Monday, November 2, 2015

கந்த சஷ்டிவிரதம்



கந்த சஷ்டிவிரதம், தீபாவளி அமாவாசை முடிந்து முதல் நாள் துவங்கி ஆறு நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆறாம் நாள் சூரனுக்கு அருளல். கருணை கூர் முகங்கள் ஆறும், கரங்கள் பன்னிரண்டும் கொண்டே ஒரு திரு முருகன் வந்து ஆங்கு, உதித்தனன் உலகம் உய்ய!கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை சைவ சமயத்தவர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். இந்த ஆறு நாளையும் சைவர்கள் விரத நாட்களாக அநுட்டிக்கின்றனர்.
செல்வங்கள், சுகபோகங்கள், நற்புத்திரப்பேறு என்பவற்றை முன்னிட்டு முருகனை குலதெய்வமாகவோ, இஷ்ட தெய்வமாகவோ வழிபடுவோரும் பிறரும் இந்த விரதத்தை அனுஷ்டிப்பர். இந்த ஆறு நாட்களும் சைவர்கள் விரதமிருந்து அதிகாலையில் எழுந்து நீராடி பூரண கும்பம் வைத்து விளக்கேற்றி பூசை வழிபாடு செய்வர்.


அகரமும் ஆகி அதிபனும் ஆகி அதிகமும் ஆகி அகமாகி
அயன் எனவாகி அரி எனவாகி அரன் எனவாகி அவர் மேலாய்
இகரமும் ஆகி எவைகளும் ஆகி இனிமையும் ஆகி வருவோனே
இருநிலம் மீதில் எளியனும் வாழ எனது முன் ஓடி வர வேணும்
மகபதியாகி மருவும் வலாரி மகிழ் களி கூரும் வடிவோனே
வனமுறை வேடன் அருளிய பூஜை மகிழ் கதிர்காமம் உடையோனே
சககெனசேகு தகுதிமித்தோதி திமியென ஆடும் மயிலோனே
திருமலிவான பழமுதிர்சோலை மலை மிசை மேவு பெருமாளே.



தீவிர முருக பக்தர்கள் இவ்விரதத்தை ஒரு கடுந் தவமாகக் கருதி, ஆறு தினங்களும் உபவாசம் இருத்தல் வழக்கம். அமாவாசைத் தினத்தில் ஒரு வேளை உணவு உண்பர்.
இவ்விரத முறைமையை அனுசரிக்க இயலாதவர்கள் ஐந்து தினங்கள் ஒரு வேளை பால், பழம் மட்டும் அருந்தி, ஆறாம் நாள் உபவாசம் இருத்தலும் நடைமுறையாக உள்ளது. ஏழாம் நாள் பாரணை அருந்தி விரதத்தை நிறைவேற்றுவர்.

தொடக்க தினத்தில் ஆலயத்தில் தர்ப்பையணிந்து ‘காப்புக்கட்டல் அதாவது சங்கற்பம் செய்தல் வழக்கம்.


பக்தர்கள் ஆறு தினங்களும் முருகன் ஆலயத்தில் இறைவழிபாடு, புராணபாடனம், போன்ற புனிதச் செயல்களில் ஈடுபடுவர்.இறுதி நாளில் காப்பை அவிழ்த்து, தட்சணையுடன் அர்ச்சகரிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஏழாம் நாள் அதிகாலை நீராடி அனுஷ்டானங்களை நிறைவேற்றி, பாரணைப் பூஜை முடிந்ததும் மகேஸ்வர பூசை செய்து விரதத்தைப் பூர்த்தி செய்யலாம்.



மனிதர்களின் உட்பகையாக உள்ள காமம், வெகுளி, ஈயாமை (உலோபம்), மயக்கம், செருக்கு, பொறாமை ஆகிய அசுரப் பண்புகளை அழித்து, அவர்கள் தெய்வீக நிலையில் பெருவாழ்வு வாழ அருள் பாலிக்கும் இறைவன் ஆற்றலின் பெருமை கந்த சஷ்டி உணர்த்தும் மெய்ப்பொருள் ஆகும்.
முருகப் பெருமான் சூரசங்காரம் செய்து தேவர்களைக் காத்த அருட் செயலைக் குறிக்கும் இவ்விழாவின் ஆறாம் நாள் முருகன் ஆலயங்களில் ‘சூரன் போர்’ என்னும் சமய நிகழ்வு நாடக பாணியில் நடைபெறுவது வழக்கம்.
சூர சம்காரத்தின் முடிவில் முருகன் மா மரமாக நின்ற சூரனை தன் சக்தியாகிய வேலினால் பிளந்தார். பிளவுபட்ட மாமரம் சேவலும் மயிலுமாக மாறவும், சேவலை கொடியாகவும் மயிலை வாகனமாகவும் முருகன் ஏற்றுக்கொண்டார். இது கந்தபுராணத்தில் சொல்லப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகும்.
கந்தபுராணத்தில் வரும் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோர் முறையே சைவ சித்தாந்தத்தில் பேசப்படும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகின்றது. ஆன்மாவைத் துன்புறுத்தும் மலங்களின் கெடுபிடியில் இருந்து ஆன்மாவுக்கு விடுதலை அளிப்பதோடு ஆணவமலத்தின் பலத்தைக் குறைத்து அதனைத் தன் காலடியில் இறைவன் வைத்திருப்பதை உணர்த்துவதே சூர சம்காரமாகும்.
ஆறுபடை வீடுகளிலும், அனைத்து முருகன் கோயில்களிலும் இந்த ஆறு நாட்களிலும் சிறப்பான பூஜைகள் நடைபெறும்.ஆறு நாட்கள் தொடர்ந்து விரதம் இருப்பவர்களும், இருக்க முடியாமல் போனவர்களும் கூட மாதந்தோறும் வரும் சுக்கில பட்சத்துச் சஷ்டியில் முருகப் பெருமானை வழிபட்டு விரதம் மேற்கொள்ளலாம்.


பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்
கந்தா முருகா வருவாய் அருள்வாய்............முருகா!


மும்மலங்களை அழித்த முருகப்பெருமானின் விரதம்.
கந்தப் பெருமான் சூரனைச் சங்கரித்த பெருமையைக் கொண்டாடுவதே ஸ்கந்த சஷ்டி விரதவிழாவாகும். முருகன் கோயில் கொண்டுள்ள எல்லா ஆலயங்களிலுமே ஸ்கந்தசஷ்டி விரதம்மிகச் சிறப்பாக ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஐப்பசி மாதத்தில் வரும்வளர்பிறை சஷ்டி அன்றுதான் முருகப் பெருமான் சூரபத்மனை அழித் த நாள்.



கந்த விரத மகிமை

முழு முதற் கடவுளாக கலியுகக்கந்தப் பெருமான் போற்றப்படுகின்றார். மனித மனம்விரதத்தின் போது தனித்து விழித்து பசித்து, இருந்து ஆறு வகை அசுத்தங்களையும் அகற்றித் தூய்மையை அடைகின்றது. தூய உள்ளம், களங்கமற்ற அன்பு, கனிவான உறவுஎன்பவற்றிற்கு அத்திவாரமாக *கந்தசஷ்டி* விரதம் அமைகிறது.கொடுங்கோலாட்சி செலுத்திய ஆணவத்தின் வடிவமாகிய சூரனையும், கன்மத்தின் வடிவமாகிய சிங்கனையும், மாயா மலத்தின் வடிவமாகிய தாரகனையும், அசுர சக்திகளையெல்லாம் கலியுக வரதனான பெருமான் அழித்து, நீங்காத சக்தியை நிலை நாட்டிய உன்னத நாளே கந்த சஷ்டியாகும்.




கந்தசஷ்டி விரதம் கடை அனுஷ்டிக்கும் முறை



ஐப்பசித் திங்கள் சதுர்த்தசித் திதியில் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை ஆறு நாட்களும் கந்தப் பெருமானை நினைத்து வழிபட்டு விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.உபவாசம் இருப்பது மிக நல்லது எனக் கருதப்படுகின்றது. மிளகுகளை விழுங்கி, பழம் மட்டும் சாப்பிட்டு, தீர்த்தம் குடித்து இளநீர் குடித்து ஒரு நேர உணவு மட்டும்உண்டு அவரவர் தேக நிலைக்கேற்ப *கந்தசஷ்டி* விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும். விரதம் ஆரம்பமான தினத்தில் ஆலயம் சென்று சங்கர்ப்பம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்குவார்கள் முருகனுடைய விரதங்களுள் கந்த சஷ்டி விரதம், கார்த்திகை விரதம்,வெள்ளிக்கிழமை விரதம் ஆகிய மூன்றும் பிரதானமானவையாகும். கந்த சஷ்டி விரதம்தொடர்ந்து ஆறு வருடங்களும், கார்த்திகை விரதம் பன்னிரெண்டு வருடங்களும்வெள்ளிக்கிழமை விரதம் மூன்று வருடங்களும் அனுஷ்டிக்கப்படுகின்றது.அசுர சக்திகளின் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும் மலங்களை மட்டுமன்றி ஆறுவகை எதிரிகளான காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம், பெருமை ஆகிய வகைகளை அழித்து முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு,பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்டியதால் கந்த சஷ்டி விரதமே பெருவிழாவாக எடுக்கப்படுகின்றது. ஏனைய விரத அனுட்டானங்களைப் போலன்றி கந்த சஷ்டி விரதானுஷ்டானத்தை பெருவாரியான ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும்
கடைப்பிடிக்கின்றார்கள். மாணவர்கள் படிப்பிற்கும், குடும்பப் பெண்கள் குடும்ப நன்மைக்கும், கன்னிப் பெண்கள் நல்ல கணவனை வாழக்கைத் துணையாக அடைய வேண்டியும்,குழந்தை இல்லாதோர் குழந்தை வேண்டியும் இவ்விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.ஞான சக்திக்கும் அசுர சக்திக்கும் இடையே ஏற்பட்ட போர் சூரன், சிங்கன், தாரகன் முதலிய அசுரர்கள் நெடுங்காலமாக தேவர், மனிதர் யாவரையும்துன்புறுத்தி அழித்து வந்தனர். பரமசிவன் இதற்கொரு முடிவு காணும் நோக்கில், தனதுசக்தியையே முருகப் பெருமானாகப் பிறப்பித்தார். அந்த முருகப் பெருமான் இந்தச் சூரபதுமாதி அசுரர்களுடன் ஆறு நாட்கள் போரிட்டு வென்றார். இந்த ருட்பெருங்கருணைச் செயலை வியந்து இப்போர் நிகழ்ந்த காலமாகிய ஐப்பசி மாத வளர்பிறைமுதல் ஆறு நாட்களையும் விரத நாட்களாகக் கொண்டு முனிவரும் தேவரும்நோற்றுவந்தனர். இதுவே கந்த சஷ்டி என்ற பேரில் பூலோக மாந்தரும் அனுஷ்டிக்கக் கிடைத்தது.கந்த புராணக் கதையைச் சங்கரன் பிள்ளை சட்டியிலே மாவறுத்தார் என்ற சொற்றொடர்மூலம் நகைச் சுவையார் வழங்குவார். சங்கரன் புதல்வராகிய முருகப் பெருமான்
ஷஷ்டித் திதியிலே மாமரமாக வந்த சூரனைக் கடிந்தார் என்பது இதன் பொருள். வெறும்கதை சொல்லும் புராணமாகக் கந்த புராணத்தை எண்ண முடியாது. சைவ சித்தாந்த பேருண்மைகளை உருவகப்படுத்திக் கதை வடிவில் சுவைபடத் தரும் அருமையான நூல்இதுவாகும்.
கந்தசஷ்டி விரத பயன்கள்
இவ்விரதத்தின் போது, தினமும் கந்த சஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், கச்சியப்ப சுவாமிகளின் கந்த புராணம் ஆகியவற்றைப் பாராயணம் செய்வதால், என்னவென்று சொல்ல முடியாத சாந்தி,மனஅமைதி, நிலவும். இதனை ஒவ்வொருவரும் உணர்ந்திருப்பர்.கந்த சஷ்டி விரத ஆறு நாட்களும் கந்தப் பெருமான் எழுந்தருளியுள்ள ஆலயங்களில்
எல்லாம் பூரண கும்பம் வைத்து விஷேட அபிஷேகமும், சண்முகார்ச்சனையும், கந்த புராண படனப்படிப்பும் நடைபெறும். விரதம் முடிவுற்ற அன்று முருகன் ஆலயத்தில் சூரன்
போர் நடைபெற்று, மறுநாள் விரதம் அனுஷ்டித்த அனைவரும் பாறணை பண்ணி விரத பூசையைநிறைவு செய்கின்றனர். பாறணை பண்ணும் அன்று ஆறு பேருக்கு அன்னதானம் வழங்கிஉட்கொள்ள வேண்டும்.




மனித மனம்


விரதத்தின் போது தனித்து விழித்து பசித்து, இருந்து ஆறு வகை அசுத்தங்களையும் அகற்றித் தூய்மையை அடைகின்றது. தூய உள்ளம், களங்கமற்ற அன்பு, கனிவான உறவு என்பவற்றிற்கு அத்திவாரமாக கந்தசஷ்டி விரதம் அமைகிறது.ஐப்பசித் திங்கள் சதுர்த்தசித் திதியில் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை ஆறு நாட்களும் கந்தப் பெருமானை நினைத்து வழிபட்டு விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. உபவாசம் இருப்பது அதி உத்தமம் எனக் கருதப்படுகின்றது. மிளகுகளை விழுங்கி, பழம் மட்டும் சாப்பிட்டு, தீர்த்தம் குடித்து இளநீர் குடித்து ஒரு நேர உணவு மட்டும் உண்டு அவரவர் தேக நிலைக்கேற்ப கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும். விரதம் ஆரம்பமான தினத்தில் ஆலயம் சென்று சங்கர்ப்பம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்குவார்கள் முருகனுடைய விரதங்களுள் கந்த சஷ்டி விரதம், கார்த்திகை விரதம், வெள்ளிக்கிழமை விரதம் ஆகிய மூன்றும் பிரதானமானவையாகும். கந்த சஷ்டி விரதம் தொடர்ந்து ஆறு வருடங்களும், கார்த்திகை விரதம் பன்னிரெண்டு வருடங்களும்வெள்ளிக்கிழமை விரதம் மூன்று வருடங்களும் அனுஷ்டிக்கப்படுகின்றது.

அசுர சக்திகளின் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும் மலங்களை மட்டுமன்றி ஆறுவகை ஆறு உட்பகைகள் : அவா, கோபம், மயக்கம், கஞ்சத்தனம், செருக்கு, பொறாமை
(காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம் அழித்து முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு, பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்டியதால் கந்த சஷ்டி விரதமே பெருவிழாவாக எடுக்கப்படுகின்றது.ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் சுக்கில பட்சத்துப் பிரதமை முதல் சஷ்டி வரையிலான ஆறு நாட்களில் முருகன் பக்தர்கள் கந்த சஷ்டி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். முருகன் கோயில் உள்ள எல்லா இடங்களிலும் கந்த சஷ்டி விரதம் ஒரு பெருவிழாவாக நடக்கும். ஆறுபடை வீடுகளான திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணிகை, பழமுதிர்ச்சோலையிலும், இலங்கையில் நல்லூர், சன்னிதி, கதிரமலை(கதிர்காமம்),மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்களிலும் மிகவும் சிறப்பாக இவ்விழா நடைபெற்று வருகின்றது.



கந்த சஷ்டி விரத முறை

விரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினை கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து நீராடி தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிந்து, காலையும் மாலையும் வீட்டின் சுவாமி அறையில் விளக்கேற்றி, வீபூதி பூசி, தேவராங்கள் பாடுதல் வேண்டும் அத்துடன் கோயில் வழிபாடு செய்தல் மிகவும் நன்று.

கேதாரகௌரி விரதம் பூர்த்தி செய்து கந்த சஷ்டி விரதம் பிடிப்போர், காலையில் நீராடி பூசை முடித்துத் தீர்தத்தை உட்கொண்டு அதன் பின் கந்த சஷ்டி விரதத்தை கடைப்பிடிக்கவும்.

ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கும் இவ்விரதத்தை தம் உடல் நிலைக்குத் தக்கதாக கடைப்பிடிக்க வேண்டும் . சிலர் ஆறு நாட்களும் எவ்வித அன்ன ஆகாரமின்றியும், சிலர் பானம் மட்டும் அருந்தியும், பலர் முதல் ஐந்து நாட்களும் ஒரு நேரம் உணவு உண்டு (பாலும் பழமும்) கடைசி நாளான ஆறாம் நாள் முழு உபவாசத்துடன் நித்திரை விழித்திருந்தும் ஏழாம் நாள் காலை முருகனை வழிபட்ட பின் பாரணை மூலம் விரதத்தைப் பூர்த்தி செய்வர்.கந்த சஷ்டி விரதத்தில் படிக்க வேண்டியவை

இவ்விரதத்தின் போது, தினமும் கந்த சஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், கச்சியப்ப சுவாமிகளின் கந்த புராணம் ஆகியவற்றைப் படித்தால், என்னவென்று சொல்ல முடியாத மனஅமைதி நிலவும். இதனைஒவ்வொருவரும் உணர்ந்திருப்பர்.



