Wednesday, September 26, 2012

தமிழ் வருடங்களின் கச்சிதமும் துல்லியமும்

தற்போது தமிழ் ஆண்டுகள் என வழங்கப்படும் கால அட்டவணை முறை அறுபதாண்டு வட்டம் ஒன்றைக் கொண்டுள்ளது. இது பிரபவ ஆண்டில் தொடங்கி அட்சய ஆண்டில் நிறைவுபெற மீண்டும் அடுத்த பிரபவ ஆண்டு சுழற்சியாகத் தொடங்குகிறது. சிலர் இவ்வாறு ஒரே வருடத்தின் பெயர்கள் திரும்பத் திரும்ப வருவதால் பிற்காலத்தில் பழைய நிகழ்வுகளைச் சரியாக நிர்ணயிப்பதில் குழப்பம் ஏற்படுகிறது என்று குழம்புகிறார்கள். ஆனால் இந்த ஆண்டுகளின் கால அளவைகள் எந்தவித குழப்பமும் இல்லாமல் வானியல் விஞ்ஞானத்தை ஆதாரமாகக் கொண்டு மிகவும் கச்சிதமாகக் கணித்து வரையறுக்கப்பட்டவை. இவற்றை கச்சிதமாக எடுத்துக்காட்ட கற்பம், மன்வந்தரம், யுகம் போன்ற மேலதிக விபரங்களும் கையாளப்படுகின்றன. தற்போது நடப்பது சுவேத வராக கற்பம் வைவஸ்வத மன்வந்தரத்தில் 28வது சதுர் யுகம். இந்த சதுர் யுகத்தில் கிருத யுக வருடங்கள் 17, 28, 000, திரேதா யுக வருடங்கள் 12, 96, 000, துவாபர யுக வருடங்கள் 8, 64, 000 கழிந்து 4, 32, 000 வருடங்களைக்கொண்ட கலியுகம் ஆரம்பமாகி 5019 ஆண்டுகளே கழிந்துள்ளன. இப்போது நடக்கும் கலி யுகம் கி.மு. 3102ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17ம் திகதி இரவு ஆரம்பமாகியது. இந்தக் கால அளவை "சுவேத வராஹ கல்பே- வைவஸ்வத மன்வந்தரே - கலியுகே" என்று சைவ சமயக்கிரியைகளிலும் பூசைகளிலும் சங்கல்பம் செய்யும்போது கூறும் மந்திரத்தில் வரும். சங்கல்பம் என்பது இன்ன காலத்தில், இன்ன இடத்தில், இன்னாராகிய யான், இன்ன காரியத்தைச் செய்ய நிச்சயிக்கிறேன் என்று கூறி நிச்சயிப்பதாகும். ஒவ்வொரு தமிழ் வருடமும் எமது பார்வையில் சூரியன் பன்னிரு ராசிகளில் சஞ்சரிக்கும் கால அளவாகும். சூரியன் முதலாவது இராசியான மேட இராசியில் பிரவேசிப்பது புது வருடப்பிறப்பாகும். இவ்வாறு ஒவ்வொரு பன்னிரு இராசிகளிலும் ஒன்றன் பின் ஒன்றாக சூரியன் பிரவேசிக்கும் காலமே பன்னிரு தமிழ் மாதப்பிறப்பு அல்லது மாத முதல் நாட்களாகும். இவ்வாறு சூரியன் மேடம் முதல் மீனம் ஈறாக உள்ள பன்னிரு இராசிகளில் சஞ்சரிக்கும் காலம் ஒரு தமிழ் வருடமாகும். இது வானியல் விஞ்ஞான ரீதியாக 365 நாள் 6 மணித்தியாலம் 11 நிமிடம் 48 விநாடி என்று கச்சிதமாகக் கணிக்கப்பட்ட ஒன்று. இதை வானியல் விஞ்ஞானத்தில் வானியல் வருடம் ( Astronomical Year) என்று சொல்லுவார்கள். நாம் இதையே அழகாக தமிழ் வருடம் என்று சொல்லி அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பெயர்களும் வைத்துள்ளோம். இது முயல், வேதாளம், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, சேவல், நாய், பன்றி, எலி, காளை, புலி என்ற பன்னிரண்டு வருடங்களைக் கொண்ட சீனர்களின் கால வட்டத்தைப் போன்றது. ஆனால் அதைவிட ஆழமான வானியல் விஞ்ஞான கணிப்பீடுகளை ஆதாரமாகவும், அடிப்படையாகவும் கொண்டது. இந்த அறுபது வருடங்களைக்கொண்ட காலவட்டத்தின் வருடங்கள் தமிழ் வருடங்கள் என்றும் இந்த வருடங்களின் தொடக்கம் தமிழ் வருடப்பிறப்பு என்றும் வழங்கும் வழமையே எமது வழமை. இது திராவிடர்களிடையே உள்ள வழமையே அன்றி வட இந்தியாவில் இந்த வழமையைப் பார்க்கமுடியாது. பின்னர் இதைப்போய் ஆரியர்களின் கால அளவை என்று சொல்வது எப்படிப் பொருந்தும்? இது யாருடைய கால அளவையாக இருந்தாலும் வானியல் விஞ்ஞான ரீதியாக அச்சொட்டாக இருக்கின்றது. நீங்கள் வேண்டாமென்றால் என்ன செய்வது?

