Friday, April 1, 2011

13 எ‌ன்றா‌லே அய‌ல்நாடுக‌ளி‌ல் பய‌‌ப்படுவது ஏ‌ன்

13 எ‌ன்றா‌லே அய‌ல்நாடுக‌ளி‌ல் பய‌‌ப்படுவது ஏ‌ன்? 13ஆம் தேதி அதுவும் வெள்ளிக்கிழமை என்றாலே அயல் நாடுகளில் பொதுவாக பயப்படுகிறார்கள். தற்பொழுது 13 என்ற எண்ணை பயன்படுத்துவதே இல்லை. 12, 12ஏ, 14 என்றெல்லாம் வைத்துக் கொள்கிறார்கள் என்று படிக்கிறோம். இதுகுறித்து நிறைய நாவல்களெல்லாம் கூட ஆங்கிலத்தில் வந்திருக்கிறது. இது எந்த விதத்திலாவது எண் கணிதம் அல்லது ஜோதிட ரீதியாக இதுபோன்ற அச்சத்திற்கு அடிப்படை இருக்கிறதா?

ஒருவருடைய ஜாதகத்தில் இராகு வலுத்திருந்தால் 13ஆம் எண்ணால் பல பயன்கள் அடைய முடியும். விருப்பப்பட்ட பயனை அடைய முடியும். தற்பொழுது முதல்வருடைய ஜாதகத்தில் 13 வலுவாக இருக்கிறது. அதனால்தான் கடந்த ஐந்தாண்டுக்கால ஆட்சியில் முக்கியமானத் திட்டங்கள், முக்கியமான நிகழ்வுகள் எல்லாவற்றையும் 4 அல்லது 8இல்தான் செய்திருக்கிறார். 4ஆம் தேதி அல்லது 8, 22 ஆகிய தேதிகளாக இருக்கும். அப்படியில்லையென்றால் 8, 17, 26 ஆகிய தேதிகளாக இருக்கும். அவருக்கு அந்த அமைப்பு எல்லாவற்றையும் கொடுக்கும்.
இராகு வலுத்திருந்தால் எதுவும் பிரச்சனை கிடையாது. இராகு அசுர கிரகம். அசுரர்களின் தலைவர் சுக்ராச்சாரி. அதாவது சுக்ரன். அவருடைய வாரம்தான் சுக்ர வாரம், வெள்ளிக்கிழமை. இந்த இரண்டும் சேரும்போது ஒருவிதமான மாற்றம். அதாவது இயல்புநிலையை மாற்றியமைத்தல்தான் இராகு, சுக்ரனுடைய வேலையே. புரட்சி போன்ற சிந்தனையை கொடுப்பதே இராகுவும், சுக்ரனும்தான். அதனால், வெள்ளிக்கிழமை சுக்ரனுடைய கிழமை. 4ஆம் எண் - 13 கூட்டினால் வருவது 4 - என்பது இராகு. இதுபோல இராகுவும், சுக்ரனும் ஒன்று சேரும் போது இழப்புகளும், ஏமாற்றங்களும் வருவது என்பது இயல்பு.
ஒரு சாம்ராஜ்ஜியத்தை கவிழ்ப்பது, ஒரு விபத்தை உண்டாக்குவது போன்ற நிகழ்வுகள் மூலமாக புதியவர்களுக்கு வாய்ப்பு அளிப்பது. இதுதான் இந்த இரண்டு கிரகங்களுடைய வேலையே. பறித்து மற்றொருவர் கையில் கொடுப்பது. அதனால்தான் அயல்நாடுகளில் பார்த்தால் 13ஆம் தேதியும், வெள்ளிக்கிழமையும் சேர்ந்து வந்தால் பயப்படுவதற்கு காரணம், ஆட்சியில் இருப்பவர்களுக்கு அந்த காம்பினேஷன் ஒத்துவராது.
நன்றாக குடும்பம் நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கு பிரச்சனை இல்லை. நன்றாக வியாபாரம் நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கு மாற்றம் வரும். புதுசாக ஒருவர் வந்து அவருக்கு கடக்கை மாறிவிட்டது என்று சொல்வார்களே அதுபோல நடக்கும். அதிகாரத்தைப் பரவலாக்கும் கிரகங்கள் இந்த இரண்டும். சுக்ரனும், இராகுவும் அதிகாரம், மகிழ்ச்சி, இதெல்லாம் ஒரு இடத்தில் முடங்கிக் கிடப்பதை பரவலாக்கக் கூடிய கிரகங்கள். அதனால்தான் இந்த கிரகங்களுக்கு அழிக்கும் சக்தியை விட ஆக்கும் சக்தி அதிகம். ஒரு வழிவால்தான் பல ஆக்கங்கள் உருவாகிறது என்பார்கள். அதுபோலத்தான் இந்த இரண்டுகளும் செய்து கொண்டிருக்கும்.

.

No comments:

Post a Comment