Friday, April 22, 2011

லட்சுமி நடனம் ஆடும் இல்லம்

லட்சுமி நடனம் ஆடும் இல்லம்வீட்டில் எத்தனை வளங்கள் இருந்தாலும் செல்வம் பெருக வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. இல்லத்தில் செல்வம் பெருக அன்னை மகாலட்சுமியின் அருள் வேண்டும்.
இறையருள் உள்ள வீட்டில் நிச்சயம் பொன்மழை பொழியும். லட்சுமி தாண்டவம் நடக்கும். ஏழைப்பெண் ஒருத்தி இட்ட உலர்ந்த நெல்லிக்கனியை அவளுடைய பக்தியைக் கண்டு ஆச்சரியப்பட்ட ஸ்ரீ ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரத்தை பாடினார்.

அவள் வீட்டில் பொன்மழை பொழிந்தது. காஞ்சியில் ஒரு சமயம் காமாட்சி தேவி பொன்மழை பொழிந்ததாக மூக சங்கரர் என்பவர் குறிப்பிட்டுள்ளார்..

வீட்டில் தினமும் கனகதாராஸ்தோத்திரம் பாராயணம் செய்தால் பொன்மழை பொழியும் லட்சுமி நடனம் புரிவாள்.

விளக்கில் வசிக்கும் லட்சுமி

வீட்டில் பூஜை அறையில் குத்துவிளக்கு ஏற்றும் போது எத்தனை முகங்கள் ஏற்றவேண்டும் என்று சிலருக்கு சந்தேகம் ஏற்படுவதுண்டு.

ஒருமுகம் ஏற்றினால் மத்திம பலனைத்தரும். இரண்டு முகம் ஏற்றினால் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். மூன்று முகம் ஏற்றினால் புத்திர சுகத்தை கொடுக்கும். நான்கு முகம் ஏற்றினால் மாடு, கன்று என்று கால்நடைச் செல்வம் பெருகும்.

ஐந்துமுகம் ஏற்றினால் எட்டுவிதமான செல்வச்செழிப்பும் பெருகும். தீபத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். எனவே ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு தீபத்தை கொண்டு செல்லக்கூடாது என்கின்றன சாஸ்திரங்கள்.

பணக்கஷ்டம் தீர தேவாரம்

தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு பணம் கிடைக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். கும்பகோணத்திற்கும், மயிலாடுதுறைக்கும் இடையே உள்ள ஸ்தலங்களில் ஒன்றான திருவாடுதுறை சிவபெருமான் திருஞானசம்பந்தருக்கு பொற்கிழி அளித்த தலம் ஆகும். திருவாடுதுறை சென்று கோமுக்தீஸ்வரரை முறைப்படி வணங்குங்கள் செல்வம் சேரும். சிதம்பரம் நடராஜரை தரிசியுங்கள், தேவாரத்தை வீட்டில் பாராயணம் செய்யுங்கள் செல்வம் பெருகும்.

பிள்ளையார் சக்தியோடு உள்ள சிற்பங்களுல் சில வித்யாசமான சிற்பங்களும் கோவில்களில் இருப்பதை பார்த்திருப்பீர்கள், வெற்றியிலும், செல்வத்திலும் செழித்து நின்ற மூன்றாம் குலோத்துங்க சோழன் போன்ற மன்னர்கள் கட்டிய ஆலயங்களில் கட்டாயம் இந்த சிலைகள் இருக்கும்.

சக்தித் தலங்களிலும் உள்ள சக்தியுடன் உள்ள கணபதியை வழிபட்டால் வெற்றிகள் குவியும், செல்வம் செழிக்கும்.உச்சிஷ்டகணபதி என்றும் போக கணபதி என்றும் சொல்பவர்கள் உண்டு. கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள போககணபதியை வணங்கினால் எல்லாவகையான செல்வங்களும் சேரும்.

வெள்ளிக்கிழமை ராகுகாலபூஜை

15 வெள்ளிக்கிழமை அம்பாளிற்கு (மகாலட்சுமி) மல்லிகை, செந்தாமரை, மனோரஞ்சிதம் ஆகிய பூக்களில் ஏதாவது ஒரு பூவினால் அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல், வெள்ளை மொச்சை படைத்து பூஜை செய்யவும். இதனால் புகழ், செல்வம், வியாபார அபிவிருத்தி, புத்திரப்பேறு, குடும்ப ஒற்றுமை ஏற்படும்

செல்வச் செழிப்பு அதிகரிக்க


நீங்கள் வாடகை அல்லது சொந்த வீட்டுக்கு குடியேறும்போது,அந்த வீட்டுக்குள் முதலில் கொண்டு செல்ல வேண்டியவை மகாலட்சுமியின் அம்சமாகிய உப்பு,அம்மனின் அம்சமாகிய மஞ்சள் பொடி அல்லது மஞ்சள் கிழங்கு,ஒரு நிறை குடம் தண்ணீர்,உங்களின் குல தெய்வத்தின் படம் அல்லது இஷ்ட தெய்வத்தின் படம் இவைகளைக் கொண்டு செல்ல வேண்டும்.
வீட்டில் பண வரவு அதிகரிக்க,வெள்ளிக்கிழமைகளில் காலை 6.00 முதல் 6.15க்குள்ளும்,மதியம் 1.00 முதல் 1.15க்குள்ளும்,இரவு 8.00 முதல் 8.15க்குள்ளும் கடையில் உப்பு வாங்கி வரவேண்டும்.இப்படி வாரா வாரம் சிறிதளவு உப்பு வாங்கி வர,செல்வச் செழிப்பு அதிகரிக்கும்.கல் உப்புதான் மகா லட்சுமியின் அம்சமாகும்.
எந்த வீட்டினுள் நுழைந்ததும்,துர்நாற்றம் இல்லாமலிருக்கிறதோ,நறுமணம் கமழுகிறதோ,அங்கே செல்வச் செழிப்பு அதிகரித்துக் கொண்டே செல்லும்.
எந்த வீட்டில் அழுக்குத் துணிகள் வீடெல்லாம் இறைந்து கிடக்காமலிருக்கின்றதோ,வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை தோறும் தண்ணீரால் அலசி விடப்படுகிறதோ,பொருட்கள் எல்லாம் சுத்தமாக அடுக்கி வைக்கப்பட்டு இருக்குமோ,அங்கெல்லாம் செல்வம் குவியும்.
எங்கெல்லாம் நெகடிவ்வான வார்த்தைகள் பேசப்படாமலிருக்குமோ,எங்கெல்லாம் விட்டுக்கொடுத்தலும்,இனிய வார்த்தைகள் பேசப்படுமோ அங்கெல்லாம் செல்வச் செழிப்பு அதிகரிக்கும்.எந்த வீட்டில் நிர்வாணமாக குளிக்காமலும்,நிர்வாணமாக தூங்காமலும் இருக்கிறார்களோ,கணவனின் காமத் தேவைகளை மனைவியும்,மனைவியின் காமத் தேவைகளை கணவனும் மறுக்காமலும்,வெறுக்காமலும் நிறைவேற்றுகிறார்களோ அங்கே செல்வச் செழிப்பு அதிகரிக்கும்.

Thursday, April 21, 2011

ஸ்ரீதன்வந்திரி காயத்ரி

ஸ்ரீதன்வந்திரி காயத்ரி

ஓம் ஆதி வைத்யாய வித்மஹே
ஆரோக்ய அனுக்ரஹாய தீமஹி
தந்நோ தன்வந்திரீ ப்ரசோதயாத்

விநாயகரின் மூல மந்திரம்

விநாயகரின் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே
வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா

இருபத்தெட்டு அட்சரங்களை உடைய இம்மந்திரம் பலவிதமான சக்திகளையும், சித்திகளையும் அளிக்கவல்லது.செல்வம், பூமி, ஆகர்ஷணம், வசியம், குண்டலி வின்யாசம் முதலிய அனேக சித்திகள் இம்மந்திர ஜபத்தால் கைகூடும்.

அருகம்புல், தாமரை, வில்வதளம், செவ்வரளி போன்ற நறுமணம் உடைய புஷ்பங்களால் விநாயகரை பூஜை செய்தால் செல்வச் செழிப்பும் ஞானவளமும் கைகூடும். செல்வத்திறவுகோலாக இம்மந்திர உபாசனை நிகழ்ந்து வந்துள்ளது.

கணபதியை மட்டும் வழிபடுபவர்கள் கணபதி உபாசகர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.கணபதி உபாசகர்கள் கருப்பு, நீலம் போன்ற வண்ண ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.சிவப்பு, பொன் வண்ண உடைகள் மிகவும் ஏற்றவை. துளசியை இவர்கள் கிள்ளக் கூடாது.துளசியை விநாயகருக்கு அணிவிக்கக்கூடாது.

கணபதி மந்திரங்களை பிரம்ம முகூர்த்த வேளை எனப்படும் அதிகாலை 4.30 முதல் 6.00க்குள் ஜபிப்பது மிக நன்று என கணேச உத்தர தாயினி உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.

விநாயகரை தேய்பிறை சதுர்த்தி தோறும் வழிபடுவது சங்கடகர சதுர்த்தி என்று வழங்கப்படும்.அதுவும் அந்நாளில் வன்னிமரத்தடியில் வழிபடுவது மிக நன்று. மாசி மாதம் வரும் சதுர்த்தி செவ்வாய்க்கிழமையன்று(தகுந்த ஜோதிடரை அணுகி உரிய நாளை அறிக) துவங்கி ஓராண்டு சங்கடஹர சதுர்த்தியை மாதந்தோறும் பின்பற்றிவர வேண்டும்.இதனை செவ்வாய்க் கிரக அதிபதி பின்பற்றினார்.

உச்சிஷ்ட கணபதி மந்திரம்

ஓம் நமோ பகவதே ஏகதம்ஷ்ட்ராய
ஹஸ்தி முகாய,லம்போதராய
உச்சிஷ்ட மகாத்மனே ஆம் ஹ்ரேம் ஹ்ரீம்
கம் கேகே ஸ்வாஹா

வேப்பங்குச்சி, ஊமத்தம்பூ,நெய் இவைகளால் இவருக்கு ஹோமம் செய்ய வேண்டும்.


கடன் தீர கணபதி மந்திரம்

ஓம் கணேசருணம் சிந்தி வரேண்யம் ஹீம் பட்ஸ்வாஹா
ஹே பார்வதி புத்ரா ருணம் நாசம் கரோதுமே
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் அபீஷ்ட சித்திம்மே தேஹி சரணாகத வத்ஸல
பக்த்யா ஸமர்ப்பயே துப்யம் ஸ்வாஹா
ஸ்ரீசக்ரேசாய ஸ்ரீமகா கணபதயே ஸ்வாஹா

கருங்காலி குச்சியால் கணபதி ஹோமம் செய்ய எவ்வளவு பெரியளவில் கடன் இருந்தாலும் அது மிக விரைவாக தீர்ந்துவிடும்.(நமது நாட்டின் கடன் தீர யாராவது இதைச் செய்யலாமே!!!)