காலக்கணிப்பின் அடிப்படை

காலக்கணிப்பின் அடிப்படை அறுபது நொடி கொண்டது ஒரு விநாடி அறுபது விநாடி கொண்டது ஒரு நாழிகை அறுபது நாழிகை கொண்டது ஒரு நாள் முன்னூற்று அறுபது நாள் கொண்டது ஒரு (சாந்திர) வருடம் (Lunar Year) ஆகவே ஒரு வருடத்தில் 21, 600 நாழிகைகள் உண்டாம். எமக்கு ஒரு நாளில் நடக்கும் சுவாசமும் 21, 600. இது சிதம்பர இரகசியத்தின் ஒரு பகுதி. சிதம்பரத்திலுள்ள பொன்னம்பலத்தில் உள்ள பொன் ஓடுகளின் எண்ணிக்கை 21, 600. இந்த பொன் ஓடுகளைத் தைத்துப் பொருத்தியுள்ள ஆணிகளின் எண்ணிக்கை 72, 000. இது எமது உடலில் உள்ள 72, 000 நாடிகளைக் குறிக்கின்றது. சிதம்பரத்தில் இருந்து தீக்ஷிதர்களை விரட்டியடிப்பதில் முனைப்பாக இருக்கும் சைவர்களாகிய நமக்கு அங்கிருக்கும் ஓடுகளையும் ஆணிகளையும் கவனிக்க எங்கே நேரமும், அக்கறையும் இருக்கப்போகின்றது? 360 மானுட வருடங்கள் = ஒரு தேவ வருடம். இவ்வாறு 4000 தேவ வருடங்கள் கிருத யுகம்; இதனோடு 400 தேவ வருடங்கள் இதன் தொடக்கம்; நானூறு தேவ வருடங்கள் இதன் அந்தம்; ஆக மொத்தம் 4800 தேவ வருடங்கள் கொண்டது கிருத யுகம். 3000 தேவ வருடங்கள் திரேதா யுகம்; இதனோடு 300 தேவ வருடங்கள் இதன் தொடக்கம்; முன்னூறு தேவ வருடங்கள் இதன் அந்தம்; ஆக மொத்தம் 3600 தேவ வருடங்கள் கொண்டது திரேதா யுகம். . 2000 தேவ வருடங்கள் துவாபர யுகம்; இதனோடு 200 தேவ வருடங்கள் இதன் தொடக்கம்; 200 தேவ வருடங்கள் இதன் அந்தம்; ஆக மொத்தம் 2400 தேவ வருடங்கள் கொண்டது துவாபர யுகம். 1000 தேவ வருடங்கள் கலி யுகம்; இதனோடு 100 தேவ வருடங்கள் இதன் தொடக்கம்; 100 தேவ வருடங்கள் இதன் அந்தம்; ஆக மொத்தம் 1200 தேவ வருடங்கள் கொண்டது கலி யுகம். முன் சொன்ன சிதம்பர் இரகசிய இலக்கமான 21, 600 ஐ 80 ஆல் பெருக்க வருவது கிருத யுக வருடங்கள். இது பதினேழு இலட்சத்து இருபத்தெண்ணாயிரம் (17, 28, 000) மானுட வருடங்கள். இந்த 21, 600 ஐ 60 ஆல் பெருக்க வருவது திரேதா யுக வருடங்கள். இது பன்னிரண்டு இலட்சத்து தொண்ணூற்று ஆறாயிரம் (12, 96, 000) மானுட வருடங்கள். இந்த 21, 600 ஐ 40 ஆல் பெருக்க வருவது துவாபர யுக வருடங்கள். இது எட்டு இலட்சத்து அறுபத்து நாலாயிரம் (8, 64, 000) மானுட வருடங்கள். இந்த 21, 600 ஐ 20 ஆல் பெருக்க வருவது கலி யுக வருடங்கள். இது நான்கு இலட்சத்து முப்பது இரண்டாயிரம் (4, 32, 000) மானுட வருடங்கள். அடுத்தடுத்து வரும் இந்த நான்கு யுகங்களையும் சேர்த்து ஒரு சதுர் யுகம் என்பர். பன்னீராயிரம் 12,000 தேவ வருடம் = நாற்பத்து மூன்று இலட்சத்து இருபதாயிரம் 43,20, 000 மானுட வருடங்கள் = ஒரு சதுர் யுகம். சிதம்பர இரகசியத்தின் ஒரு பகுதிதான். எல்லாவற்றினது கணக்கும்; எமது சுவாசத்தில் இருந்து அண்ட சராசரங்களின் கால எல்லை வரை, சிதம்பர இரகசியத்தில் அடங்கும். எட்டல்: 60 நொடி அல்லது தற்பரை = 1 விநாடி 60 விநாடி = 1 நாழிகை (= 24 நிமிடம்) (2-1/2 நாழிகை = 1 மணித்தியாலம்) 60 நாழிகை = 1 நாள் 360 நாள் = 1 சாந்திர வருடம் 365நாள் 15 நாழிகை 31 விநாடி 15 நொடி = 1 சௌர வருடம் 360 சௌர வருடம் = 1 தேவ வருடம் சதுர் யுகங்கள் 4800 தேவ வருடங்களைக்கொண்டது கிருத யுகம். 3600 தேவ வருடங்களைக் கொண்டது திரேதா யுகம். 2400 தேவ வருடங்களைக் கொண்டது துவாபர யுகம். 1200 தேவ வருடங்களைக் கொண்டது ஒரு கலி யுகம். அடுத்தடுத்து வரும் இந்த் நான்கு யுகங்கள் கொண்டது ஒரு சதுர் யுகம். 1. கிருத யுகம்; 4800 தேவ வருடங்கள் = பதினேழு இலட்சத்து இருபத்தெண்ணாயிரம் வருடங்கள் (17, 28, 000 = 1.728 million years). 2. திரேதா யுகம்; 3600 தேவ வருடங்கள் = பன்னிரண்டு இலட்சத்து தொண்ணூற்று ஆறாயிரம் வருடங்கள் (12, 96, 000 = 1.296 million years). 3. துவாபர யுகம்; 2400 தேவ வருடங்கள் = எட்டு இலட்சத்து அறுபத்து நாலாயிரம் வருடங்கள்(8, 64, 000 = 0. 864 million years). 4. கலி யுகம்; 1200 தேவ வருடங்கள் = நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம் வருடங்கள் (4, 32, 000 = 0. 432 million years). சதுர் யுகம்- 4800 + 3600 + 2400 + 1200 = 12, 000 தேவ வருடங்கள் = நாற்பத்து மூன்று லட்சத்து இருபதாயிரம் மானுட வருடங்கள் (43, 20, 000 வருடங்கள் = 4. 32 million years). பிரம்மாவின் நாள் இவ்வாறு ஆயிரம் சதுர் யுகங்கள் கொண்டது உலகைப் படைக்கும் பிரம்ம தேவனின் ஒரு பகற் பொழுதாகும். அதுபோல ஆயிரம் சதுர் யுகங்கள் கொண்டது பிரம்மதேவனுக்கு ஒரு இராக்காலமாகும். ஆக மொத்தம் இரண்டாயிரம் சதுர் யுகங்கள் பிரம்மாவுக்கு ஒரு நாள்.-பகவத் கீதை 8.17- இந்திரனின் காலம் இவ்வாறு பிரம்மாவின் ஒரு நாளில் சுவர்க்க லோகத்துக்கு 14 இந்திரர்கள் வந்து இருந்து ஆண்டு மாளுவர். ஒரு பகலிலே 420 இந்திரர்கள் மாளுவர். ஒரு வருடத்திலே 5040 இந்திரர்கள் மாளுவர். இவ்வாறு ஒரு பிரம்மாவின் ஆயுட்காலத்தில் 540,000 இந்திரர்கள் வந்து போவர். ஆறுமுக நாவலரின் நான்காம் பாலபாடம். இது விஷ்ணுவின் ஒரு நாளாகும். இவ்வாறு விஷ்ணுவின் ஒரு ஆயுட்காலம் உருத்திரனின் ஒரு நாளாகும். -சிவ மகா புராணம் - கற்ப காலம் பிரமதேவனின் பகற்காலத்தில் படைப்பும், இராக்காலத்தில் பிரளயமும் உண்டாகின்றன. அந்தப்பிரளய காலத்தில் பூலோகம், புவர லோகம், சுவர்க்க லோகம் ஆகிய மூன்று உலகங்களும் அழிந்து விடுகின்றன. பலர் பூலோகம் என்பது எமது பூமியைக் குறிக்கின்றது என்று தவறாக எண்ணுகிறார்கள். பூலோகம் என்பது நாம் வாழும் பூமி உள்ளடங்கிய புவனத்தொகுதி (Galaxy)முழுமையையும் குறிக்கும். எமது பூமி உட்பட்ட கிரகங்கள் சூரியனைச்சுற்றி வருவது நாம் அறிந்ததே. இந்த சூரியன் உண்மையில் ஒரு நட்சத்திரம். இந்த சூரியனாவது ஒரு இடத்தில் நிலையாக நிற்கின்றானா என்றால் இல்லை. சூரியனும் அதன் கிரகங்களுடன் சேர்ந்து தொடர்ந்து சுற்றிக்கொண்டே இருக்கின்றது. இவ்வாறு எமது சூரியக் குடும்பம் உள்ள ஆகாய கங்கை எனப்படும் பால்வீதியில் சூரியனைப்போல 2000 பில்லியன் நட்சத்திரங்களுக்கு மேல் உள்ளன. இவையெல்லாம் சுழற்சியாகச் சுற்றிக்கொண்டுதான் இருக்கின்றன என்றும் இன்றைய அண்டவியல் விஞ்ஞானம் கூறுகின்றது. இவை இவ்வாறு எதைச் சுற்றும் அச்சு என்பது இன்றைய விஞ்ஞானத்துக்கு அப்பாற்பட்டது. ஆனால் எமது சைவ நூல்கள் இவ்வாறு சூரியன் உள்ளிட்ட நடசத்திரங்களும், கிரகங்களும் சந்திரர்களும் சுற்றி வரும் அச்சை மகாமேரு என்று கூறுகின்றன. இந்த அச்சை சுழற்சியின் (Spiral) மையமாக உள்ள மலை என்று வர்ணிக்கின்றன. 'உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு' என்று 11ம் திருமுறையான திருமுருகாற்றுப்படை சூரியன் மேருவை வலம் வருவதாகக் கூறுகின்றது. 'ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு மேரு வலம் திரிதலான்' என்று ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் சூரியன் மேருவை வலம் வருவதாகக் கூறுகின்றது. இவற்றில் இருந்து எமது பூலோகம் முழுவதுக்குமான சுழற்சிக்குரிய அச்சே மேரு என்று தெரிகின்றது. இதேபோல புவர் லோகம், சுவர்க்க லோகம் என்பவை வேற்று புவனங்களாம் (parallel galaxies). காயத்திரி மந்திரமும் 'ஓம் பூர் புவ வ்வ' என்றே தொடங்குகின்றது. இவற்றுள் புவர் லோகம் இன்றைய விஞ்ஞானம் கூறும் எமது புவனத்தொகுதிக்கு அடுத்துள்ள அன்ட்றோமீடா புவனத்தொகுதியாக (Andromeda Galaxy) இருக்கலாம். பிரமனின் இரவுக்காலத்தில் நிகழும் இந்த மூன்று புவனங்களினதும் பிரளயத்தை நைமித்திகப் பிரளயம் என்பார்கள். பின்னர் பிரமதேவனின் பகற்காலத்தில் பூலோகம், புவர் லோகம், சுவர்க்க லோகம் ஆகிய உலகங்களின் படைப்பு மீண்டும் தொடங்குகின்றது. மற்றெல்லா உலகங்களும், அண்டங்களும் முன்போலவே இருக்கின்றன. இவ்வாறாக பிரமதேவனின் ஒரு பகற்காலத்தை ஒரு கற்ப காலம் என்பர். “பசும்பொன் உலகமும் மண்ணும் பாழ்பட விசும்பில் ஊழி ஊழூழ் செல்ல” –பரிபாடல்- இவ்வாறு ஆயிரம் சதுர் யுகங்கள் கொண்ட ஒரு கல்ப காலம் பிரம்மாவுக்கு ஒரு பகல். இது இரண்டாயிரம் சதுர் யுகங்கள் பிரம்மாவுக்கு பகலும் இரவும் கொண்ட ஒரு முழு நாள். ஒரு கற்ப காலம் = ஆயிரம் சதுர்யுகம் = 432 கோடி வருடங்கள (432 Million years). இவ்வாறு அநேக கற்பங்கள் உள்ளன. அவைகளுக்குப் பெயர்களும் உள்ளன. பினவருவன அவற்றுள் சிலவாகும். 1. பார்த்திவ கல்பம் 2. கூர்ம கல்பம் 3. பிரளய கல்பம் 4. அனந்த கல்பம் 5. சுவேதவராஹ கல்பம் 6. பிராஹ்ம கல்பம் 7.. சாவித்ர கல்பம் இப்போது நடப்பது சுவேதவராஹ கல்பம். விஷ்ணு வெள்ளைப் பன்றியாக வராக அவதாரமெடுத்து வெள்ளத்துள் மூழ்கிக்கிடந்த பூவுலகை மேலெடுத்ததால் இது இப்பெயர் பெற்றது. சுவேத என்றால் வெண்மை என்று பொருள்; வராகம் என்றால் பன்றி. சைவக் கிரியைகளின் தொடக்கத்தில் சங்கல்பம் என்று ஒன்று வரும். இன்ன காலத்தில், இன்ன இடத்தில், இன்னாராகிய யான், இன்ன கருமத்தைச் செய்யச் சங்கல்பிக்கிறேன் என்பதுதான் இது. இதிலே "சுவேதவராஹ கல்பே" என்று வரும். அடுத்த முறை கிரியைகள் செய்யப்படும்போது அவதானியுங்கள். இப்படி எண்ணற்ற கற்பங்கள் வந்து போயுள்ளனவாம். “கற்பமும் ஈறும் கண்டோன் காண்க...” – திருவாசகம்- “ஏதிலாக் கற்பம் எண்ணில சென்றன ” - கந்த புராணம் காசியப முனிவர் உபதேசம் 20ம் பாடல்-. “கற்பங்கள் தொறுர நடஞ்செய் கழலடைந்தோர் கணிப்பிலர் தஞ் சிற்பங்கள் தரும்புகழுஞ் சென்றன” -உமாபதி சிவாச்சாரியார்- பான்மைதருங் கற்பமிது பாத்ம்மெனும் பரிசுணர்ந்து -என்று இரணிய வர்மன் தில்லைக்கு வந்த காலத்தை பாத்ம கற்பம் என்று உமாபதி சிவாச்சாரியார் கோயிற்புராணத்தில் கூறுகின்றார். இவைகளையெல்லாம் நாம் இப்போதுள்ள சரித்திராசியர்களுடைய கிறிஸ்துவுக்கு முன் கிறிஸ்துவுக்கு பின் என்ற கால அளவுகளுக்குள் அடக்கி ஆராய முடியுமா? மன்வந்தரம் ஆயிரம் சதுர் யுகங்கள் கொண்ட கற்ப காலத்தில் 14 மனுக்கள் அதிகாரம் பண்ணுவார்கள். ஒவ்வொருவருடைய காலமும் 71 சதுர் யுகங்களாகும். இந்த 71 சதுர் யுகங்களின் சுற்றை மன் வந்தரம் என்பார்கள். ஒவ்வொரு மன்வந்தர முடிவிலும் ஒரு பிரளயம் பூலோகத்துக்கு மட்டும் நடைபெறும். இதில் பூலோகம் மட்டும் நீரில் அமிழும். தற்போது உலகம் பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தினால் வெப்பமாகின்றது என்று அலறும் சூழல் பாதுகாப்பாளர்களும் சூழலியல் விஞ்ஞானிகளும் இதைத்தான் சொல்லுகிறார்கள். பிரம்ம தேவனின் ஒரு பகற்காலத்திற்குள்ளேயே பதினான்கு தடவைகளுக்கு வந்து போகும் இந்த மன்வந்தர பிரளயத்தையே நைமித்தியப் பிரளயம் என்பர். இது ஒரு கிருத யுக காலத்துக்கு நீடிக்கும். அதாவது 4800 தேவ வருடங்கள் அல்லது எமது கணக்குப்படி பதினேழு இலட்சத்து இருபத்தெட்டாயிரம் (17, 28, 000) வருடங்கள். ஒரு மன்வந்தரம்= 71 சதுர் யுகம் = முப்பது கோடியே அறுபத்து ஏழு இலட்சத்து இருபதாயிரம் வருடங்கள் = 306.72 million years. ஒவ்வொரு மன்வந்தரத்துக்கும் ஒவ்வொரு மனு தொடக்கமாக வருவார். அந்தந்த மன்வந்தர காலங்களில் தொடக்க புருஷர்களாயுள்ள அவர்களின் பெயரால் அந்த மன்வந்தர காலம் விளங்கும். இவ்வாறு ஒரு கற்ப காலத்துக்கு பதினான்கு மனுக்கள் உள்ளார்கள். அவர்களின் பெயர்கள் வருமாறு; 1. சுவயாம்புவ மனு 2. சுவாரோசிஷ மனு 3. உத்தம மனு 4. தாமஸ மனு 5. ரைவத மனு 6. சாட்சூஷ மனு 7. வைவஸ்வத மனு 8. பௌஷ்ய மனு 9. அக்னி ஸாவர்ணி ஞ்னு 10. சூர்ய ஸாவர்ணி மனு 11. இந்திர ஸாவர்ணி மனு 12. பிரம்ம ஸாவர்ணி மனு 13. ருத்ர ஸாவர்ணி மனு 14. ரௌச்ய மனு இவர்களில் முதல் ஆறு மனுக்களும் இறந்து போனார்கள். தற்போதுள்ள காலத்தின் மனு வைவவ்வத மனு. இவரின் பெயரால் இப்போதுள்ள மன்வந்தரம் வைவவ்வத மன்வந்தரம் எனப்படுகின்றது. சைவக்கிரியைகளில் சங்கல்பம் செய்யும்போது 'வைவவ்வத மன்வந்தரே' என்று வரும்; கவனியுங்கள். பிரம்மாவின் ஆயுள் இப்போது இருக்கும் பிரம்மாவுக்கு 50 வயது முடிந்து, ஐம்பத்தோராவது வயதில் முதலாவது மாதத்தில் முதலாவது நாள் நடக்கின்றது. இவ்விதமாக ஒவ்வொரு பிரம்மாவுக்கும் நூறு ஆண்டு கால ஆயுள் உண்டு. இது நமது கணக்குப்படி மூன்று இலட்சத்துப் பதினோராயிரத்து நாற்பது கோடி வருடங்கள் (31.104 billion years). இதை பரம் என்று கூறுவர். இதிற் பாதி பரார்த்தம். அர்த்தம் என்றால் பாதி. பரத்தில் பாதி பரார்த்தம். பாதி பெண்ணுருவாகக்கொண்ட இறை வடிவு அர்த்த நாரீசுவரர். நாரீ என்றால் பெண். ஆக இப்போது பிரம்மாவுக்கு ஐம்பது ஆண்டுகள் முடிந்து ஐம்பத்தோராவது ஆண்டில் (இரண்டாவது பரார்த்தத்தில்) முதலாவது மாதத்தில் முதலாவது நாள் நடக்கின்றது. இவ்வாறு ஒரு பிரமதேவனின் ஆயுள் முடிந்தவுடன், அடுத்தாக இந்தப்பதவிக்கு வரும் பிரமதேவன் படைப்பைத் தொடங்குவார். இப்படி பல கோடி பிரம்மர்கள் இருந்திருக்கின்றார்கள். மகா பாரதத்தில் மார்க்கண்டேய பர்வத்தில் என்றும் பதினாறு வயதான மார்க்கண்டேயர் பாண்டவர்களை வன வாசத்தில் சந்தித்தபோது அவர் இவ்வாறு மூன்று பிரம்மாக்களைக் கண்டவர் என்று கூறுகின்றார். தற்போதிருக்கும் பிரம்மாவுக்கு அடுத்தாக பிரம்ம பதவிக்கு வரப்போகின்றவர் உருத்திரர்களில் ஒருவரின் அவதாரமும், ஏழு சீரஞ்சீவிகளில் ஒருவரும், ஸ்ரீராமருக்கு அணுக்கத் தொண்டருமாகிய வாயு புத்திரன் ஆஞ்சநேயர் ஆவார் என்று பவிஷ்ய புராணம் கூறுகின்றது. இவ்வாறே இப்போதிருக்கும் இந்திரனுக்கு அடுத்ததாக இந்திர பதவிக்கு வரப்போகின்றவர் மகாபலிச் சக்கரவர்த்தி என்றும் பவிஷ்ய புராணம் கூறுகின்றது. இவர் தற்போது சுவர்க்த்துக்கும் மேலான போகங்களை உடைய சப்த பாதாளங்களில் ஒன்றின் அதிபதியாக இருந்து வருகின்றார். “....கோடி கோடி பிரம்மர்கள்..” - திருவாசகம்- “நூறு கோடி பிரமர்கள் நொந்தினார் ஆறு கோடி நாராயணர் அங்ஙனே ஏறு கங்கை மணல்எண்ணில் இந்திரர் ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே” - திருநாவுக்கரசர் தேவாரம் -5ம் திருமுறை 100ம் பதிகம் 3ம் பாடல்- நடப்பு கால அளவையும் உலக அழிவும், ஆதியில் ஒரு பிரளயமும் அதன் பின் 6 மன்வந்தரங்களும் அவற்றின் பிரளயங்களும் கழிந்தன. இப்போது நடப்பது ஏழாவது மன்வந்தரம், இது வைவஸ்வத மன்வந்தரம். இந்தக் கால அளவு "சுவேத வராஹ கல்பே - வைவஸ்வத மன்வந்தரே - கலியுகே" என்று பூசைகளில் சங்கல்பம் செய்யும்போது கூறும் மந்திரத்தில் வரும். இப்போது நடப்பது சுவேதவராஹ கற்பம். இதிலே தற்போதைய நடப்பு வைவஸ்வத மன்வந்தரம். ஒரு மன்வந்தரத்துக்கு 71 சதுர் யுகங்கள் உள்ளன என்று முன்னர் பார்த்தோம். வைவஸ்வத மன்வந்தரத்துக்கு இதில் 27 சதுர் யுகங்கள் கழிந்துவிட்டன. இப்போது நடப்பது 28வது சதுர் யுகம். பூஜைகளில் சங்கல்பம் செய்யும்போது இது “அஷ்டா தசா விம்சதீ” என்று வரும், கவனியுங்கள். இதில் கிருத, திரேதா, துவாபர யுகங்களும் முடிந்து இப்போது நடக்கும் கலி யுகம் 17 பெப்ரவரி. 3102 BC இல் ஆரம்பமாகி இந்த 2012 February 17 உடன் 5113 வருடங்கள் கழிகின்றன. தற்போது நடக்கின்ற கலியுகம் முடிவதற்கு இன்னமும் 4,26, 887 வருடங்கள் உள்ளன. இத்துடன் இருபத்தெட்டவாது சதுர்யுகம் முடிவுக்கு வர இருபத்தொன்பதாவது சதுர் யுகம் தொடங்கும். இவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாக 71 சதுர் யுகங்கள் கழியும்போது மன்வந்தரத்தின் முடிவில் வருகின்ற பிரளய அழிவு வரும். அப்போது எஞ்து பூமி உட்பட இந்த பூலோகத் தொகுதியில் இருக்கும் அனைத்து உலகங்களும் நீருள் அழிந்து மறையும். அதற்கு இன்னமும் இவ்வாறு 43 சதுர் யுகங்கள் அதாவது 185.76 மில்லியன் வருடங்கள் இருக்கின்றன. சப்தரிஷி சகாப்தம் எங்களுக்கு தற்போது கிடைத்துள்ள காலக்கணிப்புகளில் (Calenders) பழைமையானது சப்தரிஷி சகாப்தம் ஆகும். வானநூல் குறிப்புகளை வைத்துப் பார்க்கும்போது இந்த சகாப்தம் கி.மு.8516 இல் தொடங்கியதாகத் தெரிகிறது. இந்தக் கணிப்புமுறை நட்சத்திரங்களையும், சூரியனுடைய செல்கதியையும் அடிப்படையாகக் கொண்டது. தற்போது பூமத்திய ரேகைக்கு சூரியன் செப்ரெம்பர் மாதம் 21ம் திகதி உச்சம் கொடுத்துக் கடக்கிறது என்பது நாம் அறிந்ததே. வானசாத்திர ரீதியில் சூரியன் துலா இராசியில் பிரவேசிக்கிறது. ஆனால் பெப்ரவரி மாதம் 21ம் திகதிதான் சூரியன் கும்ப ராசியில் பிரவேசிக்கிறது. ஆனால் சப்தரிஷி காலக்கணக்கு தொடங்கியபோது இந்த இரண்டு நிகழ்வுகளும் அதாவது சூரியனது கும்ப ராசிப்பிரவேசம், பூமத்தியரேகைக் கடப்பு ஆகிய இரண்டும் ஒன்றாக நவம்பர் மாதத்தில் நிகழ்ந்தன. விளங்குவதற்கு சிரம்மாக இருந்தால் வாசித்து விட்டு சற்று ஆறுதலாக இருந்து அசை போட்டுப் பாருங்கள்: விளங்கும். இந்தக்கணிப்பின் படி சப்தரிஷி சகாப்த காலக்கணக்கு கி.மு. 8516 நவம்பர் மாதம் 21 இல் தொடங்கியிருக்கிறது. இதுவே அக்காலத்திய வருடப்பிறப்பாக இருந்தது. இதற்கு முந்தைய காலக்கணிப்புகளைப்பற்றிய குறிப்புகள் நமக்குக் கிடைக்கவில்லை. இதன் பின்னர் இற்றைக்கு அண்ணளவாக ஒன்பதாயிரம் வருடங்களுக்கு முன்னர் விசுவாமித்திரர் அக்காலத்திய வானசாத்திர வல்லுனர்களையும் அறிஞர்களையும் கூட்டி ஆராய்ந்து தைமாதத்தில் வருடப்பிறப்பு தொடங்குவதாகக் கொள்வதாக முடிவு எடுக்கப்பட்டதாக வியாசர் மகாபாரதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதன் பின்னர கர்க மஹரிஷி என்பவர் வசந்த காலத்தில் சூரியன் பூமத்திய ரேகையைக் கடக்கும் காலமாகிய சித்திரை மாதத்தை வருடப்பிறப்பாக ஏற்படுத்தினார். இதையே பின்னால் வந்த ஆரியப்பட்டர், வராஹமிஹிரர் போன்ற கணித, வானியல் சாத்திர வல்லுனர்களும் ஏற்றுப் பின்பற்றி வந்துள்ளார்கள். இதுவே இன்று வரை நடைமுறையில் உள்ளது. அடிப்படைகள் ஒன்றாக இருந்தபோதிலும் காலத்துக்குக் காலம் வானியல் அறிஞர்களான மேதைகள் இதில் சில நடைமுறை மாற்றங்களை ஏற்படுத்தினார்கள் என்பது இதிலிருந்து தெரியவருகின்றது. தற்போதுள்ள இந்து சமய வருடங்களுக்கு அறுபதாண்டு வட்டம் உள்ளது நாம் அறிந்ததே. இதேபோல சப்தரிஷி சகாப்தத்தில் நூற்றாண்டு வட்டம் வழமையில் இருக்கிறது. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நட்சத்திரகளின் பெயரால் அழைக்கப்படுகின்றன. இவ்வாறு அசுவினி தொடக்கம் ரேவதி வரை இருபத்தேழு நட்சத்திரங்களின் பெயராலும் 2700 ஆண்டுகள் கொண்ட இருபத்தேழு நூற்றாண்டு வட்டங்கள் இருக்கின்றன. இதன் பின்னர் அடுத்த இருபத்தேழு நூற்றாண்டுகளின் வட்டம் மீண்டும் அசுவினி நட்சத்திரத்தில் இருந்து ஆரம்பமாகும். இப்போது நடப்பது சப்தரிஷி சகாப்தத்தின் படி 10,059ம் ஆண்டு ஆகும். இது நான்காவது வட்டம். இதில் உள்ள புனர்பூச நட்சத்திர நூற்றாண்டின் எண்பத்து ஆறாம் ஆண்டுதான் எமது இன்றைய கி.பி. 2010ம் ஆண்டு. இந்த ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஐந்தாண்டுகளைக்கொண்ட இருபது சிறு கால வட்டங்கள் இருந்தன. இந்த ஒவ்வொரு ஐந்தாண்டு சிறு வட்டத்தின் தொடக்க ஆண்டு சம்வத்சரம் என்று தொடங்கும். பின்னாளில் சம்வத்சரம் என்ற பெயரே ஆண்டு என்னும் சொல்லைப் பொதுவாகக் குறிப்பதாக ஆகிவிட்டது. சைவசமயக் கிரியைகளில் சங்கல்பம் செய்யும்போது "நாம்சம்வத்சரே" என்று தொடங்குவதைக் கவனியுங்கள். தமிழ் வருடங்கள் தற்போது தமிழ் ஆண்டுகள் என வழங்கப்படும் கால அட்டவணை முறை அறுபதாண்டு வட்டம் ஒன்றைக் கொண்டுள்ளது. இது பிரபவ ஆண்டில் தொடங்கி அட்சய ஆண்டில் நிறைவுபெற மீண்டும் அடுத்த பிரபவ ஆண்டு சுழற்சியாகத் தொடங்குகிறது. சிலர் இவ்வாறு ஒரே வருடத்தின் பெயர்கள் திரும்பத் திரும்ப வருவதால் பிற்காலத்தில் பழைய நிகழ்வுகளைச் சரியாக நிர்ணயிப்பதில் குழப்பம் ஏற்படுகிறது என்று குழம்புகிறார்கள். ஆனால் இந்த ஆண்டுகளின் கால அளவைகள் எந்தவித குழப்பமும் இல்லாமல் வானியல் விஞ்ஞானத்தை ஆதாரமாகக் கொண்டு மிகவும் கச்சிதமாகக் கணித்து வரையறுக்கப்பட்டவை. ஒவ்வொரு தமிழ் வருடமும் எமது பார்வையில் சூரியன் பன்னிரு ராசிகளில் சஞ்சரிக்கும் கால அளவாகும். சூரியன் முதலாவது இராசியான மேட இராசியில் பிரவேசிப்பது புது வருடப்பிறப்பாகும். இவ்வாறு ஒவ்வொரு பன்னிரு இராசிகளிலும் ஒன்றன் பின் ஒன்றாக சூரியன் பிரவேசிக்கும் காலம் பன்னிரு தமிழ் மாதப்பிறப்பு அல்லது மாத முதல் நாட்களாகும். இவ்வாறு சூரியன் மேடம் முதல் மீனம் ஈறாக உள்ள பன்னிரு இராசிகளில் சஞ்சரிக்கும் காலம் ஒரு தமிழ் வருடமாகும். இது வானியல் விஞ்ஞான ரீதியாக 365 நாள் 6 மணித்தியாலம் 11 நிமிடம் 48 விநாடி என்று கச்சிதமாகக் கணிக்கப்பட்ட ஒன்று. இதையே பஞ்சாங்க கணக்கில் 365 நாள் 15 நாழிகை 31 விநாடி 15 நொடி என்று கூறுவார்கள். இதையே வானியல் விஞ்ஞானத்தில் வானியல் வருடம் (Astronomical Year) என்று சொல்லுவார்கள். நாம் இதையே அழகாக தமிழ் வருடம் என்று சொல்லி அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பெயர்களும் வைத்துள்ளோம். இது முயல், வேதாளம், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, சேவல், நாய், பன்றி, எலி, காளை, புலி என்ற பன்னிரண்டு வருடங்களைக் கொண்ட சீனர்களின் கால வட்டத்தைப் போன்றது. ஆனால் அதைவிட ஆழமான வானியல் விஞ்ஞான கணிப்பீடுகளை ஆதாரமாகவும், அடிப்படையாகவும் கொண்டது. இந்த அறுபது வருடங்களைக்கொண்ட காலவட்டத்தின் வருடங்கள் தமிழ் வருடங்கள் என்றும் இந்த வருடங்களின் தொடக்கம் தமிழ் வருடப்பிறப்பு என்றும் வழங்கும் வழமையே எமது வழமை. அவையாவன 1. பிரபவ வருடம் 2. விபவ வருடம் 3. சுக்கில வருடம் 4. பிரமோதூத வருடம் 5. பிரசோற்பத்தி வருடம் 6. ஆங்கீரச வருடம் 7. ஸ்ரீமுக வருடம் 8. பவ வருடம் 9. யுவ வருடம் 10. தாது வருடம் 11. ஈசுர வருடம் 12. வெகுதானிய வருடம் 13. பிரமாதி வருடம் 14. விக்கிரம வருடம் 15. விஷு வருடம் 16. சித்திரபானு வருடம் 17. சுபானு வருடம் 18. தாரண வருடம் 19. பாரத்திப வருடம் 20. விய வருடம் 21. சர்வசித்து வருடம் 22. சர்வதாரி வருடம் 23. விரோதி வருடம் 24. விகிர்த்தி வருடம் 25. கர வருடம் 26. நந்தன வருடம் 27. விஜய வருடம் 28. ஜய வருடம் 29. மன்மத வருடம் 30. துர்முகி வருடம் 31. ஏவிளம்பி வருடம் 32. விளம்பி வருடம் 33. விகாரி வருடம் 34. சார்வாரி வருடம் 35. பிலவ வருடம் 36. சுபகிருது வருடம் 37. சோபகிருது வருடம் 38. குரோதி வருடம் 39. விசுவாவசு வருடம் 40. பராபவ வருடம் 41. பிலவங்க வருடம் 42. கீலக வருடம் 43. சௌமிய வருடம் 44. சாதாரண வருடம் 45. விரோதிகிருது வருடம் 46. பரிதாபி வருடம் 47. பிரமாதீச வருடம் 48. ஆனந்த வருடம் 49. இராட்சத வருடம் 50. நள வருடம் 51. பிங்கள வருடம் 52. காலயுத்தி வருடம் 53. சித்தார்த்தி வருடம் 54. ரௌத்திரி வருடம் 55. துர்மதி வருடம் 56. துந்துபி வருடம் 57. ருதிரோற்காரி வருடம் 58. இரத்தாட்சி வருடம் 59. குரோதன வருடம் 60. அட்சய வருடம் என்பனவாம். இது திராவிடர்களிடையே உள்ள வழமையே அன்றி வட இந்தியாவிலோ அல்லது வேறு எங்குமோ இந்த வழமையைப் பார்க்கமுடியாது. பின்னர் இதைப்போய் ஆரியர்களின் கால அளவை என்று சொல்வது எப்படிப் பொருந்தும்? இது யாருடைய கால அளவையாக இருந்தாலும் வானியல் விஞ்ஞான ரீதியாக அச்சொட்டாக இருக்கின்றது. நீங்கள் வேண்டாமென்றால் என்ன செய்வது? வருடங்களின் கணிப்பில் உள்ள பொத்தல்கள் நடப்பில் உள்ள ஆங்கில வருடம் 365 நாட்களை மட்டும் கொண்டது. அது டிசம்பர் மாதம் 31ம் திகதி நள்ளிரவு பன்னிரண்டு மணிக்குப் பின் தொடங்கி அடுத்த டிசம்பர் மாதம் 31ம் திகதி நள்ளிரவு பன்னிரண்டு மணியுடன் முடிவுறுகின்றது. இதற்கு எந்தவிதமான வானியல் விஞ்ஞான ஆதாரமோ அடிப்படையோ இல்லை. 