கந்தசஷ்டி விரதத்தின் பலன்


குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பது நன்று. "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும். எனவே குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும். சுருக்கமாகச் சொன்னால் இவ் விரதத்தை கடைப்பிடித்து விரும்பிய பலனைப் பெறலாம்


முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம். இந்த விரதத்தை மனதில் கொண்டே "சஷ்டியிலிருந்தால் அகப்பையில் வரும்'' என்ற பழமொழி எழுந்தது. சஷ்டி விரதம் இருந்தால் நல்ல குழந்தை பேறு கிடைக்கும் என்பது பொருள். சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் என்ற பொருளும் உண்டு.


கந்த சஷ்டியாகிய ஐப்பசி மாத சுக்கில பட்ச சஷ்டி முதல் அந்த ஆண்டு முழுவதும் வரும் 24 சஷ்டிகளிலும் இவ்விரதம் கடைபிடிக்கப்பட வேண்டும். கந்த சஷ்டி தினத்துக்கு முன் வரும் பிரதமை முதல் ஆறு நாட்களும் உமிழ் நீரும் உள்ளே விழுங்காதவாறு நோன்பிருந்து இவ்விரதத்தை இருப்பது ஒருமுறை.


அவ்வாறு இயலாதவர்கள் அந்நாட்களில் ஒருமுறை வீதம் ஆறு மிளகையும் ஆறு கை நீரையும் அருந்தலாம். உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் இது. எனவே உப்பு நீர், எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம் பழச்சாறு, இளநீர் முதலியவற்றை கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் அருந்தக்கூடாது.


விரத நாட்களில் அதிகாலையில் எழுந்திருந்து, நாட்கடன்களை முடித்து, திருநீறணிந்து முருகவேளைத் தியானித்துப் பின் நீராடி, தோய்த்துலர்ந்த இரு ஆடைகளை அணிந்து, தம்பத்திலும், விம்பத்திலும், கும்பத்திலும் முருகவேளை வழிபட்டு இரவில் நெய்யில் சமைத்த மோதகத்தை நிவேதித்துப் பூசிக்க வேண்டும்.


ஏழாம் நாள் காலை விதிப்படிப் பூசித்துக் கந்தன் அடியார்களுடன் அமர்ந்து பாரணை செய்தல் வேண்டும் என்று கந்த புராணம் விதிக்கின்றது. கந்தவேள் சூரபத்மனை வெற்றி கொண்ட நாளே கந்த சஷ்டி. நமது உள்ளத்தில் ஆட்சி செய்து வாழும் காமம் முதலிய சூரபதுமனை முருகவேளின் ஞான வேலினால் அழித்து, பேரின்பம் எய்தும் குறிப்பே சூரசம்ஹாரத்தின் பொருளாகும்.


அதற்குரிய ஆன்மீக வீரம் பெற உதவுவதே கந்த சஷ்டி விரதமாகும். கந்த சஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் செகமாயை... என்று தொடங்கும் திருப்புகழைப் பாராயணம் செய்வோருக்கு குழந்தைப் பேறு கிடைக்கும் என்று கூறியுள்ளார். வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள். கந்த சஷ்டி விரதம் இருப்போருக்கு குடும்பத்தில் மன நிம்மதி உண்டாகும், எதிரிகள் தொல்லை நீங்கும்.


நன்மக்கட் பேறும் கிடைக்கும் என்பது உண்மை.

சஷ்டி ஆறு நாட்களும் கந்த புராணம் படிப்பது என்பது ஒருவகை வழிபாடாகும். பாம்பன் ஸ்ரீமத் குமர குருபரதாச சுவாமிகள், கந்த புராணத்தின் சுருக்கமாக `முதல்வன் புராண முடிப்பு' என்னும் பத்து பாடல்களை அருளியுள்ளார். இதனைப் பாராயணம் செய்தால் முழு கந்த புராணத்தையும் பாராயணம் செய்த பலன் கிடைக்கும்.


மேலும் குமர குருபர சுவாமிகள் பாடியுள்ள கந்தர் கலிவெண்பாவும் கந்த புராணத்தின் சாரமாகும். பிரதமை தொடங்கி சஷ்டி முடிய ஆறு நாட்களும் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து, வள்ளி மணவாளனை பூஜை செய்பவர்களும் உண்டு. ஆறு நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள். சஷ்டி அன்று மட்டுமாவது எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது.


மற்ற தினங்களில் பால், பழம் சாப்பிடலாம். முருகனுக்காக வெள்ளிக் கிழமை விரதம் இருப்பவர்கள், அதை ஐப்பசி மாத முதல் வெள்ளிக் கிழமையன்று தொடங்குவது சிறப்பு. அதிகாலையில் எழுந்து நீராடி, அன்றைய பூஜை முதலானவற்றை முடித்துக்கொள்ள வேண்டும்.


அதன் பிறகு முறைப்படி முருகப்பெருமானின் விக்கிரகத்தையோ அல்லது படத்தையோ வைத்து பூஜை செய்ய வேண்டும். வீட்டில் பூஜையை முடித்தபின், கோயிலுக்குச் சென்று, அங்கும் சிறப்பு தூப, தீப, நைவேத்தியங்களுடன் வழிபாடு செய்ய வேண்டும்.


இரவில் பால் பழம் மட்டும் அருந்தலாம். சுப்பிரமணிய புஜங்கம், ஸ்கந்த வேத பாத ஸ்தவம், சண்முக சட்கம், சுப்பிரமணிய பஞ்சரத்னம், திருப்புகழ், கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் முதலான நூல்களை ஆறு நாட்களும் பாராயணம் செய்வது விசேஷம்.*



கந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி?





கந்தசஷ்டி விரதம், தீபாவளி பண்டிகைக்குப்பின் வரும் ஆறு நாட்கள்நடைபெறுகிறது. திருச்செந்தூரில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டாலும்மற்ற தலங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. எந்தவினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பதுஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிகமுக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம். குறிப்பாககுழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால்முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாதநம்பிக்கை.இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில்வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள். முசுகுந்தச் சக்கரவர்த்தி,வசிஷ்ட முனிவரிடம் இவ்விரதம் பற்றிக் கேட்டறிந்து கடைப்பிடித்துபெரும்பயன் அடைந்தாராம். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும்கடைப்பிடித்த விரதம் இது.
வேண்டுவன யாவும் தரும் இந்த விரதத்தை எப்படிக் கடைபிடிப்பது?
கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவஉணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின்சிந்தனையிலேயே விரதம் இருங்கள். பொதுவாக விரத தினங்களில்மக்கள் சைவமாக இருந்தால் போதும் என்று எண்ணிக் கொண்டு,பலகாரங்களை விருப்பமாக உண்ணுகின்றனர். ஆனால், விரதத்தைநியமத்தோடு கூடியதாக இருப்பதே முழுபலனைத் தரும். கந்தசஷ்டிவிரதம் இருப்பவர்கள் மதியம் உச்சிவேளையில் ஒருபொழுது மட்டும்பச்சரிசி உணவு தயிர் சேர்த்து உண்ண வேண்டும். காலை மற்றும் இரவில்பால், பழங்கள் மட்டும் சாப்பிடலாம். ஆனால், வயோதிகர்கள்,நோயாளிகள் ஆகியோர் விரதத்தின் போது அவரவர் உடல்நிலைக்குதக்கபடி நடந்து கொள்ள விதிவிலக்கு உண்டு. காலை, மாலை ஆகியஇருவேளையும் நீராடுவது நல்லது. காலை, மாலை வழிபாட்டின் போதுஅவசியம் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதோ அல்லது கேட்கவோசெய்ய வேண்டும். ஆறுநாட்களும் அருகிலுள்ள முருகன் கோயிலுக்குச்சென்று தரிசனம் செய்வதும், கந்தபுராணத்தைக் கேட்பதும் அவசியம்.மலைக்கோயிலாக இருப்பின், காலையிலும், மாலையிலும்முருகனுக்குரிய துதிகளை மனதில் ஜபித்தபடியே கிரிவலம் வருவதுநன்மை தரும்.
சூரசம்ஹார தினத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, அவரவர்வழக்கப்படி நெற்றிக்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டுக்கொள்ளுங்கள்.பூஜை அறையில் வழக்கமான இடத்தில் திருவிளக்கினை ஏற்றி,குலதெய்வத்தை மனதார கும்பிடுங்கள். பிறகு, சஷ்டி விரதம் இருந்ததன்பலன் கிட்ட அருள வேண்டும் என்று பிள்ளையாரிடம் மனதாரவேண்டுங்கள். அடுத்து, உங்கள் வீட்டில் உள்ள முருகன் படம் அல்லதுசிறிய முருகன் விக்ரகத்தினை எடுத்து கைகளில் வைத்துக்கொண்டுஆறுமுகனை அகம் ஒன்றிக் கும்பிட்டு அன்போடு எழுந்தருளவேண்டுங்கள். பின் உங்கள் வசதிக்கு ஏற்றபடி சந்தனம், மஞ்சள், குங்குமம்,ஜவ்வாது போன்றவற்றால் முருகனின் படம் அல்லது விக்ரகத்திற்குபொட்டு வைத்து, பூப் போட்டு அலங்கரியுங்கள். பூஜைக்கு உரிய இடத்தில்கோலமிட்டு அதன்மீது விக்ரகம் அல்லது படத்தினை வைத்து, தீபம்ஒன்றினை ஏற்றுங்கள். ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை புகையச்செய்து நறுமணம் கமழச் செய்யுங்கள். மனம் முழுவதும் அந்தமயில்வாகனனையே நினைத்தபடி கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம்,கந்தர் அனுபூதி, சுப்ரமண்ய புஜங்கம் போன்ற உங்களுக்குத் தெரிந்ததுதிகளைச் சொல்லுங்கள். அல்லது கேளுங்கள். ஏதும் இயலாதவர்கள்கந்தா சரணம், முருகா சரணம், கார்த்திகை பாலா சரணம் என்றுஉங்களுக்குத் தெரிந்தபடி சரணங்களைச் சொல்லுங்கள். முன் செய்தபழிக்குத் துணை முருகா என்னும் நாமம் என்பார் அருணகிரிநாதர்.முருகப்பெருமானுக்குரிய சஷ்டி விரத நாட்களில் முடிந்தவரை ஓம்முருகா! என்று ஜபிப்பது நன்மை தரும்.நிறைவாக தீப ஆராதனைகாட்டியபின் இயன்ற நிவேதனம் செய்யுங்கள். பாலும், பழமும்இருந்தாலும் போதும். எளியோர்க்கும் எளியோனான கந்தக் கடவுள்அன்போடு அளிப்பதை ஏற்றருள்வான். ஆனால் முழுமனதோடு செய்வதுமுக்கியம்.
அன்று மாலை, ஒரு சிலர் முருகப்பெருமான் சூரனை வதம் செய்தகோலத்தை தரிசனம் செய்துவிட்டு திருச்செந்தூரில் கடலில் நீராடுவர்.மற்ற ஊர்களில் அவரவர் வீட்டிலோ, இதர நீர்நிலைகளிலோநீராடவேண்டியது அவசியம். அன்று இரவு பக்கத்திலுள்ள முருகன்கோயிலுக்குப் போய் தரிசனம் செய்து (முடிந்தால் மாவிளக்கு போடுங்கள்) பச்சரிசி சாதம் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். வேறுசிலரோ மறுநாள் முருகன் கோயில்களில் நடக்கும் பாவாடைநைவேத்யத்தை தரிசனம் செய்தபின்னரே சாப்பிடவேண்டும் என்றும்கூறுவதும் உண்டு. வேலவன் அருளால் மணப்பேறு, மகப்பேறு,நல்வாழ்வு, ஆரோக்யம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டியயாவும் நிச்சயம் கைகூடும். நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் வாழ்வில்நிறையும். நம் பிறவிப்பிணி நீங்கி முருகனருள் எப்போதும் துணை நிற்கும்.
சஷ்டியில் ஷண்முகன் தரிசனம் !
ஆறு என்ற எண், முருகப்பெருமானுடன் மிகவும் தொடர்புடையது.அவனது திருமுகங்கள் ஆறு, கார்த்திகை மாதர் அறுவரால்வளர்க்கப்பட்டவன்; அவனது மந்திரம் ஆறெழுத்து - நம: குமாராய அல்லதுசரவண பவ; அவனது இருப்பிடம் அறுபடை வீடுகள், அவனுக்குரிய விரதநாட்களில் சஷ்டி விரதம், மஹா ஸ்கந்த சஷ்டியின் ஆறாம் நாள்சூரசம்ஹாரம் என இப்படியாகப் பல விஷயங்கள் ஆறுமுகனுடன்தொடர்புடையன. சஷ்டி என்பது வளர்பிறை அல்லது தேய்பிறையின்ஆறாம் நாள். இதற்கு சஷ்டி திதி என்று பெயர். இத்திதிக்கு நாயகனாகவும்,இத்திதியைக் குறித்த விரதத்துக்கு முக்கிய தெய்வமாகவும் விளங்குபவன்குகப் பெருமான். சுப்ரமண்யருடைய மாலா மந்திரத்தில், சஷ்டி ப்ரியாயஎன்னும் மந்திரம் இடம் பெறுகிறது. சஷ்டி எனும் திதியில்விருப்பமுள்ளவன் என்றும், சஷ்டிதேவியை விரும்புபவன் என்றும்இதற்குப் பொருள். ஒரு நாளைக்கு உரிய ஆறுகால வழிபாடுகளுள்ஆறாவதாக விளங்குவது அர்த்தஜாம பூஜையாகும். சஷ்டிபதி என்றால்இந்த வேளையில் (அர்த்தஜாமத்தில்) செய்யப்பெறும் வழிபாட்டில் மிகவும்விருப்பம் கொள்பவன் என்றும் பொருள். திருவிடைக்கழி திருத்தலத்தில்,குரா மரத்தடியில் முருகன் பூஜித்த பத்ரலிங்கத்துக்கு, தினமும்அர்த்தஜாமத்தில் முதலில் பூஜை நடைபெற்று, பின்னரே,மூலஸ்தானத்தில் வழிபாடு செய்வர்.