மஹாஹஸ்தி விநாயகர்

பெரிய்ய்ய துதிக்கையை உடைய இவர் பெரும் தனத்தை (அதாவது கோடிக்கணக்கில் ரூபாய்களாக) அள்ளி வீசுபவராக இருக்கிறார்.
அப்படி நமக்க இவரது அருள் கிடைக்க பின்வரும் மந்திரத்தை லட்ச உருவேற்றினால் போதும்.நமது பாவங்களும் தீரும்.செல்வமும் ஞானமும் நமக்குக் கிடைத்துவிடும்.

ஓம் ஆதூன இந்த்ர க்ஷீமந்தம் சித்ரம் க்ராபம் ஸ்ங்க்ருபாய
மஹாஹஸ்தி தக்ஷ்ணேன

வாஞ்சா கல்பலதா கணபதி

நமது சகல விருப்பங்களையும் அள்ளி வழங்குவதால் இவருக்கு வாஞ்சை கணபதி என்ற பெயர் ஏற்பட்டது.

பின்வரும் மந்திரம் 100 கோடி சூரியனுக்குச் சமமானதாகும். தகுந்த குரு உபதேசம் மூலமாக இந்த மந்திரத்தை தினமும் ஜபித்துவரவும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும்.

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம்
ஐம் கஏஈ லஹ்ரீம்
தத்ஸவிதர் வரேண்யம் கணபதயே
க்லீம் ஹஸகஸல ஹ்ரீம் பர்க்கோ தேவஸ்யதீமஹீ
வரவரத சவு ஸஹல ஹ்ரீம்
த்யோயோநப்ர சோதயாத்
ஸர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹா

சில முக்கிய காயத்ரி மந்திரங்கள்

சில முக்கிய காயத்ரி மந்திரங்கள்

குபேரன்

ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்

ஸ்ரீராமர்

ஓம் தாசரதாய விதமஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராமஹ ப்ரசோதயாத்


ஸ்ரீசீதா

ஓம் ஜனக நந்தின்யை ச வித்மஹே
பூமிஜாயை ச தீமஹி
தன்னோ சீதா ப்ரசோதயாத்

மகாவிஷ்ணு

ஓம் நாராயணாய வித்மஹே
வாசு தேவாய தீமஹி
தந்நோ விஷ்ணுஹ் ப்ரசோதயாத்

அய்யப்பன்(சாஸ்தா)-இதை ஜபிக்க தீய சக்தி விலகும்

ஓம் பூதநாதாய வித்மஹே
பவநந்தனாய தீமஹி
தந்நோ சாஸ்தா ப்ரசோதயாத்

ஸ்ரீ ஆதிசேஷன்(நாக தோஷம் நீங்கிட ஜபிக்கவும்)

ஓம் ஸகஸ்ய சீர்ஷாய வித்மஹே
விஷ்ணு தல்பாய தீமஹி
தந்நோ நாக ப்ரசோதயாத்

ஸ்ரீஹயக்ரீவர்-குதிரை முக விஷ்ணு(கல்வி வளர)
ஓம் வாகீச்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹம்ஸ ப்ரசோதயாத்

ஸ்ரீகருடன்

ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸீவர்ண பட்சாய தீமஹி
தந்நோ கருடஹ ப்ரசோதயாத்

ஸ்ரீசரபேஸ்வரர்

ஓம் ஸாலுவே சாய வித்மஹே
பட்சி ராஜாய தீமஹி
தந்நோ சரபஹ ப்ரசோதயாத்

ஸ்ரீ வாராஹ

ஓம் தனுர்தராய வித்மஹே
வக்ரதம்ஸ்ட்ராய தீமஹி
தன்னோ வராஹ ப்ரசோதயாத்


ஸ்ரீஅன்னபூரணி( என்றும் உணவு கிடைக்க)

ஓம் பகவத்யை வித்மஹே
மாஹேச்வர்யை தீமஹி
தந்நோ அன்னபூர்ணா ப்ரசோதயாத்

காயத்ரி மந்திரத்தின் மகிமை

காயத்ரி மந்திரத்தின் மகிமை
வசிஷ்டரிடம் சவால் விட்டு ராஜரிஷிப்பட்டம் பெற்ற க்ஷத்திரியர் விஸ்வாமித்திரர்.அவரால் இந்த பூமிக்குக் கிடைத்ததுதான் காயத்ரி மந்திரம்.
காயத்ரிதேவி ஐந்துமுகங்களுடன் சூரிய மண்டலத்தின் மத்தியில் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருக்கிறாள்.உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் அனைத்தும் ஓம் என்ற ஓம்கார மந்திரத்திலிருந்தே தோன்றின.
புதிய பிரபஞ்சத்தையே உருவாக்கிடும் சக்தி காயத்ரி மந்திரத்துக்கு உண்டு.எல்லாவிதமான சமஸ்க்ருத மந்திரங்களுக்கும்,ஒவ்வொரு கடவுள்களின் காயத்ரி மந்திரத்துக்கும் சக்தி தருவது காயத்ரி மந்திரமே.

இந்த காயத்ரி மந்திரத்தை வீட்டில் ஜபித்தாலே அளவற்ற புண்ணியம் உண்டாகும்.
கடலோரம்,அரசமரத்தடியில், பசுக்கள் இருக்கும் கொட்டகையில் பசுவின் அருகில் அமர்ந்து ஜபித்தால் அதன் பலன்கள் ஏராளம்.
ஏதாவது ஒரு அம்பாள் சன்னதியில் ஜபித்தால்(மனதுக்குள் சொன்னால்)அதனால் கிடைக்கும் பலன்களை கூறவே ஒரு வருடம் ஆகும்.எல்லா அம்பாளும் அன்னை காயத்ரிதேவியின் அம்சமாகும்.

ஆழ்நிலைத் தியானம்

ஆழ்நிலைத் தியானம்

ஆழ்நிலைத் தியானம்--எத்தனையோ விதமான் தியானங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவில் தியானிக்க உதவுகிறது.
பொதுவாக தியானம் என்றவுடன் கண்ணை மூடி ஓர் இடத்தில் ஆடாமல் அசையாமல் மனதை ஒருநிலைப்படுத்தி தியானிக்கவேண்டும் என்பதுதான் அனைவரது பொதுவான கருத்து. ஆனால் நான் உன்னத உடல் நிலையை பராமரிக்கவேண்டுமேன்றும் உன்னத மனோநிலையை பெறவேண்டுமென்றும் சில தியானங்களை முறையாகக் கற்றுக்கொண்டேன். எனக்குப்பிடித்த முறையில் அமையும் தியானத்தை பின்பற்றுவது என்றும் முடிவு செய்து கொண்டேன்.

அவ்வகையில் எனக்குப்பிடித்த ஆறு ஆண்டு காலமாக நான் செய்துவரும் ஆழ்நிலை தியானத்தைப் பற்றி தங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

ஏன் ஆழ் நிலைதியானம்?


மிகச் சுலபமாக யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானலும் எங்கு வேண்டுமானலும் செய்யக்கூடிய ஓர் உன்னத தியானம் இது. 
எவ்வளவு நேரம் செய்யவேண்டும்?

காலையிலோ மாலையிலோ பதினைந்து முதல் இருபது நிமிடம் மட்டுமே.

எங்கு செய்யவேண்டும்?


வீட்டில் தங்களக்குப் பிடித்த எந்த இடமானாலும் சரி. வீட்டில் செய்ய நேரமில்லைஎனில் பஸ்ஸில், ரயிலில், விமானத்தில் தாங்கள் வண்டியை ஒட்டாத வகையில் இருந்தால் போதும்.

எவ்வர்று செய்ய வேண்டும்?

இதை முறையாக தியான ஆசிரியரிடம் நேரில் சென்றே கற்றுக்கொள்ளவேண்டும்.

பலன்கள்


மனோதைரியம். நல்ல தூக்கம் (தூக்கம் வராதவர்களுக்கு இது ஓர் வரப்பிரசாதம்) மாணவர்கள் எனில் சிதறாத கவனம் (அதனால் கூடுதலாக மதிப்பெண்கள்).

முக்கியமாக மன ஆரோக்கியம் - மன ஆரோக்கியம் என்றால் உடல் ஆரோக்கியம் தானாகவே கிட்டிவிடும்.

உலகில் வாழும் அத்துணை மனிதர்களும் ஏதாவது ஓர் இடர் உடன்தான் வாழ்கின்றனர். பணம் மட்டுமே நிம்மதி இல்லை. பணம் இருந்தால் கட்டிலைமட்டுமே வாங்க முடியும் - தூக்கத்தை வாங்க முடியாது. நான் இந்த நல்ல அரிய கலையைக் கற்றுக்கொண்டு நலமாகவும் வளமாகவும் வாழ்வது போன்று ஒவ்வொருவரும் வாழ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நாக மாணிக்கம்

அது என்ன நாக மாணிக்கம்?

நாகரத்தினக்கல் என்பது நாகங்களில் எந்த ஒன்று அறுபது வருடங்களுக்கு மனிதர்,மிருகம்,கீரி என யாரையும் கடிக்காமல் இருந்தால் அதன் கடைவாயில் உள்ள விஷமே இறுகிப்போய் நாகரத்தினமாக மாறிவிடும்.இந்த நாகரத்தினத்தை வைத்து நாகப்பாம்புகளை விரட்டலாம்.

எப்படி வலம்புரிச்சங்கு அபூர்வமானதோ அதுபோலவே இதுவும் அபூர்வமானது.இம்மாதிரியான நாகங்கள் சுனைபக்கத்தில் பச்சைத்தவளைகள் நிறைய இருக்கும் இடங்களில், அடர்ந்த சீரகச்செடிகள் நிறைந்த புதர்களுக்குள் வாழும்.இவை பச்சைத்தவளைகளை மட்டுமே உண்டு வாழும்.ஒரு லட்சம் பாம்புகளில் ஒன்று மட்டுமே இப்படி நாக மாணிக்கத்தை உருவாக்கும் வலிமை கொண்டதாக இருக்கும்.
தகுதியுள்ளவனுக்கு தகுதியான நேரத்தில் தகுதியான பொருள் அல்லது பதவி வந்து சேரும்.
இந்த நாகரத்தினம் எப்போதும் தங்கம் அல்லது வெள்ளியுடன் சேர்ந்தே இருக்க வேண்டும்.அல்லது பாலில் முழ்கிக்கிடக்க வேண்டும்.

நெற்றிக்கண்ணைத் திறக்கும் ரகசியம்

நெற்றிக்கண்ணைத் திறக்கும் ரகசியம்

சிவபெருமானுக்கு நெற்றிக்கண் இருப்பது போல, நாம் ஒவ்வொருவருக்கும் நெற்றிக்கண் உண்டு.ஆதிகாலத்தில் ஒவ்வொரு மனிதருக்கும் இருந்ததால் அவரவர் தமது எதிர்காலத்தை அறிந்தனர்.இப்படி அறியும் அறிவே ஆறாம் அறிவாகும்.காலப்போக்கில் கடவுளின் சாபத்தினால் இந்த ஆன்மீகச்செல்வத்தை இழந்துவிட்டோம்.
இதில் இந்துக்களாகிய நாம்தான் முன்னோடிகளாகவும்,முழுமை பெற்றவர்களாகவும் இருந்திருக்கிறோம்.தற்போது இந்த முறை அரிதானஒன்றாகிவிட்டது.

