதர்மமும் இருந்தது.

அதர்மம் ஆயிரம் வழிகளில் தர்மத்தைச் சுற்றி வளைத்தாலும், தர்மமே இறுதியில் வெற்றி பெறும் என்பதை ராமகாவியம் வலியுறுத்துகிறது.
இதையே "தர்மம் தலை காக்கும்' என்று இன்றும் போற்றுகின்றனர்.

ஜெய் ஸ்ரீராம் !
ஜெய் ஜெய் ஸ்ரீராம் !!
ஜெய் ஜெய்ஸ்ரீராம் !!
 
 

நோய்களை விரட்டும் அதிசய புத்தகம்


நோய்களை விரட்டும் அதிசய புத்தகம்

நாராணயப்பட்டத்திரி என்ற மிகச்சிறந்த ஞானியும் கவிஞருமானவரால் நாராணீயம் எழுதப்பட்டது.

அக்கால மக்களின் குரு பக்தியும் தியாகமும் தெய்வ பக்தியும் நம்மை சிலிர்க்க வைக்கிறது. ...

நாராயணப்பட்டத்திரி சமஸ்கிருதம், தர்க்கம், வியாகர்ணம், வேதம் முதலியவற்றை அச்சுத பிஷாரோடி என்ற பெரியவரிடம் கற்றார்.

நல்ல திடகாத்திரமாக இருந்த அந்த மகா பண்டிதருக்கு திடிரென முடக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அவர் நிற்கவும் நடக்கவும் முடியாமல் துன்பப்பட்டார்.

குருநாதரின் இந்த துயரம் நாராயண பட்டத்திரியின் மனதை கசக்கி பிழிந்தது. குருவினுடைய முடக்குவாத நோய் எனக்கே வரட்டும். அவருக்காக வேதனை அனுபவிப்பதே நான் அவருக்கு கொடுக்கும் குரு தட்சனையாக இருக்கட்டும் என்று சங்கல்ப்பித்து நோயை தன் உடம்பில் வாங்கி கொண்டார்.

பட்டத்திரியின் தியாகம் வியாதிக்கு தெரியவா போகிறது. தான் திண்ண ஆரம்பித்திருப்பது குழந்தையின் உடலா. கிழவனின் உடம்பா என பார்க்கவா செய்யும்.

நாராயணப்பட்டத்திரியும் கசக்கி பிழியப்பட்டார். கடைசியாக கொடுமை தாங்காது கேரள நாட்டு பெருக்கவிஞரும் பக்தருமான துஞ்சத்து ராமானுஜ எழுத்தச்சன் என்பவரிடம் நிவாரணம் கேட்டார்.

எழுத்தச்சனோ மீனில் துவங்கி அதை தின்று விடு என பூடகமாக சொன்னார். எழுத்தச்சனின் பூடக மொழி நாராயண பட்டத்திரிக்கு தெளிவாக தெரிந்தது.

மச்சவாதாரம் துவங்கி கல்கி அவதாரம் வரை ஒரு காவியம் படைக்க தான் பணிக்கப்பட்டிருப்பதை உணர்ந்தார்.

நாராணீயம் என்ற அமரகாவியம் பிறந்தது. நாராணீயத்தின் ஒவ்வொரு செய்யுளையும் குருவாயுரப்பன் முன்னிலையில் உருவாக்கிய பட்டத்திரி கவிதையின் முடிவில் இப்படி நடந்ததா குருவாயுரப்பா என கேட்பார். அதற்கு உலகை அளந்த எம்பெருமான் ஆமாம் என தலையசைத்தாராம்.

தனது பெருமையை தானே கேட்டு கடவுளே தலையசைத்தான் என்றால் நாராணீயத்திற்கு வேறு பெருமை எதற்கு.

மண்ணை உண்ட கண்ணனின் திருவிளையாடலை ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட கவிதைகளாக பாடினார். அதை நூறு தசாங்கங்களாக்கி பாகவதத்தின் சாரத்தையே பிழிந்து கொடுத்தார்.

நாராணீயத்தின் கடைசி பாடல் பூலோக மக்கள் எல்லாம் ஆயுளும் ஆரோக்கியமும் பெற வேண்டும் என குருவாயூர் அப்பனை பிராத்தனை செய்து முடிக்கிறது.

இந்த நூலில் பிரம்மன் தவம், வைகுண்ட தரிசனம், உலகத்தின் தோற்றம், படைப்பின் வகைகள், கபிலர் அவதாரம், தட்சன் யாகம், துருவன் சரித்திரம், பிரிதுவின் மோட்சம், பார்க்கடல் கடைதல், மோகினி மற்றும் வாமன் அவதாரம், பலியை அழித்தல், கம்பசன் சரித்திரம், பரசுராம கிருஷ்ண அவதாரம், சகடா சூரன்,சுதர்சன கம்ச முக்தி, ருக்மணி திருமணம், குருஷேத்திர யுத்தம், சுதாமர் மார்க்கண்டேயன் கதை என ஏராளமான சுவையான விஷயங்கள் பேசப்படுகின்றது.

இன்று கூட நாராணீயத்தை முழுவதுமாக ஓதுவதால் தீராத நோய் எல்லாம் தீருவதாக நம்பப்படுகிறது.

பலவகை தானங்களிலே நல்லறிவுத் தானமே விசேஷ முடையதென்று

பலவகை தானங்களிலே நல்லறிவுத் தானமே விசேஷ முடையதென்று மேலோர் சொல்வார்கள். அழிந்துபோன ஆலயங்களை மறுபடி புதுக்கிக்கட்டிப் பிரதிஷ்டை புரிந்தோர், நெடுங்காலமாக நின்றுபோன அன்னசத்திரங்களுக்கு மறுபடியும் உயிரளிப்போர், வறண்டு மண்ணேறிப் போய்க்கிடக்கும் தடாகங்களை மறுபடி வெட்டி நலம் புரிவோர் என்னும் பலவகையாரினும், மங்கி மறைந்துபோய்க் கிடக்கும் புராதனப் பெருங்காவியங்களைப் பெரு முயற்சி செய்து திரும்ப உலகத்துக்கு அளிக்கு...ம் பெரியோர்கள் புண்ணியத்திற் குறைந்தவர்களல்லர். மேலும், புகழ் நிலைக்குந் தன்மையில் மற்றெல்லொரைக் காட்டிலும், இவரே சிறந்தவராவார்

யார் சாக மாட்டார்கள்...?


 
 
 
யார் சாக மாட்டார்கள்...?

பட்டினத்தார் துவங்கி எட்டையபுரம் சாக்கு சித்தர் வரை சொல்லும் உபதேசம் ஒன்றே ஒன்று தான்

மீண்டும் பிறக்காதே பிறவி தழையில் சிக்காதே என்பது தான் நமது இந்து மதத்தின் ஆதார தத்துவமும் இது தான்

பிறவாத நிலை வேண்டும் என்று எத்தனை பேர் விரும்புகிறார்களோ அத்தனை பேர் இறவாத நிலை வேண்டும் என்றும் இறைவனிடம் வேண்டுகிறார்கள்

இறவாத நிலை என்றால் மரணம் இல்லாத வாழ்வு ஒரு மனிதனால் மரணமே இல்லாமல் வாழ முடியுமா? சிரஞ்சீவியாக ஒவ்வொரு மனிதனும் ஆக முடியுமா?

சிரஞ்சீவி என்றால் எப்போதுமே இறக்காதவர் என்பது பொருளாகும்

நமது புராணங்கள் அசுவாத்தாமன் மகாபலி, வியாசர், அனுமான், வீபீஷணன், கிருபாச்சாரி, பரசுராமன் மார்க்காண்டேயன் ஆகியோரை சிரஞ்சீவிகள் என்று சொல்கின்றன.

மரணம் இல்லாத இவர்கள் இப்போதும் வாழ்வதாக ஒரு நம்பிக்கை இருக்கிறது.

ஆனால் அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதற்கு ஆதார பூர்வமான சான்றுகள் எதுவுமில்லை.

சாதாரண மனிதர்களின் கண்களுக்கு தெரியாமல் அவர்கள் வாழ்ந்து வருவதாக சிலர் சொல்கிறார்கள்.

துரோணன் குமரரான அசுவாத்தாமனை மராட்டிய மாநிலத்திலுள்ள அடர்ந்த காடுகளில் பார்த்திருப்பதாக சிலர் கூறியிருக்கிறார்கள்.

அவர்களின் கூற்றில் எந்த அளவு உண்மையிருக்கிறது என்பதை ஆண்டவனுக்கே வெளிச்சம்.

மனித உடலோடு பல காலம் வாழலாம் என கூறுகின்ற ஹடயோகம் கூட சில நூறு வருடங்கள் மட்டுமே மனித சரீரம் தாக்கு பிடிக்கும் என கூறுகிறது.

நிலைமை அப்படியிருக்க பல யுகங்களாக ஒரு மனிதன் வாழ்கிறான் என்பதை நம்புவது மிகவும் கடினம்.

இமயமலையில் உள்ள அமர்நாத் பனி குகையில் ஒரு ஜோடி புறா வாழ்ந்து வருகிறது.

பார்வதிக்கு பரமேஸ்வரன் முடிவில்லாத ஆயுளுடன் வாழும் கலையை கற்ப்பித்த போது அருகிலிருந்த இப்புறாக்கள் அதை கற்றுக் கொண்டு இன்று வரை வாழ்வதாக பலர் சொல்கிறார்கள்.

பனி குகையில் காணப்படும் அந்த புறாக்கள் நிரந்தரமாக அங்கு தங்குவதில்லை.

சில காலத்திற்கு எங்கேயோ சென்று விடுகிறது. அப்படி சென்று திரும்பி வரும் புறா அதே ஜோடி தானா என்பதை எந்த வகையிலும் உறுதிப்படுத்தப்படவில்லை.

ஆனால் ஒரு அதிசயம். அமர்நாத் பிராந்தியத்தில் அந்த ஒரு ஜோடி புறாவை தவிர வேறு எந்த புறாவும் காணப்படுவதில்லை.

ஆக மரணமில்லாத வாழ்வு என்பது இன்று வரை நல்ல சுகமான கற்பனை.

ஆனால் நமது இந்து மதம் மரணமில்லாத வாழ்வு என்று உடலை மையமாக வைத்து பேசவில்லை.

ஒரு மனிதனின் இருப்பை சரீர இருப்பு என்றும், ஆத்ம இருப்பு என்றும் இரண்டு வகையாக பிரிக்கிறது.

சரீர இருப்பு என்பது மாறி கொண்டே இருப்பது, அழியக் கூடியது. ஆத்மாவின் இருப்பை நிலையானது என்றும், அழியாதது என்றும் சொல்லப்படுகிறது.

எவ்வளவு பெரிய ஞானியானாலும், யோகியானாலும் ஒரு காலத்தில் மரணம் ஏற்ப்படுகிறது

சாதாரண மனித கண்களுக்கு மரணமாக தென்படுவது ஞானிகளுக்கு முத்தியாக தெரிகிறது

காரணம் உடலை நிலையாக வைக்கும் அளவிற்கு அதன் மீது பற்று ஏற்படுகிறது.

பற்றை நீக்குதல் தான் ஆத்ம வாழ்வின் மிக முக்கிய குறிக்கோளாகும்.

உடல் எடுக்காமல் பிறவியில்லாமல் இருக்கும் முக்தி நிலை தான் ஞானிகளின் ஒரு வேட்கை.

பிறவியே இல்லாத போது இறப்பு எப்படி வரும்?

பிறவாத முக்தி நிலை தான் இந்து மதம் கூறும் இறவாத நிலை சிரஞ்சீவி தத்துவம்.

அப்படியென்றால் அனுமான், அசுவாத்தாமன் போன்றோர்களை சிரஞ்சீவி என்பது பொய்யா?

நிச்சயமாக இல்லை. வியாசர், கிருபாச்சாரியார் உட்பட சிரஞ்சீவி அனைவருமே தங்களது செயற்கரிய வாழ்க்கை முறையில் இன்றும் நம்மோடு வாழ்ந்து வருகிறார்கள்.

இரண்டாரத்து ஐந்நூறு வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த சாணக்கியரும், நூறு வருடத்திற்கு முன்னால் வாழ்ந்த மகாகவி பாரதியும் இப்போது நம்மோடு வாழ்ந்த கண்ணதாசனும், காமராஜரும், சிவாஜி கணேசனும் செத்தா போனார்கள். இல்லவே இல்லை.

தங்களது அறிவாலும் திறமையாலும், பொது நலத்தாலும், உயர்ந்த பண்பாலும் இன்றும் நம்மோடு வாழ்ந்து வருகிறார்கள்.

ஆகவே அத்தகைய இறவா தன்மையை அடைவதற்கு ஒவ்வொரு ஜீவனும் முயற்சிக்க வேண்டும் என்பதே இந்து மதத்தின் விருப்பமாகும்.

Wednesday, December 4, 2013

திருமணம் நடத்த மிக உயர்வான நட்சத்திரம்

திருமணம் நடத்த மிக உயர்வான நட்சத்திரம் சுவாதி என்று யஜுர்வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இது நரசிம்மருக்குரிய நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் திருமணம் நடத்தப்பட்டால், அந்தப் பெண் கணவனிடம் கோபித்துக் கொள்ள மாட்டாள். புகுந்த வீட்டிற்கு பெருமையும், பிறந்த வீட்டுக்கு நற்பெயரும் வாங்கித் தருவாள். கணவர், மாமியார், நாத்தனார் பிரச்னை செய்கிறார்கள் என கண்ணைக் கசக்கிக் கொண்டு வீட்டுக்கு வரமாட்டாள் என்றும் யஜுர் வேதத்தின் முதல் அஷ்டகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இதுதவிர, ஒரு பெண்ணின் ஜென்ம (பிறந்த) நட்சத்திரத்தில் இருந்து எண்ணும் போது 2,4,6,8,9,11,13,15,17,18,20,24வது நட்சத்திரங்களும் சிறந்தவை.

ஆலயத்தின் தத்துவம்..

ஆலயத்தின் தத்துவம்..

இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான். தூணிலும், துரும்பிலும் கூட இறைவன் இருக்கிறான் .அப்படிப்பட்ட இறைவனை வழிபட கோயிலுக்கு எதற்காக செல்ல வேண்டும்? ஆலய வழிபாடு சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது ஏன் என்ற எண்ணம் மனதில் எழலாம் .