365 நாட்களைக்கொண்ட இந்த ஆங்கில வருடக்கணக்கின்படி, வானியல் விஞ்ஞானரீதியாக உள்ள 365 நாட்கள் 6 மணித்தியாலங்கள் 43 விநாடிகள் கொண்ட வானியல் வருடத்தில் ஒவ்வொரு ஆண்டும் மேலதிகமாக 6 மணித்தியாலங்கள் மிகுதியாகும். இந்த ஆறு மணித்தியாலங்களை நான்கு ஆண்டுகளுக்குச் சேரவிட்டு நான்காம் ஆண்டில் ஒரு முழு நாளாகின்றது. இதை பெப்ரவரி மாதத்தில் ஒரு மேலதிக நாளாக இணைத்து விடுவார்கள். சாதாரணமாக 28 நாட்களை மட்டுமே கொண்ட பெப்ரவரி மாதம் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை 29 நாட்களைக் கொண்டிருக்கும். இதுவே லீப் வருடம் எனப்படுகின்றது. இப்படியாக 365 நாட்கள் 6 மணித்தியாலங்கள் சரி செய்யப்பட்டாலும் இன்னமும் 11 நிமிடங்கள் 48 வினாடிகள் மிகுதியாக உள்ளன. அவற்றையெல்லாம் ஒன்று சேர்த்து ஒரு நூற்றாண்டுக்கு ஒரு நாளைக்கூடுதலாகச் சேர்த்து சரிப் பண்ணுவார்கள். இப்படி சரிப்பண்ணும்பொழுது கொஞ்சம் அதிகமாக ஆகிவிடுகின்றது. இதற்காக நானூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாளை நழுவவிட்டு விடுவார்கள். இவ்வாறு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு நாளையும் ஒவ்வொரு நூற்றாண்டுக்கு ஒரு நாளையும் கூட்டி நானூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாளைக் கழிப்பதனால்தான் நமது தமிழ் மாதப்பிறப்புடன் கூடிய தைப்பொங்கல் சித்திரை வருடப்பிறப்பு என்பன 13, 14, 15, 16 ம் ஆங்கிலத் திகதிகளில் மாறி மாறி வருகின்றன. இது நமது குற்றமல்ல; நாம் பாவிக்கும் வழமையில் உள்ள ஆங்கிலக் கலண்டரின் குற்றம். தமிழ் வருடங்களில் இந்த வம்பெல்லாம் கிடையாது. சரியாக 365 நாள் 6 மணித்தியாலம் 11 நிமிடம் 48 வினாடி தான் கணக்கு. ஒவ்வொரு தமிழ் வருடமும் அதற்கு முந்திய வருடம் எந்த வாரத்தில் பிறந்ததோ அதற்கு அடுத்த வாரத்திலும், எந்த திதியில் பிறந்ததோ அதற்கு பன்னிரண்டாவது திதியிலும், எந்த நட்சத்திரத்தில் பிறந்ததோ அதற்கு பதினோராவது நட்சத்திரத்திலும், எந்த நேரத்தில் பிறந்ததோ அதற்கு 6 மணித்தியாலம் 11 நிமிடம் 48 விநாடி (15 நாழிகை 31 விநாடி 15 நொடி) பின்னராகவும் பிறக்கின்றது. . " Nothing more and nothing less" - Merchant and Venice by Shakespeare. தமிழ் மாதங்கள் சூரியன் செல்லும் ஆகாயப்பாதையை சமமாக 30 பாகைகள் கொண்ட 12 பாகங்களாகப்பிரித்து அவற்றிற்கு இராசிகள் என்று பெயரிட்டுள்ளோம். ஆரம்பமாக 0 பாகையைக்கொண்டு மேடம், இடபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், தனு, மகரம், கும்பம், மீனம் என்று பன்னிரண்டு இராசிகளும் தொடர்ந்து 360 பாகையுள்ள நீள்வட்டமாக முடியும் இடத்தில் மீண்டும் மேட இராசி தொடங்கும். ஒரு இராசியில் சூரியன் சஞ்சரிக்கும் கால அளவை ஒரு தமிழ் மாதம் ஆகும். அப்படியென்றால் ஏன் எல்லா தமிழ் மாதங்களும் ஒரே அளவு நாட்களைக்கொண்டதாக இல்லை என்று கேட்கிறீர்களா? சூரியன் சந்திரன் சஞ்சரிக்கும் இந்த பாதை விண்வெளிப்பாதை (Zodiacal Path) என்று அழைக்கப்படுகின்றது. இதன் நடுவில் இருப்பது விண்வெளி மத்திய ரேகை (Celestial Equator)ஆகும். இந்தப்பாதையை சூரியன் வடக்கு நோக்கிக் கடக்கும் காலம் உத்தராயண காலம் என்ற ஆறு மாதங்களாகும். இதே போல தெற்கு நோக்கிக்கடக்கின்ற காலம் தட்சிணாயன காலம் என்ற ஆறு மாதங்காளாகும். ஆடிப்பிறப்புடன் ஆரம்பமாகும் தட்சிணாயனம் தைப்பொங்கலில் முடிவடைகின்றது. இவ்வாறு தைப்பொங்கலில் தொடங்கும் உத்தராயணம் அடுத்த ஆடிப்பிறப்பில் முடிவடைகின்றது. எங்களுடைய தமிழ்ப் பண்டிகைகளுக்கு எவ்வளவு வானியல் விஞ்ஞான அடிப்படை உள்ளது பார்த்தீர்களா? தமிழ் மாதங்களின் கால அளவு சூரியனில் இருந்து பூமி இருக்கும் தூரத்தையும் இவற்றில் ஏற்படும் வேறுபாடுகளையும் பொறுத்தது. சூரியனை பூமி சுற்றி வரும் பாதை ஒரு செவ்வையான வட்டப்பாதை அல்ல. இது ஒரு நீள்வட்டமான பாதை. இதனால் எப்போதும் சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலுள்ள தூரமும் ஒரே அளவாக இருப்பதில்லை. மார்கழி மாதத்தில் மிகவும் கிட்ட இருக்கும் சூரியன் ஆடியில் அதிக தூரத்துக்கு தள்ளிப்போய்விடும். அதிக பட்ச தூரத்தை பெரிஹீலியன் (perihelion) என்றும், குறைந்த பட்ச தூரத்தை அப்போகீலியன் (Apohelion) என்றும் வானியல் விஞ்ஞானத்தில் கூறவார்கள். சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலுள்ள இடைவெளி குறைந்த காலங்களில் பூமியின் வட்டப்பாதையில் உள்ள 30 பாகையைக் கடக்கும் நீளமும் குறையும். அத்தோடு சூரியனின் ஈர்ப்புச்சக்தியின் தாக்கத்தாலும், பூமியின் மையநோக்க இழுவையில் (Centripetal force) ஏற்படும் மாற்றத்தாலும் பூமியின் வேகமும் அதிகரிக்கும். இவ்வாறு குறைந்த தூரத்தை அதிக வேகத்தில் கடக்கும்போது அதற்காக பூமி எடுத்துக்கொள்ளும் கால அளவும் குறையும். இதேபோல சூரியனிலிருந்து பூமியின் தூரம் அதிகரிக்கும்போது இந்த 30 பாகையைக் கடக்கும் தூரமும் கூடும். அதேபோல பூமியின் மையநோக்க இழுவையும் குறைந்து பூமியின் வேகமும் குறையும். அப்பொழுது சூரியன் அந்தக் குறிப்பிட்ட இராசியைக் கடக்கும் தூரமும் அதிகரிக்க, அதற்கான கால அளவும் அதிகரிக்கும். இதனால்தான் தமிழ் வருடங்களில் வெவ்வேறு மாதங்கள் வெவ்வேறு அளவான நாட்களைக் கொண்டதாக இருக்கின்றன. இவையெல்லாம் வெறுமனே எழுந்தமானமான கணிப்புகள் அல்ல. இவற்றைக் கணிப்பதற்கென்றே பிரத்தியேகமான வானியற் கணிப்பு முறைகள் சைவ ஆகம நூல்களில் விரிவாக உள்ளன. தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றின் பெயரும்கூட எழுந்தமானமாக இல்லாமல் காரணப் பெயராக வானியல் விஞ்ஞானரீதியில் அமைந்துள்ளமை நோக்கத்தக்கது. இந்த மாதங்கள் ஒவ்வொன்றும் அந்தந்த மாதங்களில் வரும் பௌர்ணமி முழு நிலவு தொடர்புறும் நட்சத்திரத்தின் பெயராலேயே அழைக்கப்படுகின்றன. 1. தை மாதம் என்னும் பௌஷ்ய மாதம் - பூச நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் மகர இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 29 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும். 2. மாசி மாதம்: என்னும் மக மாதம்- மக நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் கும்ப இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 30 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும். 3. பங்குனி மாதம் என்னும் பல்குணி மாதம்-பல்குணி என்னும் அத்த நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் மீன இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 30 நாட்கள் கொண்ட காலப் பகுதியாகும். 4. சித்திரை மாதம் என்னும் சைத்ரா மாதம்- சித்திரை நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் மேட இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 31 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும். 5. வைகாசி மாதம் என்னும் வைசாக மாதம் - விசாக நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் இடப இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 32 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும். 6. ஆனி மாதம் என்னும் ஜேஷ்டா மாதம் - கேட்டை நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் மிதுன இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 31 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும். 7. ஆடி மாதம் என்னும் ஆஷாட மாதம்- அவிட்ட நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் கடக இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 32 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும். 8. ஆவணி மாதம் என்னும் சிரவண மாதம்- திருவோண நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் சிம்ம இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 31 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும். 9. புரட்டாதி மாதம் என்னும் பத்ரபாத மாதம்- உத்திரட்டாதி நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் கன்னி இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 30 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும். 10. ஐப்பசி மாதம் என்னும் அசுவினி மாதம்- அசுவினி நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் துலா இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 30 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும். 11. காரத்திகை மாதம் என்னும் கிருத்திகா மாதம்- கார்த்திகை நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் விருச்சிக இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 30 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும். 12. மார்கழி மாதம் என்னும் மார்கசீர மாதம்- மிருகசீரிட நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் தனு இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 30 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும். கோவிலில் பூசை மற்றும் ஹோமங்களில் சங்கல்பம் செய்யும்போது இன்ன காலத்தில் செய்கிறோம் என்று சங்கல்பிக்கும்போது இந்த மாதங்களின் பெயர்கள் வரும்; அவதானியுங்கள். தமிழ்ப் புத்தாண்டு சூரியன் பன்னிரு இராசிகளில் முதலாவதான மேட இராசியில் பிரவேசிக்கும் காலம் தற்போது ள்ள தமிழ் வருடப்பிறப்பு ஆகும். இது சித்திரை மாதத்தில் நடக்கும். இவ்வாறு சூரியன் ஒவ்வொரு இராசிக்கும் பிரவேசிக்கும் காலத்தை சங்கிராந்தி என்று கூறுவர். சூரியன் மேடத்தில் பிரவேசிக்கும் சித்திரை மாதப்பிறப்பாகிய மேட சங்கிராந்தியே எமது தமிழ் புது வருடப்பிறப்பு ஆகும். இதையே இலங்கையில் உள்ள பௌத்தர்களும் பின்பற்றுகின்றார்கள். ஒவ்வொரு புது வருடமும் அதற்கு முந்தைய வருடம் எந்த வாரத்தில் பிறந்ததோ அதற்கு அடுத்த நாளிலும், எந்த திதியில் பிறந்ததோ அதற்கு பன்னிரண்டாவது திதியிலும், எந்த நட்சத்திரத்தில் பிறந்ததோ அதற்கு பதினோராவது நட்சத்திரத்திலும் எந்த நேரத்தில் பிறந்ததோ அதற்கு 15 நாழிகை 31 விநாடிகள் கழித்தும் பிறக்கும். வட இந்தியாவிலும் தெலுங்கு மற்றும் கன்னட சம்பிரதாயத்திலும் அவர்கள் சந்திரனது சஞ்சாரத்தை அடிப்படையாகக்கொண்ட சாந்திரமான மாசங்களையே பிரமாணமாகக் கொள்வர். அவர்களுக்கு மாதம் ஆரம்பிப்பது ஒவ்வொரு மாதத்தினது அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமையில் இருந்தாகும். இதிலிருந்து அடுத்த மாதத்தின் வளர்பிறைப் பிரதமை வரை ஒரு மாத காலம் ஆகும். இதுவேதான் சில வேளைகளில் மகா சிவராத்திரி நாளை நிர்ணயிப்பது பற்றிய விவாதங்களுக்குக் காரணமாகின்றது. சாந்திரமானப்படி இவர்களுக்கு பங்குனி மாதத்தின் அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை அன்றே சித்திரை மாதம் ஆரம்பமாகி விடுகின்றது. அதையே யுகாதி என்று தெலுங்கு மற்றும் கன்னட புதுவருடமாக தெலுங்கர்களும், கன்னடர்களும் கொண்டாடுகிறார்கள். மலையாளத்தில் நம்மைப்போல சூரியன் மேடத்தில் பிரவேசிக்கும் நாளாகிய மேட சங்கிராந்தியையே சித்திரை மாதப்பிறப்பாக வைத்திருக்கின்றார்கள். ஆயினும் இவர்கள் சூரியன் தனது சொந்த இராசியாகிய சிங்க ராசியில் பிரவேசிக்கும் ஆவணிமுதல் நாளையே தமது மலையாள வருடப் பிறப்பாகக் கொண்டாடுகின்றனர். அம்மாதமே வருடத்தின் முதல் மாதமாகக் கொள்ளும் மரபு தமிழர்களிடையே இருந்தது என்று சில பழந்தமிழ் நூல்களில் இருந்து அறியக் கிடைக்கின்றது. இதுவே இப்பொழுதும் மலையாளத்தில் பின்பற்றப்பட்டு வருகின்றது. இதே போல பௌர்ணமியில் இருந்து அடுத்த பௌர்ணமி வரை ஒரு மாதமாகக்கொள்ளும் மரபும் வங்காளத்தில் காணப்படுகின்றது. ஹரே கிருஷ்ணா கோவில்களில் இந்த முறையிலான நாட்காட்டிகளே பின்பற்றப்படுகின்றன. எங்களுடைய சாந்திரமான அல்லது சூரியமான முறைப்படி கார்த்திகை மாதம் ஆரம்பமாவதுக்கு முன்னரே அவர்களது கார்த்திகை மாதம் ஆரம்பமாகி விடுகின்றது, இது கிருஷ்ணர் யசோதையின் தாயன்புக்கு அடங்கி உரலில் கட்டுண்ட மாதமாகும். இந்த மாதத்தை அவர்கள் தாமோதர மாதம் என்று கொண்டாடுவார்கள். தாமம் என்றால் கயிறு. தமிழில் தாம்புக் கயிறு என்று சொல்லும் வழமை உண்டல்லவா? உதரம் என்றால் வயிறு. வயிற்றிலே கயிறினால் கட்டுண்டபடியினால் கிருஷ்ணனுக்கு தாமோதரன் என்று பெயர். முற்காலத்தில் சூரியன் தனது சொந்த இராசியாகிய சிம்மத்தில் பிரவேசிக்கும் ஆவணி மாதத்தின் முதல் நாளை வருடத்தின் முதல் நாளாகத் தமிழர் கொண்டாடினர் என்ற குறிப்பு சில பழந்தமிழ் நூல்களில் காணப்படுகின்றது. . சூரியன் பத்தாவது இராசியாகிய மகரத்தில் பிரவேசிக்கும் காலமாகிய மகர சங்கிராந்தியே தை மாதப்பிறப்பும் அத்துடன் கூடிய தைப்பொங்கலும் ஆகும். இதையே 2009 இல் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசாங்கம் தமிழ் வருடப்பிறப்பாகப் பிரகடனப்படுத்தியது. வட இந்தியாவில் இந்துக்கள் கொண்டாடும் தீபாவளியை இராமர் வனவாசத்தில் இருந்து மீண்டும் அயோத்திக்கு திரும்பிய நாளாகக் கொண்டாடி அதையே புது வருடப்பிறப்பாகக் கொண்டாடுவர். ஆங்கில புதுவருடம் போலவே இதற்கும் எந்தவிதமான வானியல் கணித விஞ்ஞான அடிப்படையோ ஆதாரமோ அல்லது ஆகம நூல்களின் ஆதாரமோ இல்லை என்பது இங்கு நோக்கத்தக்கது. உண்மையில் இராமர் வனவாசம் முடிந்து அயோத்தி நகருக்குத் திரும்பியது சித்திரை மாதத்து வளர்பிறை சஷ்டி நாள் என்றும் அதற்கு அடுத்த நாளான சப்தமியில் அவர் முடி சூடினார் என்றும் வான்மீகி இராமாயணம் யுத்த காண்டம் 127ம் சர்க்கம் கூறுகின்றது. இராமர் மீண்டும் நாடு திரும்பிய நாள்தான் புதுவருடப் பிறப்பு என்றால் இது நாம் புதுவருடம் கொண்டாடுகின்ற சித்திரை மாதத்தில்தான் வர வேண்டும். திதி சாந்திர மாதம்; 29 நாள் 12 மணி 44 நிமிடங்கள் கொண்டது ஒரு சாந்திர மாதம் (Lunar Month). சாந்திர வருடம்; இப்படி பன்னிரண்டு சாந்திர மாதங்கள் கொண்டது ஒரு சாந்திர வருடம் (Lunar year). இது 354 நாட்கள் கொண்டது. ஒரு சாந்திர மாதத்தின் இருபத்து ஒன்பதரை நாட்கள் சொச்சத்துக்குள் முப்பது திதிகள் அடங்கி நிற்கும். முன்னர் குறிப்பிடப்பட்ட கணக்குகள் சூரியனின் சஞ்சாரத்தை அடிப்படையாகக் கொண்டவை. இந்தக் கணக்கு சந்திரனின் சஞ்சாரத்தை அடிப்படையாகக் கொண்டது. கிருஷ்ண பட்சம்; சந்திரன் பூமியைச்சுற்றி வரும்பொழுது அது தேய்ந்து வருகின்ற காலம் தேய்பிறைக் காலமாகும். இது அமாவாசையில் (New Moon) முடிவுறும். இதை கிருஷ்ண பட்சம் என்பர். கிருஷ்ண என்றால் இருளான என்று பொருள். இதிலிருந்தே கருமை நிறக் கண்ணனுக்கு கிருஷ்ணன் என்ற பெயர் வந்தது. பூரண சந்திரன் நிலையில் இருந்து அது கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து வரும்போது ஒவ்வொரு நாளும் தேய்வடையும் பாகத்தைக் கலை என்பார்கள். இவ்வாறு பௌர்ணமியில் தொடங்கி நாளுக்கு ஒன்றாக பதினைந்து கலைகள் தேய்ந்ததும் வானில் நிலவில்லாத, ஒரு கலையுடன் கூடிய அமாவாசை (New moon) வருகின்றது. சுக்ல பட்சம்; சந்திரன் பூமியைச்சுற்றி வரும்பொழுது அது வளர்ந்து வருகின்ற காலம் வளர்பிறைக் காலமாகும். இது பௌர்ணமி என்னும் முழுநிலவில் முடிவுறும். இதை சுக்ல பட்சம் என்பர். சுக்ல என்றால் பிரகாசமான என்று பொருள். " சுக்லாம் பரதரம்" என்று தொடங்கும் பிள்ளையார் மந்திரம் பிரகாசமானவர் என்று பிள்ளையாரைக் குறிக்கின்றது. சந்திரன் கொஞ்சம் கொஞ்சமாக முழு நிலவாக வளரும்பொழுது ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் பாகத்தை கலை என்பார்கள். இவ்வாறு அமாவாசையில் தொடங்கி நாளுக்கு ஒன்றாக பதினாறு கலைகள் வளர்ந்ததும் அது பதினாறு கலைகளுள்ள பௌர்ணமி என்னும் முழுநிலவாகப் பரிணமிக்கின்றது. திதி; இவ்வாறு சந்திரனின் ஒவ்வொரு கலையும் வளரும் அல்லது தேயும் காலம் திதி எனப்படுகின்றது. திதி என்ற சொல்லில் இருந்துதான் 'திகதி', 'தேதி' என்ற சொற்கள் வந்தன. இவ்வாறு வளர் பிறைக்காலத்தில் பதினைந்து திதிகளும், தேய்பிறைக்காலத்தில் பதினைந்து திதிகளும் வருகின்றன. இந்தப்பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அமாவாசையும் பௌர்ணமியும் மாதமொரு முறை மாறி மாறி வந்து போகின்றன. பதினைந்து திதிகள் கொண்டது முன்னர் சொன்ன ஒரு பட்சம். இவ்வாறுள்ள பதினைந்து திதிகள் வருமாறு; . அமாவாசை - நிலவில்லாத நாள். இன்று நிலவுக்கு ஒரு கலை. 1. பிரதமை - முதாலம் பிறை. இன்று நிலவுக்கு இரண்டு கலைகள் உள்ளன. 2. துதியை - இரண்டாம் பிறை. இன்று நிலவுக்கு மூன்று கலைகள். துவி என்பது இரண்டு என்று பொருள் படும். ஆங்கிலத்தில் இரண்டைக் குறிக்கும் 'one' என்ற சொல்லும் இதிலிருந்ந்தே வந்தது. இதில் இருந்துதான் துவிச்சக்கர வண்டி, துவைதம் போன்ற சொற்கள் வந்தன. அத்துவைதம் என்றால் இரண்டு அல்லாதது என்று பொருள். 3. திருதியை- மூன்றாம் பிறை. இன்று நிலவுக்கு நான்கு கலைகள். திரி என்ற சொல் மூன்று என்று பொருள்படும். ஆங்கிலத்தில் மூன்றைக் குறிக்கும் 'Three' என்ற சொல் இதில் இருந்துதான் வந்தது. திரிபுரம் என்பது முப்புரங்களான மூன்று நகரங்களைக் குறிக்கும். திரிநேத்ரன் என்றால் முக்கண்ணன் என்று சிவனைக் குறிக்கும். 4. சதுர்த்தி- நாலாம் பிறை. இன்று நிலவுக்கு ஐந்து கலைகள். சதுர் என்றால் நான்கு என்று பொருள். சதுரம் என்றால் நான்கு பக்கங்கள் உள்ளது என்று பொருள். சதுர்முகன் என்றால் நான்கு முகங்களை உடைய பிரம்மாவைக் குறிக்கும். 'சுக்லாம் பரதரம்' என்ற பிள்ளையார் மந்திரத்தில் வருகின்ற சதுர்ப்புஜம் என்பது பிள்ளையாரின் நான்கு தோள்களைக் குறிக்கும். சதுர்யுகம் என்பது கிருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என்ற நான்கு யுகங்களினதும் கூட்டாகும். 5. பஞ்சமி-ஐந்தாம் பிறை. இன்று நிலவுக்கு ஆறு கலைகள். பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள். ஆங்கிலத்தில் ஐந்தைக் குறிக்கும் 'five' என்ற சொல் இதிலிருந்துதான் வந்தது. பஞ்சாட்சரம் என்பது சைவத்தின் ந-ம-சி-வா-ய என்ற ஐந்து எழுத்து மந்திரத்தைக் குறிக்கும். பஞ்ச பூதங்கள் என்பது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பௌதிகப் பேரலகுகளைக குறிக்கும். பஞ்சாங்கம் என்பது ஒவ்வொரு நாளுக்கும் உரிய வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களை உடைய வானியல் கணிப்பைக் குறிக்கும். 6. ஷஷ்டி-ஆறாம் பிறை. இன்று நிலவுக்கு ஏழு கலைகள். ஷ என்றால் ஆறு என்று பொருள். ஆங்கிலத்தில் ஆறு என்ற எண்ணைக் குறிக்கும் 'six' என்ற சொல் இதிலிருந்துதான் வந்தது.ஷண்முகன் என்பது ஆறு முகங்களுடைய முருகனைக் குறிக்கும். ஷடாட்சரம் என்பது முருகனின் ச-ர-வ-ண-ப-வ என்ற ஆறு எழுத்து மந்திரமாகும்.. 7. ஸப்தமி-ஏழாம் பிறை. இன்று நிலவுக்கு எட்டு கலைகள். ஸப்த என்றால் ஏழு என்று பொருள். ஆங்கிலத்தில் ஏழைக் குறிக்கும் 'seven' என்ற சொல் இதிலிருந்துதான் வந்தது. ஸப்த ரிஷிகள் என்பது ஏழு முனிவர்களைக் குறிக்கும். 8. அட்டமி-எட்டாம் பிறை. இன்று நிலவுக்கு ஒன்பது கலைகள். ஆங்கிலத்தில் எட்டு என்னும் எண்ணைக் குறிக்கும் 'Eight'என்ற சொல் இதிலிருந்தே வந்தது. அட்டம் என்றால் எட்டு என்று பொருள். அட்டலட்சுமி என்றால் எட்டு இலட்சுமிகளைக் குறிக்கும். அட்ட திக்குகள் என்றால் கிழக்கு, தென் கிழக்கு, தெற்கு, தென் மேற்கு, மேற்கு, வட மேற்கு, வடக்கு, வடகிழக்கு என்னும் எட்டுத் திக்குகளைக் குறிக்கும். அட்டதிக்குப் பாலகர்கள் என்றால் முறையே இந்த எட்டு திக்குகளுக்கும் உரிய இந்திரன். அக்கினி, இயமன், நிருதன், வருணன், வாயு, குபேரன், ஈசானன் எட்டு திக்குத்தெய்வங்களையும் குறிக்கும். ' அருணன் இந்திரன் திசை அணுகினான்' என்றால் சூரியனின் சாரதியாகிய அருணன் இந்திரனுக்குரிய கிழக்குத் திசையை அணுகினான் என்று பொருள். இந்த வரி திருவாசகத்தின் திருப்பள்ளி எழுச்சியில் வருகின்றது. 9. நவமி- ஒன்பாதம் பிறை. நிலவுக்கு பத்து கலைகள். நவம் என்றால் ஒன்பது. ஆங்கிலத்தில் ஒன்பதைக் குறிக்கும் 'Nine' என்ற சொல் இதிலிருந்துதான் வந்தது. நவராத்திரி என்றால் ஒன்பது இரவுகளைக்குறிக்கும். நவதானியம் என்றால் ஒன்பது தானியங்களைக் குறிக்கும். நவக்கிரகம் என்பது ஒன்பது கிரகங்களைக் குறிக்கும். 10. தசமி- பத்தாம் பிறை. இன்று நிலவுக்கு பதினொரு கலைகள். தசம் என்றால் பத்து. கணிதத்தில் தசமத்தை அறிமுகப்படுத்தியவர்கள் இந்துக்களே. இதை ஆங்கிலத்தில் Decimal என்று கூறுகிறார்கள். தசகாரியம் என்பது ஆத்மீகப்பாதையிலுள்ள பத்துப்படிநிலைகளைக் குறிக்கும். தசரா என்று நமது நவராத்திரியை வட இந்தியாவில் பத்து நாட் கொண்டாட்டமாகக் கொண்டாடுவர். 'தக்க தசமதி தாயொடு தான்படும் துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்' - திருவாசகம். இங்கு தசமதி என்பது பத்து மாதங்கள். இது தாயின் வயிற்றில் நாம் இருந்த காலத்தைக் குறிக்கின்றது. 11. ஏகாதசி- பதினோராம் பிறை. இன்று நிலவுக்கு பன்னிரண்டு கலைகள். தசம் என்றால் பத்து என்று பார்த்தோம். ஏகம் என்றால் ஒன்று. ஏகாதசி என்றால் பத்தும் ஒன்றும் சேர்ந்த பதினொன்று. 12. துவாதசி- பன்னிரண்டாம் பிறை. இன்று நிலவுக்கு பதின்மூன்று கலைகள். துவி என்றால் இரண்டு என்று பார்த்தோம். தசம் என்றால் பத்து என்று பார்த்தோம். துவாதசி என்பது பத்தும் இரண்டும் சேர்ந்த பன்னிரண்டைக் குறிக்கும். 13. திரயோதசி-பதின்மூன்றாம் பிறை. இன்று நிலவுக்குப் பதினான்கு கலைகள். திரி என்றால் மூன்று என்று பார்த்தோம். தசம் என்றால் பத்து என்று பார்த்தோம். திரயோதசி என்பது பத்தும் மூன்றும் சேர்ந்த பதின்மூன்றைக் குறிக்கும். 14. சதுர்த்தசி- பதினான்காம் பிறை. இன்று நிலவுக்குப் பதினைந்து கலைகள். சதுர் என்றால் நான்கு என்று பார்த்தோம். தசம் என்றால் பத்து என்று பார்த்தோம். சதுர்த்தசி என்பது பத்தும் நான்கும் சேர்ந்த பதினான்கைக் குறிக்கும். 15. பௌர்ணமி- பூரண நிலவு. இன்று பூரண நிலவுக்கு கலைகள் பதினாறு. அமாவசையில் இருந்து ஒவொரு கலைகளாக வளர்ந்து இன்று பதினாறு கலைகள் கொண்ட பூரண நிலவாகப் பரிணமிக்கின்றது. . இந்த திதிகளை தேய்பிறைக்காலத்தில் கிருஷ்ண பட்ச திதிகள் என்றும் வளர்பிறை காலத்தில் சுக்ல பட்ச திதிகள் என்றும் அழைக்கிறோம். ஆக மொத்தம் திதிகள் முப்பது. ஒவ்வொரு மாதமும் வரும் திதிகள் ஒரே கால அளவு கொண்டதாக இருப்பதில்லையே? ஒவ்வொரு திதியும் கால அளவில் வித்தாயசப்படுகின்றனவே? ஒரே திதியே ஒரு மாதத்தில் நீண்டதாகவும் இன்னொரு மாதத்தில் குறுகியதாகவும் இருக்கின்றதே? ஒரே திதி ஒரே மாதத்தில் வளர்பிறைக்காலத்தில் ஒர் கால அளவுக்கும் தேய்பிறைக்காலத்தில் இன்னொரு கால அளவுக்கும் இருக்கின்றதே? இப்படி வேறுபாடுகள் ஏன் என்று குழப்பமாக இருக்கின்றதா? அது நமது கால அளவை துல்லியமான வானியல் கணக்கீட்டை ஆதாரமாகக் கொண்டிருப்பதால்தான். பூமியில் இருந்து சந்திரன் நிற்கும் தூரம் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சில சமயங்களில் கிட்ட இருக்கும். சில சமயங்களில் தூர விலகிப் போகும். அதிக தூரத்தில் இருக்கும்போது திதியும்28 மணித்தியாலங்கள் வரை நீண்டதாக இருக்கும். அதிக கிட்டத்தில் இருக்கும்போது திதியும் 19 மணித்தியாலங்கள் வரை குறுகியதாக இருக்கும். இடைப்பட்ட காலங்களில் திதியின் அளவும் இவற்றுக்கு இடைப்பட்ட கால அளவில் இருக்கும். சந்திரன் கிட்ட இருக்கும் தூரத்தை வானியல் விஞ்ஞானத்தில் அபோகீ (Apogee) என்பார்கள். சந்திரன் எட்ட இருக்கும் தூரத்தை பெரிகீ (Perigee) என்பார்கள். இப்போது புரிகிறதா எமது பழைய பஞ்சாங்கங்களின் வானியல் விஞ்ஞான கணித அடிப்படை? மண்டலம் பட்சம் என்பது அமாவாசை தொடக்கம் பௌர்ணமி ஈறாக பதினைந்து நாட்கள் கொண்டது என்று பார்த்தோம். இவ்வாறு இரண்டு பட்சங்கள் கொண்டது ஒரு மாதம் என்று பார்த்தோம். இவ்வாறு மூன்று பட்சங்கள் கொண்டது ஒரு மண்டலம். இது நாற்பத்தைந்து நாட்கள் கொண்டது. மண்டலாபிஷேகம் என்றால் இவ்வாறு ஒரு மண்டல காலத்துக்கு நடைபெறும் பூசை அபிஷேகங்களைக் குறிக்கும். சில இடங்களில் மண்டலம் என்பது நாற்பத்தெட்டு நாட்களாகவும் நாற்பத்தாறு நாள்களாவும் கொள்ளும் வழமையும் உள்ளது. பஞ்சாங்கம் பஞ்சம் என்றால் ஐந்து; அங்கம் என்றால் உறுப்பு அல்லது பகுதி. பஞ்சாங்கம் என்பது ஒவ்வொரு நாளுக்கும் உரிய ஐந்து விடயங்களைப் பற்றிய விபரங்களைத் தருவது. இந்த ஐந்து விடயங்களாவன; 1. வாரம்; நவக்கிரகங்களில் இராகு, கேது இரண்டும் நிழற் கிரகங்களாம். அவை தவிர்ந்த ஏழு கிரகங்களுக்கும் நாள் தோறும் ஆட்சி முகூர்த்தங்கள் மாறி மாறி வரும். ஒவ்வொரு நாளிலும் சூரியோதய காலத்தில் எந்த கிரகத்தினுடைய ஆட்சி முகூர்த்தம் வருகின்றதோ அக்கிரகத்தின் பெயரால் அந்த நாள் வழங்கப்படுகின்றது. உதய காலத்தில் சூரியன் ஆட்சியில் இருக்கும் நாள் ஞாயிற்றுக்கிழமை உதய காலத்தில் சந்திரன் ஆட்சியில் இருக்கும் நாள் திங்கட் கிழமை உதய காலத்தில் செவ்வாய் ஆட்சியில் இருக்கும் நாள் செவ்வாய்க் கிழமை உதய காலத்தில் புதன் ஆட்சியில் இருக்கும் நாள் புதன் கிழமை உதய காலத்தில் வியாழன் ஆட்சியில் இருக்கும் நாள் வியாழக் கிழமை உதய காலத்தில் வெள்ளி ஆட்சியில் இருக்கும் நாள் வெள்ளிக் கிழமை உதய காலத்தில் சனி ஆட்சியில் இருக்கும் நாள் சனிக் கிழமை இவ்வாறுதான் வாரத்தின் ஏழு நாட்களும் எமது சம்பிரதாயத்தில் பெயரிடப்பட்டிருக்கின்றன. 2. நட்சத்திரம்; எமக்கு புலனாகக்கூடிய நட்சத்திரக் கூட்டங்களில் 27 முக்கியமானவையாக உள்ளன. அவற்றுக்கு அச்சுவினி தொடக்கம் ரேவதி வரை முறையாக பெயர்களும் உள்ளன. சந்திரனுக்கு அருகில் காணப்படும் நட்சத்திரத்தை வைத்து அந்த நேரத்துக்கு அல்லது நாளுக்கு உரிய நட்சத்திரம் சொல்லப்படுகின்றது. எமது புராணங்களின் படி 27 நட்சத்திரங்களும் தட்சனின் மகள்மாராகப்பிறந்து சந்திரனுக்கு மனைவியானவர்கள். ஆகவே நட்சத்திரம் என்பது சந்திரன் அந்த நேரத்தில் எந்த மனைவியுடன் கூடியிருக்கிறான் என்பதை வைத்துக் குறிக்கப்படுகின்றது. 3. திதி; ஒவ்வொரு நாளும் எமது பார்வைக்கு சந்திரன் ஆகாய வீதியில் செல்லும் தூரத்தில் இருந்து சூரியன் செல்லும் தூரத்தைக் கழித்து வந்த மிகுதியே திதி ஆகும். இத்தூரம்தான் அன்றன்று சந்திரனின் தெரிகின்ற பாகத்தை நிர்ணயிக்கின்றது. இதனால் இது சந்திரனின் தேய்மானம் மற்றும் வளர்ச்சியுடன் ஒத்திசைந்து வருகின்றது. இதில் அமாவாசை முதல் பௌர்ணமி வரை பதினாறு திதிகள் உள்ளன. அமாவாசையில் தொடங்கி பௌர்ணமி வரையுள்ள காலம் வளர் பிறைக்காலம் ஆகும். இதை சுக்கில பட்சம் என்று கூறுவர். சுக்கிலம் என்றால் பிரகாசமான என்று பொருள். பௌர்ணமியில் இருந்து அமாவாசை வரையுள்ள காலத்தை தேய்பிறைக்காலம் ஆகும். இதை கிருஷ்ண பட்சம் என்று கூறுவர். கிருஷ்ண என்றால் இருண்ட என்று பொருள். 4. யோகம்; ஒவ்வொரு நாளும் எமது பார்வைக்கு ஆகாய வீதியில் சூரியன் செல்லும் தூரத்துடன் சந்திரன் செல்லும் தூரத்தைக் கூட்டி வந்த தொகையே யோகம் எனப்படுகின்றது. இவ்விதமான யோகங்கள் 27. 5. கரணம்; ஒவ்வொரு திதியையும் இரண்டாகப் பிரித்து ஒவ்வொரு பகுதியும் கரணம் எனப்படுகின்றது. இனிமேல் பஞ்சாங்கம் பாரக்கும்போது சற்று விளக்கத்துடன் பார்க்கலாம். தற்கால காணக்கணிப்பகளும் கால அளவைகளும் 1. சாலிவாகன சகாப்த வருடம் - 1934. சாலி வாகனன் விக்கிரமாதித்த மகாராஜாவின் பேரன். இவன் காலத்தில் பஞ்சாங்க கணிதத்தை சீர் படுத்தினான். அதிலிருந்து 1934 வருடங்கள் கழிந்தன. 2. கொல்லம் வருடம்- 1187- கேரளாவில் உள்ள பழைய கொல்லம் நகரம் கடலில் அமிழ்ந்தது. இதை எண்டும் கட்டி எழுப்பிய ஆண்டில் இருந்து 1187 வருடங்கள் கழிந்தன. சுந்தர மூர்த்தி நாயனாரும், சேரமான் பெருமாள் நாயனாரும் இன்றைய கேரளத்தில் உள்ள திருவஞ்சைக்களத்தில் இருந்து கைலாயத்துக்குச் சென்ற ஆண்டில் இருந்து கொல்லம் வருடம் ஆரம்பிக்கின்றது என்பது சைவர்களின் கணக்கு. 3. திருவள்ளுவர் ஆண்டு- திருவள்ளுவர் பிறந்த ஆண்டில் இருந்து ஆண்டுகளைக் கணக்கிடும் வழமை திருவள்ளுவர் ஆண்டு. திருவள்ளுவர் பிறந்ததில் இருந்து 2043 ஆண்டுகள் கழிந்தன. கலைஞர் கருணாநிதி தலைமையிலான தமிழ் நாடு அரசாங்கம் இதையே புத்தாண்டின் தொடக்கமாக கி.பி 2008 இல் இருந்து பிரகடனப்படுத்தியது. 4. கிறிஸ்து வருடம் 2012: கிறிஸ்து பிறந்ததில் இருந்து ஆண்டுகளை கணக்கிடும் வழமை. கிறிஸ்து பிறந்து 2012 வருடங்கள் கழிந்தன. கிறிஸ்து பிறந்தது டிசம்பர் மாதம் 25ம் திகதி என்று சொல்லப்பட்டாலும் புதுவருடம் பிறப்பது ஜனவரி 1 இல் தான். இது டிசம்பர் மாதத்தின் 31ம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னாகும். இதற்கு எந்தவிதமான கணித வானியல் விஞ்ஞான அடிப்படையும் இல்லை. இவ்வாறு ஜனவரியில் புத்தாண்டு கொண்டாடும் முறையே 1582ம் ஆண்டு பரிசுத்த போப்பரசராக இருந்த கிரிகோரி என்பராலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது பிரான்சு உடபட பல நாடுகள் இப் புதிய நடைமுறையை ஏற்று அமுல் படுத்தினாலும் இங்கிலாந்து உட்பட பல நாடுகள் இவ்வாறு அமுல்படுத்தவில்லை. இவர்கள் தொடர்ந்தும் தமது புத்தாண்டை ஏப்ரல் மாதம் முதலாம் திகதியே கொண்டாடி வந்தார்கள். இவர்களை ஏளனம் செய்து அவமதிக்கும் நோக்கில்தான் ஏப்ரல் முதலாம் தினத்தை முட்டாள் தினம் என்று கூறும் வழமை ஏற்பட்டது.