திபத் நாட்டில் புருவமத்தியில் சுத்தியாலால் ஓட்டைபோட்டு மூன்றாம் கண்ணைத் திறக்கிறார்கள்.இது மிகவும் கொடூரமானது.ஒவ்வொரு மனிதருக்கும் புருவமத்தியில் நெற்றிப்பகுதியிலிருந்து சில சென் டிமீட்டர்கள் ஆழத்தில் பட்டாணி சைசுக்கு ஒரு சுரப்பி இருக்கிறது.இதன் மையத்தில் தான் நமது மூன்றாவது கண் இருக்கிறது.பழங்குடிமக்கள்புருவமத்தியில் சூடு போட்டுக்கொள்கின்றனர்.பச்சைக்குத்திக்கொள்கின்றனர்.வைணவர்கள் கழுமுனை நாடியில் நாமம் தரிக்கின்றனர். சாக்தர்கள் குங்குமம் இட்டுக்கொள்கின்றனர்.பெண்கள் நெற்றிச்சுட்டி இட்டுக்கொள்கின்றனர்.பிராமணர்கள் காயத்ரி மந்திரம் சொல்லி உபநயனம் செய்விக்கின்றனர்.இஸ்லாமியர்கள் முட்டி முட்டி தொழுகின்றனர்.யோகிகள் கழுமுனை மந்திரத்தாலும்,பிராணயாமத்தாலும் நெற்றிக்கண்ணைத் திறக்கின்றனர்.ராஜகுருக்கள் வைரக்கற்களால் நெற்றிக்கண்ணைத் திறக்கின்றனர்.ரசவாதிகள் ரசமணியால் திறக்கின்றனர்.மருத்துவர்கள் கண்ணுப்புழை என்னும் மூலிகையாலும்,மந்திரவாதிகள் ருத்திரபஸ்பத்தாலும், சைவ மடாதிபதிகள் ஒரு முகருத்தராட்சத்தாலும். மீனவர்கள் சுறாமீனின் நெற்றிக்கல்லாலும்,கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஒளிமூலமும் நெற்றிக்கண்ணைத்திறக்கிறார்கள்.
சிலருக்கு விபத்துமூலமாகவும் எதிர்பாராமல் நெற்றிக்கண் திறப்பதுண்டு.

இப்போதும் இந்த மூன்றாவது கண் ஞானிகள்,ரிஷிகள்,சித்தர்களுக்கு விதிவிலக்காக இயங்கி வருகிறது.நெற்றிக்கண் திறப்பு என்பது பருவமடைந்த பெண்கள் பூப்படைவது போல எல்லா மனிதர்களுக்கும் ஏற்படும் ஆன்மீகத் திறப்பு(Mystic Maturity) என எடுத்துக்கொள்ளலாம்.தற்காலத்தில் சுவாமி வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலையின் மூலம் நமது நெற்றிக்கண்ணைத்திறக்கமுடியும்.


இதை வேறு ஒரு விதமாகவும் திறக்கலாம்.அதைஇப்போது பார்ப்போம்:

நாட்டுமருந்துக்கடையில் கருமாக்கல் அல்லது அஞ்சனக்கல் என கேளுங்கள்.(ஒரு கிராம் ரூ.5/-இருக்கும்.5 முதல் 10 கிராமுக்குக் குறையாமல் கேட்டு வாங்குங்கள்.)வாங்கிய கல்லை உப்புத்தாளில் எமரிப்பேப்பரில் தேய்த்து எடுக்கவும்.(வாங்கும் கல் கோணலும் மாணலுமாக இருக்கும்.)அதிலுள்ள ஒளிக்கற்றைசூட்சுமமாக வெளிப்படும்.தரையில் விரிப்பு விரித்துத் தலையணை வைக்காமல்விளக்குகளை அணைத்து இருளில் படுக்கவும்.வடக்குத் தவிர இதர திசைகளில் ஏதாவது ஒரு திசைநோக்கி தலைவைத்து மல்லாந்து படுக்கவும்.
இரவில் சுமார் 7 மணிக்குப் பால்சாதம் சிறிது சாப்பிட்டு
10 மணிக்கு மேல் இப்பயிற்சியை ஆரம்பிக்கலாம்.அஞ்சனக்கல்லை கண்களை மூடியோ மூடாமலோ இரு புருவங்களுக்கு மத்தியில் வைக்கவும்.கருமாக்கல்லில் உள்ள கண்ணுக்குத் தெரியாத தெய்வீகஒளிக்கற்றைகள் நெற்றிக்கண் ஜவ்வை சிறிதுசிறிதாகக்கிழிக்கும்.ஒளி சிறிதுசிறிதாக வெளிவரும்.அதேகல்லை உபயோகித்து மறுநாளும் பயிற்சி செய்யலாம்.

பயிற்சி ஆரம்பிக்கும் முன் சரியைகிரியையில் உள்ளவர்கள் தங்களின் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தை வணங்க வேண்டும்.மந்திர யோகம் அல்லது வாசியோகம் பயிற்சி பெற்றவர்கள் அதனையும் சேர்த்துச் செய்யலாம்.ஒளிநிலை கூடுதலாகி நெற்றிக்குள்பூரணச்சந்திரன் போல காட்சி கொடுக்கும்.அருள் நிலைபெருகும்.90 நாள் பயிற்சியில் வெற்றி பெருவீர்கள் என்பது உறுதி.

பொதுவாக ஏதாவது ஒரு பொருளை படுத்த நிலையில் நெற்றி நடுவில் வைத்தால் அதில் ஒரு உறுத்தல் ஏற்படும்.பின் அங்குள்ள இருள் விலகும்.
சிலருக்கு 90 நாட்களுக்கு மேல் தான் இந்த அனுபவம் கிடைக்கும்.அது அவரவரின் பிறந்த ராசி,உடல்தன்மை,மன வலிமை இவற்றைப்பொறுத்தது.

பசுவை ஏன் வழிபட வேண்டும்?

பசுவை ஏன் வழிபட வேண்டும்?

இந்த உலகில் பசுவின் உடலில் மட்டுமே சகல இந்து தெய்வங்களும் குடிகொண்டுள்ளன.கடுமையான பாவங்களிலிருந்து மீள பசுவிற்கு ஒருமுறை மட்டும் உணவுஇட்டால் போதும் என்பது ஒரு ஜோதிடப்பரிகாரம்.

இந்தோனிஷியாவில் இறந்தவர்களை எரிக்கும்போது ,ஒரு காகிதத்தில் பசுவின் படத்தை வரைந்து அதையும் இறந்தவர் உடலுடன் சேர்த்தே எரிக்கிறார்கள்.பசுவின் உதவியால் அவர் சுவர்க்கத்தை அடைவார் என்பது நம்பிக்கை.பாலியில் இறந்த பசுக்களை கவுரவமாக இறுதிச்சடங்குடன் எரிக்கிறார்கள்.பசுவின் சிறுநீர் போன்ற கிருமிநாசினியை நம்மால் விஞ்ஞானரீதியாக உருவாக்கிடமுடியாது.அதன்மறுபெயர் கோமூத்திரம் ஆகும்.கோமூத்திரத்தை சிறிதுதலையில் தெளித்துக் கொள்வதே கங்கையில் குளித்தபலன் ஆகும்.பசுவைப் பூஜித்தால் மும்மூர்த்தி தெய்வங்களான பிரம்மா,விஷ்ணு,சிவன் இம்மூவரையும் பூஜித்தபலன் கிடைக்கும்.கி.பி.1947 ஆம் வருடம் 1000 மனிதர்களுக்கு 450 கால்நடைகள் நமது பாரதத்தில் இருந்தன.இது தற்போது கி.பி.2009இல் 1000:50 ஆகக் குறைந்துவிட்டது.அடுத்த நான்கைந்து ஆண்டுகளில் இது 1000:20 ஆகக்குறைந்துபோகக்கூடும்.பசுவுக்கு ஒரே ஒரு முறை அகத்திக்கீரை தானம் செய்தாலே நாம் இப்பிறவியில் செய்த கடும் பாவங்கள் தீர்ந்துவிடும்.பசுவை ஒரு முறை வலம் வந்தால் இந்த உலகை ஒரு முறை வலம் வந்ததற்குச் சமம்.பசுவசிக்கும் மாட்டுத்தொழுவத்தில் பசுவின் அருகில் அமர்ந்து ஜபிக்கும் மந்திரங்கள் மற்றும் தர்மகாரியங்கள் நூறுபங்கு பலன்களைத் தரும்.இன்னும் சில ஆயிரம் வருடங்களுக்குப்பிறகு ஏற்படப்போகும் நாகரீக வளர்ச்சியால் சில இயற்கை மாறுதல் ஏற்படும்.இதனால்,இந்த உலகம் முழுவதும் சில விபரீதங்கள் ஏற்படும்போது பசுக்கள் இருக்குமிடம் மட்டும் எந்த ஒரு பாதிப்புமில்லாமல் பாதுகாப்பாக இருக்கும் என ஹரேராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் வெளியிட்டுள்ள ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை தெரிவிக்கின்றது.பசுவைக் காப்போம்;ஒரு பசுமடம் அமைத்தால்,அதில் நான்கு பங்கு லாபம் கிடைக்கும்.