காற்று எங்கும் நிறைந்துள்ளது .அது வீசாத இடமே கிடையாது .இருந்தாலும் கார் ,சைக்கிள் டயருக்கு காற்றடிக்க வேண்டும் என்றால் என்ன செய்கிறோம் ? பம்பின் உதவியை நாடுகின்றோம் அல்லது காற்று பிடித்து வைக்கப்பட்டுள்ள கருவியை நாடுகிறோம்.இல்லாவிடில் டயர்களில் காற்றை நிரப்ப முடியாது ....

அது போல இறைவன் எங்கும் இருந்தாலும் பக்தியால் மனம் ஒருமைப்படவே கோயிலுக்குச் சென்று இறைவனை வணங்குகிறோம் .நமக்குப் பிடித்த உருவில் இறைவனை வழிபடுகிறோம் .பாலில் நெய் மறைந்திறிப்பதை போல எல்லா இடங்களிலும் இறைவன் நிறைந்து மறைந்திருக்கிறான் .கடைந்த தயிரில் வெண்ணை திரண்டு வருவதைப் போல , ஞானிகள் உள்ளத்திலும் ,திருக்கோயிலிலும் இறைவன் விளங்கிக் காட்சி அளிக்கிறான்.

கொடிய வெயிலில் ஒரு துணையி வைத்தால் ,அந்த துணி வெதும்புமேயன்றி ,வெந்து சாம்பலாகாது .வெயிலி சூரிய காந்தக் கண்ணாடியை வைத்து அதன் கீழே குவிந்து வரும் சூடான கதிரில் துணியை வைத்தால் அது கருகி சாம்பலாகி விடுகிறது.நேர் வெயிலுக்கு இல்லாத ஆற்றல் ,சூரிய காந்தத் கண்ணாடியின் கீழே வரும் வெயிலுக்கு உண்டு .பசுவின் உடல் முழுவதும் பால் நிறைந்து இருந்தாலும் பாலைப் பெற விரும்புகிறவன் கொம்பையோ ,,வாலையோ பிடித்து இழுத்தால் பால் கிடைப்பதில்லை .மடியை வருடினால் தான் பால் கிடைக்கிறது.

அது போல ஆலயத்தில் உள்ள தெய்வ திரு உருவங்கள் , பசுவி மடியைப் போன்றவை . அங்கே போனதும் பக்தி உணர்வு சுரந்துவிடும் .மனம் உருகி வழிபட்டு இறைவன் திருவருளைப் பெற எளிதாகிவிடும்.

உங்களை அனைவருக்கும் பிடிக்க வேண்டுமா” இதோ அந்த சூட்சும மந்திரம்

உங்களை அனைவருக்கும் பிடிக்க வேண்டுமா” இதோ அந்த சூட்சும மந்திரம்.!

நமது எண்ணங்கள் ஒரு வித காந்த அலைகளின் வடிவம் கொண்டது.அவை எப்பொழுதும் அலை அலையாக வெளிபட்டுக்கொண்டே இருக்கும்,அல்லது வெளியேறிக்கொண்டே இருக்கும்.நல்லது நல்லபடியாக{விளைவு நன்மை} தீயது தீயபடியாக {விளைவு தீமை}.

நாம் மகிழ்ச்சியாக அல்லது சோகமாக இருக்கும்போது நமது எண்ணத்திற்கேற்ப நமது எண்ண அலைகளும் மாறுபடுகின்றது.அவை முதலில் நம்மைத் தாக்கி விட்டு பிறகு காந்த அலைகளாக வெளியேறுகின்றது.அப்படி வெளியேறும் அந்த காந்த அலைகள் நம்மை சுற்றி உள்ள சூழலையும் பாதிக்கின்றது.

சரி முதலில் இந்த முதல் நிலையை சற்று ஆராய்வோம்.நாம் மகிழ்ச்சியாக அல்லது சோகமாக இருக்கும்போது இந்த மனோ நிலை நம்மை முதலில் தாக்குகின்றது என்று சொன்னேன் அல்லவா.எப்படி என்று பார்போம் வாருங்கள்.

ஒரு பெண்ணோ அல்லது ஆணோ முதன் முதலில் காதல் வசப்படும்போது அவர்கள் எல்லை இல்லா ஆனந்தப் பரவசத்தில் இருப்பர்.அந்த ஆனந்தப் பரவசம் அவர்களை தாக்கும்.அதற்கான அடையாளங்களை முதலில் அவர்கள் முகத்தில் காணலாம்.முகம் மலர்ந்து இருக்கும்.உடலில் ஒரு சுறுசுறுப்பு தோன்றும்.தோற்றத்தில் ஒரு கம்பீரம் காட்சியளிக்கும்.உடை உடுத்துவதிலும்,தங்களை அலங்காரம் செய்வதிலும் மிகவும் முனைப்பாக இருப்பர்.சுருங்கச்சொன்னால் எதிலும் ஒரு மிடுக்கு இருக்கும்.இப்போது இவர்களின் மனம் நேர்மரையில் {POSITIVE} இருக்கின்றது என்று பொருள்.

பிறகு அந்த எண்ணம் சுற்று சூழலையும் பாதிக்கும் என்று சொன்னேன் அல்லவா.சந்தோசத்தில் மலர்ந்து முகம்,சுறுசுறுப்பான செய்கைகள்,அழகான உடை,கம்பீரமான தோற்றம்,அலங்காரம் செய்யப்பட்ட வசீகரிக்கப்பட்ட உடல் அமைப்பு.எதிலும் ஒரு மிடுக்கு.இவை அனைத்தும் காண்போர் அனைவரையும் சுண்டி இழுக்கும் தன்மை கொண்டவை.புதிய மணமக்களுக்கும் இது பொருந்தும்.சரி இந்த மாற்றம் அனைத்திற்கும் மூலப் பொருள் எது? முதலில் மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சியான மனோ நிலைதான்.

இந்த மகிழ்ச்சியான மனோநிலையில் மாற்றம் ஏற்பட்டால் என்ன சூழல் நிகழும்,அதையும் சற்று பார்போம் வாருங்கள்.இந்த காதல் ஜோடிகள் ஏதோ ஒரு சந்தற்பத்தால் கட்டாயமாக பிறரால் பிரிக்கப் படுகின்றனர் என்று வைத்துக் கொள்வோம்.அப்போது மகிழ்ச்சியில் இருந்த அவர்களின் மனோநிலை இப்போது மாலா துயரத்தில் ஆழ்ந்து விடும்.இதன் வெளிப்பாடு,முகத்தில் சோகம், செயலில் சுறுசுறுப்பு இன்மை,தன் சுய அலங்காரத்தை அலட்சியப் படுத்துவர்.சோகமே வடிவாக இருப்பர். அவர்களின் மனம் இப்போது எதிர்மறையில்{NEGATIVE} இருக்கும்.இப்படிப்பட்ட மனோநிலையில் உள்ளவர்கள் செய்கைகளையும்,வருகைகளையும்,தோற்றங்களையும் பிறர் விரும்புவதில்லை.சுருங்கச் சொன்னால் இவர்கள் எங்கும் அலையாத விருந்தாளியாக இருப்பர்.

கொஞ்சம் இங்கே கவனிக்கவும் அதே காதல் ஜோடிகளுக்கு தங்கள் மனோ நிலையில் மாற்றம் ஏற்பட்டதும்,அந்த மாற்றம் முதலில் அவர்களை பாதித்தது பிறகு அவர்களின் சுற்று சூழலையும் மாற்றி விட்டது.இவை ஒரு உதாரணாமாக இருந்தாலும்இதுதான் உண்மையினும் உண்மை.

“கரு-எண்ணத்தை கவனமுடன் கையாளுங்கள்”

!உங்களது மகிழ்ச்சியான எண்ணங்கள் உங்களுக்கு ஒரு வசீகரத் தோற்றதை தரவல்லது.
!உங்களது சோகமான எண்ணங்கள் பிறர் உங்களை வெறுக்கும் சூழலை தோற்றுவிக்க வல்லது.

மனம் அது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்
மனம் அது செம்மையானால் வாசியை அடக்க வேண்டாம்
மனம் அது செம்மையானால் வேதங்கள் ஓத வேண்டாம்
மனம் அது செம்மையானால் இறைவனை தேடித் திரியவேண்டாம்
“மனம் என்ற கோவில் திறக்கின்ற நேரம் அழைக்காமலே அங்கு தெய்வம் வந்து சேரும்”
இவை அனைத்தையும் சொன்னவர் “திருமூலர்”

“MIND MOVES MATTER”
“மனம்தான் சூழ்நிலையை உருவாக்குகின்றது”

மரணத் தூதுவன்

மரணத் தூதுவன் – அமானுஷ்யப் பூனை

மரணம் ஏற்படுவதை யாராவது முன் கூட்டியே கணித்துக் கூற முடியுமா, அது சாத்தியம் தானா? நிச்சயமாக முடியாது என்பதுதான் நமது பதிலாக இருக்கும். சகலமும் அறிந்த ஜோதிடர்கள் கூட இந்த விஷயத்தில் சற்று தடுமாறத்தான் செய்வர். ஆனால் ஒருவரது மரணத்தை முன் கூட்டியே கணிப்பது மட்டுமல்ல; அவர் இறக்கும் வரை அவர் அருகிலேயே இருந்து அவரை வழியனுப்பி வைத்து விட்டு வருகிறது ஒரு பூனை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. அந்த அமானுஷ்யப் பூனையின் பெயர் ‘ஆஸ்கர்’

அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து பகுதியில் உள்ள ஒரு நகரம்தான் ரோடே ஐலண்ட். இங்கு ஸ்டீரே என்ற இடத்திலுள்ள முதிய நோயாளிகளுக்கான மருத்துவ மற்றும் உயர் சிகிச்சைப் பாதுகாப்பு மையம் மிகவும் புகழ் பெற்றது. அல்சீமர், பக்கவாதம், பர்கின்சன் போன்ற பல நோய்களால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகள் இங்கு தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்....

இங்குதான் ஒரு சிறிய குட்டியாக வந்து சேர்ந்தது அமானுஷ்யப் பூனை ஆஸ்கர். முதலில் அதன் செயல்பாடுகளை யாரும் கவனிக்கவில்லை. அது ஒரு சாதாரணப் பூனை என்றே அனைவரும் எண்ணிக் கொண்டிருந்தனர். ஆனால் ப்ரௌன் யுனிவர்சிடியைச் சார்ந்த ஆல்பர்ட் மருத்துவப் பள்ளியில் பேராசிரியராகப் பணியாற்றுபவரும், அந்த ரோலண்ட் மருத்துவமனையின் மருத்துவர்களில் ஒருவருமான டாக்டர் டேவிட் டோசா, இந்தப் பூனையேச் சற்றே அவதானித்து சில செய்திகளை வெளியிட்ட போதுதான் அனைவரது கவனமும் ஆஸ்கர் மீது திரும்பியது.

அப்படி என்னதான் செய்தது ஆஸ்கர்? வழக்கமாக மற்ற பூனைகளைப் போலவே வலம் வரும் ஆஸ்கர், யாராவது ஒருவர் மரணிக்கப் போகிறார் என்று தனது அமானுஷ்ய ஆற்றலால் உணர்ந்து கொண்டால் உடனே அந்த நபரின் படுக்கையறைக்குச் சென்று விடும். அங்கேயே பல மணி நேரம் அமர்ந்திருக்கும். அப்போது அதன் உடல், கண்கள் என அனைத்தும் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும். அந்த நபர் இறக்கும் வரை காத்திருந்து, அவர் உயிர் பிரிந்ததும் வித்தியாசமான ஒரு குரலை எழுப்பி விட்டு அங்கிருந்து வேகமாக நகர்ந்து சென்று விடும்.

இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல. நூற்றுக்கணக்கான மரணங்களை முன் கூட்டியே கணித்திருக்கிறது ஆஸ்கர். அதனால் இங்கே தங்கியிருப்பவர்களுக்கு ’ஆஸ்கர் பூனை’ என்றால் ஒருவித அச்சம்.

ஒருவர் இறக்கப் போகிறார் என்பதை உணர்ந்து கொள்ளும் ஆஸ்கர் முதலில் அவரது படுக்கை அருகே சென்று வித்தியாசமான ஒரு ஓசையை எழுப்பும். பின்னர் அங்கேயே அமர்ந்து விடும். அதைக் கண்ட மருத்துவர்களும், செவிலிகளும் எச்சரிக்கை உணர்வை அடைந்து மேல் சிகிச்சைகளுக்கு உடனடியாகத் தயாராகின்றனர். நோயாளின் உறவினர்களும் எச்சரிக்கை அடைந்து, முன்னேற்பாடாகச் செய்ய வேண்டிய செயல்களைச் செய்ய ஆரம்பிக்கின்றனர்.

இங்கு பணியாற்றும் மருத்துவர்களோ அதன் செயல்பாடுகளைக் கண்டு வியப்பதுடன், இது எப்படி சாத்தியம் என்றும் புரியாமல் விழிக்கின்றனர். ஆனால் டேவிட் டோஸா இதுபற்றிக் கூறும் போது, “ ஆஸ்கருக்கு கூடுதல் புலனறிவு மிக அதிகமாக உள்ளது. அதன் சக்தியால், இறப்பிற்கு முன் ஓர் உடலில் ஏற்படும் மிக நுணுக்கமான வேதியியல் மற்றும் உயிரியல் மாற்றங்களை அதனால் எளிதாக உணர்ந்து கொள்ள முடிகிறது. அதனால் இறக்கும் நபர் யார் என்பதை முன் கூட்டியே அதனால் கணிக்க முடிறது” என்கிறார்.

”சரி, ஆனால் இறக்கும் நபர் அருகே சென்று ஏன் ஆஸ்கர் அமர வேண்டும். எதற்கு அந்த இறப்பை உற்று கவனித்துக் கொண்டிருக்க வேண்டும்?” என்ற கேள்விக்கு விடையளிக்க அவரால் முடியவில்லை

ஒழுக்கம்

எந்த மதமும் தனிநபர் சொத்தல்ல. வானளாவப் புகழ்வதும் வசை பாடுதலும்; நம்பிக்கையும் தூற்றலும் மனம் சார்ந்த தனி சுதந்திரம். ஆனால் ஒழுக்கம் என்பது யாவருக்கும் பொதுவானது.

“ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்’

என்கிறார் வள்ளுவர்.

ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பாகும்; அதன் தன்மையாகும். ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகிவிடும். எனவே எங்கும் எதிலும் ஒழுக்கம் முன்னிலை வகிக்க வேண்டும்.

