Wednesday, September 5, 2012

கீதா உபதேசம் கேட்ட இன்னொருவர்

குருஷேத்திர போரின் போது தன்னை எதிர்த்து நின்றவர்களைப் பார்த்து கலங்கினான் அர்ஜுனன். தனக்கு கல்வியும் போர்க்கலையும் கற்றுக்கொடுத்த ஆச்சாரியார்கள், உறவினர்களை எல்லாம் போர்க்களத்தில் எதிர்க்கவேண்டுமே என்று நினைத்து காண்டீபத்தை நழுவ விட்டான் அர்ஜுனன். அப்போது அவனுக்கு தேரோட்டியாய் இருந்து பகவான் கிருஷ்ணன் உபதேசம் செய்தார். இந்த உபதேசத்தால் மனம் தெளிந்த அர்ஜுனன் வில் ஏந்தி போர்புரிந்தான். கிருஷ்ணன் உபதேசம் செய்த போது அந்த தேரில் அர்ஜுனன் மட்டுமே இருந்தாலும், இன்னொருவரும் அந்த உபதேசத்தை கேட்டார். அந்த இன்னொருவர்- அனுமன். கிருஷ்ணன் ஓட்டிய தேரின் கொடியில் அனுமன் இருந்தார். கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்த போது அனுமனும் அதைக்கேட்டார்.

No comments:

Post a Comment