சரவணபவ தத்துவம்

சேனானீனாம் அஹம் ஸ்கந்த: படைத்தலைவர்களுள் நான் ஸ்கந்தன்என்றார் கண்ணன் கீதையில். சூரபத்மாதியர், சிங்கமுகாசுரன், தாரகாசுரன்,கிரௌஞ்சாசுரன் ஆகியோர் பரம சிவபக்தர்களே, அவர்கள் சாகாவரம்வேண்டினர். அந்த வரம் கிடைக்காமல் போகவே சிவனின் மறுஅவதாரத்தால் அழிவை வேண்டினர். அது கிடைத்தது. சிவன் தங்களைஅழிக்க மாட்டான் என நம்பி, அகங்காரம் மேலிட, அவர்கள் தேவர்கள்அனைவரையும் பணியாளர்களாக்கினர். பிரம்மா, விஷ்ணு முதல்,யாவரும் மோன நிலையிலிருந்த சிவபெருமானை வேண்டினர், அவரும்இசைந்து பார்வதியை பங்குனி உத்திரத்தன்று மணம் புரிந்தார்.சூரபத்மாதியரின் அட்டூழியத்தை அடக்க, சிவமறு அவதாரம் வேண்ட,சிவன் தமது ஐந்து முகங்களுடன் அதோமுக்தினின்றும் ஜோதியை எழுப்பி,வாயுவையும் அக்னியையும் அதை ஏந்தி கங்கையில் இடச் செய்தார்.கங்கை, சரவணப் பொய்கையில் 6 தாமரைகளில் இட்டாள். அங்கு 6 ஜோதியும் 6 குழந்தைகளாக மாறின. அவர்கள் கார்த்திகைப் பெண்களால்வளர்க்கப்பட்டனர். அதனால் முருகன், காங்கேயன், சரவணபவன்,கார்த்திகேயன், என்றும் துதிக்கப்படுகிறான்.
உமை, குழந்தைகளை அழைத்து அணைக்க ஆறு குழந்தைகள், ஆறுமுகம்,பன்னிருகை, இருகால், ஓருடலாகக் கந்தனாக (ஸ்கந்தன் = ஒன்றுசேர்ந்தவன்) மாறினான். கந்தன் உதித்த தினம் வைகாசி மாத - விசாகபௌர்ணமி. அதனால் அவன் பெயர் விசாகன். சிவஜோதியின் மறுஉருவம்.வேதசொரூபன் அதனால் சுப்ரமண்யன், என்றும் இளையவன் அதனால்குமாரன், மிக அழகானவன் ஆகவே முருகன் (முருக என்றால் அழகு).
மு - முகுந்தன் என்கிற விஷ்ணு
ரு - ருத்ரன் என்கிற சிவன்
க - கமலத்தில் உதித்த பிரம்மன்.
ஆக, முருகன் மும்மூர்த்திகள் செய்யும் படைத்தல், காத்தல், அழித்தல்என்ற மூன்று தொழில்களையும் செய்து மக்களுக்கு அருளும் கருணைவடிவமானவன்.
ஆறுமுகமான - சண்முக தத்துவம் என்ன ?
ஒரு முகம் - மஹாவிஷ்ணுவுக்கு,
இரு முகம் - அக்னிக்கு,
மூன்று முகம் - தத்தாத்ரேயருக்கு,
நான்முகம் - பிரம்மனுக்கு,
ஐந்து முகம் - சிவனுக்கு, அனுமனுக்கு, காயத்ரி தேவிக்கு, ஹேரம்பகணபதிக்கு
ஆறு முகம் - கந்தனுக்கு.
நக்கீரர் தமது திருமுருகாற்றுப்படையில் இவ்வாறு கூறுவார் :
1. உலகைப் பிரகாசிக்கச் செய்ய ஒரு முகம்,
2. பக்தர்களுக்கு அருள ஒரு முகம்,
3. வேள்விகளைக் காக்க ஒரு முகம்,
4. உபதேசம் புரிய ஒரு முகம்,
5. தீயோரை அழிக்க ஒரு முகம்,
6. பிரபஞ்ச நன்மைக்காக வள்ளியுடன் குலவ ஒரு முகம்.
ஸரவணபவ - என்பது ஷடாக்ஷர மஹாமந்திரம் (6 எழுத்துகள்). இதன்மகிமை என்ன?
ஸ - லக்ஷ்மிகடாக்ஷம்
ர - ஸரஸ்வதி கடாக்ஷம்
வ - போகம் - மோக்ஷம்
ண - சத்ருஜயம்
ப - ம்ருத்யுஜயம்
வ - நோயற்ற வாழ்வு
ஆக, பிரணவ ஷடாக்ஷரம் கூறி இவ்வாறு பயன்களும் பெறலாம்.
ஆறுபடை வீடுகளும் ஆறு குண்டலினிகளாக விளங்குகின்றன.
திருப்பரங்குன்றம் - மூலாதாரம்
திருச்செந்தூர் - ஸ்வாதிஷ்டானம்
பழனி - மணிபூரகம்
சுவாமிமலை - அனாஹதம்
திருத்தணிகை - விசுத்தி
பழமுதிர்சோலை - ஆக்ஞை.
ஆக ஆறுமுகனான திருமுருகனை, விசாக, கார்த்திகை, பௌர்ணமிநாட்களில் ஸ்கந்த ஷஷ்டியில் துதித்து வழிபட்டு குஹானந்த அனுபூதிவாரிதியில் மூழ்குவோம். முருகனுக்கு மூன்று மயில்கள் உண்டு.மாங்கனி வேண்டி உலகைச் சுற்றி வர உதவிய மயில் மந்திர மயில்.சூரசம்ஹாரத்தின்போது இந்திரன் மயிலாகி முருகனைத் தாங்கினான்.இது தேவ மயில். பின் சூரனை இருகூறாக்கியதில் வந்த மயில்தான் அசுரமயில்.
ஆறுமுகமும் 12 கரங்களும் கொண்ட முருகனின் திருக்கோலத்தை சஷ்டிவிழாவின்போது மட்டுமே திருச்செந்தூரில் முழுதாகத் தரிசிக்கலாம். மற்றநாட்களில் அங்கவஸ்திரத்தால் மூடி விடுவார்கள். வியாசர் எழுதிய 18புராணங் களில் ஸ்காந்தம் என்னும் கந்தபுராணமே மிகப்பெரியது. ஒருலட்சம் சுலோகங்கள் கொண்டது. மற்ற எல்லா புராணங்களும் சேர்ந்தேமூன்று லட்சம் சுலோகங்கள்தான். கந்தன் பல பெயர்களால்போற்றப்படுகிறான்.