கடவுள் உண்டா? இல்லையா?

அஸ்தி நாஸ்தி அல்லது அத்தி நாத்தி என்பது சமண மதக்கொள்கை. இதில் ஏழு பகுதிகள் உள்ளன. அதனால் இதை ஸப்த பங்கி வாதம் என்பர். ஸப்த என்றால் ஏழு. இந்த அத்தி நாத்தி கடவுளைப் உண்டா என்ற வினாவுக்கு ஏழு விடைகளை முன்வைக்கின்றது. இதற்கு மேல் எட்டாவது விடை ஒன்றை யாருமே கூற இயலாது; முயன்று பாருங்களேன். 1. சியாத் அஸ்தி - கடவுள் உண்டாம். 2. சியாத் நாஸ்தி - கடவுள் இல்லையாம். 3. சியாத் அஸ்தி நாஸ்தி - கடவுள் உண்டும், இல்லையுமாம். 4. சியாத் அவ்யக்தம்- கடவுள் சொல்லொணாதது. 5. சியாத் அஸ்தி அவ்யக்தம் - கடவுள் உண்டும், சொல்லொணாததுமாம் 6. சியாத் நாஸ்தி அவ்யக்தம்- கடவுள் இல்லையுமாம், சொல்லொணாததுமாம் 7. சியாத் அஸ்தி நாஸ்தி அவ்யக்தம் - கடவுள் உண்டுமாம், இல்லையுமாம், சொல்லொணாததுமாம். இது சமஸ்கிருதம் இல்லை; அர்த்த மகத மொழி. மகதம் என்பது இன்றைய இந்தியாவின் பீகார் மாநிலம். சமணம் இங்கிருந்துதான் வந்தது. பல திராவிட வாதிகள் சமணம் திராவிட மதம் என்றும், திருவள்ளுவர் சமணர் என்றும், சமணம்தான் தமிழை வளர்த்தது என்று எண்ணியும், எழுதியும், பேசியும் வருவது வேறு கதை. எது எப்படியிருந்தாலும் இந்த ஏழு வார்த்தைகளும் எளிமையானவையும், நிரம்பிய அர்த்தம் உள்ளவையுமாகும். அஸ்தி என்றால் உண்டு. இதிலிருந்தே கடவுள் உண்டு என்று சொல்பவர்களை ஆஸ்திகர் என்று சொல்லும் வழமை வந்தது. நாஸ்தி என்றால் இல்லை. இதிலிருந்தே கடவுள் இல்லை என்று சொல்பவர்களை நாஸ்திகர் என்று சொல்லும் வழமை வந்தது. இந்த அத்தி நாத்தி எழுதிய ஏட்டைத்தான் சமணர்கள் மதுரையில் சம்பந்தருடன் செய்த புனல் வாதத்தில் வைகை ஆற்றில் விட்டார்கள். சம்பந்தர் " வாழ்க அந்தணர்" எழுதிய ஏட்டை ஆற்றில் விட்டார். சம்பந்தர் இட்ட ஏடு ஆற்றில் எதிரேறி கரையையும் அடைந்தது. இவ்வாறு ஏடு எதிரேறி கரை சேர்ந்த இடமே திருவேடகம் ஆகும். இது மதுரையில் இருந்து ஒரு சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. சமணர்களின் அத்தி நாத்தி ஏடு ஆற்றின் போக்குடன் அடித்துச் செல்லப்பட்டது. இந்த " வாழ்க அந்தணர்" என்ற திருப்பாசுரத்துக்கு பல தனிச்சிறப்புகள் உள்ளன. 1. இது பன்னிரண்டு பாடல்களை உடையது. மற்றைய பதிகங்கள் எல்லாம் பதினொரு பாடல்கள் கொண்டவை. 2. இந்தப்பாசுரத்தை சம்பந்தர் தன் கையாலேயே எழுதினார். சம்பந்தரின் மற்றைய பாடல்களை ஏட்டில் எழுதி வந்தவர் அவருடைய தாய் மாமன் சம்பந்த சரணாலயர். சம்பந்தர் கொடுத்து வைத்தவர். அவருக்கு அழுதால் பால் கொடுக்க உமையம்மை; கோவில்களுக்கு தோளில் தூக்கிச் செல்ல அவரின் தந்தையார்; அவரின் பாடல்களை எழுத ஒரு மாமனார்; அவருக்கு சிவிகை பந்தர் குடை கொடுக்க சிவனார்; பல்லக்கு தாங்க அப்பர் சுவாமிகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.. 3. சைவத்தின் கொள்கை விளக்கம் செய்த பாடல் இது. 4. இதற்கு மட்டுமே சேக்கிழார் 22 பாடல்களில் விளக்கம் கொடுத்திருக்கிறார். 5. முதல் ஒன்பது பாடல்களின் யாப்பு வேறு; கடைசி மூன்று பாடல்களின் யாப்பு வேறு. 6. சம்பந்தரின் மற்றைய பதிகங்கள் எல்லாம் மற்றைய மதங்களைச் சாடியவையே. பரமத கண்டனம். ஆனால் சைவ சமயத்தை மெய்ச்சமயம் என்று தாபித்த பதிகம் இது ஒன்றே. சுய மத தாபனம். இதுதான் சம்பந்தரை ஆச்சாரிய தானத்துக்கு ஏற்றிய பதிகம். ஆச்சாரிய இலட்சணங்கள் இரண்டு. பரமத கண்டனம்; சுயமத தாபனம். இந்த இரண்டையும் இந்தப்பதிகத்தினூடாகச் செய்திருக்கிறார் சம்பந்தர். சமணர்களின் நூல்களிலும் இந்த சம்பவம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு அவர்கள் சொல்லும் விளக்கம் சம்பந்தர் ஏட்டை ஆற்றின் போக்குக்கு எதிராகச் செல்லும் ஒரு மீனில் கட்டி விட்டதால் ஏடு எதிரேறியதாம். அது சரி அப்போது அனல் வாதத்தில் சமணர்களின் ஏடு தீயில் கருகியதற்கும் சம்பந்தர் இட்ட ஏடு நெருப்பில் எரியாமல் இருந்ததற்கும் என்ன சொல்லியிருக்கிறார்கள் இந்தச் சமணர்கள்? சொன்னால் என்னிடம் சண்டைக்கு வராதீர்கள். சம்பந்தரின் ஏடு கற்றாளைச்சாற்றில் ஊற வைக்கப்பட்ட ஏடாம்; அதனால்தான் நெருப்பில் இட்டும் வேகவில்லையாம். இன்றும் மதுரையில் நிறைய சமண சமயிகளும், அவர்களுடைய பாடசாலைகளும், சங்கங்களும், இளைஞர் அமைப்புகளும் இருக்கின்றன. காஞ்சியிலும் சமணக் குடியிருப்புகளும், கோயில்களும் இருக்கின்றன, இந்த சமணக்கோவில்கள் அமைப்பில் தென்னிந்திய சைவக்கோவில்களைப்போலவே கர்ப்பக்கிருகம், அதன் மேலாக உள்ள தூபி, விமானம், முன்னால் உள்ள கொடித்தம்பம், பலிபீடம், சுற்றுப்பிரகாரம் என்று அப்படியே சைவக்கோயில்கள் மாதிரி உள்ளன. இது நிற்க; நாத்தி நாத்தி என்று ஒரு சைவப் பாடலும் உள்ளது. இது சர்வ ஞானோத்தர ஆகமத்தின் பாடல். இது சிவன் முருகனுக்கு உபதேசித்த ஒரு உப ஆகமம். சர்வ ஞானோத்தரம் என்றால் எல்லா ஞானங்களின் முடிபு என்று பொருள். வேதாந்தம் என்றாலும் வேதங்களின் முடிபு என்றுதான் பொருள். ஆனால் அந்தம் என்பதற்கு வடமொழியில் கடைசி என்றும் பொருள் உண்டு. ஆகவேதான் வேதாந்தம் என்பது வேதங்களின் கடைசியிலுள்ள உபநிடதங்களையே குறிக்கும் என்றும் கூறுவர். ஆனால் உத்தரம் என்ற சொல் மேலான ஆதாரமான முடிபு என்றுதான் பொருள் தரும். வீட்டு கூரைக்கு உள்ள உத்தரம் என்ற பகுதியை நினைவு கூருங்கள். ஆகவே சர்வ ஞானோத்தரம் என்றால் எல்லா ஞானங்களினதும் மேலான ஆதாரமான முடிபு என்று பொருள். சர்வ ஆகமங்களினதும் மேலான முடிபு என்றுப் பொருள் கொள்வர். உத்தரம் என்றால் கேள்விக்குரிய விடை அல்லது பதில் என்றும் பொருள் கொள்ளலாம். இதன்படி சர்வஞானோத்தரம் என்பது அனைத்து ஞானத்துக்குமான பதில் என்று பொருள் தரும். இந்த நூலின் மூலம் சமஸ்கிருதத்தில் 240 சுலோகங்களுடன் விளங்குகின்றது. தமிழில் இதை ஆக்கியவர் பெயர் தெரியவில்லை. இது 71 பாடல்களில் தூத்துக்குடி பொ. முத்தையாபிள்ளை அவர்களின் முத்தி ரத்நம் என்னும் உரையுடன் 1923 இல் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றது. யாழ்ப்பாணத்து சிவ யோகர் சுவாமிகளின் வழிகாட்டலில் இந்த ஆகமம் படிக்கப்பட்டு வந்ததாக அறிகிறோம். முன்னைய பிரதிகள் எல்லாம் வழக்கொழிந்து கிடையாமல் போன பின்னர் சிவயோகர் மரபில் வந்த புலம் பெயர் தமிழர் ஒருவரிடமிருந்த புத்தகப்பிரதியொன்றின் உதவியினால்தான் இப்புத்தகம் 2002 இலும் 2005இலும் மறுபதிப்புக்கண்டு சித்தாந்த சாத்திரம் படிப்பவர்களின் கைகளில் மீண்டும் தவளத்தொடங்கியுள்ளது. சிவயோகர் மரபில் சர்வஞானோத்தர ஆகம வசனம் இலங்கையில் சமீபத்தில் மீள் பதிப்புச் செய்யப்படுள்ளது. சரி, நாத்தி நாத்தி பாடலுக்கு வருவோம். அத்துவிதம், துவிதம், விசிட்டாத்துவிதமாம் என்று அபேதம், பேதாபேதம், பேதமாக முத்தி பலவும் பகர்ந்தோம் பக்குவத்துகு ஈடா(ய்) முத்தி அதி ரிக்குச் சொன்ன முத்தி குக கேள், சுத்த அத்துவிதமான சாக்ஷாத் தாரகையாஞ் சொன்ன இம் முத்திக்கு மேல் அறிவது ஒன்றும் இல்லை சத்தியமா(ய்), முதற், புனர், சத்தியம் முக்காலும் சத்தியமாகும், நாத்தி, நாத்தி, நாத்தி அத்துவிதம், துவிதம், விசிட்டாத்துவிதம் என்று அபேதம், பேதம், பேதாபேதமாக பக்குவத்துக்கீடா(க) முத்தி அதிகாரிக்குச் சொன்ன முத்தி(யை) குக(னே) கேள்! சுத்த அத்துவிதமான சாட்சாட்காரதையாக ( விளங்கப்பெறுகின்ற) சொன்ன முத்திக்கு மேல் அறியத்தக்கது ஒன்றும் இல்லை. நாத்தி நாத்தி நாத்தி. ( இல்லை, இல்லை, இல்லை.) இது முதல் சத்தியம், புனர் (மீண்டும்)சத்தியம், முக்காலும் சத்தியம். -சர்வஞானோத்தர ஆகமம்; பாடல் 32

அக்கினிஹோத்திரம்

அக்கினி ஹோத்திரத்தில் பாவிக்கும் அக்கினி மூன்று வகை. 1. காருக பத்திய அக்கினி; இதுதான் மிகவும் முக்கியமான அக்கினி. சிக்கி முக்கிக் கல்லைக்கொண்டோ அல்லது அரணிக்கட்டைகளை கடைந்தோ நெருப்பை உருவாக்கி இந்த அக்கினியை புதிதாக உருவாக்க வேண்டும். கார்ஹபத்ய= க்ருஹ+பதி= கிருகத்துக்கு அதிபதியாக இருந்து காப்பது என்று பொருள். 2. ஆகவனீய அக்கினி 3. தக்ஷிணாக்கினி பின்னர் சொன்ன இரண்டு அக்கினிகளையும் முன் சொன்ன கார்ஹபத்ய அக்கினியில் இருந்துதான் பற்ற விட்டு பசு நெய்யினால் ஹோமம் செய்ய வேண்டும். இவ்வாறு நாளும் தமது இல்லத்தில் அக்கினி வளர்த்து எரியோம்பி வழிபடுதலை அந்தணர் செய்து வந்தனர். "மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து" என்று ஆகவனீயம், காருக பத்தியம், தக்ஷிணாக்கினி ஆகிய மூன்று வகையான அக்கினியையும் திருமுருகாற்றுப்படை கூறுகின்றது. திருமுருகாற்றுப்படை சைவ இலக்கியங்களின் தொகுப்பான திருமுறைகளில் பதினோராம் திருமுறையிலும், சங்க இலக்கியங்களின் தொகுப்புகளில் ஒன்றான பத்துப்பாட்டிலும் ஒருங்கே இடம்பெற்றிருக்கின்றது. இவ்வாறு திருமுறைகள் சங்க இலக்கியங்கள் இரண்டிலும் இடம் பிடித்துள்ள ஒரே பாடல் கடைச்சங்க காலத்து மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரன் பாடிய திருமுருகாற்றுப்படைதான். “கற்றாங் கெரியோம்பி கலியை வாராமே செற்றார் வாழ்தில்லைச் சிற்றம்பல மேய முற்றா வெண்டிங்கள் முதல்வன் பாதமே பற்றா நின்றாரைப் ப்ற்றா பாவமே” என்று தில்லை வாழ் அந்தணர்கள் எரியோம்பி வாழ்வதை சம்பந்தர் தனது தேவாரத்தில் குறிப்பிடுகின்றார். திருஞான சம்பந்தருடைய அடியார் குழு திருநீலநக்கர் என்னும் அந்தணர் இல்லத்தில் எழுந்தருளியபோது அவர் திருஞான சம்பந்தரோடு இருந்த திருநீலகண்ட யாழ்ப்பாணர் என்னும் யாழிசை பாடும் பாணரை சம்பந்தரின் வேண்டுகோளின் பேரில் தனது இல்லத்திலேயே, அதுவும் தாம் அக்கினி வளர்த்துச் சிவ பூசை செய்யும் மேடையிலேயே இடம் கொடுத்தார். அடுத்த நாள் அவர் அக்கினி காரியம் செய்யும்போது சிவாக்கினி முன்னெப்போதும் இல்லாதவாறு பெரிதாக வலஞ் சுழித்து எழும்பி ஆசீர்வதித்தது என்று பெரிய புராணத்தில் பார்க்கின்றோம். நின்ற வன்பரை நீலகண் டப்பெரும் பாணர்க் கின்று தங்கவோ ரிடங்கொடுத் தருள்வீ ரென்ன நன்று மின்புற்று நடுமனை வேதியின் பாங்கர்ச் சென்று மற்றவர்க் கிடங்கொடுத் தனர்திரு மறையோர் ஆங்கு வேதியி லறாதசெந் தீவலஞ் சுழிவுற் றோங்கி முன்னையி லொருபடித் தன்றியே யொளிரத் தாங்கு நூலவர் மகிழ்வுறச் சகோடயாழ்த் தலைவர் பாங்கு பாணியா ருடனரு ளாற்பள்ளி கொண்டார் வேதமுறையில் இவ்வாறு அக்கினிஹோத்திரம் செய்யும் வழமை இப்போது இல்லையென்னும் அளவுக்கு அருகிவிட்டாலும் ஆங்காங்கு ஒவ்வொரு வேதியர் இன்னமும் இதை நாளும் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். நாம்தான் கண்டு கொள்வதில்லை. நாம் இப்போது சம்பந்தர் பாடிய "வேதவேள்வியை நிந்தனை செய்துழல் ஆதமில்லி யமணொடு தேரர் " போலாகிவிட்ட சைவர்கள் அல்லவா? இப்போதும் தமது இல்லங்களில் அல்லது ஆலயங்களில் நாளாந்தம் அக்கினிஹோத்திரம் செய்யும் வழமை உடைய அந்தணப் பெருமக்கள் ஆங்காங்கு இலை மறை காயாக இருக்கத்தான் செய்கிறார்கள்; நாம்தான் இவர்களைக் கண்டுகொள்வதில்லை. . அக்கினிஹோத்திரம் செய்யும் அந்தணன் இறக்கும்பொழுது அவனுடன் அவனுடைய அக்கினிஹோத்திர வழிபாட்டுப் பொருட்கள் எல்லாவற்றையும் தகனம் செய்யவேண்டும் என்பது விதி

புராணங்கள் பொய்யா?

