Wednesday, September 5, 2012

நந்தியை வழிபடும் முறை

சிவாலயங்களில் நுழைவு வாயிலில் அமைதிருக்கும் நந்திகேஸ்வரரை வழிபடும் போது அவருக்கு எண்ணை, பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து, வெல்லம் கலந்த பச்சரிசியை நைவேத்தியமாக படைத்து நெய்விளக்கு ஏற்றி, வில்வ இலைகளால் அலங்காரம் செய்து, அருகம்புல் மாலை சாத்தி அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். `பிரதோஷ' நாளில் வழிபடுவது மிகச் சிறந்ததாகும். நந்திகேஸ்வரர் `ருத்ரன்' என்ற திருநாமம் கொண்டும் அழைக்கப்படுகிறார். `ருஹ்' என்றால் துயரம் `த்ரன்' என்றால் `விரட்டுபவன்' என்று பொருள்படும். அதாவது `துயரங்களை விரட்டுபவன்' என்று பொருள் படும்படியாக சிவனுக்கு முன்புறம் நந்திகேஸ்வரர் வீற்றுள்ளார். ரிஷப தேவர், இடப தேவர் என்ற பெயர்களிலும் இவர் வழங்கப்படுகிறார்.

No comments:

Post a Comment