எந்த சமய வித்தகரையும் வைத்து தொடங்கப்படவில்லை. நியூட்டன் புவியீர்ப்பு சக்தியைப் பற்றிய விதியினை எப்படி படைக்கவில்லையோ, அப்படித் தான் வேதத்தையும் எவரும் படைக்கவில்லை. வேத உண்மைகள் யாவும் கண்டு கொள்ளப்பட்டவையே தவிர உண்டாக்கப்பட்டவை அல்ல; வெளிப்படுத்தப்பட்ட வையே தவிர படைக்கப்பட்டவை அல்ல. எனவே அவை தனிநபர் தொடர்பற்றவை. (அபௌருஷேயம்). காலத்திற்குட்பட்டு கடந்து போகும் விதிகளைப் போலில்லாமல், வேத உண்மைகள் யாவும் ஆன்மிகத்துறையைச் சார்ந்தவை. அவற்றுக்கு என்றுமுள்ள தன்மையும் (நித்யம்) மதிப்பும் உண்டு.

“வேதம்’ என்ற சொல்லுக்கு “அறிவு’ அல்லது “ஞானம்’ என்பது பொருள். வேதங்கள் நான்கு. இவற்றுள் முதலாவது வேதமான ரிக் வேதம் முக்கியமானது. ஏனென்றால் அதன் மந்திரப் பாடல்கள் பலவற்றை மற்றைய வேதங்களுக்கு அது தந்துள்ளது. அதுதான் தொன்மையான தொகுப்பு.

ஒவ்வொரு வேதமும் நான்கு பகுதிகளைக் கொண்டது. மந்திரங்கள், பிரம்மாணங்கள், ஆரண்யங்கள், உபநிடதங்கள் என்பவையே அவை. மந்திரங்கள் என்பது தெய்வங்களுக் கென்று அமைக்கப்பட்ட துதிப் பாடல்கள். இம்மையிலும், மறுமையிலும் சுபிட்சம் பெறுவதற்கென்று தெய்வங்களிடம் செய்யப் படும் பிரார்த்தனைகள் அவை. பிரம்மாணங்கள் என்பவை யாகங்கள் செய்வதற்கு அனுஷ்டிக்கப் பட வேண்டிய சடங்குகள் பற்றிக் கூறுவது. வேதத்தின் இறுதிப் பகுதிகளான உபநிடதங்கள் (வேதாந்தம்) தத்துவ ஆராய்ச்சிகள் ஆகும்.

மந்திரங்கள், பிராம்மணங்கள், ஆரண்யங் கள், உபநிடதங்கள் என்று பிரிக்கப் பெற்ற வேத மானது- பிரம்மச்சரியம், கிருகஸ்தம், வானப் பிரஸ்தம், சந்நியாசம் எனும் மனித வாழ்க்கையின் நான்கு நிலைகளுக்கும் பொருந்துமாறு உள்ளது.

வேதத்தில் அடங்கியுள்ளவற்றை வேறு ஒரு வகையாகவும் பிரிக்கலாம்.

கர்ம காண்டங்கள் அல்லது மத ஆச்சாரங் கள் பற்றியவை.

உபாசனைக் காண்டம் அல்லது தியானத் திற்குரியவை.

ஞான காண்டம் அல்லது அறிவு தரும் பகுதி.

மந்திரங்களும் பிரம்மாணங்களும் கர்ம காண்டத்தைச் சேர்ந்தவை. ஆரண்யங்கள் உபாசனை காண்டத்தைச் சேர்ந்தவை. உபநிடதங்கள் ஞான காண்டத்தைச் சேர்ந்தவை. சமயக் கொள்கைகள், வழிபாட்டு முறைகள் பற்றிக் கூறும் நூல்கள் ஆகமங்கள் ஆகும். இந்து மதத்தின் முப்பெரும் பிரிவுகளான சைவம், சாக்தம், வைணவம் ஆகியவை ஆகமங் களை அடிப்படையாக அமைத்துக் கொண்டவை.

வேதங்கள், ஸ்மிருதிகள், இதிகாசங்கள், புராணங்கள், ஆகமங்கள், தரிசன இலக்கியம், பாமர இலக்கியம், சடங்கின் வகைகள், வேதகால வேள்விகள், ஆகம வினைமுறைகள், மதச் சடங்குகளோடு கூடிய இறை வழிபாடு, திருவிழாக்கள், மதச் சின்னங்கள், பண்பும் நடத்தையும், கருமம் என்னும் கொள்கைகள், மறுபிறவி பற்றிய கோட்பாடுகள், அறப் பண்புகள், தன்னலமற்ற சேவை மார்க்கம், பக்தி யோகம், ஞான யோகம், நியாயம், வைசேடிகம், சாங்கியம், வேதாந்தம், அத்வைதம், விசிட்டாத் வைதம், துவைதம், வைணவத்தின் கோட்பாடு கள், சைவக் கோட்பாடுகள், தத்துவ சிந்தனையின் சிறப்பு, தந்திரங்கள், காணாபத்திய நெறி, கௌமார நெறி, சௌர நெறி, குண்டலி எனும் அனுபூதி நெறி, இன்னும் இவை சார்ந்த உட்பிரிவுகள் என நீண்டதொரு செய்திகளை உள்ளடக்கியதுதான் இந்து மதம்.

ஈச, கேன, கட, பிரசன்ன, முண்டக, மாண்டூக்ய, ஸ்வேதாஸ்வர, மைத்ரீய, சுபால, ஜாபால, பைங்கல, கைவல்ய, வஜ்ரசூசிக, கௌஷீதக, தைத்ரீய, ஐதரேய, சாந்தோக்ய, பிரஹத் என பதினெட்டு உபநிடதங்கள் உள்ளன. இதிலுள்ள தத்துவங்களைக் கற்றாலே மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.

கடல் போன்றது இந்து மதம். அதிலிருந்து சில எளிய விதிகளைக் காண்போம்.

● விபூதியை நீரில் குழைத்துப் பூசிக் கொள்ளல் கூடாது. கருமம் சார்ந்தவை செய்யும்போது மட்டும் நீரில் குழைத்துப் பூசிக்கொள்ள வேண்டும்.

● புண்ணிய தீர்த்தங்களில் சென்று நின்றவுடன் காலை நனைப்பது கூடாது. முதலில் தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டபின் காலைக் கழுவலாம்.

● மயானம் சார்ந்த சடங்குகளுக்குச் சென்று வந்தபின் வெந்நீரில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். சோப்பு, ஷாம்பு போன்ற வாசனைப் பொருட்களை உபயோகிக்க கூடாது. தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அலுவலகம் செல்ல வேண்டுமென்றால், தலையில் சிறிது தண்ணீரைத் தெளித்தபின் போகலாம்.

ஆண்கள் தான் பிறந்த நட்சத்திர நாளில் மருந்து உட்கொள்ளல், தாம்பத்தியம், திருமணம், பயணம் புறப்படுதல், எண்ணெய் தேய்த்துக் குளித்தல், புதுத் துணி உடுத்துதல், பெரியவர் களுக்கு திதி கொடுத்தல் போன்றவற்றைச் செய்யக் கூடாது. தலைக்கு எண்ணெய் தேய்த் துக் குளித்தபின் வெளியூர் பயணம் செய்வது கூடாது.

● பெண்கள் தலையில் எண்ணெயை வைத்துக் கொண்டு யாரையும் வழியனுப்பக் கூடாது. கணவன் வெளியூர் சென்றபின் எண்ணெய் தேய்த்துக் குளித்தல் தவிர்க்கப்பட வேண்டும்.

● தெய்வ காரியங்களுக்கு கணவன் முதலில் செல்ல வேண்டும். இறப்பு, தீட்டு சம்பந்தப்பட்ட காரியங்களுக்கு மனைவி முதலில் செல்வது நல்லது.

● உரல், அம்மி, உலக்கை, வாயிற்படி, முறம் ஆகியவற்றின்மீது உட்காரக்கூடாது.

● சாப்பாடு, உப்பு, நெய் ஆகியவற்றை கண்டிப்பாக கையால் பரிமாறக்கூடாது. கரண் டியை உபயோகப்படுத்த வேண்டும். சாப்பிடும் போது தவிர மற்ற நேரங்களில் இடது கையால் தண்ணீர் அருந்துதல் கூடாது.

● கணவனின் அனுமதி இல்லாமல் மனைவி தான- தர்மம், விரதம் கடைப்பிடித்தால், கணவனின் ஆயுளில் ஒருநாள் குறையும்.

● குரு, ஜோதிடர், நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சந்நியாசி ஆகியோருக்கு ஆபத்து காலத்தில் உதவ வேண்டும்; புண்ணியம் பெருகும்.

காணாதிபத்திய நெறி

யானை முகக் கணபதியே இந்துக் கடவுளர் களுள் பொதுமக்களால் மிகவும் விரும்பப் படுபவர். அவருடைய திருவுருவச் சிலைகளை கோவில்கள் மட்டுமின்றி ஆற்றங்கரைகளிலும், குளக்கரைகளிலும், புனிதமான மரங்களுக் கடியிலும், சந்திகளிலும், வீடுகளிலும், சந்து பொந்துகளிலும், ஆட்கள் உட்புக முடியாத சின்னஞ்சிறு இடங்களிலும்கூட காணலாம்.

தடைகளை அமைப்பவரும் அவரே;

அவற்றை நீக்குபவரும் அவரே. அவர் விக்னேஸ்வரர்; விக்கினராஜர்; விநாயகர்! அவர்அருளைத் தேடி நிற்பவர்களுக்கு வெற்றியைத் தேடிக்கொடுப்பவர்.

கணேசர் ஒரே உட்பொருளாகவும், இறைத் தன்மையின் மிக உயர்ந்த தத்துவமாகவும் கொள்ளப்பட்டார். “சாரதா திலகம்’ எனும் நூலில் கணேச வழிபாட்டின் நோக்கமும் உட்பொருளும் கீழுள்ளவாறு எடுத்துக் கூறப் பட்டுள்ளது.

“பதம் ஸ்துதீநாம் அபதம்
ஸ்ருதீநாம் லீலாவதராம்
பரம் அஷ்ட மூர்த்தேஹ்
நாகாத்மகோ வா
புருஷாத்மகோ வெத்யபெத்யம்
ஆத்யம் பஜ விக்னராஜம்.’

“எல்லாவற்றிலும் உயர்வானவனான விக்னராஜனை வேண்டுதல் செய்யுங்கள். ஆனால்அவனை வேதங்களாற்கூட அடைய இயலாது. அவன் எட்டு வடிவங்களோடு (நிலம், நீர், நெருப்பு, காற்று, விண், சூரியன், சந்திரன், எஜமானன்) கூடிய சிவனுடைய விளையாட்டு அவதாரம். அவன் வடிவத்தைப் பற்றி அது யானை வடிவமென்றோ மனித வடிவமென்றோ கூற இயலாது. அவன் ஆதியானவன்.

யானைமுகக் கடவுளை நான் பிரார்த்திக் கிறேன். அவன் வேதாந்தங்களில் புகழப்படும் புருஷன்; இதயத்தில் வீற்றிருக்கும் ஆனந்த மயமான பொருளான ஆன்மா. மக்களை சூழ்ந்துள்ள பேரிருளான அறியாமை அவன் மகத்துவத்தால் விலகியோடும்’ என்கிறது அந்த துதி.

இந்து தர்மம் எடுத்துரைப்பவை எல்லாம் நல்ல வழிகாட்டல்களே. அதனோடு இணைந்து ஆனந்த வாழ்வைப் பெறுவோம்.