புராணங்கள் எமது சைவத்தின் கருவூலங்கள். இன்றைய விஞ்ஞான அண்டவியல் உண்மைகளுக்கு ஒத்துப்போகின்ற சைவ சமயத்தின் கால விபரங்களையும், அண்டவியல் விவரணங்களையும், மீண்டும் மீண்டும் தோன்றி நின்று ஒடுங்கும் அண்டங்களையும். இவற்றை நடைமுறைப்படுத்துகின்ற பல்வேறு பிரம்ம, விஷ்ணு, உ,ருத்திர தேவர்களையும் பற்றிய விளக்கமும், அறிவும், உணர்வும் இல்லாமல் வெறுமனே புராணங்கள் பொய் என்றும், புழுகு என்றும், ஆரியர் கட்டி விட்ட கதை, என்றும் பாமர மக்களைப் பயங்காட்டும் உத்தி என்றும் கூறி அலைந்து சைவத்தின் பெயரால் சைவத்தை நசிக்காமல் காப்போமாக) சைவம் கூறும் புரணாங்கள் பதினெட்டு. இவை வட மொழியில் உள்ளவை. உப புராணங்களும் பதினெட்டு உள்ளன. இந்தப் புராணங்கள் கட்டுக்கதைகள் அல்லது புழுகு மூட்டைகள் என்று இன்று சில சைவப்பெருமக்கள் சொல்லி வருகின்றார்கள். வேறு சிலரோ "எங்கேயோ மத்திய ஆசியாவில் இருந்து வந்த ஆரியப் பிராமணர்களினால் எழுதிப் புகுத்தப்பட்டவையே இந்தப் புராணங்கள்" என்று சொல்லுகிறார்கள். இன்னும் சிலரோ என்றால் "படிப்பறிவில்லாத பாமர மக்களுக்கு பயத்தைதையும் பக்தியையும் ஊட்டுவதற்காகப் படைக்கப்பட்ட கதைகளே இந்தப் புராணங்கள்" என்று சொல்லுகின்றார்கள். வேறு சில சைவர்கள் "பதினெட்டு புராணங்களில் சிவனைப் பரமாகக் கொண்ட பத்து புராணங்கள் மட்டுமே எமக்குப் பிரமாணம்" என்றும் சொல்லுகின்றாரக்ள. இந்தக் கருத்துகள் எல்லாமாகச்சேர்ந்து எமது மக்களை ஒரு குழப்ப நிலையில் வைத்திருக்கின்றன. இதிலே எமது தனிப்பட்ட கருத்துகளும். சார்புகளும், அறிவு, ஆராய்ச்சிகளும் ஒருபக்கம் இருக்க எமது ஞானிகளும், குருமாரும், வழிகாட்டிகளும் புராணங்கள் பற்றி என்ன சொல்லியிருக்கின்றார்கள் என்று பார்ப்பதே நமக்கு தெளிவு தரும் வழிகாட்டலாக இருக்கும். 1.திருஞான சம்பந்தர்: புராணங்கள் சிவனி டம் இருந்து வந்ததாகவே எமது சைவம் கூறுகின்றது. எமது சமயகுரவர் நால்வரில் முதலாமவராகிய திருஞான சம்பந்தர் வேதங்கள் நான்கும், புராணங்கள் பதினெட்டும், வேதாங்கங்கள் ஆறும் விரித்து உரைத்தது இறைவனே என்று தமது தேவாரத்திலே கூறுகின்றார். பாதம் விண்ணோர் பலரும் பரவிப் பணிந்தேத்தவே வேத நான்கும் பதினெட்டோடு ஆறும் விரித்தார்க்கு இடம் தாதுவிண்டம் மதுவண்டு மிண்டிவரு வண்டினம் கீதம்பாடம் மடமந்தி கேட்டுகளும் கேதாரமே -சம்பந்தர் தேவாரம்- 2.கந்தபுராணம்: சைவ சித்தாந்தம் போலவே புராணங்களும் சிவனால் நந்திதேவருக்கு அருளிச்செய்யப்பட்டன. நந்திதேவர் புரணங்களை சநற்குமார்ருக்கு கூறினார். பாதராயணர் என்னும் வேதவியாசர் இவற்றை சநற்குமாரரிடம் இருந்து கேட்டு அவற்றை எழுதினார். வியாசர் எழுதிய புராணங்களை சூத முனிவர் மற்றவர்களுக்கு எடுத்துரைத்தார். இந்த விபரம் கந்தபுராணத்திலே சொல்லப்பட்டுள்ளது. நாதனார் அருள்பெறு நந்தி தந்திடக் கோதிலாது உணர்சனற் குமரன் கூறிட வாதரா யணமுனி வகுப்ப ஓர்ந்துணர் சூதன் ஓதியதுமூ வாறு தொல் கதை -கந்தபுராணம்- 3. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்; யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் தாம் எழுதிய சைவவினாவிடை இரண்டாம் புத்தகத்தில் பின் வருமாறு கூறுகின்றார். சிவபெருமான் ஆன்மாக்கள் பொருட்டு அருளிச்செய்த முதனூல்கள் எவை? வேதம், சிவாகமம் என்னும் இரண்டுமாம். வேதத்துக்கு உபாங்கமாகிய நூல்கள் எவை? புராணம், நியாயம், மீமாஞ்சை, மிருதி என்னும் நான்குமாம். புராணமாவது யாது? பரமசிவன் உலகத்தைப் படைத்தல் அழித்தல் முதலியவைகளைக் கூறும் வேத வாக்கியப் பொருள்களை வலியுறுத்தி விரித்து அறிவிப்பது. உலகத்தின் தோற்றமும், ஒடுக்கமும், பாரம்பரியங்களும், மனுவந்தரங்களும், பாரம்பரியக் கதைகளுமாகிய இவ்வைந்தையும் கூறுதலால், புராணம் பஞ்சலக்கணம் எனவும் பெயர் பெறும். இதிகாசமும் புராணத்துள் அடங்கும். 4.அருணந்தி சிவம்: இதேபோல சைவ சித்தாந்த சந்தான குரவர் நால்வரில் இரண்டாமவராகிய அருணந்தி சிவம் தாம் எழுதிய சிவஞானசித்தியாரில் "வேத ஆகமப்பொருள்களை விரித்து பின்னர் இறைவனுடைய அருளினாலே அருளாளர்கள் தனித்தனியே புராணங்கள், ஸ்மிருதிகள், கலை நூல்களை வகுத்தார்கள் என்று கூறுகின்றார். “வேத,சிவாகமங்கள் கூறும் பொருளும் இவை கூறும் பொருளும் ஒன்றே. அவ்வாறில்லை என்று சொல்லிப் பிணங்கும் பேதைகட்கு விடை கூறித் திருத்தல் இயலாது" என்றும் அழகாகக் கூறியுள்ளார். அருமறை ஆகமம் முதனூல், அவை அனைத்தும் உரைக்கையினால் அளப்பு அரிதாம் அப்பொருளை அரன் அருளால் அணுக்கள் தருவார்கள் பின் தனித்தனிதயே தாம் அறிந்த அளவில் தர்க்கமொடு உத்தரங்களினால் சமயம் சாதித்து மிருதி புராணம் கலைகள் மற்றும் எல்லாம் மெய்ந்நூலின் வழி புடையாம் அங்கம் வேதாங்கம் சுருதி சிவாகமம் ஒழியச் சொல்லுவது ஒன்று இல்லை சொல்லுவார் தமக்கறையோ சொல்லொணாதே -சிவஞான சித்தியார் 266- இதேபோல புராணங்கள் வேதங்களில் குறிப்பாகச் சொல்லப்பட்டவற்றை விரிவாக எடுத்துச் சொல்வதால் அவற்றைச் சிறப்புடைய புராணங்கள் என்று சிவஞானசித்தியாரின் இன்னொரு பாடலிலே சொல்லுகின்றார். புறச்சமய நெறிநின்றும் அகச்சமயம் புக்கும் புகல் மிருதி வழி உழன்றும் புகலும் ஆச்சிரம அறத்துறைகள் அவையடைந்தும் அருந்தவங்கள் புரிந்தும் அருங்கலைகள் பல தெரிந்தும் ஆரணங்கள் படித்தும் சிறப்புடைய புராணங்கள் உணர்ந்தும் வேத சிரப்பொருளை மிகத்தெளிந்தும் சென்றால் சைவத் திறத்தடைவர் இதிற் சரியை கிரியா யோகம் செலுத்தியபின் ஞானத்தால் சிவனடியைச் சேர்வர் - சிவஞான சித்தியார் 263- 5. புராணத்தைப் பொய் என்னும் சைவர்கள் சொல்வதை ஒப்புக்கொண்டு தேவார திருவாசகங்களில் உள்ள புராணக்கதைகளை தணிக்கை செய்து எடுத்துவிட்டால எமக்கு மிஞ்சப்போவது இப் புத்தகங்களின் வெளிப்புற அட்டைகள் மட்டுமே. உதாரணத்துக்கு மாணிக்கவாசகரின் திருவுந்தியாரை ஒருமுறை திறந்து படித்துப் பாருங்கள். இதில் உள்ள புராண வரலாற்றுக் கூற்றுகளை எடுத்துவிட்டால் அங்கு திருவுந்தியாரே இருக்காது. மேற்கூறிய வடமொழிப் பஞ்ச இலட்சண வரையறைகளுக்கு அப்பாற்பட்டு தமிழில் எமக்கு மூன்று முக்கிய புராண நூல்கள் உள்ளன. அவையாவன கந்தபுராணம், பெரியபுராணம் எனப்படும் திருத்தொண்டர் புராணம், திருவிளையாடற் புராணம் என்பனவாம், 1. கந்த புராணம்: வட மொழியில் உள்ள ஸ்காந்த புராணத்துக்கு ஆறு சம்கிதைகள் உள்ளன.இவற்றில் ஒன்றாகிய சங்கர சம்கிதையில் பன்னிரண்டு கண்டங்கள் உள்ளன. அவ்ற்றில் ஒன்றாகிய சிவரகசிய கண்டத்தின் ஏழு கண்டங்களில் முதல் ஆறு கண்டங்களைத் தமிழில் கந்த புராணமாகப் பாடினார் கச்சியப்ப சிவாச்சாரியார்.இதில் பத்தாயிரத்து முந்நூற்று நாற்பத்து ஐந்து பாடல்கள் உள்ளன. யாழ்ப்பாணச் சைவ சித்தாந்த மரபுக்கு அடித்தளமாய் அமைந்தது இந்த கந்தபுராணம். 2. பெரிய புராணம்: இது அறுபத்து மூன்று நாயன்மார்களைப்பற்றிச் சேக்கிழார் பெருமானால் பன்னிரண்டாம் நூற்றாண்டில் பாடி அரங்கேற்றப்பட்டது. சிவனால் " உலகெலாம்" என்று அடியெடுத்துக் கொடுக்கப்பட்ட பெருமைக்கு உரியது. திருமுறைகளில் ஒன்றாக வகுக்கப்பட்டு பன்னிரண்டாம் திருமுறையாக உள்ளது. தமிழில் இருந்து வடமொழிக்கு மொழிபெயர்க்கப்பட்ட புராணம் இது. இது வடமொழியில் "உபமன்னியு பக்த விலாசம்” என்னும் பெயரில் உள்ளது. திருவண்ணாமலை இரமணாசிரம மரபில் படிக்கப்பட்டு வருவது இந்த வடமொழிப் பெரியபுராண நூல். 3. திருவிளையாடற் புராணம்: இது மதுரை சோமசுந்தரேஸ்வரர் கோவிலின் ( மீனாட்சி அம்மன் கோவில்) தல புராணமாகும். அங்கு சிவன் புரிந்த அறுபத்து நான்கு திருவிளையாடல்களைக் கூறுவது. இதிலே திருஞானசம்பந்தர் மற்றும் மாணக்கவாசகரின் வரலாறுகளும் உள்ளன. புராணங்களை புனை கதை என்போரும், புழுகு மூட்டை என்போரும், அறிவிலிகளுக்காக ஆக்கப்பட்ட பயங்காட்டும் கதைகள் என்போரும், சைவத்துக்கு ஒவ்வாதன எனபோரும், சைவர்கள் பதினெட்டுப்புராணங்களில் சிலவற்றைத் தள்ளி சிலவற்றைக் கொள்ள வேண்டும் என்போரும் கூறும் கூற்றுகள் சிற்றறிவுடைய எம்மில் சிலரின் தனிப்பட்ட சமூக, கல்வி, கலாச்சார ஊறல்களுக்கும், இன, மொழி, பிரதேச, அரசியல் சார்புகளுக்கும் இனிப்பாகவும், உவப்பாகவும், ஏறபுடையதாகவும் இருந்தாலும் எமது சமய நூல்களின் கருத்துகளுக்கும், சைவசமய குரவர்களின் வார்த்தைகளுக்கும் மட்டுமல்லாது இன்றும் விரிவடைந்துகொண்டு செல்லும் அண்டவியல் விஞ்ஞான அறிவுக்கும்கூட முற்றிலும் முரணாகவும் புறம்பாகவுமே உள்ளன. எமக்குப் பிரமாணம் இறையிடம் இருந்து காலம் காலமாக மீண்டும் மீண்டும் வெளிப்படுகின்ற வேதங்களும் ஆகமங்களும் இறை அருளார்களால் வெளிப்படுகின்ற திருமுறைகளும் மெய்கண்ட சாத்திர நூல்களுமேயன்றி இன்று வந்து புகுந்துள்ள புதுப்பிரசாரகர்களின் முரண்பட்ட மயக்குகின்ற புத்துரைகள் அல்ல. புராணங்கள் எமது சைவத்தின் கருவூலங்கள். இன்றைய விஞ்ஞான அண்டவியல் உண்மைகளுக்கு ஒத்துப்போகின்ற இந்து சமயத்தின் கால விபரங்களையும், அண்டவியல் விவரணங்களையும், மீண்டும் மீண்டும் தோன்றி நின்று ஒடுங்கும் அண்டங்களையும். இவற்றை நடைமுறைப்படுத்துகின்ற பல்வேறு பிரம்ம, விஷ்ணு, உருத்திர தேவர்களையும் பற்றிய விளக்கமும், அறிவும், உணர்வும் இல்லாமல் வெறுமனே புராணங்கள் பொய் என்றும், புழுகு என்றும், ஆரியர் கட்டி விட்ட கதை, என்றும் பாமர மக்களைப் பயங்காட்டும் உத்தி என்றும் கூறி அலைந்து சைவத்தின் பெயரால் சைவத்தை நசிக்காமல் காப்போமாக. Last Updated on Wednesday, 08 August 2012 15:37 EXPOSITION OF TRUTH Portrait of a helper Afterlife Why I am Not a Christian Siva Ratri What are those eighteen languages? SIVA JNANA BODHAM SIVA JNANA SIDDHIYAAR BRAHMANDA PURANAM THAYUMANAVAR YOGAR SWAMI A CURIOUS COURT CASE THE MAHA RISHI RITUALS BHIKSHA BAGAVAT GITA BHAJA GOVINDAM BRAHMINS THE CRY BABY ARUKU TEN STEPS ANSWERS SIVA LINGA HINDU TIMELINE Category SIDDHANTA QUESTIONS SCIENCE HISTORY ASTROLOGY TEMPLES STOTRAS PICTURE GALLERY KIDS FILES VIDEO FILES AUDIO FILES YOUTH FILES ARCHIVE YOGA STORIES IN ENGLISH WHO IS WHO COMMENTS BEGINNERS TREASURE IN ENGLISH LINKS TEXTS SCRIPTURES FESTIVALS Copyright © 2009 knowingourroots.com. All Rights Reserved.