கந்தபுராணம் – யுத்தகாண்டம் – கதைச் சுருக்கம்:
முருகப்பெருமான் அசுரர்களான சூரபத்மனாதியோரை வதம் செய்ததிருவிளையாடலையே நாம் கந்தசஷ்டி விரத விழாவாகக்கொண்டாடுகின்றோம். சூரபத்மனின்; ஒருபாதி “நான்” என்கின்ற அகங்காரமும், மற்றொருபாதி “எனது” என்கின்ற மமகாரமாகவும் அமையப்பெற்றவன்.
சூரபன்மன் ஆணவ மலம் கொண்டவன். தாரகாசுரன் மாயா மலம்உடையவன். சிங்கமுகன் கன்ம மலத்தின் வடிவம். இவர்களைஞானம் என்கின்ற முருகனது வேல் வெல்கிறது. அதாவது எம்மைப்பீடித்துள்ள ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களில் இருந்து வீடுபேறடைய ஞானம் என்ற இறை சக்தியால் மட்டுமே முடியும்என்பதையே இன் நிகழ்வு எமக்கு அறிவுறுத்துகின்றது.
சூரபத்மனின் வரலாறு:
பிரமதேவனுக்கு தக்கன், காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தார்கள்.அவர்களுள் தக்கன் சிவனை நோக்கித் கடுந்தவம் புரிந்து பல வரங்களைப்பெற்றிருந்தான். ஆனால் வரத்தின் வலிமையைச் சிரத்தில் கொண்டுசிவனை மதியாது யாகம் செய்ததினால் சிவனால் தோற்றுவிக்கப் பெற்றவீரபத்திர கடவுளால் கொல்லப்பட்டான்.
காசிபனும் கடுந்தவம் புரிந்து சிவனிடம் இருந்து மேலான சக்தியைப்பெற்றான். ஒருநாள் அசுரர்களின் குருவான சுக்கிரனால் (நவக்கிரகங்களுள்வெள்ளியாக கணிக்கப்பெறுபவர்) ஏவப்பட்ட “மாயை” என்னும் அரக்கப்பெண்ணில் மயங்கி தான் பெற்ற தவ வலிமை எல்லாவற்றையும்இழந்தான்.
இதனைத் தொடந்து காசிபனும் மாயை என்னும் அசுரப் பெண்ணும்இணைந்து மனித தலையுடன் கூடிய சூரபத்மனும், சிங்க முகம் கொண்டசிங்காசுரனும், யானைமுகம் கொண்ட தாரகாசுரனும், ஆட்டின் முகம்கொண்ட அசமுகி என்ற அசுர குணம் கொண்ட பிள்ளைகளைப் பெற்றனர்.
இவர்களுள் சூரபதுமன் சர்வலோகங்களையும் அரசாளும்சர்வவல்லமைகளைப் பெற எண்ணி சுக்கிலாச்சாரியாரிடம் உபதேசம்பெற்று சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்து; 108 யுகங்கள் உயிர்வாழவும், 1008 அண்டங்களையும் ஆரசாளும் வரத்தையும், இந்திரஞாலம்எனும் தேரையும், சிவசக்தியால் அன்றி வேரு ஒரு சக்தியாலும் அவனைஅழிக்க முடியாது என்னும் வரத்தையும் பெற்றான். இவ்வரத்தின் பயனாகசூரன் தம்மைப்போல் பலரை உருவாக்கி அண்ட சராசங்களை எல்லாம்ஆண்டு வந்தான்.
சூரபதுமன் பதுமகோமளை என்னும் பெண்ணை மணந்துவீரமகேந்திரபுரியை இராசதானியாகக் கொண்டு ஆண்டுவரும் காலத்தில்அவனுக்கு பதுமகோமளை மூலம் பானுகோபன், அக்கினிமுராசுரன்,இரணியன், 10 தலைகளைக் கொண்ட-வச்சிரவாகு ஆகிய நாங்குபுதல்வர்களும், வேறு மனைவியர் மூலம் மூவாயிரவரும் (3000-மூவாயிரம் பேரும்) பிறந்தனர். இவர்களுடன் இன்னும் 120 பிள்ளைகள்இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
சூரபத்மன் தான் பெற்ற வரத்தின் வலிமையினால் ஆணவம் மிகுந்து கர்வம்கொண்டு இந்திரன் மகனான சயந்தன் முதலான தேவர்களைசிறையிலிட்டு சித்திரவதை செய்து அதர்ம வழியில் ஆட்சிசெய்யலானான்.
அசுரர்களின் இக் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் சிவனிடம்சென்று முறையிட்டனர். இறைவன் அவர்களைக் காப்பாற்ற திருவுளம்கொண்டு சூரபத்மன் முதலான பலம் மிக்க அசுரர்களைகளை அழிக்கும்சக்தி படைத்த ஆறுமுகன் அவதரித்தார்.
ஆறுமுகன் அவதாரம்:
தேவர்களை துன்பத்தில் இருந்து காப்பாறும் நோக்குடன் சிவன் தனதுநெற்றிக் கண்ணைத் திறக்க (சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம்,வாமதேவம், சத்யோஜாதம், ஆகிய ஐந்து முகங்களும், இவை தவிரஞானிகளுக்கு மட்டுமே தெரியக்கூடிய “அதோமுகம்” (மனம்) என்னும்ஆறாவது முகமும் உண்டு.) அவைகளில் இருந்து ஆறு தீப்பொறிகள் வெளிப்பட்டன. அவற்றை வாயுபகவான் ஏந்திச் சென்று வண்ண மீனினம்துள்ளி விளையாடும் தண்மலர் நிரம்பிய சரவணப் பொய்கையில்மலர்ந்திருந்த தாமரை மலர்களின் மீது சேர்த்தான்.
அந்த தீப்பொறிகள் ஆறும் உலகின் பொன்னெல்லாம் உருக்கி வார்த்ததெனஆறு குழந்தைகளாக தோன்றின. அந்த ஆறு குழந்தைகளையும் ஆறுகார்த்திகைப் பெண்கள் சீராட்டி, பாலூட்டி வளர்த்து வரும் வேளைஅகிலலோக நாயகி பார்வதி தன் மைந்தர்கள் அறுவரையும் ஒன்றாகஅன்புடன் கட்டி அணைத்திட அவையாவும் ஒரு திருமேனியாக வடிவங்கொண்டு ஆறுமுகங்களும் பன்னிரு கரங்களும் உடைய ஒருதிருமுருகனாக தோன்றினன் உலகமுய்ய.
ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடைய திருவுருவைபெற்றமையால் “ஆறுமுகசுவாமி” எனப் பெயர் பெற்றார். இந்த ஆறுதிருமுகங்களும் ஞாலம், ஐஸ்வர்யம், அழகு, வீர்யம், வைராக்கியம்,புகழ் என்னும் ஆறு குணங்களைக் குறிக்கும்.
பிரணவ சொரூபியான முருகப் பெருமானிடம் காக்கும் கடவுளானமுகுந்தன், அழிக்கும் கடவுளான ருத்திரன், படைக்கும் கடவுளானகமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடக்கம். ஆறுமுகன்சிவாக்கினியில் தோன்றியவன். அதனால் “ஆறுமுகமே சிவம், சிவமேஆறுமுகம்” எனப்பெறுகின்றது.
வீரவாகுதேவர் முதலான இலச்சத்து ஒன்பதின்மர் தோன்றல்:
சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள்புறப்படும்போது அதில் இருந்து வெளிப்பட்ட வெப்பத்தை தாங்கமுடியாதுசிவனருகில் இருந்த பார்வதிதேவி பாய்ந்து ஓடலானார். அப்போதுபார்வதிதேவியின் பாதச் சிலம்முகளில் இருந்த நவரத்தினங்கள் சிதறிவிழுந்தன. அந்த நவமணிகள் மீது இறைவன்னின் பார்வை பட்டதும்அவைகள் நவசக்திகளாக தோன்றினர். அந்த நவசக்திகளின் வயிற்றில் வீரவாகுதேவர் முதலான இலச்சத்து ஒன்பதுமர் (100009) தோன்றினர்.இவர்கள் ஆனைவரும் பின்பு முருகனின் படைவீரர்களாயினர்.
அன்னை வழங்கிய சக்திவேல்:
அம்மையும் தன்னைப்போன்ற ஒரு சக்தியை உருவாக்கி அதனை தனதுசக்திகள் யாவும் கொண்ட ஓர் வீரவேலாக உருமாற்றினார். அம்மையப்பன்வெற்றிதரும் வீரவேலை முருகனிடம் வழங்கினர். ஈசனும் தன்அம்சமாகிய பதினொரு உருத்திரர்களைப் படைக்கலமாக்கி முருகனிடம்தந்தார்.
அம்மையப்பனிடம் வேல் வாங்கிய முருகன், தேரேறி தெற்கெ இருந்தவீரமகேந்திரபுரியை நோக்கி செல்கையில்; விந்தியமலை அடிவாரத்துமாயா புரத்தை ஆண்ட சூரனின் தம்பி தாரகாசுரன் (ஆனைமுகம் கொண்டவன்) கிரௌஞ்சம் என்னும் பெரிய மலையாய் உருமாறிவழிமறிக்க வீரவாகுதேவர் அவனுடன் போர் புரிகின்றார். ஆனால் தாரகன்தன் மாயையால் வீரவாகுதேவர் முதலான முருகனின் சேனையைஅழுத்தி சிறைப்படுத்துகின்றான் அப்போது முருகனின் கூர்வேல் மாயைமலையை பிளக்க தாருகன் அழிகின்றான். வீரவாகுதேவர் முதலானோர்மலைச் சிறையிலிருந்து விடுபடுகின்றனர். (தாரகாசுரன் ஒரு சிவபக்தன்.கூடுவிட்டு கூடுபாயும் வரத்தை சிவனிடமிருந்து பெற்றவன். தாரகனின்நண்பனான கிரௌஞ்சம் என்னும் பறவை அகத்தியரின் சாபம் பெற்று மலையுருவானது. அந்தமலையாக தனது மாயை சக்தியால்வீராவாகுதேவர் உள்ளிட்ட முருகனின் சேனையை சிறைப் பிடித்தான்.)சூரபத்மன் இச் செய்தி கேட்டு துடிதுடித்து வீராவேசம் கொண்டான்.
தந்தையிடம் இருந்து முருகன் பாசுபத அஸ்திரம் பெறுதல்:
மன்னி ஆற்றங்கரையில் சிவபிரானுக்கு ஆலயம் எழுப்பச் சொல்லிமுருகன் தேவதச்சனைப் பணிக்கிறார். ஈசனும் முருகனுக்கு முன்னேதோன்றி பாசுபதம் என்னும் அஸ்திரம் வழங்குகின்றார். பின்னர் அந்தஆற்றங்கரையான திருச்செந்தூர் நோக்கி மொத்தப் படையும்கிளப்புகின்றது. முருகன் அம்மையப்பர் ஆசியுடனும் தன் படைகளோடும் திருச்செந்தூர் வந்து தங்கினர். அங்கு பராசர முனிவரின் புதல்வர்களும் (சனகர், சனாதனர்,சனந்தனர், சனற்குமாரர்) முருகனை வரவேற்று வீழ்ந்து வணங்குகின்றனர்.
வீரவாகுதேவர் தூது செல்லல்:
முருகப் பெருமான் புதிதாக கட்டப்பெற்ற ஆலயத்தில் அமர்ந்து,தேவகுருவான குருபகவானிடம் சூரபத்மனின் முழுக் கதையையும்சொல்லுமாறு கேட்கின்றார். அதன் பின்னரே வீரவாகுதேவரை மட்டும்சூரபதுமன் ஆட்சிசெய்யும் வீரமகேந்திரபுரத்திற்கு தூது அனுப்பமுடிவாகின்றது.
முருகப் பெருமான் வீரவாகுதேவரை சூரனிடம் தூதனுப்பிச் சிறை வைத்ததேவர்களை விடுதலை செய்யுமாறு செய்தி அனுப்பினார். தூதின்போது,வீரவாகு சிறைப்பட்ட அமரர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு சூரனிடம்தூது உரைக்கின்றான். முருகன் என்ற பாலகனுக்கு அடிபணிந்து நான்தேவர்களை விடுதலை செய்ய வேண்டுமா? அது நடக்காத காரியம் என்றுகூறி முழங்கலானான்.
சூரனின் ஆணவத்தால் தூது முறிகின்றது. அது மாத்திரமன்றி தூது சென்ற வீரவாகுதேவரையும் சிறையிலடையுங்கள் என உத்தரவிடுகின்றான்.வீரவாகுதேவரை சிறைப்பிடிக்க சென்ற அவுணப் படையுடன்வீரவாகுதேவர் போர்புரிகின்றார். அப்போது நடந்த போரில் சூரனின்புத்திரனான வச்சிரவாகுவும் அசுரர் தலைவனான சகத்திரவாகு, ஆகியஇருவரும் வீரவாகுதேவரினால் கொலை செய்யப்படுகின்றனர்.
திருச்செந்தூரில் ஆறுமுகக்கடவுள், திருமால், பிரமன், இந்திரன் முதலியதேவர்கள் போற்ற சிங்காசனத்தில் எழுந்தருளி வீற்றிருக்கும் போதுவீரவாகுதேவர் திருச்செந்தூர் திரும்ன்பிவந்து முருகனிடம் தூதுநிகழ்வுகளை முன் வைக்கிறான்.
முருகனும் இனியும் தாமதிக்கலாகாது என்று திருச்செந்தூரில் இருந்துஇலங்கை சென்று அங்கிருந்து சூரனின் இராசதானியாகிய வீரமகேந்திரபுரிசெல்ல தீர்மானிக்கின்றார்.
கந்தப்பெருமான் வீரபாகு தேவரை நோக்கி “பாவங்களை அளவில்லாமல்புரிந்து கொண்டிருக்கும் சூரபத்மன் முதலான அசுரர்களை அழித்து,தேவர்கள் துன்பம் நீங்கி, உலகம் நலம் பெறுவதற்காக இப்பொழுதேபடையெடுத்து வீரமகேந்திரபுரிக்குச் செல்லவேண்டும்.”நம் தேரைக்கொண்டுவா” என்று கட்டளையிட்டார்.
தங்கள் துயரம் எல்லாம் நீங்கியது என்று கருதிய தேவர்கள்கந்தப்பெருமானின் கழலிணைகளை வணங்கித் துதித்தனர். முருகவேளின்கட்டளைப்படி வீரவாகு தேவர் மனோவேகத் தேருடன் பாகனையும்அழைத்து வந்தார். சிங்காசனத்தில் இருந்து இறங்கிய எம்பெருமான், ” நாம்சூரபன்மனை அழிக்க வீரமகேந்திரபுரி செல்கிறோம். நீங்களும் அவரவரதுவாகனங்களில் புறப்பட்டு வாருங்கள்” என்று தேவர்களுக்கு உத்தரவிட்டார்.
பிரம்ம தேவர் அன்னப்பறவை மீதும், திருமால் கருடன் மீதும், இந்திரனும்,வீரபாகு தேவரும் லட்சத்து எண்மரான தெய்வ வீரர்களும் மற்றையதேவர்களும் தத்தம் வாகனங்கள் மீதும் ஏறிக் கந்தவேளைச் சூழ்ந்துசென்றார்கள்.
நினைத்த மாத்திரத்திலேயே எல்லாப் புவனங்களையும் அழிக்கும் ஆற்றல்பெற்ற படைத்தலைவர்கள் நூற்றியெட்டுப் பேரும் தொடர்ந்தார்கள்.அதனை அடுத்து இரண்டாயிரம் வெள்ளம் பூதப்படைகளும்ஆரவாரத்துடன் புறப்பட்டன. வானவர்கள் பூ மழை பொழிந்தார்கள்.
பேரிகை, காளம், கரடிகை பல வாத்தியங்கள் முழங்கின.முருகப்பெருமானுடன் சென்ற பூதப்படைகளின் பேரொலி எங்கும்ஒலித்தது. அவர்கள் சென்றபோது ஏற்பட்ட புழுதி சூரிய சந்திரர்களுடையஒளியையும் மறைத்துவிட்டதாம். கடலில் பூத சேனைகள் இறங்கினார்கள்.அவர்களுக்கு கடலே கணுக்கால் அளவுதான் இருந்தது. கடலில் இருந்துபெரிய பெரிய மீன்களும் திமிங்கிலங்களும் சிறு புழுக்கள் போன்று இருந்தன. பூதப்படை இறங்கி கலக்கியதால் அது சேறானது. அந்த சேறுஉலர்ந்தபின் புழுதியாகி எங்கும் பறந்தது.
வீரமகேந்திரபுரி (சூரனின் இராசதானி) தென்கடலில் இருந்த ஒரு தீவு(தற்பொழுது அது நீரில் மூழ்கி உள்ளது). அதற்கு வடக்கே உள்ள தீவுஇலங்கை. இலங்கை வழியாகப் எம்பெருமான் வீரமகேந்திரபுரியைநோக்கிச் சென்றபோது; பிரமன், திருமால், இந்திரன் ஆகிய மூவரும்சுவாமியை வணங்கி, “மகா பாவியாக உள்ள சூரபன்மன் இருக்கும்மகேந்திரபுரி தங்கள் திருப்பாதம் பதியத் தகுதி பெற்றதல்ல. அந்நகருக்குஅடுத்த எல்லையாகிய இங்கேயே தங்கியிருந்து போர்செய்வதற்குப் பாசறை அமைத்துக் கொள்ளலாம்” என்று வேண்டிக்கொண்டார்கள். சுவாமிஅந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்கள்.
தேவதச்சனை அழைத்து “உடனே விரைந்து இங்கு ஒரு பாசறை ஏற்படுத்து”என்று எம்பெருமான் ஆணையிட்டார். தேவதச்சன் உடனேமாடகூடங்களும் மண்டபங்களும் சோலைகளும், வாவிகளும் கொண்டபாசறை ஒன்றை மனத்தால் நிர்மாணம் செய்து அப்படியே அதை ஸ்தூல வடிவிலும் கட்டினான். அந்தப் பாசறைக்கு “ஏமகூடம்” என்று பெயர் வைத்தார்கள்.
எம்பெருமானின் தேர் கீழே இறங்கியது. சுவாமி ஏமகூடத்தின் வீதிகளில்பூத சேனைகளை நிறுத்தினார். இலச்சத்தொன்பது வீரர்களோடும்,தேவர்களோடும் திருக்கோயிலினுள் சென்று அமர்ந்தார் முருகப்பெருமான். அந்த ஏமகூடமே கதிர்காமம் என்பது ஐதீகம்.
[கதிர்காமம் என்றால் ஒளிமயமான விருப்பத்தை எல்லாம் நிறைவேற்றித்தருவது என்று பொருள். அங்கே சுவாமி ஒளிமயமாக விளங்குகிறார்.எனவே அவரை நேரே தரிசிக்கக் கூடாதென்று திரை போடப்பட்டுள்ளது.அங்கே உள்ள கற்பூர தீப ஒளியைத் தரிசனம் செய்யவேண்டும்.]
ஏமகூடத்தில் இருந்து (கதிகாமத்தில்) போர் துவங்குகிறது.
பானுகோபன் வதைப் படலம்:
தாரகனையும் அவனுக்குத் துணை நின்ற கிரௌஞ்சத்தையும் பிளந்துஅழித்துப் பின், தருமகோபன் (சூரனின் மந்திரி), சூரனின் மகன்அக்கினிமுகாசுரன் உள்ளிட்ட மூவாயிரவர் (3000)ம் இறந்தபின் சூரனின்மகனான பானுகோபன் போருக்குச் செல்கின்றான்.
பானூகோபன் மாயயால வித்தைகள் செய்து போர்செய்யும் வல்லமைபடைத்தவன். சிறந்த சிவ பக்தன். நீதியாக நடப்பவன். சிவனே முருகனாகஅவதரித்து போருக்கு வந்துள்ளார், தேவர்களை விடுவித்தால் நாமும்நெடுநாட்கள் வாழலாம் என தந்தையாகிய சூரனுக்குக் கூறியும் அவன்ஆணவம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் சூரன் தானேபோருக்குச் சென்று முருகனையும் அவன் சேனையையும் அழிக்கப்போவதாக வீராவேசம் கொண்டு போருக்குச் செல்ல ஆயத்தமானான். தான்மூத்தமகன் இருக்க தந்தை போருக்கு செல்வது சரியில்லை என கூறியபானுகோபன் தான் போருக்குச் செல்ல அனுமதி தரும்படி சூரனிடம்வேண்டினான். சூரனும் மகனான பானுகோபனை ஆசீர்வதித்து போருக்குஅனுப்பிவைக்கின்றான். பானுகோபன் நன்நீர்க் கடலில் முருகன்சேனையயை ஆழ்த்த முருகன் அதையும் முறியடித்து விடுகிறார். அதன்போது பானுகோபனும் முருகன் வேலுக்கு பலியாகிறான்.
சிங்கமுகன் வதை:
பானுகோபன் பலியாக சூரனின் தம்பி சிங்காசுரன் போருக்குச்செல்கின்றான். சிங்கமுகன் ஒரு பெரும் ஞானி. மாபெரும் வீரன்.முருகனாக வந்திருப்பவர் சிவனே. சிவனுடன் போர்புரிய எம்மால்முடியாது. தேவர்களை விடுதலை செய்தால் நாம் உயிர் வாழலாம் எனசூரனுக்கு புத்திமதி கூறியும் அவன் கேட்காமையால் செஞ்சோற்றூக் கடனுக்காக போர்புரியச் செல்கின்றான். இவன் பல மாய வித்தைகள்செய்தும், பல விதமாக முருகவேளுடன் போர் புரிகின்றான். இவனது சிரம்விழுந்தால் உடனே அதற்குப் பதிலாக புதிய சிரம் தோன்றும் வரம்பெற்றவன். அதனால் அவனை முருகப் பெருமான் வேல்கொண்டுகொல்லாது குஞ்சபடையால் நெஞ்சைப் பிளந்து சங்காரம் செய்கின்றான்.
சூரன் சங்காரம்:
சூரன் அண்டம் விட்டு அண்டம் பாயும் வரம் பெற்றவன். சிறந்த சிவபக்தன். ஆணவமலத்தால் பீடிக்கப் பட்டு அதர்மவழியில் சென்று அழிகின்றான். தன் சொந்தபந்தங்களையும், துணை நின்ற படைச் சேனைகளையும் இழந்துசெய்வதறியாது நின்ற சூரனின் ஆணவம் அப்போதும் அடங்கவில்லை.தானே போருக்கு செல்வதாக முடிவு செய்து முருகப் பெரூமான் முன்தோன்றி சரமாரியாக அம்புக்கணை தொடுத்தான். அவையாவும்முருகவேளின் கடைக்கண் பார்வையால் அழிந்தன. சூரன் தனதுமாயயாலங்களினால் பலவாறாக தோன்றி போர்செய்தான். அப்போதுமுருகன் சூரனை நோக்கி இப்போதும் நீ உயிர்வாளலாம் தேவர்களைசிறையில் இருந்து விடுவித்து விடு என்று அறிவுறுத்தினார். அப்போதும்அவனின் ஆணவம் அடங்கவில்லை. அதனால் போர்செய்யவே விருப்புக்கொண்டவனாய் போர் செயலானான்.
வீரமகேந்திரபுரத்தில் பலப்பல மாயங்கள் செய்து போர் புரிகிறான் சூரன்.கடலாய், இருளாய் மாறி மாறிச் செய்யும் போர் எதுவும் உதவாமல்போனதினால், உதவிசெய்ய இருந்த உற்றமும் சுற்றமும் அழிந்து உறவும்அற்றுப் போனதினால் சூரனும் மயங்கித் தத்தளித்தான். தன்னுடன் போர்செய்ய வந்தது இறைவனே என அறிந்தும், அடிபணிய ஆணவம்விடவில்லை.
முருகன் சூரனின் ஆணவத்தை அடக்கும் பொருட்டு தன் திருப்பெருவடிவம் (விஸ்வரூபம்) காட்டியும், எல்லாம் வல்ல பரம்பொருள் தாமே என பரமேசுர வடிவம் காட்டியும், சிவனும் அவன் மகனும் மணியும்ஒலியும் போல ஒருவரே என்றுணர்த்தியும், தன் தன்மை மாறாது போர்செயலானான்.
சூரன் போர் செய்த ஒவ்வொரு தினமும் தனது ஆயுதங்களைஒவ்வொன்றாக இழந்தான். அவன் தனக்கு சிவனால் வழங்கப் பெற்ற“இந்திரஞாலம்” என்னும்தேரை அழைத்து முருகனின்படைச்சேனையையும் துக்கிச் சென்று பிரபஞ்ச உச்சியில் வைக்கும்படி கட்டளைஇட்டான். இந்திரஞாலம் என்றதேரும் அவன் கட்டளையை நிறைவேற்றமுருகனின்படையை தூக்கி பிரபஞ்ச உச்சிக்கு கொண்டு செறது. முகனின்வேலானது சீறிப்பாய்ந்து தேரைத் தடுத்து நிறுத்தி முருகனிடம் கொண்டுவந்து சேர்த்தது. முருகன் அத்தேரை தம் வசப்படுதி தன் உடைமையாக்கிக் கொண்டார். இது கண்ட சூரபத்மன் செய்வதறியாது திகைத்தான். அதனால்சிவனால் அவனுக்கு வழங்கப்பெற்ற சூலப்படையயை முருகனைஅழிக்கும்படி ஏவினான்.
சூலப்படையும் முருகனை நோக்கி வந்தபோது முருகனின் வேல் அதனைமழுங்கச் செய்து செயலற்றதாக்கி திரும்பிச் செல்லவைத்தது. கடைசியாகசூரன் தனது அம்புப் படையை முருகனை அழிக்க அனுப்பினான்.முருகனின் வேல் அதை பொடிப்பொடியாக்கி செயலிழக்கச் செய்தது.முருகனால் இறப்பது நிச்சயம் என உறுதியாக தெரிந்திருந்தும் தேவர்களைவிடுதலை செய்வது மானக் குறைவு என எண்ணிய சூரன் ஆணவமிகுதியால் தொடர்ந்து போராட துணிது சக்கரவானபக்ஷியாக உருமாறிவானில் பறந்து பல அழிவுகளை ஏற்படுத்தியதுடன் முருகனின்சேனையையும் சீண்டத் தொடங்கினான். இது கண்ட முருகப் பெருமான்நிராயுதபாணியாக இருக்கும் எதிரியுடன் ஆயுதம் தாங்கி போர்புரிவது யுத்ததர்மத்திற்கு விரோதமானது என எண்ணி, இந்திரனை மயிலாகஉருமாறும்படி கூறி அதன் மீது பறந்து சூரனை தாக்கலானார். சூரனும்தனது மாயாயால வித்தைகளினால் மறைந்து தாக்கி மறைந்தான்.
தனது படையினரையும், படைக் கலங்களையும் இழந்த சூரன் அண்டங்கள்எல்லாம் மறைந்து ஒழிக்கலானான். கடைசியாக முருகப் பெருமான்எய்திய வேலானது அவன் சென்ற இடமெல்லாம் துரத்திச் சென்றுகடைசியாக நடுக்கடலடியில் மாமரமாய் மாறுவேடத்தில் நின்ற சூரனை; நீரினுள் சென்று மாமரத்தை இருகூறாக்கி சூரனை சங்காரம் செய்தது.
ஆணவம் அழியப் பெற்ற சூரன் தம் தவறை உணர்ந்து; தன்னை மன்னித்து, ஏற்றுக்கொள்ளும்படி மன்றாடி முருகனை வேண்டி நிற்க; அவன்மேல்இரக்கம் கொண்டு; பிளவுபட்ட மாமர பாதிகள் இரண்டையும் முருகன் தன்அருளால் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி, மயிலை வாகனமாகவும்சேவலைக் கொடியிலும் தன்னுடன் பிணைத்துக் கொண்டார்.
கந்த புராணக் கதையைச் “சங்கரன் மகன் சட்டியில் மாவறுத்தான்” என்றசொற்றொடர் மூலம் நகைச் சுவையாக பயன் கூறுவார்கள். சங்கரன்புதல்வராகிய முருகப் பெருமான் சஷ்டித் திதியிலே மாமரமாக வந்தசூரனை இரண்டாக அரிந்தார் என்பது இதன் பொருள்.
முருகனின் ஆணைப்படி, வருணன் வீர மகேந்திரபுரியைக் கடலுக்குஅடியில் மூழ்கடிக்க, போர் முடிகிறது.
வெற்றி வீரத் திருமகனாய், முருகப் பெருமான் திருச்செந்தூர்திரும்புகின்றான். சூரனுடன் முருகப் பெருமான் போர் புரிந்து அவனதுஆணவத்தினை அடக்கி ஆட்கொண்ட நாளே இறுதி நாளாகிய சஷ்டிஎனப்படும். சஷ்டி என்பது திதியாகும். இவர்கள் இருவருக்கும் இடையில்போர் நடந்த இடம் முருகப் பெரமான் குடிகொண்டுள்ள ஆறுபடைவீடுகளில் ஒன்றாகியதும், கடலும், கடல் சார்ந்த பிரதேசமாகிய நெய்தல் நிலமாகிய திருச்செந்தூர் என்னும் தலமென கூறுவாருமுளர்.
சூரனை அழித்த மனக்கேதம் தீர, செந்தூரில் போருக்கு முன்னரேகட்டப்பட்ட ஈசனின் ஆலயத்தில், கைகளில் ஜபமாலையோடு, சிவ பூசைசெய்கிறான் முருகன். இந்தக் கோலமே நாம் இன்றும் திருச்செந்தூர்கருவறையில் காண்பது. கைகளில் ஜப மாலையுடன் செந்தூர்மூலத்தானத்து முதல்வன் நிற்க, சற்று எட்டிப் பார்த்தால், கருவறைக்குள்சிவலிங்கமும் தெரியும்.
இங்கே முருகப் பெருமான் அபயம்/வரம் தரும் கோலத்தில் இல்லாமல்,ஜபம் செய்யும் கோலத்தில் உள்ளான். கையில் வேல் கிடையாது.அலங்காரத்துக்காக மட்டும் வேலையோ/யோக தண்டத்தையோ தோள்மீது சார்த்தி வைத்திருப்பார்கள்; பின் கரம் சத்திப்படை ஏந்தி, இன்னொருகரம் ஜபமாலை தாங்கி நிற்க, தியானத்தில் முழந்தாளில் கைவைத்து,ஈசனை மலர்களால் அர்ச்சிக்கும் இன்னொரு கரம்.
முருகனுக்கு இடப்பக்கத்தில் உலகீசர் (ஜகன்னாதர்) என்னும் சிவலிங்கம்!அவருக்கே முதல் பூசைகள் செய்யப்படுகின்றன!
மூலவரின் காலடியில் இரு மருங்கிலும் அவரைப் போலவே சின்னஞ் சிறுசிலைகள்! வெள்ளியில் ஒன்று; தங்கத்தில் ஒன்று! திருவெளி (ஸ்ரீவேளி/சீவேளி என்று திரிந்து விட்டது). கருவறையைக் காலையிலும்மாலையிலும் வெளி-வலம் வரும் மூர்த்திகளாக அவற்றைப்பயன்படுத்துகிறார்கள்.
ஆலயத்தில் சிறு சிவப்புக் குன்று-செம்பாறைகளை குடைந்தே கருவறைஅமைந்துள்ளது அதனால்தான் செந்து+இல்=செந்தில் என பெயர் ஆனது.பின்னாளில் பிரகாரங்கள் (வீதிகள்) என்று பெருகிப் பாறைக் குன்றுகள்மறைந்தாலும், இன்றும் இந்தச் செந்திலில் உள்ளவனே மூலத்தானத்துமுதல்வன்.
கிழக்கே கடலைப் பார்த்த திருமுகம். ஒருமுகம். சிரிமுகம். பாலமுகம்.சிறு பாலகன் ஆதலால், அதே உயரம் தான் ஆளுயரம். இல்லை! தலைமுடிமாலை சூடி, மணி முடி தரித்து, வங்கார மார்பில் அணிப் பதக்கமும் தரித்து,வெற்றிப் பீடத்தில் ஏறி நிற்கும் காட்சி!
சூரசம்ஹாரம் நடைபெறும் தினத்தில் திருச்செந்தூர் ஆலயக் கடல் நீரானதுசம்ஹாரம் நடைபெறுவதற்கு வசதியாக செந்தில் ஆண்டவனின் அருள்கருணையால் உள் முகமாகச் சென்று சூரசம்ஹாரம் முடிந்து செந்தில்ஆண்டவர் இருப்பிடம் திரும்பும் போது கடலானது பழைய நிலைக்குவருவதை காண முடிவதுடன் கருவறையில் உள்ள மூலவரின் முகத்தில்சூரசம்ஹார களைப்பினால் ஏற்பட்ட வியர்வைத் துளிகளையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
முருகப் பெருமான் சூரபத்மனோடும் அவனது படையினருடனும். பத்துதினங்கள் நடந்த போரில் அசுரர்களை வென்று சூரபத்மனை மயிலாகவும்,சேவலாகவும் மாற்றினார். மயில் முருகனுக்கு வாகனம் ஆகியது. சேவல்முருகனின் வெற்றிக்கொடி ஆகியது.
சூரசங்காரங்கள் முடிந்த பின்னர், அமரேந்திரன் (இந்திரன்)தேவயானையை முருகப் பெருமானிடமே ஒப்படைக்க விழைகிறான்.முருகனும் சரவணப் பொய்கையில் முன்னர் தாம் அருளிய வாக்கின்படியே, தேவானை அம்மையைப் திருப்பரங்குன்றில் மணக்கிறார். பின்னர், அவ்வண்ணமே வள்ளி அம்மையையும், திருத்தணிகையில் மணம்புரிகிறார்.