புகழ் போதை

புகழ் போதை - நீதிக் கதைகள்

மாணிக்கம், கேசவன் இருவரும் அடுத்தடுத்த வீட்டுக்காரர்கள். நல்ல வசதிபடைத்தவர்கள். இருவரும் நண்பர்கள். ஆனால், குணத்தில் இருவரும் நேர்மாறானவர்கள். கேசவன் யாருக்காவது ஒரு சிறு கஷ்டம் என்றாலும் உதவி செய்வதற்கு முன்னால் நிற்பான். ஊரில் அவனை அனைவரும், “கலியுக கர்ணன்” என்று புகழ்வர். மாணிக்கம் அவனுக்கு நேர் எதிராக இருந்தான். அவனை அனைவரும், “சுயநலக்காரன்” என்று ஏசினர். மாணிக்கம், கேசவன் அடுத்தடுத்த காட்டை விலைக்கு வாங்கினர். கேசவன் தன் காட்டை அழித்து, கனிமரங்களை உருவாக்கினான். கிணறு வெட்டி அவற்றிற்கு நீர் பாய்ச்சினான். சில ஆண்டுகளுக்குப்பின் அந்த மரங்கள் கனிகளை வாரி வழங்கின. மாணிக்கம் தன் நண்பனைப் போல் காட்டை அழிக்காமல், மரங்களை நடாமல், அப்படியே விட்டு விட்டான். அதனால், அவனுடைய காட்டில் முள் புதர்கள் சேர்ந்து விட்டன. கேசவன் தன்னுடைய பழத்தோட்டத்திற்கு போக வேண்டுமென்றால் மாணிக்கத்தின் காட்டு வழியாகத்தான் போக வேண்டும். ஒருநாள், கேசவன் மாணிக்கத்தின் காட்டு வழியாகப் போய்க் கொண்டிருந்த போது, அவன் காலில் நாலைந்து முட்கள், “ நறுக் நறுக்” என்று குத்தி ரத்தம் கொட்டியது. அதன் காரணமாக கோபம் கொண்ட கேசவன் மாணிக்கத்தைப் பார்த்து திட்டினான். அதனால், இருவருக்கும் சண்டை உண்டாகி நட்பு முறிந்தது. அதனால் அவர்கள் அன்று முதல் பேசிக் கொள்வதேயில்லை. நாட்கள் சென்றன- ஒருநாள் கேசவன் தன் தோட்டத்தில் விளைந்த பழங்களை எல்லாம் பறித்து, ஊரிலுள்ள அனைவருக்கும் இலவசமாக வழங்கினான். மகிழ்ச்சி கொண்ட ஊர் மக்கள் அனைவரும் அவனை வாழ்த்தினர். இப்படியே ஊரிலுள்ளவர்கள் வாழ்த்த வாழ்த்த கேசவனுக்கு புகழ்வெறி பிடிக்கத் தொடங்கியது. கேசவன் ஊரையே அழைத்து ஆயிரக்கணக்கில் செலவு செய்தான். மக்களுக்கு தேவையானதை வாரி, வாரி இறைத்தான். மக்களும் அவன் வீட்டு வாசலில் குவிந்தனர். கேசவனும் புகழ் வெறியில், மக்களுக்கு தேவையானதை பூர்த்தி செய்து வந்தான். அந்த சமயத்தில் அங்கு வந்து சேர்ந்த மாணிக்கம் கூட்டத்தினரை நோக்கி, “ஊர்மக்களே! நீங்கள் யாருடைய பணத்தில் ஆட்டம் போடுகிறீர்கள் தெரியுமா?” என்று கேட்டான். எல்லாரும் விழித்தனர். “இது என்னுடைய பணம் ”. கேசவன் தந்தை தன்னுடைய நிலங்களை எல்லாம், என் தந்தையிடம் விற்று பணம் வாங்கியிருந்தார். ஆனால், நட்பு காரணத்தால், கேசவன் தந்தையின் நிலத்தை சொந்தமாக்கிக் கொள்ளாமல் விட்டுவிட்டார். என் தந்தை இறந்து போனபிறகு இந்த விஷயம் இதுவரை எனக்கு தெரியவில்லை. இன்று நான் என் தந்தையின் பழைய பெட்டியை குடைந்தபோது அதில் கேசவன் தந்தை என் தந்தைக்கு எழுதிக் கொடுத்த கிரயப் பத்திரத்தைக் கண்டு எடுத்தேன். “அதனால்... இன்றுமுதல் கேசவனுடைய சொத்துக் கெல்லாம் நானே சட்டப் பூர்வமான சொந்தக்காரன். இதுவரை அவன் ஊருக் கெல்லாம் வாரி வழங்கினான். இனிமேல் நான் அதற்கு சம்மதிக்க மாட்டேன் எல்லாரும் வீட்டிற்கு போங்கள் ,” என்று சொன்னான். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கேசவனுக்கு தலைசுற்றியது. மயக்கம் வருவது போலிருந்தது. குழம்பிப் போய் கொண்டிருந்த கூட்டத்தைப் பார்த்தான். மாணிக்கம் பேச்சைக் கேட்ட ஊர் மக்கள் அனைவரும் வெளியேறிக் கொண்டிருந்தனர். மக்களை நோக்கி, “போகாதீர்கள் போகாதீர்கள் !” என்று கத்தினான் கேசவன். அதற்கு அவர்கள்... “போய்யா! போ. இனியும் உன் பேச்சைக் கேட்பதற்கு நாங்கள் ஒன்றும் மடையர்கள் இல்லை. இனி நீயும் எங்களைப் போல் ஒரு ஏழைதான்,” என்று கூறிவிட்டு, “ வாருங்கள் போகலாம்!” என்று ஒருவன் கையசைக்க, அனைவரும் அவனைத் தொடர்ந்து சென்றனர். அனைவரும் சென்றவுடன் தன்னிந்தனியாக கவலையோடு ஒன்றும் புரியாமல் நின்றிருந்த கேசவன் தோளில் தட்டிய மாணிக்கம், “வா உள்ளே போகலாம்,” என்றான். கேசவன் எதிலும் விருப்பமின்றி, வெறுப்புடன் அவனுடன் சென்றான். வீட்டிற்குள் நுழைந்ததும் மாணிக்கம் வயிறு வலிக்கச் சிரித்தான். ஒன்றும் புரியாதவனாய் கேசவன் விழிக்க, மாணிக்கம் கேசவனை நோக்கி, “அதிர்ந்து விட்டாயா? உன் தந்தை என் தந்தையிடம் நிலங்களை விற்கவும் இல்லை. என் தந்தை வாங்கவும் இல்லை. ” பிறகு நான் ஏன் பொய் சொன்னேன் என்று பார்க்கிறாயா? நீ இரக்கம் காரணமாக மக்களுக்கு கண்மூடித்தனமாக வாரி இரைத்தாய். உன்னைப் புகழின் உச்சியில் வைத்து மதுவை விட அதிகமான போதையை உண்டாக்கி உன்னால் லாபம் அடைந்து வந்தனர் மக்கள். “அவர்களை அடையாளம் காட்டவே, இனி உன் சொத்துக்கெல்லாம் நானே சொந்தக்காரன் என்று சொன்னேன். இதைக் கேட்டு நீ ஒன்றுமில்லாதவன் என்று தெரிந்த ஊர் மக்கள் நீர் இல்லாத குளத்தை விட்டு காக்கைகள் பறந்து செல்வதைப் போல், உன்னை விட்டு ஓடிவிட்டனர். இந்த நன்றி கெட்டவர்களிடம் இனி, நீ எப்படி நடக்க வேண்டாம்? ” என்றான் மாணிக்கம். “நண்பா! என்னை வஞ்சித்து வாழ்ந்தவர்களை உன்னால் அடையாளம் கண்டு கொண்டேன். இனி ஆற்றில் போட்டாலும் அளந்துதான் போடுவேன். புகழ் போதையில் மூழ்க இருந்த என்னை கைகொடுத்து தக்க சமயத்தில் காப்பாற்றி விட்டாய், உனக்கு நான் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை, ” என்று நா தழுதழுக்க கூறினான் கேசவன்.


நீதி: இரக்கம் காட்டலாம். ஆனால், ஏமாளியாகி விடக்கூடாது.

யார் வீட்டில் எந்த திசையில் உறங்குவது?

யார் வீட்டில் எந்த திசையில் உறங்குவது?
நீங்கள் உங்கள் வீட்டிலேயே இருந்தால் கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது தான் சிறந்தது. நீங்கள் மாமனார் வீட்டுக்கு சென்றுள்ளீர்கள் என்றால், தெற்கு திசையில் தலை வைத்து படுங்கள். இது தாய்மாமனார், சிறிய, பெரிய மாமனார், பெண்ணைக் கொடுத்த மாமனார் என எல்லாருக்கும் பொருந்தும். நீங்கள் வெளியூர் சென்றாலோ, வெளியிடங்களில் லாட்ஜ், உறவுக்காரர்கள் வீடு என தங்கினாலோ மேற்கு நோக்கி தலை வைக்கலாம். எங்கு போனாலும், தலை வைக்கக்கூடாத ஒரே திசை வடக்கு தான். இந்த தகவலை நமக்கு தெரிவிப்பவை தர்மசாஸ்திரமும், வாஸ்து சாஸ்திரமும் ஆகும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆயிரம் கால் மாண்டபத்தில் உள்ள தூண் சிற்பம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆயிரம் கால் மாண்டபத்தில் உள்ள தூண் சிற்பம்.இந்த பெண் சிற்பத்தில் மூன்று குழந்தைகளை தாங்கி கொண்டு நடக்கிறது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது, சிற்பியின் கற்பனை திறமையா? இல்லை தெருகூத்தடிகளின் வாழ்க்கை முறையா என்பது தெரிவில்லை, அவள் கையில் ஒரு பனை ஓலையில் செய்யப்பட்ட கூடை போன்று வைத்துள்ளாள் அதில் அந்த கூடையை எங்கள் ஊரில் கடகா பெட்டி என்று பேச்சு வழக்கில் சொல்லுவார்கள், அதில் பனைஓலையின் வடிவம் செதுக்கப்பட்ட விதம் சிற்பியின் பொறுமையை என்னவென்று பாராட்டுவது வார்த்தைகளே இல்லை, அந்த அளவுக்கு நுணுக்க வேலைப்பாடு நீங்க அதை நேரில் சென்று பார்த்தல் நிஜமானதாகவே தோற்றம் அளிக்கும் அப்படி ஒரு தத்துருவமாக வடித்துள்ளார்,

அவள் மூன்று குழந்தைகளை தாயானவள் போலும், ஒரு குழந்தையை தான் தோள்பட்டையில் சுமந்து கொண்டும் மற்றொரு கைகுழந்தையை நெஞ்சில் தன் துணியால் தொட்டில் போன்று கட்டி பாதுகாப்பாக வைத்துள்ளாள் இந்த வழக்க முறைகளை நான் குறவன் குறத்திகள் வாழ்கை முறையில் பார்த்துள்ளேன், இது செதுக்கப்பட்ட ஆண்டு 17 ஆம் நுற்றாண்டில் . ஆனால் இன்று நகரப்புறங்களில், வெளிநாடுகளில் இதை கொஞ்சம் நவீனபடுதில் பெல்ட் போன்ற அமைப்பில் வடிவமைக்கப்பட்டு குழந்தைகளை கொண்டு செல்கின்றனர், அந்த குழந்தை அவளின் மார்பில் பால் குடிப்பது போன்று உள்ளது, வெகுதூரம் நடக்கும்போது குழந்தை பசியால் அழாமல் இருக்க இப்படி யுத்தியை வைத்துள்ளாள் போல?

மூன்றாவது குழந்தை இன்னொருகையின் அரவணைப்பில் நடப்பது போன்று உள்ளது.இரண்டு குழந்தைகளுமே எதோ ஒன்றோ கைகளில் வைத்து சாப்பிடுகின்றனர் , மறுபக்கம் பனைஒலைபெட்டி தன முழங்கையால் இருக்கபற்றிகொண்டும், கைவிரலகால் அந்த குழந்தையையும் பாதுகாத்து கூட்டிசெல்கிறாள்.

முன்பெல்லாம் சந்தை போன்ற அமைப்பு உண்டு வாரத்தில் ஒருநாள் அனைத்துவிதமான பொருள்களும் அங்கு விற்பனைக்கு வரும்.கிராமங்களில் மக்கள் எல்லோரும் வீட்டுக்கு தேவையானதை அன்றைக்கு வந்து வாங்கி செல்வர்கள், அப்போது தன் குழந்தைகளை கூட்டிகிட்டு வருவார்கள். குழந்தைக்கு தேவையானதை வாங்கிகொடுத்துவிட்டு அவன் அவன் வெகுதூரம் நடக்கவேண்டு அழாமலும் இருக்கவேணும் என்பதற்காக அவனுக்கு பிடித்தமானதை வாங்கித் தருவார்கள் முட்டாய் அல்லது ரொட்டி எதோ ஒரு தீன் பண்டத்தை கொடுத்து வீடுவரைக்கும் நடந்து வருவார்கள், இதை போன்று கூட அந்த சிற்பம் சித்தரிக்கப்ட்டு வடிவமைக்கப்பட்டு இருக்கலாம். .

அன்பு மிகுந்த தாயின் வெளிபாடு சிற்பியின் உளிபட்டு இப்படி ஒரு உயிர் தோன்றல் இதுவும் ஒரு வகை பிரசவிப்பு தானே. சிற்பியின் மனதுக்குள் இருப்பதை கற்பனை கருவை மனசால் சுமந்து அதை ஒரு பாறையில் இருந்து பிரசவிக்கிறான் அது முழுமையடையும் பொது அதை அவன் பார்த்து எப்படி ஒரு பூரித்து போயிருப்பன். கற்பனை பண்ணிபார்தல் கூட நம் கண்களில் ஆனந்த கண்ணீர் தான் வரும்.

தூண்களை எல்லாம் தூக்கி நிறுத்திய பிறகே இந்த வேலையை தொடங்குவார்கள். சாரம் கட்டி எத்துனை நாள் பசியை மறந்தும் கூட இதை வடித்திருப்பான். நிலைநிறுத்திய பிறகு சிற்பங்கக் செதுக்கும் பொது சேதம் ஆனாலும் தூணை அப்புறபடுத்துவது என்பது இயலாத காரியம்.சிற்பியின் முழு அற்பணிப்பும் இதுலையே அடங்கும் இதை முடித்த பிறகு கூட அவன் பெயரை கூட அதில் பொறிக்கவில்லை அப்படி பட்ட சிற்பிகள் நம் தமிழ் நாட்டில் வாழ்ந்திருகிறார்கள். இந்த சிற்பங்கள், கலைகள் எல்லாம் நம் தலைமுறை வந்திருக்கிறது என்ற நினைக்கும் பெருமையாக இருக்கிறது.

இப்படி பட்ட ஒரு வேலைபாட்டை, நாம் பாதுகாக்க வேண்டும்.நம் முன்னோர்களின் பெருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவேண்டும் அதை எடுத்துசொல்ல நாம் என்றும் மறக்ககூடாது. இன்னும் ஆயிரம் தலைமுறைக்கும் நம் மண்ணின் பெருமையும், திறமையும் அற்பனிப்பையும் சொல்ல வேண்டும் . சிற்பங்களை நாம் பாதுக்க வேண்டும், அதில் வண்ணம் பூசுவது, திருநீர் கொட்டுவது ,குங்குமம் கொட்டுவது, பரிட்சை எண்களை எழுதவது காதல் சின்னங்களை பொரிப்பது கூடாது. அப்படி நம் கண் முன்னாடி இது போல நடந்தாலும் அதை உடனே தட்டி கேட்க வேண்டும் அவர்களிடம் நம் பெருமையை எடுத்துசொல்லவெண்டும் .

உதவுகிறேன் என்று சொன்னால் போதுமா?

உதவுகிறேன் என்று சொன்னால் போதுமா?

நீச்சல் தெரியாத ஒருவன் கிணறு ஒன்றில் தவறி விழுந்து விட்டான்.

தண்ணீருக்குள் மூழ்கி வெளியே வந்தவன், “என்னை யாராவது காப்பாற்றுங்கள்” என்றபடி தத்தளித்துக் கொண்டிருந்தான்....

அவன் கூச்சலைக் கேட்ட பலர் கிணற்றினருகில் கூடி விட்டனர்.அவர்களுள் ஒருவன், எப்படியாவது கிணற்று நீரில் போராடிக் கொண்டிருப்பவனைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தான்.

உடனே அவன் கிணற்றுக்குள் தத்தளித்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து, “உன் கையை நீட்டு. உன் கையைப் பிடித்து இழுத்துக் காப்பாற்றுகிறேன்.” என்று கத்தினான்.

ஆனால், தத்தளித்துக் கொண்டிருந்தவனோ கையை நீட்டவில்லை. தண்ணீரைக் கையிலடித்தபடி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான்.

கரையிலிருந்தவன் மீண்டும் அவனைப் பார்த்து, “உன் கையை மட்டும் நீட்டு, நான் உன்னைக் காப்பாற்றி விடுகிறேன்” என்றான்.

அங்கு நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், “நீ உண்மையிலேயே அவனைக் காப்பாற்ற வேண்டுமென்று நினைத்தால், உன் கையை நீட்டி அவன் கையைப் பிடித்து வெளியே இழு. நீ எத்தனை முறை கத்தினாலும் அவன் கையை நீட்டப் போவதில்லை. உதவி செய்கிறவன்தான் முயற்சி செய்ய வேண்டுமே தவிர, உதவி கேட்பவன் அல்ல.” என்றார்.

உண்மை உணர்ந்த அவன்,உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவனின் கையைப் பிடித்து இழுத்துக் காப்பாற்றினான்.