இறைவனுடைய சரீரங்கள்

உயிர்களாகிய நாம் அனாதியாகவே மலங்கள் என்னும் ஆன்மீக அழுக்கினால் பீடிக்கப்பட்டவர்கள். ஆதலினால் பாசமாகிய ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்களில் ஒன்றான மாயையில் இருந்து நமக்கு உடம்புகள் வந்து பொருந்துகின்றன. மாயை என்பது இருளிலே கயிற்றைப் பாம்பாகக் காணும் மயக்கமாகிய இல் பொருள் அல்ல. எமது உலகங்கள், உடல்கள், மனம் போன்ற கருவிகள் மற்றும் அனுபவங்களுக்கெல்லாம் மூலப்பொருளாய் (Primordial Matter), முப்பத்தாறு தத்துவங்களுக்கும் மூலமாய் இருக்கும் உள் பொருளே மாயை. இறைவன் இயல்பாகவே மலங்கள் இல்லாதவன்; ஆதலினால் மலங்கள் மூன்றனுள் ஒன்றாகிய மாயையில் இருந்து அவனுக்கு உருவம் அமைவதில்லை. “பதியினைச் சென்றணு காப்பசு பாசம்… - திருமந்திரம் பாடல் 115-. But the Pasu-Pasa nears not the Pati supreme -Thiru Manthiram Song 115- இறைவன் தத்துவாதீதன்; அதாவது பஞ்ச பூதங்கள் முதல் நாதம் வரையான முப்பத்தாறு தத்துவங்களுக்கும் அப்பாலானவன். இறைவனுக்கு நம் போன்ற பஞ்ச பூத சரீரம் இல்லை. இறைவனுடைய சரீரங்கள் மாயையினால் ஆனவை அல்ல; மாயா சம்பந்தம் இல்லாதவை. மாயையானது பாசமாகிய மூன்று மலங்களுள் ஒன்றாகும். இறைவன் இயல்பாகவே பாசங்களில்நின்றும் நீங்கியவன். இது இறைவனின் எண்குணங்களில் ஒன்று. தூய உடம்பினன் ஆதல் இறைவனின் எண் குணங்களில் மற்றொன்று. “கோள்இல் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை” என்று இறை எண் குணங்கள் உடையவன் என்று தமிழ் மறையாகிய திருக்குறள் கூறுகின்றது. 1. சச்சிதானந்த சொரூபம்: “ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமிலாதானுக்கு… - திருவாசகம்- இறைவனுக்கு சொரூப நிலை என்னும் சிறப்பு நிலையில் உருவம் இல்லை. இந்நிலையில் அவன் சச்சிதானந்த சொருபி. சத்-சித்- ஆனந்தமே வடிவானவன். சத் என்பது என்றும் உள்ள நிலையான பொருள். சித் என்பது முற்றறிவு என்னும் பேரறிவு. “அதுஇது என்னாது அனைத்து அறிவு ஆகும் அது இது என்றறிந்து உந்தீபற அவிழ்ந்த சடையான் என்று உந்தீபற” – திருவுந்தியார்- “அந்தமொன்றில்லா ஆனந்தம் பெற்றேன்” - திருவாசகம்-. ஆனந்தம் என்பது எல்லையில்லாத இன்பம் என்னும் பேரின்பம். இது நிலையாமை, துன்பம் என்னும் இரு எல்லைகள் அல்லது வரையறைகள் அற்ற பேரின்பம். இது இறைவனுக்கே உரியது. நாம் அனுபவிக்கும் இன்பங்கள் வினை வழி வருவன. அவற்றுக்கு முன் சொன்ன இரண்டு வரையறைகளும் உள்ளன. ஆனால் ஆனந்தம் என்பது வினை வழி வாராது; முத்தி நிலையில் இறை தர ஆன்மா அனுபவிப்பது. இதற்கு எதிர் நிலை இல்லை. அதனால்தான் ஆனந்தம் என்ற சொல்லுக்கு எதிர்ச்சொல் தமிழ் மொழியில் கிடையாது. பல்கலை ஆகமம் வேதம் யாவையினும் கருத்துப் பதி பசு பாசம் தெரித்தல், பதி பரமே, அதுதான் நிலவும் அரு உரு இன்றிக், குணம் குறிகள் இன்றி, நின்மலமாய், ஏகமாய், நித்தம் ஆகி, அலகில் உயிர்க்கு உணர்வு ஆகி, அசலம் ஆகி, அகண்டிதம் ஆய், ஆனந்த உருவாய், அன்றிச் செலவு அரிதாய்ச், செல்கதியாய், சிறிதாகி, பெரிதாய்த், திகழ்வது தற்சிவம் என்பர், தெளிந்து ளோரே -பதியின் சொரூப இலக்கண்ம்-சிவப்பிரகாசம் பாடல் 13 – அங்கு இங்கு எனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி அருளொடு நிறைந்தது எது? தன் அருள் வெளிக்குளே அகிலாண்ட கோடி எல்லாம் தங்கும்படிக்கு இச்சை வைத்து, உயிர்க்கு உயிராய்த் தழைத்தது எது? மனவாக்கினிலே தட்டாமல் நின்றது எது? சமயகோடிகள் எலாம் தம் தெய்வம் எம் தெய்வம் என்று எங்கும் தொடர்ந்து எதிர்வழக்கு இடவும் நின்றது எது? எங்கணும் பெருவழக்காய் யாதினும் வல்ல ஒரு சித்து ஆகி, இன்பமாய், என்றைக்கும் உள்ளது எது? மேல் கங்குல்பகல் அறநின்ற எல்லை உளது எது? கருத்திற்கு இசைந்தது அதுவே; கண்டன எல்லாம் மோன உருவெளியது ஆகவும் கருதிஅஞ்சலிசெய்குவாம் - தாயுமானார் பாடல்- What is it that fills the cosmic units and the firmament with all-encompasing effulgence, complete bliss, perfect love, omnipotence and illimitable immensity overspreading with a presence in such a manner as to dissuade one from uttering that it is neither here nor there? What is it that by its will suatain innumerate number of worlds, life of life and its essence in the vastness of its grace? What is it that is measureless bty the mind unknowable by speech? What is it that diverse faiths contend with one another claiming that it is 'our divinity' and 'my divinity'? What is that in this innumerable dispute, predominates as ascendant " All powerful Spreme Intellect and Eternal joy? Besides, What is it on which neither night nor forgetfulness falls and without which the day or rememberance does not dawn? It is the Almighty that accords with the thoughts of one and all. Hence, let us deem all phenomina as this image we all see and as the still sweep of His silence by meditating on Him and paying Him obeisance. - Song by St. Thaayumaanar (1705-1743AD)- 2. அத்துவா சரீரம்; அத்துவாகள் ஆறையும் (கலை, தத்துவம், புவனம், வன்னம், பதம், மந்திரம் ) பஞ்சகலைகளையும் (நிவிருத்திகலை, பிரதிஷ்டாகலை, வித்யாகலை, சாந்திகலை, சாந்தியதீதகலை) தனது சரீரமாக இறைவன் கொள்கிறான். மந்திரமே சோரியா, வான்பதமே மாமுடியாத், தொந்தமுறும் வன்னமே தொக்காகப், பந்தனையா லொத்த புவனத்துருவே யுரோமமாத், தத்துவங்களே சத்ததாதுவா, வைத்த கலையை யவயவ மாக, காட்டும் அத்துவாவின் நிலையே வடிவமாய் நின்றோன் -குமரகுருபர சுவாமிகளின் கந்தர் கலி வெண்பா- அவயவங் கலைகளாகும், ஆகிய புவனரோமம், சுவையுறு துவக்கு வன்னஞ், சோரிமந்திர மதாகும், தவமுறுபத நரம்பு, தத்துவந் தாதுவாகும், சிவமுயர் சதாசிவர்க்குச் சிறந்த வாறுஉறுப்புத் தானே -அபியுத்தர் பாடல்- அத்துவா மூர்த்தி ஆக அறைகுவது என்னை? என்னின் நித்தனாய் நிறைந்து அவற்றின் நீங்கிடா நிலைமையானும், சித்துடன் அசித்திற்கு எல்லாம் சேட்டிதன் ஆதலானும், வைத்தவாம் அத்துவாவும் வடிவு என மறைகள் எல்லாம் -சிவஞானசித்தியார் பாடல் 76- ஓம் ஸ்ரீ ஷடத்வாதீத ரூபிண்யை நம; ஆறு அத்துவாக்களையும் கடந்த வடிவுடையவளுக்கு நமஸ்காரம் - ஸ்ரீ ல்லிதா ஸகஸ்ரநாமம் 991- அத்துவாக்கள் பற்றிய மேலதிக விளக்கத்துக்கு எமது ஆத்மீகக்கணக்கு பாடம் ஆறு அத்துவாக்கள் பார்க்க. குறிப்பு; இது சைவசித்தாந்த நூல்களின் மரபிலிருந்து விலகி நின்று அளிக்கப்பட்ட விளக்கம். 3. சைதன்ய சரீரம்; சிவமானது குருவினுடைய ஆன்மாவை தனது சரீரமாகக்கொண்டு அருள் புரியும் போது அது சைதன்ய சரீரம் எனப்படும். “…….கோகழி ஆண்ட குரு மணிதன் தாள் வாழ்க - திருவாசகம்- சிவபுராணம்- “……குருவாய் வருவாய் அருள்வாய் குகனே” - கந்தரலங்காரம் பாடல் 51- “குருவே சிவமெனக் கூறினன் நந்தி” - திருமந்திரம் பாடல் 1581- “ஆனந்தம் பெற்றோர் அருட் குருவே ஈசன் என்பர்” - துகளறு போதம் பாடல் 88- 4. மந்திர சரீரம்; இறைவன் வேத மந்திரங்களை தனது சரீரமாகக் கொண்டவன். “வேத மந்த்ர சொரூபா நமோ நம” - நாத விந்து காலாதி என்று தொடங்கும் திருப்புகழ் பாடல்- இறைவன் பஞ்சப் பிரம்ம மந்திரங்களே சரீரமாகக் கொண்டு வருவான். பஞ்சப்பிரம்ம மந்திரங்கள் தீட்சையில் வழங்கப்படுவன. பதியெனவே சொலற்குஉரிய பரமன் மந்திர ஆன்மா, பஞ்சமந்திர தேகி, மந்திரங்கட்கு எல்லாம் அதிபதி -சர்வஞானோத்தர ஆகமம், பாடல் 08- மந்திரான்மா- மந்திரங்களைச் சரீரமாகக் கொண்டு அவற்றின் உயிராக நிற்பவன் பஞ்சமந்திர தேகி- அம் மந்திரங்களுக்குள்ளும் சிறந்து விளங்கும் பஞ்சப்பிரம்ம மந்திரங்களை தனது தேகமாக உடையவன். ஓம் ஈசானாய நமஹ: ஓம் தற்புருஷாய நமஹ; ஓம் அகோராய நமஹ: ஓம் வாமதேவாய நமஹ; ஓம் சத்தியோசாதாய நமஹ; என்னும் ஐந்து பஞ்சப்பிரம்ம மந்திரங்களைத் தனது திருமேனியாகக் கொண்டவன். - தூத்துக்குடி பொ. முத்தையாபிள்ளை உரை- மந்திரம் அத்து வாவின் மிகுத்து வடிவம் ஆகத் தந்தது என் அரனுக்கு? என்னின் சகத்தினுக்கு உபா தானங்கள் விந்து மோ கினி மான் மூன்றாம்; இவற்றின் மேலாகி விந்துச் சிந்தை ஆர் அதீதம் ஆன சிவசத்தி சேர்ந்து நிற்கும் -சிவஞானசித்தியார் பாடல் 77- சுத்தம் ஆம் விந்துத் தன்னில் தோன்றிய ஆதலானும் சத்திதான் பிரேரித் துப்பின் தான் அதிட்டித்துக் கொண்டே அத்தினால் புத்தி முத்தி அளித்தலால் அரனுக்கு என்றே வைத்த ஆம்- மந்திரங்கள் வடிவு என மறைகள் எல்லாம் -சிவஞானசித்தியார் பாடல் 78- மந்திரம் அதனில் பஞ்ச மந்திரம் வடிவமாகத் தந்திரம் சொன்னவாறு இங்கு ஏன்? எனில் சாற்றக் கேள் நீ முந்திய தோற்றத் தாலும் மந்திர மூலத்தாலும் அந்தம் இல் சத்தி ஆதிக்கு இசைத்தலும் ஆகும் அன்றே -சிவஞான சித்தியார் பாடல் 79- 5. திருவைந்தெழுத்து; சிதம்பரத்திலுள்ள ஞானமா நடராசப்பெருமானுக்கு பஞ்சாக்கரமே திருமேனி அல்லது சரீரம். அவர் பஞ்சாக்கர வடிவானவர். அவருக்கு பூசையில் ஆவாகனம் இல்லை. இந்த நடராச மூர்த்தம் இருபத்தைந்து மகேசுவர மூர்த்தங்களில் ஒன்றாகிய சபாபதியாகிய நடராசர் அல்ல. இவருக்கு பூசையில் ஆவாகனம் உண்டு. நடராச மூர்த்தத்தின் திருவாசி ஓம் என்னும் ஓங்கார மந்திரமாகும். நற்றவத்தோர் தாம்காண நாதாந்தத்து அஞ்சு எழுத்தால் உற்று உருவாய் நின்றுஆடல் உள்ளபடி பெற்றிட நான் விண்ணார் பொழில் வெண்ணெய் மெய்கண்ட நாதனே தண்ணார் அருளாலே சாற்று. எட்டும் இரண்டும் உருவான லிங்கத்தே நட்டம் புதல்வா நவிலக்கேல்- சிட்டன் சிவாயநம என்னும் திருஎழுத்து அஞ்சாலே அவாயம்அற நின்று ஆடுவான் ஆடும் படி கேள்நல் அம்பலத்தான் ஐயனே நாடும் திருவடியிலே நகரம் - கூடும் மகரம் உதரம் வளர்த்தோள் சிகரம் பகரும்முகம் வாமுடியப் பார் சேர்க்கும் துடிசிகரம் சிக்கனவா வீசுகரம் ஆர்க்கும் யகரம் அபயகரம் -பாரக்கில் இறைக்கு அங்கி நகரம் அடிக்கீழ் முயலகனார் தங்கும் மகரம்அது தான். ஓங்காரமே நல் திருவாசி உற்றுஅதனில் நீங்கா எழுத்தே நிறைசுடராம்- ஆங்காரம் அற்றார் அறிவர் அணி அம்பலத்தான் ஆடல்இது பெற்றார் பிறப்பு அற்றார் பின். - உண்மைவிளக்கம் செய்யுள்- 30-40-. சத்தித் திருமேனி: இறைக்கு அதன் சத்தியே திருமேனி. நாயகன் எல்லா ஞானத் தொழில்முதல் நண்ண லாலே காயமோ மாயை யன்று; காண்பது சத்தி தன்னால் - சிவஞான சித்தியார்- சத்தியாவது அருள். அருளது சத்தியாகும் - சிவஞான சித்தியார்-. உரு அருள்; குணங்களோடும் உணர்வு அருள் உருவில் தோன்றும் கருமமும் அருள்; அரன்றன் கரசர ணாதி சாங்கம் தரும்அருள்; உபாங்கம் எல்லாந் தான் அருள்; தனக்கு ஒன்று இன்றி அருள்உரு உயிருக்குஎன்றே ஆக்கினன், அசிந்தன் அன்றே -சிவஞான சித்தியார் 67- அரன்றன் உருவருள்- இறைவனது உருவங்கள் எல்லாம் அவனது அருளாகிய சத்தியாகும். அசிந்தன்- சிந்தனைக்கு எட்டாதவன் இறைவன் உருவங் கொள்ளுதல் தனக்காக அல்ல; உயிர்களாகிய நமக்காகவே. இது இறைவனது அருள். ஆதலால் இறைவனது திருமேனியும், அவற்றின் அங்கங்களும், அவற்றிலுள்ள படைக்கலம், ஆடை அணிகலன்களும், செயல்களும் எல்லாம் அருளேயன்றி வேறில்லை. உமையலாதுருவமில்லை - நாவுக்கரசர் தேவாரம், திருவையாற்றுப்பதிகம்- ஆகாஸ சரீரம் பரஹ்ம ஆகாயத்தைச் சரீரமாக உடையது பிரம்மம் -தைத்திரீய உபநிடதம், சிக்ஷாவல்லி. 6-2- இங்கு ஆகாயம் என்றது பராசத்தியை - காசிவாசி செந்திநாதையர் விளக்கம் யஸயஸா பரமாதேவீ சக்திராகாச ஸம்ஞிதா எவருடைய பரமசத்தி உண்டோ. அந்த்ச் சத்தியே ஆகாசம் எனப்படுவது. - கூர்ம புராணம், உத்தர பாகம்- 36ம் அத்தியாயம்- சிதம்பரத்தின் ஆகாசம் சித்து (ஆதி அந்தம் அற்றது; பூரண அறிவு) இங்கு ஆகாசம் என்பது ஆன்மாவில் உள்ள இதயத்தாமரையின் வெளியாகிய ஆகாசமாகிய சிற்றம்பலம் ஆகும். இதுவே சத்தி. இங்கு இறையின் ஞான நடனம் நமது மலநாசத்துக்காக நடைபெறுகின்றது. மாயை தனைஉதறி, வல்வினையைச் சுட்டு,மலம் சாய அமுக்கிஅருள் தான்எடுத்து - நேயத்தால் ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான்அழுத்தல் தான்எந்தை யார்பரதம் காண் - ஞான நடனம், உண்மை விளக்கம்- 6. உலகத் திருமேனி; இந்த அண்டங்களாகிய உலகையே தனது உருவாகக் கொண்டவன் இறைவன். உலகமேஉருவ மாக யோநிகள் உறுப்ப தாக இலகுபேர் இச்சாஞான கிரியைஉள் கரணா மாக அலகிலா உயிர்கட் கெல்லாம் அறிவினை யாக்கி ஐந்து நலமிகு தொழில்க ளோடும் நாடகம் நடிப்பன்நாதன் -சிவஞான சித்தியார் பரபக்கம் பாடல் 237- இறைவன் இருநூற்று இருபத்து நான்கு உலகையும் தன் உடலாகவும் எண்பத்து நூறாயிரம் பிறப்பு வகைகளைத் தன் உறுப்புகளாகவும் இச்சை ஞானம் கிரியைகளைத தனது உட்கரணமாகவும் கொண்டு அளவிலா உயிர்களுக்கு பொருள்களை அறியும் அறிவை உண்டாக்கி நலம் மிகுந்த ஐந்தொழில்களையும் மேற்கொண்டு நாடகத்தை நடிப்பன். அண்டம் உருவாக அங்கம் சராசரமாய்க் கண்ட சத்தி மூன்று உட்கரணாமாய்த் தொண்டுபடும் ஆவிப் புலனுக்கு அறிவளிப்ப ஐந்தொழிலும் மேவித் தனிநடத்தும் எங்கோவே - குமரகுருபர சுவாமிகளின் கந்தர் கலி வெண்பா- 7. பஞ்ச சரீரங்கள்; ஆலயத்தைந்து மேனி அவனியில் ஐந்து மேனி மேலகத் தைந்து மேனி மெய்யெழுத் தைந்து மேனி நீலகத் தைந்து மேனி நுண்ணிறம் ஐந்து மேனி சாலஉட் கரண மேனி சகலமெய் யிறைவற் காணே -சீர்காழி தத்துவப் பிரகாச சுவாமிகளின் தத்துவப் பிரகாசம்- 7.1 இறைக்கு சிவாலயத்தில் ஐந்து சரீரங்கள் விமானம் - தூல லிங்கம் பீடம் - சூக்கும லிங்கம் அதனுள் இருக்கும் விந்து, நாதம் - பிராண லிங்கம் பலிபீடம் - பத்திர லிங்கம் உற்சவ மூர்த்தி - மூர்த்தி லிங்கம் 7.2 இதேபோல பஞ்ச பூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஐந்தும் பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேசுரன், சதாசிவன் என்னும் இறையின் ஐந்து வடிவங்களாம். மண்ணோடு நீர் அனல்காலோடு ஆகாயம் மதிஇரவி எண்ணில்வரும் இயமானன் -சம்பந்தர் தேவாரம்- இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி இயமானனாய் எறியும் காற்று மாகி அருநிலைய திங்களாய் ஞாயி றாகி ஆகாசமாய் அட்ட மூர்த்தி யாகி - திருநாவுக்கரசர் தேவாரம்- 7.3 இதேபோல மேலகத்தில் இந்திரன், சந்திரன், சூரியன், இயமானன், வருணன் என் ஐந்து வடிவங்கள் இறைவனுக்காம். 7.4 முன்னர் சொன்னதுபோல பஞ்சாக்கரத்தின் ஐந்து எழுத்துகளான ந ம சி வ ய ஐந்தும் இறைவனின் திருமேனிகளாம். 7.5 வேதம், புராணம், மந்திரம், தந்திரம் ( தந்திரமாவது நீறு- சம்பந்தர் தேவாரம்; இங்கு தந்திரம் எனபது ஆகமம்), உபநிடதம் என ஐந்தும் இறைவனை திருமேனிகளே. 7.6 பஞ்ச பூதங்களின் ஐந்து வண்ணங்களாகவுள்ள வெள்ளை, கறுப்பு, சிவப்பு, பச்சை (பசும்பொன் என்றும் கூறுவர்) நீலம் ஐந்தும் இறைவன் திருமேனிகளாம். நிறங்க ளோர் ஐந்துடையாய் - மாணிக்கவாசகரின் சிவபுராணம். பொன்பார்; புனல் வெண்மை; பொங்கும் அனல் சிவப்பு; வன்கால் கருமை வளர்வான் தூமம் - என்பார் - உண்மை விளக்கம்- 7.7 அந்தக்கரணங்களாகிய மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியவற்றுடன் புருடனும் ( வித்தியா தத்துவங்களில் ஒன்று; காலம், நியதி, கலை, வித்தை, அராகம் ஆகிய ஏனைய வித்தியா தத்துவங்கள் ஐந்துடன் கூடிய ஆன்மாவே புருடன் எனப்படும்) சேர்ந்த ஐந்தும் பிரணவ ரூபம் ஆகையால் இறையின் திருமேனிகளாகின்றன.

நாலு வாக்கு

வாக்குகள் மிக நுண்ணிய நமக்கே தெரியாத நிலையில் உள்ள சூக்குமையிலிருந்து, எல்லோருக்கும் கேட்கும் மற்றவர்களுக்கு ஒலி வடிவமான வைகரி வரையும் நான்கு நிலைகளுக்கூடாக விருத்தியாகி வெளிப்படுகின்றன. இவற்றை சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி என எமது சமய நூல்கள் கூறுகின்றன. சூக்குமை மிகவும் நுண்ணியது; புலப்படாதது. வைகரி எமக்கும், மற்றவர்களுக்கும் செவியில் கேட்பதாய் வெளிப்படுவது. பைசந்தி, மத்திமை என்பன இவ்விரு நிலைகளுக்கும் இடைப்பட்ட விருத்தி நிலைகளாகும். புதிய பெயர்களைப்பார்த்து பயந்துவிட வேண்டாம். இலகுவாக விளங்கிக் கொள்ளலாம். 1. சூக்குமை; சூக்குமை என்பது பெயர் குறிப்பிடப்படுவது போல சூக்குமமாக மற்றவர்களுக்கு மட்டுமல்ல எமக்குக்கூட வெளிப்படாமல் இருக்கும் நிலை. இந்நிலையில் வாக்கு மூலாதாரத்தில், பிந்து தத்துவத்தில் இருக்கும். ஆனால் இந்நிலையில் வாக்கு நமக்கே தெரியாமல் இருப்பதால்தான் இதை சூக்குமை வாக்கு என்பர். 2. பைசந்தி; வெளிப்படாத நிலையில் மூலாதாரத்தில் உள்ள சூக்குமை வாக்கு அங்கிருந்து உந்தித்தானத்தை அடையும்போது பைசந்தி எனப்படுகின்றது. இந் நிலையில் வாக்கு என்னவென்று எமக்குத் தெளிவாகத் தெரியாவிட்டாலும் ஏதோ உருவாகின்றது என்று உள்ளுணர்வாக உணரலாம். இது மயில் முட்டையில் உள்ள குஞ்சின் வண்ணங்கள் இருப்பதுபோல தெளிவில்லாமல் இருக்கும் வாக்கு நிலை ஆகும். இது எமது வாக்கு எமக்கே தெளிவாகப் புலப்படாத நிலையில் உள்ள நிலை. 3. மத்திமை; என்பது பெயர் குறிப்படுவது போல கேட்கும் ஒலி மூலம் வெளிப்படும் வாக்குக்கும், முற்றிலுமே வெளிப்படாமல் இருக்கும் சூக்குமை வாக்குக்கும் இடைப்பட்ட நிலை ஆகும். இதற்கு உதான வாயுவின் தொழிற்பாடு உதவும். இந்நிலையில் வாக்கு கண்டத்தில் மெல்லோசையாக செவியில் கேட்கப்படாததாய் ஆனால் எமது மன உணர்விற்கு கேட்கக்கூடியதாய் இருக்கும். எமது எண்ண ஓட்டங்கள் எல்லாம் இவ் வகை மத்திமை வாக்கே. இது மானஸம் என்றும் சொல்லப்படும். 4. வைகரி; இந்நிலையில் வாக்கு காதுக்கு கேட்கத்தக்க ஓசை பொருந்தி வெளிப்படும் நிலையாகும். இந்நிலையில் பிராண வாயுவின் தொழிற்பாடு இதற்கு உதவும். மற்றவர்கள் காதுகளுக்கு கேளாமல் தனக்கு மட்டும் கேட்கக்கூடியதாக மென்மையாக வெளிப்படும் வாக்கு சூக்கும வைகரி என்று கூறப்படும். தமது காதுக்கு மட்டுமல்லாது மற்றவர்களுக்கும் கேட்கக்கூடியதாக வெளிப்படும் வாக்கு தூல வைகரி எனப்படும். தூல என்றால் புலப்படுகின்ற என்று பொருள். (ஒப்பீடு- தூல சரீரம் என்பது புலப்படுகின்ற எமது ஊன சரீரத்தைக் குறிக்கும்). “பரா ப்ரத்யக் சிதிரூபா பச்யந்தி பரதேவதா மத்யமா வைகரி ரூபா பக்த மானஸ ஹம்ஸிகா” என்று லலிதா சகஸ்ரநாமம் அம்பிகையே வாக்கு ரூபத்தில் விளங்குவதாகச் சொல்கிறது. எமது பூலோகத்துக்கு மேலே உள்ள புவனங்களில் வசிப்போர் நம்மைப்போல வைகரி வாக்கில் பேசுவதில்லை. மேலே செல்லச்செல்ல வாக்கு நுண்மைப்பட்டுக்கொண்டே செல்லும். உயர்ந்த புவனங்களில் வசிப்போர் மத்திமை வாக்கிலும் அதற்கும் மேலே உள்ள புவனங்களில் உள்ளவர்கள் பைசந்தி வாக்கிலும் தொடர்பாடல் செய்வார்கள். சில யோகிகளும் ஞானிகளும் இவ்வுலகிலேயே இருந்தாலும் மத்திமை முதலிய சூக்கும வாக்குகளை அறியும் ஆற்றலும் அவற்றின் மூலம் தொடர்பாடல் செய்யும் ஆற்றலும் வாய்க்கப் பெற்றிருப்பார்கள். மற்றவர்களுடைய வார்த்தைகள் வெளிவர முன்னர் சூக்குமை, பைசந்தி மற்றும் மத்திமை நிலையில் உள்ளபோதே வாக்கை உணரும் சக்தி வாய்ந்தவர்கள். இவர்கள்தான் நாம் நினைப்பதை அல்லது சொல்ல இருப்பதை உணர்ந்து சொல்லுபவர்கள். விவேகானந்தர் ஒருமுறை இராமகிருஷ்ணருடன் இருக்கும்பொழுது "இவர் உண்மையில் இறை அவதாரம் என்று இப்போது இவர் சொன்னாரானால் நான் அதை ஏற்றுக்கொள்ளுவேன்" என்று தனது மனதில் நினைத்தார். உடனே அருகிலிருந்த இராமகிருஷ்ணர் "எவன் இராமனாகவும் கிருஷ்ணனாகவும் அவதரித்தானோ அவனே இப்போது இந்த இராம கிருஷ்ணனாகப் பிறந்திருக்கிறான்" என்று கூறியதாக விவேகானந்தர் வரலாற்றில் இருக்கின்றது. இது மற்றவர்களின் வாக்கை அது மத்திமை நிலையிலே இருக்கும்போதே உணரக்கூடிய சித்தியாகும். ஆரூடம் சொல்லும் நபர்களுக்கும் இவ்வகையான ஆற்றல் உள்ளது. அவர்கள் நீங்கள் மனதில் நினைப்பதை வைத்து ஆரூடம் சொல்லிவிடுவார்கள். பின்னர் அது நடப்பதும், நடக்காததும் வேறு விடயம். இதேபோல சில யோகிகளும், ஞானிகளும், சில வேளைகளில் சித்து மந்திரவாதிகளும் கூட மற்றவர்களது வாக்கு வெளிப்படு முன்னரே பைசந்தி அல்லது மத்திமை நிலையில் அதைக் கட்டுப்படுத்தி நிறுத்த முடியும். இது வாக்குத்தம்பனம் எனப்படும். தம்பனம் என்றால் கட்டுதல். இது எமது பாரம்பரியமான அறுபத்து நான்கு கலைகளில் ஒன்று. மாநகரசபை ஆணையாளராகப் பல ஆண்டுகள் கடமையாற்றி எத்தனையோ மேடைகளையும் பேச்சுகளையும் கண்ட ஒரு சாயி பக்தர் ஒருவர் இவ்வாறு ஒருமுறை கொழும்பு சாயி சமித்தியில் பேச எழுந்தபோது அவரது வாக்கு தம்பனமாகி பேசமுடியாமல் தடுமாறி அமர்ந்ததை நேரில் பார்த்திருக்கிறேன். இந்த வாக்குகளில் பைசந்தி, மத்திமை, வைகரி ஆகிய மூன்றும் தோன்றிய வழியே ஒன்றில் ஒன்றாக ஒடுங்கி மறைய இவற்றுக்கு எல்லாம் மூலமாகிய சூக்குமை வாக்கு சுத்தமாயா தத்துவமான பிந்துவில் நிலைபெற்று அழியாது நிற்கும். உசாத்துணை: சூக்கும வாக்கது உள்உறு சோதியாய் அழிவது இன்றி ஆக்கிடும் அதிகாரத்திற்கு அழிவினை தன்னைக் கண்டால் நீக்கம் இல் அறிவு ஆனந்தம் முதன்மை நித்தியம் உடைத்தாய் போக்கொடு வரவு இளைப்பும் விகாரமும் புருடன் இன்று வேற்றுமைப் பட்ட வன்னம் வெவ்வேறி விபாகம் ஆகி தோற்றுதல் அடைவு ஒடுங்கி சொயம்பிர காசம் ஆகி சாற்றிய மயிலின் அண்டம் தரித்திடும் சலமே போன்று ஆற்றவே உடையதாகி பைசந்தி அமர்ந்து நிற்கும் உள்உணர் ஓசைஆகி செவியினில் உறுதல் செய்யாது ஒள்ளிய பிராண வாயு விருத்தியை உடையது அன்றி தெள்ளிய அக்கரங்கள் சிந்திடும் செயலது இன்றி மெள்ளவே எழுவது ஆகும் மத்திமை வேற தாயே வைகரி செவியில் கேட்ப தாய் அத்த வசனம் ஆகி மெய்தரும் உதான வாயு மேவிட விளைந்த வன்னம் பொய்யற அடைவு உடைத்தாய் புந்திகா ரணமது ஆகி ஐயம்இல் பிராணவாயு அடைந்து எழுந்து அடைவு உடைத்தாம் -சிவஞானசித்தியார் பாடல்கள் சுபக்கம் 40-43- வந்தடைந்து பின்னமாய் வன்னங்க டோற்றம் வருமடைவு படவொடுக்கி மயிலண்ட சலநேர் சிந்தைதனி லுணர்வாகும் பைசந்தி யுயிரிற் சேர்ந்துவரு மவைமருவு முருமெவையுந் தெரித்து முந்தியிடுஞ் செவியிலுறா துள்ளுணர்வா யோசை முழங்கியிடு மத்திமைதான் வைகரியி லுதானன் பந்தமுறு முயிரணைந்து வந்தமொழி செவியின் பாலணைய நினைந்த பொருள் பகருந் தானே -சிவப்பிரகாசம் பாடல் 38-