லக்ஷ்மி பூஜை


லக்ஷ்மி பூஜை
லக்ஷ்மி பூஜை செய்பவர்களுக்கு சகல ஐஸ்வர்யமும் கிட்டும். வெள்ளிகிழமைகளில் நேரம் இருப்பவர்கள் இப்பூஜையை செய்து பலன் அடையலாம். இதற்கு வேண்டிய பொருட்கள்:
குத்து விளக்கு - ஒன்று
உதிர்த்த மல்லிகை மற்றும் சாமந்தி பூக்கள் - ஒரு சிறு பாத்திரத்தில்
பால் - ஒரு கிண்ணம்(சுத்தமான வெள்ளி கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளலாம்) பழங்கள் - வாழை, எந்த பழம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.
தண்ணீர் - ஒரு கிண்ணம்
குங்குமம் - இடுவதற்கு
சந்தனம்/மஞ்சள் - இடுவதற்கு
பெரிய தாம்பாளம் - ஒன்று
லக்ஷ்மி உருவம் பதித்த வெள்ளி தகடு - அவரவர்கள் வசதிக்கேற்ப வெண்கலத்திலும் சிறிய மகா லக்ஷ்மி விக்ரகாங்கள் கிடைக்கின்றன
சர்க்கரை பொங்கல் - நெய்வேத்யம் செய்ய
முளை கட்டிய கருப்பு கொண்டாய் கடலை - (பூஜைக்கு முன் நாள் காலையிலே கடலைகளை ஊற வைத்து விடுங்கள்)
பூஜை அன்று பூஜை செய்யும் இடத்தை சுத்தம் செய்து கோலம் இடுங்கள்.
குத்து விளக்குடன் லக்ஷ்மி தகடை சிறிய நூலால் கட்டிவிடுங்கள். மாட்டுவதற்கு விளிம்பு இருந்தால் குத்து விளக்கில் மாட்டிவிடலாம். குத்து விளக்கை தாம்பாளத்தில் வைத்து மஞ்சள் குங்குமம் இடுங்கள். இப்போது நெய்வேத்யம் செய்ய பால், தண்ணீர், பொங்கல், பழங்கள், கடலைகளை தயாராகி வைத்துவிடுங்கள். ஐந்து முக விளக்கை ஏற்றுங்கள். நெய்யினால் கூட விளக்கு ஏற்றலாம். பூஜையை மலர்களை வைத்து ஆரம்பிக்கலாம். லக்ஷ்மி அஷ்டோத்திர மந்திரத்தை முழுவதுமாக மலர்களை கடவுளுக்கு அர்ச்சனை செய்துகொண்டே
மனம் ஒன்றி படியுங்கள். படித்து முடித்தவுடன், சகல ஐஸ்வர்யமும் கிட்ட கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். தீர்த்தம் கொண்டு சர்க்கரை பொங்கல், பழங்கள், பால் மற்றும் கொண்டாய் கடலைகளை கடவுளுக்கு நெய்வேத்யம் செய்யுங்கள். பின் ஒரு புது துணியில் முளை விட்ட கடலைகளை கட்டி வெற்றிலை பாக்குடன் வைத்து, நெய்வேத்யம் செய்த சர்க்கரை பொங்கல் சேர்த்து சுமங்கலிகளுக்கு கொடுக்கலாம். இவ்வாறு செய்து வர, மகா லக்ஷ்மி நம் வீடு தேடி வருவாள்.
முளை கட்டிய கடலைகள், சகல சௌபாக்ய வாழ்க்கையின் நம்பிக்கையாக வழங்கப்பட்டு வருகிறது.

ராகங்களும் அவற்றின் குணங்களும்

ராகங்களும் அவற்றின் மருத்துவகுணங்களும்
இந்துக்களின் இசைஞானத்தின் வரம்பு மனிதகுலம் மொத்தத்திற்கும் கிடைத்த பொக்கிஷம் ஆகும்.ஏனெனில்,ஒலியின் ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பே ராகங்கள் ஆகும்.வீணை,மிருதங்கம்,புல்லாங்குழல்,தபேலா,வயலின் முதலான இசைக்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டதே மன நிம்மதிக்கும்,மனிதகுல அமைதிக்கும்தான்.இதெல்லாம் மேல்நாட்டினருக்குப் புரியத்துவங்கியுள்ளதால்தான், இந்தியாவின் தனியார் இசைப்பயிற்சிக் குருகுலங்களில் வெளிநாட்டு மாணவ மாணவிகள் நிரம்பி வழிகின்றனர்.
ராகங்களின் மெல்லிய அதிர்வு மற்றும் பாடல்களின் ஒலிவித்தியாசம் நமது உடல் நரம்புகளில் ஊடுருவி ஒலி அதிர்வுகளுக்கு ஏற்றபடி மென்மை அல்லது கடினமடைகின்றன.நரம்புத்துடிப்பைப் பொறுத்து நமது சுவாசமுறை மாறுபடத்துவங்குகின்றது.இந்த மாறுபாடு ரத்த ஓட்டத்தினையும் நன்மைதரும் விதமாக பாதிக்கிறது.இந்தச் செயல்பாடுகள் மூளையின் செயல்பாட்டையே மெல்லியதாக ஆக்குகின்றது.
அம்மாவின் தாலாட்டு குழந்தையின் மனதை மென்மையாக்கி மூளையில் அமைதியை நிலைநாட்டுகின்றது.இதனால் குழந்தை தூங்கிவிடுகின்றது.அம்மாவின் தாலாட்டுப்பாடல் அம்மாவின் மனதையும் அர்ப்பணிப்புடன் இனிமையை உருவாக்குகின்றது.
அதேசமயம்,ஒப்பாரி மனதில் சோகத்தை உருவாக்குகின்றது.
(இவற்றில் பெரும்பாலானவற்றை உலகமயமாக்கல் மற்றும் ஆங்கில மயமாக்கலால் பெரும்பாலனவற்றை இழந்துவிட்டோம்.)
நிம்மதியாகத் தூங்கிட நீலாம்பரி ராகம் உதவி செய்கிறது.ஒரு குறிப்பிட்ட ராகம் ஒன்று நம்முடைய முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.அந்த ராகத்தைப் பாடினால் பாடுபவரே தீப்பிடித்து எரிந்து போவாராம்.அப்படி எரிந்து போன இசை மேதைகள் இந்தியாவில் ஏராளம்.இன்று அந்த சூட்சுமம் யாருக்கும் தெரியுமா?
அமிர்தவர்ஷினி ராகம் மழையைக் கொண்டுவருகின்றது.இப்படி கொண்டுவருவதை பிரபல சங்கீத மேதைகளான முத்துச்சாமி தீட்சிதர், செம்மாங்குடி பாலமுரளிகிருஷ்ணா, குன்னக்குடி வைத்தியநாதன் பல முறை பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்பாக நிரூபித்துள்ளனர்.

வருணஜபம் செய்தாலும், திருப்பாவையின் ஒரு பாடலான ‘ஆழி மழைக்கண்ணா’ என்ற பாடல் பாடினாலும்(முழுப்பாடல் நமது ஆன்மீகக்கடலில் இருக்கின்றது) மழை வருகின்றது.இம்மூன்றின் உச்சரிப்பு மற்றும் ஒலி ஒத்திசைவும் பாடப்படும் இடத்தில் மழைமேகங்களை கூடச்செய்து மழைபொழியச் செய்கின்றது.
இம்மூன்றிலும் இப்பேர்ப்பட்ட சூட்சும சக்திகள் நிறைந்திருப்பதை ஜெர்மனியைச் சேர்ந்த இந்தியவியல் விஞ்ஞானிகள்(Indologists) நிரூபித்துள்ளனர்.

தமிழர்களின் மரபுச்செல்வங்களான தேவாரம், திருவாசகம்,நாலாயிரத்திவ்விய பிரபந்தம்,சவுந்தரிய லஹரி இவை அனைத்தும் மனித மனத்தையும்,இறைவனின் மனத்தையும் உருக்கும் வலிமை மிக்கவை.ஒலிவிஞ்ஞானம் என்ற Fonotics அறிவியலில் மேற்குநாடுகள் இன்று கத்துக்குட்டிகள்; நாமோ மேதைகள்.

எனவே,இந்தப் பெருமைகளை நாம் நமது குழந்தைகளின் மனதில் பதியச்செய்வோம்.

மற்றவர்களை வெற்றிகொள்வது எப்படி?

மற்றவர்களை வெற்றிகொள்வது எப்படி?
1)உங்களுக்கென்று உள்ள கருத்துக்களைக்கொண்டு மற்றவர்களை மதிப்பிட்டு விடாதீர்கள்.
2)வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பீடு செய்ய வேண்டாம்.பழகி முடிவு செய்யுங்கள்.
3)பிற மனிதர்கள் கூறுவதை உன்னிப்பாக கவனிக்கவும்.
4)எல்லோருக்கும் தலைக்கனம் உண்டு.அதற்காக பிறரை வெறுக்க வேண்டாம்.

5)குறைவாகப் பேசுங்கள்;அதனால் நிறைய கற்றுக் கொள்வீர்கள்

6)ஒருவரிடம் கேள்வி கேட்டப்பின் அவர் என்ன கூறுகிறார் என்பதை பொறுமையாக கவனியுங்கள்.நீங்களே உடனே விடை கூற முற்படாதீர்கள்.

7)பிறர் நேரத்தை நீங்கள் வீணாக்க வேண்டாம்.பிறர் உங்களுடைய நேரத்தை வீணாக்க அனுமதிக்காதீர்கள்.

8)ஒருவருக்கு ஓர் உதவியை செய்யும்முன், அதில் சிறிது சந்தேகம் இருந்தாலும், அதைச் செய்ய ஒப்புக்கொள்ளாதீர்கள்.

9)(உங்களிடம் பணிபுரிவர்களிடம்) முடிவு செய்தல், செய்த முடிவை மாற்றுதல்,வேலையை முடித்தல் இவற்றில் முழுச்சுதந்திரம் கொடுங்கள்.

10)மற்றவரின் குழந்தைகளிடம் அன்பாக நடந்துகொள்ளுங்கள்.இதனால் அவர்களிடம் நீங்கள் நன்மதிப்பு பெற முடியும்.

11)ஒருவரைப் பாராட்டும்போது தாராளமாக பாராட்டுங்கள்.போலியான பாராட்டுக்களை வாரிவிடவேண்டாம்.

12)தவறுகள் மனிதர்களிடம் சகஜம்.அதை அனுமதியுங்கள்.மீண்டும் ‘அப்படி’ நடக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று மட்டும் கேட்டுக்கொள்ளுங்கள்.

13)உங்களைச் சுற்றியிருப்பவர்களே உங்கள் கூட்டாளிகள்.(உங்கள் உலகமே அவர்கள்தான்)அவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் பகைத்துக்கொள்ளவேண்டாம்.

14) உங்களுக்குத் தெரியாவிட்டால், உரியவரிடம் உண்மையைச் சொல்லிவிடுங்கள்.தெரியும் என்ற நடிப்பு வேண்டாம்.
15)தவறிழைத்தால் அதை ஒப்புக்கொள்ளத்தயங்காதீர்கள்! இதனால் மற்றவர்களுக்கு உங்களைப் பிடித்துப்போகும்.
16)வெற்றியை அனைவரிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள்

ஒரு லட்சியத்தை அடைய, ஒருவருக்கு இருக்கவேண்டிய இயல்பான குணங்கள்

ஒரு லட்சியத்தை அடைய, ஒருவருக்கு இருக்கவேண்டிய இயல்பான குணங்கள்

1)தைரியமாக எந்த ஒரு காரியத்தையும் தொடங்கும் குணம்
2)கற்பனைத் திறமையுடன் எதையும் பார்க்கும் குணம்
3)ஆழ்ந்து சிந்தித்து வேலைகளை ஒழுங்குபடுத்தி அமைக்கும் குணம்
4)சிந்தனையைச் சிதறவிடாமல் ஒருமுகப்படுத்தி கவனமுடன் செயல்படுவது
5)நேரம்,பணம் இந்த இரண்டையும் திட்டமிட்டு செலவு செய்வது
6)எப்போதும் சுறுசுறுப்புடனும் ஊக்கத்துடனும் மனதை வைத்திருப்பது
7)தன்னை அடக்கி திருத்திக்கொள்ளுதல்

சனிபகவானை எப்படி குளிர்விக்கலாம்?

சனிபகவானை எப்படி குளிர்விக்கலாம்?