குதிரையுடன் கூடிய அரச சிலைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருப்பதற்கான காரணம்

குதிரையுடன் கூடிய அரச சிலைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருப்பதற்கான காரணம்

நீங்கள் பல இடங்களில் குதிரையுடன் கூடிய அரச சிலைகளைக் கண்டிருப்பீர்கள் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக அமைந்திருக்கும். பலர் அது சிற்பியின் வெளிப்பாடு என நினைப்பதுண்டு ஆனால் உண்மை காரணம் அதுவல்ல அச்சிலைகளை 3 விதமாக வகைப்பிரிக்கலாம்.

1- இரண்டு கால்களையும் தூக்கிய படி நிற்கும் சிலைகளைப் பார்த்தால்… அந்த மன்னர் ஒரு போர் வீரனாக களத்தில இறந்திருக்கிறார் என்பதை குறிக்கிறது....

2- ஒற்றைக் காலை தூக்கிய படி நிற்கும் சிலைகளைப் பார்த்தால். அந்த மன்னர் இயற்கை மரணமடையவில்லை என்பதை குறிக்கிறது. சிலவேளை அந்த மன்னர் விழுப் புண் அடைந்து இறந்திருந்தால் கூட இப்படித்தான் கருதப்படும்.

3- நான்கு கால்களையும் தரையில் பதித்த படி நிற்கும் சிலைகளைப் பார்த்தால்… அந்த மன்னர் இயற்கை மரணமெய்து விட்டார் என்பதைக் குறிக்கும்

நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்

நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.

மந்திரம் என்ற சொல்லிற்கு உரிய இலக்கணங்கள் எல்லாம் அமைந்ததும், எல்லா மந்திரங்களுக்கும் முதன்மையானதும், தமிழன் கொண்ட இறைக் கொள்கை அனைத்தையும் உள்ளடக்கியதும் ஆகிய மந்திரம் ஐந்தெழுத்து ஆகும்.
நமசிவய எனும் ஐந்தெழுத்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருளைக் குறிக்கும். அதன் விவரம் வருமாறு:
ந – நடப்பு...
ம – மறைப்பு
சி – சிறப்பு
வ –வனப்பு
ய – யாப்பு

இதில்,

நடப்பு – உயிர் உலகில் பிறந்து உலகியல் நடப்பு வாழ்வதைக் குறிக்கும்.

மறைப்பு – அறியும் பொருளான உயிரை அறியாமையாகிய இருள் மறைப்பது குறிக்கப் படுகிறது.

சிறப்பு – எல்லோரும் ஒப்புக் கொள்கிற சிறப்பிற்கெல்லாம் சிறப்பான பரம்பொருளைக் குறிக்கும்.

வனப்பு – பேராற்றல் படைத்த பரம்பொருள் மிகச்சிறிய ஆற்றல் படைத்த உயிருடன் தொடர்பு கொள்ளுவது குறிக்கப்படுகிறது.

யாப்பு – அனுபவம் கொடுத்து உயிருக்கு அறிவை ஏற்றுவதற்காக அல்லது அறியாமையைத் தேய்ப்பதற்காக உயிர் ஓர் உடலில் கட்டப்படுவது குறிக்கப் படுகிறது. யாக்கப்படுவதால் யாப்பு.

பஞ்சாட்சரம் (ஐந்து அட்சரம்) எனும் வடமொழிச் சொல் நமது ஐந்தெழுத்து எனும் தமிழ்ச் சொல்லிற்கு ஒரு மொழி பெயர்ப்பே. அவ்வளவுதான். எப்படி ஆங்கிலத்தில் FIVE LETTERS என்று கூறுகிறோமோ அதைப் போல. அதற்கு எந்த இறைக் கொள்கையும் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் அவர்கள் சொல்லும் அடிப்படையே வேறு.

1. வடமொழியாளர்கள் சொல்வது நமஹ்சிவாய. இதில் ந-1, ம-2, ஹ்-3, சி-4, வா-5, ய-6 என்று ஆறு எழுத்துக்கள் உள்ளன. இதை எப்படி அவர்களால் பஞ்சாட்சரம் – அதாவது ஐந்து எழுத்து என்று சொல்ல முடியும்?

2. நமஹ்சிவாய எனும் வடமொழிச் சொல் சிவனுக்கு வணக்கம் என்று பொருளில்தான் சொல்லப்படுகிறது. நமது தமிழ் ஐந்தெழுத்து இதை சிவனுக்கு வணக்கம் என்ற பொருளில் சொல்லுவதில்லை. மேலும் ‘சிவனுக்கு வணக்கம்’ என்பது ஒரு வாக்கியமே தவிர ஐந்தெழுத்தாக (அதாவது பஞ்சாட்சரம் ஆக) முடியாது.

இந்த ஐந்தெழுத்து முதல் மந்திரம் பொதுவானது. எல்லாச் சமயங்களுக்கும் பொருந்துவது. இதைத் தமிழில் ஆக்கியிருப்பதால் தமிழ் மந்திரம் என்றும், இதனை உலகுக்கெல்லாம் பொதுவாக உருவாக்கிய பண்டைய தமிழர்களின் பெருமையையும் ஒருங்கே காணமுடிகிறது.

உங்கள் கைரேகை என்ன சொல்கிறது?

உங்கள் கைரேகை என்ன சொல்கிறது?

குழந்தை பாக்கியம் யாருக்கு எவ்வாறு அமையும் என்பதை கைரேகை கொண்டும் கணிக்கலாம். மேலே படத்தில் உள்ளது போன்று, சதைப்பற்றுடன் திகழும் செவ்வாய் மேடு சந்திரமேடு நோக்கி விரிவடைய... செவ்வாய் மேட்டில் ஆழமான வெட்டு ரேகை அமைந்து, திருமண ரேகை மிகவும் மெலிந்து, அதில் குழந்தை ரேகைகள் இல்லையெனில், அந்தப் பெண்ணுக்கு தைராய்டு சுரப்பி கோளாறு காரணமாக குழந்தைப் பிறப்பு தள்ளிப்போகும்.

* ராகு பகுதியில் அநேக குறுக்குக் கோடுகள் மற்றும் தொங்கு ரேகைகள் காணப்பட்டு, சந்திர மேடு கங்கண ரேகையை நோக்கி விரிந்து வீங்கியதுபோல் திகழ... திருமண ரேகை பலவீனமாகவும், ஆயுள் ரேகையிலும் தொங்கு ரேகை காணப்பட்டால், கடுமையான வயிற்று வலி இருக்கும். அதீத உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்றுவலி கருச் சிதைவுக்கும் காரணமாகிவிடும்....

இவர்கள் திருமண ரேகை வலுவாக உள்ள காலத்தை அறிந்து, உரிய சிகிச்சை பெறுவதுடன், ராகு-கேது பரிகார ஸதலங்களுக்குச் சென்று வழிபாடு செய்யலாம். அத்துடன், கருப்பை ஆரோக்கியத்துக்கு உளுந்து, கொள்ளு ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொண்டால், குழந்தை பாக்கியம் பெற இயலும்.

உயிரணு எண்ணிக்கைக் குறைவினாலும் குழந்தை பாக்கியம் தடைப்படும். இந்த நிலையைச் சுட்டிக்காட்டும் கைரேகை அமைப்பை அறிவோம்.

* குரு மேடு தட்டையாகவும் சுருங்கியும் திகழ, அந்த மேட்டில் குறுக்குக் கோடுகள் காணப்படும்.

* சுக்கிரமேடும் சந்திர மேடும் ஒடுங்கி, கங்கண ரேகை பாகத்தை நெருக்கி உப்பியதைப்போன்று காணப்படும்.

* இருதய ரேகை சனி மேட்டினை அடைந்து, திருமண ரேகை பலவீனமாகக் காணப்படும். இப்படியான ரேகை அமைப்புடைய ஆண்களுக்கு உயிரணு உற்பத்தியில் பாதிப்புகள் ஏற்படும். போதிய எண்ணிக்கையில் உயிரணுக்கள் இருக்காது. மேலும் உயிரணுக்கள் ஆரோக்கியக் குறைவுடனும் இருக்க வாய்ப்பு உண்டு.

இவர்கள், அனுதினமும் குரு காயத்ரீ மந்திரம் சொல்லி பிரார்த்திப்பதுடன், குரு பரிகார திருத்தலத்துக்குச் சென்று குருபகவானை வழிபடலாம். உயிரணுக்களின் உற்பத்தி எண்ணிக்கை அதிகரிப்பதற்குத் தேவையான இயற்கை உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

உணவால் உடலையும், வழிபாடுகளால் உள்ளத்தையும் ஆரோக்கியமாக்கிக் கொள்ள, பலமான திருமண ரேகை அமையும் வயதில் குழந்தை பாக்கியம் வாய்க்கும்.

முத்துகள் உருவாவது எப்படி?

முத்துகள் உருவாவது எப்படி?

இயற்கையின் அதிசயங்களுள் ஒன்று, முத்து. எங்கோ கடலடியில் விளையும் முத்து, அழகுப்பெண்களின் கழுத்தை அலங்கரிக்கிறது.

முத்து உருவாகும் விதம் தெரியுமா உங்களுக்கு?...

முத்துச்சிப்பி என்ற உயிரினத்திடம் இருந்து முத்து கிடைக்கிறது. அந்த உயிரினத்தில் இருந்து முத்து கிடைப்பது வியப்பூட்டும் விஷயம்.

கடல் நீரில் உள்ள கால்சியம் கார்பனேட் என்ற தாதுப் பொருளையும் மற்றும் சில அங்ககப் பொருட்களையும் சிப்பி உட்கொள்வதால் முத்து தோன்று வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிப்பியினுள் முத்து சென்றுவிட்டால் அதற்கு ஓர் உறுத்தல் ஏற்பட்டு, தன்னிடம் உள்ள நாக்கர் என்ற ஒருவிதத் திரவத்தை அதன் மீது சுரந்து மூடிவிடும்.

அதைத் தெரிந்துகொண்ட சீனர் கள், சிப்பி வாய் திறந்திருக்கும்போது அதனுள், ஈயத்தால் செய்த சிறு புத்தர்சிலையைப் புகுத்தினார்கள். சிறிது காலம் கழித்து சிப்பியைத் திறந்து பார்க்கும்போது, முத்துத் திரவத்தால் புத்தர் சிலை பொதியப்பட்டிருக்கும்.

ஜப்பானியர்கள், சிப்பியின் வாய் வழியாகச் சிறு தானியத்தை உள்ளே தள்ளிவிடுவார்கள். அவ்வாறு தள்ளப்பட்ட தானியத்தின் மீது நாக்கர் திரவம் படிந்து, நன்கு விளைந்த முத்தாக வெளியில் எடுக்கப்பட்டு, நல்ல விலைக்கு விற்பனையாகிறது.

இனி, உயர்ந்த முத்துகள் எப்படி உருவாகின்றன என்று பார்க்கலாம். கடலில் உள்ள சில புல்லுருவிகள் (தம்மால் நேரடியாக உணவுப்பொருட்களை உருவாக்க முடியாமல் சத்துக்காக பிற தாவர இனங்களைச் சார்ந்திருப்பவை), சிலநேரங்களில் சிப்பியின் வாய் வழியாக உள்ளே தவறிச் சென்று விடுகின்றன. அப்போது சிப்பியின் உட்பாகத்தில் ஓர் உறுத்தல் ஏற்பட்டு, நாக்கர் திரவத்தை அதன் மீது பொழியும். அவ்வாறு பொழியும்போது அந்தப் புல்லுருவி மடிந்துவிடும். அதன் மீது நாக்கர் திரவம் பல அடுக்குகளில் படிந்துவிட, அது விலை உயர்ந்த முத்தாக மாறிவிடுகிறது. இம்முறையிலேயே சிறு மணல் துகள் உள்ளே சென்றாலும் அது முத்தாகிவிடுகிறது. ஆனால் முந்தைய முறையில் உற்பத்தியாகும் முத்துதான் மிகுந்த விலை மதிப்பு உடையதாகும்.

தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன?

தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன?

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமியானது மாறிமாறி வெப்பமும் குளிர்ச்சியும் வருகின்ற பருவ நிலைகளைக் கொண்டது....

கோடைக்காலங்களில் குறிப்பாக மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அதிகமாக தாகம் எடுக்கின்றது. அதன் காரணமாக அதிகமான தண்ணீரைப் பருகுவோம். பொதுவாகவே நம் உடலானது பருவநிலைச் சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாது உடல் வெப்பநிலையை உடல் உள்உறுப்புகள் சீராகவே வைத்திருக்கின்றன. கோடைக்காலத்தில் அதிகப்படியான வெப்பம் நம் தோலின் மீது விழுகின்றபோது அதன் மூலமாக அதிகப்படியான நீர் வியர்வை மூலமாக வெளியேற்றப்படுகின்றன. உடம்பில் இருக்கும் நீரின் அளவு ஒரே மாதிரியாய் இருந்தால் நமக்கு தண்ணீரின் ஞாபகமே இருக்காது. நீரின் அளவு 2.5 சதவீதம் குறைந்தாலே போதும்.

அவ்வாறு குறைவு ஏற்படுகின்றபோது உடல் வெப்பநிலையைச் சீராக வைத்திருப்பதற்காக மூளை நரம்பு செல்களுக்குக் கொடுக்கும் உணர்வு (தகவல்) தான் ‘தாகம்’ ஆகும்.மூளையின் ஒரு பகுதி ஹைபோதாலமஸ் (Hypothalamus) மிகமிகச் சிறிய அளவிலான நியூரான்கள் அடங்கியிருக்கின்றன. இந்த நியூரான்களின் முக்கியப் பணி உடல் வெப்பநிலை, பசி மற்றும் தாகம் இவைகளைக் கவனிப்பதுதான். ஹைபோதாலமஸ் உள்ள நியூரான்கள் பிட்யூட்டரி சுரப்பி வழியாக நரம்புகளோடு இணைந்து இருக்கின்றன. உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படும்போது இந்த நியூரான்கள் மிக வேகமாக செயல்பட்டு நரம்பு உணர்வுகளைத் தெரிவிக்கின்றன. அந்த உணர்வைத்தான் ‘தாகம்’ என்கிறோம்.