ஒரு சமயம் தாரகாசுரன் என்பான், தான் பெற்ற வரத்தினைத் தவறாகக்கையாண்டான்; மக்களையும், நல்லோர்களையும், முனிவர்களையும்,ரிஷிகளையும் மிகவும் கொடுமைப்படுத்தினான்.அவனதுகொடுமையிலிருந்து விடுபட முனிவர்களும், ரிஷிகளும்
சிவபெருமானிடம் முறையிட்டார்கள்; அசுரனின் கொடுமையிலிருந்துதங்களைக் காப்பாற்ற பிரார்த்தனை செய்தார்கள். பக்தர்களின் நிலையறிந்தசிவபெருமான், தன் மகன் முருகனை அழைத்து தாரகாசுரனை
அழிக்க உத்தரவிட்டார். மேலும் முருகனுக்கு பதினாறுவகைஆயுதங்களையும் கொடுத்து அருளாசி வழங்கினார். தன் தந்தையிடம்அருளாசி பெற்ற முருகப் பெருமான், தன்னுடைய படையுடன் தாரகாசுரன்ஆட்சி புரிந்த மாயாபுரி நகருக்குச் சென்றார்.
முருகப் பெருமானின் படையினைக் கண்ட அசுரன், கிரெளஞ்ச மலையின்உதவியுடன் முருகப் பெருமானின் படையை மயக்கம் அடையச் செய்தான்.படை வீரர்கள் மயக்கமடையக் காரணமாக இருந்த கிரெளஞ்ச மலையைதன்னுடைய வேலாயுதத்தால் தாக்கி, இருக்குமிடம் இல்லாமல்
செய்தார் முருகப் பெருமான். பின் அதே வேகத்துடன் மாயாபுரிக்குச்சென்று, தன்னை எதிர் கொண்டு வந்த தாரகாசுரனை அழித்து, பக்தர்களுக்குஅருளாசி வழங்கினார். அந்த நாள் தைப்பூச நட்சத்திரமாகும்.
இந்நாளில் விரதம் கடைப்பிடித்து முருகப் பெருமானை வழிபட்டு,அன்னதானம் செய்ய
வேண்டும். இதனால்
- இச்சா சக்தி
- கிரியா சக்தி
- ஞான சக்தி
என்ற மூன்று வகை சக்திகளையும் பெற்று வளமுடன் வாழலாம் என்றுஞான நூல்கள் சொல்கின்றன.
சிவபெருமான் தைப்பூச நன்னாளில் அம்பிகையுடன் ஆனந்தத் தாண்டவம்ஆடினார் என்று புராணங்கள் கூறுகின்றன. தேவர்களும், முனிவர்களும்சிவபெருமானுடைய ஆனந்தத் தாண்டவத்தை எல்லோரும் கண்டு மகிழும்வண்ணம் சிதம்பரத்தில் கனகசபை உருவாக்கினர்.
இன்றும் அதில் நடராஜப் பெருமான் நடன தரிசனம் தந்துகொண்டிருக்கிறார்.
நெல்லையம்பதியில், தாமிரபரணி ஆற்றங்கரையில் தவமிருந்துஇறைவனின் திருவருளினை உமையவள் பெற்றாள். அந்த நாள் தைப்பூசம்என்பர். இந்தப் புனித நாளில் சுபகாரியங்கள் நடத்தினால் தம்பதிகள் எல்லாவளமும் பெற்று சிறப்புடன் வாழ்வர் என்பது ஐதீகம்.
*"எவ்வுயிரையும் தம்முயிர் போல் கருதி அன்பு செலுத்தினால் ஒழியஇறைவனின் திருவருளைப் பெற இயலாது," *எனக் கருதி,* "வாடியபயிரைக் கண்ட போதும் உள்ளம் வாடியவர்,"* வள்ளலார். அவர் ஜோதிவழிபாட்டினை இதே தைப்பூசத் திருநாளில் தன்னைப்
பின்பற்றுபவர்களுக்கு 25.1.1872ம் ஆண்டு அறிமுகப்படுத்தி வைத்தார்.இன்றும்
இந்த ஜோதி தரிசனத்தை வடலூர் திருத்தலத்தில் தைப்பூச தினத்தில்ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசிக்கிறார்கள்.
இந்நாளில் விரதமிருந்து முருகப் பெருமானை வழிபட்டால்
குறையில்லா வாழ்வும், நிறைந்த செல்வமும் கிட்டும்.





விரதமாவது மனத்தை ஐம்புலன்களின் எண்ணப்படி செல்லாதுகட்டுப்படுத்தி உணவை விடுத்தேனும் குறைத்தேனும், மட்டுப்படுத்திமனம், வாக்கு, காயம் எனும் முக்காரணங்களாலும் இறைவனைவழிபடுதலாகும்.

முருகனுக்குரிய விரதங்கள்:

விரதங்களுள் கலியுகவரதனும் கண்கண்ட தெய்வமுமான கந்தனுக்குரியசிறந்த விரத நாட்கள் மூன்றாகும். ஒன்று வாரத்தையும் மற்றதுநட்சத்திரத்தையும் மற்றொன்று திதியையும் கொண்டமைந்தவை யாகும்.
அவை முறையே சுக்கிரவார (ஐப்பசி வெள்ளி) விரதம், கார்த்திகை(கார்த்திகை மாதக் கார்த்திகை நட்சத்திரம் முதல் மாதந்தோறும் வரும்கார்த்திகை நட்சத்திரங்களில் அனுட்டிக்கும்) விரதம், கந்தஷஷ்டி விரதம்ஆகியவையாகும். இவற்றுள் மிகச் சிறந்த விரதம் கந்த ஷஷ்டிவிரதமேயாகும்.
இவ்விரதம் இந்தியாவில் மிகச் சிறந்த பழைமையும் பெருமையும் மிக்கதிருச் சொந்தூர், திருப்பரங்குன்றம் முதலிய அறுபடை வீடுகளிலும், மிகச்சிறப்பாக பக்தி பூர்வமாக மக்களால் விரும்பி மன ஒருமைப்பாட்டுடன்அனுட்டிக்கப்படுகின்றது.
வருடந்தோறும் ஐப்பசி மாத தீபாவளியினையடுத்து வரும் பிரதமை முதல்ஷஷ்டியீறாகவுள்ள ஆறு நாட்களிலும் பக்தி சிரத்தையுடன்கைக்கொள்ளப்படும் விரதம் இதுவாகும்.
அடியார் விரும்பும் பேறுகளையும் சகல செளபாக்கியங்களையும் சிறப்பாகபுத்திர பாக்கியத்தையும் தரவல்லது இவ்விரதம். இதனை“சட்டியிலிருந்தால் அகப்பையில் வரும்” எனும் பழமொழிஉணர்த்துகின்றது.
இதன் வெளிப்படையான பொருள் சாதாரணமானதே. எனினும் உட்பொருள்அர்த்தம் அதிகம் பொதிந்தது. அதாவது. சட்டியில் கந்த ஷஷ்டியில்,இருந்தால்= விரதமிருந்தால், அகப்பையில்= கருப்பையில், வரும்=குழந்தைச் செல்வம்= கரு உண்டாகும் என்ற அருமையான கருத்தும்தொனிக்கின்றதல்லவா! பிரதமைத் திதியில் தொடங்கி பகல் 12நாழிகைக்குக் குறைவின்றிப் பஞ்சமித் திதியும் பின் சட்டித் திதியும் உள்ளதினமே சூரன்போர் நாளாகும்.
இதனை வேடிக்கையாக “சங்கரப் பிள்ளை சட்டியிலே மாவறுத்தார்” என்றுஒரு பழமொழி கூறுவர் ஆன்றோர். இதன் உட்பொருள்: சங்கரப்பிளை=சங்கரனின்=பரமசிவனாரின் பிள்ளை= குமரனான கந்தசுவாமியார்,சட்டியிலே= கந்தஷஷ்டித் திதியன்று மா= மாமரமாக நின்ற சூரனை,அறுத்தார் = தனது வேற்படையினாலே இரு கூறாகப் பிளந்தார்.
பல திருத்தலங்களிலே இவ்வாறு நாட்களும் தீவிர முருகனடியார்கள் முழுஉபவாசமாக அன்ன ஆகாரமின்றி பகல் முழுதும் தூயராகக் கோவில்களிலேயே தங்கிக் காப்புக்கட்டி முருக நாம பஜனை, பூசை புராண படனம்கேட்டல், ஆகிய இறை சிந்தனையுடன் நீரும் குடிக்காமலிருந்து மாலைபூசை தரிசனம் முடிந்ததும் பானக்கம்= பானகம் எனும் நீராகாரத்தை மட்டும்அருந்தி கடுந்தவமிருப்பது
முதல்நாளான அமாவாசையன்றே ஒருநேர உணவுடன் மறுநாளானபிரதமையன்று அதிகாலை ஸ்நானம் செய்து தூய ஆடையணிந்துகோயிலுக்குச் சென்று திரிகரண சுத்தியுடன் விரதமனுட்டிக்கத் தொடங்கவேண்டும். ஆலயங்களில் ஆரம்ப நாளிலேயே சங்கல்ப்பம் செய்து காப்புக்கட்டி ஆறுநாட்களும் நோன்பினைக் கடைப்பிடித்து ஏழாம் நாளானபாரணையன்று அதிகாலை நீராடி அனுட்டானம் செய்து பாரணைப்பூசையை மனதாரத் தரிசித்து வேண்டி காப்பினை அவிழ்த்துத் தர்ப்பையுடன் குருதட்சனை கொடுத்து அடியார்களுக்கு உணவும் கொடுத்துப்பாரணை செய்தலே யாவரும் கைக்கொண்டு வரும் நடைமுறையாகும்.
இது மிக்க மன ஒருமைப்பாட்டுடன் இன்றும் திருச்செந்தூர் முதலாமறுபடை வீடுகளிலேயும், இலங்கையில் யாழ் நகரிலுள்ள முருகன்ஆலயங்களிலும், திருகோணமலையிலே வில்லூன்றிக் கந்தசுவாமிகோவில் முதலிய ஆலயங்களிலும் இன்றும் நடைமுறையிலுள்ளதைக்காணலாம்.
இவ்வாறு அனுட்டிக்க இயலாதோர் முதல் ஐந்து நாட்களிலும் பகல்ஒருவேளை உணவுட் கொண்டு சூரன் போர்த்தினமான ஷஷ்டியன்றுஉபவாசம் = அன்னாகாரம், நீரருந்துதல் எதுவுமின்றி உபவாசமிருந்து சூரன்போர் முடிய நீராடிக் கடவுள் தரிசனம் செய்து பானகம் மட்டுமருந்திவிரதமிருக்கலாம். சூரன் போரன்று நித்திரையினைத் தவிர்த்தல் வழமை.ஆனால் இது அனைவராலும் கைக்கொள்ள இயலாத ஒன்றே.இயன்றவர்கள் கடைப்பிடிக்க வேண்டியதே!

விரத உத்தியாபனம்: (விரதத்தினை நிறுத்துதல்)

ஆறு, அல்லது பன்னிரண்டு வருடங்கள் உபவாசமாயினும் சரிஒருபோதுணவாயினும் இடையில் மாற்றமின்றி அனுட்டித்துக் குறித்தவருடம் பூர்த்தியானதும் விரத உத்தியாபனம் செய்து உரியபடிவிரதத்தினை நிறுத்துவதே முறையும் வழமையுமாகும்.

விரதம் தோன்றிப் பரவியமை:

முருகப் பெருமான் தாரகாசுரன் சிங்க முகாசுரன் சூரபத்மன் ஆகியோருடன்ஐப்பசிமாத வளர்பிறை முதலாறு நாட்களில் போரிட்டு வென்றார். கந்தன்கருணையினையும் அவரது பேரருட் செயலையுங் கண்டு களிப் பேருவகைகொண்ட தேவர்களும் முனிவர்களும் இவ்வாறு நாட்களையும் புனிதநாட்களாகக் கொண்டு நோன்பு அனுட்டித்தனர்.
இதனையே பூலோகமக்களும் கடைப்பிடித்து அறுமுகப் பெருமானின்திருவருள் பெற்றுய்ய இவ்விரதத்தினை அனுட்டிக்கத் தொடங்கினர்.

விதிவிலக்கு:

இவ்விரத நாட்கள் பெரும்பாலும் ஆறுநாட்கள் வரும். ஆனால் ஒருசிலவருடங்களில் பஞ்சாங்க நேரக் கணிப்புக்கு அமைய திதிகளின் நேரம் காலஅளவு குறைவு ஏற்படுமிடத்து ஐந்து நாட்களும் வரலாம்.
கண்கண்ட தெய்வமாகக் காட்சி தருகின்ற ஷண்முகப் பெருமானைத்தாலாட்டி வளர்த்த கார்த்திகைப் பெண்டிர் ஆறுபேர், படைவீடுகளும் ஆறு,அவருக்குரிய சக்தி வாய்ந்த மந்திர அட்சரங்கள்-அதாவது எழுத்துக்களும்ஆறு யந்திரத்தில் கீறப்படுகின்ற கோணங்களும் ஆறு, ஷட்கோணம்அறுகோணம் என்பர். கைமேல் பலன் அளிக்கின்ற விரதநாட்களும் ஆறு.