சனிபகவானின் காயத்ரி மந்திரத்தை சனிக்கிழமை,சனிப்பிரதோஷம் நாட்கள்,சனிப்பெயர்ச்சிநாட்கள், 8,17,26 ஆம் தேதிகளில் இங்குவந்து பீடத்தில் அமர்ந்து 108 முறை ஜபிக்கலாம்.
ஓம் காகத் வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்தக ப்ரசோதயாத்

நீலப்பட்டு வாங்கி சனிபகவானுக்கு சாற்றலாம்.

நீல உடைகள் அணிந்துவந்து சனிபகவானை வழிபடலாம்.

கறுப்பு எள் மற்றும் கருப்பட்டி அல்லது சர்க்கரை கலந்த பண்டங்களை இடித்து சனிபகவானுக்கு படைத்து பிறருக்கு பிரசாதமாக வழங்கலாம்.

சனிபகவான் முன்பாக நல்லெண்ணெய்,நெய்,இலுப்பை எண்ணெய் கலந்து சிட்டி விளக்கில் திரி வைத்து விளக்கேற்றி 9 முறை வலம்வந்து வணங்கலாம்.

ஒருவரது ஆயுள்பலம் அதிகரிக்க ஆலோசனைகள்

ஒருவரது ஆயுள்பலம் அதிகரிக்க ஆலோசனைகள்

1.தினமும் காலையும், மாலையும் அரைமணிநேரத்திற்கு குறையாமல் ப்ராணயாமம் எனப்படும் மூச்சுப்பயிற்சி செய்துவருதல்.(இந்த ப்ராணயாமப்பயிற்சியை இராமகிருஷ்ணமிஷன் கிளைகளிலும், வேறு பல இந்து மத ஆன்மீக மடங்களிலும் பயிற்றுவிக்கிறார்கள்)

இருபது நிமிடம் தன்னை மறந்த தியானம் செய்யவேண்டும்.இந்த ஆழ்நிலை தியானம் செய்யத்துவங்கிய சில நாட்களில் நமது தேவையற்ற கோபம்,ஆவேசம்,பொறாமை,ஆத்திரம்,வறுமை,பயம்,கூச்சம், தேவையற்ற வெட்கம், பதட்டம்,நோயின் வேதனைகள் எல்லாமே காணாமல் போயிருக்கும்)

2.கீழ்க்கண்ட மந்திரத்தை தினமும் காலையும்,மாலையும் குறைந்தது 32 தடவை ஜபிக்கவேண்டும்.வீட்டில் பூஜை அறை அல்லது அருகில் உள்ள கோவிலில் ஜபிக்கலாம்.

த்ரியம்பகம் யஜாமஹே
ஸீகந்திம் புஷ்டி வர்தனம்
உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர்
முக்ஷிய மாம்ருதாத்

3.பல ஜோதிடர்களிடம் உங்கள் பிறந்த ஜாதகத்தை காண்பிக்காமல் இருத்தல்

பணம் சார்ந்த பழமொழிகள் மற்றும் அனுபவ மொழிகள்


பணம் சார்ந்த பழமொழிகள் மற்றும் அனுபவ மொழிகள்


தங்கத்தை விட்டெறிபவன், செம்பை பொறுக்கியெடுக்கும் படி ஆகும் நாள் விரைவில் வரும்.

ஒரு பொருளை அடகுவைப்பதை விட, விற்றுவிடு.

உடனே கொடுத்தவன், இரு மடங்கு கொடுத்தவனாகிறான்.

பணம் நல்ல பணியாள்;ஆனால் மோசமான எஜமான்.

பொருளுக்கு மனிதன் அடிமை;பொருள் யாருக்கும் அடிமையில்லை.

அழகு வல்லமையுடையதுதான்.ஆனால்,அதைவிட சர்வ வல்லைமை யுடையது பணம்தான்.

செல்வச் செருக்குடையவர்கள், தங்களுடைய உடமைகளை மட்டுமல்ல;உள்ளத்தையும் அடமானம் வைக்கத் தயங்கமாட்டார்கள்.

உனது வாயையும்,பணத்தையும் கவனமாக திற!
அப்போதுதான் இரண்டிற்கும் நல்ல மதிப்பிருக்கும்.

செல்வம் என்பது வருமானத்தைப் பொறுத்தது அல்ல.நிர்வாகத்திறமையைப் பொறுத்தது.

செலவுகள் யாவற்றிலும் காலத்தை வீணாக்குவதே அதிகச் செலவும்,ஊதாரித்தனமும் ஆகும்.

அனுபவிக்கிற வசதியில் சிறிது குறைந்தாலும், சிலர் தாங்கள் ஆண்டியாகிவிட்டதாகவே நினைக்கிறார்கள்.

ஊதாரி தன் வாரிசையே கொள்ளையடிக்கிறான்.கஞ்சன் தன்னையே கொள்ளையடிக்கிறான்.

தேவையானதை வாங்காதே.தவிர்க்கமுடியாததை வாங்கு.

இக்காலத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை (ஆளுமைத்திறனுடன்) வளர்ப்பதில்லை.அவர்கள் வளர பணம் மட்டுமே கொடுத்து உதவுகிறார்கள்.பணத்தின் குணம்,அதன் மதிப்பு,அதை எப்படி பயன்படுத்துவது? என்பதை சொல்லித்தருவதே இல்லை.அதனால்தான்,பொறுப்புள்ள குடும்பங்கள் இன்று உருவாகுவது இல்லை.(இந்த பழமொழிக்கு மார்வாடிகள்,சேட்டுகள் விதிவிலக்கு)

லாபத்தினால் மட்டும் ஒருவன் பணக்காரனாவதில்லை.சேமிப்பதால் மட்டுமே !ஒருமுறை சேமித்த பணம் , இருமுறை சம்பாதித்த பணத்திற்குச் சமம்.

முதுமைக்காலத்தில் அடுத்தவர் கட்டுப்பாட்டில் உள்ள பணம், நமது ஆயுள்காலச்சிறைக்குச் சமம்.

பிதுர்தோஷமும் பரிகாரங்களும்


பிதுர்தோஷமும் பரிகாரங்களும்

உங்கள் பிறந்த ஜாதகத்தில் நிற்கும் ராகு கேதுக்கள் இந்த கலிகாலத்தில் பிதுர்தோஷத்துடன் பிறக்க வைக்கின்றன.இந்த பிதுர்தோஷம், நாம் முற்பிறவியில் செய்த பாவங்களின் விளைவுகளை அனுபவிப்பதற்காகவே குறிப்பிட்ட இடங்களில் நிற்கும்போது நம்மைப் பிறக்க வைக்கின்றன.உங்கள் பிறந்த ஜாதகத்தில், லக்னத்துக்கு 1, 5, 7, 9 முதலான இடங்களில் இராகு அல்லது கேது இருந்தால் நீங்கள் பிதுர்தோஷத்துடன் பிறந்துள்ளதாக அர்த்தம்.இந்த பிதுர்தோஷம், நாம் முற்பிறவியில் நமது கணவன் அல்லது மனைவியை கவனிக்காமல் இருந்ததையும், நமது அப்பா அம்மாவை பாடாய் படுத்தியதையும், நமது மகனை அவனது மனைவியுடன் பிரித்துவைத்ததையும், அல்லது நமது மகளை அவளது கணவனுடன் பிரித்துவைத்ததையும், நமது வறிய சகோதரனை அவன் கெஞ்சிக்கேட்டும் அவனுக்கு அவசர உதவிகூட செய்யாமல் பணத்திமிர்,அதிகாரத்திமிரில் இருந்ததையும் காட்டுகிறது.

இந்த பிதுர்தோஷம், ஜாதகப்படி உங்களுக்கு 25 வயதில் கிடைக்க வேண்டிய அரசாங்க வேலையை 35 வயதில் (மிகத் தாமதமாக) கிடைக்கச் செய்யும். அல்லது 21 வயதில் செய்யவேண்டிய திருமணத்தை 31 வயதுக்கு மேல் செய்யுமளவுக்கு உக்கிரமாக செயல்பட வைக்கிறது.மனைவி,பெற்றோர்,குழந்தைகள்,உறவினர்களிடையே பிரச்னைகளை தீராமல் வளர்க்கக் காரணமாகிறது.

இந்தப்பிறவியில் கூட கடவுளை கேலி செய்பவர்கள்,பிற மதத்தை நிந்தனை செய்பவர்கள் இந்த பிதுர்தோஷத்தை அடுத்த பிறவியில் அனுபவிப்பார்கள்.
பித்ரு தோஷம் ஒருவரது/ஒருத்தியின் பிறந்த ஜாதகத்தில் அமைந்துவிட்டால், மற்றக்கிரகங்களுக்கு என்ன பரிகாரம் செய்தாலும் பலன் கிடைக்காது.பித்ரு தோஷம் நீக்கியப்பிறகுதான் பலன்கள் தரத் துவங்குகின்றன.

ஊரை அடித்து உலையில் போடுமளவுக்கு பணத்தாசை பிடித்து அலைபவர்கள் செய்யும் பாவங்கள் இந்தப்பிறவியிலேயே அவர்களின் மூத்த பிள்ளை (அது பெண்ணாக இருந்தாலும்)யை அல்லது கடைசிப் பிள்ளையைக் கடுமையாகப் பாதிக்கின்றது என்பதை நேரடியாக பலமுறை நான் உணர்ந்திருக்கிறேன்.அரசியலில் இருப்போர்,தேர்தலில் ஜெயித்தவர்கள்,மாநில மத்திய அரசுப் பணியில் இருப்போர்,அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள் எடுப்போர், பலரது தலையெழுத்தையே மாற்றும் அதிகாரத்தில் இருப்போர்கள் மனிதத் தன்மையின்றி செயல்படுவதால்(துட்டடிக்கும் நோக்கிலேயே கொள்கைகளை வகுப்பதால்) அவர்களுக்கு உடனுக்குடன் பாதிப்பை அவர்களும் அவர்களின் சந்ததிகளும் அனுபவித்துவருகின்றனர்.இவை மிகவும் கடுமையான பித்ரு தோஷத்தை உருவாக்குகின்றன.கலியுகத்தில்தான் நம்முடைய வாழ்க்கையைக் கண்காணிக்கும் அஷ்டதிக் பாலகர்கள் ரொம்ப பிஸி!!!