தாகம் எடுக்கின்றபோது குளிர்ந்த நீர், குளிர்ந்த பானங்களைப் பருகக் கூடாது. காரணம், குளிர்ந்த பானங்களில் வேதிப்பொருட்கள் கலந்து இருப்பதால் உடலுக்கு நல்லதல்ல. அறை வெப்பநிலையில் (Room Temperature) நீரின் மூலக்கூறுகள் இயல்பான நிலையில் இருக்கும். ஆனால் இயல்பான நிலையில் இருக்கும் நீரை குளிர்விக்கின்றபோது நீரின் மூலக்கூறுகள் மிக நெருக்கம் அடைந்து தன்னுடைய ஆற்றலை வெளியேற்றிவிடுகின்றன. இப்படி ஆற்றல் குறைந்த குளிர்ச்சியான நீரை பருகுகின்றபோது உடல் உள்உறுப்புகள் தன் அதிகப்படியான ஆற்றலை செலவழித்து அந்தக் குளிர்ந்த நீரை இயல்பான நிலைக்குக் கொண்டுவர உடல் உள்ளுறுப்புகள் முயல்கின்றன. அவ்வாறு இயங்குகின்றபோது தாகம் எடுப்பது குறைந்துவிடும். இதனால் மனிதனின் உடல் வெப்பநிலை சீராக இல்லாமல் உடல் உபாதைகள் (சளி, ஜுரம்) ஆகியவை ஏற்படுகின்றன.
எனவே தாகம் எடுப்பது மனித உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. எப்பொழுதெல்லாம் தாகம் எடுக்கிறதோ தண்ணீரைப் பருகுங்கள். ஆரோக்கியமாக வாழ்வோம்.

சித்தர் பழமொழிகள்.

சித்தர் பழமொழிகள்.

1. பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்.
2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்.
3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்....
4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்.
5. புணர்ந்தன பிரியும்; பிரிந்தன புணரும்.
6. உவப்பன வெறுப்பாம்; வெறுப்பன உவப்பாம்

1.பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்

உலகம் என்பது நிலையில்லாதது. நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பது. அதில் வாழும் உயிர்களும் பரிணாம மாற்றத்திற்குட்பட்டு இறந்தும் பிறந்துமாய் உலகில் சம நிலையை உண்டாக்கிக்கொண்டு வரும். எந்த உயிருக்கும் நித்தியத்துவம் என்பது இல்லை. பிறக்கும் எல்லா உயிரும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும். இந்த நியதியிலிருந்து எந்த உயிரும் தப்ப முடியாது. சரி பிறந்தன இறந்துவிட்டால் அந்த உயிர் முறுப்புள்ளியாகிவிட்டதா என்றால் அதுதான் இல்லை. அப்படிப் பிறந்து இறந்த உயிர் தனது பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மறுபடியும் ஜனன மெடுக்கும். இதுதான் முதற் பழமொழியின் பொருள்.

2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்.

உலகின் எல்லா நிகழ்ச்சிகளும் தோற்றம் மறைவு உடையவை. காலையில் தோன்றும் ஆதவன் மாலையில் மறைகிறான். அப்படியானால் மறையும் சூரியன் மறு நாள் உதயமாகும். இஃது சூரிய சந்திரர்களுக்கு மட்டுமல்ல , எல்லா உலக இயக்கங்களுக்கும் பொருந்தும்.

3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்.

சந்திரோதயம் பூரண நிலவவாய் காணப்பட்டாலும் அடுத்த நாள் முதற்கொண்டு தேய்பிறையாய்ச் சிறுத்துக் கொண்டே வந்து முடிவில் அமாவாசையாக ஒன்றுமில்லாமல் காட்சிதரும். அந்த அமாவாசை நிலவு பிறகு சிறிது சிறிதாக வளர்ந்து வளர் பிறை பூரணச் சந்திரனாக காட்சியளிகும். நிலவு தேய்வதும் வளர்வதும் இயற்கை நிகழ்வுகள்.

4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்

மனிதனுக்கு மட்டும் மறக்கும் ஆற்றல் இல்லலாதிருப்பின் அவன் இந்நேரம் பைத்தியம் பிடித்ததல்லவா அலைந்திருப்பான். எத்தனை சம்பவங்களைத் தான் அவன் நினைவு கொண்டிருப்பது. சிறு வயது சம்பவங்கள் வயது ஆக ஆகச் சிறுகச் சிறுக மறந்துகொண்டே வர சில முக்கிய சம்பவங்கள் மட்டுமே கல்லின் மேல் எழுத்தாக நிலைத்து நிற்கின்றன. உணர்ந்தவை எல்லாம் வயதாக வயதாக மறந்து கொண்டே வரும். அப்படி மறந்த சம்பவங்கள் சில எதிர்பாரத நிலையில் திடீரென்று நினைவுக்கு வருதலும் உண்டு.

5. புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்

ஒரு தந்தையும் தாயும் புணர்ந்து ஒரு குழந்தை உருவாகிறது. அந்த தந்தை தாயிடம் இருந்து பிரிந்து சென்ற குழந்தையும் வயதானபின் புணர ஆரம்பிக்கும். இது ஒரு வட்டச் சுழற்சி.

6. உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பபாம் விரும்பிப் போனால் விலகிப் போகும்.

விலகிப் போனால் விரும்பி வரும் என்ற முது மொழி இப்படி உருமாறி நிற்கின்றது. பட்டினத்தார் இந்த ஆறு பழமொழிகளையும் கோயில் திருவகவலில் மனதிற்கு உபதேசமாகச் சொல்கிறார். மனம் உணருமா?

பெரும் ஏழை


பெரும் ஏழை
-------------------
ஒரு ஏழை ஒருவன் துறவியைப் பார்க்கச் சென்றான்.
அவரைப் பார்த்து,
"
குருவே! நான் பெரும் ஏழை....
என்னிடம் என் உயிரைத் தவிர வேறு எந்த சொத்தும் இல்லை.
நான் ஒரு நல்ல வசதியுடன் வாழ வழி சொல்லுங்கள்" என்று கேட்டான்.
அதற்கு குரு அவனிடம்,
"
நான் 5000 தருகிறேன், உன் கைகளை
என்னிடம் வெட்டிக் கொடு" என்று சொன்னார்.
அவன் என்னால் 5000 ரூபாய்க்காக என் கைகளை இழக்க முடியாது என்று கூறினான்.
"
சரி, நான் உனக்கு 15,000 ரூபாய் தருகிறேன்,
உன் கால்களை கொடு" என்றார்.
அதற்கும் அவன் ஒப்புக் கொள்ளவில்லை.
"
வேண்டுமென்றால் 50,000 ரூபாய் தருகிறேன்,
உன் கண்களையாவது கொடு" என்று கேட்டார்.
அதற்கும் அவன் முடியாது என்றான்.
உனக்கு இருபது லட்சம் வேண்டுமென்றாலும் தருகிறேன்,
உன் உயிரைக் கொடு என்றார்.
அதற்கு அந்த ஏழை, என்னால் நிச்சயம் நீங்கள்
சொல்வதை செய்ய முடியாது என்று கூறினான்.
அதைக் கேட்ட அந்த குரு அவனிடம்,
"
உன்னிடம் உன் உயிரைத் தவிர வேறு எந்த சொத்தும்
இல்லை, மேலும் எவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்தாலும் கொடுக்க விரும்பாத விலை மதிப்பற்ற உயிரை கொண்டுள்ள நீ எவ்வாறு ஏழை ஆக முடியும். ஆகவே உழைத்து வாழ்க்கையில் முன்னேறு" என்று கூறினார்.
விலைமதிப்பில்லாத நம் தன்னம்பிக்கை ஒன்று போதும் வாழ்வை ஜெயிக்க...

 

முன் ஜென்மம் அல்லது மறுபிறவி உண்டா? இல்லையா?

முன் ஜென்மம் அல்லது மறுபிறவி உண்டா? இல்லையா?

ஆன்மிக நோக்கிலும், அறிவியல் நோக்கிலும் கடந்த ஜென்மம் உண்டா? இல்லையா? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். ராமாயணம், மகா பாரதம் போன்ற புராணங்கள் மறுபிறப்பைப் பற்றிக் என்ன கூறுகிறது? விஞ்ஞானிகள், சிந்தனையாளர்கள், பெரியோர்கள் என்ன கூறுகிறார்கள் என்பது பற்றி தெரிந்து கொள்வோம். ராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிகாசங்கள் புனர்ஜென்மங்களைப் பற்றிக் கூறும் நூற்றுக்கணக்கான சம்பவங்கள் மிகவும் சுவையானவை. பெரிய ஆராய்ச்சிக்கு உரியவை. பதினெட்டு புராணங்கள் தரும் மறுபிறப்பு சம்பவங்களில் நிறைய உண்மைகளை உணரலாம்.

சீதையின் முன் ஜென்மம்!

முதலில் ராமாயணத்தில் முக்கியமான சம்பவத்தைப் பார்க்கலாம்! சுந்தரகாண்டத்தில் அசோகவனத்தில் துன்பப்படும் சீதை, முன் ஜன்மாந்தரத்தில் எப்படிப்பட்ட பாபம் என்னால் செய்யப்பட்டதோ! ஆகவேதான் கொடுமை கொண்டு மிக வருத்துகின்ற இந்தத் துயரம் என்னால் அனுபவிக்கப்படுகிறது (கீத்ருஸம் து மயா பாபம் புராஜன்மாந்தரே க்ருதம் / யேநேதம் ப்ராப்யதே துக்கம் மயாகோரம் ஸுதாருணம் / 26ம் அத்தியாயம் 18ம் சுலோகம்) என்று கூறுவது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்! சீதைக்கு ஏது முன் ஜென்மம் என்று ஆச்சரியப்படும்போதே, யுத்த காண்டத்தில் மீண்டும் ஒரு குட்டி சம்பவத்தைப் பார்க்கிறோம்.

ராவணன் வதம் செய்யப்பட்ட நிலையில் ஹனுமன், சீதையைக் கொடுமைப்படுத்திய ராக்ஷஸிகளைக் கொல்வதற்கு சீதையிடம் அனுமதி கேட்கிறான். நன்கு யோசித்து விட்டு சீதை கூறுகிறாள்.

அவர்கள் வெறும் ஊழியர்கள்தான் ! அவர்கள் மீது ஏன் கோபப்படுகிறாய்! நான் அடைந்த துன்பங்கள் அனைத்தும் எனது முன் ஜென்மங்களில் செய்த செயல்களின் விளைவுதான் என்று திட்டவட்டமாக கூறுகிறாள்.

(யுத்தகாண்டம் 113ம் அத்தியாயம், 39ம் சுலோகம்) சீதையின் முன் ஜென்மக் கதை சுருக்கமாக இதுதான். ஒருமுறை ராவணன் பூமியைச் சுற்றி வரும்போது இமயமலைக் காட்டுப் பகுதியில் தவம் புரியும் ஒரு மாபெரும் அழகியைப் பார்க்கிறான்.

காம வசப்பட்ட ராவணன் இளமை பொங்கி வழியும் அழகியிடம் தவத்தை விட்டு விட்டுத் தன்னை மணம் புரிய வேண்டுகிறான். அந்த அழகியோ, பிருஹஸ்பதியின் புத்திரரான பிரம்ம ரிஷி குஸத்வஜரின் புதல்வி தான் என்றும், வேதங்களின் பிறப்பாகத் தான் பிறந்ததாகவும், தன்னை அடையத் தக்கவர் விஷ்ணு ஒருவரே என்று தன் தந்தை கருதியதாகவும், இதைக் கேட்டுக் கோபம் கொண்ட தைத்ய அரசன் சம்பு இரவில் தூங்கிக் கொண்டிருந்த தந்தையைக் கொன்றதாகவும், இதனால் துக்கப்பட்டுத் தனது தாயார் அவருடன் சிதை ஏறியதாகவும், அதன் பின்னர் தந்தையின் ஆசையை நிறைவேற்ற நாராயணரை நோக்கித் தவம் புரிவதாகவும் கூறினாள்.

யார் அந்த விஷ்ணு? என்று ஏளனமாகக் கூறியவாறே வேதவதியின் கூந்தலைப் பிடித்து ராவணன் தூக்கவே வேதவதி தன் கையைத் தூக்கினாள். அது வாளாக மாற தன் கூந்தலை அறுத்துக் கொண்டு தீயை மூட்டி, நான் இனியும் உயிர் வாழ ஆசைப்படவில்லை; பெண்ணான என்னால் உன்னைக் கொல்ல முடியாது; நான் சாபமிட்டாலோ என் தவத்தை இழக்க வேண்டியிருக்கும்.

ஆகவே, அக்னியில் புகுந்து என் தவ வலிமையால் அயோனிஜையாக (கர்ப்பத்தில் பிறக்காதவளாக) மீண்டும் வருவேன் என்று கூறி அக்னியில் புகுந்தாள். பின்னர் மீண்டும் ஒரு தாமரை மலரிலிருந்து தோன்றினாள்.

அவளை மீண்டும் பிடித்த ராவணன் தன் அரண்மனைக்குக் கொண்டு வந்து தனது மந்திரியிடம் காண்பித்தான். அவளது சாமுத்ரிகா லட்சணத்தைக் கூர்ந்து கவனித்த மந்திரி, இவள் இங்கு இருந்தால் உன் அழிவுக்குக் காரணமாவாள் என்று கூறினார்.

இதனால் ராவணன் அவளை கடலில் தூக்கி எறிந்தான். கரையை நோக்கி வந்த அவள் ஒரு யாகபூமியை அடைந்தாள். அங்கு ஜனக மஹாராஜன் உழும்போது பூமியிலிருந்து அவள் வெளிப்பட்டாள்.

உழு சாலிலிருந்து (சீதை) வெளி வந்ததால் சீதை என்ற நாமகரணத்துடன் வளர்ந்தாள். ராமனை மணம் புரிந்தாள். கிருத யுகத்தில் வேதவதியாய் இருந்து த்ரேதா யுகத்தில் சீதையாக வெளிப்பட்ட சீதையின் முற்பிறப்பு ரகசியம் பற்றிய கதையின் சுருக்கம் இது தான்!உத்தரகாண்டம் தரும் முன்பிறப்பு இரகசியங்கள்!சாதாரணமாக ராம பட்டாபிஷேகத்துடன் சுபம் என்று நாம் ராமாயணத்தை முடித்து விடுவதால் உத்தர காண்டத்தில் உள்ள அரிய ரகசியங்களை நாம் தெரிந்து கொள்ள முடியாமல் போய் விடுகிறது.

வால்மீகி அரிய முன்பிறப்பு ரகசியங்களையும், ராமாயணத்திற்கு ஆதாரமாக விளங்கும் பல ரகசியங்களையும் (பிருகு முனிவர் விஷ்ணுவை பூமியில் மானிடனாக அவதரிக்க சாபம் தந்ததால் அவர் ராமனாக அவதரித்தது உள்ளிட்டவற்றை) உத்தர காண்டத்திலேயே விளக்குகிறார்.

சீதையின் முற்பிறவியைப் போலவே ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் உள்ளிட்ட ராமாயண கதாபாத்திரங்களின் முற்பிறவி பற்றிய சம்பவங்கள் சுவையானவை. படித்து அறிந்து கொள்ள வேண்டியவை.