விரதகாரர் பெறும் பேறு:

கந்தனுக்கு கந்த விரதமாகிய கந்தஷஷ்டி விரதமனுஷ்டிப்போர்; பெறும்பேற்றை “ஏழையர், வதுவை வேண்டினேற்ற கன்னி யரைச் சேர்வர் வாழு”நன் மகவு வேண்டின் மக்களைப் பெறுவரெ ன்றும், பாழிவாய் மணிச்செஞ்சூட்டுப் பஃறலை யனந்தன் றாங்கு மாழிசூழுலக மெல்லாம் வேண்டினுமடைவர் மாதோ”
இதன் பொருள் ஏழைகள், விவாகஞ் செய்ய விரும்பினால் இயைந்தகன்னியர்களை மணஞ்செய்வர், நீடுழி வாழ்கின்ற நல்லபுதல்வரைவிரும்பினால் எந்நாளும் அவரைப் பெறுவர். பருத்தவாயையும் இரத்தினம்பொருந்திய சிவந்த சுடிகையையுமுடைய பலதலைகள் பொருந்தியஆதிசேடன் சுமக்கின்ற கடல்சூழ்ந்த உலகத்தையெல்லாம் பெறுவர்.
பலன் விழையாது நோக்கிற் பாவம் தொழிந்து சிந்தை நலமுற முமுட்சுவாகிக் குருவினால் ஞானம் பெற்றுப் புலன்வழிச் செலவு நீக்கிப் போதபூரணவானந்த வலைகடல் வடிவாங் கந்த னடியிணை நீழல் சேர்வார்(இதன்பொருள்:- யாதொரு பலனையும் விரும்பாது விரதம் அனுட்டிப் போர்பாவம் நீங்கி சித்தசுத்தியுடையவர்களாய் இயல்பாய் முத்தி விருப்பம்எழப்பெற்று, பின் ஞான சற்குருவையடைந்து, ஐம்புலப்பகைவராதியோரைவென்று, பூரண ஞானானந்த சொருபராகும் முருகப் பெருமானின் திருவடிநிழலில் பிறப்பிறப்பு நீங்கிப் பேரானந்தப் பெருவாழ்வு பெறுவர் என்பதாம்).எனவே நாமும் இவ்விரதத்தினை நோற்றுக் கலியுகவரதனும், கண்கண்டதெய்வமுமாகிய கந்தசுவாமியாரின் திருவருளினால் பூரணமான ஆனந்தவாழ்வு பெற முயலுவோமாக.

சஷ்டி விரதம்

முருகன் துணை
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
"அமரர் இடர் தீர அமரம் புரிந்த 
குமரன் அடி நெஞ்சே குறி"
சஷ்டி விரதம் ஐப்பசி மாத தீபாவளி அமாவாசையின் பின் அதாவது வளர்பிறை பிரதமை முதல் ஆரம்பித்து, ஆறாம்/ஐந்தாம் நாளான சஷ்டி திதி வரையான ஆறு தினங்களும் நோற்கப்படும் முருகப்பெருமானுடைய சிறப்பான நோன்பாகும். 
அறியாமை என்னும் அஞ்ஞான இருளை அகற்றி, மெய்ஞானமாகி மிளிர்கின்ற பரம்பொருளின் முக்திப் பேரருளை அடைவதற்காகச் சைவப் பெருமக்களால் அனுஷ்டிக்கப்படும் விரதங்களுள் தலையாயது கந்தசஷ்டி விரதம். முருகனுக்குரிய விரதங்கள் மூன்று. அவையாவன வெள்ளிக்கிழமை (வாரம்) விரதம், கார்த்திகை (நட்சத்திரம்) விரதம், கந்த சஷ்டி (திதி) விரதம் என்பனவாம். வல்வினை நீக்கி, வரும் வினை போக்கி, செல்வமும் செல்வாக்கும் தந்து; அழகும், அறிவும் தந்திடும் வள்ளி மணாளனை, வடிவேலனை வழிபடும் விரதங்களில் மிகவும் சிறந்தது இந்தக் கந்தசஷ்டி விரதமாகும்.