பிதுர் தோஷம் நீக்கிட உரிய ஜாதகர்கள் இராமேஸ்வரம் செல்ல வேண்டும்.அங்கு வேதம் அறிந்த பண்டிதர்களால் திலா ஹோமம் அல்லது துலா ஹோமம் செய்ய வேண்டும். நெல்லையும் எள்ளையும் கலந்து செய்யப்படும் ஹோமம் ஆகும்.காலையில் எள் நீரால் தர்ப்பணத்தை கடற்கரையினில் கொடுத்துவிட்டு பின்னரே திலா ஹோமம் செய்ய வேண்டும்.
திலா ஹோமம் செய்பவர்கள் அன்று இராமேஸ்வரத்தில் தங்க வேண்டும்.ஹோமம் முடிந்ததும் புறப்பட்டு அன்றே தமது ஊருக்குப் போகக்கூடாது.சிரத்தையுடனும்,முழு மனதுடனும்,ஆர்வத்துடனும் செய்ய வேண்டும். திலா ஹோமம் செய்து பிண்டத்தைக் கடல் நீரில் கரைக்கும்போது கருடபகவான் அங்கே அந்த நேரத்தில் வானில் வட்டமிட வேண்டும்.அப்படி வட்டமிட்டால் மகாவிஷ்ணு நம்மை இந்த செயல் செய்தமைக்கு ஆசிர்வதித்தாக அர்த்தம். திலா ஹோமம் செய்ய விரும்புபவர்கள் எனக்குத் தெரிந்த ஒரு வேதியரையும் அணுகலாம்.
வைஷ்ணவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் திருப்புல்லாணிக்கரையில் திலா ஹோமம் செய்ய வேண்டும்.கேரளாவில் திருவனந்தபுரத்துக்கு அருகில் உள்ள பரசுராம க்ஷேத்திரம் என்ற கிராமத்தில் பிண்டம் கொடுத்து பிதுர்சாந்தி எனப்படும் திலா ஹோமம் செய்ய வேண்டும்.

கேரளாவில் பித்ரு தோஷம் நீங்கிட பசுவுக்கு அவரவர் ஜன்ம நட்சத்திரத்தன்று பருத்திக்கொட்டைப்பால் எடுத்து வெல்லம் கலந்து பித்ருக்களை வேண்டி உண்பதற்குக் கொடுத்துவருகின்றனர்.(நாமும் இப்படிச் செய்யலாம்)

வாழ்வில் ஒருமுறையாவது காசி,கயா மற்றும் இராமேஸ்வரம் சென்று ஹோமம் செய்ய வேண்டும்

திருக்கையிலாய மலையின் சிறப்புகள்


திருக்கையிலாய மலையின் சிறப்புகள்

சிவபெருமான் வாழுமிடம்.திருக்கையிலாயமலைக்குச் செல்லும் வழியில், திருக்கையிலாயத்திலிருந்து தென்கிழக்காக 40 கி.மீ.தூரத்தில் உலகிலேயே உயரமான இடத்தில் (கடல் மட்டத்திலிருந்து 15,000 அடிகள்) நன்னீர்த் தடாகம்தான் மானசரோவர்!இது பிரம்மாவால் மானசீகமாகப் படைக்கப்பட்டது.இது 24 கி.மீ.அகலமும்,90 கி.மீ.சுற்றளவும் கொண்டது.320 கி.மீ.பரப்பளவுடன் 250 அடி ஆழத்துடன் உள்நாட்டுக்கடல் போலக் காட்சியளிக்கிறது.திருக்கையிலாய மலைக்கும் குர்லா மந்தாதா மலைக்கும் இடையே மானசரோவர் இருக்கிறது.மானசரோவரின் புனித நீரை அருந்துவோர் பல நூறு பிறவியின் பாவங்கள் நீங்கி சுவர்க்கம் அடைவர்.தடாகக்கரை மணல் பல நிறங்களில் காட்சியளிக்கிறது.
இவ்வளவு சிறப்புமிக்க நமது சிவபெருமானின் வீடு.

கிரிவலம் செல்பவர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள்

கிரிவலம் செல்லுவதால் ஏற்படும் புண்ணியபலன்கள்

நீங்கள் திருஅண்ணாமலையில் கிரிவலம் சென்றால் அப்போது உங்களுடைய அத்தனை பிறவி வடிவங்களும் கூடவே சேர்ந்து வருகின்றன.ஒவ்வொருவரின் ஒட்டு மொத்தப் பிறவிச் சாரமே கூடவே சேர்ந்து அருணாச்சலத்தை வலம் வருமாம்!!! இதற்குக் காரணம், அத்தனை கோடிப் பிறவிகளுக்கும் முற்றுப்புள்ளி இடும் ஆன்மசாதனமே அண்ணாமலை கிரிவலம் என்பதால்தான்!
நமது பிரபஞ்சத்தில் அருணாச்சலமான திரு அண்ணாமலையில் மட்டுமே இது சாத்தியமாகும்.இது நிகழ்ந்தாகிப் பிறவிப்பெரும்பயன் அடைய வேண்டுமென்றால், பவுர்ணமி தினம் போன்று மாதசிவராத்திரி நாளிலும் அருணாச்சல கிரிவலத்தைக் கடைபிடிக்க வேண்டும்.

மனக் கவலை தீர-

மனக் கவலை தீர-
தினமும் இரவு உணவிற்குப் பிறகு,ஒரு கரண்டி ரோஜா குல்கந்து சாப்பிட்டுவிட்டு,250 மி.லி.காய்ச்சிய பசும்பாலை சாப்பிட்டு வந்தால் மனக்கவலைகள் தீரும்.
எக்காரணம் கொண்டும் சூரிய அஸ்தமானம் ஆன பின்பு
தயிர் சேர்த்த உணவுகள் சேர்க்கக் கூடாது.அப்படிச் சேர்த்தால் லட்சுமி கடாட்சம் போய்விடும்.
வீட்டில் துளசி செடியும்,மல்லிகைச் செடியும் வளர்ப்பது பணவரவை அதிகரிக்கும்.

உணவில் புளி சேர்த்தால் பொறாமை உணர்ச்சி அதிகரிக்கும்.பட்டை சோம்பு பிரிஞ்சா இலை சேர்த்தால் கட்டுக்கடங்காத காமம் கொந்தளிக்கும்.

உப்பு,வெங்காயம்,சிறுகீரையால் செய்த உணவுகள் காமத்தை கூட்டும்.
சிறுகீரைத்தண்டு, பெருங்கீரைத்தண்டு காமத்தைக் குறைக்கும்.

பெண்களின் மாங்கல்ய தோஷத்தைப் போக்குவதற்கு சக்திவாய்ந்த பரிகாரம் மகாலட்சுமி பூஜை செயவதே!

ஒரு கோடி பெண் பிறப்புகளில் ஒரு பெண்ணுக்கு
10 வயதிலேயே மாதத்தில் 20 நாட்கள் தீட்டு வரும்.அதை சரிசெய்யும் மூலிகை 24 வருடங்களுக்கு ஒருமுறை முளைக்கும். அதுவும் கொல்லிமலைக் காடுகளில் மட்டுமே விளையும்.
கருதோஷ நிவாரண மூலிகை என்று ஒரு மூலிகை உண்டு.இந்த மூலிகை 240 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே முளைக்கும்.இதன் இலையை உற்று நோக்கினால் அதன் நடுப் பகுதியில் ஒரு குழந்தை பெண்கருப்பையில் படுத்திருப்பது போல தோற்றமளிக்கும்.
இதை ஒரு பெண் பாலில் அல்லது தேனில் கலந்து சாப்பிட்டால் அவள் மலட்டுத்தன்மை நீங்கும்.
ஆரோக்கியமான குழந்தைகள் 100 வரை பெறும் வலிமையடைவாள்.50 வருடங்களாக கருத்தரிக்காத பெண் கூட கருத்தரிக்கும் பாக்யம் பெறுவாள்.
ஆண் குழந்தை வேண்டும் என விரும்புபவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலையிலும், பெண் குழந்தை வேண்டும் என விரும்புபவர்கள் பவுர்ணமி அன்றும் இம்மூலிகையை பால்/தேனில் கலந்து உண்டு உறவு கொண்டால் போதும்.
ஆண்மை இழந்தவர்கள் மீண்டும் ஆண்மை பெறவும்,அரவாணிகள் தாங்கள் விரும்பும் வகையில் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ மாற குறிப்பிட்ட திதி,நட்சத்திரம் உள்ள நாளில் இந்த் மூலிகையை சாப்பிடவேண்டும்.


அன்பிருக்கும் இடத்தில் அனைத்தும் நிறைந்திருக்கும்

ஒரு கிராமத்தில் ஏழை குடியானவன் வீட்டு முன்பு மூன்று முதியவர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது அந்த வீட்டில் இருந்த பெண் வெளியில் வந்து “உங்களைப்பார்த்தால் பசித்திருப்பவர்களைப்போல தெரிகிறது. வீட்டுக்குள் வந்து உணவருந்துங்கள் ” என்று அழைத்தாள்.
அதற்கு அந்த பெரியவர்கள் “ வீட்டில் ஆண்கள் யாரேனும் இருக்கின்றனரா?” என்று கேட்டனர்.இல்லை என்று பதில் கூறிய பெண், “எங்கள் வீட்டு ஆண்கள் வேலை நிமித்தமாக வெளியில் சென்றிருக்கின்றனர். அவர்கள் மாலையில்தான் வருவார்கள் எனவே அதுவரை உங்களால் காத்திருக்க முடியுமா?” என்று கேட்டாள்.பரவாயில்லை நாங்கள் காத்திருக்கிறோம் என்று கூறிய மூவரும் வீட்டுத்திண்ணையிலேயே அமர்ந்திருந்தனர்.மாலையில் கணவன் வீடு திரும்பியதும் திண்ணையில் அமர்ந்திருந்தவர்களை பார்த்து நீங்கள் யாரென்று கேட்டான். அதற்கு அவர்கள், எங்களுடைய பெயர் அன்பு, வெற்றி, செல்வம் என்று கூறினர்.“எங்களில் முதலில் யாரை நீ அழைக்கப்போகிறாய் ?” என்றும் அந்த குடியானவனிடம் கேட்டனர். உடனே குடியானவன் வீட்டிற்குள் சென்று மனைவியிடம் கலந்து ஆலோசனை செய்தான்.நம்முடைய வீட்டில் செல்வத்திற்கு முதலில் விருந்து வைப்போம். செல்வம் வந்து நம் வீட்டை நிரப்பட்டும் என்று மனைவியிடம் தெரிவித்தான்.அதைக் கேட்ட மனைவி, வெற்றி மிகவும் முக்கியமானது. எனவே வெற்றியை முதலில் கூப்பிடுங்கள் என்று கூறினாள்.அவர்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்ட மகளோ, “ நீங்கள் இருவரும் அன்பை முதலில் விருந்துக்கு அழையுங்கள் ” என்றாள். மகளின் விருப்பத்திற்கு ஏற்ப குடியானவனும் அவனுடைய மனைவியும், அன்பை விருந்துக்கு அழைத்தனர். உடனே அன்பைத் தொடர்ந்து மகிழ்ச்சியுடன் வெற்றியும், செல்வமும் பின் தொடர்ந்து வந்தனர்.இதில் ஆச்சரியமடைந்த குடியானவன், “நான் அன்பை மட்டும் தானே அழைத்தேன் நீங்கள் மூவரும் வருகிறீர்களே?” என்று கேட்டான்.அதற்கு அவர்கள், “ நீங்கள் செல்வத்தையோ, வெற்றியையோ அழைத்திருந்தால் மற்ற இருவரும் வெளியில் தங்கியிருப்போம். ஆனால் நீங்கள் அன்பைத்தானே அழைத்தீர்கள். அன்பு எங்கெல்லாம் செல்கிறதோ, அங்கே வெற்றியும், செல்வமும், என்று பின் தொடரும்” என்று பதிலளித்தனர்.அன்பு நிறைந்திருக்கும் இடத்தில் அனைத்தும் நிறைந்திருக்கும்.