இந்து மதத்தின் அடிநாதமான உண்மை மறுபிறப்பு!

செமிடிக் மதங்கள் என்று கூறப்படும் யூத மதம், கிறிஸ்துவம், இஸ்லாமியம் ஆகியவற்றிற்கும் இந்து மதத்திற்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகளில் முக்கியமான ஒன்று புனர்ஜென்மம். மனிதப் பிறவியில் ஒருவர் ஆற்றும் நல்வினை, தீவினைக்கேற்ப அடுத்த பிறவி அமைகிறது.
அனைத்து மானுடரும் படிப்படியாக முன்னேறி முக்தி அடையலாம்; அடைவர் என்பது இந்து மதம் கூறும் உண்மை. மாறாக செமிடிக் மதங்கள் ஒரே ஒரு பிறவிதான் ஒருவருக்கு உண்டு. அவர் இறந்தவுடன் தீர்ப்பு நாள் வரும் வரை காத்திருந்து தீர்ப்பிற்கேற்ப சுவர்க்கத்தையோ அல்லது நரகத்தையோ அடைய வேண்டும் என்று கூறுகின்றன.

தர்க்கரீதியாக சிந்தித்துப் பார்த்தால் ஒரே ஒரு பிறவிதான் ஒருவருக்கு உண்டு என்றால் ஒருவர் நீண்ட ஆயுளுடன் இருக்க, பிறந்த குழந்தை ஒன்று ஏன் மரிக்க வேண்டும்? ஒருவர் ஏன் செல்வந்தராகவும், இன்னொருவர் ஏழையாகவும் இருக்க வேண்டும்? என்பன போன்ற ஏராளமான கேள்விகள் எழுந்து விடை காண முடியாமல் தவிக்க வேண்டியிருக்கிறது.

மறுபிறப்பில் நம்பிக்கை கொண்ட மாமனிதர்கள்!

பிளேட்டோ, பித்த கோரஸ், லியனார்டோ டா வின்ஸி, பெஞ்சமின் ஃப்ராங்க்ளின், எமர்ஸன், ஷெல்லி, மாஜினி, தோரோ, ஹென்றி ஃ போர்டு, சி.ஜே.ஜங், உள்ளிட்ட ஏராளமான அறிஞர்கள் இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கையான மறுபிறப்பில் நம்பிக்கை உடையவர்கள்! அன்னி பெஸண்ட் அம்மையார் இது பற்றித் தீவிரமாக ஆராய்ந்து ரீ இன்கார்னேஷன் என ஒரு அரிய புத்தகத்தையே எழுதி இந்தத் தத்துவத்தை விளக்கியுள்ளார்.

விஞ்ஞானியின் ஆராய்ச்சி!

வர்ஜீனியா மாநில பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானியான ஐயான் ஸ்டீவன்ஸன் 1040 புனர் ஜென்ம கேஸ்களை ஆராய்ந்து இது உண்மைதான் என ஆய்வு முடிவில் கூறியுள்ளார்! மிகவும் பிரபலமான எட்கர் கேஸ் 2000 பேரின் பூர்வஜென்மத்தைக் கூறி அவை சரி பார்க்கப்பட்டு அனைவரையும் பிரமிப்பின் உச்சிக்கே ஏற்றியிருக்கிறது.

துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’


 
 
துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’


______________________________________
நட்புக்கரம் நீட்டி வரவைழத்த ஒளரங்கசீப், நயவஞ்சகமாகத் தன்னையும் தன் மகனையும் கைதுசெய்து சிறையில் அடைப்பான் என்று கொஞ்சமும் எதிர்பார்த்திராத மராட்டிய மாவீர‌ன் சிவாஜி, அடிபட்ட புலி போல ஆக்ரா சிறையில் உறுமிக்கொண்டு இருந்தார்.

சிவாஜி : மகனே‘‘ஒவ்வொரு வியாழனும் ஏராளமான பழங்கள் வைத்து பூஜித்து,அதைத் தானம் செய்வது வழக்கம் என்று சிறை அதிகாரிகளிடம் சொல்லி, அதற்கான ஏற்பாடுகளைச் செய்’’

மகன்(சம்பாஜி ):‘‘தந்தையே! நாம் பெரும் ஆபத்தில் இருக்கிறோம். இப்போது எதற்காக பூஜை?’’

சிவாஜி: ‘‘மகனே! நீ அச்சத்தின் பிடியில் அகப்பட்டுவிட்டாய் என நினைக்கிறேன். அச்சப்பட்டவர்கள் வெற்றி பெற்றதாகச் சரித்திரம் கிடையாது. நான் இங்கிருந்து தப்பிக்கத்தான் வழி சொல்கிறேன்’’

மகன் (சம்பாஜி ): ‘‘முகலாயர்களிடம் இருந்து தப்புவதா… அது முடியுமா? (சந்தேக‌த்துடன்)’’

சிவாஜி : ‘‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’’ (உறுதியோடு) அதன்பின்,சிறைக்கு பழக்கூடைகள் வருவதும் போவதும் வழக்கமாயிற்று. அந்தக் கூடைக்குள் அமர்ந்துதான் சிவாஜியும் சம்பாஜியும் ஒருநாள் தப்பித்தார்கள்.

பூனேவுக்கு அருகே, 1630-ல் சிவானி கோட்டையில் பிறந்தார் சிவாஜி. தந்தை ஷாஜி, பூனே சுல்தானின் படைப்பிரிவில் மேஜராகப் பணியாற்றி வந்ததால், தாய் ஜீஜாபாய் மற்றும் தளபதி ஷாயாஜியின் மேற்பார்வையில் வளர்ந்தார் சிவாஜி.

சிறு வயதிலேயே குதிரை ஏற்றம், வாட்ப்போர், வில் வித்தை, குஸ்தி போன்ற வீர‌ தீர விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டினார். இந்துக்களை அடக்கி ஆண்ட முகலாய ஆட்சியின் மீது அவருக்கு இயல்பாகேவ வெறுப்பு இருந்தது. தாய் ஜஜீ போய் சொன்ன வீர‌க்கதைகளும், சுவாமி ராமதாசரின் ஆசீர்வாதமும், இந்து சாம்ராஜ்யம் நிறுவ சிவாஜிக்கு ஆர்வமும் ஊக்கமும் தந்தன.

‘‘மாபெரும் படை கொண்ட முகாலையர்களை என்னால் வெல்ல முடியுமா?’’ என்று சிவாஜி கேட்டேபாது, அவரது தாயும், சுவாமி ராமதாசரும் ஒரு சேரச் சொன்ன பதில். ‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’.

பூனாவுக்கு அருகே மலைகளில் வசித்து வந்த ‘மாவலி’ மக்களிடமிருந்து இளைஞர்கைளத் திரட்டி, ‘கொரில்லா’ படை அமைத்தார் சிவாஜி. முகலாயர்களின் பிடியில் இருந்த ரோஹிதேசுவரர் ஆலயத்தையும், தேரான் கோட்டையையும் கைப்பற்றினார்.

சிவாஜியின் இந்த வெற்றி, இந்துக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தவே , ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவரது படையில் இணைந்தார்கள். அதன்பின் குபா கோட்டை, இந்திரபுரி, ஜாவ்லி என கிட்டத்தட்ட முந்நூறு கோட்டைகள் சிவாஜி வசமாயின. ஒவ்வொரு முறையும் போருக்குப் புறப்படும் முன், தனது படையினரிடம், ‘‘தோல்வியில்லை, தோல்வியில்லை… துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’’என்று உற்சாகக் குரல் கொடுப்பார் சிவாஜி.துணிந்து கிளம்பும் அந்தப் படை வெற்றி வாகை சூடி வரும்.

ஒருமுறை, சிவாஜியின் கோட்டை முன் பெரும் கடெலன முகலாயர் படை நின்றது. போரைத் தவிர்க்க விரும்பினால்,சிவாஜி நிராயுதபாணியாக தன்னிடம் பேச்சு வார்த்தை நடத்த வரேவண்டும் என அழைப்பு விடுத்தான் தளபதிஅப்சல்கான். தனிமையில் போக‌வண்டாம் என அனைவரும் தடுத்தபோதும்,‘‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’’ எனப் புன்னைகத்தவாறு பகைவனைத் தேடிப் புறப்பட்டார் சிவாஜி. ஆயுதமின்றித் தனிமையில் வந்த சிவாஜியைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தஅப்சல்கான், ‘‘உன்னிடம் சமாதானம் பேசவா இத்தனை படையுடன்வந்திருக்கிறேன்’’ என்றபடி சரேலென‌ தன்னுடைய வாளை உருவி, சிவாஜியின் மார்பில் செலுத்தினான். உள்ளே கவசம் அணிந்திருந்த சிவாஜி, கண் இமைக்கும் நேரத்தில் அப்சல் மீது பாய்ந்து, தன் கைகளில் மறைத்து வைத்திருந்த விஷம் தேய்த்த புலி நகங்களால் அவைனக் கீறிக் கொன்று போட்டார். தலைவன் இல்லாத படைகளைப் பந்தாடியது மராட்டிய சேனை. மாபெரும் வீர‌னாக, ‘சத்ரபதி’ என முடிசூடினார் சிவாஜி.

1680-ம் ஆண்டு மரணமைடயும் வரையில், சிவாஜியைத் தோல்வி என்பது நெருங்கவே இல்லை. காரணம், ‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’ என்கிற அவரது தாரக மந்திரம்தான்.
 

Tuesday, December 3, 2013

ஹோரைகள் தரும் பலன்கள்

 
ஹோரைகள் தரும் பலன்கள் -
 
 
 
-------------------------------------- சூரிய ஹோரை: ************** செய்யக்கூடியவை: -------------------------- இந்த ஹோரையில் நாம் அரசு தொட...ர்பான அதிகாரிகளை சந்திக்கலாம். வழக்கு சம்பந்தமாக பேசலாம் . தகப்பனாரின் உதவியை பெற அவரை நாடலாம் உயில்,சாசனங்களில் கையெழுத்திடலாம். பத்திரங்கள் பார்க்கலாம் சிவ தரிசனம் செய்யலாம் . ஹோரைகள் தரும் பலன்கள் செய்யகூடாதவை : --------------------------- சொந்த வீட்டிலோ,வாடகை வீட்டிலோ பால் காய்ச்சகூடாது புது வீட்டில் குடி ஏறக்கூடாது ஒப்பந்தகளில் கைஎழுத்திட கூடாது சந்திர ஹோரை ************** செய்யக்கூடியவை : --------------------------- புது வியாபாரம் தொடங்கலாம் . குறிப்பாக தண்ணீர் , பால்,அழுகும் பொருட்கள் வியாபாரம் விருத்தியாகும். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம் . வங்கியில் கணக்கு தொடங்கலாம். பெண் பார்க்கும் நிகழ்சிகளை ஏற்பாடு செய்யலாம்.அம்மன் சனிதனதிர்க்கு சென்று வழிபடலாம்.கண் சமந்தமாக மருத்துவரை சந்திக்கலாம்.கண் அறுவை சிகிச்சை நல்லபடியாக நடக்க அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யலாம்.தாயாரின் உதவியை பெற அவரை நாடலாம் செய்ய கூடாதவை: -------------------------- தேய் பிறையில் சந்திர ஹோரையை தவிர்க்க வேண்டும். சொத்து சமந்தமாக பேசகூடாது. செவ்வாய் ஹோரை ****************** செய்யக்கூடியவை : ----------------------------- சொத்துகள் வாங்குவது விற்பது பற்றி பேசலாம். வீடு தோட்டம் நிலத்தை போய்ப்பார்க்கலாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம்.சகோதரர்கள், பங்களிகளின் பிரச்சனைகளைப் பேசலாம், ரத்த தானம் செய்யலாம் . சகோதர உதவிகளை நாடலாம். முருகன் தலங்களுக்கு செல்லலாம் . கடனை அடைக்கலாம் . செய்ய கூடாதவை: -------------------------- கடன் வசூல் செய்ய போகக்கூடாது. குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் கூடாது. பெண் பார்க்கும் வைபவங்களை தவிர்க்கவேண்டும் . புதன் ஹோரை ************* செய்யக்கூடியவை : கல்வி சமந்தமாக எல்லா விஷயங்களயும் செய்யலாம். ஜாதகம் பார்க்கலாம்.கணக்கு வழக்குகள் பார்க்கலாம். வங்கியில் புது கணக்கு தொடங்கலாம். மாமன் வகை உறவுகளின் உதவியை நாடலாம்.வக்கீல்களை பார்க்கலாம் . கம்ப்யூட்டர் வாங்கலாம். கம்ப்யூட்டர் பயிற்சியில் சேரலாம்.நல்ல விஷயங்களுக்கு தூது போகலாம். பெருமாள் தலங்களுக்கு சென்று வணங்கலாம். செய்ய கூடாதவை: -------------------------- பெண்பார்க்கும் சம்பவம் கூடாது. வீடு,நிலம்பற்றி பேச கூடாது. சொத்துகளை பார்வையிடக்கூடாது. குரு ஹோரை ************* செய்யக்கூடியவை : --------------------------- சகல சுப காரியங்களுக்கும் ஏற்ற ஹோரை. பொன் நகைகள் வாங்கலாம். புது மணப் பெண்ணிற்கு மாங்கல்யம் வாங்கலாம் . வங்கியில் பிக்சட் டெபொசிட் செய்யலாம். குழந்தைகளை பள்ளியில் சேர்க்கலாம். முருகன் தெட்சிணா மூர்த்தி ஆகியோரை வணங்கலாம். பெண்கள் கணவரிடம் விரும்பியதை கேட்கலாம். கொடுக்கல் வாங்கல் வைத்து கொள்ளலாம். யாகங்கள் ஹோமங்கள் செய்வதற்க்கான பொருட்களை வாங்கலாம். செய்ய கூடாதவை: --------------------------- முதல் முதலில் சந்திக்கும் ஒருவருக்கு விருந்து வைக்க கூடாது. புது மன தம்பதிகளுக்கு விருந்து,உபசாரம் செய்யகூடாது. சுக்கிர ஹோரை ************** செய்யக்கூடியவை : --------------------------- பெண் பார்க்கும் சம்பர்தாயத்திற்குமிக சிறப்பான ஹோரையாகும். காதலை வெளிபடுத்தலாம். வெள்ளி பொருட்கள் வைர ஆபரணங்கள் வாங்கலாம்.விருந்து வைக்கலாம் வாகனம் ஏறலாம். வண்டி வாங்க பணம் கட்டலாம்.சொத்து விஷயங்களை பேசலாம்.கணவன் மனைவிஇடையே ஒருவருக்கொருவர் விஷயங்களை பகிர்ந்து பேசலாம்.பெண்களின் உதவியை நாடலாம்.பிரிந்த தம்பதியர்கள் ஒன்று சேரலாம்.அம்பாள் ஆண்டாள் தளங்களுக்கு சென்று வழிபடலாம். செய்ய கூடாதவை: --------------------------- நகை இரவல் கொடுக்க கூடாது . குடும்ப பிரச்சனைகளை பேசக் கூடாது.துக்கம் விசாரிக்ககூடாது. சனி ஹோரை ************ செய்யக்கூடியவை : -------------------------- சொத்து சமந்தமாக பேசலாம்.இரும்பு சாமான்கள்,பீரோ,வண்டி, ஆகியவை வாங்கலாம்.மரக்கன்றுகள் நடலாம்.நவகிரக பரிகார பூஜைகள் செய்யலாம்.வாங்கிய கடனை அடைக்கலாம். செய்யக்கூடியவை :பிரசித்தி பெற்ற தலங்களுக்கு செல்லலாம். செய்ய கூடாதவை: --------------------------- நோய்க்கு முதன் முதலாக மருந்து சாப்பிடகூடாது.மருத்துவரை சந்திக்க கூடாது. பிரயாணம் செல்ல கூடாது. வெளியூர் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்ய கூடாது. முதல் முதலாக பிறந்த குழந்தையை போய்ப்பார்க்க கூடாது . துக்கம் விசாரிக்க கூடாது. தவிர்க்க வேண்டிய நேரங்களை தவிர்ப்பதுடன் நல்ல ஹோரையில் நல்ல காரியங்களை செய்வதால்அவை நிலைத்து, நீடித்து நின்று பலன் தரும் ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் ஜாதகத்தில் தசா புத்தி சரியில்ல விட்டாலும் அவை நல்ல விதமாக கூடி வரும்
 