அனாதியாகவே "செம்பில் களிம்பு போன்று" ஆன்மாக்கள் ஆணவமலத்தால் பீடிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆன்மாக்கள் இப்பூவுலகில் பிறந்ததன் நோக்கம் சகல இன்பங்களையும் அறவழியில் அனுபவித்து, இறுதியில் பிறப்பு, இறப்பு அற்ற மோட்ச நிலையில் இறைவனுடன் இரண்டறக் கலந்தற்கேயாகும். எனவே முருகப் பெருமானை வழிபடுவதன் மூலம் தமது கன்ம வினைகளை மிக விரைவில் அறுத்து ஆன்மாக்களின் இறுதி இலட்சியமாகிய மோட்சத்தினை இலகுவில் அடையலாம் என்பது ஐதீகம்.
ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும் மலங்களை மட்டுமன்றி ஆறுவகை எதிரிகளான காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம், தற்பெருமை ஆகிய வகைகளை அழித்து முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு, பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்டுவதால் "ஒப்பரும் விரதம்" எனஸ்கந்தஷஷ்டி விரத மகிமை பற்றிக் கந்தபுராணம் சிறப்பாகப் புகழ்ந்து பேசுகின்றது.
கந்தசஷ்டி விரதம்; எல்லா முருகன் ஆலயங்களிலும் அதிவிஷேச அபிஷேக ஆராதனைகள், பூசைகள் நிறைந்த பக்தியான விரதமாக அனுஸ்டிக்கப் பெறுவதுடன் சூரன்போர் காட்சியும் வெகுசிறப்பாக நிகழ்தப்பெறுகின்றன.
முருகன் ஆலயத்தில் பக்தர்கள் உண்ணா நோன்பிருந்து; பக்திசிரத்தையுடன் முருகனை நினைந்துருகி வழிபட்டு, தியானத்திலும், பஜனை செய்வதிலும், கந்தரனுபூதி, கந்தசஷ்டிகவசம், கந்தரலங்காரம் ஓதுவதிலும், கந்தபுராணம்-பயன் கேட்பதிலும் தம்மை ஈடுபடுத்தி முருகனருள் வேண்டி நிற்பர்.
அத்துடன்; விரத முடிவு தினமான சஷ்டிதினம் (சூரன்போரில்) முருகன் வீசும் வேல் குறிதவறாது சூரனின் சகோதரர்களான; யானை முகம் கொண்ட தாரகன், சிங்க முகம் கொண்ட சிங்கன் கழுத்தில் வீழ்ந்து தலைகள் சாய்வதும்; பல மாயைகள் செய்து போர்புரிந்து கடைசியாக, நடுக்கடலில் மாமரமாய் நின்ற சூரன்-பதுமனை சங்காரம் "சங்கரன் மகன் சட்டியில் மாவறுப்பதை" (சங்கரன் புதல்வராகிய முருகப் பெருமான் சஷ்டித் திதியிலே மாமரமாகதோன்றிய சூரனை, இரண்டாக பிளந்து சாங்காரம் செய்யும் காட்சியை கண்டு) தரிசித்து தம் வினை போக்க பக்தர்கள் காதலாகி கசிந்துருகி நிற்கும் காட்சியும், கண்கொள்ளாக் காட்சிகளாகும்.
கொடுங்கோலாட்சி செலுத்திய ஆணவத்தின் வடிவமாகிய சூரனையும், கன்மத்தின் வடிவமாகிய சிங்கனையும், மாயா மலத்தின் வடிவமாகிய தாரகனையும், (ஆணவம், கன்மம், மாயை என்ற) அசுர சக்திகளையெல்லாம் அழித்து, நீங்காத சக்தியை கலியுக வரதனான முருகப் பெருமான் நிலை நாட்டிய உன்னத நாளே கந்த சஷ்டியாகும்.
கந்தசஷ்டி விரத நாட்களில், ஆன்மா மும்மலங்களையும் நீக்குவதற்குரிய பக்குவமான மனதுடன் தனித்து, விழித்து, பசித்துஇருக்க வேண்டும். உணவையும் உறக்கத்தையும் தவிர்த்து, தனித்திருந்து செய்யும் தவமே கந்தசஷ்டி விரதமாகும். உணர்வுகளை அடக்கி உள்ளத்தை ஒருநிலைப்படுத்தி கந்தப் பெருமானின் பெருமை பேசி இம்மைக்கும் மறுமைக்கும் சிறந்த வழியமைப்பதே இந்த விரதத்தின் பெறுபேறாக அமைகிறது. 
கந்தசஷ்டி விரதத்தை முறையாக அனுஷ்டிப் போர்க்கு இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளுக்கும் தலைவனான முருகப்பெருமானது பேரருள் கிட்டும். சஷ்டியன்று கந்தனுக்கு அபிஷேகம் செய்த பாலைப் பருகுவோர்க்கு புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்!. 
சகல செல்வங்களையும், சுகபோகங்களையும் தரவல்ல இந்த விரதம் புத்திரலாபத்துக்குரிய சிறப்பான விரதமுமாகும்."சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பதற்கேற்ப; ஸ்கந்தஷஷ்டியில் விரதமிருந்தால் ”அகப் பையாகிய"கருப்பையில்" கரு உண்டாகும் என்பதும்; கந்தர் சஷ்டி விரதத்தை முறையாகக் கைக்கொள்வதால் அகப்"பை" எனும்"உள்ளத்தில்" நல்ல எண்ணங்களும் பக்தி எனும் பாதையால் எழுந்த அமைதியும் அமையும் என்பதும் மறை பொருள்களாகும்.
அறிவு வளர்ச்சிக்கு விஞ்ஞானம் உதவுவதைப் போன்று மன வளர்ச்சிக்கு சமயம் அடிகோலுகின்றது. இறைவன் ஒருவன், அவன் மக்களின் தந்தை என்றெல்லாம் போதிப்பதன் மூலம் அன்பு, சகோதரத்துவம் போன்ற ஜீவ ஊற்றுகளை அருளி மக்களின் வாழ்வு நலம் பெறச் சமயம் உதவுகின்றது. நல்லவர்களைப் பாதுகாக்கவும் தீயவர்களை அடக்கவும் தர்மத்தை நிலை நாட்டவும் யுகந்தோறும் இறைவன் அவதாரம் செய்தருளுகின்றான்.
தனு, கரண, புவன, போகங்கள் அனைத்தையும் படைத்தலும், காத்தலும், அழித்தலும் இறைவனது இடையறாத திருவிளையாடல்கள். இறைவனை உணர்ந்து அவனைச் சரணடைந்தால் அழிவில்லாத பேரின்பம் அடையலாம் என்பது சமயங்கள் காட்டும் பேருண்மை. இறைவனது திவ்ய அவதாரத்தையும் செயலையும் யாரொருவர் உள்ளபடி அறிகின்றார்களோ அவர்கள் மீண்டும் பிறவாமல் இறைவனையே அடைந்து விடுகிறார்கள் என்று கீதையில் கிருஷ்ணபகவான் கூறியுள்ளார்.
தெய்வ அவதாரங்களில் தீய சக்திகளை அடக்கி நல்லவர்களைக் காத்தார்கள் என்றால் இச்செயல்கள் தீமைகளை நீக்கி நன்மைகளையே செய்து மக்கள் உய்ய வேண்டும் என்று போதிப்பதற்கே நிகழ்ந்தன என உணர்ந்து பக்தியுடன் வாழ்ந்து இகபர நலன்களை அடைய முயலவேண்டும். இத்தகைய அவதார இரகசியத்தை விளக்கி மக்கள் உய்வதற்கு உகந்த பெருவழிகளை விளக்கிக் காட்டுவதே ஆறுமுகப்பெருமானின் அவதாரம். 
வசிட்ட மாமுனிவர் முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு சஷ்டி விரத மகிமையையும் வரலாற்றையும் விதிமுறைகளையும் உபதேசித்த பெருமையையுடையது. அரசர்கள், தேவர்கள், முனிவர்கள் பலரும் இந்த விரதம் அனுஷ்டித்து வேண்டிய வரங்களைப் பெற்றதோடு, இம்மை இன்பம், மறுமை இன்பம் ஆகியவற்றை பெற்றனர்.
இவ்விரதம் தொடர்பான "புராணக் கதை":
பிரம்மாவிற்கு தக்கன், காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தனர். இவர்களுள் தக்கன் சிவனை நோக்கித் கடுந்தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றிருந்த போதிலும் இறுதியில் சிவனால் தோற்றுவிக்கப் பெற்ற வீரபத்திரக் கடவுளால்கொல்லப்பட்டார். காசிபனும் கடுந்தவம் புரிந்து சிவனிடம் இருந்து மேலான சக்தியைப் பெற்றான். ஒருநாள் அசுரர்களின் குருவாகிய சுக்கிரனால் (நவக்கிரகங்களுள் வெள்ளியாக கணிக்கப்படுபவர்) ஏவப்பட்ட மாயை என்னும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவ வலிமை எல்லாவற்றையும் இழந்தான்.
இதனைத் தொடர்ந்து காசிபனும் மாயை என்னும் அசுரப் பெண்ணும் முதலாம் சாமத்தில் மனித உருவத்தில் இணைந்து மனித தலையுடன் கூடிய சூரனும், இரண்டாம் சாமத்தில் சிங்க உருவில் இருவரும் இணைந்து சிங்க முகத்துடன் கூடியசிங்கனும், மூன்றாம் சாமத்தில் யானை உருவில் இணைந்து யானை முகத்துடன் கூடிய தாரகனும், நான்காம் சாமத்தில் ஆட்டின் உருவத்தில் இருவரும் இணைந்து ஆட்டுத் தலையுடன் கூடிய அசமுகி என்னும் அசுரப் பெண்ணும் பிறந்தனர்.
மாயை காரணமாக தோன்றிய இந்நால்வரும் ஆணவ மிகுதியால் அகங்கார மமகாரம் (செருக்கு) கொண்டு காணப்பட்டனர். இவர்களுள் சூரபதுமன் சிவனை நோக்கி கடுந் தவம் புரிந்து; 108 யுகம் உயிர்வாழவும் 1008 அண்டம் அரசாளும் வரத்தையும்,இந்திரஞாலம் எனும் தேரையும், சிவன் சக்தி அன்றி வேறு ஒரு சக்தியாலும் அழிக்க முடியாது எனும் வரத்தையும் பெற்றிருந்தான். இவ்வரத்தினைப் பெற்ற சூரன் முதலானோர் தம்மைப் போல் பலரை உருவாக்கி அண்ட சராசரங்கள் எல்லாவற்றையும் ஆண்டு இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலிட்டு சொல்லொணா துன்பங்களைக் கொடுத்து அதர்ம வழியில் ஆட்சி செய்தனர்.
அசுரர்களின் இக்கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள் கைலாயம் சென்று சிவனிடம் முறையிட்டனர். இறைவனும் அவர்கள்மேல் திருவுளம் கொண்டு அவர்களை அந்த துன்பத்தில் இருந்து காப்பாற்றும் நோக்குடன் தனது (6) நெற்றிக் கண்களையும் திறக்க (சிவபெருமானுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் ஆகிய ஐந்து முகங்கள் உண்டு. இவை தவிர ஞானிகளுக்கு மட்டுமே தெரியக்கூடிய "அதோமுகம்" (மனம்) என்ற ஆறாவது முகமும் உண்டு) அவைகளிலிருந்து  தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் வாயுபகவான் ஏந்திச் சென்று; வண்ண மீனினம் துள்ளி விளையாடும் தண்மலர் நிரம்பிய சரவணப்பொய்கையில்  தாமரை மலர்களின் மீது சேர்க்கப்பெற்றன.
அந்த தீப்பொறிகள் ஆறும்; உலகின் பொன்னெல்லாம் உருக்கி வார்த்ததென ஆறு குழந்தைகள் தோன்றின. அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் சீராட்டி பாலூட்டி வளர்த்து வரும் வேளை; அகிலலோக நாயகி பார்வதி தன் மைந்தர்களை அன்புடன் கட்டியணைத்திட அவையாவும் ஒரு திருமேனியாக வடிவங்கொண்டு ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடைய ஒரு திரு முருகனாக தோன்றினன் உலகமுய்ய. ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடைய திருவுருவை பெற்றமையால் "ஆறுமுக சுவாமி" எனப் பெயர் பெற்றார்.
இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீர்யம், வைராக்கியம், புகழ் என்னும் ஆறு குணங்களையும் குறிக்கின்றன. பிரணவ சொரூபியான முருகப் பெருமானிடம் காக்கும் கடவுளான முகுந்தன், அழிக்கும் கடவுளான ருத்ரன், படைக்கும் தெய்வமான கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடக்கம். ஆறுமுகன் சிவாக்னியில் தோன்றியவன். அதனால் "ஆறு முகமே சிவம்; சிவமே ஆறுமுகம்" எனப்படுகிறது. 
முருகப்பெருமான் அசுரர்களான சூரபத்மாதியரை அழிக்கப் போர் புரிந்த திருவிளையாடலையே நாம் கந்தசஷ்டி விழாவாகக் கொண்டாடுகிறோம். சூரபத்மனின் ஒரு பாதி "நான்' என்கிற அகங்காரம்; மற்றொரு பாதி "எனது" என்கிற மமகாரம்.
பன்னிரண்டு கைகளுடன் ஆறு திருமுகமும் கூடிய அழகின் அழகாய் தேவசேனாதிபதியாய், தேவரும் முனிவரும் வாழ்த்த சர்வ சத்தியாம் பார்வதி தந்த தனிப்பெரும் ஞான வேலை சக்தியாகக் கொண்டு சூரபன்மனைச் சம்ஹாரம் செய்யப் புறப்பட்டு சென்றார்.  அவர்களுடன் முருகப் பெருமான் மேற்கொண்ட போர் ஐப்பசித் திங்கள் வளர்பிறையில் பத்து நாட்கள் நடைபெற்றது. முதல் நான்கு நாட்களில் சூர பத்மனைச் சேர்ந்த வீரர்களை அழித்து அவனது பலத்தை துவம்சம் செய்தார்.
தாரகனையும் அவனுக்குத் துணை நின்ற கிரௌஞ்சத்தையும் பிளந்து, சிங்கமுகனை அழித்து பின் சூரனின் சேனை அழிந்த போதும் சூரபதுமனின் ஆணவம் அழிய இல்லை.   அதனால் முருகன் தன் திருப்பெரு வடிவம் (விஸ்வரூபம்) காட்டி, எல்லாம் வல்ல பரம்பொருள் தாமே என பரமேசுர வடிவம் காட்டி, சிவனும் அவன் மகனும் மணியும் ஒலியும் போல ஒருவரே என்றுணர்த்தியும், தன் தன்மை மாறாது மாயைகள் பல புரிந்து போர் செயலானான்.
கடைசியாக; நடுக்கடலில் மாமரமாய் நின்ற சூரபத்மனைத் முருகன்; தன் வேலாயுதத்தால் இரு கூறாக்கினார். ஆணவம் அழியப் பெற்ற சூரன் தம் தவறை உணர்ந்து; தன்னை மன்னித்து, ஏற்றுக்கொள்ளும்படி மன்றாடி வேண்டி நிற்க; (”ஈருடலும் ஓர்ருயுருமய் இருந்த சூரபதுமன்”) அவை இரண்டையும் முருகன் தன் அருளால் சேவலாகவும் மயிலாகவும் மாற்றி, மயிலை வாகனமாகவும் சேவலைக் கொடியிலும் தன்னுடன் பிணைத்துக் கொண்டார்.
ஞானசக்தியான வேலின் தாக்கத்தால் ஆணவ மலம் வலியிழந்து ஆன்ம பரம்பொருளின் திருவடி அடைந்ததெனும் மறைபொருளை உணர்த்த அனுஷ்டிக்கப்படும் விரதமே கந்தர் சஷ்டி விரதம். இந்த அருட்பெருங்கருணைச் செயலை வியந்து இப்போர் நிகழ்ந்த காலமாகிய ஐப்பசி மாத வளர்பிறை முதலாறு நாட்களையும் விரத நாட்களாகக் கொண்டு முனிவரும் தேவரும் நோற்று வந்தனர். இதுவே ஸ்கந்தசஷ்டி என்ற நாமத்தோடு நாம் அநுஷ்டிக்கும் விரதமாகும்.
விரத அனுஷ்டானங்களும், விதிமுறைகளும்:
நாம் ஆறுமுகநாவலரின் "விரதம்" என்பதற்கான வரைவிலக்கணத்தை நோக்கின் "மனம்; பொறி வழி போகாது நிற்றற் பொருட்டு உணவை விடுத்தேனும், சுருக்கியேனும்; மனம், வாக்கு, காயம் எனும் மூன்றினாலும் இறை அன்போடு, கடவுளை விதிப்படி வழிபடல்" என்கிறார். அவ்வாறான கட்டுப்பாடுகளினூடாக ஐம்புலனடக்கி மன அடக்கத்தை கந்த சஷ்டி விரதம் நமக்கு உணர்த்துகிறது.
இவ்விரதம் ஆறு வருடங்கள் தொடர்ந்து கைக்கொள்ளப்பட வேண்டும் (கார்த்திகை விரதம் பன்னிரெண்டு வருடங்களும், வெள்ளிக்கிழமை விரதம் மூன்று வருடங்களும் அனுஷ்டிக்கப்படுகின்றது). உபவாசம் அல்லது ஒரே நேர உணவு என்பது உணவு நியதி ஆறு வருடமும் அல்லது பன்னிரண்டு வருடங்களும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். முறைப்படி சங்கல்பபூர்வமாக ஆரம்பித்து கடைசி வருடம் விரத முடிவில் விரதோத்யாபனம் செய்து (நிறுத்தி) பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
கந்த சஷ்டி என்னும் போது அதற்கென சில விரத நியதிகள் தனித்துவம் பெற்றுத் திகழ்கின்றன. இவ்விரதம் அனுஷ்டிக்க விரும்புவோர் விரத நாட்களில் வைகறையில் துயில் எழுந்து சந்தியாவந்தனம் முதலிய காலைக்கடன்களை முடித்து, ஆற்றில் இறங்கி நீரோட்டத்தின் எதிர்முகமாக நின்று, தண்ணீரில் ஷட்கோணம் வரைந்து, அதில் சடாக்ஷர மந்திரத்தை எழுத வேண்டும். "ஓம்' என்ற பிரணவ மந்திரத்தையும் நடுவில் எழுதி, முருகனை மனதில் இருத்தி; நீரில் மூழ்கி எழ வேண்டும். 
கிணறு, குளம் போன்ற நீர்நிலைகளில் நீராடுபவர்கள் வடதிசை நோக்கி நின்று மேற்கூறியவாறு தூய நீராடி, தோய்த்துலர்ந்த ஆடையணிந்து அமைதியான இடத்திலோ அல்லது ஆலயத்திலோ அமர்ந்து அல்லல் தீர்க்கும் ஆறுமுகப் பெருமானை நினைந்து தியானம் செய்ய வேண்டும். தியானத்துடன் நில்லாது மனம் பொறிவழிச் செல்லாது இறையருளை நாடி வேறு சிந்தனையின்றி களிப்புற வேண்டும். விரத காலங்களில் மனம் வேறு எண்ணங்களில் ஈடுபடாதிருக்க கந்தசஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரனு பூதி, கந்தர் கலிவெண்பா போன்ற நூல்களைப் படிக்க வேண்டும். முருகனாலயங்களில் இவ்விரத நாட்களில் கந்தபுராண படனம் நடைபெறும். இதை தவறாது கேட்டல் மிகவும் ஆன்மிக நன்மை பயக்கும்.
தண்ணீர் கூட அருந்தாது ஆலயத்தில் வழங்கப்படும் பானகம் (பானக்கம்) மட்டும் அருந்தியிருத்தல் உத்தமோத்தமமான விரதமாகும். பானகமென்பது சர்க்கரை, தேசிக்காய், இளநீர், முதலியன கலந்து தயாரிக்கப்படும் ஒரு நீராகாரம் ஆகும். பட்டினி கிடக்கும் வயிற்றினுள் வெளிப்படும் அதிக சக்திமிக்க வெப்பம், வாய்வு, பித்தம், இவற்றைத் தணித்து உடற்சமநிலையைப் பேணுவதற்கும், பசி, தாகம், இவற்றை ஓரளவு தணிக்கவும் இது உதவுகிறது.
கந்தசஷ்டி விரத நாட்களில், ஆன்மா மும்மலங்களையும் நீக்குவதற்குரிய பக்குவமான மனதுடன் நாம் இருக்க வேண்டும். உணவையும் உறக்கத்தையும் தவிர்த்து, தனித்திருந்து செய்யும் தவமே கந்தசஷ்டி விரதம். அதற்குரிய பலன் மும்மலம் நீங்கி ஆன்மா முக்தியைப் பெறுவதே ஆகும்..
இந்த ஆறு நாட்களும் பூரண உபவாசம் இருப்பது அதி உத்தமம் எனக் கருதப்படுகின்றது. மிளகுகளை விழுங்கி, பழம் மட்டும் சாப்பிட்டு, தீர்த்தம் குடித்து, இளநீர் குடித்து ஒரு நேர உணவு மட்டும் உண்டு அவரவர் தேக நிலைக்கேற்ப "கந்தசஷ்டி" விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும். விரதம் ஆரம்பமான தினத்தில் ஆலயம் சென்று சங்கர்ப்பம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்கவேண்டும்.  
ஒரு விரதத்தை ஆரம்பிக்கும் முன் இன்ன நோக்கத்துக்காக இன்னமுறைப்படி இவ்வளவு காலம் அனுஷ்டிக்கப் போகின்றேன் என்று உறுதியாகத் தீர்மானம் செய்து (சங்கல்பம் செய்து) ஆலயம் சென்று சங்கல்ப்பபூர்வமாக அர்ச்சினை வழிபாடுகள் செய்து ஆரம்பிக்க வேண்டும். குறிப்பிட்ட கால எல்லை வரை மாற்றமின்றி அவ்விரதத்தை ஒழுங்காகக்கைக் கொள்ளவேண்டும்.
உரிய காலம் முடிந்ததும் விரத உத்தியாபனம் செய்து விரதத்தை நிறுத்த வேண்டும். விரதத்துக்குரிய மூர்த்தியின் வடிவத்தைப் பொன் பிரதி மையாகச் செய்து வீட்டிலே வைத்து முறைப்படி கும்பங்கள் ஸ்தாபித்து சங்கல்ப பூர்;வமாகப் புண்ணியாகவாசனம் முதலிய பூர்வாங்க கிரியைகளுடன் ஆரம்பித்து சமஸ்தோபசார பூசைகளையும் செய்துமுடித்து அன்று முழுவதும் உபவாசமாயிருத்தல் வேண்டும். மறுநாள் அதிகாலையில் நீராடி நித்திய கர்மாநுஷ்டானங்கள் செய்து மறுபடியும் அவற்றுக்குப் பூசைகள் நடத்திய பின் கும்பப் பொருட்கள் பொன் பிரதிமையும் மற்றும் தானப் பொருட்கள் யாவும் சேர்த்து வேட்டி, சால்வை, அரிசி, காய்கறி, தாம்பூலதஷிணைகள் பூசைகளைச் செய்வித்த குருவுக்கு வழங்கி முறைப்படி நான் கைக்கொண்ட இந்த விரதத்தை இன்று உத்தியாபனம் செய்து முடிக்கின்றேன். சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட படி இவ்விரதத்திற்குரிய பலன்களைத் தந்தருள வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும் தம்பதிபூசை, சுமங்கலி பூசை முதலியன குறித்து விரதத்துக்கு சொல்லப்பட்டிருந்தால் அவற்றையும் செய்து முடிந்தபின் மாஹேஸ்வர பூசை செய்து வீடடுப் பாரணை பண்ண வேண்டும். பாரணை காலை எட்டரை மணிக்கு முன்செய்து முடிக்க வேண்டும் என்பது விதி. சிலர் உதயத்திற்கு முன் விரதத்திற்குரிய பாரணையை முடித்துவிடுவதுண்டு. ஆனால் சூரிய உதயத்திற்கு முன் பாரணை செய்தல் விதியன்று.
உரிய நேரத்தில் பாரணை பண்ணுவதற்குத் தடைகள் ஏற்பட்டால் பாரணைக்காக சமைத்த உணவைச் சாமிப்படத்திற்கு முன்படைத்து அதனை இந்த உரிய நேரத்தில் முகர்ந்து விடுதல் போதுமானது. பின்னர் இயன்ற பொழுதில் சாப்பிடலாம்.
சமையல் தயாரிப்பதிலும் தாமதம் ஏற்படின் சாமிபடத்திற்கு முன் ஒரு சிறு பாத்திரத்தில் நீரெடுத்து வைத்து அதில் துளசியை இரண்டு அடியிலைகளுடன் கூடிய கதிராக எடுத்து அந்த நீரை உரிய காலத்தில் அருந்தி பாரணையை நிறைவு செய்யலாம். பின்னர் வசதியான போது சாப்பிடலாம்.
ஓரு விரதத்தின் முடிவில் அதாவது பாரணை நாளில் இன்னொரு விரதம் வந்தால் இந்த முறையையே கடைப்பிடிக்க வேண்டுமென்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இரண்டாவது விரதமும் , உபவாசமாக இருந்தால் முதலாவது விரத்தின் பாரணையைத் துளசி, தீர்;த்தம் அருந்தி நிறைவேற்றி விட்டு இரண்டாவது விரதத்தை முறைப்படி உபவாசமாக அனுட்டித்து அதற்கு மறுநாள் பாரணை செய்ய வேண்டும்.
பெரும்பாலும் கேதாரகௌரி நோன்பின் மறுநாள் கந்தசஷ்டி விரதாரம்பம் அல்லது கந்தசஷ்டி விரத முடிவில் அதாவது பாரணையன்று சோமவார விரதம் வருவதுண்டு, இச் சந்தர்ப்பத்தில் முதலில் நாம் பார்த்தவாறு தான் விதிமுறையைக் கைக் கொள்ள வேண்டும்.
விரத நியமனங்களை ஆரம்பத்திலேயே அளவுடன் கைக்கொள்வது நன்று கடுமையான முறையில் ஆரம்பித்து பின்னர் அரைகுறையாக நிறுத்துவது கூடாது. விரதத்தை கிரமப்படி அனுசரிக்க முடியாதவர்கள் தம்மாலியன்றளவு அனுசரிப்பதே தகுதி தம்மளவுக்கு மீறி உடலை வருத்த நேரிடின் விரதத்தில் வெறுப்பு தோன்றும் இதனால் விரத பலன் இல்லாமல் போய்விடும்.
ஆலயங்களில் ஆரம்பதினத்திலேயே தர்ப்பையணிந்து காப்புகட்டி, சங்கல்பித்து ஆறு நாளும் நோன்பிருத்தல் முறை, இறுதி நாளில் கர்ப்பை அவிழ்த்துத் தர்ப்பையுடன் சேர்த்துத் தாம்பூல தஷிணைகளுடன் அர்ச்சகரிடம் சமர்ப்பிப்பர்.
ஏழாம் நாள் அதிகாலையில் நீராடி நித்திய கர்மாநுஷ்டானங்களை நிறைவேற்றிப் பாரணைப் ப+ஜை என்று நடைபெறும் விசேஷ பூஜையையும் கண்டு வழிபட்டபின் மாஹேஸ்வர பூசை செய்து (அடியார்களுக்கு அன்னமிட்டு) பாரணை செய்ய வேண்டும்.
இவ்விதம் கடும் விரதம் அநுஷ்டிக்க முடியாதவர்கள் முதல் ஐந்து நாட்களும் இரவு ஒரு பொழுது பால்பழம் அல்லது பலகாரம் உண்டு இறுதி நாள் உபவாசம் இருக்கலாம். அதுவும் முடியாவதவர்கள் முதல் ஐந்து நாட்களும் பகல் ஒரு பொழுது அன்னமும் ஆறாம் நாள் இரவு பாலப்பழம் அல்லது பலகாரமும் உண்டு விரதமிருக்கலாம்.
ஆறாம் நாள் ஷஷ்டித்திதியில்; சூரசம்ஹாரம் முடிந்த அன்றிரவு முழுவதும் விழித்திருந்து முருகன் பெருமைகளையே பேசியும், வழிபட்டிருக்கமாறு பழம் நூல்கள் விதிக்கின்றன. சிவபிராணுக்குரிய சிவராத்திரியும், மஹாவிஷ்ணுக்குரிய வைகுண்ட ஏகாதசியும் போல முருகப்பெருமானுக்குரிய ஸ்கந்தசஷ்டியும் மிகவிஷேஷமான தினமாதலால் துயில் நீத்தல் (விளித்திருத்தல்) பொருத்தமானதே. ஆயினும் அனைவராலும் இது கைக்கொள்ளப்படுவதில்லை. இயன்றவர்கள் கைக்கொள்க.
விரதோயாபனத்தின் போது முருகன் ஆலயம் சென்று விரத பூர்த்தி சமயத்தில் விரதத்துக்குரிய பலன்கள் எனக்குச் சிந்திக்க வேண்டும் என்பதற்காக இந்த விசேச பூஜையை செய்கின்றேன் என்று சங்கல்பித்து விஷேஷ அபிஷேகம் பூஜை, ஷண்முகார்ச்சனை அல்லது சஹஸ்ர நாமார்ச்சனை முதலியவற்றைச் செய்வித்து காப்பு தர்ப்பை இவற்றுடன் தாம்பூலம் தஷிணை, வேட்டி, சால்வை, அரிசி, காய்கறி முதலிய தானங்களையும் சேர்த்து அர்ச்சகரிடம் சமர்ப்பித்து மகிழ்ச்சியுடன் இந்தத் தானத்தை வழங்குகின்றேன். சாஸ்திரங்களில் சொல்லியிருப்பது போல இந்த விரதபலன்கள் எனக்கு உண்டாகட்டும் என்று பிரார்த்திக்க வேண்டும். 
விரதங்கள் மக்களின் மன வலிமை அதிகமாகவும், நம்பிக்கைகளின் அடிப்படையில், அவர்களது வாழ்வில் வளமும், நலமும், மிகுவதற்கு பயன்படுகின்றன. ஏனைய விரத அனுட்டானங்களைப் போலன்றி கந்த சஷ்டி விரதானுஷ்டானத்தை ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் கடைப்பிடிக்கின்றார்கள். மாணவர்கள் படிப்பிற்கும், குடும்பப் பெண்கள் குடும்ப நன்மைக்கும், கன்னிப் பெண்கள் நல்ல கணவனை வாழக்கைத் துணையாக அடைய வேண்டியும், குழந்தை இல்லாதோர் குழந்தை வேண்டியும் இவ்விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.
இங்கு குறிப்பிட்ட விதத்தில் வீட்டிலே பூசைகளைச் செய்வதும் பொன் பிரதிமைகளைச் செய்து தானம் கொடுப்பதும் யாவருக்கும் எளிதானதன்று இதனால் உத்தியாயனமே செய்யாது விடுவதும் முறையன்று எனவே உரிய காலத்தில் ஆலயம் சென்று விரத உத்தியாபனம் செய்யப் போகின்றேன் என்று குருமுகமாகச் சங்கல்பம் செய்து இயன்ற வகையில் விசேஷ அபிஷேகம் பூசை அர்ச்சனை வழிபாடுகளைச் செய்து குருவுக்கு தாம்பூல தட்சணைகளும், தானங்களும் இயன்றவரையும் வழங்கி விரதத்தை மனநிறைவோடு முடித்து இறைவனிடம் சமர்ப்பிக்கலாம்.
உடலின் சுமை குறைவதால் மிகக் கடுமையான நோய்களைக்கூட உண்ணாநோன்பின் மூலம் நீக்கிவிட முடியும். உண்ணா நோன்பின் போது, உடலில் நோயுற்ற திசுக்களே முதலில் கரைக்கப்படுகின்றன. கொழுத்த உடல் கொண்ட மனிதன், உண்ணா நோன்பின்போது மறைமுகமாக உண்டு கொண்டே இருக்கிறார். உள்ளுருப்புக்களை வீணாகச் சுற்றியிருந்த பகுதிகள் கரைக்கப்படுகின்றன. உண்ணா நோன்பு மிகவும் எளிய, ஆனால் சிறப்பான ஊட்டச்செயலாக அமைந்து, உடலைக் காக்கிறது.
உண்ணா நோன்பின்போது, உடல் ஓய்வடைகிறது. எல்லா உறுப்புக்களுக்கும் அமைதி கிட்டுகிறது. நரம்புகள் தளர்ச்சி நீங்குகின்றன. வெப்பநிலை மாறி தண்மை ஏற்படுகிறது. கழிவுப்பொருள்களை உடலிலிருந்து வெளியேற்ற இயற்கை கொள்ளும் வழிகளில் உண்ணா நோன்பு மிகவும் சிறந்ததாக அமைந்திருக்கிறது. இரத்தமும் நிணநீரும் தூய்மையாக்கப்படுகின்றன. காம உணர்வு தணிகிறது. தூய நினைவுகள் வளர்கின்றன. மனதின் சக்தி, பகுத்தறிகின்ற ஆய்வுநிலை, நினைவு கூறும் சக்தி, இணைத்துக்காணும் அறிவு அதிகமாகின்றது. உண்ணா நோன்பினால் இளையவரும், முதியவரும் புதுப்பிக்கப்படுகிறார்கள். உடல் உறுப்புக்களில் மாத்திரம் அல்லாமல், உடலியல் செயல்களிலும் இது நிகழ்கிறது