Wednesday, April 20, 2011

.திருமணப்பந்தலில் வாழை மரம் கட்டுவது ஏன்?

திருமணப்பந்தலில் வாழை மரம் கட்டுவது ஏன்?

திருமணப்பந்தலில் மட்டுமல்லாது சுப காரியங்கள் நடக்கும் அனைத்து இடங்களிலும் வாழைமரம் கட்டுவது ஐதீகம்.  
இது பற்றி சில சுவையான தகவல்கள் :

தம்பதியர் தியாகம்
முக்கனிகளுல் ஒன்றான வாழை எல்லா காலங்களிலும் கிடைக்கும் கனி. மற்ற இரண்டு கனிகளின் மரங்களை விட வாழை மரம் அதிக பயன்தரக்கூடியது.வாழை, தன்னை அழித்துக் கொண்டு, பிறருக்கு கனி தரும். இதுபோல், தம்பதியர் ஒருவருக்கொருவர், தங்கள் உயிரையும் கொடுக்க தயாராக இருக்க வேண்டும் என்பதன் அடையாளமாக வாழை மரம் உள்ளது. குடும்ப விருத்திக்காகவும், வாழை மரத்தை கட்டுவதுண்டு.

வாழையடி வாழை

வாழையின் இலை, காய், பூ, பட்டை, தண்டு, நார் என அனைத்தும் பயன்தரக்கூடியது. சில பகுதிகள் மருந்தாகவும் பயன்தரக்கூடியது. ஏனைய மரங்களில் இருந்து ஒரு வகையில் வாழை வித்தியாசமானது. ஒரு வாழையை நட்டால் போதும் வாழையடி வாழையாக அதன் குலம் தலைக்கும்.

பெரியோர் வாழ்த்து

மனிதன் தலைமை பெறவேண்டும், தன்னைச்சார்ந்திருப்பவர்களுக்கு பலவகைகளிலும் பயன்தரவேண்டும் என்றும் அவன் குலம் வழி வழியாக தழைக்கவும் என்பதை உணர்த்துவதற்காகத்தான் சுபகாரியப்பந்தலில் வாழை மரம் கட்டுகின்றனர். மணமக்களை ஆல் போல தழைத்து அருகு போல் வேரோட வேண்டும் என்று வாழ்த்தும் நெஞ்சத்தின் புலப்பாடகத்தான் வாழைமரம் கட்டுவதை கருத வேண்டும்.

Tuesday, April 19, 2011

உணவை சக்தியாக்கும் இலை ரகசியம்

உணவை சக்தியாக்கும் இலை ரகசியம்

நாம் உண்ணும் உணவு உடலுக்குள் செரிமானமாகி நமக்கு சக்தியை தர வேண்டும். உணவு
உண்பதே ஒரு கலை. உண்ணும் இலையைப் பொருத்து உணவின் சக்தி மாறுபடுகிறது. என்னென்ன
இலைகளில் சாப்பிடலாம்? எந்த இலைகளை தைத்து சாப்பிடலாம் என்ற விபரம் சாஸ்திர
நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. எந்த இலையில் உண்டால் என்ன கிடைக்கும் என்பது
பற்றி தெரிந்து கொள்வோம்.

வாழை இலை உணவு

வாழை இலைகளில் சாப்பிடுவது நாம் அறிந்த ஒன்று. பெரும்பாலான விருந்துகளில் வாழை
இலையில் உணவு பரிமாறப்படுகிறது. இலைகளில் வாழை இலையும் வேங்கை இலையும் சமமான
பலனை தரக்கூடியது..
வாழை இலையில் உணவு உண்பதால் அக்னி மாந்தம், வாய்வு, இளைப்பு, பித்தநோய்
போவதுடன், உடல் அழகடையும், சுகபோகம் உண்டாகும். வாழை இலையில் தொடர்ந்து உண்டு
வந்தால் தோல் மினுமினுப்பாகும். உடலுக்குக் குளிர்ச்சியையும், ஒளியையும்
கொடுக்கும். வாத பித்த கப நோய்கள் குணமாகும். உடலுக்கு வலிமையைத் தரும்.
ஆண்மையை வளர்க்கும்.. வயிறுமந்தத்தைப் போக்கும்.

பாலுள்ள வேறு மரங்களின் இலையில் உண்டு வந்தாலும் வாத, பித்த, கப நோய்கள்
நீங்கும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். தாகத்தைத் தணிக்கும்.. பக்க வாதம்
குணமாகும். உடல் நடுக்கம் காசநோய் குணமாகும்.

தையல் இலைகள்தையல் இலையை ஒரேவகையான இலையை தைத்து உருவாக்கி அதில்தான் சாப்பிடவேண்டும்.
மாவிலை, பின்னை இலை, பலாஇலை, தாமரை இலை, இலுப்பை இலை, செண்பக இலை, பாதிரிஇலை,
பலாசு இலை, சுரை இலை, கமுகமடல் ஆகிய இலைகளை உணவு உண்ணப்பயன்படுத்தலாம்..
இருப்பினும் பலா இலையில் அதிகமாக உணவு உண்பது கெடுதலையே தரும். பித்தத்தை
அதிகரிக்கும் தாமரை இலையில் உண்டால்; உடல் வெப்பம் அதிகரிக்கும். வாத நோய்
மந்தாக்கினியைத் தோற்றுவிக்கும். புரசம் இலையில் உண்பது வாத கபத்தைப் போக்கும்.
சயம், குன்ம நோயைப் போக்கும். உடலுக்கு சூட்டைத் தரும்

Saturday, April 16, 2011

வெற்றி வேண்டுமா? வன்னிமரத்தை வழிபடுங்கள்

வெற்றி வேண்டுமா? வன்னிமரத்தை வழிபடுங்கள்

வன்னிமரம் ஜெயதேவதையின் வடிவமாக போற்றப்படுகிறது. அது துர்கை கோயில் கொண்டிருக்கும் இடமாகும். மகாபாரதத்தில் பாண்டவர்கள் அஞ்ஞானவாசத்தின் போது தமது ஆயுதங்களை வெற்றி தரும் வன்னி மரப்பொந்து ஒன்றில் மறைத்து வைத்ததாக சொல்லப்படுகிறது.
உமா தேவி வன்னிமரத்தடியில் வாசம் செய்வதாகவும், தவம் இருந்ததாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.
வன்னிமரம் விநாயப்பெருமானுடைய பஞ்சபூத சொரூபத்தை உணர்த்தும் ஐந்து வகையான மரங்களில் அக்னி சொரூபம் ஆகும். பொறையாருக்கு அருகில் உள்ள சாத்தனூர், பாசிகுளம் விநாயகர் சாஸ்தாவுக்கு அக்னி சொரூபமாக வன்னிமர வடிவில் காட்சி கொடுத்ததாக ஸ்தல மகாத்மியம் கூறுகிறது.

வன்னிமர இலையை வட மொழியில் சமிபத்ரம் என்று கூறுவார்கள்.

இது விநாயகருக்கும், சனீஸ்வரனுக்கும் விருப்பத்திற்குரிய இலையாகும்.

விஜயதசமியின் போது துர்க்காதேவி மகிஷனை அழிக்க வேல் வாங்கும் நிகழ்ச்சி வன்னி மரத்தடியில் நடக்கும். வன்னி வெற்றியை தரும் மரம் என்பதால் அந்த மரம் இருந்தால் அங்கு வேல் வாங்குவது விஷேசம்.வன்னிமரம் புகழ் பெற்ற சில சிவாலயங்களில் இருக்கிறது.இந்த மரத்தை வணங்கி வழிபட்டால் பரிட்சையில், வழக்குகளில், வாழ்வில் வெற்றி மீது வெற்றிகளைக் குவிக்கும் என்பது நிச்சயம். வன்னி மரத்தை வழிபட்டு வாழ்வில் வெற்றி பெருவோமாக.

திருநீறு, திருமண் இடுவதின் தத்துவம்

திருநீறு, திருமண் இடுவதின் தத்துவம்

வெறும் நெற்றி பாழ் என்பது முன்னோர் சொல். இந்து சமயத்தில் சைவ நெறியை பின்பற்றுபவர்கள் திருநீறும், வைணவத்தை பின்பற்றுபவர்கள் திருமண்ணால் நாமமும் இட்டுக்கொள்வது மரபு. இதன் தத்துவத்தை தெரிந்து கொள்வோம்.

திருநீறு

"மந்திரமாவது நீறு; வானவர் மேலது நீறு" என்று திருஞானசம்பந்தர் பாட்டு பாடி கூன் பாண்டியனின் சூலை நோயை துரத்தினார் .

வாதவூர் புராணம் ப்ரமோத்த காண்டம் திருநீற்றின் பெருமையை மிக பிரமாதமாய் கூறுகிறது!

விறகுக்கட்டையை நெருப்பு சாம்பலாக்குகிறது. அது போல ஞானம் என்னும் நெருப்பு, எல்லாக் கர்மாக்களையும், எரித்து விடும். என்று கீதையில் கண்ணன் கூறியிருக்கிறார். நாம் நெற்றியில் பூசும் விபூதி ஞானத்தின் அடையாளம் என்பது சமய நூல்களில் சொல்லப்பட்டுள்ளன.

திருமண்

நெற்றியில் திருமண் இடுவதற்கு நாமம் போடுவது என்று பெயர். திருமண் என்னும் திருநாமம் நாராயணனின் பாதங்களை குறிக்கும். நாராயணன் ஒருவனே பரமபுருஷன். ஜீவன்கள் அனைத்தும் அவனது தேவிமார்கள் என்பது ஸ்ரீ வைஷ்ணவத்தின் ஆதார கருத்து.

ஸ்ரீ சுர்ணம் என்ற திருமண் மகாலக்ஷ்மியை குறிக்கிறது. இந்த மண் தெய்வீகமான இடங்களிலேயே கிடைக்கும். துணியை வெளுப்பது உவர் மண். மனதை வெளுப்பது திருமண்.

இந்த மண்ணை பகவானின் பாதமாக மட்டுமல்ல வாழ்க்கையின் முடிவு. உலகத்தின் முடிவு என்றோ ஒரு நாள் மண்ணாகி போகும் என்பதை தானும் உணர்ந்து எல்லோருக்கும் உணர்த்துவது தான் திருநாமத்தின் ரகசிய தத்துவம்.