 
 
 
 

சபரிமலைக்கு முதன் முதலில் செல்லும் பக்தர்கள் செய்ய வேண்டிய பூஜை

சபரிமலைக்கு முதன் முதலில் செல்லும் பக்தர்கள் செய்ய வேண்டிய பூஜை

அய்யப்பனை அன்னதான பிரபு என்பார்கள். அய்யப்பன் கோவில் செல்லும் ஏழை பக்தர்கூட கஷ்டப்படுவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும். பணம்தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை. உடல் உழைப்பையும் கொடுக்கலாம். வசதி படைத்தவர்கள் நிச்சயமாக அன்னதானம் செய்ய வேண்டும். தானம் செய்வதற்கு முன் படுக்கை பூஜை அல்லது வெள்ளம்குடி பூஜை நடத்த வேண்டும்.

கன்னி அய்யப்பன்மார்கள் இந்த பூஜையை கட்டாயம் செய்ய வேண்டும். சபரிமலைக்கு இருமுடி கட்டு ஏந்தி புறப்படுவதற்கு முன் கார்த்திகை முதல் நாளிலிருந்து மார்கழி 11-ம் தேதிக்குள் ஏதேனும் ஒரு நாளில் இந்த பூஜையை நடத்த வேண்டும். வீட்டின் கிழக்குப்பாகத்தில் ஏழு கோல் சதுரத்தில் பந்தல் அமைக்க வேண்டும்....

பந்தலை அலங்கரித்து நடுவில் அலங்கார மண்டபம் அமைக்க வேண்டும். மண்டபத்தில், அய்யப்பன் படம் அல்லது சிலையை அமைக்க வேண்டும். மேலும் கணபதி, மாளிகைப்புறத்தம்மன், கருப்பசாமி, கடுத்தசுவாமி, வாபர்சுவாமி, ஆழி ஆகியவற்றை அமைக்க உரிய இடங்களை தேர்வு செய்ய வேண்டும்.

இந்த இடங்களில் சுவாமிகளுக்கு பதிலாக குத்துவிளக்கு ஏற்றி வைத்து அதன் முன்னர் அவல், பொரி, பழம் ஆகியவற்றை படைக்க வேண்டும். நடுப்பாகத்தில் அய்யப்பனை ஒரு பீடத்தின் மீது வைத்து பட்டு விரித்து அதன் முன்னால் இலை போட்டு, நெல்லும் அரிசியும் நிரப்பி வைக்க வேண்டும்.

கிழக்கு திசையை நோக்கி சுத்தம் செய்யப்பட்ட தேங்காயை வைக்க வேண்டும். அலங்கார மண்டபத்தின் கிழக்குப்பாகத்தில் ஆழி அமைப்பதற்கு இடம் ஒதுக்க வேண்டும். அதில் விறகுகளை அடுக்கி ஆழி வளர்க்க வேண்டும். பூவரசு அல்லது பலர் விறகுகளை ஆழியில் போட வேண்டும். அய்யப்பனுக்கு தீபாராதனை நடத்திய பிறகு ஆழியை ஏற்ற வேண்டும்.

அனைத்து அய்யப்பன் மார்களும் ஆழியை வலம் வர வேண்டும். பூஜை முடிந்த பிறகு அனைத்து பக்தர்களுக்கும் உணவு வழங்க வேண்டும். இதுதான் முறையான அய்யப்ப பூஜை ஆகும். கூட்டாகவும் இந்த பூஜை நடத்தலாம்.

விரத காலத்தில்... எளிமை, சுகாதாரம், புனித எண்ணங்கள் ஏற்படுதல் ஆகியவையே அய்யப்ப விரதத்தின் தத்துவம், உடலும், மனமும் சுத்தமாக இருக்க வேண்டும். பிரம்மச்சரியத்தை கடைபிடிக்க வேண்டும். கற்பூர தீபம் அய்யப்பனை கற்பூர தீபப்பிரியன் என்பர்.

சபரிமலை யாத்திரையின் போது அங்கு தங்கியிருக்கும் நாட்களில் மாலை நேரத்தில் கற்பூரம் ஏற்றி சரண கோஷம் ஒலித்து அய்யப்பனை வழிபட வேண்டும் என்பது கட்டாயமான விதிமுறையாகும். கற்பூர ஆழியில் ஐயப்பன்மார் கற்பூரத்தை இட்டு வழிபடுகிறார்கள்.

மனிதன் தெய்வமான கதை ராமனின் கதை.


 
தனி ஒரு மனிதனாக இருக்கும்போது ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக இருந்த ராமன், அரசனாக இருக்கும்போது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் இலக்கணமாக இருக்கிறான். அதனால்தான் அவன் உதாரண மனிதன். தெய்வம் மனிதனாக தோன்றி, மனிதன் தெய்வமான கதை ராமனின் கதை.

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று தந்தை சொன்ன சொல்லைக் காப்பாற்ற காடு புகும் மகன் ஒரு மகன் எப்படி தன் தந்தையிடம் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இலக்கணமாக இருக்கிறான்.

பரதனோ தன் சகோதரனிடம் நடந்து கொள்ளும் முறையில் ஒரு தம்பி எப்படி அண்ணனிடம் நடந்து கொள்ளவேண்டும் என்பதற்கு இலக்கணமாக இருக்கிறான். ...

ஒரு மனைவியிடம் ஒரு கணவன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இலக்கணமாக ராமன் தன் மனைவியிடம் நடந்து கொள்கிறான். ஒரு மனிதன் எல்லா மக்களையும் சகோதரர்களாக கருத வேண்டும் என்பதன் இலக்கணமாக ராமன், சுக்ரீவனையும், குகனையும் விபீடணனையும் சகோதரனாக வரிக்கிறான்.

ஆனால் அனைத்தையும் விட, ஒரு அரசனாக இருப்பவன் தன் சுக துக்கங்களையும் சொந்த விருப்பு வெறுப்புக்களையும் தாண்டி, மக்களுக்கு 'ஒழுக்கமான அரசுதான் ' நடைபெறுகிறது என்ற நம்பிக்கை இருக்க வேண்டும் என்பதன் உதாரணமாக ராமன் இருக்கிறான்.

போர் முடிந்ததும் ராமன் அரசனாகப் போகிறான். அரசனாக இருப்பவன் நீதி கொடுத்தால் மட்டும் போதாது, அது நீதிதான் வழங்கப்படுகிறது என்பதும் தெரியவேண்டும். ராமனுக்கு சீதை மீது சந்தேகம் ஏதும் இல்லை என்றாலும், அரசனாக இருப்பவன் தன் குடிமக்களுக்கு ஒழுக்கவானாகத் தெரியவேண்டும். அதுவே சீதைக்கு நேர்ந்த துயரம். அதுவே ராமனுக்கு ராஜபாரம்.

தன் மனையாள் மீது கொண்ட அன்பினால், அவள் மீது தனக்கு இருக்கும் கடமையால், ஒரு பெரும் பேரரசை அழித்து தன் மனைவியை மீட்ட ராமனுக்கு சீதை மீது என்ன சந்தேகம் ? ஆனால் அதுவரைதான் அவன் தனி மனிதன். அதற்குப் பின் அவன் எதிர்கால அரசன். அப்படி அன்புகொண்டிருந்த சீதையை அக்னி பிரவேசம் செய்யச் சொல்வதைப் போலவோ அல்லது காட்டுக்கு அனுப்புவதுபோல ஒரு துயரமோ ராமனுக்கு இருக்க முடியுமா ? செய்ய வேண்டியிருக்கிறது. அதுவே ராஜபாரம்...

தனி ஒரு மனிதனாக இருக்கும்போது ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக இருந்த ராமன், அரசனாக இருக்கும்போது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் இலக்கணமாக இருக்கிறான். அதனால்தான் அவன் உதாரண மனிதன்.....

ஆண்டாளுக்கு கிளி ஏன்?

ஆண்டாளுக்கு கிளி ஏன்?

கிளி சொன்னதைச் சொல்லும் தன்மையுடையது. ஆண்டாள், கண்ணனை மணக்க விரும்பிய தகவலை சொல்வதற்காக கிளியை தூது அனுப்பினாளாம். ஆகவே, ஆண்டாள் திருமணத்திற்கு உதவியதற்கு மரியாதை செய்யும் விதமாக கிளியை தன் இடக்கையில் வைத்திருக்கிறாள். வியாசரின் மகனாகிய, சுகப்பிரம்மரிஷியே ஆண்டாள் கையில் கிளியாக இருப்பதாகவும் சொல்வதுண்டு.

சந்தோஷத்திற்கு என்ன வழி.

சந்தோஷத்திற்கு என்ன வழி.

வெற்றியை தேட எவ்வளவோ வழிகள் இருக்கிறது ஆனால் சந்தோஷத்தை தேட என்னதான் வழி? அது வெளியில் எங்கும் இல்லை வெளியில் தேடினாலும் கிடைக்காது. அது நமக்குள்தான் இருக்கிறது நமக்குள் இருந்துதான் அது மலர வேண்டும். நம் வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக்கொள்ள ஏதேனும் வழிகள் உண்டா? ஆம் இதற்காகவேண்டியே ஒரு புத்தகம் இருக்கிறது, நாமாக சந்தோஷத்தை ஏற்படுத்திக்கொள்வது எப்படி என்பதை மிக அழகாக விபரிக்கிறது The way to happiness என்ற புத்தகம். 21 வழிமுறைகளை சொல்லி அவைதான் சந்தோஷத்தின் அடிப்படை வழிகள்,அவற்றை பின்பற்றினால் சந்தோஷம் நிச்சயம் என்கிறது.
இப்புத்தகம் 1980 ம் ஆண்டு Ron Hubbard என்பவரால எழுதப்பட்டது இது உலகம் முழுக்க 70 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது ( இது கிண்ணஸ் சாதனையும் கூட) அப்படி அந்த புத்தகம் கூறும் 21 வழிமுறைகள் என்னவென்று சுருக்கமாக பார்ப்போம்
...
1. எப்போதும் உங்கள் உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள், சுகாதாரமாக உடல் நலத்தை பேனிக்கொள்ளுங்கள். நேரத்துக்கு உணவு,தூக்கம்

2. மனதை கட்டுப்படுத்த பழகுங்கள், உடனடி சந்தோஷத்தை மட்டும் பார்க்காதீர்கள் பின் விளைவுகளை சிந்தியுங்கள்

3. உங்கள் மனைவிக்கு அல்லது உறவுகளுக்கு, நண்பர்களுக்கு விசுவாசமாகயிருங்கள்

4. கொஞ்சமாவது குழந்தைகளோடு நேரத்தை செலவிடுங்கள். உங்கள் வயசு எதுவானாலும் சரி

5. பெற்றோரை மதியுங்கள் அவர்களுக்குரிய உதவிகளை செய்யுங்கள்.
6. மற்றவர்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் ஓர் நல்ல முன்னுதாரணமாய் விளங்குங்கள்.

7. உண்மையே பேசுங்கள், அது எவ்வளவு கசப்பானாலும் பரவாயில்லை
8. யாரையும் கொல்லவோ காயப்படுத்தவோ செய்யாதீர்கள், வார்த்தைகளால்கூட!

9. சட்டவிரோதமான எதையும் செய்யாதீர்கள், அதனால் எந்த இலாபம் வந்தாலும் சரி!

10. சமூகத்திற்கு அரசாங்கத்திற்கு நல்ல விடயங்களை செய்யுங்கள், அல்லது முயற்சியாவது எடுங்கள்.

11. ஒரு செய்யும் நல்ல விடயங்களை தட்டிக்கொடுங்கள் கெடுத்துவிடாதீர்கள்
12. உங்கள் சுற்றுச்சூழலை அழகாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருங்கள்.
13. அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாதீர்கள்,திருடாதீர்கள்!

14. எல்லோருடைய நம்பிக்கைக்கும் உரியவராகயிருங்கள்.
15. ஒப்பந்தங்களை மீறாதீர்கள்,கொடுத்த வாக்கை நிறைவேற்றுங்கள்.
16. சோம்பேறியாக சும்ம இருக்காதீர்கள்,ஏதாவது வேலை செய்யுங்கள்

17. கல்வி என்பது முடிவில்லாதது எப்போதும் கற்றுக்கொண்டேயிருங்கள்.
18. மற்றவர்களின் மத உணர்வுகளை மதியுங்கள் கேலி செய்யாதீர்கள்.
19. மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்யக்கூடாது என்று
நினைக்கிறீர்களோ, அதை நீங்களும் அவர்களுக்கு செய்யதீர்கள்

20. அதேபோன்று, அவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதேபோல் அவர்களையும் நடத்துங்கள்.

21. இந்த உலகம் வளங்களால் நிறைந்தது எதுவுமில்லையென்று கவலைப்படாதீர்கள்