சாபம் வாங்க கூடாது...

சாபம் வாங்க கூடாது...
★ராவணன் ஒரு சிறந்த சிவ பக்தன். இருப்பினும் அவன் ஸ்ரீ ராமரால் வதைக்கப்பட்டதன் காரணம் அவன் செய்த பாவங்களால் ஏற்பட்ட சாபங்கள். யாரெல்லாம் ராவணனை சபித்தார்கள் என்பதனைப் பார்ப்போம்
★ராவணனின் தங்கை சூற்பனகையின் கணவன் வித்யுத்ஜின், கால்கை நாட்டின் சேனாதிபதியாக இருந்தான். ராவணன் உலகை வெல்லும் நோக்கத்தோடு போரில் ஈடுபட்டு பல நாடுகளைக் கைப்பற்றினான். கால்கை நாட்டுடனும் போர் புரிந்தான். அப்போரில் தன் தங்கை கணவனான வித்யுத்ஜினை வதம் செய்தான். இதனால் கோபம் கொண்ட சூர்பனகை, ராவணனைப் பார்த்து "ராவணா உண் மரணத்திற்கு நானே காரணமாவேன்" என சபித்தாள்.
சூற்பனகையின் மூக்கை லக்ஷ்மணன் அருத்ததே ராவணன் சீதையை கவரக்காரணம்.
ஒரு சமயம்
★இலங்கேஸ்வரன் ராவணன் சிவபெருமானை தரிசிக்க கைலாய மலைக்கு சென்றான். அங்கே நந்தி பகவானை கேலி செய்து நகைத்தலானான். கோபம் கொண்ட நந்தி, ராவணனின் அழிவிற்க்கு ஒரு குரங்கே காரணமாகுமென சபித்தார்.
குரங்கு உருவங்கொண்ட ஸ்ரீ ஹனுமான், சீதா பிராட்டியைக் காண இலங்கை சென்றதும், ராவணன் ஹனுமானின் வாளிற்க்கு நெருப்பை மூட்டி பெரும் தவறைச் செய்தான். இதனால் ஸ்ரீ ராமனின் கடும் கோபத்திற்கு ஆளானான்.
★சிறந்த சிவ பக்த்தரான ராவணன், சிவ பெருமானை கவரும் பொருட்டு கைலாய மலையை தூக்கினான். இதனால் கோபம் கொண்ட பார்வதி தேவி, ஒரு பெண்ணால் ராவணன் மடிவான் என சபித்தாள்.
★சொர்கத்தை கைப்பற்ற நினைத்த ராவணன், சொர்கத்தை நோக்கி படை எடுத்தான். அப்சரஸ்களில் பேரழிகியான ரம்பையை கண்டதும் மோகம் கொண்ட ராவணன் ரம்பையை கவர்ந்து செல்ல எண்ணினான்.
ராவணனின் சகோதரன் குபேரனின் மகனான நளகுபேரனை திருமணம் செய்யப்போகும் ரம்பை ராவணனுக்கு மருமகளாவாள். அப்படியிருக்க ரம்பையை கவர்ந்த ராவணனை சபித்தான் நளகுபேரன்.
இப்படியாக பல பாவங்களை செய்து பெரும் சாபங்களிற்க்கு ஆளான ராவணன் இறுதியில் ஸ்ரீ ராமரால் வதைக்கப்பட்டு, மாபெரும் பெயரைப்பெற்றான்.

ஆயுளை அழிக்கும் ஆறு வாள்கள் !!!

ஆயுளை அழிக்கும் ஆறு வாள்கள் !!!
திருதராஷ்டிரன் விதுரரைப் பார்த்து, “மனிதனுக்கு ஆயுள் நூறு வருடங்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இருந்தும், முழுமையான ஆயுள் வரை யாரும் வாழ்வதாகத் தெரியவில்லையே... ஏன்?” என்று கேட்டார்.
அதற்கு விதுரர், “ஆறு கூரிய வாள்கள் தான் மனிதனின் ஆயுளை அழிக்கின்றன. அவை; அதிக கர்வம், அதிகம் பேசுதல், தியாக மனப்பான்மை, கோபம், சுயநலம், நண்பர்களுக்குத் துரோகம்” என்றார்.
விதுரர் கூறீய அந்த ஆறு வாள்கள் எப்படியிருக்கும்? அதைப் போக்க என்ன செய்ய வேண்டும்?
1. தான் கெட்டிக்காரன், தான் செல்வந்தன், தான் கொடையாளி, தான் நல்லவன், பிறர் கெட்டவர்கள் என்று நினைப்பதால் கர்வம் அதிகரிக்கிறது. கர்வம் கொண்டவனைக் கடவுள் சீக்கிரம் அழித்து விடுவார். ஆகவே, கர்வம் கொள்ளாமலிருக்க வேண்டுமானால், தன் விசயத்தில் குற்றங்களைப் பார்க்க வேண்டும். பிறர் விசயத்தில் குணங்களைப் பார்க்க வேண்டும்.
2. அதிகம் பேசுகிறவன் வீண் விசயங்களைப் பற்றிப் பேசி, வீண் வம்பை விலைக்கு வாங்குவான். அதனால்தான் பகவான் கீதையில் கூறுகிறார்; கடுமையில்லாததும், உண்மையானதும், பிரியமானதும், நன்மையைக் கருதியதுமான வார்த்தை எதுவோ, அது வாக்கினால் செய்யப்படும் தவம்.
3. எல்லாவற்றையும் நாம்தான் அனுபவிக்க வேண்டும் என்கிற ஆசையின் காரணமாகத்தான் நமக்குத் தியாக மனப்பான்மை ஏற்படுவதில்லை. நாம் இந்த உலகில் பிறந்ததே நமக்காக அல்ல, பிறருக்கு உதவுவதற்காகத்தான் என்று உணர்ந்தால் தியாக மனப்பான்மை ஏற்படும்.
4. கோபம்தான் மனிதனுடைய முதல் எதிரி. கோபத்தை வென்றவன்தான் யோகி, அவன்தான் உலகில் சுகப்படுவான். கோபத்துக்கு வசப்பட்டவன், தர்மம் எது? அதர்மம் எது? என்ற விவேகத்தை இழந்து பாவங்கள் செய்கிறான். என்ன தீமைகள் ஏற்பட்டாலும், யார் நம்மைக் கோபித்துக் கொண்டாலும் அவற்றைச் சகித்துக் கொள்ளக் கற்றுக் கொள்ள வேண்டும்.
5. சுயநலம்தான் எல்லாத் தீமைகளுக்கும் காரணம். சுயநலம் பாராட்டுகிறவர்கள், தங்கள் காரியம் ஆக வேண்டும் என்பதற்காக எந்தப் பாவத்தையும் செய்ய அஞ்ச மாட்டார்கள். பிறர் இன்புறுவதைக் கண்டு நாம் இன்புற வேண்டும். பிறர் துன்புறுவதைக் கண்டு நாம் துன்புற வேண்டும். இப்படிச் செய்தால் சுயநலம் போய்விடும்.
6. உலகில் நல்ல நண்பர்கள் கிடைப்பது அரிது. அப்படியிருக்க, அவர்களுக்குத் துரோகம் செய்வதைப் போன்ற அநியாயம் உண்டா? பகவான் கீதையில் கூறியிருப்பது போல, நாம் எல்லோருடனும் வெறுப்பின்றியும், நட்பு மனப்பான்மையுடனும், கருணையுடனும் பழக வேண்டும்.

Sunday, November 1, 2015

இரவில் சாப்பிடக்கூடாத உணவுகள் ..

இரவில் சாப்பிடக்கூடாத உணவுகள் .......
இஞ்சிவெண்டயிர்இலைக்கறிபாகற்காய் கொஞ்சுங்காட்டுக்கிளாக்காயருநெல்லி துஞ்சுமே புளியங்காய் துவையலும் மிஞ்சு ராவில்லருந்தும் மனிதர்க்கு
அஞ்சிலட்சுமி அகன்றுமே போய்விடும்
தஞ்சமாஞ் சேட்டை தன்னிலடைகு வாள்
எஞ்சில் துக்கமுமெய்திடுந் தப்பாது
கஞ்சனானை கருத்தாயுரைத்ததே
1. இஞ்சி
2. தயிர்
3. கீரைகள்
4. பாகற்காய்
5. கிளாக்காய்
6. நெல்லி
7. புளி துவையல்
இவற்றை இரவில் உண்டால் லட்சுமி அகன்று மூதேவி குடிபுகுவாள் என அகத்தியர் உரைக்கிறார்.

கனவு சாஸ்திரம்

கனவு சாஸ்திரம்
கருத்தரித்திருக்கும் பெண்மணி கனவில் தாமரை மற்றும் வெள்ளை நிற மலர்கள், பழங்கள் முக்கியமாக மாம்பழம் அல்லது மாங்காய் போன்றவை வந்தால் பிறக்கும் குழந்தை ஆணாக இருக்கும் என பலன் கொள்ளலாம்.
செம்பருத்தி,ரோஜா மலர்கள், வாழைப்பழம் கனவில் வருவது பெண் குழந்தை பிறப்பை உறுதி செய்யும் ஒன்றாகும்.
கனவில் தெய்வங்கள், பிராமணர்கள், உயிருள்ள காளை அல்லது பசு மாடு, கோவில், சர்ச், மசூதியில் பூஜை செய்பவர்கள், நீர் நிலைகள், எறியும் நெருப்பு போன்றவை தோன்ற உடல் நிலை முன்னேற்றம் மற்றும் இருக்கும் நோய்கள் விலகப்போவதின் அறிகுறியாக எடுத்து கொள்ளலாம். மேற்கண்டவை அசுத்தமான சூழலில் தென்பட்டால், அழுக்குடைகளுடன் அல்லது அசுத்தமான நீர் நிலை, இறந்த காளை அல்லது பசு, இடிந்த நிலையில் தெய்வீக இடங்கள் போன்றவையாக இருப்பின் உடல் தீங்கு பெரும் நோய் நேர்வதற்கான அறிகுறி.
கனவு சாஸ்திரம்-2
மரணம் வருவதை கனவுகள் பலருக்கு முன் கூட்டியே உணர்த்திவிடும். அதை பெரும்பாலானோர் உணர்வதில்லை. ஆரோக்யமாக உள்ள ஒருவருக்கு கூட சில பிரத்யேக கனவுகள் வரின் எனில், மரணம் உணர்த்தபடுகிறது எனலாம். அவற்றை அடுத்த பதிவுகளில் பாப்போம்.
பொதுவாக உறங்க ஆரம்பித்தவுடன் முதல் 2 மணி நேரத்தில் வரும் கனவுகள் ஒரு வருடத்திலும்,அடுத்த இரண்டு மணி நேரத்திலும் மற்றும் மதிய நேரத்தில் உறங்குவோருக்கும் வரும் கனவுகள் அடுத்த ஆறு மாதத்திற்குள்ளும் அடுத்த இரண்டு மணி மணி நேரத்தில் வரும் கனவுகள் மூன்று மாதத்திலும் கடைசி அதிகாலை கனவுகள் பத்தே நாட்களில் நடந்தேறும் என்கிறது 'ஹரித சம்ஹிதை' .
கனவு சாஸ்திரம் 3
கனவில் எறும்புகளை கண்டால் கவலை தரும் செய்தி ஒன்று வரவிருப்பதையும், பறவைகள் இடமாற்றத்தையும், காளைகள் நெருக்கடிகள் வரப்போவதையும், நீந்தும் மீன்கள் புதிய வாய்ப்புகளையும், நாய்கள் நன்மையையும், குறைக்கும் நாய் எனில் 'பெரும் பிரச்னை ஒன்றில் இருந்து நாம் விடுபடபோவதையும், நாய் கடிக்கும் படி கனவு வர- கஷ்டங்கள் வரப்போவதையும்,உயர பறக்கும் கழுகுகளை காணின் பெரும் அதிர்ஷ்டம்-செல்வ வரவையும், கிளிகள் வெளிநாட்டு பயணத்தையும், எலிகள் தொல்லைகள் வரப்போவதையும் உணர்த்தும் ஒன்றாகும். பாம்பை கொல்வதை போன்ற கனவு நாம் பெரிய எதிரி தொல்லையில் இருந்து ஜெயிப்பதற்கான அறிகுறியாகும். (நிஜத்தில் பாம்பை அடிப்பது-கொல்வது நேரெதிர் பலனை தரும் என்பதை நினைவில் கொள்க) .
நன்றி வாமனன் சேஷாத்திரி

பக்தி என்பதன் பொருள் யாது? <சமர்ப்பணம்

பக்தி என்பதன் பொருள் யாது? <சமர்ப்பணம் >
ஒருவன் தன்னையும் தனது மனதையும் தன் அறிவையும் ஞானத்தையும் இச்சைகளையும் ஆசைகளையும் தன் எண்ணங்களையும் தன்னுடைய சகலத்தையும் ஒருவரிடம் அற்பநிப்பதே ஆகும். குரு பக்தி, பதி பக்தி,மித்திர பக்தி,இல்ல பக்தி, இவ்வாறு அநேக பக்தி உள்ளது எனிலும் சிறந்த பக்தி இறைவன் தாள் பனியும் இறை பக்தி. சிந்தையை விந்தையனவரிடம் ஸ்திரமாய் அளித்து வேண்டியதை செவ்வனவே நடத்துங்கள்