Sunday, June 12, 2011

அன்பே இல்லற தர்மத்தின் அடிப்படை

!
பேரின்ப வடிவினனான இறைவனை அடைய அன்பே அடிப்படையானது. இல்லற தர்மமும் அன்பை மையமாகக் கொண்ட நெறிகளையே போதிக்கிறது. ஒருவர் மற்றவர் களிடம் அன்பு செலுத்தி, அதற்கான களத்தை விரிவுபடுத்திக் கொள்வதே இல்லற தர்மத்தின் கோட்பாடாக அமைந்துள்ளது. இதற்கான பயிற்சிக் களமாக அமைவது திருமண வாழ்க்கை.

ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணத்திற்குமுன் அன்பு செலுத்துவதற் கான எல்லை தான், தன் குடும்பம் என்ற அளவில் குறுகிய வட்டத்திற்குள்ளேயே அமையும். திருமணத்திற்குப்பின் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் பந்தத்தால் அவர்கள் இருவரும் ஒருவரோடு ஒருவர் அன்பைப் பரிமாறிக் கொள்வதோடு, ஒருவர் மற்றவரது குடும்பத்தினர்மீதும் அன்பு செலுத்துகின்றனர். அதன்பிறகு அவர்கள் குழந்தைகள், பேரக் குழந்தைகள், அவர்

களது உறவினர், நண்பர்கள் என அன்பு செலுத் தும் களம் விரிவடைகிறது.

தம்பதியரில் ஆணுக்கு 60 வயது நிறைவடைந்து அறுபத்தொன்று தொடங்கும்போது மணி விழாவும்; எழுபத்தொன்று தொடங்கும்

போது பவள விழாவும்; எண்பத்தொன்று தொடங்கும்போது முத்து விழாவும் கொண்டாடப்படுகின்றன.

மணி விழா என்பது அன்பு செலுத்துவதற் கான எல்லை விரிவடைவதற்கான தொடக்க விழா எனப்படுகிறது. தொடர்புடையவர் களோடு மட்டுமே பழகி வந்தவர்கள் தொடர்பு இல்லாதவர்களோடும் பழக வேண்டிய மனநிலை ஏற்பட்டு விடுகிறது. மேலும் இறைவனைத் தேடும் மனப் பக்குவ மும் ஏற்பட்டு அதற்கான முயற்சியில் இறங்குவர்.

இறை முயற்சியில் ஒருவருக்கு மூன்று விதமான அருள் அனுபவங்கள் கிட்டுகின்றன. அதன் மூலம் அவர்கள் பொன்னுடல், ஓங்கார உடல், அறிவுடல் ஆகியவை வாய்க்கப் பெறுகிறார்கள். பசு கரணங்கள் பதி கரணங் களாக மாறும் நிலையில் உடல் பொன் மயமாகும். அதற்கு அடுத்த நிலையில் உடல் காற்றுமய மாகி- ஆன்ம நாதமே எல்லா மாய் மாறி ஓங்கார உடல் கிட்டு

கிறது. அடுத்த நிலையில் ஆன்மா ஞான மயமாய் விளங்கி அறிவுடல் கிட்டுகிறது.

பொன்னுடல் வாய்ப்பதை மணி விழா வாகவும்; பிரணவ தேகமாகிய ஓங்கார உடல் வாய்ப்பதை பவள விழாவாகவும்; ஞான உடல் வாய்ப்பதை முத்து விழாவாகவும் முன்னோர் கள் குறிப்பிட்டுள்ளனர்.

சஷ்டியப்த பூர்த்தி: ஒருவர் பிறந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்து அடுத்து வரும் நாள் சஷ்டியப்த பூர்த்தி எனப்படுகிறது. ஒருவருக்கு 60 ஆண்டுகள் நிறைவடையும் போது கிரகங்கள் அமைந்திருக்கும் நிலை அந்த நாளின் சிறப்பை உணர்த்துகிறது.

பூமி 360 பாகைகளாகவும், அந்த 360 பாகைகளும் 12 ராசி வீடுகளாகவும் வகுக்கப் பட்டுள்ளன. 360 பாகைகளின் வழியாக ஒரு வட்டப் பாதையை நிறைவு செய்ய சூரியனுக்கு ஒரு ஆண்டும்; செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டும்; சந்திரனுக்கு ஒரு மாதமும்; புதனுக்கு ஒரு வருடமும்; வியாழனுக்கு 12 வருடங்களும்; வெள்ளிக்கு ஒரு வருட மும்; சனிக்கு 30 வருடங்களும்; ராகுவிற்கு ஒன்றரை வருடங்களும்; கேதுவிற்கு ஒன்றரை வருடங்களும் ஆகின்றன.

இந்த சுழற்சியின் அடிப்படையில் ஒருவர் பிறந்து 60 வருடங்கள் நிறை வடைந்த நாளிற்கு அடுத்த நாள், அவர் பிறந்த நாளன்று இருந்த கிரக அமைப்பு களும் ஆண்டு, மாதம் ஆகியவையும் மாறாமல் அப்படியே அமைந்திருக்கும். அன்றைய தினம் கோவிலுக்குச் சென்று சிறப்பு ஆராதனைகள் செய்து வழிபடுகிறார்கள்.

சஷ்டியப்த பூர்த்தியன்று செய்யப்படும் பூஜையின்போது 64 கலசங்களில் தூய நீர் நிரப்பி, மந்திரங்களை ஜபிப்பதன் மூலம் நீரைப் புனிதப்படுத்தி அதைக் கொண்டு அபிஷேகம் செய்வர்.

64 கலசங்களும் 60 ஆண்டு தேவதைகளை யும் அவற்றிற்கு அதிபதிகளாகிய அக்கினி, சூரியன், சந்திரன், வாயு ஆகியோரையும் குறிப்பதாக ஐதீகம். பிரபவ முதல் விரோதி கிருதி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு அக்கினி பகவானும்; ஆங்கிரச முதல் நள வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சூரியனும்; ஈஸ்வர முதல் துன்மதி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சந்திரனும்; சித்திரபானு முதல் அட்சய வரையிலுள்ள 15 ஆண்டுகளுக்கு வாயு பகவானும் அதிபதிகளாகத் திகழ்கிறார்கள்.

சஷ்டியப்த பூர்த்தியன்று ஆகம முறைப் படி இறை வழிபாடு செய்து, கால காலனாகிய அமிர்த மிருத்தியுஞ்சயேசுவரரையும் வழிபடு வர்.

சதாபிஷேகம்: ஆயிரம் பிறை கண்டவர்கள் புண்ணிய லோகம் அடைய வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் செய்யப்படுவது சதாபிஷேகம். 80 ஆண்டுகளில் ஒருவர் 992 பிறைகள் காணலாம். இதன்படி 80 ஆண்டுகள், எட்டு மாதங்களில் ஆயிரம் பிறைகள் கண்டவர்களுக்கு சதாபிஷேகம் செய்யப்படுகிறது.

சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் ஆகியவை செய்யும்போது ஆயுள் ஹோமம் செய்வர். இதற்கேற்ற தலமாக திருக்கடையூர் விளங்குகிறது. ஆயுள் ஹோமம் செய்வதால் ஆயுள் விருத்தி ஏற்படும் என்பது நம்பிக்கை

No comments:

Post a Comment