வேதம் அனைவருக்கும் பொது

சைவத்தின் அடிப்படைப் பொது நூல் வேதம். வேதங்கள் நான்கு. இவை இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்பனவாம். சைவத்தின் அடிப்படை சிறப்பு நூல்கள் ஆகமங்கள். காமிகம் தொடக்கம் வாதுளம் வரை எல்லாமாக இருபத்தெட்டு ஆகமங்கள் உள்ளன. இவற்றில் வேதம் ஓதுவதற்கு உரியவர்கள் பிராமணர்கள் முதலான முதல் மூன்று வர்ணத்தவர்கள் மட்டுமே என்ற கருத்து எம்மிடையே நிலவி வருகின்றது. ஆகமங்கள் எல்லோருக்கும் உரியவை. இன்றும் காஞ்சி சங்கராசாரிய மடம் நடத்தும் குருமார் பயிற்சிப்பள்ளியில் பிராமணர் அல்லாதவர்களுக்கு வேதங்கள் கற்பிக்கப்படுவதில்லை. அத்தோடு பிராமணராய் இருந்தலாலும் பெண்கள் வேதம் ஓதக்கூடாது என்ற மரபும் உள்ளது. ஆனாலும் வேதத்தில் உள்ள காயத்திரி மந்திரம் இன்று பிராமணர் அல்லாத பலரும், பெண்களும்கூட ஓதுவதையும், கேட்பதையும் பார்க்கின்றோம். இந்த நிலையில் வேதமும், வேத மந்திரங்களும் பிராமணர் அல்லாதார் ஓதலாமா கூடாதா என்ற கேள்வி பலரிடமும் உலாவுகின்றது. சில இடங்களில் இது பற்றிய வாதப்பிரதிவாதங்களையும் பாரக்கின்றோம். இத பற்றி நமது கருத்து என்பது ஒரு பக்கம் இருக்க நமது ஞானிகள் இது பற்றி என்ன சொல்லியிருக்கின்றார்கள் என்று பார்ப்போம். எப்போதும் சமய மற்றும் ஆத்மீக விடயங்களில் நமது கருத்தை விட ஞானிகள் என்ன சொல்லுகின்றார்களோ அதுவே பிரமாணமாகும். ஏனெனில் பாச ஞான, பசு ஞான விளக்கமுள்ள நமது அறிவு குறையுடையது; வழுவுடையது. ஆனால் பதி ஞான விளக்கமுள்ள ஞானிகளின் கருத்து என்றும் உண்மையானது; சாசுவதமானது; மாறாதது; எக்காலத்தும் எவ்விடத்துக்கும் பொருந்துவது. . பதின் மூன்றாம் நூற்றாண்டில் சமய சாஸ்திரங்களையெல்லாம் நன்கு அறிந்த உத்தம பிராமணர் ஒருவர் வாழ்ந்தார். அவர் பெயர் அருள்நந்தி சிவம். அவரின் வேத ஆகம வித்தகத்தன்மை காரணமாக அவரை சகலாகம பண்டிதர் என அழைப்பர். சகலாகம பண்டிதராகிய இந்த அருள்நந்தி சிவத்திடம் பிராமணரல்லாத வேளாள குலத்தைச்சார்ந்த அச்சுதகளப்பாளர் தம்பதிகள் தமக்கு பிள்ளையில்லாத குறைக்கு பரிகாரம் கேட்டு வந்தனர். அவர் தேவார நூலில் ஏடு சார்த்திப் பார்த்தார். 'பேயடையா பிரிவெய்தும்' என்ற சம்பந்தர் பாடிய திருவெண்காட்டு பதிகம் வந்தது. தம்பதிகளை திருவெண்காட்டு தலத்துக்கு போய் வழிபட்டு வருமாறு ஏகினார். அச்சுதகளப்பாளர் தம்பதிகளும் அவ்வாறே திருவெண்காட்டை அடைந்து அங்குள்ள தீர்த்தத்தில் மூழ்கி தினமும் திருவெண்காட்டு பெருமானை வழிபட்டு ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தனர். குழந்தைக்கு சுவேதனப்பெருமாள் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். தமது சித்தால் வான்வழியாகப் பிரயாணம் செய்யும் வல்லமை பெற்றிருந்த பரஞ்சோதி முனிவர் திருவெண்ணெய் நல்லூரில் இரண்டு வயதுடைய இப்பிள்ளை தன்னுடைய தாய் மாமன் காங்கேய பூபதி என்பவருடைய இல்லத்தின் முன்னால் விளையாடிக்கொண்டிருந்தபோது இவரது பக்குவ நிலை உணர்ந்து கீழே இக்குழந்தைக்கு பாவனா தீட்சை செய்து, மெய்கண்டார் என்று தீட்சா நாமமும் கொடுத்து, சன்னியாசத்திலேயே உத்தமமான பரமகஞ்ச சன்னியாசமும் கொடுத்துச் சென்றார். பிறவியிலேயே முற் பிறப்புகளில் சரியை, கிரியா, யோகங்களை அனுட்டித்து முதிர்ந்த சாமு சித்தராகிய சுவேதனப்பெருமாள் அன்றிலிருந்து ஞானத்திலும் முதிர்ந்து, மேலான மெஞ்ஞானமாம் சுத்த அத்துவித சைவ சித்தாந்த உண்மைகளை மற்றவர்களுக்கும் உபதேசித்து வந்தார். இதன் சாரத்தை இரத்தினச்சுருக்கமாக பன்னிரண்டு சூத்திரங்களில் சிவஞானபோதம் என்னும் நூலாக தமிழில் வடித்து அதற்கு வார்த்திகம் என்னும் பொழிப்புரையும் செய்தவர் இவர். இந்த மெய்கண்டாரின் பிறப்புக்கு ஆலோசனை சொன்ன குலகுருவாகிய பிராமணராகிய அருள்நந்தி சிவமே பின்னாளில் இவருடைய சீடராகி சிவஞான சித்தியார் என்ற சித்தாந்த நூலும் எழுதியுள்ளார். பிராமணரல்லாத மற்றவர்கள் வேதம் ஓதுவதைப்பற்றி இவர் எழுதிய சிவஞான சித்தியார் பரபக்கம் செய்யுள் 199 பின் வருமாறு கூறுகின்றது. “முடிவு இன்றி வேதியர்கள் முதல் வந்த மூவர்களும் மொழியும் சொல் ஆரியம் எனில் கடிவு இன்றியே கணிதர் அவர் கண்டவாறு அதுஏன்? வடகண்ட சாதி கடியா ஒடிவு இன்றி ஓதுவது ஏன்? உரைதங்கு வேதமொழி உளது என்று கூறும் அவர்தாம் அடிஇன்று தான் எனும்அது அறிவுஇன்றி ஈனும் அவர் இலை என்ற ஆதரவு அதே” ஆரிய வேதம் வேதியர், சத்திரியர், வைசியர் என்னும் முதல் மூன்று வருணத்தாரால் மட்டும் ஓதப்படுவது என்று கூறினால் சோதிடம் முதலிய வேதங்களின் ஆறு அங்க நூல்கள் மட்டும் ஏனைய வருணத்தார்கள் ஓதாமல் எப்படி அறிய முடியும்? மேலும் பாரதத்தின் வட நாடுகளில் சாதி வேற்றுமை இல்லாமல் எல்லோராலும் வேதம் ஓதப்படுகின்றதே. அது எப்படி? எனவே வேதம் பொது என்பது பெறப்படும். வேதத்தை அபௌர்ஷேயம் அல்லது மூல ஆசிரியன் இல்லை என்று கூறுவது பிறந்த பிள்ளைக்குப் பெற்றோர் இல்லை என்று அறிவில்லாமல் வேண்டுமென்றே கூறுவதைப்போன்றது. கடிவு இன்றி- நீக்கம் இன்றி ஒடிவு ஓன்றி- தவிர்தல் இன்றி முடிவு இன்றி - அளவு இறந்து இருக்கு வேதம் ஐதரேயப் பிராஹ்மணம் இரண்டாவது பஞ்சகம் கவசஐலுசன் என்னும் தாச புத்திரன் அதைப் பாடியவனாகச் சொல்லுகின்றது. இதேபோல அங்கதேசத்து அரசனின் அடிமைப் பெண்ணின் மகனாய கச்சீவது என்பானும் இருக்கு வேத சுலோகங்கள் பாடியுள்ளான். இதே போல புலோமனை புத்திரி சசி, காமை புத்திரி சிரத்தை, அகத்தியர் மனைவி உலோபாமுத்திரை, சத்தி புத்திரி கோரவி, அப்ரீனா புத்திரி வாக்கு என்னும் பெண்களும் இருக்கு வேதத்தின் பாகங்களுக்கு கர்த்தாக்களாக விளங்குகின்றார்கள். மகாபாரதத்தில் குந்திதேவி அதர்வண வேதம் ஓதியதாகக் கூறப்பட்டுள்ளது. வேதங்களின் சிரசாக உள்ள உபநிடதங்களில் கார்க்கி, மைத்ரேயி ஆகிய ரிஷி பத்தினிகளின் வினாக்களும், விவாதங்களும் இடம்பெற்றுள்ளன. இவற்றிலிருந்து வேதம் பொது என்றும் அதை ஓதுவதற்கு சாதி, மற்றும் ஆண் பெண் பேதம் இருக்கவில்லை என்றும் தெரிகிறது. ஆயினும் இன்றைய எமது தென்னாட்டு சைவ சம்பிரதாயத்தில் நாலாம் வர்ணத்தாராகிய சூத்திரர்கள் வேதம் ஓதும் வழமை இல்லை. அதேபோல பெண்கள் வேதம் ஓதும் வழமையும் இல்லை. ஆயினும் இதற்கு விதி விலக்குகளும் உள்ளன. அபரக்கிரியைகளின் போது சூத்திரரும் பூணூல் தரித்து அதற்குரிய வேத மந்திரங்கள் சொல்லலாம். இதன்போது அவர்கள் பூணூல் தரிப்பதற்குரிய விதி சைவசமயநெறியில் பின்வருமாறு கூறப்படுகின்றது. “தர்ப்பணத்தில் அர்ச்சனையில் ஆகுதியிலுந் தரிக்க இல் பயிலும் சூத்திரர் இந்நூல்” -சைவசமயநெறி- குறள் 52- அதாவது தர்ப்பணம், அர்ச்சனை, ஆகுதி பண்ணுங் காலங்களில் இல்வாழ்வானாகிய சூத்திரன் பூணூல் தரிக்கலாம். இது குறிப்பிட்ட வழிபாடுகளில் வேத மந்திரங்கள் ஓதி வழிபடுவதற்கேயாம். சூத்திரர்களிலும் ஆசைகளை அறுத்த நைட்டிகப்பிரமச்சாரி எக்காலத்தும் பூணூல் தரிக்கலாம் என்றும் சைவசமயநெறியின் அடுத்த குறள் கூறுகின்றது. “இவருள் நயிட்டிகன் எப்போதுந் தரிக்க அவனியிலும் ஆசை அறுத்தால்” -சைவசமயநெறி - குறள் 53- இறைவன் நேரடியாக அருளிச்செய்த நூல்கள் இரண்டு. அவை வேதங்களும் ஆகமங்களுமாம். வேதங்களுக்கு அணுகுதற்கு அரியவனான இறையை ஆகமங்கள் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற படிமுறைகளினூடாக எமக்கு அணுக்கமாக்குகின்ன்றன. இதனாலேயே வேதம் பொது நூல் என்றும் ஆகமம் சிறப்பு நூல் என்றும் சொல்லப்படும். "வேதங்கள் ஐயா! எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே" என்ற திருவாசக வரிகளும் "ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க" என்ற திருவாசக வரிகளும் இந்த உண்மையை தெளிவாக விளக்குகின்றன. வேதங்களைப்போல் அல்லாது ஆகமங்களை எவரும் கற்கலாம்: ஓதலாம். இதற்கு வர்ண சாதி மற்றும் பால் வேறுபாடு கிடையாது. ஞானத்தில் நாட்டமுடைய யாவரும் இதற்கு உரியவராவார் என்று ஆகமங்கள் கூறுகின்றன. இந்த ஆகமங்களில் உள்ள மந்திரங்கள் பல வேதங்களின் பிராஹ்மணியங்களிலிருந்து எடுக்கப்பட்ட மந்திரங்களே என்று சுவாமி விவேகானந்தர் முதலானோர் கூறியிருக்கின்றனர். ஆகமங்களில் உள்ள வேத மந்திரங்களை சூத்திரர்கள் ஓதும்போது வேதங்களை சூத்திரர்கள் ஓதுதல் ஆகாதா? என்ற வினாவும் எழுகின்றது. மேலும் சைவர்களின் மூல மந்திரமான “நமசிவாய” என்னும் ஐந்தெழுத்து மந்திரம் கிருஷ்ண யசுர் வேதத்தின் ஸ்ரீ ருத்திரத்தில் உள்ள மந்திரமே. இதை சைவர்கள் யாரும் ஓதலாம் என்றால் அதுவும் வேதம் மந்திரத்தை ஓதுவதுதானே. வேத மந்திர உச்சரிப்புகள் காதால் கேட்டு முறையாக குருமுகமாகப் பயிற்சி பெற்றவர்களுக்கே சிரமமான, கடினமான ஒன்று. ஆகவே அதை சாமானியர்கள் அரைகுறையாகக் கேட்டும், புத்தகங்களில் பார்த்துப்படித்தும் ஓதக்கூடாது. இப்படி உச்சரிப்புத் தவறாக ஓதுவதால் நன்மைக்குப்பதிலாக தீய விளைவுகளே விளையும் என்று பலர் கூறுகின்றனர். உண்மைதான். ஆனாலும் வேத அத்தியயனம் பண்ணும் பிராமணர்கள் தாம் பழகும் காலத்திலும் இவ்வாறே பல உச்சரிப்புத் தவறுகளினூடாகவே முறையான உச்சரிப்பைப் பழகுவார்கள் என்பது வெளிப்படை. அப்போதெல்லாம் அதற்கு தீய விளைவுகளைக் கொடாத வேதங்கள், சூத்திரர்கள் வேதம் ஓதப்பழகும்போது மட்டும் தீய விளைவுகளைத் தருமோ என்ற வினாவும் எழுகின்றது. முடிவாக வேதம் எல்லோருக்கும் பொதுவான நூல் என்றும்; அதிலுள்ள சிறப்பான மந்திரங்கள் ஆகமங்களில் தொகுக்கப்பட்டுள்ளன என்றும்; இந்த ஆகமங்களையும் அதிலுள்ள வேத மந்திரங்களையும் ஓதும் தகுதி சூத்திரருக்கும், பெண்களுக்கும் இருப்பதால், அவர்களுக்கு விதிக்கப்படாதிருப்பினும் தீவிர நாட்டமும், ஆசாரமும் இருந்தால் வேதம் கற்பதற்கும் ஓதுவதற்கும் அவர்களுக்குத் தடை இல்லை என்பதும் பெறப்படுகின்றது. ஆனாலும் இது விதி விலக்கே அன்றி பொது விதி அல்ல. “வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன்நூல் ஓதும் பொதுவும் சிறப்பும் என்றுள நாதன் உரையவை நாடில் இரண்டு அந்தம் பேதமது என்பர் பெரியோர்க்கு அபேதமே” -திருமந்திரம் 2397- “வேதநூல் சைவநூல் இரண்டே நூல்கள் வேறு உரைக்கும் நூல் இவற்றின் விரிந்த நூல்கள் ஆதிநூல் அமலன் தரும் நூல் இரண்டும் ஆரண நூல் பொது; சைவம் அருஞ் சிறப்பு நூலாம்” -சிவஞானசித்தியார் சுபக்கம் 267-
வருடங்களின் கச்சிதமான கணிப்பு தற்போது தமிழ் ஆண்டுகள் என வழங்கப்படும் கால அட்டவணை முறை அறுபதாண்டு வட்டம் ஒன்றைக் கொண்டுள்ளது. இது பிரபவ ஆண்டில் தொடங்கி அட்சய ஆண்டில் நிறைவுபெற மீண்டும் அடுத்த பிரபவ ஆண்டு சுழற்சியாகத் தொடங்குகிறது. சிலர் இவ்வாறு ஒரே வருடத்தின் பெயர்கள் திரும்பத் திரும்ப வருவதால் பிற்காலத்தில் பழைய நிகழ்வுகளைச் சரியாக நிர்ணயிப்பதில் குழப்பம் ஏற்படுகிறது என்று குழம்புகிறார்கள். ஆனால் இந்த ஆண்டுகளின் கால அளவைகள் எந்தவித குழப்பமும் இல்லாமல் வானியல் விஞ்ஞானத்தை ஆதாரமாகக் கொண்டு மிகவும் கச்சிதமாகக் கணித்து வரையறுக்கப்பட்டவை. இவற்றை கச்சிதமாக எடுத்துக்காட்ட கற்பம், மன்வந்தரம், யுகம் போன்ற மேலதிக விபரங்களும் கையாளப்படுகின்றன. தற்போது நடப்பது சுவேத வராக கற்பம் வைவஸ்வத மன்வந்தரத்தில் 28வது சதுர் யுகம். இந்த சதுர் யுகத்தில் கிருத யுக வருடங்கள் 17, 28, 000, திரேதா யுக வருடங்கள் 12, 96, 000, துவாபர யுக வருடங்கள் 8, 64, 000 கழிந்து 4, 32, 000 வருடங்களைக்கொண்ட கலியுகம் ஆரம்பமாகி 5019 ஆண்டுகளே கழிந்துள்ளன. இப்போது நடக்கும் கலி யுகம் கி.மு. 3102ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17ம் திகதி இரவு ஆரம்பமாகியது. இந்தக் கால அளவை "சுவேத வராஹ கல்பே- வைவஸ்வத மன்வந்தரே - கலியுகே" என்று சைவ சமயக்கிரியைகளிலும் பூசைகளிலும் சங்கல்பம் செய்யும்போது கூறும் மந்திரத்தில் வரும். சங்கல்பம் என்பது இன்ன காலத்தில், இன்ன இடத்தில், இன்னாராகிய யான், இன்ன காரியத்தைச் செய்ய நிச்சயிக்கிறேன் என்று கூறி நிச்சயிப்பதாகும். ஒவ்வொரு தமிழ் வருடமும் எமது பார்வையில் சூரியன் பன்னிரு ராசிகளில் சஞ்சரிக்கும் கால அளவாகும். சூரியன் முதலாவது இராசியான மேட இராசியில் பிரவேசிப்பது புது வருடப்பிறப்பாகும். இவ்வாறு ஒவ்வொரு பன்னிரு இராசிகளிலும் ஒன்றன் பின் ஒன்றாக சூரியன் பிரவேசிக்கும் காலமே பன்னிரு தமிழ் மாதப்பிறப்பு அல்லது மாத முதல் நாட்களாகும். இவ்வாறு சூரியன் மேடம் முதல் மீனம் ஈறாக உள்ள பன்னிரு இராசிகளில் சஞ்சரிக்கும் காலம் ஒரு தமிழ் வருடமாகும். இது வானியல் விஞ்ஞான ரீதியாக 365 நாள் 6 மணித்தியாலம் 11 நிமிடம் 48 விநாடி என்று கச்சிதமாகக் கணிக்கப்பட்ட ஒன்று. இதை வானியல் விஞ்ஞானத்தில் வானியல் வருடம் ( Astronomical Year) என்று சொல்லுவார்கள். நாம் இதையே அழகாக தமிழ் வருடம் என்று சொல்லி அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பெயர்களும் வைத்துள்ளோம். இது முயல், வேதாளம், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, சேவல், நாய், பன்றி, எலி, காளை, புலி என்ற பன்னிரண்டு வருடங்களைக் கொண்ட சீனர்களின் கால வட்டத்தைப் போன்றது. ஆனால் அதைவிட ஆழமான வானியல் விஞ்ஞான கணிப்பீடுகளை ஆதாரமாகவும், அடிப்படையாகவும் கொண்டது. இந்த அறுபது வருடங்களைக்கொண்ட காலவட்டத்தின் வருடங்கள் தமிழ் வருடங்கள் என்றும் இந்த வருடங்களின் தொடக்கம் தமிழ் வருடப்பிறப்பு என்றும் வழங்கும் வழமையே எமது வழமை. இது திராவிடர்களிடையே உள்ள வழமையே அன்றி வட இந்தியாவில் இந்த வழமையைப் பார்க்கமுடியாது. பின்னர் இதைப்போய் ஆரியர்களின் கால அளவை என்று சொல்வது எப்படிப் பொருந்தும்? இது யாருடைய கால அளவையாக இருந்தாலும் வானியல் விஞ்ஞான ரீதியாக அச்சொட்டாக இருக்கின்றது. நீங்கள் வேண்டாமென்றால் என்ன செய்வது?

