Wednesday, September 5, 2012

செவ்வாயை வழிபடுவதன் மூலம் சகோதர உறவு பலப்படும்.

பொதுவாக செவ்வாய்க்கிழமையை மங்களகரமான நாள் என்று கூறுவார்கள். ஜோதிட சாஸ்திரங்களும் செவ்வாய்க்கிழமை வழிபாட்டுக்கு உகந்த நாளாகத்தான் சிறப்புடன் குறிப்பிடுகிறது. செவ்வாய்க்கிழமைகளில் அம்மன் கோவில்களில் வழிபாடு என்பது அதிகமாக இருக்கும். திருவிழாக்களும் இதே செவ்வாய்க் கிழமைகளில் தான் அம்மன் ஆலயங்களில் நடத்தப்படும். ஆனால் செவ்வாய் அன்று சுப விசேஷ நிகழ்ச்சிகளை செய்ய பலரும் தயங்குவார்கள். தமிழகத்தில் செவ்வாய்க்கிழமையில் முகூர்த்தநாள் குறிப்பதில்லை. ஆனால், கேரளா மாநிலத்தில் உள்ள மக்கள் செவ்வாய்க்கிழமை மங்கள நாள் என்று, அன்றைய தினத்தில் திருமண நிகழ்ச்சிகளை நடத்துவது வாடிக்கையான ஒன்று. செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானையும், அன்றைய தின ராகு காலத்தில் துர்க்கை, காளியம்மனை வழிபடுவார்கள். நவக்கிரகங்களில் ஒன்றான செவ்வாய், சகோதரகாரகர் என்ற சிறப்பு பெயருடனும் அழைக்கப்படுகிறது. செவ்வாயை வழிபடுவதன் மூலம் சகோதர உறவு பலப்படும். பிரிந்திருக்கும் சகோதரர்கள் ஒன்று சேர, செவ்வாய்க்கு செவ்வரளி மாலை சூட்டி வழிபட வேண்டும்.

No comments:

Post a Comment