திருநீறு, திருமண் இடுவதின் தத்துவம் சனிக்கிழமை, ஏப்ரல் 16, 2011, 10:00[IST] Save This Page A A A Free Newsletter Sign up வெறும் நெற்றி பாழ் என்பது முன்னோர் சொல். இந்து சமயத்தில் சைவ நெறியை பின்பற்றுபவர்கள் திருநீறும், வைணவத்தை பின்பற்றுபவர்கள் திருமண்ணால் நாமமும் இட்டுக்கொள்வது மரபு. இதன் தத்துவத்தை தெரிந்து கொள்வோம். திருநீறு "மந்திரமாவது நீறு; வானவர் மேலது நீறு" என்று திருஞானசம்பந்தர் பாட்டு பாடி கூன் பாண்டியனின் சூலை நோயை துரத்தினார் . வாதவூர் புராணம் ப்ரமோத்த காண்டம் திருநீற்றின் பெருமையை மிக பிரமாதமாய் கூறுகிறது! விறகுக்கட்டையை நெருப்பு சாம்பலாக்குகிறது. அது போல ஞானம் என்னும் நெருப்பு, எல்லாக் கர்மாக்களையும், எரித்து விடும். என்று கீதையில் கண்ணன் கூறியிருக்கிறார். நாம் நெற்றியில் பூசும் விபூதி ஞானத்தின் அடையாளம் என்பது சமய நூல்களில் சொல்லப்பட்டுள்ளன. திருமண் நெற்றியில் திருமண் இடுவதற்கு நாமம் போடுவது என்று பெயர். திருமண் என்னும் திருநாமம் நாராயணனின் பாதங்களை குறிக்கும். நாராயணன் ஒருவனே பரமபுருஷன். ஜீவன்கள் அனைத்தும் அவனது தேவிமார்கள் என்பது ஸ்ரீ வைஷ்ணவத்தின் ஆதார கருத்து. ஸ்ரீ சுர்ணம் என்ற திருமண் மகாலக்ஷ்மியை குறிக்கிறது. இந்த மண் தெய்வீகமான இடங்களிலேயே கிடைக்கும். துணியை வெளுப்பது உவர் மண். மனதை வெளுப்பது திருமண். இந்த மண்ணை பகவானின் பாதமாக மட்டுமல்ல வாழ்க்கையின் முடிவு. உலகத்தின் முடிவு என்றோ ஒரு நாள் மண்ணாகி போகும் என்பதை தானும் உணர்ந்து எல்லோருக்கும் உணர்த்துவது தான் திருநாமத்தின் ரகசிய தத்துவம்.

திருநீறு, திருமண் இடுவதின் தத்துவம்

வெறும் நெற்றி பாழ் என்பது முன்னோர் சொல். இந்து சமயத்தில் சைவ நெறியை பின்பற்றுபவர்கள் திருநீறும், வைணவத்தை பின்பற்றுபவர்கள் திருமண்ணால் நாமமும் இட்டுக்கொள்வது மரபு. இதன் தத்துவத்தை தெரிந்து கொள்வோம்.

திருநீறு

"மந்திரமாவது நீறு; வானவர் மேலது நீறு" என்று திருஞானசம்பந்தர் பாட்டு பாடி கூன் பாண்டியனின் சூலை நோயை துரத்தினார் .

வாதவூர் புராணம் ப்ரமோத்த காண்டம் திருநீற்றின் பெருமையை மிக பிரமாதமாய் கூறுகிறது!

விறகுக்கட்டையை நெருப்பு சாம்பலாக்குகிறது. அது போல ஞானம் என்னும் நெருப்பு, எல்லாக் கர்மாக்களையும், எரித்து விடும். என்று கீதையில் கண்ணன் கூறியிருக்கிறார். நாம் நெற்றியில் பூசும் விபூதி ஞானத்தின் அடையாளம் என்பது சமய நூல்களில் சொல்லப்பட்டுள்ளன.

திருமண்

நெற்றியில் திருமண் இடுவதற்கு நாமம் போடுவது என்று பெயர். திருமண் என்னும் திருநாமம் நாராயணனின் பாதங்களை குறிக்கும். நாராயணன் ஒருவனே பரமபுருஷன். ஜீவன்கள் அனைத்தும் அவனது தேவிமார்கள் என்பது ஸ்ரீ வைஷ்ணவத்தின் ஆதார கருத்து.

ஸ்ரீ சுர்ணம் என்ற திருமண் மகாலக்ஷ்மியை குறிக்கிறது. இந்த மண் தெய்வீகமான இடங்களிலேயே கிடைக்கும். துணியை வெளுப்பது உவர் மண். மனதை வெளுப்பது திருமண்.

இந்த மண்ணை பகவானின் பாதமாக மட்டுமல்ல வாழ்க்கையின் முடிவு. உலகத்தின் முடிவு என்றோ ஒரு நாள் மண்ணாகி போகும் என்பதை தானும் உணர்ந்து எல்லோருக்கும் உணர்த்துவது தான் திருநாமத்தின் ரகசிய தத்துவம்.

Friday, April 15, 2011

பைரவர் உருவான புராணக்கதை

பைரவர் உருவான புராணக்கதை

அந்தகாசுரன் என்னும் சிவபக்தன் நீண்ட வலிய தவம் புரிந்து,சிவபெருமானிடம் வரம் பெற்றான்.அந்த வரத்தின் சக்தியால் மும்மூர்த்திகளையும்,மற்ற தேவர்களையும் துன்புறுத்தினான்.அவர்களை சேலை அணிந்து,கையில் வளையிட்டு,கண்ணில் மைதீட்டி,பெண் வேடத்தில் தனக்கு சாமரம் வீசி பணிபுரியச்செய்து,இழிவு படுத்தினான்.அந்தகாசுரன் இருள் என்னும் சக்தியைப் பெற்றதால்,பிரபஞ்சம் முழுவதும் இருளைக்கொண்டு ஆட்சி நடத்தினான்.
இவர்கள் அனைவரும் அந்தகாசுரனிடம் போரிட்டுத் தோற்றனர்.பின்னர்,முழு முதற்கடவுளான சிவபெருமானைத் தஞ்சமடைந்து முறையிட்டனர்.
தாருகாபுரத்தை எரித்த காலாக்னி ,சாந்தமாகி சிவபெருமானின் நெஞ்சில் ஓர் பகுதியாக இருந்தது.தேவர்களின் துயர் துடைக்க சிவபெருமான் அந்த அக்னிக்குஞ்சுக்கு ஆணையிட்டார்.அதில் விஸ்வரூபம் எடுத்து வந்தவர்தான் ஸ்ரீபைரவர்.
அதுவும் எப்படி விஸ்வரூபம் எடுத்தார் எனில்,எட்டு திக்குகளிலும் அந்தகாசுரனால் உருவாகிய இருளை நீக்கிட எட்டு பைரவர்களை சக்தியுடன் புறப்பட உத்தரவிட்டார்.

அதன்படி,

1)அசிதாங்க பைரவர் + பிராம்மி

2)ருரு பைரவர் + மகேஸ்வரி

3)உன்மத்த பைரவர் + வாராஹி

4)குரோதன பைரவர் +வைஷ்ணவி

5)சண்டபைரவர் + கவுமாரி

6)கபால பைரவர் + இந்திராணி

7)பீஷண பைரவர் + சாமுண்டி

8)சம்ஹார பைரவர் + சண்டிகா
ஆகியோர் தம்பதி சகிதமாக புறப்பட்டு,அந்தகாசூரனை அழித்து உலகிற்கு ஒளியைக் கொடுத்தனர்.இதனால்,தேவர்கள் மகிழ்ச்சியடைந்து அனைவரும் தத்தம் ஆயுதங்களை பைரவருக்குக் கொடுத்தனர்.
ஆகமங்கள்,சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள அஷ்ட பைரவர் விளக்கங்களை கூர்ந்து நோக்கினால் மேலே கூறப்பட்டவை,தெள்ளத்தெளிவாக விளங்கும்.
அஷ்ட பைரவர்களும் அறுபத்தி நான்கு காலங்களில்,அறுபத்தி நான்கு தோற்றங்கள் கொண்ட பைரவராகக் காட்சி தருகிறார்கள்.

எப்போதெல்லாம் ஜபிக்கக் கூடாது?

எப்போதெல்லாம் ஜபிக்கக் கூடாது?

பேருந்து,ரயில்,விமானப்பயணத்தின் போதும்,சைக்கிள்,மோட்டார் சைக்கிள் வாகனப்பயணத்தின்போதும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கக் கூடாது.
தெருவில் நடந்துசெல்லும்போதும்,சாலையில் நடந்து செல்லும்போதும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கக் கூடாது.அப்படி மீறி ஜபித்தால்,தடுமாறி கீழே விழுந்துவிடுவோம்.ஒருவேளை,வீம்புக்கென்று தொடர்ந்து தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவந்தால்,சில நாட்கள் கடந்தபின்னர்,விபத்தில் சிக்கும் வாய்ப்புகள் அதிகம்.
பிரசவ மருத்துவமனை,பிணவறை,மற்ற எந்த மருத்துவமனையிலும்,சுத்தமில்லாத எந்த இடத்திலும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கக் கூடாது.
வீட்டில் யாராவது அசைவம் சாப்பிட்டுவிட்டால்,அவர்கள் தூங்கும் அறையில் ஓம்சிவசிவஓம் ஜபிக்கக் கூடாது.

குடும்பத்தோடு அசைவம் சாப்பிட்டுவிட்டால்,அன்றுமுதல் மூன்று நாட்களுக்கு அந்த வீட்டில் ஓம்சிவசிவஓம் ஜபிக்கக் கூடாது.

குடும்பத்தில் வயதானவர்கள் யாராவது இறந்துவிட்டால்,அந்த வீட்டில் குறைந்தது ஒரு மாதம் வரை ஓம்சிவசிவஓம் ஜபிக்கக் கூடாது.
துக்க வீடுகளுக்குச் சென்றால்,குறைந்தது ஐந்துநாட்கள் வரையிலும்,பிரசவம் ஆனவீடுகளுக்கு குழந்தை பிறந்த பத்துநாட்களுக்குள் சென்றால் ஐந்து நாட்கள் வரையிலும் சென்றவர் ஓம்சிவசிவஓம் ஜபிக்கக் கூடாது.
வீட்டில்,வீடு போன்ற அமைப்பில்,எதாவது ஒரு சுத்தமான விரிப்பில் அமர்ந்து மன அமைதியோடு ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.இந்த ஓம்சிவசிவஓம் ஜபித்து முடியும் வரையிலும் யாரிடமும் பேசாமலிருப்பது அவசியம்.

கல்வியில் நல்ல முன்னேற்றம் தரும் ஹயக்ரீவர் ஸ்தோத்திரம்

கல்வியில் நல்ல முன்னேற்றம் தரும் ஹயக்ரீவர் ஸ்தோத்திரம்

ஓம்கார உத்கீத ரூபாய ருக்யஜீ ஸாம மூர்த்தயே

நம: அஸ்து தேவதேவாய வாஞ்சிதார்த்த ப்ரதாயினே:

வேத வேதாந்த வேத்யாய வேதாஹரணே கர்மணே

ஸர்வாஸ்த்வ மஹாமோஹ பேதினே ப்ரஸ்மணே நம:

தினமும் 30 நிமிடம் வீதம் முழு ஆண்டு முடியும் வரையிலும் அல்லது 90 நாட்களுக்கு வீட்டுப்பூஜையறையில் இதை ஜபித்து வர வேண்டும்.கல்வியில் பின் தங்கியுள்ள மாணவ மாணவியர் இதை ஜபிக்க கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்