தமிழ்ப் புத்தாண்டு

வருடங்களின் கணிப்பில் உள்ள பொத்தல்கள் நடப்பில் உள்ள ஆங்கில வருடம் 365 நாட்களை மட்டும் கொண்டது. அது டிசம்பர் மாதம் 31ம் திகதி நள்ளிரவு பன்னிரண்டு மணிக்குப் பின் தொடங்கி அடுத்த டிசம்பர் மாதம் 31ம் திகதி நள்ளிரவு பன்னிரண்டு மணியுடன் முடிவுறுகின்றது. இதற்கு எந்தவிதமான வானியல் விஞ்ஞான ஆதாரமோ அடிப்படையோ இல்லை. 365 நாட்களைக்கொண்ட இந்த ஆங்கில வருடக்கணக்கின்படி, வானியல் விஞ்ஞானரீதியாக உள்ள 365 நாட்கள் 6 மணித்தியாலங்கள் 43 விநாடிகள் கொண்ட வானியல் வருடத்தில் ஒவ்வொரு ஆண்டும் மேலதிகமாக 6 மணித்தியாலங்கள் மிகுதியாகும். இந்த ஆறு மணித்தியாலங்களை நான்கு ஆண்டுகளுக்குச் சேரவிட்டு நான்காம் ஆண்டில் ஒரு முழு நாளாகின்றது. இதை பெப்ரவரி மாதத்தில் ஒரு மேலதிக நாளாக இணைத்து விடுவார்கள். சாதாரணமாக 28 நாட்களை மட்டுமே கொண்ட பெப்ரவரி மாதம் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை 29 நாட்களைக் கொண்டிருக்கும். இதுவே லீப் வருடம் எனப்படுகின்றது. இப்படியாக 365 நாட்கள் 6 மணித்தியாலங்கள் சரி செய்யப்பட்டாலும் இன்னமும் 11 நிமிடங்கள் 48 வினாடிகள் மிகுதியாக உள்ளன. அவற்றையெல்லாம் ஒன்று சேர்த்து ஒரு நூற்றாண்டுக்கு ஒரு நாளைக்கூடுதலாகச் சேர்த்து சரிப் பண்ணுவார்கள். இப்படி சரிப்பண்ணும்பொழுது கொஞ்சம் அதிகமாக ஆகிவிடுகின்றது. இதற்காக நானூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாளை நழுவவிட்டு விடுவார்கள். இவ்வாறு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு நாளையும் ஒவ்வொரு நூற்றாண்டுக்கு ஒரு நாளையும் கூட்டி நானூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாளைக் கழிப்பதனால்தான் நமது தமிழ் மாதப்பிறப்புடன் கூடிய தைப்பொங்கல் சித்திரை வருடப்பிறப்பு என்பன 13, 14, 15, 16 ம் ஆங்கிலத் திகதிகளில் மாறி மாறி வருகின்றன. இது நமது குற்றமல்ல; நாம் பாவிக்கும் வழமையில் உள்ள ஆங்கிலக் கலண்டரின் குற்றம். தமிழ் வருடங்களில் இந்த வம்பெல்லாம் கிடையாது. சரியாக 365 நாள் 6 மணித்தியாலம் 11 நிமிடம் 48 வினாடி தான் கணக்கு. ஒவ்வொரு தமிழ் வருடமும் அதற்கு முந்திய வருடம் எந்த வாரத்தில் பிறந்ததோ அதற்கு அடுத்த வாரத்திலும், எந்த திதியில் பிறந்ததோ அதற்கு பன்னிரண்டாவது திதியிலும், எந்த நட்சத்திரத்தில் பிறந்ததோ அதற்கு பதினோராவது நட்சத்திரத்திலும், எந்த நேரத்தில் பிறந்ததோ அதற்கு 6 மணித்தியாலம் 11 நிமிடம் 48 விநாடி (15 நாழிகை 31 விநாடி 15 நொடி) பின்னராகவும் பிறக்கின்றது. . " Nothing more and nothing less" - Merchant and Venice by Shakespeare. உசாத்துணை- www.treasurehouseofagathiyar.net தமிழ்ப் புத்தாண்டு சூரியன் பன்னிரு இராசிகளில் முதலாவதான மேட இராசியில் பிரவேசிக்கும் காலம் தற்போது ள்ள தமிழ் வருடப்பிறப்பு ஆகும். இது சித்திரை மாதத்தில் நடக்கும். இவ்வாறு சூரியன் ஒவ்வொரு இராசிக்கும் பிரவேசிக்கும் காலத்தை சங்கிராந்தி என்று கூறுவர். சூரியன் மேடத்தில் பிரவேசிக்கும் சித்திரை மாதப்பிறப்பாகிய மேட சங்கிராந்தியே எமது தமிழ் புது வருடப்பிறப்பு ஆகும். இதையே இலங்கையில் உள்ள பௌத்தர்களும் பின்பற்றுகின்றார்கள். ஒவ்வொரு புது வருடமும் அதற்கு முந்தைய வருடம் எந்த வாரத்தில் பிறந்ததோ அதற்கு அடுத்த நாளிலும், எந்த திதியில் பிறந்ததோ அதற்கு பன்னிரண்டாவது திதியிலும், எந்த நட்சத்திரத்தில் பிறந்ததோ அதற்கு பதினோராவது நட்சத்திரத்திலும் எந்த நேரத்தில் பிறந்ததோ அதற்கு 15 நாழிகை 31 விநாடிகள் கழித்தும் பிறக்கும். வட இந்தியாவிலும் தெலுங்கு மற்றும் கன்னட சம்பிரதாயத்திலும் அவர்கள் சந்திரனது சஞ்சாரத்தை அடிப்படையாகக்கொண்ட சாந்திரமான மாசங்களையே பிரமாணமாகக் கொள்வர். அவர்களுக்கு மாதம் ஆரம்பிப்பது ஒவ்வொரு மாதத்தினது அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமையில் இருந்தாகும். இதிலிருந்து அடுத்த மாதத்தின் வளர்பிறைப் பிரதமை வரை ஒரு மாத காலம் ஆகும். இதுவேதான் சில வேளைகளில் மகா சிவராத்திரி நாளை நிர்ணயிப்பது பற்றிய விவாதங்களுக்குக் காரணமாகின்றது. சாந்திரமானப்படி இவர்களுக்கு பங்குனி மாதத்தின் அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை அன்றே சித்திரை மாதம் ஆரம்பமாகி விடுகின்றது. அதையே யுகாதி என்று தெலுங்கு மற்றும் கன்னட புதுவருடமாக தெலுங்கர்களும், கன்னடர்களும் கொண்டாடுகிறார்கள். மலையாளத்தில் நம்மைப்போல சூரியன் மேடத்தில் பிரவேசிக்கும் நாளாகிய மேட சங்கிராந்தியையே சித்திரை மாதப்பிறப்பாக வைத்திருக்கின்றார்கள். ஆயினும் இவர்கள் சூரியன் தனது சொந்த இராசியாகிய சிங்க ராசியில் பிரவேசிக்கும் ஆவணிமுதல் நாளையே தமது மலையாள வருடப் பிறப்பாகக் கொண்டாடுகின்றனர். அம்மாதமே வருடத்தின் முதல் மாதமாகக் கொள்ளும் மரபு தமிழர்களிடையே இருந்தது என்று சில பழந்தமிழ் நூல்களில் இருந்து அறியக் கிடைக்கின்றது. இதுவே இப்பொழுதும் மலையாளத்தில் பின்பற்றப்பட்டு வருகின்றது. இதே போல பௌர்ணமியில் இருந்து அடுத்த பௌர்ணமி வரை ஒரு மாதமாகக்கொள்ளும் மரபும் வங்காளத்தில் காணப்படுகின்றது. ஹரே கிருஷ்ணா கோவில்களில் இந்த முறையிலான நாட்காட்டிகளே பின்பற்றப்படுகின்றன. எங்களுடைய சாந்திரமான அல்லது சூரியமான முறைப்படி கார்த்திகை மாதம் ஆரம்பமாவதுக்கு முன்னரே அவர்களது கார்த்திகை மாதம் ஆரம்பமாகி விடுகின்றது, இது கிருஷ்ணர் யசோதையின் தாயன்புக்கு அடங்கி உரலில் கட்டுண்ட மாதமாகும். இந்த மாதத்தை அவர்கள் தாமோதர மாதம் என்று கொண்டாடுவார்கள். தாமம் என்றால் கயிறு. தமிழில் தாம்புக் கயிறு என்று சொல்லும் வழமை உண்டல்லவா? உதரம் என்றால் வயிறு. வயிற்றிலே கயிறினால் கட்டுண்டபடியினால் கிருஷ்ணனுக்கு தாமோதரன் என்று பெயர். முற்காலத்தில் சூரியன் தனது சொந்த இராசியாகிய சிம்மத்தில் பிரவேசிக்கும் ஆவணி மாதத்தின் முதல் நாளை வருடத்தின் முதல் நாளாகத் தமிழர் கொண்டாடினர் என்ற குறிப்பு சில பழந்தமிழ் நூல்களில் காணப்படுகின்றது. . சூரியன் பத்தாவது இராசியாகிய மகரத்தில் பிரவேசிக்கும் காலமாகிய மகர சங்கிராந்தியே தை மாதப்பிறப்பும் அத்துடன் கூடிய தைப்பொங்கலும் ஆகும். இதையே 2009 இல் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசாங்கம் தமிழ் வருடப்பிறப்பாகப் பிரகடனப்படுத்தியது. வட இந்தியாவில் இந்துக்கள் கொண்டாடும் தீபாவளியை இராமர் வனவாசத்தில் இருந்து மீண்டும் அயோத்திக்கு திரும்பிய நாளாகக் கொண்டாடி அதையே புது வருடப்பிறப்பாகக் கொண்டாடுவர். ஆங்கில புதுவருடம் போலவே இதற்கும் எந்தவிதமான வானியல் கணித விஞ்ஞான அடிப்படையோ ஆதாரமோ அல்லது ஆகம நூல்களின் ஆதாரமோ இல்லை என்பது இங்கு நோக்கத்தக்கது. உண்மையில் இராமர் வனவாசம் முடிந்து அயோத்தி நகருக்குத் திரும்பியது சித்திரை மாதத்து வளர்பிறை சஷ்டி நாள் என்றும் அதற்கு அடுத்த நாளான சப்தமியில் அவர் முடி சூடினார் என்றும் வான்மீகி இராமாயணம் யுத்த காண்டம் 127ம் சர்க்கம் கூறுகின்றது. இராமர் மீண்டும் நாடு திரும்பிய நாள்தான் புதுவருடப் பிறப்பு என்றால் இது நாம் புதுவருடம் கொண்டாடுகின்ற சித்திரை மாதத்தில்தான் வர வேண்டும்.

தீபாவளியின் வேறு பல காரணங்கள்

எமது சமயத்தில் உள்ள திருநாட்கள் பல. இவையெல்லாம் மக்கள் உல்லாசமாகக் கொண்டாடி மகிழவும், இறையை நினைந்து உருகவும் உதவுகின்றன. குழந்தைகளுக்குத் திருநாள் என்றால் இனிய தின்பண்டங்களும், புத்தாடைகளும் என்று ஒரே குஷி. இளைஞர்களுக்கோ தம்மை அலங்கரித்தலும், தம் வயதொத்த காளையர் கன்னியரைக் கண்டு அளவளாவிக் களிப்பதும் என்று குதூகலம். பெரியவர்களுக்கு இவ்விழாக்களின் பாரம்பரியத்தையும், தத்துவங்களையும் அறிவதும் பகிர்ந்துகொள்வதும் என்று ஒரு ஆத்மீகத் திளைப்பு. கலைஞர்களுக்கு கலை நிகழ்ச்சிகள் என்று ஒரே கொண்டாட்டம். இவ்வாறு வாழ்க்கையின் வெவ்வேறு மட்டங்களில் உள்ளவர்கள் எல்லோரையும் ஒரே காலத்தில், ஒரே காரணத்தை வைத்து, வெவ்வேறு வகையாக, அவரவர் நிலைகளுக்கு ஏற்ப அனுபவக் களிப்பில் ஆழ்த்துவன இத்திருநாள்களே. பழையன கழிதலும் புதியன புகுதலும் கால நீரோட்டத்தில் எமது பாரம்பரிய திருநாள்கள் சில வழக்கொழிந்து போயின. வேறு சில புதிய திருநாள்கள் வந்து புகுந்தன. "பழையன கழிதலும் புதியன புகுதலும் காலவிதியினால் வழுவல" என்று எமது அடிப்படை நூலாகிய தொல்காப்பியம் இரண்டாயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்னரேயே இலக்கணம் வகுத்து ஆரோக்கியமான எதிர்காலத்தின் திறந்த பாதைக்கு வழிவகுத்துள்ளது. இந்த ஆரோக்கியமான அணுகுமுறை மட்டும் இல்லாதிருந்தால் எமது தொன்மையான நாகரிகம் குட்டைபோலத் தேக்கமடைந்து, நாற்றமெடுத்து அழிந்திருக்கலாம். தேவாரத்தில் திருநாட்கள் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் பூம்பாவை என்னும் இறந்த பெண்ணை சாம்பரில் இருந்து எழுப்புவதற்காக மயிலாப்பூரில் பாடிய பதிகத்தில் உள்ள பாடல்களில் பத்துவிதமான திருநாள்களைக் குறிப்பிட்டு "இவற்றையெல்லாம் பார்க்காமல் நீ போனாயோ பூம்பாவாய்?" என்று பாடுகின்றார். புரட்டாதி மாதத்தில் அடியார்களுக்கு உணவு படைக்கும் அட்டிட்டல் விழா, ஐப்பசி மாதத்தில் ஓண விழா, கார்த்திகையில் விளக்கீடு, மார்கழியில் திருவாதிரை, தை மாதத்தில் தைப்பூசம், மாசி மாதத்தில் கடலாடு விழா, பங்குனியில் பங்குனி உத்திரம், சித்திரை அட்டமி விழா, வைகாசி ஊஞ்சல் திருவிழா, ஆனி, ஆடி, ஆவணியில் பெருஞ்சாந்தி விழா என்று மாதமொரு திருநாள் மயிலாப்பூரில் கொண்டாடப்பட்டு வந்ததை இப்பாடல்களினூடாக அறிகின்றோம். இவற்றில் புரட்டாதி மாதத்தில் அட்டிட்டல் திருநாளும், மாசி மாதத்துக் கடலாடு விழாவும், ஆனி, ஆடி, ஆவணி மாதங்களின் பெருஞ்சாந்தி விழாவும் இன்று வழக்கற்றுப்போக சித்திரை அட்டமித் திருநாள், சித்திரா பௌர்ணமித் திருநாளாக மருவி வழங்கி வருகின்றது. இவற்றை விடவும் வேறு பல திருநாட்கள் பற்றிய விளக்கங்களையும், குறிப்புகளையும் எமது சமய இலக்கியங்களிலும், தமிழ் இலக்கியங்களிலும், அக்காலத்துக் கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பாரக்கின்றோம். தீபாவளித் திருநாள் இவற்றுள் புரட்டாதி மாதத்து அமாவாசைக்கு முன் தினமாகிய சதுர்த்தசி திதியில் இந்துக்கள் அனைவராலும் கொண்டாப்பட்டு வருகின்ற தீபாவளித் திருநாளுக்குப் பல விதமான விளக்கங்களும், கதைகளும், காரணங்களும் கூறப்படுகின்றன. வட இந்தியாவில் தீபாவளி நாள் இராமர் பதினான்கு வருட வனவாசத்தின் பின்னர் சீதை, இலட்சுமணனுடன் அயோத்திக்கு மீண்ட நாள் என்று கூறிக் கொண்டாடுவர். தென்னிந்தியாவில் கிருஷ்ணர் உருக்குமணியின் உதவியுடன் நரகாசுரனை வதம் செய்த நாள் என்று கூறி அன்று எண்ணெய் தேய்த்து, முழுகிக் கொண்டாடுவர். அன்றைய தினம் நீரெல்லாம் கங்கா தீர்த்தமாகப் பாவித்து நீராடிக்கொள்வர். இலங்கையிலும், தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் தீபாவளித் திருநாளுக்கு எண்ணெய் முழுக்காடி, மது அருந்தி, ஆட்டு மாமிச உணவை குடும்பத்தாருடனும், உற்றார், உறவினர், நண்பர்களுடனும் கூடி, உண்டு மகிழும் வழமையும் உள்ளது. சைவர்களின் தீபாவளி சைவர்களுக்கு தீபாவளியின் முக்கியத்துவம் வேறுவிதமானது. சைவ ஆகமங்கள் தீபாவளியை நரக சதுர்த்தசி என்று கூறுகின்றன. உண்மையில் தீபாவளி என்பதும் இந்து என்பதைப்போல பிற்காலத்தில் வந்த ஒரு புதுச் சொல் ஆகும். இதற்கு பாரம்பரியமான பெயர் நரக சதுர்த்தசி என்பதாகும். இந்நாளில் சைவ ஆலயங்கள், மற்றும் மடங்கள் யாவற்றிலும் உள்ள மூர்த்தங்களுக்கு எண்ணெய் ஸ்நானமும் புத்தாடையும் அணிதல் ஆகம மரபாகும். சைவம் சிவனை பிறப்பு இறப்பு அற்ற முழுமுதற் கடவுளாகக் காண்கின்றது. "பிறவா யாக்கைப் பெரியோன்" என்று பௌத்த சமய இலக்கியமான மணிமேகலை சிவனைப் போற்றுகின்றது. பிறப்பு இறப்பு என்பது உயிர்களுக்கே அன்றி கடவுளுக்கு அல்ல என்பது சைவத்தின் தெளிவான கொள்கை. ஆகவே சைவம் இராமாயணம், மகாபாரதம் ஆகியவை சொல்லும் அவதாரங்களை ஏற்றுக்கொண்டாலும் அவற்றை சிவனால் அதிகாரம் பெற்ற திருமாலின் லீலைகளாகவே கொள்கின்றன. வால்மீகியின் இராமாயணத்தில் இராவண வதத்தின் பின்னர் இராமன் அகத்தியரிடம் சிவ தீட்சை பெற்று இராமேஸ்வரத்தை தாபித்த வரலாறு கூறப்படுகின்றது. இதேபோல மாகாபாரதத்திலும் கிருட்டினர் உபமன்னியு முனிவரிடம் சிவ தீட்சை பெற்றுச் சிவ பூசை செய்து வந்த வரலாறு அனுசாசன பர்வத்தில், பதினான்காம் அத்தியாயத்தில் கூறப்படுகின்றது. வியாசரின் வட மொழி மகாபாரதம் மட்டுமல்ல, வில்லிபுத்தூராழ்வாரின் தமிழ்மொழி மகாபாரதமும்கூட கிருஷ்ணரை விபூதி, உருத்திராக்கம் ஆகிய சிவ சின்னங்கள் அணிந்த சைவராகவே வர்ணிக்கின்றன. வால்மீகி இராமாயணமும் இராமனை சிவசின்னங்களுடனேயே வர்ணிக்கின்றது. ஆக திருமாலின் இராம மற்றும் கிருட்டின அவதார லீலைகளைக்கூறும் இராமாயணம், மகாபாரதம் என்ற இரண்டு இதிகாசங்களும் அடிப்படையில் சிவபரத்துவத்தையே கூறுகின்றன. ஆகவே இந்த அவதாரங்களுடன் சம்பந்தமான தீபாவளியும் சிவத்திருநாளாகவே கொள்ளப்படுகின்றது. இவ்வாறான பிறவா யாக்கைப் பெரியோனாகிய சிவன் பல்வேறு காலங்களில் பல்வேறு நோக்கங்களுக்காக பல்வேறு வடிவங்களைத் தாங்கி வந்தான் என சைவம் கூறுகின்றது. இவையே சிவனின் இருபத்தைந்து மகேசுவர மூர்த்தங்கள். இவற்றிலே கஜமுகானுக்கிரக மூர்த்தியின் தோற்றம் நடந்தது புரட்டாதி மாதத்து கிருஷ்ண பட்சத்து சதுர்த்தசியிலேயாம். இந்நாளே தீபாவளித்திருநாள் என்பது சைவர்களின் இன்னொரு விளக்கமாகும். பிரிங்கி முனிவர் சிவனை மட்டுமே வலம் வந்து வணங்கி வந்தார். தேவி முனிவரின் சக்தியெல்லாம் போகும்படி பண்ணிணாள். அப்போது நிற்கக்கூட திராணியற்றுப்போன பிரிங்கி முனிவருக்கு சிவன் ஊன்றுகோல் கொடுத்து உதவினார். அதன் பின்னரும் பிரிங்கி முனிவர் தொடர்ந்தும் சிவனை மட்டுமே வழிபட உமை சிவனை வேண்டித் தவம் செய்து கேதாரகௌரி விரதத்தை அனுட்டித்தார். இதன் முடிவில் சிவனின் இடப்பாகத்தை கொண்டார். இந்நாளே தீபாவளித் திருநாளாகும் என்பது தீபாவளிக்குரிய சைவர்களின் இன்னொரு விளக்கமாகும். தீபாவளியின் வேறு பல காரணங்கள் முன் சொன்ன காரணங்களை விட வேறும் பல முக்கியமான காரணங்கள் தீபாவளிக்கு உள்ளன. 1. திருப்பாற்கடலை அமிர்தம் பெறுவதற்குக் கடைந்தபொழுது தோன்றியவர் இலட்சுமி. இவர் செல்வத்தைத் தரும் தேவி. விஷ்ணுவின் சத்தியாக அமைந்தவர். இவர் இவ்வாறு திருப்பாற்கடலில் இருந்து இலட்சுமி தோன்றிய நாள் தீபாவளி என்று கூறுவர். 2. பாண்டவர்கள் வனவாசம் முடிந்து பாரத யுத்தத்தில் வெற்றி பெற்று மீண்டும் தமது அத்தினாபுரம் மீண்ட நாள் தீபாவளி என்று கூறுவர். 3. விக்கிரமாதித்த மகாராஜா முடி சூடிய நாள் தீபாவளி என்பர். 4. சமண சமயத்தின் கடைசி தீர்த்தங்கரர் பரிநிர்வாணம் அடைந்த நாள் தீபாவளி என்று சமணர்கள் கொண்டாடுகின்றார்கள். 5. சீக்கியர்களின் கடைசி குருவான குரு கோவிந்த சிங் அவர்கள் அவுரங்க சீப் மன்னனுடைய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நாள் தீபாவளி என்பர். 6. இதேபோல இதற்கு முந்திய சீக்கிய குருவான ஹார்கோபிந்த் சிங் அவர்கள் ஜஹாங்கீர் மன்னனுடைய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நாள் கி.பி. 1619ம் ஆண்டின் தீபாவளி தினமாகும். 7. இதேபோல இந்தியாவில் அமிர்தசரஸில் உள்ள சீக்கியர்களின் பொற்கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதும் கி.பி 1577ம் ஆண்டு தீபாவளி நாளாகும். இவ்வாறு பல காரணங்களுக்காக சீக்கிய மதத்தவர்களும் தீபாவளியைச் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். தீபாவளிக்காக சீக்கியர்களின் பொற்கோவில் ஒவ்வொரு வருடமும் விளக்குகளால் வெகு சிறப்பாக அலங்கரிக்கப்படுவது வழமை. 8. இந்தியாவில் உள்ள பௌத்தர்களும்கூட கொண்டாடும் பண்டிகையாக தீபாவளி விளங்குகின்றது. 9. 1999 இல் கத்தோலிக்க மதத்தின் புனித போப்பாண்டவர் இந்தியாவிக்கு விஜயம் செய்தபோது அவர் பிரசங்கம் செய்த தேவாலயம் தீபாவளிப் பண்டிக்கைக்காக தீப அலங்காரங்களால் அலங்கரிக்ப்பட்டிருந்ததுடன் போப்பாண்டவர் நெற்றியில் திலகமிட்டு வரவேற்கப்பட்டார். அவருடைய உரையிலும் போப்பாண்டவர் தீபாவளியைக் குறிப்பிட்டு பேசியிருந்தார். 10. வட இந்தியாவில் இந்துக்கள் கொண்டாடும் தீபாவளியை இராமர் வனவாசத்தில் இருந்து மீண்டும் அயோத்திக்கு திரும்பிய நாளாகக் கொண்டாடி அதையே புது வருடப்பிறப்பாகக் கொண்டாடுவர். ஆங்கில புதுவருடம் போலவே இதற்கும் எந்தவிதமான வானியல் கணித விஞ்ஞான அடிப்படையோ ஆதாரமோ அல்லது ஆகம நூல்களின் ஆதாரமோ இல்லை என்பது இங்கு நோக்கத்தக்கது. உண்மையில் இராமர் வனவாசம் முடிந்து அயோத்தி நகருக்குத் திரும்பியது சித்திரை மாதத்து வளர்பிறை சஷ்டி நாள் என்றும் அதற்கு அடுத்த நாளான சப்தமியில் அவர் முடி சூடினார் என்றும் வான்மீகி இராமாயணம் யுத்த காண்டம் 127ம் சர்க்கம் கூறுகின்றது. இராமர் மீண்டும் நாடு திரும்பிய நாள்தான் புதுவருடப் பிறப்பு என்றால் இது நாம் புதுவருடம் கொண்டாடுகின்ற சித்திரை மாதத்தில்தான் வர வேண்டும். அனைவருக்கும் தீபாவளி ஆகவே தீபாவளித்திருநாள் பெண்களின் முக்கியத்துவத்தையும், அவர்களைப் புறக்கணித்து நாம் பயனடைய முடியாது என்பதையும் உணர்த்தி ஆண், பெண் சமத்துவத்தைக் கொண்டாடும் திருநாளாகும். தீபம் என்பது ஒளி விளக்கு; ஆவளி என்பது வரிசை. தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து, அறியாமை என்னும் இருள் விலகி, ஞானம் என்னும் ஒளி வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டாடும் திருநாள் தீபாவளி. ஆகவே இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள்,கிறித்தவர்கள், சைவர்கள், பகுத்தறிவுவாதிகள், தமிழர்கள், தமிழர் அல்லாதவர்கள் என்ற பேதமின்றி அனைவரும் கொண்டாடி மகிழுகின்ற, மகிழக்கூடிய திருநாள் தீபாவளி ஆகும்.